செவ்வாய், 21 பிப்ரவரி, 2023

மொழிபெயர்ப்பு சிறுகதை : சாஸ்தாங்கோட்டையும் குரங்குகளும் 1/2 - ஜெயக்குமார் சந்திரசேகர்

  

கொட்டாரத்தில் சங்குண்ணி எழுதிய

ஐதீக மாலை என்ற தொகுப்பிலிருந்து ஒரு கதை

மலையாளத்தில் இருந்து மொழிபெயர்ப்பு - JK

சாஸ்தாங்கோட்டையும் குரங்குகளும்.

(பாகம் ½)


சாஸ்தாங்கோட்டை  குண்ணத்தூர் தாலுகாவில் உள்ளது. இந்த தலத்திற்கு சாஸ்தாங்கோட்டை என்ற பெயர் உருவானதன்  காரணத்தை முதலில் விளக்க வேண்டி இருக்கிறது.

பந்தளத்து ராஜாக்கள் பாண்டிய ராஜ வம்சத்தில் வந்தவர்கள் என்றும், அவர்களுடைய குலதேவதை சபரிமலை சாஸ்தா என்றும் அறிவீர்கள். முன் காலங்களில் பந்தளத்து ராஜாக்கள் ஆண்டில் ஒரு முறை சபரி மலைக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். தற்போதும் அவர்களில் யாராவது ஒருவர் ஆண்டுக்கு ஒரு முறை சபரி மலைக்கு சென்று (மகர சங்கிராந்தி அன்று) தரிசனம் செய்வது கட்டாயம் நடை பெறுகிறது

வெகு காலம் முன்பு ஒரு பந்தளராஜா காயங்குளத்திற்கு வந்து காயங்குளம் இளையராணி ஒருத்தியை திருமணம் செய்து காயங்குளத்திலேயே வசிக்கத் துவங்கினார். அவருக்கு ராணியை விட்டு பிரிய மனமில்லாமல் இருந்ததாலும், ராணி காயங்குளம் விட்டு பந்தளம் செல்ல மனமில்லாததாலும் ராணியின்  விருப்பப்படியே 12 வருடங்கள் பந்தளத்திற்கோ சபரிமலைக்கோ செல்லாமல் காயங்குளத்திலேயே இருந்தார்.

அப்படி இருக்கும்போது ஒரு நாள் இரவு பந்தளத்து ராஜா உறக்கத்தில்கடுவா வருது, புலி வருதே” (கடுவா = வேங்கை) என்று சப்தமிட்டார். அதைக்கேட்ட ராணி அவரை எழுப்பி என்ன என்று கேட்டபோதுஒன்றும் இல்லை கனாக் கண்டேன்என்று சொல்லிவிட்டு மீண்டும் உறங்கினார்.

இது போன்று அடுத்த நாள் அடுத்த நாள் என்று தொடர்ந்து எல்லா நாட்களிலும் கனவு கண்டு அரற்றுதல் முறையாகி விட்டது. இந்த விவரம் காயங்குளம் ராஜாவிற்கு தெரிய வந்தது.

ஆகவே அவர் பல மந்திரவாதங்களும், சிகிச்சைகளும் செய்தும் பலன் இல்லை. மேலும் இப்படி கனா காண்பதும் கண்டு அரற்றுவதும் கூடிக் கூடி ஒரு ராத்திரியில் 5, 6 முறை என்றாகி விட்டது. அதனால் ராணிக்கு மாத்திரம் என்றில்லாமல் கொட்டாரத்தில் இருந்த மற்றவர்களுடைய உறக்கமும் தடைபட்டது.

இப்படி இருக்கும்போது காயங்குளம் ராஜா பந்தளம் ராஜாவிடம்என்ன இது இப்படி தினமும் ராத்திரியில்கடுவா வருது, புலி வருதேஎன்று கூவுகிறீர். இதன் காரணம் இங்கு கொட்டாரத்தில் யாரும் உறங்க முடியவில்லை, நீங்கள் பந்தளத்திற்கு சென்று வியாதி குணமான பின்பு இங்கு திரும்பி வந்தால் போதும்என்று கூறினார்.

இதைக் கேட்ட பந்தள மஹாராஜாவிற்கு மனஸ்தாபம் உண்டானது. ஒன்றாமதாய் தன்னுடைய பிரிய நாயகியை விட்டு பிரிந்து செல்ல வேண்டிய கஷ்டம். இரண்டாமதாய் காயங்குளம் ராஜாவின் வார்த்தைகள் அவரைக் கேவலப் படுத்துவதாக இருந்தது. அவர் கவலையுற்றார்.

அன்று இரவு பந்தளம் ராஜாவிற்கு வழக்கமான கனவுடன் ஒரு சிறப்புக் கனவும் கூடி உண்டானது. ஒரு பிராமணன் அவரிடம்நீங்கள் ஒன்றும் கஷ்டப்பட வேண்டாம். ஒரு காரியம் செய்தால் இந்த உபாதைகள் எல்லாம் நீங்கி  சுகமாகலாம். குலதெய்வம் சபரிமலை சாஸ்தாவைகக் கண்டு தொழாமல் பன்னிரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆகையால் சபரிமலை சென்று பன்னிரண்டு தினங்கள் பஜனை செய்து சாமியை தரிசிக்க வேண்டும்மேலும் மாத பூஜையை முடங்காமல் செய்யவேண்டும்இப்படிச் செய்தால் போதும் எல்லாம் சரியாகி விடும். சொப்பனத்தில் காணும் கடுவாயும், புலியும் சாஸ்தாவின் பைரவர்கள். காயங்குளம் ராஜா கோபம் கொண்டு பேசியதின் பலனை அவர் அனுபவிப்பார்." என்று ஆலோசனை கூறுவதாகக்  கனாக் கண்டார்.

