ஞாயிறு, 14 ஜனவரி, 2024

நான் தரிசனம் செய்த கோயில்கள் – ஐந்து துவாரகைகள் யாத்திரை – பகுதி 02: நெல்லைத்தமிழன்

 

பஞ்சத் துவாரகா யாத்திரையின் முகவுரை இந்த வாரமும் தொடர்கிறது.

8 நாட்களுக்கு மேற்பட்ட யாத்திரை என்று வந்துவிட்டாலே, யாத்திரைக்கு முன்னால் ஒரு மீட்டிங் இருக்கும். கலந்துகொள்ள இயலாதவர்களுக்கு குறிப்புகளும் வந்துவிடும். எவ்வளவு செட் டிரெஸ் தேவையாயிருக்கும்,, எந்த இடங்களில் தோய்க்கவும், சலவை செய்பவர் மூலமாக அயர்ன் செய்துகொள்ளமுடியும், என்ன என்ன எடுத்துவரவேண்டும் என்பதையெல்லாம்  யாத்திரை நடத்துபவர் சொல்லிவிடுவார். அப்போது நமக்குக் கேட்கவேண்டிய கேள்விகள் நிறைய இருக்காது.

அதுபோல வட இந்திய பேருந்துப் பயணங்களில் (அவருடைய எல்லா யாத்திரைகளிலும், 4 நாட்களுக்கு மேற்பட்டு இருந்து, பேருந்துப் பயணமாக இருந்தால்), ஒவ்வொரு 100-200 கிமீக்கு ஒரு முறை அவரவர் சீட்டிலிருந்து பின்புற சீட்டிற்கு இடம் மாறவேண்டும். பயணம் ஆரம்பிக்கும்போது, பணம் கட்டிய வரிசையின்படி இடத்தை ஒதுக்கிவிடுவார். அதன் பிறகு அவர் சொல்லும் நேரத்தில் நாம் அமர்ந்திருக்கும் சீட்டிற்குப் பின் உள்ள சீட்டிற்கு இடம் மாற வேண்டும்.  பொதுவா லக்கேஜுகள் பஸ்ஸின் உட்புறம் வைத்துக்கொள்ள மாட்டோம். பேருந்தின் உட்புறம், தட்டு/டம்ளர் மற்றும் அவசியமான மருந்துகள், தண்ணீர் பாட்டில் மாத்திரம்தான் வைத்துக்கொள்வோம். சட் என்று ஏதாவது இடத்தில் நிறுத்தில் காபி/டீ தந்தாலோ இல்லை உணவு கொடுத்தாலோ, தட்டு டம்ளர் வேண்டும் என்பதால்.

ஒவ்வொரு நாளும் பயண ஆரம்பத்தில் பேருந்தில் அமர்ந்த பிறகு செல்லும் இடத்தைப் பற்றியும், அன்றைய திட்டத்தைப் பற்றியும் சொல்லிவிடுவார். இரவிலும் மறுநாள் திட்டத்தைப் பற்றியும் என்ன என்ன செய்யவேண்டும் என்று விளக்கமாகச் சொல்லிவிடுவதால் நமக்குப் பிரச்சனை இருக்காது.



பஞ்சத் துவாரகா என்பது கங்க்ரோலி துவாரகையுடன் முடிந்துவிடுகிறது. ஆனால் யாத்திரை, அதற்குப் பிறகு, புஷ்கர் மற்றும் பகவான் கிருஷ்ணர் தொடர்புடைய இடங்களுக்குச் செல்கிறது. அதன்படி, கண்ணன் வளர்ந்த கோகுலம்கோவர்த்தனம், விருந்தாவனம் ஆகிய இடங்களைப் பார்த்த பிறகு, குருக்ஷேத்திரம் செல்கிறோம்.

அதற்குப் பிறகு தில்லியில் யாத்திரை நிறைவுபெற்றுவிடுகிறது.






பிருந்தாவனத்தில் யமுனையாற்றில் படகுப் பயணம். 




பீஷ்மர் குண்டம். பீஷ்மர் அம்புப் படுக்கையில் இருந்தபோது அர்ஜுனனால் அவர் தாகத்திற்கு நீர் வரச் செய்த இடம்.

பீஷ்மகுண்டத்தின் கரையில் வைக்கப்பட்டிருக்கும் சிற்பம். 

அதன் அருகிலேயே பீஷ்மருக்கான கோவில்.


