நெல்லைத் தமிழன்:
யாதும் ஊரேன்றதை தவறாப் புரிஞ்சிக்கிட்டு இந்த லேடீஸ் மாத்திரம் கரப்பான்பூச்சி மாதிரி ரோடுல ஏன் டூவீலர் ஓட்டறாங்க?
# மகளிர் வாகனம் ஓட்டுவது இவ்வளவு விமர்சனத்துக்கு உட்பட வேண்டுமா என்ன ?
& இதற்கு நம் வாசகர்களில் எனக்குத் தெரிந்து டூ வீலர் ஓட்டுகின்ற திருமதி பானுமதி வெங்கடேஸ்வரன் பதில் சொல்லுவது சரி என்று நினைக்கிறேன். (பா வெ மேடம் - கருத்துரைப் பகுதியில் நெ த வை நல்லா கவனிங்க -- நாராயண, நாராயண !)
நல்லா எழுதறவங்க குறைவா எழுதறதுனால நல்லா ரசனையா எழுதறாங்களா இல்லை நல்லா எழுதறவங்க பொதுவா சோம்பேறிகளா? இல்லை எழுதி எழுதி என்னத்தக்கண்டோம்னு சலிச்சுக்கற டைப்பா?
# நன்றாக எழுதுபவர்கள் எழுதியே ஆகவேண்டும் என்ற உந்துதல் வந்தால் மட்டுமே எழுதுகிறார்கள். அவர்களில் சிலர் இனி எழுத ஒன்றும் இல்லை என்று மௌனமாகி விடுவதையும் பார்க்கிறோம்.
& நான் குறைவாக எழுதுவதால், என்னை நீங்க இப்படிப் புகழ்கிறீர்கள்! (நன்றாக எழுதுபவர்கள் !!) நன்றி.
எழுத்தாளர்கள் கலைஞர்கள் ஏன் ரொம்ப சென்சிடிவ்வா இருக்காங்க?
# மாறுபட்ட பல கதாபாத்திரங்களின் மனநிலையோடு தம்மையும் ஒன்றச் செய்து எழுதுவது காரணமாக அவர்கள் மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நபர்களாக இருப்பது புரிந்து கொள்ளக் கூடியதுதான்.
& :
இதன் மொழி பெயர்ப்பு :
"எந்தவொரு துறையிலும் உண்மையான படைப்பாற்றல் கொண்ட மனம் கொண்ட மனிதர்களை இவ்வாறு வரையறுக்கலாம்:
அசாதாரணமான, மனித உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட உணர்திறன் கொண்ட ஒரு மனித உயிரினம்.
அவருக்கு... தொடுதல் ஒரு அடி,
ஒலி என்பது ஒரு சத்தம்,
துரதிர்ஷ்டம் ஒரு சோகம்,
மகிழ்ச்சி ஒரு பரவசம்,
நண்பன் ஒரு காதலன்,
காதலன் ஒரு கடவுள்
தோல்வி என்பது மரணம்."
Pearl S Buck
பானுமதி வெங்கடேஸ்வரன் :
நெல்லையின் கேள்விக் கணைகளோடு என்னுடைய கேள்வியையும் சேர்த்துக் கொள்ளுங்கள், எழுத்தாளர்களுக்கு திடீரென்று ரைட்டர்ஸ் ப்ளாக்(Writers block) வரக்காரணம் என்ன? வியாசருக்கே வந்ததாமே?
# மனித மனத்தில் பல விசித்திரங்கள் இருக்கின்றன. அவற்றில் இதுவும் ஒன்று. எதை எழுதுவது என்று தெரியாத நிலை சில காலத்துக்கு சில எழுத்தாளர்களை ஆக்கிரமித்துக் கொள்கிறது. இது ஏன் என்று விளக்க முடியாத ஒன்று.
