சனி, 18 மார்ச், 2023

நியாயமில்லை எனில் பாசமில்லை எனில் காசு இல்லை.. மற்றும் நான் படிச்ச கதை

 


உங்கள் மகிழ்ச்சியைப் பார்ப்பதிலேயே எனக்கு ஆசை... வைரத்தின் மீது அல்ல..


==============================================================================================

மொழி...  தமிழ் மொழி...

====================================================================================================

நதிநீரில் மின்சாரம் 


============================================================================================================

மகள்களுக்காக மறுமணம் 


=============================================================================================================

நியாயமில்லை எனில் பாசமில்லை எனில் காசு இல்லை..


=============================================================================================
 ==================================================================================================================================================================================================

நாட்டார் கதைகள் (JKC)

 

முன்னுரை. 

கொட்டாரத்தில் சங்குண்ணியின் ஐதீக மாலையில் இருந்து சில கதைகள்  தமிழில் மொழிபெயர்க்கப் பெற்று செவ்வாய் தோறும் பி யில் வெளிவந்தது  உங்களுக்குத் தெரியும். வரவேற்பும் கிடைத்தது. நன்றி.

அதே போன்று தமிழில் நாட்டார் கதைகள் என்று சில கதைகள் இருக்கக் கண்டேன். அவற்றில் ஓன்றாகஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்என்ற தொகுப்பு நூல், வலையில் கிடைத்தது. ஏட்டில் இல்லாத கதைகளை ஏட்டில் அச்சடித்து நூலாக நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் 1999 இல் வெளியிட்டுள்ளதை ஏட்டில் அல்லாமல்  PDF கோப்பாக வலையில் இருந்து கணினியில் தரவிறக்கம் செய்தேன்.

அக்கதைகளில்  சிலவற்றை பி ஆசிரியர்கள் பி யில் தொடராக பிரசுரிக்க அனுமதிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் ஒரு கதையை மட்டும் தற்போது தருகிறேன்.

ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்

தொகுத்தவர் : புலவர் தா கோவேந்தன்.

பதிப்பகத்தாரின் பதிப்புரையில் இருந்து :

மகாபாரதக் கதைகளை ஏட்டில் படித்தவர்கள் பலர் ஆகும். அக்கதையை ஏட்டில் படிக்காதவர்களிடையே பல வேறு பட்ட கதைகள் வழக்கில் உள்ளன. அவை ஏட்டில் இடம் பெறாத நாட்டுப்புறக் கதைகள். அவை செவி வழிக் கதைகளாக இருந்தாலும் நன்மை பயப்பனவே தவிர தீமை விளைவிப்பன அல்ல. “

இவ்வாறு  கூறினாலும் தொகுப்பில் உள்ள சில கதைகளை நாம் சில மகாபாரத நூற்களில் வாசித்தது  உண்டு. ஆசிரியரும்  சில கதைகளின் ஊடாக வில்லிப்புத்தூரார் பாகவதத்தையும் மேற்கோள் காட்டுகிறார். ஆக தலைப்பு வித்தியாசம் ஆனாலும் எல்லாக் கதைக்களும் ஏட்டில் இல்லாதவை என்று சொல்ல முடியாது.

ஆகவே இதுவரையிலும் நான்,  எனக்குத் தெரியாத கதைகள்,  சிலவற்றை மட்டும் தொடராக  எழுதலாம் என்று உத்தேசிக்கிறேன். பதிப்பாசிரியர்களின் அனுமதி தேவை.

கண்ணனின் மனத்தூய்மை.

பாரதப் போர் முடிந்தது. வீமன் கதையினால் (கதாயுதம்) அடியுண்டு துரியோதனன் குற்றுயிராய் கிடந்தான். அகிலமெல்லாம் ஆணை செலுத்திய அரசன் அனாதையாகிக் கிடக்கக் கண்ட அஸ்வத்தாமன் மனம் வருந்தினான்.

