வெள்ளி, 24 மார்ச், 2023

வெள்ளி வீடியோ : நடுவீதியில் நடப்பேன் மனம் வாடிப்போய் இசை படிப்பேன்

இன்றைய தனிப்பாடல் சூலமங்கலம் சகோதரிகள்  பாடிய பாடல் ஒன்று.

கலைவாணன் எழுதிய பாடலுக்கு குன்னக்குடி வைத்தியநாதன் இசை.

இந்தப் பாடல்தான் பழனி அருள்மிகு பழனி ஆண்டவர் கல்லூரி பிரேயர் பாடலாம்.


இறைவனுக்கே நீ இறைவனப்பா 
எனக்கருள வேண்டும் பழனியப்பா - அப்பா. (இறைவனுக்கே ).   

குறைவில்லா வாழ்வு தரும் குமரனப்பா 
ஈசனுக்கு நீ தகப்பன் சாமியப்பா  
அம்மையப்பா பழனியப்பா. (இறைவனுக்கே).   

வா என்று அழைக்குமுன்னே வருகை தரும் வரதனப்பா   
தா என்று கேட்குமுன்னே வரம் தரும் குமரனப்பா  
கூவுகின்ற சேவல் கொடி தாங்கி நிற்கும் கந்தனப்பா  
குன்றுதோறும் ஆடுகின்ற சிங்கார வேலனப்பா 
அம்மையப்பா பழனியப்பா. 



========================================================================

யூகி சேதுவை அறிந்திருப்பீர்கள்.  நடிகராக, நையாண்டி தர்பார் நடத்திய விஜய் டீவி நிகழ்ச்சிக்காரராக அறிந்திருப்பீர்கள்.  எனக்கு அவர் முதலில் அறிமுகமானது அவர் கதாநாயகனாக நடித்து வெளியான படமொன்றின் பாடல் கேஸட்டின் மூலம்!

1993ல் வெளியான படம்.  இயக்கமும் யூகி சேதுதான்.  ஜோடியாக ரம்யா கிருஷ்ணன்.    அதில் டாப் ஸாங் தலைவர் பாடியது.  "மணித்தூறல் போடும்" பாடல்.  யூகி சேது இயக்கிய இரண்டாவது படம் இது.  முதல் படம் 'கவிதை பாட நேரம் இல்லை'.

வாலியின் பாடல்களுக்கு இசை வித்யாசாகர்.

இந்தப் படம் பற்றியே நிறைய பேர் அறிந்திருக்க மாட்டீர்கள்.  எனவே அநேகமாக பாடலும் இந்தப் பாடலும் கேட்டிருக்க மாட்டீர்கள்.  தயவு செய்து கேளுங்கள்.  குறிப்பாக சரணங்களில் பாலு இழைந்து, இழைத்திருப்பார்.

சில வருடங்களுக்கு முன்னால் கேட்டு ரசிக்க தேடியபோது ஒழுங்கான பாடல் கிடைக்கவில்லை.  இப்போது நல்ல தரத்தில் அப்லோட் செய்திருக்கிறார்கள்.  அந்த ஆரம்ப இசையையும் ரசித்துக் கேளுங்கள்.

நாயகன் அனாதை என்று தெரிகிறது.  அனாதை என்று யார்யாரோ அழைக்கும்போது குமுறும் மனம் தன் சோகத்தை பாடலைப் பாடியபடி நடக்கிறது.  இயற்கையிடம் முறையிடுகிறார், உரையாடுகிறார் பாடல் மூலம்.

SPB யின் மிகச் சிறந்த பாடல்களில் ஒன்று.  நான் மிக விரும்பிக் கேட்கும் பாடல்களில் ஒன்று.

மணி தூறல் போடும் மழைக்கால மேகக் கூட்டம் 
பனிக்காற்றில் ஆடும் பல ஜாதி பூக்கள் தோட்டம் 
மழையின் தந்தை யாரு மலரின் தந்தை யாரு 
மழையின் தந்தை யாரு மலரின் தந்தை யாரு 
மண்மீது யாரும் கேட்டதில்லையே [மணித்தூறல்]

யாரெதற்கு மூலம் என்று யாரும் சொல்லத்தான் சாத்தியமோ 
தேனிருக்கும் விருட்சமெல்லாம் தேனைக் கண்களால் பார்த்திடுமோ 
ஆயிரம் எழில் மொழி நாளும் காட்டிடும் 
யார் நடும் விதை இதை யாரைக் கேட்பது 
ஒரு தாய் என்னை சுமந்தாள் அவள் 
தந்தை பேர் சொல்ல மறந்தாள் 
இது என் தவறா குளிர் காற்றே கூறு  [மணித்தூறல்]


மாளிகையோ மண்குடிலோ ரெண்டும் சொந்தம்தான் திங்களுக்கு
பூக்கடையோ சாக்கடையோ பேதமில்லையே தென்றலுக்கு 
நானதன் இனம் என நாளும் வாழ்கிறேன் 
காற்றென தினம் தினம் கானம் சொல்கிறேன் 
நடுவீதியில் நடப்பேன் மனம் 
வாடிப்போய் இசை படிப்பேன் 
மனம்போல் பிழைக்கும் ஒரு ஜீவன் நான்தான் 

35 கருத்துகள்:

  1. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  2. முதல் பாடல் அருமையான பாடல். அந்த காணொளி முடியும் வரை பாடல் திரும்ப திரும்ப வருகிறது.