நண்பர் அல்லது உறவினர் வீட்டிற்குச் செல்கிறீர்கள். அங்கே பாத்ரூமை பயன்படுத்தி விட்டு குழாயைத் திறந்தால் மூட முடியவில்லை.. இப்படிப்பட்ட சங்கடத்தை சந்தித்திருக்கிறீர்களா? எப்படி சமாளித்தீர்கள்?
# வீட்டு மனிதர்களை அழைத்து சொல்லும் அளவுக்கு சிக்கல்கள் வந்ததுண்டு. குழாயில் தண்ணீர் வராவிட்டால்தான் சங்கடம் - இல்லையா ?
சென்னையில் இருக்கும் பாரீஸ் கார்னருக்கு அந்தப் பெயர் வரக் காரணம் என்ன?
# EID Parry கம்பெனி தலைமை அலுவலகம் அந்த முனையில் இருக்கிறது என்பதால் என்று நான் நினைக்கிறேன்.
& பாரி கம்பெனி முனை - பாரி'ஸ் கார்னர் - பாரி முனை
இண்டர்மிடன்ட் ஃபாஸ்டிங் அனுஷ்டிக்கும் நெ.த. பிரயாணங்களின் பொழுது எப்படி சமாளிக்கிறார்? கொஞ்சம் கேட்டு சொல்லுங்கள்.
நெல்லைத்தமிழன் :
Intermittent fasting நெத செய்வதில்லை. என் பெண் சின்சியரா பண்ணறா. Int fasting என்பது டிசிப்ளின்ட் உணவுமுறை. நேரத்தை இஷ்டப்படி மாற்றமுடியாது. 12-8 வரைதான் சாப்பிடுவது, மற்றநேரம் பட்டினி என பெரும்பாலும் follow பண்ணறா, நான் 10:30-11 சாப்பாடு, 6:30க்குள் சாப்பாடை முடித்துவிடுவேன். இதுவும் ஊரில் இருக்கும்போதுதான். I wish I have food discipline like my daughter and at times like my son.
நான் கண்டதை வாங்கும் பழக்கமுடையவன். இதனால் நொறுக்குத்தீனி அதிகமாயிடுது. அதனால்தான் 8-10 கிமீ நடந்தும் எடை குறைவதில்லை.
ஜெயகுமார் சந்திரசேகரன் :
ராமன் எத்தனை ராமனடி! நரசிம்மர் எத்தனை நரசிம்ஹனடி! கிருஷ்ணன் எத்தனை கிருஷ்ணனடி!
விஷ்ணு மாத்திரம்தான் அவதாரம் எடுத்தார். ஒவ்வொரு அவதாரத்திலும் வித்யாசமாக 9 வகையில் அறியப்படுகிறார்.
சிவனுக்கு அவதாரம் இல்லை. திருவிளையாடல் உண்டு.
ஏன்? எப்படி??
# பக்தர்களுடைய விருப்பத்துக்கு ஏற்ப கடவுள் பற்றிய சிறப்புகள் உண்டாகின்றன.
& நெல்லைத்தமிழன் இதற்கு பதில் சொல்லக்கூடும். கருத்துரையில் என்ன சொல்கிறரர் என்று பார்ப்போம்.
== ===
அப்பாதுரை பக்கம் :
சேக்குபியரின் மேக்பெத் நாடகம் பலருக்கும் நினைவிருக்கும். அதில் வரும் காடோர் (thane of cawdor character) குறிப்புகளை வைத்துக் கொண்டு அசலில் ஸ்காட்லந்தின் காடோர் அரண்மனையைச் சுற்றிப் பார்ப்பவர்கள் நிறைய பேர்.
இந்த வாரச் சுற்றுலாப் பயணிகளில் ஒருவர் அரண்மனையைத் தேடி (சுற்றி) பார்க்கையில், பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய மணமகள் உடையலங்காரத்துடன் ஒரு பெண் சர்வ அலட்சியமாகத் திரிந்து கொண்டிருந்ததைப் பார்த்துத் திடுக்கிட்டார்.
