புதன், 1 பிப்ரவரி, 2023

சு நா மீ 10 : சு நா மீ - திருவாரூருக்கு வந்தாச்சு!

 

புதன் கேள்வி பதில் நேற்றே வெளியாகிவிட்டதால், இன்று சு நா மீ க்கு மட்டும் இடம் கொடுக்கப்பட்டுள்ளது! 

சு நா மீ 10 : சு நா மீ - திருவாரூருக்கு வந்தாச்சு! 

சு நா மீ முந்தைய பகுதி சுட்டி (சு நா மீ 09 ) 

நாகேஸ்வரன் என்ற நாகராஜ், சுந்தரம் மற்றும் மீரா இருவருடனும் சிங்கப்பூரை விட்டுக் கிளம்பி, தன்னுடைய தந்தை மற்றும் தங்கை இருவரையும் பார்ப்பதற்காக விமானத்தில் கிளம்பினான். 

அப்பொழுது அவன் மனதில் கடந்த சில நாட்களில் நடந்த எல்லா நிகழ்வுகளும் ஞாபகத்திற்கு வந்தன. 



அதன் பின் நாகராஜ் மீண்டும் மறுநாள் காலையில் அதே அலைபேசி எண்ணை மீண்டும் தொடர்பு கொண்டதும்  அவன் நினைவுக்கு வந்தது. 

" ஹலோ - நான் சிங்கப்பூரிலிருந்து தியாகராஜன் சன், நாகராஜ் பேசுகிறேன். "
 
" தம்பீ - நல்லா இருக்கீங்களா? நீங்களும் உங்க தங்கையும் சௌக்கியமா? " 

" ஆமாம் அம்மா. நீங்க யாரு? " 

" தம்பீ நான் உன்னுடைய அத்தை சுகந்தி. உன் மாமா தயாளன் வொய்ஃப். உங்களையும் உங்கள் தங்கை சுந்தரியையும் என்னுடைய கல்யாணத்தின்போது பார்த்த ஞாபகம் உள்ளது. உங்கள் அப்பா தியாகராஜன், உங்க சித்தி காந்தா இருவருடனும் நீங்க ரெண்டு பேரும் வந்திருந்தீங்க." 

" அப்படியா அத்தை! ரொம்ப சந்தோஷம். நேற்று நான் இந்த போனில் அழைத்தபோது போனை எடுத்தவர் யார்? அவர் ஏன் சரியாகப் பேசவில்லை. "

" தம்பீ, நான் சொல்வதை கவனமாகக் கேட்டுக்கோங்க. இந்த ஃபோன் உன் மாமாவின் ஃபோன். இனிமேல் இந்த ஃபோன் எண்ணுக்கு கால் செய்யாதீங்க. நேற்று இந்த போனை எடுத்துப் பேசியவர் தோட்டக்காரர் துரைசிங்கம் என்று நினைக்கிறேன். தம்பீ, உன்னிடம் சொல்வதில் தவறு ஏதும் இல்லை என்று நினைக்கிறேன். நீங்களும் சுந்தரியும் சுப்பா ராவுடன் நாகூர் சென்றதாகவும், சுனாமியில் நீங்கள் மூன்று பேரும் இறந்துவிட்டதாகவும், உன் சித்தியும், உன் மாமாவும் சொன்ன பொய்யை நாங்கள் எல்லோருமே நம்பினோம்.  காந்தா கடைசி காலத்தில் சொன்ன விஷயங்கள் மூலமாகத்தான் - நீங்களும் சுந்தரியும் உயிருடன் இருக்கக் கூடும் என்ற உண்மை எனக்குத் தெரியவந்தது. 
ஆனால், உன்னுடைய மாமா - சொத்துக்கு ஆசைப்பட்டு, சுந்தரியைப் பற்றியோ அல்லது உங்களைப் பற்றியோ எந்தத் தகவல் வந்தாலும் அதை மறைத்து, தியாகராஜனிடம் நீங்கள் இருவரும் உயிருடன் இல்லை என்றே சொல்லிவருகின்றனர். நான் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் உன் மாமா பிடிவாதமாக இருக்கிறார். தப்பித் தவறி நீங்களோ அல்லது உங்கள் தங்கையோ இங்கு வந்தால், உங்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்த தோட்டக்காரன் உதவியோடு ஏதோ திட்டம் போட்டுள்ளார் உன் மாமா. தம்பீ உங்க அதிர்ஷ்டம் - இப்போ உன் அப்பாவும், மாமாவும், குளிப்பதற்காக கமலாலயம் போயிருக்கிறார்கள். தோட்டக்காரன் இன்னும் வேலைக்கு வரவில்லை. நீங்கள் இருவரும் எங்கு இருந்தாலும் சந்தோஷமாக, சௌக்கியமாக நல்லா இருக்கணும். அப்பாவைப் பார்க்க வருவதாக இருந்தால் மிகவும் எச்சரிக்கையோடு, பாதுகாப்போடு வாருங்கள்." 

ஆயிற்று. இதோ மூவரும் கிளம்பி திருவாரூருக்கு வந்து சேர்ந்துவிட்டனர். 

டாக்ஸியிலிருந்து வந்து இறங்கிய மூவரையும் பார்த்த பணியாளர்கள் உள்ளே ஓடிச் சென்று விவரம் சொல்ல, வந்தவர்களை வரவேற்க, வாசலுக்கு வந்தார் தியாகராஜன். 

மீராவைப் பார்த்ததும் திகைத்து, " நீ .. .. நீங்க . . . . சந்தானலக்ஷ்மிக்கு ஏதாவது சொந்தமா? " என்று கேட்டார். 