யாத்திரையின் கடைசி நாளில் (தில்லியில்) எங்களுக்குக் கொடுக்கப்பட்ட பெரிய லட்டு. (ஆனால் நம் தில்லி பதிவர் வெங்கட் நாகராஜ் அவர்கள் பதிவுகளே எழுதாமல் நமக்கு அல்வா கொடுக்கிறாரே…… புது வருடத்திலாவது ஆரம்பிப்பார் என்று நினைத்தேன்).


இவற்றை விரிவாக வரும் வாரங்களில் பார்க்கலாம்.

(தொடரும்) 
 

59 கருத்துகள்:

  1. எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு..

    குறள் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கற்பக கணபதி
      கனிவுடன் காக்க..
      முத்துக்குமரன்
      முன்னின்று காக்க..
      தையல் நாயகி
      தயவுடன் காக்க..
      வைத்திய நாதன்
      வந்தெதிர் காக்க..

      இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
      பிரார்த்திப்போம்..

      எல்லாருக்கும் இறைவன்
      நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

      நலம் வாழ்க..

      நீக்கு
    2. எல்லா நாளையும் குறளுடனும் ப்ரார்த்தனையுடனும் தொடங்கி வைக்கிறீர்கள். வாழிய நலம்.

      நீக்கு
    3. படங்களோடு விளக்கம் சுவாரஸ்யமாக இருந்தது தமிழரே

      வெங்கட் ஜி விரைவில் எழுதுவார் என்று நம்புவோம்

      நீக்கு
  2. இனிய மகர சங்கராந்தி காலத்தில பஞ்சத் துவாரகை தரிசனம்..

    புண்ணியம்..
    புண்ணியம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துரை செல்வராஜு சார்... இனித்தான் யாத்திரையை விரிவாக, அதாவது படப்பகுதிகளாக எழுதணும்.

      நீக்கு
  3. அனைவருக்கும் அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  4. சிறப்பான விவரங்கள்.. அழகான படங்கள்..

    அருமை..
    அருமை..

    அன்பின் நெல்லை அவர்களுக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  5. பதில்கள்
    1. யாத்திரையின் பகுதியாக அந்த இடங்களுக்கும் சென்றிருந்தோம் என்பதற்காக. ஞாயிறு உலாவில் சில வாரங்கள் அதன் படங்களும் வரும்.

      நீக்கு
  6. ஆரம்ப பயண குறிப்புகள் வழிகாட்டுதலாய் ஆரம்பித்து வைக்க படங்கள் பார்த்த இடங்களின் விவரங்களாய் இருந்தன.
    தில்லி, ஆக்ரா, ஜெய்ப்பூர்
    சுற்று வட்டாரங்கள் பார்த்திருக்கிறேன். குருஷேத்திர தல படங்களை இப்பொழுது தான் பார்க்கிறேன்.

    யமுனை நதிக்கரையில் காளிங்க நர்த்தன கோயில் பார்த்ததும் கும்பகோண ஊத்துக்காடு ஷேத்திரத்தில் கண்ணனின் காளிங்க நர்த்தன தோற்றமும் அழகும் நினைவுக்கு வந்தன. (கூடவே கண்ணன் பாடல்கள் இயற்றி நம்மைக் களிக்கச் செய்யவே பிறவியெடுத்த ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் நினைவுகளும்.)

    பிருந்தாவனம், விருந்தாவன் -- வித்தியாச விளக்கம் ப்ளீஸ்.

    அடுத்த பகுதிக்குக் காத்திருக்கிறேன். நன்றி, நெல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜீவி சார். பிருந்தாவனம் என நாம் அழைப்பது, வடவர்கள் அழைக்கும் விருந்தாவன். பெயர் காரணம் உண்டு.

      குருக்‌ஷேத்ரம் இருமுறை சென்றிருக்கிறேன். அது வெறும் போர்க்களம். ஆனா பாருங்க...இப்போ நகர வடிவைப் பெற்றுவிட்டது.

      நீக்கு
    2. ஊத்துக்காடு என்றாலே அவரின் கண்ணன் பாடல்கள் நினைவுக்கு வரும். பால்வடியும் முகம், புல்லாய் பிறவி, ஆடாது அசங்காது போன்ற பாடல்கள் நினைவுக்கு வரும். பலமுறை கேட்டுத் திளைத்த தாயேயசோதா, அலைபாயுதே போன்றவைகளைத் தவிர.

