திங்கள், 2 ஜனவரி, 2023

"திங்க"க்கிழமை  :  வெனிலா குக்கீஸ் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி 

ஆங்கில வருடப்பிறப்பை ஒட்டி வரும் முதல் திங்கக் கிழமை என்பதால் ஒரு குக்கீஸ் பதிவோடு உங்களைச் சந்திக்கிறேன்.
என் பெண் நிறைய bake பண்ணுவாள். பெரும்பாலும் ஒரு தடவை செய்ததை அடுத்த முறை செய்ய மாட்டாள். சமீபமாக அவள் அடிக்கடி செய்தது கேரட் அல்வா. நான் பண்ணும் விதம் வேறு. அவள் செய்யும் விதம் வேறு. ஐஸ்க்ரீம் கேக், வித வித கேக்குகள் செய்வாள். பிஸ்கெட்டும் நிறைய வகைகள் பண்ணுவாள். ஆனால் அவள் அதில் 5 சதம்கூட சாப்பிடமாட்டாள். கேட்டால் வெயிட் போட்டுடும் என்பாள்.  அவள் செய்ததில், ரசமலாய், போன்றவை எனக்கு மிகவும் பிடித்த து. ஆனால் ஒவ்வொரு ஸ்டெப்பாக அவள் போட்டோ எடுப்பதில்லை. போட்டோ எடுத்தேன்னா, எப்படிச் செய்ய முடியும் என்று கேட்பாள். வேணும்னா நீங்க பக்கத்துல இருந்து போட்டோ எடுத்துக்கோங்க என்பாள்.

அவள் செய்த பிறகு எடுக்கும் படங்களை நான் அவ்வப்போது எங்கள் பிளாக் வாட்சப் குழுமத்தில் பகிர்வேன்.

பெங்களூர்ல இப்போ பச்சைப்பட்டாணி சீசன். நான் அதனை வாங்கிவந்து அதை வைத்து குருமா செய்யச்சொன்னேன். பச்சைப்பட்டாணி குருமா, பனீர் போட்டு இன்னொரு விதம் என்று செய்திருந்தாள்.

ரொம்ப நன்றாக வந்திருந்தது. இனிமேல் அவள் செய்தால், பக்கத்தில் இருந்து படங்கள் எடுத்து திங்கக் கிழமை பதிவுகளைத் தேற்றிவிடலாம் என்று நினைத்திருக்கிறேன். எதற்கு எப்போப் பார்த்தாலும் தேங்காய் பர்பி, சர்க்கரைப் பொங்கல், மனோகரம் என்றே ரெசிப்பி எழுதுவது?

தேவையான பொருட்கள் :

வெண்ணெய் 200 கிராம்

ஐசிங் ஷுகர் 70 கிராம் (இதுக்கு என்னப்பா தமிழ்ல)

வெனிலா எசென்ஸ் 1 டீஸ்பூன்

கார்ன் ஸ்டார்ச் 3 மேசைக் கரண்டி

மைதா 200 கிராம்

கோகோ பவுடர்

துளி உப்பு

பச்சை நிறமி சிறிது

பால் – தேவைக்கு









செய்முறை : 

ஒரு பாத்திரத்தில் வெண்ணெய், ஐசிங் ஷுகர் இரண்டையும் சேர்த்து நன்றா whip செய்யவும்.

வெண்ணெய் பொதுவாக மஞ்சள் நிறம். நாம் whip பண்ணினால், கலவை வெண்ணிறமாகவும், சிறிது காற்றுத்துளைகளுடனும் வரும்.  பிறகு இதில், கார்ன் ஸ்டார்ச், வெனிலா எக்ஸ்ட்ராக்ட், சிறிது உப்பு இவற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். (whip செய்யவும்).

இதில் மைதாவின் மூன்றிலொரு பகுதி சேர்த்து whip செய்யவும்.

