உள்ளம் உருகுதையா ஆண்டவன் பிச்சையின் பாடல். டி எம் எஸ் இசை
அந்த ‘ஆண்டவன் பிச்சி’ – ஒரு பெண். பெற்றோர் வைத்த பெயர் மரகதவல்லி. பள்ளிக்கு செல்லாதவள். படிப்பறிவு இல்லாதவள்.
பத்து வயது முதல் முருகன் பாடல்களை பாடிக் கொண்டே இருப்பவள்.
ஒன்பது குழந்தைகளுக்குத் தாயான மரகதம், வாழ்வில் எல்லா சோதனைகளையும் சந்தித்தவர். முதுமையில் துறவறம் பூண்டு, பின் இறைவனடி சேர்ந்தவர்.
இறப்பதற்கு முன், கோயில் கோயிலாக போய் பாடி வந்து கொண்டிருந்தார்.
அப்படி காஞ்சி மடத்தில் அமர்ந்து ஒருமுறை பாடிக் கொண்டிருந்தபோது, அங்கே இருந்த சிலர் இவரது எளிய தோற்றத்தைக் கண்டு “பிச்சைக்காரி” என நினைத்து துரத்த ...
காஞ்சி மஹா பெரியவர் இந்தப் பெண்ணை அருகே அழைத்து, பிரசாதமும் கொடுத்து, “இன்று முதல் உன் பெயர் ‘ஆண்டவன் பிச்சி’ ” என்று ஆசீர்வதித்து அனுப்ப ... அன்று முதல் கோயில் கோயிலாகச் சென்று, தெய்விகப் பாடல்களைப் பாட ஆரம்பித்தார் மரகதவல்லி என்ற ‘ஆண்டவன் பிச்சி’. (சிலர் 'ஆண்டவன்பிச்சை’ என்றும் சொல்வதுண்டு.)
60 வயதுக்கு மேல் ஆகிறது இந்தப் பாடலுக்கு
உள்ளம் உருகுதய்யா
உள்ளம் உருகுதய்யா முருகா
உன்னடி காண்கையிலே
உள்ளம் உருகுதய்யா முருகா
உன்னடி காண்கையிலே
அள்ளி அணைத்திடவே
அள்ளி அணைத்திடவே
அள்ளி அணைத்திடவே
எனக்குள் ஆசை பெருகுதப்பா முருகா
உள்ளம் உருகுதய்யா
பாடி பரவசமாய் உன்னையே
பார்த்திட தோனுதய்யா
பாடி பரவசமாய் உன்னையே
பார்த்திட தோனுதய்யா
பாடி பரவசமாய் உன்னையே
பார்த்திட தோனுதய்யா
ஆடும் மயிலேறி
ஆடும் மயிலேறி
ஆடும் மயிலேறி
முருகா ஓடி வருவாயப்பா
உள்ளம் உருகுதய்யா முருகா
உன்னடி காண்கையிலே
அள்ளி அணைத்திடவே
எனக்குள் ஆசை பெருகுதப்பா முருகா
உள்ளம் உருகுதய்யா
பாசம் அகன்றதய்யா
பந்த பாசம் அகன்றதய்யா
உந்தன் மேல்
நேசம் வளர்ந்ததய்யா
ஈசன் திருமகனே
ஈசன் திருமகனே
ஈசன் திருமகனே
எந்தன் ஈனம் மறைந்ததப்பா
உள்ளம் உருகுதய்யா
ஆறு திருமுகமும்
ஆறு திருமுகமும்
அருளை வாரி வழங்குதய்யா
ஆறு திருமுகமும்
உன் அருளை வாரி வழங்குதய்யா
வீரமிகும் தோலும்
வீரமிகும் தோலும் கடம்பும்
வெற்றி முழக்குதப்பா
உள்ளம் உருகுதய்யா
கண் கண்ட தெய்வமய்யா
கண் கண்ட தெய்வமய்யா
நீ இந்த கலியுகவரதனய்யா
கண் கண்ட தெய்வமய்யா
நீ இந்த கலியுகவரதனய்யா
பாவியென்றிகழாமல்
பாவியென்றிகழாமல்
எனக்குன் பதமலர் தருவாயப்பா
உள்ளம் உருகுதய்யா முருகா
உன்னடி காண்கையிலே
அள்ளி அணைத்திடவே
எனக்குள் ஆசை பெருகுதப்பா
முருகா உள்ளம் உருகுதய்யா
உள்ளம் உருகுதய்யா
உள்ளம் உருகுதய்யா
=============================================================================================
வாலியின் பாடலாய் இருக்கலாம். இசை? எம் எஸ் விஸ்வநாதனோ? இல்லை. விஜய் ஆனந்தாம்.