உன்னை அழித்தவர்களை இன்று இரவுக்குள் வேரோடு அழித்து அவர்கள் தலையை உன் காலடியில் வைக்கிறேன்என்று சபதம் செய்தான் அஸ்வத்தாமன்.

இதனை அறிந்த கண்ணன் பாசறையில் இருந்த பாண்டவர்களை வேறு இடத்திற்கு அழைத்துச் சென்று விட்டார்.

பாண்டவர்களைக் கொல்ல பாசறையில் புகுந்த அஸ்வத்தாமன் பாஞ்சாலியின் புதல்வர்களை பாண்டவர்கள் என்று கருதி அவர்களின் தலையை அறுத்து விட்டான்.

போரில் வெற்றி பெற்றும் தங்களுக்குப் பின் நாட்டை ஆள்வதற்கு இருந்த வாரிசுகளும் இறந்து விட்டனரே என்று தருமர் கவலையுற்றார்.

அபிமன்யுவின் மனைவி உத்தரை கருவுற்றிருந்தாள். அவள் நல்ல முறையில் குழந்தை பெற்றால் வாரிசு இல்லை என்ற கவலை தீரும் என் நம்பினார் தருமர்.

 

இடிஇடித்திடு சிகரிகள் ஆம் என

எரிமருச்சுதன் முதல் இகலோர் தலை

துடிதுடித்திட அவர் அவர் சேனைகள்

துனிபடப் பொருது எழுபுவி நீ பெற

விடிவதற்கு முன் வருகுவன் யான்.”

 

என்ற சபதப்படி உத்தரையின் கருவையும் அழிப்பதற்கு பிரம்மசிரசு என்ற அம்பை ஏவினார் அசுவத்தாமன்.

கண்ணன் கருணையால் உத்தரையின் கரு காக்கப்பட்டது. ஆயினும் அந்த அம்பு கருவில் இருந்த சிசுவைக் கருகச் செய்து விட்டது.

உரிய காலத்தில் உத்தரை குழந்தை பெற்றாள். குழந்தை இறந்தே பிறந்தது. கரிக்கட்டை தான் பிறந்தது.

உத்தரையின் கருவும் அழிந்தது கண்ட பாண்டவர் அழுதனர். குழந்தை உயிர் பெற்று விடும் என்று கண்ணன் ஆறுதல் கூறினார்.

கரிக்கட்டை உயிர் பெறப்போகும் அதிசயத்தைக் காண பராசர், வியாசர் முதலிய முனிவர்களும் மற்றும் பலரும் திரண்டனர்.

பிரம்மச்சரிய விரதத்தைச் சிறிதும் நழுவாமல் கடைப் பிடித்தவர் யாராவது தொட்டால் கரிக்கட்டை உயிர் பெறும்என்று கண்ணன் கூறினார்.

பிரம்மச்சரிய விரதத்தில் தங்களை விஞ்சியவர் யாரும் இருக்க இயலாது என்று இறுமாந்திருந்த முனிவர் பலரும் ஒவ்வொருவராக கரிக்கட்டையைத் தொட்டனர். ஆனல் குழந்தை உயிர் பெறவில்லை

கண்ணன் கூறியது விளையாட்டு பேச்சே.  இவ்வளவு பெரிய மகாத்மாக்கள் தொட்டும் குழந்தை உயிர் பெறவில்லையேஎன்று பலரும் எண்ணினர்.

நான் இந்தக் கரிக்கட்டையைத் தொடுகிறேன். ஒரு வேளை குழந்தை உயிர் பெற்றாலும் பெறும்என்று கண்ணன் கூறினார்

கண்ணன் பேச்சைக் கேட்ட முனிவர்கள் அனைவரும் சிரித்தனர்.

கண்ணா! நாங்கள் நெடும்காலம் காட்டிலே தவம் செய்தவர்கள். பந்த பாசங்களை விட்டவர்கள். பிரம்மச்சரியத்தை உயிரினும் மேலாக மதித்தவர்கள். நாங்கள் தொட்டே உயிர் வராதபோது நீ தொட்டால் உயிர் பெறுமா?”