நாகராஜ் பலமாகச் சிரித்தபடி, " அப்பாவுக்கும் இவங்களைப் பார்த்ததும் என்  அம்மா ஞாபகம் வந்திடுச்சு " என்றான். 

சுந்தரம் சிரித்தபடி, " வாருங்கள் உள்ளே போய் பேசுவோம் " என்று சொன்னார். 

உள்ளே நுழைந்ததும், நாகராஜ் சுந்தரத்திடம், " நீங்க பழைய கதைகள் எல்லாவற்றையும் அப்பாவுக்குச் சொல்லுங்கள். நான் போய் என்  தங்கையைப் பார்க்கவேண்டும். அப்பா சுந்தரி எங்கே? " என்று கேட்டான். 

தியாகராஜன், " மாடியில் அவளுடைய ரூமில் இருக்கின்றாள்" என்று சொன்னார். 

நாகராஜ் மாடிக்குச் சென்று, அறைக்குள் நுழையும்போது, பேச்சுச் சத்தம் கேட்டு வெளியே ஆர்வத்துடன் ஓடி வந்தாள் சுந்தரி. 


அறையில் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து ஏதோ பார்த்துக்கொண்டிருந்த பெண்ணைப் பார்த்ததும், ' அது யார் ' என்று தெரிந்துகொள்ள ஆர்வம் வந்தது நாகராஜுக்கு. 

சுந்தரியும் அவனும்  சிறிது நேரம் ஒருவரை ஒருவர் கண்களில் ஆனந்தக் கண்ணீரோடு பார்த்துக் கொண்டிருந்த பின், நாகராஜ் கேட்டான் " சுந்தரி - யார் அந்தப் பெண்? "

(தொடரும்) 

30 கருத்துகள்:

  1. பணம் மனிதனை பாடாய்படுத்துகிறது.

    பதிலளிநீக்கு
  2. இந்த நாளும் இனிய நாளே..
    எல்லாருக்கும் இறைவன் அருளட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. //புதன் கேள்வி பதில் நேற்றே வெளியாகி விட்டதால்..//

    ஹி.. ஹி..

    நேற்றைய அனுபவத்தில்
    பின்னூட்ட கேள்வி - பதில்
    தான் தூக்கல். கேள்வியும் பதிலும் ஒரு கை ஓசையாக இருக்கக் கூடாது.

    பதிலுக்கு பதிலாய் கேள்விகள் தொடர்ந்தால் இன்னும் களை கட்டியிருக்கும்.

    பதிலளிநீக்கு
  4. மீண்டும் நல்ல திசையில் பயணிக்கின்றது கதை...

    சு நா மீ க்கு வந்த சோகங்கள் முடியட்டும்..

    சுனாமிக்குப் பின் சுகங்கள் வந்து சேரட்டும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புயலுக்கு பின்னே அமைதி
      வரும் துயருக்கு பின் சுகம் ஒரு பாதி
      இருளுக்குப் பின் வரும் ஜோதி
      இது தான் இயற்கை நியதி

      நீக்கு
  5. சுநாமீ கதைப் போக்கை அத்தியாயத்திற்கு அத்தியாயம் நீங்கள் ஃபோக்கஸ் (focus) பண்ணும் விதம் வித்தியாசமாய் அழகாய் இருக்கிறது. தொடரட்டும் உங்கள் எழுத்துத் திறமைகள்.

    பதிலளிநீக்கு
  6. கௌ அண்னா, அடுத்த வாரம் நாகேஸ்வரன் கல்யாண நிச்சயதார்த்தம்னு சொல்லுங்க!!! எபி வாசகர்களுக்கு அழைப்பு உண்டுதானே!! மின்நிலா வேற உதவியிருக்கிறது!

    அந்தப் பொண்ணு யாரோ...

    இதுக்கும், கௌ அண்ணா எனும் கதாசிரியர் பதில் சொல்வார், "கதாசிரியர் வந்து பெண்ணை அறிமுகப்படுத்தி உங்க எல்லாரையும் அழைப்பார்னு!!!!!"

    கீதா

    பதிலளிநீக்கு
  7. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  8. கதை நன்றாக இருக்கிறது, நிறைய திருப்பங்களுடன்.
    நாகராஜ் , சுந்தரி சந்திப்புக்கு மின் நிலாவின் உதவி பெருபங்கு வகிக்கிறது.


    //சுந்தரி - யார் அந்தப் பெண்? "//

    அந்த பெண் நாகராஜின் மாமா பெண்ணாக இருப்பார் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. மின் நிலா எத்தனை வகையில் உதவுகிறது. போலிஸ்சையும் அழைப்பார்களாம் கிட்டவரவே பயமாக இருக்கிறது ஓட்டமாக ஓடிப் போகிறோம் :)

    கதை நன்றாக செல்கிறது.

    பதிலளிநீக்கு
  10. சு.நா.மீயின் புது அறிமுகம் யாருக்காக? அது யாருக்காக? நாகராஜிற்கு ஜோடியா? சுந்தரிக்குத் தான் ஏற்கெனவே ஒருத்தர் காத்துட்டு இருக்கார் போல!

    பதிலளிநீக்கு
  11. கேள்வி/பதில் இல்லாத புதன் வெறிச்சோ வெறிச். செவ்வாயன்று கேள்வி/பதில் ஏதும் வரலையே! சும்மா ஒரு அரட்டை அரங்கம் தானே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன செய்வது? நீங்களாவது கேள்விகள் கேட்டிருக்கலாம்!

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!