இது சொப்பனம் அல்ல, சாஸ்தாவே தனக்கு செய்த உபதேசம் என்று அவர் நம்பினார். பந்தளம் ராஜா 

அடுத்த நாள் காலை ராணியிடம் சபரிமலை செல்ல அனுமதி கோரினார். ராணிக்கு அவரைப் பிரிய மனசில்லை எனினும் இரவு உபத்திரவம் நீங்கிக் கிடைத்தால் நன்று எனக் கருதிபஜனம் தீர்ந்த உடனே திரும்ப வேண்டும்என்று கூறி சம்மதித்தார். பந்தளம் ராஜாவும் அவ்வாறே ஒப்புக்கொண்டு பந்தளத்திற்கு புறப்பட்டார்.

அன்று முதல் காயங்குளம் ராஜாவிற்கு மூளை குழம்பி விட்டது. அவர் எப்போதும்கடுவா பெற்றது, புலி பெற்றதுஎன்று புலம்பிக் கொண்டே இருந்தார். வேறு எதுவும் பேசவில்லை. குளித்தல், ஆகாரம் கழித்தல் போன்ற காரியங்கள் கூட மற்றவர்களின் நிர்பந்தத்தினால் மட்டுமே செய்தார். ராஜ காரியங்கள் ஒன்றும் செய்ய இயலவில்லை. சில நாட்கள் குளிப்பது, உண்பது என்பவை போலும் இல்லாமல் போகும். அவரிடம் ஏதாவது கேட்டாலோ, சொன்னாலோ எல்லாவற்றிற்கும்கடுவா பெற்றது, புலி பெற்றதுஎன்ற பதிலே கிடைத்தது. எல்லோரும் கவலையுற்றனர்.

அநேகம் மந்திரவாதங்களும் சிகிச்சைகளும் செய்தனர். ஒரு பயனும் இல்லை. ஆகவே பிரசித்தமான சில ஜோசியர்களைக் கொண்டு ப்ரச்னம் பார்த்தபோதுபந்தளத்து ராஜாவைத் திட்டியதால் உண்டான சபரிமலை சாஸ்தாவின் சினம் இவ்வாறு தாக்குகிறது. அதற்கு பிராயசித்தமாக 101 ராசி சபரிமலைக்கு கொடுத்தனுப்பி காணிக்கை செலுத்தலும்கடுவா பெற்றது, புலி பெற்றது' என்ற வாக்குகள் என்றும் பிராமணர் சபையில் சொல்லும் வண்ணம் ஏற்பாடு செய்தலும் வேண்டும். இவ்வாறு செய்தால் இந்த வியாதி மாறி ராஜா முன்பிருந்த நிலையை அடைவார்." என்று பரிகாரம் சொன்னார்கள்.

அதன்படி 101 ராசி சபரிமலைக்கு காணிக்கையாக அனுப்பப் பட்டது. “கடுவா பெற்றது புலி பெற்றதுஎன்ற வாக்கியம் நம்பூதிரி பிராமணரின் சங்க கலைஞர்கள் சபையில் பாடவும் காயங்குளம் பழைய நிலையை அடைந்தார்.

(சங்க கூத்து என்பது நம்பூதிரிகள் வாளும் கேடயமும் தாங்கி கதகளி போன்று ஆடும் ஒரு கூத்து. பொதுவே போர் என்பது சத்ரியர்களின் தொழில் என்பது அவர்களுடைய கருத்து)

சங்க கலைஞர் தற்போதும்

"காட்டில் கிடன்ன ஐந்து எட்டு எலி கூடி கடல் உழுது

காலத்தில் இள வித்து விதைச்சப்போல் அடைக்கா காய்ச்சு

தோண்டிப் பறிப்பிச்சு நிறைச்சப்போல் அரை முறம் நிறைய மாங்கா

தோலு கலைஞ்சப்போல் ஐந்நூறு பரங்கிப் பல்

கப்பல் வலிச்சு அங்கு தலைமுகலில் கட்டி

காயங்குளத்தல்லோ கடுவாயும் புலியும் பெற்று."

என்றொரு பாட்டு சங்கக்களியில் உபயோகித்து வருகிறார்கள் அல்லவா?"


பந்தளத்து ராஜா காயங்குளத்தை விட்டு சென்றபின் அவருக்கு கனவுகளோ, உறக்கத்தில் பிதற்றுவதோ உண்டாகவில்லை. அவர் சிறிது காலம் பந்தளத்தில் தங்கிவிட்டு பின் பரிவாரங்களுடன் சபரிமலைக்கு சென்றார். ஒரு பொன் கிரீடமும் ஒரு விலையேறிய முத்து மாலையும் காணிக்கையாக சமர்ப்பித்தார். பக்தியுடன் பன்னிரண்டு நாள் பஜனையும் செய்தார். பன்னிரண்டாம் நாளன்று பகல் 5 நாழிகையில் ஒரு வயிற்று வலி தொடங்கியது. ஆகவே அன்று இரவு அவர் அத்தாழம் உண்ணவில்லை. சந்தியா வந்தனமும் சாமி தரிசனமும் ஆனவுடன் உறங்கச் சென்றார்.

அப்போது ஒரு பிராமணன்உறங்குகிறீர்களா? தம்புராட்டியிடம் இன்று வருவதாக சத்தியம் செய்திருந்தீர்களே? சத்தியத்தை மீறலாமோ? இங்கு இருக்கும் இந்தக் குதிரையில் ஏறி தம்புராட்டி இருக்குமிடம் செல்லலாம்.” என்று சொல்வதாகத் தோன்றியது. எழுந்து வெளியில் சென்று நோக்கியபோது ஒரு குதிரை நிற்பதை கண்டார். அதன் மேல் ஏறி காயங்குளத்தை அடைந்தார். அவருடைய பிரிய ராணியின் சயன அறையை அடைந்தவுடன் குதிரையில் இருந்து இறங்கினார். குதிரை உடனே மறைந்தது. 