    அடுத்தபாடல் இனிமையாக இருக்கிறது கேட்டதே இல்லை இப்போதுதான் கேட்டேன். மாதங்கள் 7 படம் கேள்வி படவே இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கணினியில் ஸ்பீக்கர் இல்லாததால் சரியாக கேட்க முடியவில்லை.  மொபைலில் பாடல் வருகிறதா, அந்தப் பாடல்தானா என்று சோதித்து லிங்க்கை இணைத்து விடுகிறேன்.  இரண்டாவது பாடல் அருமையான பாடல்.

      நீக்கு
  3. முதல் பாடல் உலகறிந்த விடயம்.

    //கவிதை பாட நேரம் இல்லை'// திரைப்படம் தெரியும் பாடல் கேட்ட ஞாபகமும் சற்று வருகிறது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதை பாட நேரமில்லை என்பது அவர் இயக்கிய முதல் படம்.  இந்தப் பாடல் இடம்பெற்றப்படம் மாதங்கள் 7

      நீக்கு
    2. //கவிதை பாட நேரம் இல்லை'// திரைப்படம் ஞாபகம் இருக்கிறது ஜி

      நீக்கு
  4. இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  5. முதல் பாடல் இனிமையான பாடல்..

    கூடுதல் செய்தி புதிது..

    இரண்டாவதான பாடல் கேள்விப்பட்டதே இல்லை..

    பதிலளிநீக்கு
  6. இன்றைக்கு
    ஸ்ரீ டி. எம்.எஸ். அவர்களது பிறந்த நாள்..

    பதிலளிநீக்கு
  7. சீர்காழி ஸ்ரீ கோவிந்தராஜன்
    அவர்களது நினைவு நாளும் இன்றே..

    பதிலளிநீக்கு
  8. கொடைக்கானல் பண்பலையில் சிறப்பு நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கின்றது..

    முருகா.. முருகா..

    பதிலளிநீக்கு
  9. இரண்டாவது பாடல் கேட்க நன்றாக இருக்கிறது

    முதல் பாடல் சூப்பர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நெல்லை.  சென்ற வாரம் வெள்ளி உங்களைக் காணோம்!

      நீக்கு
  10. /// இந்தப் பாடல் தான் பழனி அருள்மிகு பழனி ஆண்டவர் கல்லூரி பிரேயர் பாடலாம்..///

    தமிழகத்தின் எல்லாத் தரப்பினரும் இதற்கு ஒத்துக் கொண்டார்களாமா?...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கல்லூரியின் பெயரிலேயே அவர் இருக்கும்போது யார் என்ன சொல்ல முடியும்?

      நீக்கு
  11. முதல் பாடல் நிறைய கேட்டிருக்கிறேன் அருமையான பாடல், ஸ்ரீராம்...

    இரண்டாவது பாடல் படம் எதுவும் கேட்டதில்லை. யூகி சேது தெரியுமே...நீங்கள் சொன்ன விஷயங்களில் அவர் படமும் இயக்கியிருக்க்கிறார் என்பது புதிய செய்தி.

    அவர் பேச்சு புரியவே புரியாது எனக்கு...ரொம்ப வேகமாகப் பேசுவார் .

    கீதா

    பதிலளிநீக்கு
  12. ரெண்டாவது பாடல் ரொம்ப வித்தியாசமான இசை. ஆரம்ப இசையும் வித்தியாசம். ரொம்ப நல்லாருக்கு....ஆனால் இடையில் கரகரப்ரியா வோடு கொண்டு வருவது ரொம்ப வித்தியாசமாக இருக்கு....எஸ்பிபி சரணம் பாடுகிறார் இடையில் கிம்மிக்ஸ் இரண்டாவது சரணத்தில்...ரொம்ப மென்மையான இசை. ரசித்துக் கேட்டேன் ஸ்ரீராம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாடலை நான் மிக விரும்பிக் கேட்பேன். தலைவரின் குரல் குழைவுக்கும்.. அது கொணரும் மெல்லிய சோகத்துக்கும்..

      நீக்கு
  13. வேறு ஏதோ ஒரு பாடலை நினைவுபடுத்துது ஆனால் நமக்குத்தான் டக்குனு சொல்ல வராதே!!..

    கீதா

    பதிலளிநீக்கு
  14. வெள்ளிநாளில் இருபாடல்கள். அருமை.
    முதல்பாடல் கேட்டிருக்கிறேன்.

    இரண்டாவது இனிமை இப்பொழுதுதான் கேட்கிறேன் அருமையாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  15. முதல் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். இரண்டாவது பாடல் கேட்ட நினைவே இல்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டாவது பாடல் பெரும்பாலும் கேட்டிருக்க வாய்ப்பிருந்திருக்காது. ஆனால் அருமையான பாடல்.

      நீக்கு
  16. கேட்டால் நன்றாக இருக்கிறது இரண்டாவது பாடல்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதேதான்.  பாடலின் தீம், அதற்குத் தகுந்த எஸ் பி பி யின் குரல் ஜாலம்..

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!