      அந்த ஊருக்கு அடுத்த முறை செல்ல வேண்டும்.

      நீக்கு
    3. முந்தைய கருத்து மறைந்துவிட்டது

      நீக்கு
  7. பயண ஏற்பாட்டாளர் எடுக்கும்/விளக்கும் பயண விதிமுறைகள் கட்சிதமாக குறைகள்/இடையூறு இல்லாத பயணம் செய்வதற்கு எதுவாக அமைந்துள்ளது. இது ஒரு 'Mission planning' போன்று அமைந்துள்ளது சிறப்பு.

    படங்கள் நன்றாக இருக்கின்றன என்றாலும் ஆஹா என்ற தரத்தில் இல்லை.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜெயகுமார் சார். முடிந்த அளவு, கிடைத்த நேரத்தில் நல்ல படங்களாக எடுக்க முயல்கிறேன்.

      யாத்திரை என்பதே ரொம்பவே திட்டமிட்டு, எல்லோரையும் நேரத்தை கடைபிடிக்கும்படி அவசரப்படுத்தி, இடையில் ஷாப்பிங் என்று கம்பி நீட்டிவிடாமல் கண்காணித்து...என சிரம்மான வேலைதான்.

      நீக்கு
  8. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போகி நாளில் உங்கள் ப்ரார்த்தனைகள் பலிக்கட்டும்.

      நீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் போகிப்பண்டிகை வாழ்த்துகள்.
    இன்றைய பதிவும் பஞ்ச துவாரகா முன்னோட்டமாக இருந்தாலும், படங்கள் விபரங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. கோவர்த்தன கிரிதாரி, பிதாமகர் பீஸ்மரின் அம்பு படுக்கை கோவில், அவரால் உண்டான பீஸ்மர் குண்டம் அனைத்தையும் இந்த நல்ல நாளில் தரிசித்துக் கொண்டேன். அதுவும் சூரியன் வடதிசை நோக்கி நகரும் புண்ணிய காலத்திற்காக அதன் பின்னர் தன்னுயிரை துறக்க காத்திருந்த பிதாமகரின் கோவில் மற்றைய படங்களை தைப்பிறப்பிற்கு முந்தைய தினமான இன்று எங்களை தரிசிக்க வைத்ததற்கு தங்களுக்கு மிக்க நன்றி. பதிவு சிறப்பாக உள்ளது.

    தங்கள் கோவில் யாத்திரை பதிவுகளில் பங்கேற்று தொடர்ந்து வருவதற்கும் இறைவன் அருளையும் பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம். ஆமாம்...போகிப் பண்டிகைக்கு என்னவெல்லாம் பண்ணணும்?

      நீக்கு
    2. பீஷ்மர் குண்டத்தின் அருகிலும், கீதா உபதேசம் செய்த இடத்திலும் குழுவாக நாங்கள் சஹஸ்ரநாம பாராயணம் செய்தோம். இதைப்பற்றிப் பின்னர் எழுதுகிறேன்.

      நீக்கு
    3. வணக்கம் சகோதரரே

      போகிக்கு வீட்டை சுத்தப்படுத்தி, இறைவனை மனதாற நினைத்து பூஜைகள் செய்து உணவுகளால் காலை டிபன், (அம்மா வீட்டில் என்றுமே காலை உணவு. இட்லிதான்.) மதியம் வடை போளி அப்பளம், வடாம் பாயசத்துடன், மார்கழியில் விளையும் கிழங்கு வகைகளையும் கொடிக்காய்களையும் விதவிதமாக சமைத்து, (அது நாம் இந்த மண்ணிற்கு காட்டும் நன்றியணர்வு.) இறைவனுக்கு சமர்பித்து, உற்றார் உறவு கூட உணவருந்தி மகிழ்வோம்.

      அன்று எண்ணெய் குளியல் கூட அந்தக்கால பெரியவர்ககள் குளிக்கச் சொல்வார்கள். நாளை தை மாதப்பிறப்பு, (உத்தராயண புண்யகாலம்) தொடங்குவதால், (செய்த அறிந்தறியாமல் பிழைகளைச் பொறுத்து இயற்கை கடவுளாகிய கதிரவன் உத்திராயணத்தில் நமக்கு நல்லதையே நடத்தித் தருவான் என்ற நம்பிக்கை. அதனால்தான் "தை பிறந்தால் வழிப் பிறக்கும்" என்ற சொல் உருவாயிற்று என நினைக்கிறேன்.) நம் வாழ்விலும் இதை ஒரு சம்பிரதாயமாக இவையனைத்தையும் செய்வார்கள். இப்போது இதை முறையாக இதையெல்லாம் பின்பற்ற இயலவில்லை.