திடுக்கின் காரணம் அந்தப் பெண்ணின் இரண்டு கைகளும் வெட்டப்பட்டு ரத்த ஈரத்துடன் சொட்ட சொட்ட நடந்ததுதான். ஒரு அழுகை கூச்சல் காணோம், மாறாக கிக்கிலிகிலிகிலியென்று சிரித்துக் கொண்டே போனாராம் பெண்மணி. அந்த ஊர் லகலகலகலகா.
நடுங்கிப்போய் விசாரித்ததில் அரண்மனை நிர்வாகிகள் பயணிக்கு விபூதி இட்டு வேப்பிலை அடித்து மோர் கொடுக்காமல் விவரங்களை மட்டும் பிட்டு வைத்தார்களம்.
முதற்கண் பயணி பார்த்தது பேய் என்றாலும் சாதுப் பேய் என்று அடித்துச் சொன்னார்கள். சாதுப் பிசாசாகவும் இருக்கலாம் என்று ஒருவர் சொன்னாராம். பல நூற்றாண்டுகளாகவே திரிந்து வருவதாகவும் நிறைய பேர் கண்ணுக்குப் புலப்படாமல் தானுண்டு தன் முடமுண்டு என்று சிரித்தபடி திரிவதாகவும் சொன்னார்கள். அரண்மனை நிர்வாகம் மேல் கோர்ட் கேஸ் நஷ்ட ஈடு என்று எதுவும் போடாமலிருந்தால் சுவாரசியமான சுவர்ணமுகி கதை சொல்வதாகச் சொன்னார்களாம்.
அதாவது பயணி பார்த்த அந்தப் பெண் ஒரு இளவரசியாம். சற்றே பூசலான இளவரசிக்கு ஒரு லேம்பு சிப்பாய் காதலனாம். பெரும் சமஸ்தான யோகம் விட்டுப் போய்விடக்கூடாது என்பதற்காக அந்த இளவரசியின் தந்தை அவரை பக்கத்து ராஜ்ஜியத்தின் முதிய ராஜாவுக்கு வலுவில் மணம் முடித்தாராம். இணங்கி நடக்காத காரணத்தால் முரா இளவரசியை அரண்மனை உப்பரிகை அறையில் சோறு தண்ணி காட்டாமல் சிறை வைத்தாராம்.
இந்த சிப்பாய் சும்மா இராமல் அரண்மனை உச்சிக்கு ஒரு படிக்கயிறை எறிந்து அதைப் பிடித்து மெள்ள இறங்கி வரும்படி ஒரு ஓலையும் வைத்தானாம்.
எழுதப் படிக்கத் தெரிந்த இளவரசி ஓலையைப் படித்துவிட்டு உடனே கயிறைப் பிடித்து (பட்டினியில் சற்றே இளைத்த காரணத்தால்) சரசரவென இறங்கத் தொடங்கினாராம். இதை சாளரம் வழியாகப் பார்த்த முதிய ராஜா தன் வாளையெடுத்து அந்த பெண்ணின் கைகளை ஒரே வெட்டில் வீழ்த்தினாராம். அலறி வீழ்ந்த இளவரசி லேம்பு சிப்பாய் மேல் விழ இருவரும் இறந்தார்களாம். இளவரசியின் பளு தாளாமல் சிப்பாய் நசுங்கிச் செத்திருக்கலாம் என்று ஒரு கருத்து நிலவுவதாகவும் சொன்னார்கள்.
கதை கேட்ட பயணி அகமகிழ்ந்து கேஸ் போடாவிட்டாலும், தூக்கம் வராமல் சிரமப்பட்டு லன்டனின் கோல்ட்ஸ்மித் பல்கலை மருத்துவ நிலையத்தில் சிகிச்சை பெறுகிறாராம்.