நன்றாக ஒன்றுசேர்ந்த பிறகு, திரும்பவும் இன்னொரு பகுதி மைதா சேர்த்து whip செய்யவும்.  நன்றாக ஒன்று சேர்ந்தபிறகு மிகுதியுள்ள மைதாவைச் சேர்த்துக் கலக்கவும். கலவை ரொம்பவே dry ஆகிவிட்டால், சிறிது பாலைச் சேர்க்கலாம். (ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். பாலை ஒரு டீஸ்பூன் சேர்த்துக் கலந்து, போதவில்லை என்றால் இன்னொரு டீஸ்பூன் என்று கலக்கவேண்டும்). நன்றாக whip செய்வது அவசியம். நீர்க்க இருந்துவிடக் கூடாது.

இப்போது இந்தக் கலவையின் சிறிய பகுதியை எடுத்து, அதில் கோகோ பவுடரைச் சேர்த்து நன்றாகக் கலந்து பிரவுன் நிறம் வரச் செய்யவும்.  மிகுதியுள்ள அதிக portion கலவையில் பச்சை நிறமியைச் சேர்த்துக் கலக்கவும். நல்ல பச்சைக் கலவையாக இருக்கவேண்டும். இதுதான் மரத்தின் இலைப்பகுதியாக ஆகப்போகிறது.  இந்த இரண்டையும் தனித் தனியாக இரண்டு Piping bagல் விட்டுக்கொள்ளவும். இந்த Piping bagன் முனையில் சிறிய ஓட்டை இருக்கும்.

ஒரு டிரேயில், பட்டர் பேப்பரை வைத்து, பச்சை நிறக்கலவையை உபயோகித்து மரத்தையும், பிரவுன் நிறத்தை வைத்து மரத்தின் அடிப்பகுதியையும் pipe செய்யவும்.

எல்லாவற்றையும் மரம் போல குக்கீஸ் செய்தபிறகு, இந்த டிரேயை 5-10 நிமிடங்கள் ஃப்ரீசரில் வைக்கவும். இந்தச் சமயத்தில் அவனை(Oven) Preheat செய்யவும். (180 டிகிரி)

பிறகு ஃப்ரீசரில் உள்ள டிரேயை எடுத்து Ovenல் வைக்கவும். அதிகபட்சம் 10 நிமிடங்கள் bake செய்யலாம். எப்போதும் check பண்ண ணும். கவனிக்காமல் அப்படியே விட்டுவிட்டால், சூட்டில் நிறம் மாறிவிடும்.

பிறகு டிரேயை வெளியில் எடுக்கவும் (அதற்கான கையுறைகள், உபகரணங்கள் உண்டு). அதிகச் சூட்டைக் கையாள்கிறோம் என்ற கவனம் வேண்டும்.

இப்போ குக்கீஸ் மிக மென்மையாக இருக்கும் (சூட்டினால்). பத்து நிமிடங்கள் அதனை ஆறவிட வேண்டும்.

இப்போ புதுவருட குக்கீஸ் தயாராகிவிட்ட து. இதற்கு மேல், இன்னும் அழகுபடுத்த வேண்டும் என்றால், ஐசிங் ஷுகரையோ இல்லை ஷுகர் balls etc உபயோகிக்கலாம். என் பெண், அதற்குமேல் அழகுபடுத்தவில்லை.



குக்கீஸ் பார்க்கவே ரொம்ப அழகாக இருக்கிறது அல்லவா? நான் ஒன்றே ஒன்று மாத்திரம் சாப்பிட்டுப் பார்த்தேன். ருசியாக இருந்தது.

ஆங்கிலப் புத்தாண்டுக்கு ஏற்ற அழகிய செய்முறை என்று நினைக்கிறேன். நீங்களும் வாய்ப்பு கிடைக்கும்போது செய்துபாருங்கள்.