      அப்போதெல்லாம் வடை, போளி, பாயாசம் போன்ற அதிசய பலகாரங்கள் அந்தந்த நாட்களில் ஒரு சாஸ்திரமாக செய்வதால் ஒரு வித ஈடுபாடு அதன் மேல் நமக்கும் வரும். இப்போது தெருவுக்குத் தெரு என அவற்றை தினமும் வாங்கி சாப்பிட்டு விடுவதால், எந்த பண்டிகைக்கும் எந்தவித உற்சாகமும் இல்லை.

      நீங்கள் எதைப்பற்றி கேட்கிறீர்கள் எனத்தெரியாததால் அத்தனையும் எனக்கு தெரிந்த வரை விளக்கி விட்டேன். (எழுத்தின் மேல் உள்ள ஆர்வத்தில்) ஒரு பதிவாகவே ஆகி விட்டதெனவும் கருதுகிறேன். மன்னிக்கவும் . நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    4. நல்லாவே விளக்கமா எழுதியிருக்கீங்க கமலா ஹரிஹரன் மேடம்.

      //"தை பிறந்தால் வழி பிறக்கும்"// - மார்கழில அல்லது அதற்கு முந்தைய மாதத்துல திருமணம் சம்பந்தமான பேச்சுகள் எடுக்க மாட்டாங்க. தை பிறந்தால் திருமணப் பேச்சு ஆரம்பிக்கும்.

      /இப்போது தெருவுக்குத் தெரு என அவற்றை தினமும் வாங்கி சாப்பிட்டு விடுவதால், எந்த பண்டிகைக்கும் எந்தவித உற்சாகமும் இல்லை.// - உண்மை. அப்போல்லாம் (30 வருடங்களுக்கு முன்பு), ஆவணி அவிட்டம் அன்று காலையில் இட்லி, அப்பம் செய்வார்கள். காரணம் பிறகு நீர்நிலைக்குச் சென்று குளித்துவிட்டு பூநூல் சம்பந்தமான எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு உணவு உண்ண மதியம் ஆகிவிடும். அதுவரை பசி தாங்கணும் என்று. அப்போ அது உற்சாகமாக இருக்கும். இதுபோல போகி-போளி, ஸ்ரீஜெயந்தி-விதவித பக்ஷணம், நவராத்ரி-சுண்டல், பிள்ளையார் சதுர்த்தி-கொழுக்கட்டை, காரடையான் நோன்பு-கொழுக்கட்டை....... இப்போ எல்லாம் எப்போதும் கிடைப்பதால் அந்த ஆர்வம் இல்லை.

      நீக்கு
  10. புகைப்படங்கள் அனைத்தும் மிக அழகு! பீஷ்ம குண்டத்தின் கரையிலிருக்கும் அந்த சிற்பத்தின் அழகும் நுணுக்கமும் பிரமிக்க வைக்கிறது!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மனோ சாமிநாதன் அவர்கள். அந்தச் சிற்பம் மிக நுணுக்கமாகச் செய்திருக்கிறார்கள். பார்க்கவே மிக அழகு அந்த இடம்.

      நீக்கு
  11. @ நெல்லை..

    /// தொடர்ந்து வாருங்கள்.. ///

    தொடர்ந்து வந்து கொண்டு தான் இருக்கின்றேன்..

    சனிக்கிழமை மட்டுமே சற்று ஓய்வு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் துரை செல்வராஜு சார். நீங்கள் பயணத்திலிருந்து திரும்பி வந்தாகிவிட்டதா? திருமலை தரிசனம் நல்லபடியாக நடந்துமுடிந்ததா? நடந்து சென்றீர்களா?

      நீக்கு
  12. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடிப் படியில் இருந்து திருமலைக்கு நடந்து தான் செனறோம்..

      ஸ்ரீ வேங்கடேச மகாப்ரபு தான் துணைக்கு வந்தார்..

      காத்திருப்பு பல மணி நேரம் என்றாலும் மிக அருமையான தரிசனம்..

      கடந்த செவ்வாய் அன்று இல்லம் திரும்பினோம்..