உனக்கு எட்டு பட்டத்து அரசிகள். நீ பதினாறாயிரம் ஆயர் மங்கையருடன் ராசக் கிரீடை செய்தவன். உன் வாழ்வில் ஒழுக்கம் சிறிதேனும் கடை பிடித்தது உண்டா?” என்று கூறி கண்ணனை ஏளனம் செய்தனர்.


படம் உதவி இணையம்

நான் தொடுவதால் ஒருவருக்கும் நட்டம் இல்லையேஇவ்வாறு கூறிக்கொண்டே கண்ணன் கரிக்கட்டையை தொட்டார்.

என்ன வியப்பு! கரிக்கட்டை குழந்தையாகி அழுதது. இதைக் கண்ட பாண்டவர் பரவசமடைந்து பரந்தாமனைப் பாராட்டினர். முனிவர்கள் நாணத்தால் தலை குனிந்தனர்.

முனிவர்களின் ஐயத்தைப் போக்குவதற்காக கண்ணன்முனி புங்கவர்களே நீங்கள் தவத்தால் சிறந்தவர்கள் தாம். பிரம்மச்சரியத்தைக் கடுமையாகக் கடைபிடித்ததும் உண்மையே. “

ஆனால் உள்மனம் சில சமயம் காமத்தால் பேதலித்தது. உள்ளத்தால் பொய்த்து ஒழுகினீர்கள். நான் பல்லாயிரம் ஆயர் மங்கையரோடு உறவாடியது உண்மை. உலகோர் கண்ணுக்கு நான் போக புருடனாகத் தோன்றினாலும் என் மனம் மாசற்று விளங்கியது. இக்கரிக்கட்டை உயிர்  பெற்றதே அதற்கு சான்று. “ என்று விளக்கினார் கண்ணன்.

நான் பகவத் கீதையில் ஸ்திதப் பிர்திக்ஞன். உலக போகத்தில் ஈடுபட நேர்ந்தாலும் தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாமல் இருப்பது போல் பற்றற்று பந்தப்படாமல் வாழ வேண்டும் என்று  சொன்னது மட்டுமல்ல சொன்னபடி வாழ்ந்தேன்.” என்று கண்ணன் திருவாய் மலர்ந்தமை கேட்ட அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர்.

32 கருத்துகள்:

 1. உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
  உள்ளத்துள் எல்லாம் உளன்.

  வாழ்க தமிழ்..

  பதிலளிநீக்கு
 2. இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
  பிரார்த்திப்போம்..

  எல்லாருக்கும் இறைவன்
  நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

  நலம் வாழ்க..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்க.. வாங்க துரை செல்வராஜூ அண்ணா... பிரார்த்திப்போம்.

   நீக்கு
 3. கண்ணன் ஸ்திதப் பிரதிக்ஞன். உலகின் போகத்தில் ஈடுபட 
  நேர்ந்தாலும் தாமரை 
  இலையில் தண்ணீர்  போல
  பற்றற்றவன்.. எதிலும் பந்தப்படாதவன்..

  கோபியர் ஒரு சமயம் யமுனைத்துறையில் எதிர்பாராத வெள்ளத்தால் திகைத்து நின்றபோது அங்கு வந்த வியாசர் இப்படித்தான் சொல்கின்றார்..

  கோபியரிடம் வெண்ணெய் வாங்கி உண்ட வியாசர் நான் இன்று உபவாசம் இருப்பது உண்மையானால் கண்ணன் நித்திய பிரம்மசாரி என்பது உன்மையானால் யமுனையின் வெள்ளம் வடியட்டும் என்று!..

  மறு பேச்சின்றி யமுனையின் வெள்ளம் வடிகின்றது..

  அதன்பின் வியாசருடைய விளக்கம் அருமையானது..