கோல்ட்ஸ்மித் பல்கலை ஆய்வாளர்கள் இது நாள் வரை யாரும் அறியாத விவரம் ஒன்றை நிரூபித்திருக்கிறார்கள். அதாவது, பேய் பிசாசு அந்நியர் (வெளிக்கிரகம்) போன்ற நம்பிக்கையுள்ளவர்கள் பயம் மற்றும் பதற்றம் காரணமாக நன்கு தூங்க முடியாதாம். the journal of sleep researchல் எழுதியிருக்கிறார்கள். அடிச்சக்கரைக் கட்டி, இது தெரியாம போச்சே எனக்கு?!
மிரர் யுகே பத்திரிகை, மார்ச் 15 செய்தி.
- - -
பரம்பரை
அட போங்க சார்.. எங்க நிலமையைப் பாத்தா அந்தக் கண்ணனுக்கே அடுக்காது சார்.. அவன் தொடங்கி வச்ச தொழில்தான் இத்தனைக்கும்!
எப்பேற்பட்ட பரம்பரை சார் எங்களுது! 1840லருந்து எங்க பரம்பரை வரலாறு இருக்கு சார்.. சும்மா நேத்து வந்தவங்க இல்ல நாங்க இந்த தொழிலுக்கு, தெரியுதா?
1840ல நாங்க காவேரி ஓரமா தஞ்சாவூர்லந்து சிதம்பரம் போற வழில தொழில் செஞ்சோம். அப்புறம் நாட்டுக்கோட்டை செட்டியாருங்க, மகாராஷ்டுராலந்து வந்த நாயக்கமாருங்க, சுல்தானுங்க வீட்டுல வேலை செஞ்சோம். பிறகு வெள்ளைக்காரனுங்க வீட்டுல அம்பது அறுபது வருசம் நல்லா வேலை செய்ய முடிஞ்சுது. சொதந்திரம் கிடைச்ச பிறகு எங்க பரம்பரல அங்க இங்க பெயர்ந்தாலும் அதே தொழில் தான். அதிகம் படிப்பில்லாத படிக்க அவசியம் இல்லாத கைய மட்டும் நம்பி தொழில் செஞ்சோம். செல பேர் அரசியல்ல இறங்கினாங்க.. ஒண்ணு ரெண்டு பேர் மந்திரி கூட ஆனாங்க.. ஆனா பரம்பரை தொழில விடாம செஞ்சோம். என்னா தொழிலா?
திருடுறது தாங்க.
மொதல்ல வழிப்பறி செஞ்சோம். பிறகு கன்னம் வச்சோம். பிறகு மிரட்டி விரட்டி பணம் பறிச்சோம். பிறகு முகமூடிக் கொள்ளை.. நாளாக ஆக வீராணம், ரேஷன் லஞ்சம் ஊழல் அது இதுனு பரம்பரயா செழிச்சுட்டுத்தான் வந்திட்டிருந்தோம்.
இப்ப எல்லாம் மாறிடுச்சுங்க.. டிஜிடல்ன்றான் க்ரிப்டோன்றான்.. இப்ப எங்க தொழில்ல டிகிரி படிப்பு இல்லாம இறங்க முடியலிங்க. பிஇ, பிடெக் படிக்க வேண்டியிருக்கு.. சுளுவான திருட்டுத் தொழில்னா எளப்பமா பாக்குறாங்க.. வெளிநாடு ஆன் சைட்டு ஸ்டாக் ஆப்சன் லொட்டு லொசுக்குனு கேக்குறாங்க..
என்னவோ போங்க.. எங்க பரம்பரை தொழில் எஞ்சியிருக்குற நாலஞ்சு பேத்தோட முடிஞ்சிரும் போலருக்கு.. அரசியல்ல போலாம்னா எங்க தொழில் கௌரவம் பாக்க வேண்டியிருக்கு. என்ன செய்யறதுனே தெரியலே. அந்தக் கண்ணன் வழி காட்டுனா உண்டுங்க.
மன்னிச்சுருங்க புலம்பிட்டேன்.