அறையின் கதவைத் தட்டி விளித்த போது இவருக்கு வேண்டி காத்திருந்த தம்புராட்டி அவரை எதிர் கொண்டு அழைத்து அத்தாழம் பரிமாறினார். 

அடுத்த நாள் காலை காயங்குளம் ராஜா மருமகன் பந்தளம் ராஜாவின் வரவை அறிந்து அவரைக் காண வந்தார். “நான் முன்பு கூறிய வார்த்தைகளை பொறுத்து மன்னிக்க வேண்டும். இங்கேயே ஸ்திரமாக தங்கி வசிக்க வேண்டும்.” என்று வேண்டினார். 

எனக்கு தங்களோடு ஒரு விரோதமும் இல்லை. மன்னிப்பு கேட்கும் அளவிற்கு தங்கள் ஒரு கேடும் செய்யவில்லை. எவ்வளவு நாள் முடியுமோ அத்தனை நாள் இங்கே தங்க முடிவு செய்துள்ளேன்.” என்று பந்தள மஹாராஜா கூறினார். 

அவர் அவ்வாறு அங்கு தங்கி இருக்கும்போது ஒரு நாள் அவருடைய பத்தினியும் அவரும் பேசிக்கொண்டிருக்கும்போது ராஜா முன்பு கண்ட சொப்பனம் பற்றியும், சபரிமலை சாஸ்தாவின் மஹாத்மியம் பற்றியும், மற்றும் எடுத்துரைத்தார். அப்போது திங்கள் (மாதம்) பூஜை நடத்தவேண்டும் என்ற கட்டளையும் ராஜாவிற்கு நினைவில் வந்தது. 

அடுத்த மாதம் என்றில்லை, எல்லா மாதமும், பிரிய வேண்டி வரும் என்பதை நினைத்தவுடன் இருவருக்கும் துக்கம் உண்டாகியது. அன்றிரவு ராஜா ஓர் கனவு கண்டார். கனவில்  ஒரு ஆள் வந்துகவலைப்படாதீர்கள். ஒவ்வொரு மாதமும் பத்தினியைப் பிரிந்து என்னைக் காண சபரிமலைக்கு வரவேண்டிய அவசியம் இல்லை. நான் இங்கு பக்கத்திலேயே ஒரு இடத்தில வந்து அமர்கிறேன்.” என்று சொன்னதாக கனவு கண்டார். உடன் விழித்துப் பார்த்தார்.  இவ்வாறு அடுத்து வந்து கூறியது சபரிமலை தர்ம சாஸ்தா தான் என்று நம்பினார். அடுத்த நாள் காலை ராணியிடம் இவ்விவரத்தையும் தெரியப் படுத்தினார். ராணிக்கு மிக்க சந்தோசம். 

காயங்குளம் ராஜா ஆண்டுக்கு ஒரு முறை தன்னுடைய படை வீரர்களுக்கு ஆயுத பரீட்சை நடத்தி ஜெயிப்பவர்களுக்கு பொன், பட்டு, பணம் போன்ற பரிசுகள் வழங்குவது வழக்கம். இக்கதை நடந்த காலத்தில் இந்தப் பரீட்சையை மேஷ மாதம் (சித்திரை) ஒன்பதாம் தேதி நடத்தினார். மூன்று நாட்கள் முன்பு இது பற்றி விளம்பரம் செய்தார். எட்டாம் தேதியன்று இரவு அவருக்கு சாஸ்தாவின் தரிசனம் மீண்டும் கிட்டியது. நல்ல திடகாத்திரம் உள்ள ஒரு இளைஞன் அவரிடம் வந்துநாளை இங்கு ஆயுதப் பரீட்சை நடக்கும் அல்லவா? அதில் சேருவதற்கு நானும் வருவேன். அப்போது நான் ஒரு அம்பு எய்வேன். அந்த அம்பு விழும் இடத்திற்கு வந்தால் என்னைக் காண முடியும்." என்று கனவில் சொன்னதாக அவருக்குத் தோன்றியது. 

ஒன்பதாம் தேதி காலை படைவீரர்கள் எல்லோரும் காயங்குளம் ராஜாவின் முன்பு அணி வகுத்தனர். அந்த அணிவகுப்பில் புதிதாக ஒரு இளைஞனும் இருந்தான். 

காயம்குளம் ராஜா அவனிடம்நீ யார்என்று கேட்டார்.

இளைஞன்: “அடியேன் ஒரு மலையாளி”.

ராஜா: “நீ எங்கே வசிக்கிறாய்” .

இளைஞன்: “ அடியேன் கிழக்கே மலையில் இருப்பவன்”.

ராஜா: “உன்னுடைய பெயர் என்ன?”

இளைஞன்: “ஐயப்பன்

ராஜா: “நீ ஏன் இங்கு வந்தாய்?”

இளைஞன் : “மஹாராஜா ஆயுதப் பரீட்சை நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்குவார் என்று கேள்விப்பட்டேன். பரீட்சையில் பங்கு பெற இங்கு வந்திருக்கிறேன்."

ராஜா: “உனக்கு எந்த ஆயுதம் உபயோகிக்கத் தெரியும்."

இளைஞன்: “அடியேனுக்கு எல்லா ஆயுதங்களும் உபயோகிக்க தெரியும்.

ராஜா: “சரி பரீட்சையில் பங்கு பெறலாம்.” 

