ஞாயிறு, 5 மார்ச், 2023

நான் தரிசனம் செய்த கோவில்கள் :: நெல்லைத்தமிழன்


                                           அஹோபில நவ நரசிம்ஹர் யாத்திரை– பகுதி 5 

இவ்வளவு அழகிய கோயிலான பிரகலாதவரதர் கோவிலை (லக்ஷ்மி நரசிம்ஹர் ஆலயம், கீழ் அஹோபிலம்) வெறும் சிற்பங்களுடனும், முகமதியரிடமிருந்து ஸ்ரீரங்கதேவராயர், கோவிலை மீட்டுக்கொடுத்தார் என்பதோடு கடந்துவிடலாமா என்று என் மனது கேட்ட து. யாத்திரைப் பகுதிக்குச் சம்பந்தமில்லை என்றாலும் அதனைப் பற்றி விரிவான தேடல்களை மேற்கொண்டேன். வரலாறு என்பது நடந்தவைகள்தாம். அவற்றை அறிவதால் நடந்த உண்மை நம் எல்லோருக்கும் தெரியவரும். அது இல்லாமல், அசோகர் மரம் நட்டார், சாலைகள் அமைத்தார், ஷாஜஹான் தாஜ்மஹால் கட்டினார்கஜினி முகமது 17 முறை படையெடுத்தான் என்று மட்டும் படித்துக்கொண்டு போவதில் என்ன அர்த்தம் இருக்கிறது? எப்போதோ முகம்மது கோரி இந்தியாவின் சொத்துக்களைக் கொள்ளையடித்தான் என்பதைப் படித்தால், இங்குள்ள சக இந்தியர்களான, தற்போது மாற்று மத நம்பிக்கையில் இருப்பவர்களை எவ்வாறு நாம் வெறுக்க முடியும்? நடந்தவைகளை நடந்தவைகளாகப் படிப்பதுதான் சரித்திரம். யாரோ, யாரையோ திருப்திப்படுத்த சரித்திர உண்மைகளைப் புதைப்பதால், உண்மைச் சரித்திரம் நாம் அறியாமல் போய்விடுவோம். அதனால்தான் நான் தேடலை மேற்கொண்டேன். கோயிலில் த்வஜஸ்தம்பத்திற்கு வலது புறம், ஒரு மண்டபம், எப்படிப்பட்ட நிலையில் இருந்த கோவில், எப்படி சரிசெய்யப்பட்டது என்பதற்கான நிறைய புகைப்படங்களைக் கொண்டிருக்கிறது. மேலும் தகவல்களின் தேடலுக்கு https://sivatemple.wordpress.com த் தளமும் உறுதுணையாக இருந்தது. அந்தத் தளத்திற்கு நன்றி.

முன்காலத்தில் (கிபி 1000களில்) கோவில் நன்றாகத்தான் இருந்தது. அஹோபிலம் தலத்தில்தான் அஹோபில மடம் ஸ்தாபிக்கப்பட்ட து. அதனை ஸ்தாபித்தவர் ஆதிவண் சடகோப ஜீயர். இவருக்கு அழகியசிங்கர் என்ற பெயரும் உண்டு. இந்த மடம் வைணவ மத த்தில் மிக முக்கியமான மடமாகும். அரசர்களால் பெரும் மதிப்போடு நடத்தப்பெற்றது இந்த மடம். பிரதாபருத்ர சிம்ஹன் என்ற அரசன், தங்கத்தினால் செய்யப்பட்ட நரசிம்ம விக்ரஹத்தை இந்த மடத்திற்குக் கொடுத்திருக்கிறான் (அதாவது மடத்தினால் நிர்வகிக்கப்பட்ட, நவ நரசிம்ஹ கோவில்களில் ஒன்றான மாலோல நரசிம்மர் கோவிலுக்கு). அதுதான் இன்றும் ஜீயர்களால் ஆராதிக்கப்படுகிறது. ஸ்ரீகிருஷ்ணதேவராயர் காலம் வரை (1500 கள்) கோவில் நன்றாகவே இருந்ததுகிருஷ்ணதேவராயர் இந்தக் கோவிலுக்கு தங்க நகைகள் கொடுத்து வழிபட்டதை கோவில் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.


1575களில், இப்ராஹிம் குதுப்ஷா, அஹோபிலத்தை சூறையாடினான். பீஜப்பூர் சுல்தான் அடி அடில்ஷா-I, பெனுகொண்டா கோட்டையை மூன்று மாதங்களுக்கு முற்றுகையிட்டான். அப்போது சுல்தான் படையை ஸ்ரீரங்கதேவர் வெற்றிகொண்டார். சுல்தானின் இன்னொரு படை கிருஷ்ணாநதி தெற்குப் புறத்தில் தாக்க ஆரம்பித்தது. அஹோபிலம் கோவிலைக் கொள்ளையடித்தது. அந்தக் கோவிலில் வைரம் பொதித்த விஷ்ணு விக்ரஹம் பெயர்க்கப்பட்டு சுல்தானுக்கு அனுப்பிவைக்கப்பட்ட தாம். இப்ராஹிம் குலிஷா என்பவன் இந்தக் கோவிலைச் சூறையாடி, கோவிலை ஆக்கிரமித்தான். அப்போது அஹோபில மட ஜீயர், ஸ்ரீரங்கராயரிடம் சென்று, முஸ்லீம்களிடமிருந்து அந்தக் கோவிலை மீட்டுத்தருமாறு கோரிக்கை வைக்க, ராயரின் படைகள் சென்று அந்தக் கோவிலை மீட்டெடுத்தன. இதனையெல்லாம் கல்வெட்டுச் செய்திகள் சொல்கின்றன.