படம் விவரம் தெரியவில்லை என்றாலும் பாடி இருப்பது எஸ் பி பாலசுப்ரமணியம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை! காட்சியில் எஸ் வி சேகர், ராஜலக்ஷ்மி. எஸ் பி பி யின் குரல் ஜாலம்தான் பாடல் முழுவதும்.
பாடலாசிரியர் இதயச்சந்திரனாம். பின்னூட்டத்தில் ஒருவர் சொல்லி இருக்கிறார்.
அழகே நீ பிறந்தது இவளிடம்தானோ
அழகே நீ பிறந்தது இவளிடம்தானோ
அமுதே நீ தவழ்ந்திடும் இதழ் இதுதானோ
அழகே நீ பிறந்தது இவளிடம்தானோ
விண்வெளி தீபங்களோ மயிலின் விழிகள்
தேன்மழை சாரல்களோ குயிலின் மொழிகள்
மாஞ்சோலை கனிகள் உன் தேகச் சிமிழ்கள்
நீ காட்டும் எழில்கள் என் கண்ணின் தாபங்கள்
கலையோ கலைமகள் அருள் வரமோ
செவ்வானிலே பொன் மேகமே
இந்த பூமகள் வரும் ரதமோ
அழகே நீ பிறந்தது இவளிடம்தானோ
அமுதே நீ தவழ்ந்திடும் இதழ் இதுதானோ
அழகே நீ பிறந்தது இவளிடம்தானோ
பகலின் ஒளி மழையில் இரவின் தவிப்பு
இரவின் குளிர் மடியில் பகலின் விளிப்பு
உன் பார்வை விருந்து என் நோயின் மருந்து
நீ சேரும் வரைக்கும் என் மஞ்சம் துடிக்கும்
கனியே கனிந்திட மனம் இல்லையோ
உன் நெஞ்சிலே என் ஓவியம்
நான் வரைந்திட தயவில்லையோ
அழகே நீ பிறந்தது இவளிடம்தானோ
அமுதே நீ தவழ்ந்திடும் இதழ் இதுதானோ
அழகே நீ பிறந்தது இவளிடம்தானோ
லலலா...லலலா.
காலை வணக்கம்.
பதிலளிநீக்குவணக்கம் ஜீவி ஸார்... வாங்க..
நீக்குஉள்ளம் உருகுதையா முருகா
பதிலளிநீக்குஉன்னடி காண்கையிலே
அள்ளி அணைத்திடவே எனக்குள்
ஆசை பெருகுதப்பா..
ஆஹா.. எவ்வளவு பக்தி பூர்வமான பாடல்..
மஹாப்பெரியவர் பெயர் சூட்ட பாக்யம் பெற்ற அன்னை..
ஆண்டவன் பிச்சி அம்மாவின் வரலாறைக்
கேட்கையிலேயே பக்தி வெள்ளத்தில் மனம் நிறைகிறது..
இறை அடியார்களின் அடி தொழுவோம்..
நமக்கு இது மாதிரி பொக்கிஷங்களை வழங்கவே இருவனால் உண்டாக்கப்பட்ட அடியார்கள்..
நீக்குமுதல் பாடலைப் பற்றி என்ன எழுதுவது?
பதிலளிநீக்குஒரு பாடல் பக்தி உணர்வை இவ்வளவு தூண்ட முடியுமா? ஆயிரம் தடவை கேட்டாலும் சலிப்படையாமல் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுமா?
டி எம் எஸ் அவர்கள் பாடிய பக்திப் பாடல்கள் ஒலிக்காத இடங்களுண்டோ?
பாசம் அகல முடியுமா? நேசம் விலகுமா? ஆசைதான்.. ஆனால் அது கொஞ்சம் உயர்நிலை. தூஷணைகளையும் பொறுத்துக்கொள்ள வேண்டும்!
நீக்குஎஸ் வி சேகரும் அந்தப் பெண்ணும் பாடலின் ஆரம்பத்தில் அடுத்தவர்கள் முதுகைப் பிசைவதன் காரணம் என்னவாக இருக்கும்? ஶ்ரீராமுக்குப் பதில் தெரியுமா இல்லை புதன் கேள்வியாகத்தான் கேட்கணுமா?