இவ்வாறு கூறி ராஜா படையில் உள்ள சிறந்த வீரர்களை அழைத்து அய்யப்பனைப் பரீட்சிக்க கட்டளையிட்டார். 

வில்/அம்பு, வாள்/கேடயம், கதை, ஈட்டி, வேல் முதலான ஆயுதங்களில் அவனுடைய திறமையை பரீட்சித்தனர். நடந்த பரிட்சைகளில் எல்லாம் அவன் படையில் இருந்த சிறந்த வீரர்களையும் தோற்கடித்தான். காயங்குள ராஜா அதிர்ச்சி அடைந்தார். 

உனக்கு என்ன பரிசு வேண்டும்? எதுவும் தரத்  தயார்." என்று அவனிடம் கேட்டார். அதைக் கேட்ட அந்த இளைஞன்எனக்கு அதிகம் ஒன்றும் தேவை இல்லை. நான் இங்கிருந்து ஒரு அம்பு எய்கிறேன். அந்த அம்பு சென்று விழும் இடமும் அதனைச் சுற்றியுள்ள மூன்று காதம் நிலம் வரி நீக்கி இனாமாகத் தந்தால் போதும்." என்று சொன்னான். 

அப்படியே ஆகட்டும். அம்பு எய்க" என்று ராஜா கட்டளையிட இளைஞன் கிழக்கு திசையில் ஒரு அம்பு செலுத்தினான். அம்பு வீழ்ந்த இடம் கண்டுபிடிக்க காயங்குளம் ராஜா  நம்பிக்கைக்குப் பாத்திரமான சில வீரர்களை அந்த இளைஞனுடன் அனுப்பினார். அப்போது பந்தளம் ராஜாவும் அவர்களுடன் சேர்ந்து கொண்டார். அவர்கள் எல்லோரும் காயங்குளத்தில் இருந்து ஏறக்குறைய 12 நாழிகை தூரம் சென்றபின் ஒரு பொய்கைக் கரையை அடைந்தனர். கரையில் சில மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன.  ஒரு மாடு பந்தளம் ராஜாவை முட்ட வேகமாக ஓடி வந்தது. படை வீரர்கள் சிதறி ஓடினர். ஆனால் ஐயப்பன் அந்த மாட்டை பிடித்து திருப்பி ஓட்டினான். இந்த சம்பவத்தால் அந்த இடத்திற்குகாளை குத்தி பொய்கைஎன்று பேர் உண்டாகியது என்று கூறுவர்.

பந்தளம் ராஜாவும் ஐயப்பனும் கிழக்கு திசையில் பயணத்தைக் தொடர்ந்தனர். சிறிது தூரம் சென்றபின் ஒரு பாறையில் அமர்ந்து ஓய்வெடுத்தனர். அப்போது இருட்டத் தொடங்கியதால் எல்லோரும் அன்று இரவு அங்கேயே தங்கினர். அய்யப்பனின் காலடிகள் அங்கு பதிந்தன. அவ்வாறு பதிந்த காலடிகளை அங்கு தற்போதும் காணலாம். ஆகவே அந்த இடத்திற்குதிருப்பாதம்என்று பெயர் வந்தது

அடுத்த நாள் (பத்தாம் தேதி) விடியற்காலை பந்தளம் ராஜாவும் ஐயப்பனும் ஏறக்குறைய அரை நாழிகை தூரம் கிழக்கில் நடந்த பின் ஒரு ஏரியும் அந்த ஏரியில் ஒரு துருத்தையும் (துருத்து=துருத்திக்கொண்டு இருப்பது. மூன்று பக்கம் நீரால் சூழப்பட்டு உள்ள ஒரு சிறு தீவு) கண்டனர். “அங்கு காணும் துருத்தில் என்னுடைய அம்பு குத்தி நிற்கிறது. அங்கு செல்லலாம். இதோ கரையில் ஒரு மரத்துண்டு கிடக்கிறது. அதில் ஏறி அந்தத் துருத்தை அடையலாம்." என்று அய்யப்பன் கூறினார்இருவரும் அந்த மரத்துண்டில் ஏறினர். யாரும் துழையவில்லை. தானே அது நகர்ந்து தீவின் கரையை அடைந்தது. 

ராஜா துருத்தில் இறங்கி நோக்கியபோது அய்யப்பனைக் காணவில்லை. மரத்துண்டு ஏரியில் சென்று கொண்டு இருந்தது. ராஜா கூர்ந்து நோக்கியபோது அது மரம் அல்ல, ஒரு முதலை என்று தெரிந்தது. ராஜா குலதெய்வத்தின்  அற்புதத்தை எண்ணி வியந்தார். 

அப்போது ஒரு வீரன் வாள் கேடயத்துடன் வந்துவாருங்கள் போகலாம்என்று விளித்தான். ராஜா குளித்து சந்தியா வந்தனம் செய்து முடித்து அவனுடன் புறப்பட்டார்.  அந்த தீவின் ஒரு பகுதியில் ஒரு விக்கிரகமும் அதன்மேல் அவர் சபரிமலைக்கு அர்ப்பணித்த கிரீடமும், முத்து மாலையும் இருப்பதைக் கண்டார். பக்தி மேலிட சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார். அப்போது ஒரு ஆள் சங்கு ஊத மற்றொரு ஆள் விக்கிரகத்துக்கு பூஜை செய்தார். குரங்கு கூட்டம் ஒன்று பூஜையில் தொழுது நின்றன.