(கான்பூர் ஐஐடி மாணவர்கள் நால்வர் தொழில் நுட்பம் பயன்படுத்தி வங்கிக் கொள்ளையடிக்க முயன்று கைது. இந்தியா டுடே செய்தி - ஜனவரி 2023).
- - - -
வால் கருத்து:
ஐஐடி தேர்வுக்கு படிக்க சேர எல்லாத்துக்கும் பெத்தவங்க நிறைய செலவு செஞ்சிருப்பாங்கல்ல? அதான் பிடெக் படிக்கிறப்பவே சுடெக் பண்ணி பெத்தவங்க கடனை அடைக்கப் பாத்திருக்காங்க.. அப்படியே காகிதப்படிப்போட நிக்காம கைப்பயிற்சியும் ஆச்சு.. பொறுப்பான பசங்க, சும்மா சொல்லக்கூடாது.
= = = = =
இனிய காலை வணக்கம்..... அப்பாதுரை பக்கம் மிகவும் ரசித்தேன். கேள்வி பதில்கள் வழமை போல சிறப்பு.
பதிலளிநீக்குநன்றி, நன்றி.
நீக்குஇந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
பதிலளிநீக்குபிரார்த்திப்போம்..
எல்லாருக்கும் இறைவன்
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
அவ்வாறே வேண்டுவோம்.
நீக்குஇன்றைய கேள்வியும் பதிலும் பதிவு - கிறுகிறு ரகம்...
பதிலளிநீக்குபிறகு வருகின்றேன்..
நன்றி, மீண்டும் வருக.
நீக்குதிரு. அப்பாத்துரை அவர்களது பக்கம் கலக்கல்.. அருமை..
பதிலளிநீக்குநன்றி.
நீக்கு/// கான்பூர் ஐஐடி மாணவர்கள் நால்வர் தொழில் நுட்பம் பயன் படுத்தி வங்கிக் கொள்ளையடிக்க முயன்று கைது. இந்தியா டுடே செய்தி.. ///
பதிலளிநீக்குவாழ்க கல்வியும் தொழில் நுட்பமும்...
படித்தவன் சூது செய்தால் ..
நீக்குயாரும் அந்த மாதிரி போனது போல் தெரிய வில்லையே!...
நீக்கு:((
நீக்குஅடிச்சக்கரைக் கட்டி..
பதிலளிநீக்குஅடிச்ச
கரைக்கட்டி..
அடி
சக்கரைக் கட்டி..
அட
சக்கரைக் கட்டி..
இவற்றில்
எது சரி?..
எனக்குத் தெரிந்ததெல்லாம் 'சக்கரக்கட்டி ராஜாத்தி - என் மனச வெச்சுக்கோ காப்பாத்தி ..
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவணக்கம், வாழ்க வளமுடன்.
நீக்குகேள்வியும், பதில்களும் நன்றாக இருக்கிறது, அப்பாதுரை சார் பக்கம்
பதிலளிநீக்குஅருமை.
நன்றி.
நீக்குசுவாரஸ்யமான பதிவு
பதிலளிநீக்குநன்றி.
நீக்குகேள்வி பதில்கள் அருமை...
பதிலளிநீக்குஅப்பாதுரை ஐயா பக்கம் செம...
நன்றி.
நீக்குஅப்பாதுரை சாரின் மறு பெயர் "அருமை"? அவ்வளவு அருமையாக சொல்ல வந்ததை நகைச்சுவையுடன் தருகிறார். கேள்வி பதில்களுக்கு ஒரு கிரீடம் ஆக இருக்கிறது அவருடைய பக்கம். சிறப்பு.
பதிலளிநீக்குJayakumar
நன்றி.
நீக்குகேள்வி பதில்கள் ரசனை.
பதிலளிநீக்குபேய் கதை சுவாரசியமாக இருந்தது.