கோவிலின் முன்னுள்ள கருடஸ்தம்பம், ரங்கராயர் சேனை முஸ்லீம்களை வெற்றிகொண்ட தன் அடையாளமாகவே நிறுவப்பட்டதுஇந்தக் கல்வெட்டும் பிரதானமாக அந்த ஸ்தம்பத்தில் காட்சிப்படுத்தப்படவில்லை.







நுழைவாயில், கோனேறு திருக்குளம் போன்றவை தற்போது வேலியிடப்பட்டு, சீரமைக்கப்பட்டுக் காணப்படுகின்றன. யாரும் சிதைக்க க்கூடாது என்று திருக்குளத்தைப் பூட்டியும் வைத்திருக்கிறார்கள். 1900களில் நீர் இல்லாமல், மிகவும் சிதைந்து காணப்பட்டதாம்.

மாலோல நரசிம்மர் கோவில் மற்றும் வராஹ (க்ரோட) நரசிம்ஹர் கோவில் பழைய படங்கள்.  1000களில், அந்த அந்த நரசிம்ஹர் காட்சியளித்த இடங்களில் (நவ நரசிம்மர் தலங்கள்) சந்நிதிகளும் மண்டபமும் இருந்திருக்கவேண்டும். பிறகு அவை மிகவும் சிதைவுற்று, காட்டுச் செடிகொடிகள் மறைத்து மிகவும் பழுதுபட்ட நிலையில் இருந்திருக்கவேண்டும். ஆனால் சமீபகாலங்களில் அவை புனர் நிர்மாணம் செய்யப்பட்டு திருத்தமாக இருக்கின்றன.

நீங்கள் எல்லோரும் 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தஞ்சைப் பெரிய கோயில் இருந்த நிலைமையைப் புகைப்படத்தில் கண்டிருப்பீர்கள்.



இதுபோலவே அஹோபிலத்திலும் ஒவ்வொரு நரசிம்மர் கோவிலும் ஓரளவு சீரமைக்கப்பட்டு, பக்தர்கள் சென்று தரிசிக்கும் நிலையில் இருக்கிறது. இன்றைக்கு உள்ள நிலையில் சன்னிதிகளைப் பார்க்கும்போது, சில கோயில்களின் புராதான நிலை நமக்குப் புலப்படுவதில்லை. புது மண்டபம், சிறிய சன்னிதி, புராதான மண்டபங்கள் இல்லாத நிலை என்று இருக்கிறது (உதாரணம் காரஞ்ச நரசிம்மர், யோகாந்த நரசிம்மர், சத்ரவட நரசிம்மர் போன்ற ஆலயங்கள்). ஆனால் நாம் நினைவில் கொள்ளவேண்டியது, கோவிலின் இடங்கள் மாற்றப்படாமல், பழைய மண்டபங்கள் அகற்றப்பட்டு சீரமைத்திருக்கிறார்கள் என்பதுதான். ஸ்ரீரங்கம் கோவிலின் தெற்கு கோபுரமும் மொட்டைக் கோபுரமாக இருந்து எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில், அஹோபிலமட ஜீயரின் பெரும் முயற்சியால் பலரின் பண உதவியால் கட்டப்பட்டது. எல்லா இடங்களிலும் அப்படி யாரேனும் முயற்சி எடுத்துச் சீரமைப்பது மிகவும் கடினமான பணி. அதனால்தான் நிறைய மண்டபங்கள், அவற்றின் தூண்கள், இடங்கள் சிதைக்கப்பட்டு, இருந்த இடம் தெரியாமல் போய்விடுகிறது. அரசு அதிகாரிகளின் அலட்சியமும், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்காமையும்தான் இதன் காரணங்கள்.

அடுத்த பகுதியில் அஹோபிலத்தைப் பற்றி அறிந்துகொள்வோம்.

(தொடரும்) 


75 கருத்துகள்:

  1. இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. நலந்தரும் நரசிம்ஹ..
    நாடுவதும் நல்லருளே..

    வளந்தரும்
    நரசிம்ஹ
    பாடுவதும்
    நின்பெயரே..

    பேர்தரும்
    நரசிம்ஹ
    பேசுவதும்
    நின்புகழே..

    ஊர்தரும்
    நரசிம்ஹ
    உள்ளுவதும்
    நின்பதமே!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாடலை ரசித்தேன். பக்தர்கள் துன்புறும்போது உடன் வந்து காப்பவர் நரசிம்ஹர்.

      நீக்கு
  3. // ரங்கராயர் சேனை முஸ்லீம்களை வெற்றி கொண்ட தன் அடையாளமாகவே நிறுவப்பட்டது. //

    அந்த வெற்றிகள் எல்லாம் நிரந்தரமாகாமல் போனது தான் வேதனை...

    பதிலளிநீக்கு
  4. வழக்கம் போல சிற்ப்பான பதிவு..

    அழகான படங்கள்..

    கடும் சிரமங்களுக்கு இவற்றைக் காட்சிப்படுத்துகின்றீர்கள்...