பூஜை முடிந்து பூஜை செய்த ஆள் ராஜாவிற்கு பிரசாதமும் தந்தார். அப்போது ஒரு முதிய பிராமணன் வெளிச்சப்பாடு (oracle) போல் ஆவேசம் வந்தவராய் ராஜாவின் அடுத்து வந்துஎன்ன என்னுடைய உண்ணிக்கு சந்தோசம் தானே? நான் சொன்னது போல் நீ இங்கு வந்திருக்கிறாய். இனி என்னுடைய உண்ணி மலை ஏற வேண்டாம். வேண்டிக்கொண்டது எல்லாம் இங்கு செய்தால் போதும். இங்கு பூஜை செய்தவன் என்னுடைய பூஜாரியாக இங்கு தொடரட்டும். கூட்டி வந்த வீரன் என்னுடைய பக்தன். உண்ணியுடைய மெய்க்காவலன் ஆக நிற்கட்டும். சங்கு ஊதியவன் என்னுடைய மாராரும் கழகக்  காரனுமாக நிற்கட்டும். இந்த குரங்குகள், முதலை எல்லாம் என்னுடைய பரிவாரங்கள். இவைகளையும் உண்ணி பாதுகாக்க வேண்டும். யாரேனும் இவர்களை உபத்திரவித்தால் அவர்களைத் தண்டிப்பேன். 

என்னுடைய உண்ணி இங்கு வந்து என்னை முதன் முதலில் சந்தித்த இந்த நாள் இந்த நேரம் (மேக்ஷ (சித்திரை) மாதம் 10ஆம் தேதி காலை)  இங்கு வந்து என்னை தரிசிப்பவர்களுக்கு சகல சௌபாக்கியங்களும் கொடுப்பேன்என்று சொல்லி வந்தது போல் திரும்பி சென்று மறைந்தார். அந்த பிராமணன் எங்கிருந்து வந்தார், எங்கு போனார் என்று யாருக்கும் தெரியவில்லை. வந்தது தர்ம சாஸ்தா தான் என்று நம்பப் படுகிறது. ஆகையால் பத்தாம் உதயம் அன்று சாஸ்தாவைத் தொழ பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். 

அந்த தீவு இருந்த பகுதி காயங்குளம் ராஜாவின் அரசாளுமையின் கீழ் இருந்தது. ஆகவே பந்தளம் ராஜா காவலனை விளித்து அங்கு நடந்த காரியங்கள் யாவையும் காயங்குளம் ராஜாவிடம் தெரியப்படுத்த சொல்லி அனுப்பினார். காவலன் சென்று காயங்குளம் ராஜாவிடம் தெரியப்படுத்தவும் காயங்குளம் ராஜாவும உடனே புறப்பட்டு அன்று மாலைக்கு முன் அங்கு வந்து சாஸ்தாவை தரிசனம் செய்தார்.  காயங்குளம் ராஜா அங்கு சில தினங்கள் தங்கினார். வசதிகள் பல ஏற்படுத்த கட்டளை இட்டார். அவற்றில் முக்கியமானது மக்கள் வந்து போக சாலை வசதி, தீவுக்கு ஒரு பாலம் ஆகியவை. 

கோவில், கோவில் மதில் ஆகியற்றை நிர்மாணித்தார். தினசரி பூஜை, மாத விசேஷ பூஜை, ஆண்டு உத்சவம், போன்றவைக்கு கட்டளைகள் ஏற்படுத்தி நில மானியங்கள் ஏற்படுத்தினார். 

கோவிலின் வடமேற்கில் பந்தளம் ராஜா வசிப்பதற்கு ஒரு கொட்டாரம் (அரண்மனை) உண்டாக்கினார். பூஜாரி, கழகக்காரன், காவலன், சிப்பந்திகள் என்று எல்லோருக்கும் வசிப்பதற்கு வீடுகள் கட்டித் தந்தார். வரி இல்லா நிலங்களை அவர்களுக்கு மானியமாக எழுதித் தந்தார். முன்பு அவ்விடத்தின் பெயர் கோட்டை என்றிருந்தது. சாஸ்தா வந்தபின் பெயர் சாஸ்தாங்கோட்டை என்று மாறியது.


சாஸ்தாங்கோட்டை என்ற ஊர் ஆனபின்பும் அங்கு புலி முதலான துஷ்ட மிருகங்கள் இருந்தன. கோவிலின் கிழக்கே ஒரு பெரிய குகையில் இருந்தன. அந்தக் குகைதான்புலி வாரம்என்ற பெயரில் அறியப்படுவது.

ஒரு தடவை ஒரு புலி அய்யப்பன் பக்தனுடைய (உண்ணித்தானுடைய) ஒரு பசுவைக் கொன்றது. அது சாமிக்கு பிடிக்கவில்லை. ஆகவே சுவாமி வில்லும் அம்பும் எடுத்துக் கொண்டு புறப்பட்டார். எல்லாதுஷ்ட மிருகங்களையும் அங்கிருந்து விரட்டிக் கொண்டு போய் கொட்டாரக்கரைக்கு அடுத்தகோட்டத்தலஎன்று கூறப்படும் இடத்திற்கு அப்பால் விரட்டி விட்டார். சுவாமி அங்கு வில் ஊன்றி பிடித்துக்கொண்டுஇனிமேல் ஏதொரு துஷ்டமிருகமும் இந்த இடத்திற்கு அப்புறம் வரக்கூடாது." என்று கட்டளை இட்டார். அதன் பின்னர் கோட்டத்தலைக்கு மேற்கில் துஷ்ட மிருகங்கள் எதுவும் இதுவரை கண்டதில்லை. அங்கு சுவாமி வில் ஊன்றி நின்ற ஸ்தலத்து திருப்பாதவும் வில் ஊன்றிய அடையாளமும் இப்போதும் காணலாம். 