பதிலளிநீக்குகாட்சியோடு பாடலைத் தருவதில் உள்ள கஷ்டம் இதுதான்! பாடலை மறந்து விடுவீர்கள், கவனிக்க மாட்டீர்கள்!
நீக்குஇரண்டாவது பாடலை எப்போதோ கேட்டு மறந்திருக்கலாம்.
பதிலளிநீக்குஒரு சாதாரண பாடலுக்கு இத்தனை லொகேஷன்கள் மாற்றி தயாரிப்பாளரை ஓட்டாண்டியாக்கிய அந்தப் புண்ணியவான் யாரோ?
பாடல் சாதாரண பாடலா, பயங்கரமான பாடலா என்பது.. பாடல் என்ன, எந்த படைப்பையுமே படைப்பாளியால் படைக்கும்போது உணரமுடியாது. எல்லாமே ஹிட் அடிக்க வேண்டும் என்றுதான் விரும்புவார் படைப்பாளி. ஆனால் இந்தப் பாடலுக்கு என்ன குறை என்று நினைக்கிறீர்களோ..
நீக்குஎப்போதோ எதற்காகவோ எடுத்து வைத்திருந்த எஸ் வி சேகரின் நம்பர் இன்னொருவருக்குப் பகிர உபயோகப்பட்டது (கும்பகோணம் பயணத்தில்). நானும் அவரிடம் பேச நேர்ந்தது.
பதிலளிநீக்குநாளை ஒரு கும்பலாக அவரது நாடகத்தைப் பார்க்கப் போகிறோம் (பெங்களூருவில்).. எல்லாமே தமாஷ்தான் நாடகம்.
சில சமயம் எஸ் வி சேகரின் ஜோக்ஸ் அசட்டுத்தனமாய் இருக்கும். சிலசமயம் நன்றாயிருக்கும். அந்தக் காலத்தில் தொலைக்காட்சியில் அவரின் வண்ணக்கோலங்கள் செம ஹிட்.
நீக்குபசங்க சின்னவங்களா இருக்கும்போதிலிருந்து, இரவு நான் தூங்கச் செல்வதற்குமுன் எஸ் வி சேகர், காத்தாடி, கிரேசி நாடகங்களின் கேசட்டை நான் கேட்டுக்கொண்டே தூங்கும்போது அவங்களும் கேட்டிருப்பதால் பல பகுதிகள் மனப்பாடம். ஒரு தடவை நான் நாடகம் பார்த்திருக்கிறேன். நேரடி நாடகம் மத்தவங்களுக்கு இது முதல் முறை.
நீக்குநான் ஒரு வாட்டி நேர்ல பார்த்திருக்கேன்.
நீக்குகல்யாணம் ஆன புதுசிலே அம்பத்தூர் வாசத்தின்போது எங்கள் பொழுதுபோக்குக் குழுவின் சார்பில் நிறைய எஸ்விசேகர், மனோஹர், சஹஸ்ரநாமம், சோ ஆகியோரின் நாடகங்களைப் பார்த்தாச்சு. எம்.எஸ்.வி தனியாக டிஎம்.எஸ் தனியாகநடத்திய இசைக்கச்சேரிகளையும் கேட்டாச்சு. ஜிவாஜி போன்றோரின் படங்களைச் சிறப்புக் காட்சியாகக் கண்டு ரசிச்சாச்சு. ஒரு சுத்துச் சுத்திட்டுப் பின்னர் இரண்டாம் முறையாக அம்பத்தூர் வந்தப்போ அந்தப் பொழுதுபோக்குக் குழு அவ்வளவு சுறுசுறுப்பாக இல்லை. இருந்தும் சேர்ந்தோம். சில, பல நாடகங்கள் பார்த்தோம். அதில் ஒன்று ஆதிசங்கரர். அந்தக் காலத்து சினிமாப் பிரபலம் மாஸ்டர் ஒருத்தர், க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சட்ட்னு பெயரை மறந்துட்டேனே! :(
நீக்குto continue
நீக்குசிவாஜி படம் சிறப்புக்காட்சி... கலங்கி அழுதிருப்பீங்களே...
நீக்குஅவர் பெயர் மாஸ்டர் ஸ்ரீதர். நல்லா நடிப்பார். ஆனால் சோபிக்கலை. அந்தப் பொழுதுபோக்கும் சங்கம் மூலம் பார்த்த முக்கியமான படங்கள் ஜிவாஜி நடிச்ச "கௌரவம்" "ராஜராஜ சோழன்" திரை அரங்கில் எல்லோரும் அழுதிருப்பாங்க. நாம தான் தனீஈஈஈஈஈஈஈஈஈஈ ஆச்சே. சோவின் "யாருக்கும் வெட்கமில்லை"நாடகம் பார்க்கையில் மிகவும் மனம் ஒன்றிக் கதாநாயகி பேசும் காட்சியில் (சுகுமாரி நாடகத்தில்) சிரிச்சு எல்லோரையும் கடுப்பேத்தினேனே!