'அது சரி…இந்திய பாரம்பர்ய இனிப்பு கிடையாதா?'  என்று கேட்பவர்களுக்காக இரண்டு படங்கள்.   ஒன்று என் பெண் செய்தது. இன்னொன்று நான் செய்தது.  இதற்கான செய்முறை வரும் வாரங்களில் வரலாம்.


38 கருத்துகள்:

  1. குக்கீஸ் அழகாக வந்திருக்கின்றன. இது போன்ற மேல் நாட்டு சமையலை மகள் எங்கே படித்துப் பழகினார்கள்? ஏட்டில் படித்தாலும் செய்முறை சரியாக செய்தால் தான் பதார்த்தம் சுவையாகும். 
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜெகே அண்ணா அது கற்றால் நன்றாக இருக்கும் தான் ஆனால் வகுப்புகள் செல்லாமலேயே நெட்டில் பார்த்து தெரிந்து கொண்டுவிடலாம் நமக்கு ஆர்வம் இருந்தால்....

      நான் அப்படிக் கற்றுக் கொண்டதுதான். நிறைய வெளிநாட்டவர் தளங்களில் நான் கற்றுக் கொண்டேன் கூடவே முட்டை சேர்க்காத விஷயங்களாக.....அப்புறம் நம் கற்பனையை பயன்படுத்திக் கொள்ளலாம். அளவு மட்டும் சரியாக இருக்க வேண்டும். அனுபவத்தில் வந்துவிடும்.

      கீதா

      நீக்கு
    2. இணையம் மிகவும் உதவிகரமாக இருக்கிறது. அதை வைத்துத்தான் கற்றுக்கொண்டிருப்பாள்.

      எப்படி இருந்தாலும், கைப்பக்குவம் என்பது சிலருக்கே வாய்க்கும். கீதா ரங்கனும் அப்படிப்பட்ட கைப்பக்குவம் உள்ளவர்

      நீக்கு
    3. ஷையாகிப் போச்சே!! ஹையோ நெல்லை, சும்மா நான் செய்யறது எதையும் சாப்பிட்டுப் பார்க்காம இப்படிக் கைப்பக்குவம்னு எல்லாம் சொல்லப்டாது கேட்டேளா!!

      கீதா

      நீக்கு
  2. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  3. மிக அருமையாக இருக்கிறது வெனிலா குக்கிஸ்.
    குக்கிஸ் அழகாக இருக்கிறது.
    ஆங்கிலப் புத்தாண்டுக்கு ஏற்ற செய்முறைதான்.
    உங்கள் மகளின் ஆர்வம் , செயல்திறமைக்கு வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!
    ஜிலேபி, ரப்டி, வெண்பனி தேங்காய்பர்பி எல்லாம் அருமையாக இருக்கிறது.
    புத்தாண்டு இனிமையாக தொடங்கி இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கோமதி அரசு மேடம். சமையல் என்பதே ஆர்வத்தைப் பொறுத்ததுதானே

      நீக்கு
  4. செய்முறை படங்கள் , செய்முறை சொன்னவிதம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  5. இந்நாள் அனைவருக்கும் இனிய நாளாக அமைவதற்கு இறையருள் கூடிவருமாக!..

    எங்கெங்கும்
    நலம் வாழ்க!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது என்ன...கமலா ஹரிஹரன் மேடத்தின் வார்த்தைகள் அப்படியே இருக்கிறதே

      நீக்கு
  6. அரேபியன் பேக்கரியில் எத்தனை எத்தனையோ விதங்களில் பார்த்ததுண்டு.. எல்லாவற்றிலும் முட்டை சிலவற்றில் மார்கரைன் கூடுதலாக கேக் குக்கீஸ் வகைகளில் beef jelly சேர்க்கப் படுவதைக் கண்டு மனம் வெறுத்து ஒதுக்கியாகி விட்டது..

    இந்த செய்முறை புதுமை. அருமை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் துரை அண்ணா வெளியில் மார்க்ரைன் போடுறாங்க இல்லைனா நம்ம ஊர்ல வனஸ்பதி...பாமோலின் எண்ணை...

