ஞாயிறு, 21 ஜனவரி, 2024

நான் தரிசனம் செய்த கோயில்கள் – ஐந்து துவாரகைகள் யாத்திரை – பகுதி 03 : நெல்லைத்தமிழன்

 

பஞ்சத் துவாரகை யாத்திரை இந்த வாரத்திலிருந்து துவங்குகிறது.

முக்கியக்குறிப்பு: யாத்திரை என்பது டைம் டேபிள் போட்டு மட்டும் போவதல்ல. பெருமாள், தரிசனம் தரவேணும் என்று நினைத்தால் மட்டுமே தரிசனம் வாய்க்கும். ஒவ்வொரு கோவிலிலும் உத்ஸவங்கள் மற்றும் பல்வேறு காரணிகள் ஒவ்வொரு சமயத்திலும் இருக்கும். அதனால் கோவில் தரிசன வரிசைக்கிரமமோ, தங்கும் இடங்களோ, தங்கும் திவ்யதேசங்களோ ஒவ்வொரு யாத்திரையின்போதும் மாறுபட வாய்ப்புகள் உண்டு. நான் ஒரு முறைக்கு மேல் சென்றிருந்த யாத்திரைகளிலும் இந்த மாறுபாடுகளைக் கவனித்திருக்கிறேன். அதனால் இங்கு எழுதும்போது எதையும் விடாமல் எழுதிவிட முடிகிறது. சில நேரங்களில் பல காரணங்களால் ஒரு இடத்தை முழுமையாகச் சுற்றிப் பார்க்க இயலாது போய்விடும்

உதாரணமா, நான் மலைநாடு யாத்திரைக்குச் சென்றிருந்தபோது, திருவட்டாறில் சூரிய கிரகணம் என்பதால் கோவில் நடையைச் சாத்திவிட்டு போத்தி திருவனந்தபுரத்துக்குச் சொந்த வேலையாகச் சென்றுவிட்டார்.  நாங்களும் கிடைத்த நேரத்தில் தர்ப்பணம் போன்றவற்றை முடித்துவிட்டு காத்திருந்து மாலை 4 ½ மணிக்கு தரிசனம் செய்தோம்.  ஒரு முறை ஜனாதிபதி வருகிறார் என்பதால், கன்யாகுமரிக்கு சுசீந்திரத்திலிருந்து செல்லவே இல்லை. அதுபோல, சில இடங்களில் நேரம் அதிகம் எடுத்துக்கொண்டால், அடுத்த கோவில் தரிசனமும் பாதிக்கப்படும். கேரள திவ்யதேசக் கோவில்களில் இது சகஜம். காரணம், அவங்க நேரப்படி எதையும் செய்வாங்க. இரவு 8 மணிக்கு நடை சாத்தப்படும் என்றால், ஜனாதிபதி வந்தாலும் 8 மணிக்கு நடை சாத்திடுவாங்க. அவ்வளவு துல்லியமாக அவங்க நடைமுறை இருக்கும்.

இனி யாத்திரை விவரங்கள்

பயணத் திட்டப்படி, சென்னையிலிருந்து வதோதரா ஜங்க்ஷனில் இறங்கி, பரோடா, துவாரகை, மூலதுவாரகை, புஷ்கர், டாகோர் துவாரகை, ஓகா துவாரகை, சோம்நாத், விராவல் (ஸ்ரீகிருஷ்ணர் பரமபதம் அடைந்த இடம்), அகமதாபாத், உதய்ப்பூர், கோகுலம், குருக்ஷேத்திரம், ஸ்ரீநாத் துவாரகை, கங்ரோலி துவாரகை, ஜெய்ப்பூர், ஆக்ரா, மதுரா, விருந்தாவன், கோவர்தன் முதலிய இடங்களுக்குச் சென்றுவிட்டு, கடைசியில் தில்லி சென்று அங்கிருந்து சென்னைக்கு இரயிலில் திரும்புவது. இரயில் கட்டணம் நீங்கலாக ஒரு பயணிக்கு அப்போது சுமார் 22,000 ரூபாய். பரோடாவிலிருந்து தில்லி அடைவது வரை 2+2 ஏசி வசதியுடன் கூடிய பேருந்தில் பயணம். இந்தக் கட்டணம் தவிர, நமக்காக தனிப்பட்ட முறையில் தங்குமிடம் ஏற்பாடு செய்தால் அதற்குரிய கட்டணமும், அது தவிர, ஆங்காங்கே ஆட்டோ கட்டணமும் நம்மைச் சேர்ந்தது. யாத்திரையின் நிறைவில் நமக்கு உதவியவர்களுக்காக ஒவ்வொருவரும் 200 ரூபாய் கொடுக்கவேண்டும். இதனை உணவுக்கான உதவியாளர்கள், பேருந்து ஓட்டுநர், க்ளீனர் போன்றவர்களுக்கு டிப்ஸ் என்ற முறையில் பிரித்துக்கொடுப்பார்கள்.

