சனி, 11 மார்ச், 2023

சொந்த செலவில் சாலை - மற்றும் - நான் படிச்ச கதை

 


=======================================================================================================================================================================


===========================================================================================================================================================


===============================================================================================




===================================================================================================================================================================




=============================================================================================================================================

நான் படிச்ச கதை (JKC)

 

பழம் விழுந்தது.

தெளிவத்தை ஜோசப்


முன்னுரை

கதையில் புகுவதற்கு முன் கதை பற்றிய சில விவரங்களை விளக்க வேண்டி இருக்கிறது. கதைக்களம் பண்டைய  ‘சிலோன்மலையகத் தேயிலைத் தோட்டம். ஆங்கிலேயர் தோட்டங்களின் உரிமையாளர்கள், நிர்வாகிகள். தொழிலாளர்களின் குடியிருப்பு லயம் என்று கூறப்படும்

தேயிலை தோட்டம் ஒரு தனி உலகம். தொழிலாளிகள் தோட்டத்தை விட்டு வெளியில் செல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் கிணற்றுத் தவளைகள் போல் இருப்பர். காலையில் எழுந்துகொழுந்துபறிக்க செல்பவர்கள் பெண்கள். பறிக்கும் கொழுந்துக்கு ஏற்ப கூலி. உழைக்கும் வரைதான் சம்பளம். உழைக்காத தினங்களில் சம்பளம் இல்லை. எத்தனை வயது வரை வேண்டுமானாலும் உழைக்கலாம். உழைத்த காலத்தின் அளவின்படி வயது மூப்பு காரணம் ஒய்வு பெற்றவருக்கு பென்ஷன் என்ற சொற்ப உதவி இருந்தது. அது நிறுத்தலாக்கப் பட்டு ஓய்வடையும் போது ஒரு தொகையாகஓய்வு உபகாரச் சம்பளம்!’ தரும் வழக்கம் எற்பட்டது.

தொழிலாளியாக வாழ்நாள் முழுதும் உழைத்து கணவன் இறந்தபின் மகன் வீரனுடன் வசிக்கும் கிழவியின் கதை தான் இன்றைய கதை. ஆசிரியர் கிழவி என்றே குறிப்பிடுகிறார் , பெயர் சொல்லவில்லை. கதையை …. உரையாடலாகத்  தருகிறேன். 

கட்டுரையில் நான் எழுதியதை இந்த வண்ணத்தாலும் ஆசிரியர் எழுதியதை இந்த வண்ணத்தாலும் அடையாளப்படுத்துகிறேன். கதை தரப்படவில்லை. கதைப் பகுதிகள் ஆங்காங்கே கட்டுரையில் கதைச் சுருக்கமாக உள்ளன.

சுட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. "சுட்டி" என்பதை க்ளிக் செய்தும் செல்லலாம். ஒரு வேளை அந்த லிங்க் வழி திறக்கவில்லை என்றால் அதை காப்பி பேஸ்ட் செய்து திறக்கவும். லிங்க் வழி திறப்பது மறுக்கப்பட்டுள்ளது. Error 503 வரும்.

சுட்டி

https://sirukathaigal.com/சிறப்பு-கதை/பழம்-விழுந்தது/#more-34286

இனி 

ஏம்ப்பா சம்முகம் இங்ச வா 

ஐயா கூப்பிட்டீரா?” 

ஆமாம். யாரோடையாவது கதைக்கணும் போல இருந்தது, அதான் உன்னைப் பார்த்தேன்   கூப்பிட்டேன்.” 

ஐயோ எனக்கு அர்ஜன்ட் ஜோலி இருக்கு, நேரமில்ல.” (மனதுக்குள்அறுத்துடுவாரே மனுஷன்’) 

அர்ஜன்ட் எல்லாம் தெரியாதா? உட்கார்

தெளிவத்தை ஜோசப் எழுதுன கதை ஒன்னு வாசித்தேன். ‘பழம் விழுந்ததுஎன்பது தலைப்பு. அதைப் பற்றி பேசலாம்னு தான் உன்னைக் கூப்பிட்டேன்.” 

தெளிவத்தையா? ஜோசப்பா?” 

தெளிவத்தை ஒரு டீ எஸ்டேட் பெயர். ஜோசப் கதை எழுதுனவர் பெயர்….சந்தனசாமி ஜோசப். 1934 இல் தெளிவத்தையில் பிறந்தார். 2022 இல் மேலோகம் போயிட்டார்.” 