நீக்குஅவர் பெயர் மாஸ்டர் ஸ்ரீதர். நல்லா நடிப்பார். ஆனால் சோபிக்கலை. அந்தப் பொழுதுபோக்கும் சங்கம் மூலம் பார்த்த முக்கியமான படங்கள் ஜிவாஜி நடிச்ச "கௌரவம்" "ராஜராஜ சோழன்" திரை அரங்கில் எல்லோரும் அழுதிருப்பாங்க. நாம தான் தனீஈஈஈஈஈஈஈஈஈஈ ஆச்சே. சோவின் "யாருக்கும் வெட்கமில்லை"நாடகம் பார்க்கையில் மிகவும் மனம் ஒன்றிக் கதாநாயகி பேசும் காட்சியில் (சுகுமாரி நாடகத்தில்) சிரிச்சு எல்லோரையும் கடுப்பேத்தினேனே!
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்விதமான கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக மலர வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மனமாற, உளமாறப் பிரார்த்திப்பது என்றால் என்ன? புதன் கேள்வி
நீக்குஅட..! இன்று வரும் புதன் கேள்விகளுக்கு நிறைய தயாராக்கி விட்டீர்களே..! :))
நீக்குஇல்லையென்றால் (கேள்விகள் கேட்கவில்லைனா), புதன் கிழமையை நாவல், தொடர்களுக்கு ஒதுக்கிவிடுவார்களோ என்ற அச்சம்தான். என்ன சொல்றீங்க? ஹா ஹா ஹா
நீக்குபாவம் கேஜிஜி ஸார்.
நீக்குபுதனிலிருந்து விடுபட விட மாட்டீர்கள் போலிருக்கிறதே?
வாங்க கமலா அக்கா... வணக்கம். மனம் ஒன்றி பிரார்த்திப்போம்.
நீக்குஎஸ்.வி. சேகர் கதா நாயகர். என்ன குறைச்சல்?
பதிலளிநீக்குஇரண்டில் ஒன்று தான்.
நாயகனாகவே தொடர்ந்திருந்தால், நகைச்சுவை நாயகனை இழந்திருப்போமோ என்று பார்த்தால் இரண்டாவதே பெஸ்ட்.
நிறைய நகைச்சுவை நடிகர்கள் ஓரிரண்டு படங்களில் கதாநாயகராக ஜொலித்திருக்கிறார்கள் தான். அந்த வரிசையில்
என் நினைவில் வரும் முதல்வர் டி.எஸ். பாலையா அவர்கள்.
இரண்டாவது பாடலைப் பற்றி எதுவுமே சொல்லவில்லையே என்கிறீர்களா? வெறும் வரிகளாக இருக்கும் திரைப்பாடல்கள் இசையமைப்பின் தூக்கலில் எந்த அளவில் உச்சாணிக் கொம்பில் ஏறி அமர்கிறது என்பதே திரையுலகின் ஆச்சரியங்களில் ஒன்றுதான். என்ன சொல்கிறீர்கள்?....
எஸ் வி சேகர், வடிவேலு, சந்தானம் ஆகியோர் நகைச்சுவையை விட்டு கதாநாயகர்களாகப் புகுந்ததில் எனக்கும் வருத்தம் உண்டு!
நீக்குஸ்ரீராம் படம் எடுத்தால், அனுஷ்கா போன்றவர்களை நகைச்சுவை நடிகர்களுக்குத் துணையாகப் போடுவாரா இல்லை இத்துப்போன பிற நடிகைகளையா? அவங்களுக்கும், (சந்தானம் வடிவேலு வகையறா), படம் நம்மால ஓடுது, ஆனா நமக்கு ஜோடியா இத்துப்போனவுகளைப் போடறாங்களே என்று எரிச்சலா இருந்திருக்காதா? அதனால்தான் அம்பிகா, சதா என்று வடிவேலு சதாய்த்தார். சந்தானமும் அந்தமாதிரி கதாநாயகிகளைப் போட்டுக்கொள்கிறார்.
நீக்குNagesh!