இந்த டிப்ஸ், யாத்திரையைப் பொறுத்து மாறுபடும். 50 லிருந்து 250 ரூபாய் வரை.

கால மாறுபாடுகளால், சமீப வருடங்களில் நிறையபேர், தனி அறை, ஏசி வசதிகள் போன்றவற்றை எதிர்பார்க்கிறார்கள். இதனை எல்லா இடங்களிலும் செய்துகொடுப்பது இயலாது. அது தவிர, பெரும்பாலானோர் தங்குமிடம் ஓரிட த்திலும், தனி அறைக்காக ஹோட்டல் ஏற்பாடு செய்திருப்பது வேறோர் இடத்திலும் என்றுதான் இருக்கும், அது எல்லோருக்குமே இடைஞ்சல். முழு இரவும் தங்குவதுபோல அமைவதும் சில நேரங்களில்தான்.  யாத்திரை என்று வந்துவிட்டால் இதுபோல பல்வேறு கஷ்டங்களையும் ஏற்றுக்கொண்டால்தான் இத்தகைய குழுவோடு பயணிக்க முடியும்.

23 ஃபெப்ரவரி புதன் மதியம் 3:50க்குப் புறப்படும் வதோதரா எக்ஸ்பிரஸில் சென்னையிலிருந்து புறப்பட்டு, 24 ஃபெப்ரவரி வியாழன் மாலை 6:30க்கு வதோதரா ஜங்ஷனில் இறங்கினோம். 

நான் மதிய உணவாக பரோட்டா சப்பாத்தி இரண்டு ப்ளேட் A2Bயில் சாப்பிட்டிருந்தேன். இரயிலில் இரவு 7 ½ மணிக்கு, உணவாக அரிசி உப்புமா கொத்ஸுவும்,  மறுநாள் காலை 9 ½ மணிக்கு வத்தகுழம்பு சாதம், வற்றல், தயிர் சாதம், எலுமிச்சை ஊறுகாய்,  மதியம் 3 மணிக்கு மைசூர்பாக் மற்றும் காராபூந்தி தந்தனர்.  மாலை 6 ½ மணிக்கு வதோதரா போய்ச் சேர்ந்துவிடுவதால், வதோராவில், இரவு தங்குமிடத்திலேயே உணவு தயார் செய்து தருவார்கள். பொதுவாக இரயில் பயணத்தில் மறுநாள் காஞ்சீபுரம் இட்லி மற்றும் மிளகாய்பொடி/நல்லெண்ணெய் தருவார்கள், கெட்டுப்போகாது என்பதால்.  மற்றபடி இரயிலில் செல்லும்போது நிற்கும் ஸ்டேஷன்களில் பழங்கள் வாங்கிக்கொள்வதும், மற்ற உணவு வகைகளை வாங்குவதும் சகஜம்தான். நான் பொதுவா மறுநாள் தரும் எதையும் என் உடலுக்கு ஒத்துக்கொள்ளாது என்பதால் வாங்கிக்கொள்வதில்லை, காஞ்சீபுரம் இட்லி தவிர.

வதோதரா ஜங்ஷனில் 24ம் தேதி மாலை 6 மணிக்கு இறங்கினோம். யாத்திரைக்கான லக்கேஜுகள் மற்றும் யாத்திரைக் குழு கொண்டு செல்லும் மளிகைப் பொருட்கள், காய்கறிகள், பாத்திரங்கள் போன்றவற்றையும் போர்ட்டர் உதவியுடன் இரயில் நிலையத்துக்கு வெளியே கொண்டு சென்றார்கள். நாங்கள் அவரவர் லக்கேஜுகளை எடுத்துக்கொண்டு வெளியே சென்று, குழுத்தலைவர் குறிப்பிட்ட இடத்தில் நின்றுகொண்டிருந்தோம். எங்களுக்கான பேருந்து வந்த பிறகு, முதலில் யாத்திரை நடத்துபவர்களின் பொருட்களையெல்லாம் ஏற்றிய பிறகு, எங்கள் லக்கேஜுகளையும் அதற்குரிய இட த்தில் ஏற்றினார்கள்.  யாத்திரைக்குப் பணம் கட்டிய வரிசைப் பிரகாரம் பேருந்தில் இருக்கை எண்ணைத் தெரிவிப்பார்கள். அதன் பிரகாரம் நாம் உட்கார்ந்துகொள்ளவேண்டும்