அப்படியாகதை எதைப் பத்துனது ?” 

கதை இப்பவோ, அப்பவோன்னு உசிர் போறதுக்காகப் படுத்த படுக்கையாகக் காத்திருக்கும் ஒரு கிழவியைப் பற்றியது.” 

என்னது கிழவியா? சரி நான் அப்புறமா வாறன்

அடஅப்படிப் போனால் எப்படி. கதைக்கிறதுக்கு இரண்டு பேர் வேணுமில்ல. சொல்ல ஒருத்தர், கேட்க ஒருத்தர்….. உட்காரு.” 

கிழவி ஒரு தோட்டத்தொழிலாளி. கையும் காலும் நல்லா இருந்தவரை உழைச்சவ. புருஷன் செத்ததுக்கு அப்புறம் மகன் வீரன் வீட்டுக்கு வந்துட்டா. அப்படியும் வேலைக்கு போய்கிட்டு இருந்தா 

ஜோசப் எழுதுனதைப் படிக்கிறேன்  கேளு.” 

துரை கொடுக்கும் சில்லறையில் சம்பளத்து வாசல் வியாபாரியிடம் ஒரு இருபத்தைந்து சதத்திற்கு பிஸ்கோத்து வாங்குவாள். சம்பளத்து வாசலுக்கும் லயத்திற்கும் உள்ள இடைத்தூரத்தில் அவள் கடித்துக் குதப்பிய ஒன்று போக மீதி இருபத்துநாலையும் கடதாசியில் சுற்றிய சடம்பு அவிழாமல் அடிமடியிலிருந்து எடுத்துப் பேத்தியிடம் கொடுத்து விட்டு, மீதி சில்லறைகளை நோட்டுகளுடன் சுற்றி மகனிடம் நீட்டி விடுவாள்.


அப்படி  மகன் வீட்டில் காசைக் கொடுத்து சாப்பிட்டுக்கிட்டு இருந்தா. கிழவிக்கு தள்ளாமை கூடிப் போச்சு. கிழவி வேலையை விடலைன்னாலும் சின்ன துரைக்கு பயம். தோட்டத்தில எங்கேயாவது விழுந்து செத்துப் போச்சுன்னா யார் என்ன பதில் சொல்றது. வேலையை விட்டு நிப்பாட்டிட்டார்.” 

அப்புறம் 

வீரனுக்கு கிடைச்சிட்டிருந்த கிழவியோட சம்பளம் நின்றதில் ரொம்ப கோபம். 

அடுத்த நாள் வீரன் ஆபீசை இரண்டாக மட்டுமல்ல மூன்றாகவும் ஆக்கிவிட்டான். 

கிழவிக்கு யார் சோறு போடுகிறது?”

அவன் துரையிடம் கேட்ட முதல் கேள்வி. “இப்ப கிழவிக்கு வேலை செய்ய முடியாதுதான். அதுக்காக வேலை இல்லேன்னுடுறதா? இத்தினி வருசமா எந்தத் தோட்டத்துக்காகப் பாடுபட்டிச்சிஇந்த தோட்டத்துக்கு ஒழைச்ச கிழவி தானே…. நான் என்ன கண்டாக்கா? இல்லை கணக்குப்பிள்ளையா? வீட்டுல வைச்சு சோறு கொடுக்கஅதெல்லாம் சரிவராது துரைகளே! வேலை கொடுங்க இல்லேன்னா சுட்டுத் தள்ளிப் புடுங்க…!” 

கடைசியாக ஒரு தீர்வு. 

கிழவியும் ஒய்வு பெற எழுதிக் கொடுத்துவிட்டார்(ன்). 

கிழவி பேருக்கு ரெண்டேக்கர் கொந்தரப்புக் கொடுங்கஎன்றான்.

ஏலாது! ஓய்வு பெறப் பேரெழுதிய யாருக்கும் செக்றோலில் பேர் இருக்கக் கூடாது!” என்றார் அய்யா.

சரி! என் பேருக்குக் கொடுங்கஎன்று அப்போதே கிழவிக்கு ஒரு வழி பார்த்துக் கொண்டுதான் வந்தான்.

அடுத்த நாளிலிருந்து வெய்யிலோ மழையோ கிழவி புல் வெட்ட வேண்டியது. சம்பளம் வீரன் பெயரில். 