    இல்லாவிட்டால் நான் எங்கே காண்பது?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெறும் யாத்திரைப் படங்களாக இருந்துவிடக் கூடாது என்பதற்காக இவற்றைச் சேர்த்தேன். இனி அஹோபில யாத்திரை செல்பவர்களும் ஓரளவு நுணுக்கமாகப் பார்க்கவேண்டும் என்பதுதான் ஆசை

      நீக்கு
  5. /// அரசு அதிகாரிகளின் அலட்சியமும், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்காமையும் தான் இதன் காரணங்கள்...///

    சரியான வார்த்தைகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதற்கு, வரலாறு, கலாச்சாரம் போன்றவற்றின் புரிதலின்மையே காரணம்.

      நீக்கு
  6. // எப்போதோ முகம்மது கோரி இந்தியாவின் சொத்துக்களைக் கொள்ளையடித்தான் என்பதைப் படித்தால், இங்குள்ள சக இந்தியர்களான, தற்போது மாற்று மத நம்பிக்கையில் இருப்பவர்களை எவ்வாறு நாம் வெறுக்க முடியும்?.. //

    நடந்தவைகள் நடந்தவையாகவே இருக்கட்டும்...

    பிரச்னை அதுவல்ல..

    கோரிக்கு முட்டுக் கொடுக்க வரும்போது தான் மனம் சங்கடப்பட்டு வெறுத்து ஒதுங்கத் தோன்றுகின்றது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுதான் பிரச்சனை. மதம் என்பதைப் பற்றிக்கொண்டு சக இந்தியர்களிடையே துவேஷம் கொள்வது, வெளி மத்த்தை முன்னிறுத்துவது போன்றவை சரியல்ல

      நீக்கு
  7. கண்ணெதிரே கல்வெட்டாகச் சாட்சியங்கள் இருந்தும் ...

    சுல்த்தான் பரம்பரைக்கு சாமரம் வீசுவதா என்றிருக்கின்றது...

    என் வழி நான் ...
    இடையூறு செய்யாதே என்பது தான்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை. அவரவர் அவரவர் மதங்களை மாத்திரம் பற்றிக்கொண்டு, கட்சிக்கு ஆள் சேர்ப்பதுபோலச் செயல்படாமல், வெளிநாட்டுப் பணத்தை வாங்கிக்கொண்டு மதமாற்றத்தில் ஈடுபடாமல் இருந்தால் சரிதான்.

      நீக்கு
  8. வழக்கத்தைவிட சிறப்பான தகவல்கள், படங்கள்.

    நடந்தது நடந்தவைகளாக இருக்கட்டும். இன்று யாரை குற்றம் சொல்வது ?

    பிறகு கணினியில் பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கில்லர்ஜி. வரலாற்றை மாற்றமுடியாது. இனிமேலும் அப்படி நடந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்.

      நீக்கு
    2. ஆமாம் நடந்ததை மாற்ற முடியாதுதான்...இதுதான் எங்க வீட்டுல ரெண்டு நாளா ஓடும் டாப்பிக்...எல்லாரும் பழைசையே கட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்காங்க ....துவேஷம் தான் கூடுது.....அட போங்கப்பா இன்றைய நொடிக்கு வாங்கப்பான்னா...இனி ஆக வேண்டியதைப் பாருங்கன்னா...அது நல்லபடியா நடக்கப் பாருங்கன்னா...எல்லாத்துக்கும் பொருந்தும் தான்...

      ஒரு சிலர் எங்களுக்கு எந்த உரிமையும் கொடுக்கப்படலைன்னு சொல்லிட்டே இருக்காங்களே தவிர இப்ப நமக்குக் கிடைப்பதை வைத்து நாம முன்னேறணும்னு யோசிக்க மாட்டேன்றாங்க....

      கீதா

      நீக்கு
  9. கடந்த காலம் "கடந்த காலம்." திரும்பப் போவதில்லை. வரும் காலம் எப்படி என்று அறிய முடியாது. நிகழ் காலத்தில் ஒற்றுமையுடன் இருந்தோம் என்று சரித்திரம் படைத்தால் சந்ததியினர் வாழ்வார்கள். வாழ்த்துவார்கள். நன்மையே நினைப்போம்.செய்வோம். 

    படங்களைத் தேடிப் பிடித்து கட்டுரைக்காக ஆராய்ச்சி பலவும் செய்து கட்டுரையை சிறப்பாக வடிவமைத்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஜெயக்குமார் சார். கடந்தவைகளை மாற்ற இயலாது. ஒற்றுமையோடு இருந்தால் உயர்வடையலாம்.

      நீக்கு
  10. ஆராய்ச்சிகள் செய்து அபார உழைப்பு, அழகிய படங்கள், சுவாரஸ்யமான விவரங்கள், நல்ல பிரசன்டேஷன் நெல்லை.  மாலோல நரசிம்மர் கோவிலின்  பழைய புகைப்படங்கள் மனதில் நிற்கின்றன.  எவ்வளவு பழமையான கோவில்கள்..  எவ்வளவு சரித்திரங்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஶ்ரீராம். தளத்திற்கு முதல் முறையாக வந்திருக்கீங்க. ஹாஹாஹா

      இன்னும் இரண்டு பகுதிகள் அஹோபிலத்தைப் பற்றிதான். பிறகு யாத்திரை தொடங்கும்.