      ஓம் நமோ வேங்கடேசாய..

      நீக்கு
    2. ஆஹா.... நான் கடைசியாக நடந்து சென்றது 2018ல். பிறகு எனக்கு நடக்கமுடியாது என்று தோன்றிவிட்டது.

      நீக்கு
  13. தைப் பொங்கலைத் தொடர்ந்து திருப்பதி திருமலை படங்கள் நமது தளத்தில் வெளிவர இருக்கின்றன..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லது. திருப்பதி என்றவுடன் உங்கள் மனதில் தோன்றுவது என்னவாயிருக்கும்?

      நீக்கு
  14. பதிவு மிக அருமை, நெல்லைத்தமிழன்.

    //எவ்வளவு செட் டிரெஸ் தேவையாயிருக்கும்,, எந்த இடங்களில் தோய்க்கவும், சலவை செய்பவர் மூலமாக அயர்ன் செய்துகொள்ளமுடியும், என்ன என்ன எடுத்துவரவேண்டும் என்பதையெல்லாம் யாத்திரை நடத்துபவர் சொல்லிவிடுவார்.//

    நல்ல ஏற்பாடு. நெடிய பயணத்தில் இப்படித் துணிகள் துவைப்பது உலர்த்துவது என்பதெல்லாம் கடினமான விஷயம் எவ்வளவு சுமக்க முடியும்.

    பிரம்மசரோவர், வி/பிருந்தாவன், பஞ்சதுவாரகை, குருஷேத்திரம் என்று காணக் கிடைக்கும் வாய்ப்பு கிடைக்காததை உங்களின் படங்களும் அதன் கீழே உள்ள சிறிய குறிப்புகளும், பயண விவரங்களும் தீர்த்துவைக்கின்றன.

    இடையில் லட்டு, அதன் வழி வெங்கட்ஜியை எழுதச் சொல்லி ஊக்குவித்தல். எழுதாமல் இருக்கக் கூடாது என்ற அன்பான வேண்டுகோள்.

    படங்கள் எல்லாம் மிக நன்று.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி துளசிதரன் சார். பதிவர்கள் தொடர்ந்து எழுதணும் என்பது என் விருப்பம்.

      நீக்கு
  15. அட! தோய்த்து அயர்ன் வேற செய்து கொள்ளும் வசதியோடு பயண்ம்! சூப்பர்.

    ஒரே இடத்தில் அமர்ந்திருக்க வேண்டாம் னும் எல்லாருக்கும் ஜன்னல் சீட் கிடைக்கணும்னோ? மாற்றி உட்காரச் சொல்வது? இதுவும் நல்லாருக்கு.

    பீஷ்ம குண்டம், குருஷேத்திரம், துவாரகை, பிருந்தாவனம் என்று ட்ரெய்லர் படங்கள் நல்லாருக்கு நெல்லை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜன்னல் சீட்டுக்கு வழியில்லை. சீட் மாறுவதால் எனக்கு மட்டும் பின் சீட், பஸ் தூக்கித் தூக்கிப் போட்டதுனுலாம் கம்ப்ளெயின்ட் வராது

      நீக்கு
  16. ராமாயணப் பாதை, கிருஷ் பாத் என்று பெயரிடலாம்..

    இப்ப கூட நீங்க போன இடங்கள் கிருஷ் பாத் போல இருக்கு! ஆனா மதுராலருந்து தொடங்கி பிருந்தாவனம், யமுனை, குருஷேத்திரம், துவாரகைனு இருந்தா இந்த பாத் அப்படி பெயர் இருக்குமோ...

    ஆனால் பயண ஏற்பாட்டாளருக்குத்தான் திட்டம் எப்படி வொர்க் அவுட் அகும்னு தெரியும் இல்லையா...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒவ்வொரு கோவில் எப்போ திறந்திருப்பாங்க, ஆரம்பிக்கும் இடம் முடியும் இடம், என்னென்ன இடங்கள் பார்க்க முடியும், உணவு தயாரிக்க இடம், தங்கும் வசதி எனப் பல்வேறு காரணிகள் பயணப் பாதையைத் தீர்மானிக்குதுன்னு நினைக்கிறேன்

      நீக்கு
    2. ஆமாம் நெல்லை சரிதான்

      கீதா

      நீக்கு
  17. படங்களோடு விளக்கம் சுவாரஸ்யமாக இருந்தது தமிழரே வெங்கட் ஜி விரைவில் எழுதுவார் என்று நம்புவோம்.