கொஞ்ச நாளில் அந்த வேலையையும் கிழவியால் செய்ய முடியாமல் போனது. 

தனி மலை கொடுத்து கிழவி வேலை செய்யத் தொடங்கிய கால கட்டத்தில் தான் ஒரு புது ஆணை  மாதப் பென்ஷன் கிடையாது. ஓய்வுச் சம்பளம்என்று மொத்தமாக அறுநூறோ…. எழுநூறோ…. கொடுக்கப்படும். வேலை செய்துள்ள விகிதப்படி என்பது தான் அப்புதுச் சட்டம்.

ஓய்வுக்குப் பெயர் கொடுத்தவர்கள் யாரும் வேலைக்குப் போக இயலாது. 

எப்பங்க பென்ஷன் கிடைக்கும்?” என்று கேட்டு வைத்தான்.

பென்ஷன் இல்லே வீரா, ஓய்வு உபகாரச் சம்பளம்!” திருத்தினார் துரை.

எந்த மண்ணோ! காசு எப்ப கிடைக்கும் என்பதுதான் அவனுடைய அவா.

போன தடவையே எழுதியிருந்தீன்னா இந்த மாசம் கெடைக்கும் இப்ப இன்னும் ஆறு மாசமாகும்என்று ஐயா கூறியதும் அதுவரை என்ற கேள்வியே பேயாய் பெரிதாய் எழுந்து நின்றது. ஆறு மாதமென்றாலும் சுமை சுமைதானே. 

இப்படியாகக் கிழவிக்கு பணம் கிடைக்கும் வரையில் அவளுடைய உயிரை தக்க வைக்க படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறான். 

எம்மா சம்முகம் தூங்கிட்டியா?” 

இல்லீங்க. பணமா பாசமா ங்கிரப்போ பணத்துக்காகத் தான் பாசம் ன்னு தெரியுது. சரி சொல்லுங்க.” 

எல்லாம் பாசாகி விட்டது. இன்னும் இரண்டு நாளில் பணம் கிழவியின் கைக்கு வந்து விடும்

நேற்றுக் கிளாக்கரய்யா சொன்ன செய்தியின் இனிமையை நுகர்ந்தவாறு ஆபீசை நோக்கி விரைவாக நடைபோட்டான் வீரன். நிலைமை எப்படியிருக்கிறது என்பதை மேலும் தெளிவாக அறிந்து கொள்ளும் நோக்கம் தான். 

இந்தப் பண விஷயமே இப்படித்தான் நம் கையில் வந்து விழும் வரை எதையுமே நம்ப இயலாது. 

தொண்டைக்கும் நெஞ்சுக்குமாக இழுத்துக் கொண்டு கிடக்கும் அந்தக் கிழவியின் உயிரை இன்னும் இரண்டு நாள் . இரண்டே இரண்டு நாள் நிறுத்தி வைத்திருக்க அவனால் முடியுமென்றால்

அவனால் அது முடியாது!

கிழவியின் உயிரைத் தன்னால் இழுத்துப் பிடித்து நிறுத்தி வைக்க முடியாது என்பதையும் அவன் உணராமலில்லை. மனிதனின் பலவீனத்தை சக்தியின்மையை சந்தர்ப்பங்கள் தான் எத்தனை நாசூக்காக அவனுக்கு உணர்த்துகின்றன.

சாகப் போகும் சந்தோஷத்தில் கிழவி சிரித்துக் கொண்டாள். உதடு பிரியாவிட்டாலும் உள்மனதில் ஒரு விரிசல்!

வீரன் தலையைப் பலமாக உதறிக் கொண்டு கால்களை எட்டிப் போட்டான். இந்த நேரத்தில் தனக்கேன் அந்தப் பழைய நினைவு வர வேண்டும். மீண்டும் தலையை உதறிக் கொண்டான்.

ஒரு காரைப் பிடிச்சாவது கிழவியைத் தூக்கிப் போட்டுக்கிட்டுப் போய்க் கையெழுத்துப் போட்டுட்டா நிம்மதியா மூச்சுவிடலாம்.

இரண்டு நாள் கழித்துப் போகிற உயிரை அப்போதே நிறுத்திக் காட்டினாயே, இந்தக் கிழவியின் உயிரை இரண்டு நாள் நிறுத்தி வைக்க உன்னால் முடியுமா?” என்று மனம் கேட்கிறதோ?