பொதுவாக நீண்ட பேருந்துப் பயணங்கள் கொண்ட யாத்திரையில் ஒவ்வொரு 200 கிமீட்டருக்கும், அவரவர் உட்கார்ந்துகொண்டிருக்கும் இருக்கைக்குப் பின்புறம் உள்ள இருக்கைக்கு மாறிக்கொள்ளவேண்டும். யாத்திரை முடியும் தறுவாயில், ஒவ்வொருவரும், பேருந்தின் எல்லா வரிசையிலும் அமர்ந்து பயணித்திருப்பார்கள். இதனால், எனக்கு மாத்திரம் பேருந்தில் கடைசி இருக்கை, பயணத்தின்போது ரொம்ப அசௌகரியமாக இருந்தது, என் இருக்கையில் இந்தக் குறை என்றெல்லாம் யாரும் குறை சொல்லும்படி இருக்காதுபேருந்தின் கடைசி வரிசை யாத்திரைக் குழுவின் உதவியாளர்கள், சமையல் செய்பவர்களுக்கு ஒதுக்கியிருப்பார்கள். லக்கேஜை பேருந்தின் டிக்கி அல்லது மேல்புறம் வைத்திருந்தாலும், எப்போதும் ஒவ்வொருவர் அமர்ந்திருக்கும் இருக்கைக்கு மேற்புறம் உள்ள இட த்தில் ஒரு சிறு பையில் தட்டு, டம்ளர், அவசரத் தேவைக்கு தண்ணீர் மற்றும் மருந்துகளை வைத்திருப்பார்கள். அதனால் சில நேரங்களில் பயணத்தின்போது, பேருந்து, பெட்ரோல் ஸ்டேஷன்களில் நின்று, அங்கேயே கொண்டுவந்திருக்கும் உணவைச் சாப்பிட்டுவிட்டு, தட்டையும் அலம்புவதற்கு சௌகரியமாக இருக்கும்.

இரயில் பயணம் முடிந்து வதோதராவில் பேருந்தில் ஏறி சில கிமீ தூரத்தில் இருந்த சாந்தாராம் மந்திர் என்ற தங்குமிடத்திற்குச் சென்றோம். இது ஆஸ்ரமத்துடன் கூடிய தங்கும் இடம். மாடியில் பெரிய ஹாலும், குளிக்க மற்றும் டாய்லெட்டுக்காக இரண்டிரண்டு அறைகளும் இருந்தன. இதுதவிர தரைத்தளத்திலும் குளிப்பதற்காக இரண்டு குளியலறைகள் இருந்தன. இரவு 8 ½ மணிக்கு சாப்பாடு என்று சொல்லியிருந்தார்கள். நான் பல யாத்திரைகள் சென்று அனுபவமுள்ளவன் என்பதால், உடனே என் பயண உடைகளைத் துவைத்துக் காயப்போட்டேன்.  (அதற்கான கொடி, க்ளிப்புகள் என்னிடம் எப்போதும் இருக்கும்). பிறகு குளித்துவிட்டு, இரவு உணவு பரிமாறும் கீழ்த்தளத்திற்கு எல்லோருடனும் சென்றேன். எப்போதும்போல, சாம்பார், ரசம், கறியமுது, தயிர் என்று சுடச்சுட சாப்பாடு. பிறகு ஹாலில் படுத்துக்கொண்டோம். காலை எழுந்து குளித்துவிட்டு பக்கத்திலுள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலுக்குப் போய் தரிசனம் செய்துவிட்டு வாருங்கள், 10 ½ மணிக்கு காலை உணவு வழங்கப்படும் என்று சொன்னார் யாத்திரை நடத்துபவர்.

25 ஃபெப்ரவரி

காலை 7 மணிக்குள் குளித்துவிட்டு சிறிது தூரம் நடந்து கோவிலுக்குச் சென்றோம். யாத்திரையின் ஆரம்பத்தில் ஆஞ்சநேயரைச் சேவித்தது மனதுக்குத் திருப்தியாக இருந்தது. அந்தக் கோவிலிலேயே சிறு சிறு சந்நிதிகளும் இருந்தன. அனைத்தையும் சேவித்துவிட்டு வந்தோம். 2020ல், என் மனைவியும் இந்தப் பயணத்திற்கு என்னுடன் வந்திருந்தார். அதனால் சீக்கிரமே கோவிலிலிருந்து திரும்பிவிட்டதால், எங்கேயானும் டோக்ளா கிடைக்குமா (குஜராத் என்பதால்) என்று தேடுவதற்காக ஒரு ஆட்டோ எடுத்துக்கொண்டு அருகிலிருக்கும் இனிப்பு கடையை நோக்கிச் சென்றோம். அவர்கள் டோக்ளா வாங்க இன்னொரு கடைக்குத்தான் போகணும் என்று சொல்லி அதற்கு வழி சொன்னார்கள். இதைத் தேடிக்கொண்டிருந்தால் சரியான நேரத்திற்கு தங்குமித்திற்குச் செல்ல முடியாது என்பதால் அந்த இனிப்பு கடையிலேயே மில்க் ஸ்வீட் கொஞ்சம் வாங்கிக்கொண்டு தங்குமிடத்திற்கு வந்து சேர்ந்தோம்.  2022 பயணத்தின்போது, அமாவாசை என்பதால் தங்குமிடத்திலேயே தர்ப்பணம் முடித்துவிட்டு கோவிலுக்கு மாத்திரம் போய்த் திரும்பினேன்.