      அதனால வீட்டில் சுத்தமான வெண்ணை, நெய்யில் செய்வதுதான் நல்லது....

      கீதா

      நீக்கு
    2. அவர்களுடைய உணவு அப்படிப்பட்டது. அதில் சேர்க்கப்படுபவை பலவும் அவர்களால் உணவு என்று ஏற்றுக்கொள்ளப்பட்டவை. ஒரு தடவை, என்னுடன் வேலைபார்த்துக்கொண்டிருந்த தென் மாவட்டத்தைச் சேர்ந்தவனிடம், எதை எதையோ சாப்பிடற, மாட்டையும் சாப்பிடுவையா என்று கேட்டதற்கு அவன் அதை இன்சல்ட் ஆக எடுத்துக்கொண்டான்.

      ஒவ்வொருவர் உணவு ஒவ்வொருவிதம்.

      இருந்தாலும் வீட்டில் செய்யும்போது நம்மால் ஏற்றுக்கொள்ளும் அளவு பொருட்கள் சுத்தம், நம் வழிமுறைகளிலிருந்து வழுவாமை போன்றவை இருக்கும்.

      நீக்கு
  7. எதற்கு எப்போப் பார்த்தாலும் தேங்காய் பர்பி, சர்க்கரைப் பொங்கல், மனோகரம் என்றே ரெசிப்பி எழுதுவது?//

    அதானே!!! அப்படிப் போடுங்க!!!! நெல்லை!!!

    எனக்குச் செய்வது ரொம்பப் பிடித்த விஷயங்கள் பேக்கிங்க்!!!! விதம் விதமா செய்திருக்கேன்....இப்பத்தான் யாருமே இல்லை இங்க நாங்க ....டயட், பல்லு பிரச்சனைன்னு ஹூம் ஒண்ணும் என் கிரியேட்டிவிட்டிய பயன் படுத்த முடியாம இருக்கு...!!!!!!!!!!!!!!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிரியேடிவிட்டியைப் பயன்படுத்தி, செய்து, அடுத்தவர்களுக்கு (என்னை மாதிரி ஹி ஹி ஹி) செய்துகொடுக்கலாமே.

      நீக்கு
    2. ஹாஹாஹாஹா செஞ்சு கொடுக்க ரெடிதான்....நீங்க எங்க வரீங்க? சிரோட்டியே இன்னும் உங்களுக்குச் செஞ்சு தரலை...சின்ன சின்ன சிரோட்டி இப்ப சமீபத்தில் செஞ்சு ஸ்டாக் வைத்துவிட்டு வந்தேன். வேண்டும் போது அதில் பாலைச் சுண்டக் காய்ச்சி மணக்கும் சாமான் எல்லாம் போட்டு சாப்பிட்டுக்கலாம்... இப்ப நானும் வெளியில் அதிக நேரம் வர முடியாத சூழலில் இருக்கிறேனே....

      கீதா

      நீக்கு
  8. சௌம்யா கலக்கறாங்க போங்க!!!!! நெல்லை உங்களைப் போலவே பல ஆர்வங்கள் கொண்டவங்களா இருக்காங்க!! அவங்க அத்தைய போலவும்!!! ஹிஹிஹிஹிஹிஹி.....யாரு இந்த அத்தை!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் சமையல் ஆர்வம், இன்னும் சிறிய வயதிலேயே வரலையே என்று எனக்கு வருத்தம். என் அப்பாவிற்கு நான் செய்துகொடுத்திருக்கலாம். நிச்சயம் சந்தோஷப்பட்டிருப்பார் (அவருக்கும் அல்வா போன்று பல இனிப்புகள் செய்யத் தெரியும்)