உள் மனதின் பயங்கர ஓலம்.

சந்தில் தெரிகிறது அவனுடைய லயம். அது என்ன அங்கே கூட்டம்

அப்பாயி செத்துப் போச்சுப்பாஎன்று அலறியபடியே ஓடி வந்தாள் மகள்.

ஓட்டம் நடையாகி, நடையும் மெலிந்து, உலகமே சுற்றியது அவனுக்கு.

பழம் விழுந்துவிட்டது. 

வீரன் விக்கித்து நின்றான். 

அய்யா எனக்கு ஒரு சந்தேகம். இப்படி கிழடுகள் செத்துப் போற கதையா சொல்றீங்க. அன்னைக்கு என்னடான்னா மூக்கம்மா ஆச்சி செத்தஒரு சிறு இசைகதையை சொன்னீங்க. இண்டைக்கு கிழவி செத்துப்போற கதைபழம் விழுந்ததுஎன்று கதையை சொல்றீங்க. இப்படி சாகிற கதையா தேடித் தேடி வாசிப்பீங்களோ?” 

அப்படி இல்லேப்பா . எழுத்தாளர்கள் அப்படி எழுதி வச்சா நான் என்ன செய்ய முடியும், கிழவியானால் சாகணும். குமரியானால் கல்யாணம் செய்யணும் என்பது கதைகளின் எழுதப்படாத இலக்கணம்..” 

சரி நான் வாறன் 

கதையின் சுட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ள்ளது. அது திறக்கவில்லை என்றால் அதன் கீழே உள்ல லிங்கை காப்பி பேஸ்ட் செய்து திறக்கவும். லிங்க் வழி திறப்பது மறுக்கப்பட்டுள்ளது. Error 503 வரும்.

கதையின் சுட்டி 

https://sirukathaigal.com/சிறப்பு-கதை/பழம்-விழுந்தது/#more-34286 

நூலகத்தில் இவரது கதைகள் PDF நூலாக உள்ளது. 

நூலகம்-தெளிவத்தை-ஜோசப்

ஒரு சிறு ஆய்வு. 

கதை துவக்கமும் முடிவும் சரியாக உள்ளன. ஆனால் நடுப்பகுதி (சதை பகுதி?) கால மயக்கத்தில் முன்பும் பின்புமாகச் செல்லும் போது கதையைப் படிப்பவர்களுக்கு எது நடந்து முடிந்தது; நடப்பது எது என்று உணர்வதில்  ஒரு  குழப்பம் ஏற்படுகிறது. 

பணத்திற்காக எதுவும் செய்யத் துணியும் வீரன் (பெயர் காரணம்!), என் கடன் பணி செய்து மரிப்பதே என்று கடைசி காலத்திலும் உழைத்த கிழவி, தன் தேவைகளைத் தானே பார்க்க வேண்டிய நிர்பந்தத்திலும் முடியாமல் அவற்றை செய்து கொள்ளும் கிழவி (வெற்றிலை சாற்றை துப்ப எச்சில் கொத்தை எடுத்து வருவது, சிற்றோடைக்குச் சென்று குளிர்ந்த நீரில் குளித்து வருவது) என்று  ஒவ்வொருவர் குணத்தையும் விவரித்துச் செல்லும் கதை கடைசியில் கிழவியின் மரணத்தில்  பழம் விழுந்தது  (கிழம் இறந்தது) என்று முடிக்கிறது. 

சொல்ல வந்த யாவற்றையும் மொத்தமாக மலையகத் தமிழில் அப்படியே எழுதியுள்ளார் ஆசிரியர். முன்னுரையில் கூறியது போன்று தேயிலைத் தோட்ட வாழ்வை அறியாதவர் புரிந்து கொள்ள முடியாத சொற்களும் உள்ளன. ஆனாலும் பயன்பாட்டை ஊகிக்கலாம். 

1964-ஆம் ஆண்டு வீரகேசரி நடத்திய சிறுகதைப் போட்டியில் 'பழம் விழுந்ததுசிறுகதை முதல் பரிசை வென்றது. 

பிற்சேர்க்கை. 