பந்தள ராஜாவும் ராணியும் சாஸ்தாங்கோட்டையில் வசிக்கலாயினர். அவர்கள் கொட்டாரத்தில் இருந்து வெளியே செல்லும்போது அங்கு இருந்த குரங்குகள் அவர்களுக்கு முன்பும் பின்பும் அணி வகுத்து செல்வது வழக்கம் ஆயிற்று.  ராஜாவும் ராணியும் ஏரியில் குளிக்க்கச் செல்லும்போது முதலையும் மீன்களும் வந்து அவர்களைத் தொழும். ராஜாவும், ராணியும் குரங்குகளுக்கு பழம், வெல்லம், தேங்காய் பத்தைகள், முதலைக்கு சோறு, மீன்களுக்கு அரிசி, என்று கொடுத்து வந்தனர். இவ்வழக்கத்தை ஒரு நித்ய கட்டளையாக செய்ய எண்ணி, குரங்குகளுக்கு ஆறேகால் இடங்கழி அரிசி சோறாக்கிக் கொடுக்கவும், முதலைக்கு ஒன்றேகால் இடங்கழி அரிசி சோறும், மீன்களுக்கு மூன்று நாழி அரிசியும் தினமும் கோயிலில் இருந்து கொடுக்க ஏற்பாடு செய்து ஒரு கட்டளை உண்டாக்கினர். 

ராஜாவும் ராணியும் ஏரிக்கு செல்லும்போது மீன்களுக்கு உள்ள அரிசி தேவஸ்வம் ஊழியர் கொண்டு செல்ல வேண்டும். அது போல் உச்சி பூஜை ஆனவுடன் குரங்குகளுக்கு தரவேண்டிய சோறு கிழக்கு கோபுரத்தின் அடுத்து மதிலுக்கு வெளியே கொடுக்கப்பட வேண்டும். இவ்வாறு செய்யவேண்டியது சாந்திகாரர்களின் கடமை. முதலைக்கு உள்ள சோறு மாரார் (மேளம் கொட்டுபவர்) கொண்டு போய் கொடுக்க வேண்டும்.

குரங்குகள் சாப்பிட்டு முடிந்தவுடன் கொட்டாரத்திற்கு சென்று ராஜாவைக் கண்டு சந்தோசம் /நன்றி அறிவிப்பது வழக்கம். 

தொடரும்.

38 கருத்துகள்:

  1. இந்த நாளும் இனிய நாளே..

    எல்லாருக்கும் இறைவன் நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. பிறழ்வான கருத்துக்களைக் கொண்ட கதைகளைப் படிக்க நேர்ந்த பாவங்கள்
    கொட்டாரத்தில் சங்குண்ணி எழுதிய இக்கதையினால் தீர்ந்து போகட்டும்...

    சாஸ்தாவிண்ட குரங்ஙுகள்
    நாமாகி சாஸ்தாவின் அருகிலேயே இருப்போம்..

    பதிலளிநீக்கு
  3. தஞ்சை மாவட்ட த்தின் வடக்கு எல்லை கொள்ளிடம் பேராற்றின் நடுவே இருக்கும் அணைக்கரை எனும் ஊர்..

    அங்கிருக்கும் ஸ்ரீ வில்லியாண்டவர் எனும் ஐயனார் அந்தக் காலத்திலேயே கொள்ளிடத்து முதலைகளை அடக்குவதற்காக வந்தவர்..

    யானை குதிரை வாகனங்கள் இருந்தாலும் முதலையின் முதுகில் ஆரோகணித்த கோலத்தில்கருவறை விமானத்தில் சுதை சிற்பங்கள் இருக்கின்றன..

    இந்தக் கதையைப் படித்ததும் ஸ்ரீ வில்லியாண்டவர் நினைவுக்கு வந்தார்..

    பதிலளிநீக்கு
  4. திருமலையில் காலி கோபுத்தைக் கடந்த நிலையில் மண்டபம் ஒன்று உள்ளது..

    அந்த மண்டபத்துத் தூண் ஒன்றில் முதலை வாகன சாஸ்தா சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது..

    பல ஆண்டுகளுக்கு முன்பு நேரில் கண்டு பதிவில் தந்திருக்கின்றேன்..

    பதிலளிநீக்கு
  5. அருமையான கதை. சனிக்கிழமை கதைப் பகுதியைச் சந்தேகத்துடன் படிக்க ஆரம்பித்து மகிழ்வுற்றேன்.

    தெரியாத இந்த மாதிரி சம்பவங்களை மலையாளத்திலிருந்து இங்கு கொண்டு வருவதைப் பாராட்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எபியின் இன்னொரு பரிமாணம் இது. மலையாளக் கதைகளைத் தமிழில் தர அரிதாக நமக்கு ஜெஸி ஸார் கிடைத்திருக்கிறார். அவரது ஆற்றலை நாமும் பயன்படுத்திக் கொள்வதின் மூலம் நம் ஆற்றலை வளர்த்துக் கொள்வோம்.

      நீக்கு
    2. என்னாது இன்று சனிக்கிழமையா!!!!!!!!!!!!!!!!!! நெல்லை!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

      கீதா

      நீக்கு
    3. என்னது...   இன்று சனிக்கிழமையா?   நெல்லை...  இன்று வியாழக்கிழமை!

      நீக்கு
    4. பாருங்க...துரை செல்வராஜு சாரின் கதையை புதன் கிழமை போட்டீங்கன்னா, மனசுல இன்னைக்கு செவ்வாய்னு தோணும். அதுபோல ஜெஸின்னாலே சனிக்கிழமைன்னு மனசுல பட்டுடுச்சு. என்ன பண்ணறது?

      நீக்கு
    5. இதுக்குத் தான் நெல்லை வேணுங்கறது. இதையும் அதையும்
      காட்சிப்படுத்தி இரண்டே வரிகளில் எவ்வளவு நேர்த்தியாகச் சொல்லி விட்டார்!!
      வியக்கிறேன், நெல்லை.