      நீக்கு
  9. வெண்ணெய் பொதுவாக மஞ்சள் நிறம். நாம் whip பண்ணினால், கலவை வெண்ணிறமாகவும், சிறிது காற்றுத்துளைகளுடனும் வரும். //

    ஆமாம் ஆமாம் ஃப்ளஃபியா ஊதினா பறக்கும் லெவல்.....வரைக்கும் Whip பண்ணனும். எங்கிட்ட Electric Beater - இரு whipper ஒடது இருக்கு. 22 வருஷம் ஆகுது. 2001 ல அங்க இருக்கும் போது வாங்கியது..110 வோல்ட்....ஸோ அதை அடாப்டர் இங்குள்ள மின்சார பளகுல போட வேண்டி போட்டு இன்னமும் இருக்கு. அப்படி யூஸ் செஞ்சுருக்கிறேன்.

    படங்களும் செய் முறையும் அட்டகாசம்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் பெண், அவளுக்குத் தேவையானவை எல்லாவற்றையும் வாங்கிவைத்திருக்கிறாள். என்ன ஒண்ணு....செஞ்சு முடித்தபிறகு நான் கிச்சனைக் க்ளீன் செய்யவேண்டும்

      நீக்கு
  10. அழகா கிறிஸ்துமஸ் மரம்!!!! சூப்பர்.

    //பிறகு ஃப்ரீசரில் உள்ள டிரேயை எடுத்து Ovenல் வைக்கவும். அதிகபட்சம் 10 நிமிடங்கள் bake செய்யலாம். எப்போதும் check பண்ண ணும். கவனிக்காமல் அப்படியே விட்டுவிட்டால், சூட்டில் நிறம் மாறிவிடும்.//

    அதே அதே....அது போல எடுக்கும் போது ரொம்ப ஸாஃப்டா இருப்பது போல இருக்கும் கொஞ்ச நேரத்தில் செட் ஆகிவிடும்...நீங்க சொல்லிருக்கீங்க அடுத்தாப்ல..அதே தான்

    ஆமாம் கையுறை உபகரணங்கள் பயன்படுத்த வேண்டும் இங்கும் உண்டு. உபகரணங்கள் எல்லாம் வைச்சிருக்கேன் நானும்....

    நிறைய பயன்படுத்தி பயன்படுத்தி என் ஓவன் (ஓடிஜி) heating coil அந்த கம்பி இருக்குமே மேலும் கீழும் அது இப்ப வேலை செய்ய வில்லை. சரி பண்ண வேண்டும்....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹீட்டிங் காயில் நிறைய உபயோகப்படுத்தியதால் வேலை செய்யவில்லையா? இல்லை... எதுக்கு வம்பு என்று வீட்டில் உள்ளவர்கள் ரிப்பேராக்கிவிட்டார்களா? ஹா ஹா ஹா

      நீக்கு
    2. ஹாஹாஹஹா நெல்லை, என்னை விட வீட்டில் இருக்கறவங்கதான் அதிகம் விரும்பிச் சாப்பிட்டவங்க....பீசா முதற்கொண்டு. போன வருஷம் கூட பீசா செய்யச் சொல்லி செஞ்சு கொடுத்து மாவு உட்பட...வீட்டிலேயே கலந்து, செஞ்சது..

      நிலக்கடலை கூட ட்ரேல பரப்பி வைச்சு ரோஸ்ட் / அதான் வறுத்ததுண்டு....

      வழக்கமா ரிப்பேர் செஞ்சுடுறவங்க இப்ப பல்லு வேற பிரச்சனையா கண்டுக்காம இருக்காங்க!!!

      கீதா

      நீக்கு
  11. சௌம்யாவுக்குப் பாராட்டுகள்!!! சொல்லிடுங்க நெல்லை

    பர்ஃபி நீங்க செய்ததா இருக்கும் ஜிலேபி ராப்டி (சூப்பரா இருக்கு) சௌம்யா செஞ்சதோ!!!!?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பர்பி நான் செய்ததுதான். மாமியாருக்காக நான் செய்தது.