      இன்னும் கருத்துகள் காணாமல் போகின்றன. ஒரே நேரத்தில் தளம் access பண்ணப்படுவதால் இருக்குமோ?

      நீக்கு
  11. பதில்கள்
    1. காலை வணக்கம்.
      (காணாமல் போகிறதா என்பதைக் காண்பதற்கு)

      நீக்கு
    2. என் காணாமல் போன கருத்துகள் பிறகு வந்துவிட்டன (பொறுப்பாசிரியர்கள் இழுத்துக்கொண்டு வந்திருக்கவேண்டும்)

      நீக்கு
  12. sivatemple.wordpress.com என்ற சுட்டியின் தலைப்பே மனதிற்கு இதம் அளித்தது. உள்சென்று வாசிக்கிறேன். அடுத்த தடவை வழக்கமான உங்கள் தல சுற்றுலா நண்பர்களுடன் யாத்திரை மேற்கொள்ளும் பொழுது இந்த சுட்டியைக் காட்டி
    விவரங்களைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்.
    யாத்திரையை விரிவாக வகுத்துக் கொள்ள உபயோகமாக இருக்குமில்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதில் உள்ள தகவல்களும் வேறு சில புத்தகங்களை மேற்கோள் காட்டி எழுதப்பட்டவைதாம். நமக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அவைகளை இங்கு எடுத்துப் பகிர்ந்திருக்கிறேன்.

      நீக்கு
  13. முடிந்த வரை சிதைந்த கோயில்களை சீரமைக்க முய்ற்சித்து அதில் வெற்றியும் கண்டிருக்கும் தொல்பொருள் பாதுகாப்புத் துறையினரைப் பாராட்டுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை ஜீவி சார். தொல்பொருள் துறை ஓரளவு நன்றாகவே பராமரிக்கிறது.

      நீக்கு
  14. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் வரலாற்றை மீட்டெடுக்கும் தகவல்கள் எந்த நூற்றாண்டில் யார் காலத்தில் ஆவணமாயின? இதற்காக கடுமையாக உழைத்து
    உண்மைகளைத் திரட்டிய வரலாற்று ஆய்வாளர்களின் சிலரின் பெயர்களையாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் இயல்பாகவே
    ஏற்படுகிறது. இது பற்றிய உங்களுக்குத் தெரிந்த மேலதிகத் தகவல்களையும் திரட்டிச் சொல்லுங்களேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஆவணமாக ஆர்ம்பித்தன. பிரிட்டிஷார் ஆட்சிக்காலத்திலும் அவர்கள் புகைப்படங்கள் மூலம் ஆவணப்படுத்த ஆரம்பித்திருந்தனர். அப்போது எடுத்த புகைப்படங்களையும் இப்போது உள்ள நிலைமையையும் பார்த்தால் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று நிச்சயமாகச் சொல்லலாம்

      நீக்கு
  15. நெல்லை முதல்ல உங்களுக்குப் பாராட்டுகள். உக்காந்து வரலற்றைத் தேடிப் பிடிச்சு பதிஞ்சுருக்கீங்களே அதற்கு!!!

    நேற்று நேற்றுதான். கடந்து செல்லும் ஒரு சிறு மணித்துளி கூட மீட்க முடியாது. வருத்தப்பட்டுக் கொண்டிருந்தால் துவேஷம்தான் ஓங்குமே தவிர மேம்படுத்தும் முயற்சிகள் போய்விடும்.

    பழைய படங்களில் கூட அழகாகத்தான் இருக்கிறது. சிதைக்கப்பட்ட போதிலும் கூட...நிற்பவை அழகு. இப்போது சீரமைக்கப்பட்டு வந்திருக்கிறதே அதுவே பெரிய விஷயம் தான் நெல்லை,

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்குமே வரலாற்றை மேலும் அறிந்துகொண்டதில் மிகுந்த மனத்திருப்திதான்.

      பழசை நினைத்துக்கொண்டிருந்தால் அதனால் வரும் துவேஷம் தற்காலத்தை அனுபவிக்கமுடியாததாகச் செய்துவிடும்.

      சமீபத்தில் குருவாயூர் பயணம் மேற்கொண்டிருந்தேன் (4 நாட்கள்). அப்போது அருகிலிருந்த திவ்யதேசங்களுக்கும் சென்றிருந்தேன். அப்போது, 5 கிமீ தூரத்திற்கு தாரை தப்பட்டை, வாத்தியங்கள், மக்கள் கூட்டம், 10 யானைகளுக்கு மேல் ஊர்வலம் என்று அல்லோலகல்லோகப்பட்டுக்கொண்டு இருந்தது. எங்கள் டெம்போ டிராவலர் நகரமுடியாமல், இரண்டு பக்கத்திலிருந்தும் யானை போய்க்கொண்டிருந்தன (முகபடாத்துடன்). என்ன என்று விசாரித்தால், முஸ்லீம்களும் கிறித்துவர்களும் இந்த மாதிரி யானை ஊர்வலம் விடுவார்கள், அப்போது சினிமாப்பாடல்களை வாத்தியத்தில் வாசிக்க வைத்துக் கொண்டாடுவார்கள் என்றனர். படங்களைப் பிறகு பகிர்கிறேன்.

      நீக்கு
    2. ஆமாம் கேரளத்தில் அது தனி வழக்கம், நெல்லை...பார்த்ததுண்டு உங்கள் படங்களைக் காண ஆவலுடன்.