      நீக்கு
  6. ஸ்ரீமதி கோமதிஅரசு அவர்களது கருத்துகள் சில நாட்களாக வருவதில்லையே.. சுற்றுப் பயணத்தில் இருக்கின்றார் போலிருக்கின்றது..

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கேள்விக்கு அடுத்த கேள்வியே உங்கள் மனதைப் படித்தது போல அக்காவின் பின்னூட்டம்தான்!

      நீக்கு
  7. கதை நன்றாக இருக்கிறது.
    படங்களும் நன்றாக இருக்கிறது.
    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகை கண்டு மகிழ்ச்சி...

      வாழ்க நலம்..

      நீக்கு
    2. இரண்டு நாள் வெளியூர் பயணம், அதுதான் வரவில்லை.
      உங்கள் விசாரிப்புக்கு நன்றி.

      நீக்கு
  8. சனிக்கிழமையில் ஏடாகூடக் கதைகள் என்ற நிலை மாற வேண்டும்..

    பதிலளிநீக்கு
  9. மலையாளத்திலிருந்து தமிழுக்கு என்று நம் வாசிப்பு ஆர்வம் கூட வாராது வந்த மாமணி போல நமக்கு ஜெஸி ஸார் கிடைத்திருக்கிறார். அவரது அரிய பணியை பயன்படுத்திக் கொள்வோம்.

    ஜெஸி ஸார், எனக்கொரு குறை. சங்குண்ணி கதைகளிலேயே தேங்கி விடாமல் மலையாளத்து பெருமை மிகுந்த சிறுகதைகளிலும் சிலவற்றை நீங்கள் தமிழில் தர வேண்டும். வாசித்த தமிழ் மொழிக் கதைகளை வாராவாரம் தருவதைப் போல.

    தம்பி துரை ஏதோ 'பிறழ்வான கருத்துக்களைக் கொண்ட
    கதைகளில்' படிக்க நேர்ந்த பாவத்தைப் பற்றி சொல்லியிருக்கிறார்.
    வாழ்க்கையின் பிரதிபலிப்பாய் எழுத்து இருக்கும் பொழுது அப்படி ஏதும் இல்லை என்பது என் கருத்து. உங்களுக்குப் புரிந்தால் அவர் சொல்லியிருப்பதையும் முடிந்தால் (அது முடியாத விஷயம் என்று தெரியும்) கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் அதே கருத்து உண்டு. வாசுதேவன் நாயர், தகழி, பஷீர், ஆ மாதவன் என்று மலையாளத்தில் பெரிய லிஸ்ட் உண்டு. அவர்கள் [பொக்கிஷங்களை இங்கு கொண்டு வந்து சேர்க்கலாம்.

      நீக்கு
    2. சமகால மலையாள படைப்புகள் காப்புரிமை உள்ளவை. அவை தமிழில் ஏற்கனவே மொழிபெயர்க்கப்பட்டு நூல் வடிவில் வெளி வந்துள்ளன. 

      நான் மலையாள நூல்கள் வாசிப்பது அரிது. என்னுடைய மலையாள அறிவு செய்தித் தாள்கள் வாசித்தது மூலம் பெற்றது.  ஒன்றிரண்டு பஷீர் நூல்கள் இரவலாக வாங்கி படித்ததுண்டு. 

      பொதுவே மலையாள கதைகள் செக்ஸ் மற்றும் பால் உணர்வுகளைப் பற்றி எழுத அஞ்சுவதில்லை இது தமிழ் கதைகளுக்கு எதிர்மறையானது. 

      சங்குண்ணியின் ஐதீக மாலை நூறாண்டுகளுக்கு முன்பு வெளி வந்தது. PDF வடிவில் இலவசமாகக் கிடைத்தது. ஆகவே மொழி பெயர்ப்புக்கு அஞ்சவில்லை. தவிரவும் கதைகள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு Hindu வில் ஞாயிறு மலரில் வெளி வந்திருக்கின்றன. 

      காப்புரிமை இல்லாத கதைகள் மலையாளத்தில் கிடைத்தால் மொழி பெயர்க்கலாம் என்பது எண்ணம். 

      Jayakumar

      நீக்கு
    3. அப்படியே செய்யுங்கள், ஸார்.

      நீக்கு
  10. முற்றிலும் புதிய தகவல்கள். சாஸ்தாவின் திருவிளையாடல்கள் அனைத்துமே மிக மிக சாந்தியைக் கொடுக்கக் கூடியதாய் உள்ளன. பந்தள ராஜா பற்றிய இந்தக் கதை கேட்டிராதது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சற்று வெளியே சென்று ஒரு தகவல்!  முன்னர் பந்தள என்று படித்ததுமே ஒரு வெள்ளிக்கிழமைக்கு பெங்களூர் ரமணி அம்மாளின் "பந்தள நாட்டிலே அவதரித்தான்"  பாடலை செலெக்ட் செய்து யு டியூபில் தேடிப்பார்த்தேன்.  கிடைக்கவில்லை.  விட்டுவிட்டேன்!

      நீக்கு
  11. சாஸ்தாவின் அற்புதமே அற்புதம். படித்து இன்புற்றோம். நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
  12. சங்கராந்தி -- சங்கராந்தி

    வேங்கைக்கு கடுவா மாதிரி இல்லாமல்
    புலிக்குப் புலிதானா மலையாளத்தில்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புலி என்பது பொதுச் சொல். கடுவா என்பது வரிப்புலியை குறிக்கும். புள்ளிப் புலி சிறுத்தையைக்  குறிக்கும். 