ஓய்வுப் பலன்களுக்கு விண்ணப்பிக்கும்போதே  பலன்கள் கிடைப்பதற்கு முன் உரியவர் இறந்தால் பலன்களைப் பெற வேண்டிய மாற்று நபர் (NOMINEE) எழுதி வாங்கப்படும். பலன்களுக்கு உரியவர் இறப்பதால் பலன்கள் இல்லை என்று ஆவதில்லை. நாமினிக்கோ வாரிசுக்கோ கொடுக்கப்படும். ஆக கிழவி இறந்தாலும் வீரன் பணம் பெற முடியும். இந்த நியதி ஆசிரியருக்குத் தெரியாமலா இருக்கும், அதுவும் ஒரு கணக்காளரான இருந்தவருக்கு!! 

ஆசிரியர் 


தெளிவத்தை ஜோசபின் தந்தை சந்தனசாமி திருச்சியைச் சார்ந்தவர். பள்ளி ஆசிரியராக இலங்கை மலையகத்தில் தெளிவத்தை தோட்டத்தில் வேலைக்கு சேர்ந்தார். அங்கு பிறந்த காரணத்தால் தெளிவத்தை என்ற அடைமொழியும் ஜோசப்புக்கு சேர்ந்துகொண்டது. 

ஜோசப் பள்ளிப்படிப்பை தந்தையிடமும், கும்பகோணத்தில் சிறு மலர் பள்ளியிலும் தெளிவத்தைக்கு அடுத்து உள்ள பதுளையிலும் முடித்தார். பின்னர் ஆசிரியராக, கிளார்க்காக, கணக்காளராக என்று பல வேலைகளும் பார்த்து கடைசி காலத்தில் கொழும்பில் வசித்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு கொழும்பில் அவரது 88 ஆம் வயதில் மேலுலகம் சென்றார். 

தெளிவத்தை ஜோசப் அப்பெயருக்கான காரணத்தை 2013 விஷ்ணுபுரம் விருதுவிழாச் சந்திப்பில்தங்களைத் தோட்டத்திலிருந்து வந்தவர்கள் என்று சொல்லவே அன்றெல்லாம் படித்த மலையகமக்கள் கூச்சப்படுவார்கள். தோட்டக்காட்டான், கள்ளத்தோணி என்று அவர்கள் இழிவுபடுத்தப்பட்ட காலம். ஆகவேநான் தோட்டக்காட்டான், அந்த மக்களைப்பற்றி எழுதுபவன்என்று பிரகடனம் செய்யவே அப்படிப் பெயரை வைத்துக் கொண்டேன்”. என்று சொல்கிறார். 

இவர் கவிதைகளும் எழுதியுள்ளார். திரைத்துறையிலும் பணியாற்றி உள்ளார். பழம் விழுந்தது கதையில் உள்ள ஒரு கவித்துவம் கீழே. 

அந்தி சாயுமுன்னமே அடிவானம் இருண்டு விட்டது. கொழுந்து நிறுத்து முடிந்து அமைதியான பெறட்டுக்களத்தின் அகன்ற பரப்பில், அங்கொன்று இங்கொன்றாக இறைந்து கிடக்கும் கொழுந்திலைத் துகல்கள் போல நீலம் பூத்துக் கிடந்த வானத்தில் நட்சத்திரங்கள் ஒன்றிரண்டு மின்னின.

தெளிவத்தை ஜோசப் இலக்கிய ஆய்வும் மேற்கொண்டார். இவர் எழுதிய இருபதாம் நூற்றாண்டில் ஈழத்து இதழியல் வரலாறு, மலையக சிறுகதை வரலாறு, மலையக நாவல் வரலாறு ஆகிய மூன்று நூல்களும் இவரின் ஆய்வுப் பணியில் குறிப்பிடத்தக்கவை. 

இலங்கை எழுத்து பெரும்பாலும் யாழ்ப்பாணத்தை மையம்கொண்டது. தெளிவத்தை ஜோசப் மலையக மக்களின் வாழ்க்கையை இலங்கை இலக்கிய உலகில் எடுத்துரைக்கும் குரலாக அறியப்பட்டார். 

 

18 கருத்துகள்:

  1. அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள் வைப்புழி

    வாழ்க தமிழ்..

    பதிலளிநீக்கு
  2. இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. மாணவர்களிடம் அடி வாங்கிய நடத்துனர் நல்லவர்..

    ஆனாலும். விசாரணை நடக்கின்றது..