நன்றி. :)))
நீக்கு//நன்றாக எழுதுபவர்கள் எழுதியே ஆகவேண்டும் என்ற உந்துதல் வந்தால் மட்டுமே எழுதுகிறார்கள். அவர்களில் சிலர் இனி எழுத ஒன்றும் இல்லை என்று மௌனமாகி விடுவதையும் பார்க்கிறோம்.// கிட்டத்தட்ட இப்போதைய என் மனோநிலையும் இப்படித்தான் இருக்கு. தினம் தினம் நினைச்சுப்பேன். இன்னிக்கு ஒரு பதிவானும் எழுதணும்னு. விஷயமும் இருந்தாலும் மனம் ஒன்றுவதில்லை.
பதிலளிநீக்குஓ. ஏதேனும் எழுதுங்கள்.
நீக்குவிஷ்ணுவின் அவதாரங்கள்/ சிவனின் திருவிளையாலுக்கான காரண காரிய விளக்கம் அந்தப் பதிவிலேயே நான் எழுதி இருந்தேன். வரலையோ? அல்லது யாரும் கவனிக்கலையா?
பதிலளிநீக்குஅப்படியா?
நீக்குதேடினேன். கிடைக்கலை. பத்து நாட்கள் பதிவுகளில் தேடிப் பார்த்தேன். சரியாய்ப் பார்க்கலையோ என்னமோ
நீக்கு! ஜேகே கேள்வி கேட்டிருந்தார். நான் பதில் சொல்லி இருந்தேன்.
கீதாக்கா எழுதியிருந்தாங்க....
நீக்குகீதா
இது போன வாரம் கேள்வியும் பதிலும்.
நீக்குஜெயக்குமார் சந்திரசேகரன்: வடக்கு இந்தியாவில் உள்ள வைணவ கோயில்கள் பெரும்பாலும் கிருஷ்ணன், ராமன், ஆஞ்சநேயர் போன்ற மூலவர்களை கொண்டிருக்கிறதே தவிர நமது தமிழகம் போன்று விஷ்ணுவை மூலவராக கொண்டிருப்பதில்லை, ஏன்?
# யோசிக்க வேண்டிய விஷயம் தான். வடக்கே பத்ரிநாத் தலத்தில் விஷ்ணு தான் மூலவர். வேறு பிரதான விஷ்ணு கோயில்கள் வடக்கே இருக்கிறதா என்று தெரியவில்லை. பூரி ஜெகன்னாதர் கூட பலராமர் சுபத்திரையுடன் இருக்கிற கிருஷ்ணர் என்று தான் நினைக்கிறேன். வடக்கே மக்கள் ராமன் கிருஷ்ணன் போன்ற அவதாரங்களை அதிகம் கொண்டாடி இருப்பதாகத் தெரிகிறது.ஷண் மதங்களை நிறுவிய சங்கரர் தெற்கத்தியவர் என்பதால் வேறு வேறு மூர்த்தங்களை வழிபடும் முறை தெற்கே அதிகம் பரவி இருக்கலாம்.
இந்த வாரா கேள்வி வேறு!
Jayakumar
இப்போ இதை எழுதும்போது தொலைக்காட்சிச் செய்தியில் பார்க்க நேர்ந்தது. செங்கல்பட்டில் ஒரு மாணவன் சரியாப் படிக்கலைனு ஆசிரியர்(பெண்) கண்டித்துள்ளார். அந்தப் பையர் வீட்டில் போய்ச் செல்லப் பெற்றோர் இருவரும் அந்தப் பெண்மணியை (ஆசிரியரை) துரத்தித் துரத்தி அடிக்கிறாங்க. இதை வீடியோவாகச் செய்திச் சானலில் காட்டுகின்றனர். அநேகமா இன்னிக்குப் பூரா இதான் வரும். இது எதிர்காலத்தில் ஆசிரியப் பணி ஏற்க வருப்வர்களை யோசிக்க வைக்கும் இல்லையா? (அடுத்த புதனுக்கான கேள்வினு வைச்சுக்கோங்க)
பதிலளிநீக்குபோய்ச் சொல்ல
நீக்குஇதை வைச்சுக் கூடப் பதிவுகள் எழுதலாம். ஆனால் இதான் திராவிட மாடலோனு ஜந்தேகமா வருது!