      நீக்கு
  13. இதில் சொல்லப்படும் ஐயப்பன் கதை இது வரை கேட்டிராத கதை.

    இப்படியான கதைகளில் வேறு என்ன கருத்து சொல்ல என்று எனக்குத் தெரிவதில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
  14. பின்னூட்ட கருத்துக்களை வெளியிடக் கூடாது என்று ஏதும் விரதமா??...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில தளங்களில் இரண்டொரு நாட்கள் கழித்து கூட பின்னூட்டங்கள் வெளியிடப்படுகின்றன.  முடிந்த வரை சீக்கிரமே இங்கு வெளியிட்டும் இந்த ஆர்வம் புன்னகைக்க வைக்கிறது.  மகிழ்ச்சி கொடுக்கிறது.  உங்கள் ஆர்வம் எங்கள் டானிக்!

      நீக்கு
    2. ஸ்ரீராம்...இங்கு பின்னூட்டக் கருத்துகள் மாத்திரமல்ல, அவற்றிர்க்கு மறுமொழி கலாய்ப்பு என்று தொடராக பின்னூட்டங்கள் வரும். சில பல நேரங்களில் பதிவுக்குச் சம்பந்தமில்லாமல் பின்னூட்டங்கள் நீளும். இந்த உறவைக் கெடுக்கத்தான் 'அநாமதேயர்' வந்து பிரச்சனையை உண்டாக்கிவிட்டுச் சென்றிருக்கிறான்.

      நீக்கு
  15. சாஸ்தா, சாந்தமான சாமி என நினைத்திருந்தேன். அடிக்கடி கனவில் வந்து தூக்கத்தைக் கெடுக்கிறாரே!

    முன்பிருந்த எங்கள் கிராம வீட்டில் சி. கொண்டயராஜு வரைந்த அழகான ஐயப்பன் படம் இருந்தது நினைவில் வருகிறது. எல்லா காலண்டர்களையும் ஓவியர் யாரெனப் பார்த்துப் பார்த்துத் தேர்வு செய்து, ஃப்ரேம் செய்து மாட்டி அழகு பார்த்தது.. அது ஒரு காலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சி.கொண்டையராஜு - என்ன அற்புதமான கலைஞர். அவருக்குப் பிறகு அவரது சிஷ்யர் ஜேபி என நினைவு. கொண்டையராஜுவை சிவகாசி தத்து எடுத்துக்கொண்டு காலண்டர்களில் படங்களை வெளியிட்டது (கொண்டையராஜுக்கு நிறைவான காசு போச்சோ தெரியலை, ஆனால் நம் மனங்களையும் வீட்டையும் அவரது ஓவியங்கள் அலங்கரித்தன)

      நீக்கு
  16. எனது கதைக் களங்களைக் கையில் எடுத்துக் கொண்டு யாரும் அடித்து விளையாட வில்லை எனில் மிகவும் வருத்தமாக் இருக்கும்..

    திரவியம் கதைக்கு கூட எதிர்பார்த்த கருத்துரைகள் வரவில்லை..

    பதிலளிநீக்கு
  17. என்ன தான் மனதைக் குவித்துப் பின்னூட்டம் போட்டாலும் சரி,

    தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி
    என்று உங்கள் பதிலில் முடித்துக் கொண்டு விடுகிறீர்கள்.

    அருமை என்று மூன்றெழுத்து பின்னூட்டத்திற்கும் உங்கள் மறுமொழி இது தான்.

    நீங்களும் சேர்ந்து கொண்டு உங்கள் மனத்தில் உணர்வதைக் கொட்டினால் பின்னூட்டங்கள் களை கட்டும். அதைச் செய்ய மாட்டேன் என்கிறீர்கள்.

    அன்பு வேறு எழுதிய விஷயத்தின் அலசல் வேறு. இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது.

    நல்ல விஷயங்களைப் பற்றி மட்டும் தான் எழுதுவேன் என்று அடம் பிடிக்கக் கூடாது. கெட்டதைச் சொல்லி நல்லதை உணர வைத்தால் உங்கள் கதைக்களம் மேலும் சிறப்பு பெறும் என்பது உங்கள் படைப்புகள் பற்றி எனக்கு இந்த நேரத்தில் சொல்லத் தோன்றுகிறது, தம்பி.

    இன்னொன்று. இரண்டு பக்க கதைகள் என்றில்லாமலும் வெவ்வேறு களங்கள் என்றும் தேர்ந்தெடுத்து நிறைய எழுதுங்கள் தம்பி.

    அன்பான வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனதில் உள்ளதைக் கொட்டி விட்டீர்கள்..

      சிந்திக்க வைக்கும் கருத்துகள்..

      ஒவ்வொரு தளங்களில் எனது முழுக் கருத்தையும் சொல்லாமல் இல்லை..

      விரிவான கருத்துரைக்கு விரல்களின் வலி இடையூறாக இருக்கின்றது.. கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பதிவுகளைத் தந்து கொண்டிருக்கின்றேன்..

      எனது மகிழ்ச்சிக்காக..

      த்ங்களது கருத்திற்காக தனிப்பதிவே தரலாம்...

      தருகின்றேன்..

      எனது பணி முழுதும் கடந்த இரண்டாண்டுகளுக்கு மேலாக கைபேசித் திரையில் தான்!...

      இங்கே கருத்துரை கட்டத்துக்குள் தட்டுவது சிரமமாக இருக்கின்றது.. வெளியே சென்றுதட்டி (எழுதி) மறுபடியும் அதை தளத்துக்கு எடுத்து வந்து பதிவு செய்கின்றேன்..

      தங்களது அன்பினுக்கும் வாழ்த்துரைக்கும் நெஞ்சார்ந்த நன்றி.. வணக்கம் அண்ணா..

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!