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய பாடல் பகிர்வில், முதல் பாடல் கேட்காத நாளில்லை. நினைத்த போதெல்லாம் இந்தப்பாடல் நினைவுக்கு வந்து வந்து மனதுக்குள் ஓடும். வாய் விட்டு அடிக்கடி பாடல்களில் ஒன்று. நல்ல பாடல். "நினைத்த போது நீ வர வேண்டும். " என்ற பாடலும் மிகவும் நன்றாக இருக்கும். இதுவும் இவர் பாடலோ என்னவோ?
இப்பாடலைப் பற்றி தந்த விபரங்கள் அறிந்து கொண்டேன். பிறப்பெடுத்ததே பக்தி செய்யத்தான் என்றிருந்த அந்த அடியவரை பக்திப் பரவசத்தோடு வணங்கி கொண்டேன். மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
//"நினைத்த போது நீ வர வேண்டும். " என்ற பாடலும் மிகவும் நன்றாக இருக்கும். இதுவும் இவர் பாடலோ என்னவோ?//
நீக்குஅப்படிதான் ஞாபகம். நன்றி கமலா அக்கா.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇரண்டாவது பாடல் இதுவரை கேட்டதில்லை என நினைக்கிறேன். எஸ்.பி.பி பாடல் என்பதால் கண்டிப்பாக கேட்கிறேன்.
இந்தப் பாடல் இடம் பெற்ற படம் "நாணயம் இல்லாத நாணயம்" என ஓரிடத்தில் பார்த்தேன். திரு. விசு அவர்களின் படமாக இருக்கலாம். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
எனக்கும் அப்படித் தோன்றியது என்றாலும் அப்படி இல்லை. விஜய் ஆனந் இயக்கம்.
நீக்குஅன்பின்
பதிலளிநீக்குவணக்கத்துடன் மார்கழிக்கு நல்வரவு..
வாழ்க நலம்..
ஆமாம். திருப்பாவை, திருவெம்பாவைக் காலங்கள். பொங்கல் நாள்!
நீக்குஉள்ளம் உருகுதையா!..
பதிலளிநீக்குபாடலுக்கான மேல் விவரங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பே தெரியும்..
எத்தனை காலம் ஆனாலும் திகட்டாத திருப்பாடல்!..
ஆமாம்.
நீக்கு//அங்கே இருந்த சிலர் இவரது எளிய தோற்றத்தைக் கண்டு “பிச்சைக்காரி” என நினைத்து துரத்த ...//
பதிலளிநீக்குஆக,
அங்கேயும் ஈவு இரக்கம் அற்றவர்கள் இருந்திருக்கின்றனர்..
அவர்கள் விரட்டுவதற்கு முற்படவில்லை எனில் இப்படியான பாடல் கிடைத்திருக்காது..
ஏதோ யாரோ என்னவோன்னா அதையே உண்மையாக்கிடக் கூடாது. கிடைத்ததுடா
நீக்குஒரு விஷயம்ன்னு அதுக்கு மேல் மாடி கட்டவும் கூடாது.
ஜீவி ஸார் கருத்தோடு உடன்படுகிறேன். நிறைய அதிகப்படுத்துதல்களும், கற்பனையும் இருக்கும்!
நீக்குதுரை சார்... எங்கேயும் ஈவு இரக்கமற்றவர்கள் இருப்பார்கள். நான் திருநள்ளாறில் சந்தித்த அய்யாசாமி குருக்கள் போன்ற நல்லவர்களும் இருப்பார்கள். ஒருவன் இறைவன் அல்லது இறை சக்தி மிக்கவர்கள் அருகினில் இருப்பதால் மாத்திரமே உயர்ந்தவர்களாக மேன்மைக் குணம் பொருந்தியவர்களாக இருக்கவேண்டிய அவசியமில்லை. வாழைப்பூவில் இருக்கும் கள்ளனைப்போல, ஆப்பிளில் இருக்கும் விதையைப்போல
நீக்கு100% எல்லோரும் நல்லவர்களாக இருக்கவும் முடியாது. 100 % எல்லோரும் கெட்டவர்களாக இருக்கவும் முடியாது!
நீக்கு// சேகரும் அந்தப் பெண்ணும் பாடலின் ஆரம்பத்தில் அடுத்தவர்கள் முதுகைப் பிசைவதன் காரணம் என்னவாக இருக்கும்?.. //
பதிலளிநீக்குநெல்லை சந்தேகப்பட்டிருக்கின்றாரே என்று காணொளியைக் கவனித்தால் ஒரு விநாடி திக்..என்று ஆகி விட்டது..