      கீதா

      நீக்கு
    3. கேர்ளாவில் சர்சுகளில் இந்து கோவில்களில் இருப்பது போல கொடிமரம் இருக்கும். என் கிருத்துவ தோழி ஒருத்தி, "உள்ளே இருக்கும் சிலையின் வடிவம், பெயர் மட்டும்தான் வேறு. சம்பிரதயங்கள் ஒன்றேதான்" என்று.

      நீக்கு
    4. ஆம் பானுமதி வெங்கடேச்வரன் மேடம். சமீபத்தில் பலப் பல கேரள சர்ச்சுகளில் பெரிய பெரிய த்வஜஸ்தம்பம் இருந்தன. யானைகளை வைத்து ஊர்வலம் நடத்துவதும் நடக்கின்றன.

      குருவாயூர் யானையோட்டத்தின்போது ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் இந்து உணர்வு இப்போது பெருகி வருகிறது. பிரனாயி, தமிழக ஸ்டாலின்போல சிறுபான்மையினர் சார்பாக, கோயில் நடைமுறைகளில் மூக்கை நுழைக்கிறார், கோயிலுக்குச் சொந்தமான இடங்கள் பிற மதத்தினருக்கு தாரைவார்த்துக்கொடுப்பது நடக்கிறது என்று ஏகப்பட்ட உதாரணங்களைக் காட்டிச் சொன்னார்.

      நீக்கு
  16. எனக்குக் கொஞ்சம் ஏற்க முடியாத ஒன்று...சீரமைக்கும் பணிகளில் சிற்பங்களை அதன் ஒரிஜினல் மாறாமல் அப்படியே பராமரிப்பது என்றில்லாமல் ஒவ்வாத பலவற்றைப் புகுத்துதல் மற்றும் வர்ணம் பூசுதல்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் வர்ணம் பூசுதல் (அதாவது பெயிண்ட் அடித்தல்) பிடிக்கவே பிடிக்காது. அப்படித்தான் பலப் பல கோவில்களில் கும்பாபிஷேக நேரத்தில் செய்துவிடுகின்றனர்.

      நீக்கு
  17. ஆனால் நீங்க போட்டிருந்த சமீபத்திய படங்களில் இருக்கும் சிற்பங்கள் நன்றாகவே இருக்கின்றன. விஷ்ணு கலர் கொஞ்சம் வித்தியாசமா இருக்கோ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தப்பா சொல்லிட்டேன் விஷ்ணு இல்லை பழசுல வெள்ளையா, நீங்க எடுத்திருப்பதில் ஒரு மஞ்சள் கலந்தமாதிரி..நிறம்

      கீதா

      நீக்கு
    2. பழைய சிலைகளை ஆலயங்களைப் புதுப்பிக்கும்போது, ஸ்டாண்டர்ட் முறையில் புதுப்பிக்கிறார்கள். சுண்ணாம்பு அடித்து அல்ல. தஞ்சை கோபுர நிறங்களில் இவற்றைக் காணலாம்.

      நீக்கு
    3. ஓ ஓகே ஓகே....ஆமாம் தஞ்சை கோபுரத்திலும் தெரிகிறது அதான் கேட்டேன்...புரிந்தது

      கீதா

      நீக்கு
  18. வராஹ நரசிம்மர் முன்னில் உள்ள மண்டபம் நான் போயிருந்த போதுமே ஓகேயாகத்தான் இருந்தது ...என்ன கொஞ்சம் தூசி அப்பி இருந்தது, இப்ப அதற்கு கதவு போட்டு பூட்டு எல்லாம் போட்டிருப்பது பாதுகாப்புதான்...

    சிற்பங்கள் இனியேனும் யாரும் அழிக்காத வண்ணம், பாதுக்காக்கணும் கூடவே இயற்கையை நாம் எதுவும் செய்ய முடியாது ஆனால் சீதோஷ்ண நிலையால் ஏற்படும் மாற்றங்களை உடனுக்குடன் சீரமைத்தால் நல்லது...சுத்தப்படுத்தி தூதி அப்பாம...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிற்பங்களை யாரும் அழிக்காதவண்ணம் பாதுகாக்கவேண்டியது அவசியம்தான். ஆனால் சீதோஷ்ண நிலையால் ஏற்படும் மாற்றங்களைச் சரி செய்ய நிறைய செலவாகும். அதனால் செய்வதில்லை என்று நினைக்கிறேன். உதாரணம் ருக்மணி துவாரகை கோவில். அந்தச் சிற்பங்களை இனி வரும் பதிவுகளில் பகிர்கிறேன்.

      நீக்கு
    2. ம்ம்ம்ம் செலவாகுமோ நிறைய....ஏன் பணம் இல்லையோ அரசிடம்?!!!! சரி உள்ளே போகலை..

      துவாரகை சிற்பங்களுக்கு வெயிட்டிங்க்.

      இது ஒரு புறம், நம்ம மக்கள் இருக்காங்களே சிற்பங்கள் மேல கூட சுவிங்கத்தை ஒட்டறது, பான் பராக்கை துப்புறது, பின்னால எழுதறது, நோண்டுவது எல்லாம் கூடச் செய்யறாங்களே..இதுங்களைத் தூக்கி .....