நாங்கள் செல்வதற்கான பேருந்து. பொதுவாக எல்லா வடநாட்டு யாத்திரையின்போதும் பன்சால் பேருந்துதான் வரும். எங்கள் குழுவுக்கென்று தனியான ஓட்டுநர், க்ளீனர் இருப்பார். அவரே எல்லா யாத்திரைகளுக்கும் பேருந்து ஓட்டிவருவார் (பெரும்பாலும்)

நாங்கள் தங்கியிருந்த ஸ்ரீசந்த்ராம் மந்திர்குரங்குகள் தொல்லை வெளியில் அதிகம் என்பதால் முழுவதுமாக கம்பிவலைகளால் தடுப்பு ஏற்படுத்தியிருக்கிறார்கள்.




காலை 10 ½ மணிக்கு எல்லோரும் வந்த பிறகு வெண்டைக்காய் சாம்பார், கத்தரி கரேமது, சௌசௌ கூட்டு, சாத்துமது, உளுந்து வடை, அக்காரவடிசல் மற்றும் தயிர்கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்துக்கொண்டு மதியம் 2 மணிக்கு மேல் டாகோர் துவாரகைக்குப் புறப்படுவோம் என்று சொன்னார்கள்

டாகோர் துவாரகை சுமார் 70 கிமீட்டர் தொலைவில் இருக்கிறது. நாங்கள் மதியம் 3 மணிக்குக் கிளம்பினோம். 4 ½ மணி வாக்கில் டாகோர் துவாரகா அருகில் இருந்த ஸ்வாமி நாராயணன் கோவில் வளாகத்தை அடைந்தோம். அங்கு பேருந்திலிருந்து இறங்கி, வெளியில் ஷேர் ஆட்டோவில் 6 பேர்களாக டாகோர் துவாரகை கோவில் அருகில் இறங்கிக்கொண்டு, அங்கிருக்கும் இடங்களையெல்லாம் பார்த்த பிறகு இன்னொரு ஷேர் ஆட்டோவில் ஆறு பேர்களாக பேருந்து இருக்கும் இடத்திற்குத் திரும்புவதாகத் திட்டம். 

ஆட்டோ ஒருவருக்கு 10 ரூபாய். நேராக டாகோர் துவாரகேஷ் கோவில் அருகில் நிறுத்தினார்கள். அங்கிருந்து கோவிலுக்குச் சென்றோம். நல்ல கூட்டம்இந்தக் கோவிலை ரணசோத்ரிஜி கோவில் என்றும் சொல்கின்றனர். 

விஜயாநந்தன் என்பவர் யாதவர்களுள் ஒருவர். ஸ்ரீகிருஷ்ணர் காலத்தவர். அவர் கலியுகத்தில் 4000 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் போதனா என்ற பெயரில் பிறக்கிறார். ஸ்ரீகிருஷ்ணரின் பக்தரான அவர், அவருடைய ஊரிலிருந்து (டாகோர்) 500 கிமீ தூரத்தில் இருக்கும் துவாரகைக்கு ஸ்ரீகிருஷ்ணரை தரிசிக்க ஒவ்வொரு ஆறு மாத த்திற்கு ஒரு தடவை செல்வார். அவருக்கு 70 வயதானபோது, அதற்கு மேல் அவரால் செல்ல இயலாது என்று தோன்றியதால், துவாரகையிலிருந்து கிருஷ்ண விக்ரஹத்தை டாகூருக்குக் கொண்டுவந்துவிடுகிறார். துவாரகையில் கிருஷ்ண விக்ரஹத்தைக் காணாமல் தேடிக்கொண்டிருந்த பூஜாரிகளிடம் ஸ்ரீகிருஷ்ணர் தான் டாகூரில் இருப்பதைத் தெரிவிக்க, அவர்கள் டாகூரை நோக்கி வருகிறார்கள். போதனாவிற்கோ, ஸ்ரீகிருஷ்ண விக்ரஹம் தன்னைவிட்டுச் சென்றுவிடக் கூடாது என்பதற்காக கிருஷ்ண விக்ரஹத்தை அருகில் இருந்த கோமதி புஷ்கரணியில் மறைத்துவைத்துவிடுகிறார். பிறகு கிருஷ்ண லீலையினால் அந்த விக்ரஹம் அருகிலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டு டாகோர் துவாரகேஷ் என்று ஒரு கோவில் உருவானதுதுவாரகை பூஜாரிகள் ஸ்ரீகிருஷ்ண விக்ரஹம் துவாரகைக்கு வரவேண்டும் என்று டாகூரில் ப்ரார்த்திக்க, கிருஷ்ணரும், ஆறு மாதங்கள் கழித்து துவாரகையில் உள்ள சாவித்ரி குளத்தில் தன்னைத் தேடி எடுத்துக்கொள்ளலாம் என்று சொன்னார். பூஜாரிகளோ, அவசரத்தினால், ஆறு மாதம் முடியும் வரை காத்திருக்காமல், அதற்குச் சில நாட்கள் முன்பாகவே குளத்தில் தேட, அவர்களுக்கு ஸ்ரீகிருஷ்ண விக்ரஹம் கிடைக்கிறது. அது முன்பிருந்த (அதாவது இப்போது டாகோர் துவாரகையில் உள்ள) கிருஷ்ண விக்ரஹத்தைவிடச் சிறியதாக இருக்கிறது. அதற்குக் காரணம் ஆறுமாதம் வரை பொறுத்திருக்காதுதான் என்று சொல்கின்றனர்.