    பதிலளிநீக்கு
  18. புண்ணிய ஷேத்திரங்கள் பலவற்றையும் இன்று கண்டு வணங்கினோம். நன்றி.

    படங்கள் நன்று.

    தொடர்வோம் விரிவாக அறிய.

    பதிலளிநீக்கு
  19. படங்களோடு விளக்கம் சுவாரஸ்யமாக இருந்தது தமிழரே

    வெங்கட் ஜி விரைவில் எழுதுவார் என்று நம்புவோம்

    பதிலளிநீக்கு
  20. படங்களோடு விளக்கம் சுவாரஸ்யமாக இருந்தது தமிழரே

    வெங்கட் ஜி விரைவில் எழுதுவார் என்று நம்புவோம்

    பதிலளிநீக்கு
  21. படங்களோடு விளக்கம் சுவாரஸ்யமாக இருந்தது தமிழரே

    வெங்கட் ஜி விரைவில் எழுதுவார் என்று நம்புவோம்

    பதிலளிநீக்கு
  22. படங்களோடு விளக்கம் சுவாரஸ்யமாக இருந்தது தமிழரே

    வெங்கட் ஜி விரைவில் எழுதுவார் என்று நம்புவோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தில்லி வெங்கட் புத்தாண்டில் எழுத ஆரம்பிப்பார் என்று நினைத்தேன். வேலை அதிகமாக இருக்கும், இல்லாவிடில் பயணம் குறைந்திருக்கும்.

      நீக்கு
  23. @ நெல்லை..

    /// நல்லது. திருப்பதி என்றவுடன் உங்கள் மனதில் தோன்றுவது என்னவாயிருக்கும்?.. ///

    வேறென்ன..
    பெருமாள் தரிசனம்..
    பரமம்..
    பவித்ரம்..
    திருப்தி..

    ஓம் நமோ வேங்கடேசாய..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். சில விநாடிகள்தாம். எனக்கு சில பயணங்களில் தொடர்ந்து 3-4 தினங்கள் காலையில் தரிசனம் வாய்த்திருக்கிறது. ஒவ்வொரு தடவையும் ஒவ்வொன்றை மிஸ் பண்ணிவிடுவேன் (அபய ஹஸ்தங்களை, பாதத்தை, திருமுகத்தை என்று). 4-5 தரிசனங்களில் ஓரளவு எல்லா தரிசனமும் கிட்டிவிடும். எல்லாம் அவன் செயல்

      நீக்கு
  24. மிக அருமையான பயணவிவரங்கள். படங்கள் எல்லாம் மீண்டும் தரிசனம் செய்த உணர்வை தந்தது.

    கோவர்த்தனம் பற்றி விரிவாக எழுதலாம், நிறைய விஷயங்கள் இருக்கே! அவர் நண்பர்களுடன் விளையாடிய இடம் , அவர் சறுக்கி விளையாடியது, அவர் கால்தடம் உள்ள பாறை என்று

    கோவர்த்தனகிரியை வலம் வரும் அன்பர்கள் அடிக்கு அடி கீழே விழுந்து வணங்கி வருவார்கள் அந்த பக்தி மனதை நெகிழ வைக்கும்.

    குருக்ஷேத்திரம் படங்கள் எல்லாம் அருமை. பழைய நினைவுகளில் ஆழ்ந்து போனேன். நன்றி அருமையான தரிசனத்திற்கு

    போகி பண்டிகை. பொங்கல் வேலைகளால் இப்போதுதான் வர முடிந்தது.
    வெங்கட் உடல் நிலை சரியில்லை, ஸ்ரீரங்கம் வந்து இருக்கிறார். ஆதி முகநூலில் போட்டு இருக்கிறார். காசி போய் வந்த பின் உடல் நிலை சரியில்லை போலும். விரைவில் அவர் பழைய மாதிரி பதிவுகள் தருவார்.





    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அரசு மேடம்.

      ஆமாம் வெங்கட் கொஞ்சம் உடம்பு சரியில்லாமல் இருந்து இப்போது நலம் எனக் கேள்விப்பட்டேன்.

      கோவர்த்தன கிரி என்று சொல்வதற்கு அங்கு மலை எதையும் நான் பார்க்கவில்லை. அதுவே எனக்கு அதிசயமாக இருந்தது. பக்தர்களின் பக்தி மிகப் பெரிது.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!