நீக்கு:((((
நீக்குகொடுமை.
நீக்குஇப்போ உள்ள பெற்றோர்களுக்கு குழந்தை மீது அக்கறை இல்லை. ஆசிரியருக்கு மாத்திரம் எதற்கு தேவையில்லாத அக்கறை? இப்போதைய காலகட்டத்தில் பாடம் நடத்துவதுடன் தன் கடமையை முடிச்சுக்கணும்
நீக்குஅப்பாதுரை கருத்து! ஆஹா !! வந்துடுச்சு, ..
நீக்குஅப்பாதுரை பக்கம் செம....ரசித்து வாசித்தேன்
பதிலளிநீக்குகீதா
நன்றி.
நீக்குஇந்த லேடீஸ் மாத்திரம் கரப்பான்பூச்சி மாதிரி ரோடுல ஏன் டூவீலர் ஓட்டறாங்க?//
பதிலளிநீக்குகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
நாங்கல்லாம் விர் விர்ருனு ஓட்டுவோமாக்கும்!! ஸ்ரீராம் கிட்ட கேட்டுப் பாருங்க....டப்பா வண்டிய கூட அசத்தலா ஓட்டுவோமாக்கும்....ரெண்டு, நாலு எல்லாம் எப்படி ஓட்டுவோம்னு!!! ஹிஹிஹி
கீதா
சொல்லுங்க - நெ த வுக்கு !!
நீக்குஅப்பாதுரை ஜி, பல்கொட்டி கூட உங்களை தூங்கவிடாம பண்ணிருச்சா என்ன!!!!!! அது ரொம்ப ஜாலி ஜிம்கானாவாச்சே!!
பதிலளிநீக்குகீதா
:)))
நீக்குமிக நன்றி.
பதிலளிநீக்குஎடப்பாடி.. அதாவது யப்பாடி.. ஒரு வழியா த சு மூ தொ.
இனி கமெண்டலாம்.
வாழ்க, வாழ்க !!
நீக்குஅப்பாதுரை ரசிக்கும்படி எழுதியிருக்கார்..ஒவ்வொரு புதனும் அவரை இழுத்துவந்துடுங்க
பதிலளிநீக்குஅப்படியே செய்வோம்!
நீக்குஇளவரசிப்பேய் சிரித்த காரணம் என்னவாக இருக்கும்? திருமணம் பண்ணி லேம்பு சிப்பாயை சாவடிப்பதற்குப் பதிலாக திருமணத்துக்கு முன்பே சாவடிச்சுட்டேன் என்ற எக்காளமா?
பதிலளிநீக்குயதாஸ்தானம் திரும்பியாச்சா!!! இல்லை வந்துக்கிட்டிருக்கீங்களா!
நீக்குகீதா
அப்படி சாவடிச்சிருந்தா லேம்பு சிப்பாய் பேய் வந்திருக்கணுமே!!
நீக்குகீதா
அப்பவே சொல்ல நினைச்சு விட்டுப் போயிட்டேன்...
பதிலளிநீக்குஇளவரசி பேய் மட்டும் உலாத்துது ஏன் லேம்பு சிப்பாய் பேய் உலாத்தலை....மனுஷனா இருக்கறப்பதான் நாம கண்ணாலம் கட்டிக்கல....இப்பவாச்சும் பேயா வாழ்வோம்னு டயலாக் விட்டு ஏன் வரலையோ....
நான் நினைச்சேன் mo-cap and 3D holograph பண்ணி பேய் உலாத்த விட்டிருப்பாங்களோன்னு எல்லாம் கூட்டம் கூட்டத்தான்....
கீதா
நல்ல கேள்வி!
நீக்கு