இந்தக் கதையின் (அல்லது வரலாற்றின்) உபயோகம், ஏன் பஞ்சத்வாரகை யாத்திரையில் டாகோர் துவாரகைக்குச் செல்வதும் முக்கியம் என்பதற்கான காரணம். இந்தக் கோவிலில் பிரசாதமாக சிறிய டம்ளரில் பால் கிடைக்கும் (10 ரூபாய்).  கோவில் அருகிலேயே கோமதி புஷ்கரணி (ஏரி, குளம்) இருக்கிறது.

கோவிலில் ஸ்ரீகிருஷ்ணரைச் சேவித்த பிறகு, கோவிலை வலம் வந்து பிரசாதமாக பாலையும் ஏற்றுக்கொண்டு, அருகிலுள்ள கோமதி குளத்தைக் கண்டோம். பிறகு அங்கிருந்து சிறிது தூரத்திலிருக்கும் சரஸ்வதி கோவிலுக்குச் சென்று வணங்கினோம். அருகிலேயே ஸ்ரீயந்திரம் உள்ள கோவில் ஒன்றும் இருந்தது. அங்கும் தரிசனம் செய்த பின்னர்இன்னொரு ஷேர் ஆட்டோவில் எங்கள் பேருந்து இருந்த ஸ்வாமி நாராயணன் கோவிலை அடைந்தோம்.


டாகோர் துவாரகை கோவில் முழுப்பரிமாணம் (இணையம்)

இரண்டு பிரம்மாண்டமான விளக்கேற்றும் தூண்கள் கோவிலின் எதிரே (டாகோர் துவாரகை)




இணையத்தில் டாகோர் துவாரகை ஸ்ரீகிருஷ்ண விக்ரஹம் சம்பந்தமான படம்


புனித ஏரியான கோமதி ஏரியிலிருந்துதான் கோமதி ஆறு ஆரம்பித்து கடைசியில் கோமத் துவாரகையில் கடலுடன் கலக்கிறது என்றார்கள்.


இந்தக் கோவில்களிலெல்லாம் தரிசனம் முடிந்ததும், ஷேர் ஆட்டோவில் ஏறி பேருந்து இருந்த ஸ்வாமி நாராயணன் கோவில் வளாகத்தை அடைந்தோம்.  

(தொடரும்) 

 

39 கருத்துகள்:

  1. ஆஞ்சநேயர் தரிசனத்தோடு துவங்கியது மனசுக்கு இதமாக இருந்தது. கோயிலும் அழகு.

    விஜய நந்தரின் கிருஷ்ண ப்ரேமையும்
    டகோர் துவாரகை தல வரலாற்றுக் கதையும் சுவாரஸ்யம். தலப்படமும்
    கண்கொள்ளா காட்சி.
    கோமதி ஏரியைப் பார்த்ததில் சந்தோஷம்.
    ஸ்ரீசரஸ்வதி கோயில்,
    சாரதாம்பாள் கோயில் படங்கள் மனதிற்கு இதமாக இருந்தது.

    அடுத்த வார வாசிப்புக்குக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் செல்லும் யாத்திரைக் குழுவை நடத்துபவர், ஆஞ்சநேயர் கோவில் தரிசனத்தோடுதான் யாத்திரையைத் துவங்குவார்.

      இந்த வாரம் டாகோர் துவாரகை முடிகிறது. தொடர்ந்து பயணிப்போம்.

      நீக்கு
  2. பயணக் கட்டுரை படங்களுடன் சிறப்பாக இருக்கிறது.

    எனக்கு நேற்று சாப்பிட்டதே மறந்து போகும் பொது உங்களுக்கு மட்டும் மாசங்களுக்கு முன் அந்த தேதியில் சாப்பிட்ட உணவு நினைவில் இருக்கிறது என்பது ஆச்சர்யம். தினமும் டைரி எழுதி வைத்துக் கொள்வீர்களா?
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஜெயகுமார் சார். சென்ற இடங்கள், உணவு போன்றவற்றைக் குறிப்பெடுத்துக்கொள்வேன். படங்களும் தொடர்ந்து எடுப்பதால் சென்ற நேரம், இடங்கள் மறக்காது.

      இதோ இரு வாரங்களில், கடினமாகத் தோன்றும் பூரி யாத்திரைக்குக் கிளம்புகிறேன். முழுவதும் பேருந்து பயணம். பல இடங்களில் தங்கும் வசதிக் குறைவு. எப்படி இருக்கப் போகிறதோ அந்த ஒன்பது நாட்கள்.