அட.. பாட்டைக் கேளுங்கள் பிக் பிரதர்...! இதையெல்லாம் பார்க்காதீர்கள்!
நீக்குபாடல் தயாராகச் செலவழித்ததைவிட படமாக்க எவ்வளவு செலவழித்திருப்பார்கள். அதைக் கண்டுக்கலைனா எப்படி?
நீக்குஇப்போது பொன்னியின் செல்வன், விக்ரம், போன்ற படங்களின் தயாரிப்பு செலவு, வரவு எல்லாம் எப்படி?!
நீக்கு// மனமாற, உளமாறப் பிரார்த்திப்பது என்றால் என்ன?..//
பதிலளிநீக்குநெல்லை அவர்களிடம் இருந்து இப்படி ஒரு கேள்வியா!..
மனமாற - மனம் + ஆற
உளமாற - உளம் + ஆற
மனம் என்பதன் மூலச்சொல் சமஸ்க்ருதம்.. அதன் தமிழே உளம்..
மனம் ஆற (ஆறுவது) - கொதி நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு..
மனம் மாற (மாறுவது) - தன் இயல்பினை இழப்பது துறப்பது..
மன ம் ஆர (முழுவதும்) வியாபிப்பது , நிறைவது, திருப்தி..
ஆரத் தழுவுவது - இன்றைய திரைக் காணொளி..
நெஞ்சார (வாழ்த்துவது) நெஞ்சம் நிறைந்த வாழ்த்து.
வாயாரப் புகழ்வது..
கண்ணாரக் காண்பது..
வயிறார உண்பது..
காலார நடப்பது..
கண்ணாற, வயிறாற, வாயாற, காலாற - என்றெல்லாம் இல்லை..
இவ்வளவு தான்..
- இதற்குப் போய் புதன் கிழமை வியாழக் கிழமை என்று தேடிக் கொண்டு!..
( இதையும் அவ்வளவாகக் கண்டு கொள்ள மாட்டார்கள்..)
:(
சிறப்பான விளக்கம். நெல்லை ப்ளீஸ் நோட் டவுன்..
நீக்கு//( இதையும் அவ்வளவாகக் கண்டு கொள்ள மாட்டார்கள்..)//
நீக்கு???
என் கேள்வி, மனமாறவா இல்லை மனமாரவா?
நீக்குஉளமார உறுதிகூறுகிறேனா இல்லை உறபாறவா?
மனம் மாற மனமார பிரார்த்திக்கலாம்!
நீக்குஉங்கிட்ட யாராவது கேட்டாங்களா?..
பதிலளிநீக்குமுந்திரிக் கொட்டை மாதிரி!..
அட.. யார் பதில் சொன்னா என்ன.. அங்கிருந்தும் ஏதாவது பதில் வரலாம்.
நீக்குஎனக்கு முந்திரிப்பழம் சாப்பிடும் ஆசை வந்துவிட்டது. நல்லா இருக்குமா?
நீக்குகொஞ்சம் உப்பு தொட்டுக்கங்க... எப்படியும் தொண்டை கட்டிக்கொள்ளும்.
நீக்குமுந்திரிப் பழத்திற்கு சீசன் ஏப்ரல் மே ஜூன்...
நீக்குநெல்லை சில முந்திரிப் பழம் இனிப்பா இருக்கும்....நன்றாக இருக்கும். பழரசம் சாப்பிடும் போதே வழியும். எப்படியானாலும் தொண்டையைக் கொஞ்சம் பதம் பார்க்கும். ஸ்ரீராம் சொல்லியிருப்பது போல் கொஞ்சம் உப்பு தொட்டுச் சாப்பிடணும்
நீக்குகீதா
இரண்டாவது பாடல் இலங்கை வானொலியில் கேட்ட ஞாபகம் வருகிறது.
பதிலளிநீக்குமுதல் பாடல் கேட்காதவர்கள் இருக்க முடியாது.
நன்றி ஜி.
நீக்கு// மனமாறவா இல்லை மனமாரவா?.. //
பதிலளிநீக்குஅவர் மனம் மாற (மாறுவதற்காக)
மனமார வேண்டிக் கொண்ட...
இன்றைக்கு இவ்வளவு அலசியதில், நாளையிலிருந்து கமலா ஹரிஹரன் மேடம், ப்ரார்த்திப்பதையே விட்டுவிடுவாரோன்னு தோணுது. ஹாஹா
நீக்குஹா ஹா ஹா. என் மனம் மாறும்படியாக எத்தனை அலசினாலும், அனைவருக்காகவும் நான் தினமும் "அவனிடம்" பிரார்த்திப்பதை தடுத்து நிறுத்த வேண்டாமென அந்த இறைவனிடமே விண்ணப்பித்தும் கொள்கிறேன்.