      கீதா

      நீக்கு
    3. கோயில் பராமரிப்பு என்பது வரலாற்றைக் காப்பாற்றுவது என்பது போய், வரவு வைக்கும் இடங்களாக மாறிவிட்டன. சரி..வரவு வருகிறது, அதைக் கோயிலுக்குச் செலவழிக்கிறார்களா என்று பார்த்தால், அப்படி இல்லை. தங்கள் ஆட்களை வேலைக்கு வைக்கும் இடமாகவும், செலவுக்கணக்கு எழுதும் இடமாகவும் ஆக்கிவைத்திருக்கிறார்கள்.

      நீக்கு
    4. /நம்ம மக்கள் இருக்காங்களே சிற்பங்கள் மேல கூட சுவிங்கத்தை ஒட்டறது,// நம்ம மக்களில் 30 சதம், மாக்கள், அதாவது யோஜனை அற்றவர்கள். அவங்களால்தான் பாரம்பர்யம், தேர்தல் முறை, ஜனநாயகம் எல்லாம் கேலிக்கூத்தாகுது. என்ன பண்ணறது?

      நீக்கு
  19. கோவில்களின் பழைய படங்களும் சீரமைத்தபின் உள்ளனவும் அருகருகே காட்சிப்படுத்தி விவரமான பகிர்வாக தந்துள்ளீர்கள் சிறந்த முயற்சி.

    கட்டிக்காப்பது மக்கள் கைகளில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி மாதேவி. மக்கள்தாம் கலாச்சாரப் பாதுகாவலர்களாக இருக்கவேண்டும்.

      நீக்கு
  20. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  21. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  22. //முகம்மது கோரி 17 முறை படையெடுத்தான்// இந்தியாவின் மீது 17 முறை படையெடுத்து கோவில்களை சூரையாடியது கஜினி முகமது. முகமது கோரி அல்ல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எழுதும்போது ஏற்பட்ட தவறு அது.

      நீக்கு
    2. திருத்துவது நல்லது. எல்லோரும் பாராட்டும் ஒரு கட்டுரையில் இப்படிப்பட்ட தவறுகள் தவிர்க்கப்பட வேண்டும். குறை சொல்வதாக நினைக்க வேண்டாம்.

      நீக்கு
    3. //திருத்துவது நல்லது.//

      Done.

      நீக்கு
  23. ஸ்ரீரங்கத்தில் மொட்டை கோபுரம் அல்லது ராய கோபுரம் என்று அழைக்கப்பட்ட தெற்கு வாசல் கோபுரத்தை கட்டியதில் கணிசமான பங்கு இளையராஜாவுக்கு உண்டு என்னும் தகவலை மறந்தது அல்லது மறைத்தது ஏனோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைக்குப் புறம்பான தகவல் இது. ஜீயர், இளையராஜாவை 6வது (?) நிலையைக் கட்ட ஒரு பங்கை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கு (அப்போது ஜீயர், பிரபலமானவர்களிடம் இந்தத் திருப்பணியில் கலந்துகொள்ளச் சொல்லி வேண்டுகோள் விடுத்திருந்தார்), இறைவன் தனக்குக் கொடுத்த வாய்ப்பாக எண்ணி முழு நிலைக்கும் உண்டான பணத்தை இளையராஜா அளித்தார். அதற்கான கல்வெட்டு கோபுரத்தின் கீழே உண்டு). இதுபோல பல நிலைகள் பலரால் பொருளளிக்கப்பட்டுக் கட்டப்பட்டது. ராஜராஜசோழனா தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டியது? அவன் முன்னெடுத்து, முக்கியப் பங்கு வகித்துக் கட்டியது அது. அப்படித்தான் எடுத்துக்கொள்ளவேண்டும்.

      நீக்கு
    2. //The 13 tiers of the Gopuram were built with contributions from the Ahobila
      Mutt, Srimad Andavan of Periasramam, His holiness Shankaracharya of Kanchi Mutt, Andhra Pradesh and Karnataka governments, personal contribution by music director Mr. Ilayaraja, the devotees frpm Tiruchi and Srirangam, donations collected by Srimad Azhagiashimself and the Tamil Nadu Hindu Religious Endowmwnt and Charities department.//

      நீக்கு
    3. ஸ்ரீரங்கம் ராஜ கோபுர நிர்மாணத்தில் இளையராஜாவுக்கும் கணிசமான பங்கு உண்டு என்றுதான் நான் சொன்னேன். நீங்களோ அவரை ராஜராஜசோழன் ரேஞ்சுக்கு உயர்த்தி விட்டீர்கள்!! இளையராஜவின் பங்களிப்பிற்கு பிறகே நங்கொடைகள் அத்கம் வரத்தொடங்கின என்பது மறுக்க முடியாத உண்மை.

      நீக்கு
    4. இங்கு ராஜராஜசோழன் அஹோபிலமட ஜீயர். நீங்கள் சொல்வது தவறான செய்தி. பிறகு எழுதுகிறேன்.

      நீக்கு
  24. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே.

    பதிவு நன்றாக உள்ளது. படங்களும் அதன் விவரங்களும், நன்றாக உள்ளது. பழைய காலங்களின் மன்னர்கள் ஆட்சியில் கோவில்கள் சிதைந்த, கோவிலிலுள்ள விலையுயர்ந்த பொருள்களின் மேல், ஆசைப்பட்டு ,படையெடுத்த பிற மதத்து மன்னர்களால் சிதைக்கப்பட்ட கோவில் வரலாறுகளை தாங்கள் சிறந்த முறையில் ஆராய்ச்சி செய்து, தயார் செய்து இப்பதிவை வெகு சிறப்பாக தந்துள்ளீர்கள். மனமார்ந்த பாராட்டுக்கள்.