      நீக்கு
    2. அதெல்லாம் இருக்காது நெல்லை. கடினமாக எதுவும் இருக்காது எல்லாம் நல்லபடியா அமைந்து நீங்க நல்லபடியா போய் தரிசனம் செய்துட்டு வருவீங்க.

      கீதா

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார் என பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    யாத்திரை விபரங்கள், அழகான படங்கள் என பதிவு அருமை. ஒவ்வொன்றையும், கவனமாக ரசித்துப்படித்து மனதில் ஏற்ற வேண்டும். அப்போதுதான் தாங்கள் கோவில் யாத்திரையில், நானும் முழுதாக கலந்து கொண்ட திருப்தி வரும். என்பது என் நம்பிக்கை. நேற்றும் என்னால் வலைப்பதிவுக்கு வர இயலவில்லை. உறவுகள், அவர்களுக்கான வேலைகள் என பொழுது பறந்து விட்டது. இன்றும் மதியத்திற்கு பிறகு வந்து (வேலைகளை முடித்தபின்) பதிவை படித்து கருத்தை தருகிறேன். ஸ்ரீராம் சகோதரரும் மன்னிக்கவும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அக்கா...  மன்னிப்பா?   எதற்கு பெரிய வார்த்தை...  நேரம் கிடைக்கும்போது வாருங்கள்.  இது பொழுதுபோக்கும் இடம்தான்.  நமது தேவைகள்தான் முதலிடம் பிடிக்கும். 

      நீக்கு
    2. வாங்க கமலா ஹரிஹரன் மேடம்... தினப்படி வேலைகள் பயணங்கள் என எல்லோருக்கும் வாழ்க்கை பிசியாகப் போகிறது. அதனால் வருவதில் தாமதம் ஆனாலோ இல்லை பதிவுக்கு வரமுடியாவிட்டாலோ பாதகமில்லை.

      நீக்கு
    3. நானும் சென்ற இரு வாரங்களில் நெல்லை மற்றும் சென்னை என இரு பயணங்கள். அதனால் பல பதிவுகளைப் படித்தாலும் கருத்திடவில்லை. சிலவற்றிர்க்கு வெகு தாமதமாக்க் கருத்திட்டாலும் படிக்க ஆளில்லை.

      ஞாயிறில் ஏதேனும் கோவில் உலாவா?

      நீக்கு
    4. வணக்கம் ஸ்ரீராம் சகோதரரே

      தங்களின் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி. வலைத்தளம் பொழுது போக்கும் இடமென்றாலும், எபி. யின் ஒவ்வொரு கிழமைகளிலும், ஏராளமான விஷயங்களை, ஒவ்வொருவரின் அனுபவங்களை படித்து அறிந்து கொள்கிறேன். எந்த ஒரு பதிவுக்கும் கருத்துரைகள் என்ற எதிர்பார்ப்பு யாவருக்கும் இருக்குமல்லவா!! என் தாமதத்தினால் குறிப்பிட்ட நேரத்தில், கருத்துரைகளை தர முடியாமல் போனதற்காக வருத்தம் தெரிவித்தேன். வேறு ஒன்றுமில்லை.. இதோ இப்போதும், தாமதமாக இன்றுதான் வர முடிகிறது. கருத்துக்கு நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    5. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

      நீங்கள் பதிலாக கூறியிருப்பவைகள் உண்மைதான். இருப்பினும், ஞாயிறு பதிவுகளாக தங்களின் கோவில் யாத்திரை பதிவுகள் நல்லதொரு விபரங்களை தெரிவிக்கிறது. நாங்கள் செல்ல முடியாத இடங்களை உங்கள் பதிவின் வாயிலாக படித்து மகிழ்வடைகிறோம் .

      பயணங்கள் வரும் போது என்னாலும் பல பதிவுகளை படிக்க இயலாமல் போய் விட்டது.

      /அதனால் பல பதிவுகளைப் படித்தாலும் கருத்திடவில்லை. சிலவற்றிர்க்கு வெகு தாமதமாக்க் கருத்திட்டாலும் படிக்க ஆளில்லை. /

      ஹா ஹா ஹா.சில சமயங்களில் அவ்விதம் நேர்ந்து விடுகிறது. ஆனால், நம் நட்பு வட்டத்தில், சகோதர சகோதரிகள் பெரும்பான்மையாக உடனுக்குடன் பதில் கருத்து தந்து விடுகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் என் பாராட்டுக்கள்.

      இந்த ஞாயறில் நாங்கள் எங்கும் பயணம் மேற் கொள்ளவில்லை. நேற்று தைக் கிருத்திகை என்பதால் முருகனை தரிசித்து வந்தோம். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    6. கமலா ஹரிஹரன் மேடம்... நீங்கள் சொல்லியிருப்பது உண்மைதான். ஊரில் இருந்தாலும், கிடைக்கும் நேரத்தில் கருத்தைப் பதிய விட்டுவிட்டால் மீண்டும் தளத்திற்கு வர வெகு நேரமாகவிடுகிறது.