நீக்குநான் தமிழை (பொதுவாகவே) அவ்வளவாக படிக்காதவள் என்பதை ஒப்புக் கொள்ளுவதோடு, இதுவரை தவறாக எழுதியதற்கு அனைவரிடமும் மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இது ஒரு பெரிய விஷயமா கமலா ஹரிஹரன் மேடம். சும்மா ஏதோ அக்கப்போர் ஆரம்பித்தேன்.
நீக்குபுரிகிறது. எதுவும் தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள். நானும் சும்மாதான் விளையாட்டாகத்தான் கூறினேன். எனினும், கற்றவர்கள் சபையினிலே நான் ஒரு கரும்புள்ளியாக (அதுதான் என் தாழ்வு மனப்பான்மையும் கூட. ) இருந்து விடுவேனோ என்ற ஐயப்பாடு எனக்கு எப்போதுமே பதிவுலகத்தில் மட்டுமில்லாது எங்கள் குடும்பத்திலும், உறவுகளிடத்தும் மிகவும் உண்டு. அதனால்தான் பதிவுகளில் நீங்கள் அனைவருமே கலாய்த்தலாக பேசி மகிழும் போது, அதையெல்லாம் தள்ளி நின்று ரசிப்பேனே ஒழிய அதில் கலந்து கொள்ள வர மாட்டேன். தெரியாததை ஏதோ நன்கு தெரிந்த மாதிரி காட்டி விடுவேனோ என்ற தயக்கமும், கூச்சமும் என் இயல்பானவை.
நீக்குமற்றபடி உங்கள் அனைவரின் கருத்தும் உண்மையானவைதான். மனமார என இனி நாளை முதல் திருத்தி வாசிக்கிறேன். ஹா ஹா ஹா. நன்றி.
//கற்றவர்கள் சபை//- நான்கூட கத்தறவர்கள் சபைன்னு படிச்சுட்டேன். நீங்க இப்படிச் சொன்னா, கிராமங்களில் படித்து, 9ம் வகுப்புக்கு நெல்லைக்குச் சென்றிருந்த எனக்கு எப்படி இருந்திருக்கும்? PG படித்துவிட்டு சென்னைக்கு வந்தவரை பெண்களிடம் பேசியதே கிடையாது. கணிணி படித்துக்கொண்டிருந்த காலத்தில் ஒரு பெண் என் பெயரைச்சொல்லிக் கூப்பிட்டபோது, கையில் வைத்திருந்த புத்தகம் பதற்றத்தில் கை நழுவிக் கீழே விழுந்துவிட்டது. அப்புறம் காலம் தைரியத்தையும், அதிகாரத்தையும் பேச்சையும், பழகுவதையும் கற்றுத்தந்தது
நீக்கு/கத்தறவர்கள் சபைன்னு/
நீக்குஹா ஹா ஹா. நானும் கிராமத்தில் ஏதோ படித்து, திருமணமானவுடன் நகர வாசியாக வந்தவள்தான். இருப்பினும் பிறரிடம், (உறவு, நட்புகள்) உரிமையாக பேசும் தயக்கமும், பயமும் இதுவரை என்னைவிட்டு அகலவேயில்லை. இப்போதுதான் பதிவுலக நட்புகளிடம் (அதுவும் முகம் பார்க்காத நட்புகள் என்பதினால் என்னவோ,) ஒரளவு பேசும் தைரியத்தை காலம் தந்துள்ளது. எப்படியோ இப்படி மனம் விட்டு (மனமாறவா? மனமாரவா?:)))) ) பேசிக் கொள்வதற்கு உங்களுக்கு மிக்க நன்றி.
ஹலோ கமலாக்கா என்னாது? நீங்க தமிழ் அவ்வளவா படிக்காதவங்களா!!!!???? நீங்க எழுதும் ஒவ்வொரு பதிவிலும் தமிழ்ல புகுந்து விளையாடறீங்க...அழகான தமிழ் வார்த்தைகளை எல்லாம் கற்பனை சிறகுல போட்டு பறக்க விடறீங்க...கவிதை எழுதறீங்க...கதை எழுதறீங்க அதுவும் சுத்தமான தமிழில்.....தாழ்வுமனப்பான்மை வேண்டாம்......அப்படிப் பார்த்தா நான் எல்லாம் எங்க போறது!! ஹாஹாஹா......சும்மா கலந்துக்கோங்க கலக்கி புகுந்து விளையாடுங்க கமலாக்கா கரும்புள்ளி செம்புள்ளி ஒண்ணும் வராது....தயக்கமும் வேண்டாம்....