  ஹரே கிருஷ்ண..
  ஹரே கிருஷ்ண..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதை வேறொரு ரூபத்தில் படித்திருக்கிறேன்.  முனிவருக்கோ யாருக்கோ உணவு கொண்டு சென்ற திரௌபதியிடம் அல்லது வேறொரு பெண்மணியிடம் இந்த முனையிலும் அந்த முனையிலும் இப்படிப்பட்ட முரண்பட்ட வாசங்களைக் கூறி ஆற்றை வழிவிடச்செய்ததாக...

   நீக்கு
 4. நல்லாசிரியர் விருது பெற்ற குமரேஸ்வரி பாராட்டுக்குரியவர். செய்தியும், புகைப்படமும் நன்றாக உள்ளன.

  என்னது எடியூரப்பா விபத்தில் இருந்து தப்பித்தது நல்ல செய்தியா? 
  அது போன்று சொத்துக்களை அரசு பிடுங்கும் முன்னரே அரசுக்குத் தானமாக கொடுப்பது நல்ல செய்தியா எனறு கேட்கத்  தோன்றுகிறது. 

  கட்டுரைகளில் உள்ள தமிழ் எண்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை. AI மொழிபெயர்ப்பா? 


  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நலலவரோ கெட்டவரோ தன்னை நம்பி ஹெலிகாப்டரில் ஏறிவிட்ட அந்த வி ஐ பி யை ந்த சேதாரமுமின்றி தரையில் சேர்த்த விமானி பாராட்டுக்குரியவர்.  அதுதான் நல்ல செய்தி.

   தினமலர் பக்கத்திலேயே அப்படித்தான் வருகிறது.  முன்னரே சொன்னபடி இப்போதெல்லாம் அங்கிருந்து காபி பேஸ்ட் செய்ய முடியாததால் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து இணைத்து விடுகிறேன்.  எனவே லிங்க் தரவேண்டிய அவசியமும் இல்லாது போய்விடுகிறது.

   நீக்கு
  2. ஏட்டில் இல்லாத கதைகள் என்பது நீங்களாக கற்பனை பண்ணிக் கொள்வது
   தான். இணையமும் தற்கால ஏடே. அதனால் ஏ.இ.கதைகள் என்ற வழக்குச் சொல் ஒழிந்தது. .:))

   நீக்கு
  3. (மேலே சொன்னது) ஜெஸி ஸாருக்காக

   நீக்கு
  4. அது என்னவோ சரிதான்!  ஆனால் அந்தப் புத்தகத்தின் தலைப்பு அப்படித்தானே சொல்கிறது!

   நீக்கு
  5. என்னது எடியூரப்பா விபத்தில் இருந்து தப்பித்தது நல்ல செய்தியா? //

   ஜெகே அண்ணா, எடியூரப்பா மட்டுமா போவார், அந்த விமானியும்தானே....பாவம் அவர் எதற்கு மரணம் அடைய வேண்டும்?! ஸ்ரீராமின் கருத்தும் சேர்த்து...

   கீதா

   நீக்கு
  6. நான் கூறவந்தது "தப்பித்தார்" என்பது செய்தி மாத்திரமே. நல்லதோ கெட்டதோ இல்லை. பாசிடிவில் உட்படாது. 

   Jayakumar

   நீக்கு
  7. //ஏட்டில் இல்லாதவை என்று சொல்ல முடியாது.

   ஆகவே இதுவரையிலும் நான், எனக்குத் தெரியாத கதைகள், சிலவற்றை மட்டும் தொடராக எழுதலாம் என்று உத்தேசிக்கிறேன். பதிப்பாசிரியர்களின் அனுமதி தேவை.//

   நீக்கு
 5. ஏட்டில் இல்லாத மகாபாரதக்கதைகள் என்னிடமும் PDF ரூபத்தில் உண்டு.  படித்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 6. வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள்.