      நீக்கு
  5. தகவல்கள் படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது தமிழரே...

    பதிலளிநீக்கு
  6. மிக அருமையான பயண விவரங்கள்.

    //யாத்திரை என்பது டைம் டேபிள் போட்டு மட்டும் போவதல்ல. பெருமாள், தரிசனம் தரவேணும் என்று நினைத்தால் மட்டுமே தரிசனம் வாய்க்கும். //

    உண்மை.

    அனுமன் கோவில்,டாகோர் துவாரகை கோவில் படங்கள் நன்றாக இருக்கிறது. இணையத்தில் எடுத்த படங்கள் மூலம் ஸ்ரீ கிருஷ்ணரை தரிசனம் செய்து கொண்டேன்.
    சாரதா கோவில், வேறு சரஸ்வதி கோவில் வேறா? கோமதி ஏரி படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது. தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அரசு மேடம்...இரண்டு கோவில்கள் தரிசனம் செய்தோம் (டாகோர் துவாரகை தவிர). தொடர்ந்து வருவதற்கு நன்றி.

      நீக்கு
  7. //இரு வாரங்களில், கடினமாகத் தோன்றும் பூரி யாத்திரைக்குக் கிளம்புகிறேன்//

    பயணம் இனிதாக அமைத்து தருவார் பூரி ஜெகன்நாதர் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியே நம்புகிறேன் கோமதி அரசு மேடம்..... ஆனால் பயணம் முழுவதும் பேருந்தில் என்பதால் கொஞ்சம் கஷ்டமாக இருக்குமோ என்று தோன்றுகிறது.

      நீக்கு
  8. பஞ்ச துவாரகைகள் தரிசனங்கள் விபரங்கள் விரிவாக அறிந்தோம்.

    கோவில்கள் தரிசித்தோம். கோமதி ஏரியும் கண்டோம்.

    பதிலளிநீக்கு
  9. ஒவ்வொன்றும் மிக விவரமாகத் தொடங்கியதிலிருந்து கொடுத்திருக்கீங்க நெல்லை. சூப்பர்.

    ஹனுமன் கோயில் ஆஹா! தொடக்கமே ஹனுமன் சுழி போட்டாச்சு. தங்கிய இடம் சாப்பாடு எல்லாமே இதுவரை நல்லா இருக்கு.

    படங்கள் எல்லாம் சூப்பர். டாகோர் துவாரகை- பெயரே வித்தியாசமா இருக்கு.

    கோமதி ஏரி? நதியா? அழகா இருக்கே. பெரிசு போல!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நதியா இப்பவும்கூட அழகாகத்தான் இருக்கிறார். (பூவே பூச்சூடவா)

      நீக்கு
    2. வாங்க கீதா ரங்கன். டாகோர் துவாரகைல கோமதி ஏரின்னு சொல்றாங்க. மேப் பார்த்தால் இங்கிருந்து கோமதி துவாரகை வரை ஒரு கனெக்‌ஷன் இருக்கிறது. ஏரி மிகப் பெரியது.

      நீக்கு
    3. ந்தியாவை இன்னும் நினைவில் வைத்திருக்கிறாரா கில்லர்ஜி?

      நீக்கு
  10. ஓகே மீண்டும் போய் பார்த்துவிட்டேன் கோமதி ஏரிதான்.

    நானும் சில நாள் பயணம் என்றால் உடன் உடன் துவைத்துப் போட்டு கொடி க்ளிப் எல்லாம் கொண்டு செல்வதுண்டு. காயப் போட்டு. இல்லைனா எக்கச்சக்கமா சுமக்க வேண்டுமே.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த பூரி யாத்திரையில் ஒரு நாள் (யாத்திரை மத்தி) தவிர மற்ற நாட்களில் துவைக்கும் வசதி இல்லை. ஆறு செட் உடை. எப்படிக் கொண்டு செல்லப் போகிறோம் என்ற யோசனை.

      நீக்கு
  11. சிறப்பான தகவல்கள். டாக்கோர் துவாரகா ஜி சென்று வந்த நினைவு எனக்குள்ளும்.

    Bபன்சால் - Bபன்சல். பொதுவாக இந்தப் பெயர் கொண்டவர்கள் Bபனியா என்று சொல்லக் கூடிய வணிகர்கள். அகர்வால், Bபன்சல் என்ற Surname கொண்டவர்கள் அனைவரும் Bபனியாக்கள் தான்.

    படங்களும் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க தில்லி வெங்கட். நீங்கள் இந்தக் கோவில்களுக்கெல்லாம் சென்று வந்திருப்பீர்கள்.

      Bபன்சல் பேருந்துதான் இந்த யாத்திரையை நடத்துபவர் உபயோகிக்கிறார், ஐம்பது வருடங்களாக.திருத்தத்திற்கு நன்றி.