நீக்குஇந்த நெல்லைய கண்டுக்காதீங்க...இப்படித்தான் சும்மா வம்புக்கு இழுப்பார்!!!!...அக்கப்போர் செய்வார்....நீங்களும் அவரை நல்லா கலாய்ங்கக்கா...நாம இத்தனைப் பேர் இருக்கோம்...!!!!
கீதா
பாடல் சுத்துது, சுத்துது, சுத்திக்கொண்டே இருக்கு. ஆனாலும் முதுகு பிசையும் நேரம் அதிகம் தான். சகிக்கவில்ல. உடனே வீடியோவை அணைத்து விட்டேன். முதல் பாடல் எப்போவும் கேட்டுக் கொண்டிருப்பது. இரண்டு நாட்கள் முன்னர் தான் ஆவுடையக்காள் பற்றியும் ஆண்டவன் பிச்சை பற்றியும் நம்ம ரங்க்ஸோடு பேசிக் கொண்டிருந்தேன்.
பதிலளிநீக்குஅருமையான பாடல்கள்...
பதிலளிநீக்குஇரண்டாவது பாடல் எப்போதோ கேட்டது...
முதல் பாடல் கேட்டு கேட்டு ரசித்த பாடல். மிகவும் பிடித்த பாடல், ஸ்ரீராம். அருமையான இசை. அழகன ஆபேரி!
பதிலளிநீக்குகீதா
அசிங்கமான ஆபேரில ஒரு பாட்டு சொல்லுங்க
நீக்குஹா ஹா ஹா நெல்லை, ராகத்தை அபஸ்வர ராகமாவும் போடலாமே...அதாவது ஆபேரில சில பல ராகங்களின் கலப்படம் ஓகே ஆனா அதையும் சரியா ஹாண்டில் பண்ணலைனா காதுக்கு அசிங்கமா இருக்குமே!!!!
நீக்குஅப்படியான பாட்டு உண்டு....ஆனா ஆபேரில தெரியாது!!!!!!!!!!!!!!!!!!11
கீதா
ஆண்டவன் பிச்சி - மரகதவல்லி பற்றிய தகவல் இப்பதான் உங்க மூலமாத்தான் தெரியுது ஸ்ரீராம்...
பதிலளிநீக்குகீதா
இரண்டாவடு பாடல் செம. எஸ்பிபி புகுந்து விளையாடுறார். நிறைய கேட்டிருக்கிறேன். இப்ப மீண்டும் கேட்டு ரசித்தேன்....உங்க ஷார்ட் பெயர் ராகம்தான்!!!!!!!!!!!!!!!!!!!!
பதிலளிநீக்குகீதா
இசையமைப்பாளர் விஜய் ஆனந்த், பாட்லை எழுதியவர் இதயசந்திரன் பெயர்கள் எல்லாம் புதுசா இருக்கு. இந்தப் பாட்டு அழகான ராகம் அதுவும் எஸ்பிபி குரல்னாலதான் இத்தனை ஸ்வீட்டா இருக்குதோன்னு தோன்ற வைக்கும் பாடல் ....குரலில் துள்ளல்!...
நீக்குவீடியோவை பார்க்கவில்லை கேட்டேளா, ஸ்ரீராம். பாட்டு மட்டுமே கேட்கும் பழக்கம்.
மீண்டும் இப்பக் கூடக் கேட்டுக்கிட்டேதான் கருத்து..
ஆரம்ப இசை கேட்டதும் தர்பாரி கானடாவோன்னு தோன்றியது. பாடல் கேட்டதும் ராகம் தெரிந்தது. உங்க ஷார்ட் பெயர் ராகம்தான்னு நினைக்கிறேன்...இப்பல்லாம் வர வர எல்லாம் மழுங்கிப் போச்சு...பாட முடியலை, ராகம் தெரியலை....
கீதா
'உள்ளம் உருகுதையா......' பக்தி ரசம் கொட்டும் இப்பாடலைக் கேட்டு உருகாதவர் யாரும் உண்டோ ?
பதிலளிநீக்குபல தடவை கேட்டும் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல்.
இரண்டாவது கேட்டிருக்கிறேன் இனிய பாடல்.