    பதிலளிநீக்கு
  4. தன் மகள்களை சீருடை பணியாளர்களாகத் தேர்ச்சிபெற முயற்சிகள் எடுத்துக்கொண்ட தந்தையின் உழைப்பு மனம் கவர்கிறது

    பதிலளிநீக்கு
  5. அது ஒரு காலம். கனாக் காலம். தமிழகத்து சேலத்தில் இருந்த காலம். தெளிவத்தை ஜோஸப் அவர்களின் எழுத்தை வாசித்த காலம். சேலம் அரசுக் கல்லூரிக்கு எதிர்புறம் இருந்த மத்திய நூலகத்தில் அந்நாட்களில் பெருமை வாய்ந்த அத்தனை எழுத்தாளர்களின் நூல்களும் கிடைத்தன. ஆனால் இன்றோ?....

    பதிலளிநீக்கு
  6. தந்தை வெங்கடேசன் அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை விரைவில் வெற்றி பெறட்டும்...

    பதிலளிநீக்கு
  7. பக்க வாதத்துக்கு சிகிச்சை பாராட்டுகள்.

    சொந்த சாலை அமைத்த மக்கள்.

    மாணவர்களை மனித நேயம் கருதி தண்டிக்காமல் கண்டக்டர்.

    மூன்று பெண்களையும் காவல்துறையில் பணியாற்ற பயிற்சி அளித்த தந்தை.

    பெண்கள் கட்டுமானத் துறையில் ஊக்கம் அளித்த பெண் கலெக்டர்.
    என அனைவருமே பாராட்டப் பட வேண்டியவர்கள்.

    இன்று நமது நாட்டு எழுத்தாளர் அவர்களின் கதை பகிர்வு . இவ் எழுத்தாளர் எங்கள் குடும்ப உறுப்பினரின் குடும்ப நண்பர்.
    நேரில் சில தடவைகள் சந்தித்துள்ளேன் என்பதில் மகிழ்ச்சி கொள்கின்றேன்.

    அவரின் கதையை நன்கு எடுத்துக் காட்டியுள்ளீர்கள். அவரின் பல ஆளுமை களையும் எடுத்துச் சொல்லியுள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுடைய குடும்ப நண்பர் என்பது செய்தி. கட்டுரையைப் பாராட்டியமைக்கு நன்றி. 
      Jayakumar

      நீக்கு
  8. பக்கவாத சிகிச்சை - ஓமந்தூரார் மருத்துவமனை சாதனை மகிழ்வான விஷயம். நுண்துளை அறுவைசிகிச்சை என்றால் லாப்டோஸ்கோப்பிதானே? இந்த விஷயம் ஒருவருக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  9. தம் கையே தமக்குதவி என்று கிராமத்து மக்கள் இறங்கிவிட்டார்கள்....சாமை அமைத்த விஷயம்...

    நடத்துனர் ஆச்சரியப்படுத்துகிறார். பாராட்டுகள் என்று சொல்ல நினைத்தாலும்......எனக்கு என்னவோ ஒரு வார்னிங்க் கொடுத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. சின்ன தண்டனையேனும். ஏனென்றால் மீண்டும் அந்தப் பையன்கள் இதைச் செய்யத் துணிவார்கள். இப்படி மறப்போம் மன்னிப்போம் என்ற தத்துவங்கள் பலவற்றில் வேலைக்காவாது....இதைப் படிக்கும் மற்ற பையன்கள் இப்படித் தவறு செய்து கொண்டே இருப்பாங்க...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த மாதிரி மன்னித்தல் கருணை, பொது வெளியில் தவறுகளுக்கு உரிய தண்டனை இல்லாமல் எல்லாம் தான் நம்மூரில் ஊழல்கள் வலுவடையவும், சிறு குற்றங்கள் பெரும் குற்றங்கள் ஆவதுமாக இருக்கிறது

      கீதா

      நீக்கு
  10. காவலர் பணியில் இணைந்த சகோதரிகளுக்கு வாழ்த்துகள்!

    கொத்தனார் பயிற்சி பெற்றுகட்டிடக் கலையில் ஈடுபட்ட ஊராட்சித் தலைவர் மற்ற பெண்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
  11. தெளிவத்தை ஜோசஃப் பற்றி, ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்கள் பற்றி வாசித்த போது அறிந்திருக்கிறேன் ஆனால் கதையை நான் வாசிப்பது இதுதான் முதல் முறை, நன்றி ஜெகே அண்ணா.