      நீக்கு
  12. நெல்லை செய்யறதை விட அடுத்து அந்த வெண்ணை கலந்த பாத்திரங்கள், ஐசிங்க் பேக், வடிவங்கள் எல்லாம் சுத்தம் செய்வது என்பது தான்....நான் சூடு தண்ணீர் போட்டு எல்லாவற்றையும் அதில் போட்டு எடுத்து, அப்புறம் சோப் போட்டு கழுவி காய வைத்துத் துடைத்து வைக்க அதுவே டைம் எடுக்கும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதெல்லாம் நாங்கதான் செய்யணும். அதிலும் சில பாத்திரங்களைச் சுத்தம் செய்ய ரொம்ப நேரம் எடுக்கும். கிச்சனையும் சுத்தம் செய்யவேண்டியிருக்கும். ஹாஹா

      நீக்கு
  13. தித்திக்கும் படங்கள் அருமை

    பதிலளிநீக்கு
  14. ஐசிங்க் சுகர் ஸ்டாக் இல்லைனா டக்குனு செய்ய, ஒரு கப் (200 கிராம் கப்) சர்க்கரையை பொடித்து அதோடு ஒரு மேசைக்கரண்டி கார்ன் ஸ்டார்ச் கலந்து சலித்து விட வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியும் செய்திருக்கிறாள். ஆனா பாருங்க...கடைசில மிக்சியை நான்தான் சுத்தம் செய்யணும் ஹா ஹா ஹா

      நீக்கு
    2. ஹாஹாஹாஹா பிள்ளைகள் இருந்தா அப்படித்தான் நெல்லை....கூட உதவியாளர்கள் வேண்டும்தான் போல....ஹூம் எனக்கு ஒரு உதவியாளர் இருந்தா நல்லாருக்கும்!!!! ஆனா இப்ப என் பையன் ரொம்ப கடுமையான டயட். ஸோ அவன் வந்தாலும் இதெல்லாம் எதுவும் செய்ய முடியாது....நம்ம பக்ஷணங்கள் உட்பட....நோ ஊறுகாய்....புளிக்காச்சல் தவிர...வேற எந்த ஊறுகாயும், வத்தல் சாமானும் நோ.....அதுக்குப் பதிலா நெல்லிக்காய் பொடி/நெல்லி முள்ளி, சுண்டைக்காய், மணத்தக்காளி, வேப்பம் பூ, திரிப்பலா, கறிவேப்பிலை உலர்த்தியது, இன்னும் இப்படியான சாமான் இதெல்லாம் தான் வேணுமாம்....என் பிரச்சனை வந்துவிடக் கூடாதுன்னு...அவனுக்கு வரும் வாய்ப்பு அதிகம் என்பதால்...

      கீதா

      நீக்கு
    3. என்ன பிரச்சனைனு தெரியலை. ஊறுகாய்/புளிக்காய்ச்சல்.....இதெல்லாம் ப்ரெஷருக்கு நல்லதில்லையா? மற்றவை டயபடீஸை வராமல் தடுக்குமா?

      நீக்கு
  15. குக்கீஸ் சூப்பர் மகளுக்கு பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  16. குக்கீஸ் ஏற்கெனவே குழுமத்தில் பார்த்துட்டேன். உங்க பெண்ணின் திறமைகள் அசர அடிக்கிறது. நல்ல கணவனாக அமைய வாழ்த்துகள். ஆசிகள்.

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

    உங்கள் மகளின் கைப்பக்குவம் மிக நன்றாக உள்ளது. அழகாக ஓவியத்திலும், சமையல் கலையிலும் சிறப்பாக விளங்கும் தங்கள் மகளுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள்.பகிர்வுக்கு மிக்க நன்றி.

    இதன் அடுத்த பதிவிலும் உங்கள் மகளுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகளை கூறியுள்ளேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!