    இப்பதிவின் மூலம் பல விபரங்களை தெரிந்து கொண்டேன். பழைய கோவில்களையும், புதுப்பிக்கப்பட்ட இப்போதுள்ள கோவிலில்களின் அமைப்பையும் காட்டும் படங்கள் பதிவுக்கு முத்திரையாக அமைந்து விட்டது. அவ்வாறு புதுப்பித்து தந்த கோவில்களையும் கோபுரங்களையும், சிற்பங்களையும் இனி கவனத்துடன் பேணி காக்க வேண்டும்.அது நம் கடமையும் கூட.. பதிவை ரசித்துப் படித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலா ஹரிஹரன் மேடம். எந்தப் புதிய கட்டுமானமும் காலப்போக்கில் சிதையக்கூடியதுதான். ஆனால் புதுப்பிக்கும்போது பழைய நிலை முற்றிலும் மாறாமல் சீரமைத்தால் அது நம் வரலாற்றைச் சொல்லிக்கொண்டிருக்கும்.

      நீக்கு
  25. விழித்ததும் இன்றைய தளத்திற்கு வந்து பிரார்த்தனையைப் பதிவு செய்த நேரம் 5:24.. பதிவில் ஸ்ரீ நரசிம்மர் பற்றி மனதில் தோன்றிய நாலு வரிகளைப் பதிவு செய்த போது நேரம் 5:28..

    இன்று உச்சிப் பொழுதுக்குள் எனக்குக் கிடைத்திருப்பவை கடந்த சில மாதங்களில் கிட்டாத மகிழ்ச்சியும் மங்கலச் செய்திகளும்..

    புதிய நம்பிக்கையின் நட்சத்திரம்..

    நரசிம்மரைப் பற்றி எழுதிய போது பல் துலக்கியிருக்க வில்லை..

    இதோ இரண்டு கிமீ., தொலைவில் தஞ்சை மாமணியாக ஸ்ரீ வீரநரசிம்மர் திருக்கோயில்..

    எல்லா நாட்களிலும் தான் ஐந்து மணியளவில் எபியின் பதிவுகளைக் காண்கின்றேன்.. இப்படி நரசிம்மர் அருளையும் மகிழ்ச்சியையும் மங்கலத்தையும் வெகு நாட்களுக்குப் பிறகு திரட்டித் தந்தது இப்போது தான்.. இந்தப் பதிவு தான்..

    தங்களுக்கும் பதிப்பித்த ஸ்ரீராம் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி..

    நமது நட்பின் வட்டத்தில்
    மங்களகரமான பதிவுகளைத் தந்து ஆன்மீகச் சுடரொளி திகழும் பதிவர்களுள் தாங்களும் ஒருவர்..

    தங்களுக்கு எனது அன்பின் வணக்கங்கள்..

    ஓம் ஹரி ஓம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருமங்கையாழ்வார் பாடிய, தஞ்சை மாமணிக்கோவிலின் அருகிலேயே வாசம் செய்யும் பேரருள் உங்களுக்கு இருக்கிறது துரை செல்வராஜு சார். பலகாலங்கள் வெளிநாட்டில் இருந்தபோதும் தற்போது கோவில்களின் அருகில் இருப்பதும் அந்த நினைவை மனதில் இருத்தியிருப்பதும் இறையருளின் காரணமாகத்தான். அதிலும் நீங்கள், பாலாலயத்தின்போது அந்த நரசிம்மர் விக்கிரஹத்தைத் தொட்டபோது, உண்மை உடலைத் தொடும் உணர்வு பெற்றேன் என்று சொல்லியபோது எனக்குச் சிலிர்த்துவிட்டது.

      நெடும் தொடராக இருக்கிறதே, படிப்பவர்களுக்கு அயர்ச்சியாக இருக்குமோ என்று எண்ணி, 7 பகுதிகள் முடிந்தபிறகு ஓரிரு வாரங்களுக்கு வேற டாபிக் நுழைக்கலாமா என்று சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்.

      நீக்கு
    2. /// பாலாலயத்தின் போது அந்த நரசிம்மர் விக்கிரஹத்தைத் தொட்டபோது, உண்மையான உடலைத் தொடும் உணர்வு பெற்றேன் .. ///

      இது நிகழ்ந்தது அருகிலுள்ள ஸ்ரீ மணிக் குன்றப் பெருமாள் ஆலயத்தில்!..

      அது ஒரு ஆனந்தப் பரவசம்..

      ஓம் ஹரி ஓம்..

      நீக்கு
    3. அது ஒரே ஒரு திவ்யதேசம், தஞ்சை மாமணிக் கோவில். அதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேண்டும்

      நீக்கு
  26. திரு. வெங்கட் நாகராஜ் அவர்களது தளத்திகுச் சென்றால் அங்கேயும் ஸ்ரீ நரசிம்மர் தரிசனம்.. கோபுரப்பட்டி ஸ்ரீ ஆதிநாயகப் பெருமாள் திருக்கோயிலைப் பற்றிய செய்திகள்..

    என்ன சொல்வது!..