    கதையின் வட்டார வழக்கு கன்னியாகுமரி மாவட்டத்து சில சொற்களும் இப்படி உண்டு.

    தலைப்பு ரொம்பப் பிடித்தது. பொருத்தம்

    மீண்டும் வருகிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  12. சடம்பு என்ற சொல் எங்கள் ஊர்ப்பக்கங்களில் தினமும் பயன்படுத்தப்ப்டும் சொல்.

    ஜெகே அண்ணா, உங்கள் முன்னுரையும் அந்த ஊதா நிறத்தில் கொடுத்திருப்பதும் நல்லாருக்கு. கற்பனையை ரசித்தேன்

    //கால மயக்கத்தில் முன்பும் பின்புமாகச் செல்லும் போது கதையைப் படிப்பவர்களுக்கு எது நடந்து முடிந்தது; நடப்பது எது என்று உணர்வதில் ஒரு குழப்பம் ஏற்படுகிறது. //

    ஓ! ஆனால் அப்படித் தெரியவில்லை அண்ணா. நன்றாகவே புரிந்தது.

    பாவம் பாட்டி. உயிருடன் இருக்கும் வரை அவளுக்கு ஹார்லிக்ஸ் ஒவல்,பிஸ்கோத்து எதுவும் கண்ணில் காட்டாமல் இப்போது சாகக் கிடக்கும் நேரத்தில் கண்ணில் காட்டுவது என்பது அந்த உயிருக்குத்தான் தெரியும். ரணம் அதும். அதனால்தான் அதன் அடுத்த வரியில் பாட்டியின் உள்ளில் ஓடும் எண்ணங்கள் அந்தச் சொற்கள் அதைச் சொன்ன விதம் அழகாகச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.

    இப்போது அவள் இறந்தால் பணம். அதற்குத்தான் அவனது பதற்றம்....

    அவர் எழுதிய ஆண்டிலேயே கூட இப்படியானவை நிகழ்ந்திருக்கிறது! அப்ப எதுக்கு அந்தக் காலத்துல இப்படி எல்லாம் இல்லை இந்தக் காலம் கெட்டுப் போயிருக்கு அறம் இல்லைனு நாம் கூப்பாடு போட வேண்டுமோ?
    என்னைப் பொருத்தவரை எல்லாக் காலமும் ஒன்றுதான்.

    கதையை ரசித்து வாசித்தேன்,

    கீதா

    பதிலளிநீக்கு
  13. ஜெகே அண்ணா அன்றெல்லாம் சுட்டி அவ்வப்போது வேலை செய்யாமல் எரர் வந்ததற்குக் காரணம், இன்று இங்கு அந்தச் சுட்டிக்குப் போய் பார்த்தால் புரியும் அண்ணா. எழுத்துகளை நன்றாகப் பெரிதாக்க்கி தளம் சற்று மாறியிருக்குப் பாருங்க....அதுதான் காரணமாக இருந்திருக்கும். இப்ப அங்கு எழுத்துகள் நல்ல பெரிதாக இடைவெளி விட்டு இருக்கின்றன. அன்று சுட்டி சென்ற போதுகூட இப்படி இருக்கவில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
  14. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  15. இன்றைய செய்திகள் அனைத்தும் அருமை. நம்பிக்கை, ஊர் மக்களின் ஒற்றுமை., பெண்கள் கட்டிட கலையிலும் தேர்ந்தவர்கள், மனித நேயம், தந்தையின் விடாமுயற்சி , தன்னம்பிக்கை . அனைவருக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  16. தெளிவத்தை திரு ஜோசஃப் அவர்களை பற்றிய விவரம் ,கதை பகிர்வு
    எல்லாம் அருமை. கதை பகிர்வுக்கு நன்றி.

    //காலையில் எழுந்து ‘கொழுந்து’ பறிக்க செல்பவர்கள் பெண்கள். பறிக்கும் கொழுந்துக்கு ஏற்ப கூலி. உழைக்கும் வரைதான் சம்பளம். உழைக்காத தினங்களில் சம்பளம் இல்லை.//

    தேயிலை தோட்டத்தில் வேலை செய்யும் வயதான தாயின் வாழ்க்கையை கதை சொல்கிறது. வயதான காலத்திலும் தன் உணவுக்கு தானே வேலை செய்து பணம் வந்து கொடுப்பது , அவரின் கடைசி காலம் எல்லாம் படிக்கும் போது மனம் கனத்து போகிறது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!