  இன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை.
  இன்றைய கதை பகிர்வும் அருமை. இந்தக்கதை படித்துள்ளேன். இந்த மஹாபாரத தொகுப்பில் பல கதைகளையும் வாசித்துள்ளேன். உலகில் நடப்பவை அனைத்தும் கிருஷ்ணனின் செயல். நம்மை ஒவ்வொரு நொடியும் ஆட்டுவிப்பவன் அவனல்லவா? பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கமலா அக்கா... வணக்கம். சர்வம் கிருஷ்ணார்ப்பணநமஸ்து

   நீக்கு
 7. குமரேஸ்வரி அவர்களுக்கு பாராட்டுகள்... வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 8. அல்ப மனித உயிர்களிடம் இருக்கும் ஆசாபாசங்களின் வழியே கற்பிதம் பண்ணிக் கொள்வது மட்டுமில்லை அந்தக் கசடுகளை தன்னைப் போலவும் தான் என்று எண்ணி இறைவன் மீதும் ஏற்றிச் சொன்னால் எப்படி?
  அப்படியே நடந்தது என்று எடுத்துக் கொள்ளாமல் சில நீதி போதனைகளுக்காக சொல்லப்பட்டவைகளாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
  இதையும் உபதேசம் என்று கொள்வார் உண்டு. உபதேசம் இல்லை. வாசிப்பதின் தெளிவு சம்பந்தப்பட்டது இது.

  பதிலளிநீக்கு
 9. நல்லாசிரியை விருது பெற்ற ஆசிரியை குமரேஸ்வரிக்கு மனமார்ந்த பாராட்டுகள் வாழ்த்துகள்! அவரைப் பற்றிய செய்தியும், அவர் சொல்லியிருப்பதும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

  கீதா

  பதிலளிநீக்கு
 10. சாதுரியமாக இயக்கிய பைலட்டை வாழ்த்துவோம்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கரபுகி பகுதியில் பறவைகளிடமிருந்து பயிரைக் காப்பாற்ற ப்ளாஸ்டிக் பைகள் கட்டப்பட்டிருப்பதாகச் சொல்லப்படும் இதே கர்நாடகாவில் மைசூருக்குப் போகும் வழியில் நதிக்கரையில் உள்ள வயலகள் பகுதியில் உள்ள பறவைகள் குவியும் கிராமப்புறத்தில் பறவைகள் சரணாலயமாக அறிவித்து அவை கூடு கட்டவும் தங்கவும் அந்த விவசாயிகளை ஊக்குவித்து பயிர்கள் நஷ்டமடைவதற்கு அரசு நஷ்ட ஈடும் வழங்குகிறது. கிராமத்தார் அப்பகுதியை பறவைகளின் சரணாலயத்தை தங்கள் பாரம்பரிய அடையாளமாகக் காத்து வருகின்றனர்.

   கீதா

   நீக்கு
 11. இந்த மஹாபரதக் கதை அறிந்த கதை.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏட்டின் வழியா, கேட்டு அறிந்ததா அல்லது இணையத்தின் மூலமா, சகோ?
   இங்கு பதிந்திருக்கும் கதைக்கும் நீங்கள் அறிந்ததிற்கும் ஏதாவது வித்தியாசம் இருந்திருக்குமே?
   ஹி..ஹி..

   நீக்கு
  2. டிட் பிட்டாக எதிலோ எங்கோ வாசித்திருக்கிறேன். என் நெருங்கிய உறவினர் சொல்லக் கேட்டும் இருக்கிறேன். இதேதான்.

   கீதா

   நீக்கு
 12. ஆசிரியைக்கு பாராட்டுகள்.

  உதவிய கரங்களுக்கு. நன்றி.

  மகாபாரதக் கதை பகிர்வு நன்று.

  பதிலளிநீக்கு
 13. ஆசிரியை குமரேஸ்வரி அவர்களுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துகள்
  மூதாட்டிக்கு உதவியருக்கு வாழ்த்துகள்.
  கதை பகிர்வு அருமை.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 14. ஏட்டில் வராத கதைகள் உட்பட எல்லாமே படித்தவைதான். அதனால் என்ன? நல்ல விஷயங்களை மீண்டும் மீண்டும் படிப்பதில் தவறில்லையே.

  பதிலளிநீக்கு
 15. குமரேஸ்வரி நிஜமாகவே நல்லாசிரியர்தான். வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!