    ஸ்ரீ நரசிம்மர் நற்றாள் போற்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனியாக, பேருந்தில், சென்று, இதுவரை காணாத கோவில்களைத் தேடிச் சென்ற அவரது பயணம் என்னைக் கவர்ந்தது. அதுவும் அவனது இன்னருளே என்றே எனக்குத் தோன்றியது.

      நீக்கு
  27. பழைய படங்களும், புதிய படங்களும் அருமை.
    வரலாற்றை தேடிபடித்து பகிர்ந்து கொண்டதும் அருமை.
    புனர் நிர்மாணம் செய்யப்பட்டு திருத்தமாக இருப்பது பார்க்க அழகு. காட்டுக்குள் இருந்த போது மக்கள் முன்பு இறை நாமத்தை சொல்லி பயணம் செய்து வழிபட்டு வந்து இருக்கிறார்கள்..
    இப்போது மீண்டும் பக்தர்கள் புனித பயணம் செய்கிறார்கள்.

    நேற்று தெலுங்கு பேசும் நண்பர் வீட்டில் எங்களை இரவு உணவுக்கு அழைத்து இருந்தார்கள். அவர்கள் வீட்டு பூஜை அறையை காட்டினார்கள் அங்கு வராக முகத்துடன் மனித உடலோடு சிங்கத்தின் வால் கொண்ட வராக லட்சுமி நரசிம்மன் தரிசனம்கிடைத்தது.
    பிரஹலாதனை பெருமாள் காத்த இடத்தில் உள்ள கோவில் சிம்மாசல நரசிம்மர் படம்.

    ஸ்ரீவராகலஷ்மி நரசிம்ஹர் தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சியாக இருந்தது.

    நேற்று தமிழ் பள்ளியில் நூலக திறப்புவிழா, மற்றும் நண்பர் வீடு என்று போய் விட்டது. பதிவை இப்போதுதான் படித்தேன்.
    படங்களின் தொகுப்பு மிக அருமையாக இருந்தது.
    தொடர்கிறேன்.




    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அரசு மேடம். வார இறுதி என்பதால் வெளியில் சென்றிருப்பீர்கள் என்று நினைத்தேன்.

      //காட்டுக்குள் இருந்த போது மக்கள் முன்பு இறை நாமத்தை சொல்லி // - ஆரம்ப காலத்தில் அஹோபில யாத்திரை கடினமாக இருந்ததாம். யாத்திரையை நடத்துபவர், முன்பெல்லாம் கரடி போன்றவை தட்டுப்படும், கையில் கம்புடன் ஜாக்கிரதையாகச் செல்வோம். டார்ச் லைட்டும் எடுத்துக்கொள்வோம் என்று சொல்லியிருக்கிறார். இப்போதுள்ளதுபோல டிராக்டர், ஜீப்பெல்லாம் கிடையாதாம். நடந்துதான் செல்லணுமாம். குறிப்பாக காட்டுக்குள் இருக்கும் ஒரு கோவிலுக்கு அதிகாலை 3 1/2 மணிக்குப் புறப்பட்டு 7-8 மணிக்குப் போய்ச் சேர்வார்களாம்.

      //அங்கு வராக முகத்துடன் மனித உடலோடு சிங்கத்தின் வால் கொண்ட வராக லட்சுமி நரசிம்மன் தரிசனம்கிடைத்தது.// - இப்படித்தான் வராஹ நரசிம்ஹர் என்று நவ நரசிம்மர் கோவிலுள் ஒன்றாக அமைந்திருக்கிறது.

      நீக்கு
  28. //புதுப்பிக்கும்போது பழைய நிலை முற்றிலும் மாறாமல் சீரமைத்தால் அது நம் வரலாற்றைச் சொல்லிக்கொண்டிருக்கும்.//

    நீங்கள் சொல்வது போல நானும் நினைப்பேன்.
    புதும்பிக்கிறேன் என்று நிறைய கோவில்களை புதுமையை புகுத்தி விட்டார்கள், பழமை போய் விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருவறையில் மொசைக் தரை - இது ஓகே என்றுதான் தோன்றுகிறது. இல்லாவிடில் வழுக்கும். ஃபோகஸ் லைட் - இதுவும் ஓகேதான். குளிர்சாதன வசதி - ஓகே. ஆனால் பழைய கலாச்சாரத்தை முற்றிலுமாக மாற்றுவது, புதுப் புது சந்நிதிகளைக் கொண்டுவருவது, புதுப்புது விஷயங்களை (விளக்கு வைப்பது போன்று) புகுத்துவது என்னால் ஏற்க முடியவில்லை. கோவிலுக்கு விளக்கு ஏற்றுவதையும், கேரளக் கோவில்களில், பிராண்டட் நெய் மாத்திரம்தான் கொடுக்கமுடியும் என்று வைத்திருக்கிறார்கள். கோவிலுக்கு விளக்கேற்ற எண்ணெய்/நெய் கொடுக்கலாம் (கோவிலுக்கு எது தேவையோ அது). 2 ரூ, 5 ரூ வேஸ்ட் விளக்குகளை ஏற்றுவதால் யாரை ஏமாற்றிக்கொள்கிறோம்?

      நீக்கு
  29. நல்லதொரு ஆய்வு... வரலாற்றை அழிப்பது கொடுமை என்றால், அதை மாற்றுவது அதைவிட _____

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!