      நீக்கு
  12. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

    கோவில் யாத்திரை பதிவும், படங்களும் நன்றாக உள்ளது. யாத்திரை செல்லும் போது, பயணித்த விபரங்கள், அதற்காக ஆகும் செலவு, அங்கு தரப்பட்ட உணவு வகைகள் என அனைத்தையும் நினைவில் கொண்டு தந்திருப்பது அருமை.

    இன்றைய தினத்தில் ஆஞ்சநேயர் தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி. டாகோர் துவாரகை கிருஷ்ணரையும் தரிசித்துக் கொண்டேன். விஜயாநந்தன் என்ற யாதவ குலத்தவர் மீண்டும் நீண்ட வருடங்களுக்குப் பின் பிறப்பெடுத்தவரைப் பற்றிய கதை அருமை. அந்த கிருஷ்ண விக்ரஹம் டாகோர் துவாரகையில் பிரதிஷ்டை ஆன பின் மீண்டும் ஏன் கிருஷணபரமாத்மா சரஸ்வதி நதியில் தன்னைத் தேடச் சொன்னார்.மூலதுவாரகையில் சென்றடையும் விருப்பமா? அங்குதான் கிருஷ்ண விக்ரகம் சின்னதாக உள்ளதுவா?

    பிரசாதமாக தரப்படும் பாலுக்கும் பணமா? அதில் ஏதும் விஷேடேமா?

    கோமதி ஆறு கடல் போல் பெரிதாக பரந்து உள்ளது. சரஸ்வதி கோவில், சாரதாம்பாள் கோவில் தரிசனங்களும் பெற்றுக் கொண்டேன். சாரதாம்பாள் கோவில் விமானம் தாமரை இதழ்களைப் போல் அமைத்திருப்பது நன்றாக உள்ளது. தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தன்னுடைய உருவை மிக ஆசைப்பட்டுத் தன் பக்தன் டாகோர் துவாரகையில் வைத்துக்கொண்டுவிட்டதாலும், தன்னுடைய இடமான கோமதிதுவாரகையில் தன் உரு வேண்டும் என பூசாரிகள் கேட்டுக்கொண்டதாலும் அவர் இவ்வாறு சொன்னாராம்.

      இன்னும் சில வாரங்களில் செல்லும் பூரி யாத்திரைக்கான தயாரிப்பு வேலைகளில் இருந்தபோது, பூரி தலம் பற்றியும் படித்தேன். அதன்படி, அங்கும், பூரி ஜெகன்னாதர் திருவுருவச் சிலையை, தனி அறையில் செதுக்கும்போது, முடிவடைவது வரை காத்திராமல் பாதியிலேயே கதவைத் திறந்துவிடுகிறார்கள். அதனால் பூரி ஜெகன்னாதர், முழுவதும் முடிந்த உருவமாக இல்லை என்று படித்தேன்.

      நீக்கு
    2. பல வட இந்தியக் கோவில்களில் கோவில் பிரசாதமாக நம்மூர் போல பொங்கல்லாம் தரப்படுவதில்லை. சில பல கோயில்களில் இந்த மாதிரித்தான். வரும் வாரங்களில் இது பற்றி வரும். நன்றி கமலா ஹரிஹரன் மேடம்.

      நீக்கு
    3. வணக்கம் சகோதரரே

      நல்லது. தங்களது விபரமான பதிலில் கோமதி துவாரகையில் தன்னை ப்ரதிஷ்டை செய்வதற்காக கண்ணன் நடத்திய லீலைகளை தெரிந்து கொண்டேன். பூரியிலும் அவ்வாறே என நீங்கள் சொல்லி தெரிந்து கொண்டேன்.

      தங்களது பூரி ஜெகன்னாதர் பிரயாணம் நல்லபடியாக நடந்து அவரின் தரிசனம் நல்லபடியாக கிடைக்கவும் இறைவனை வேண்டிக் கொள்கிறேன். நீங்கள் சென்று வந்த பின், எங்களுக்கும் உங்கள் பதிவின் வாயிலாக அவரை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்ற ஆவலில் உள்ளேன். பதில் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  13. சென்றதுமே துணிகளைத் துவைத்து அலசி காயப்போட க்ளிப்பு, கயிறு எல்லாம் கொண்டு போயிருந்தீர்கள் என்பது நல்ல ஐடியா, நாமும் இனி பயணம் செய்யும் போது செய்யலாமே என்று. நெல்லை நீங்கள் நிறைய இப்படியான பயணங்கள் மேற்கொள்வதால் டிப்ஸும் கிடைக்கின்றன எங்களுக்கு இலவசமாக.

    அருமையான விவரணங்கள். அதுவும் படங்களுடன் கொடுத்திருப்பது புரிந்து கொள்ள முடிகிறது.

    அந்த ஸ்ரீ சாந்தாராம் என்ன என்பதை யோசித்து வருகையில் கீழே படங்கள் புரிந்துவிட்டது.

    ஜெயகுமார் சார் கேட்டிருப்பதில் உங்கள் பதிலில் நீங்கள் கூறியிருப்பது போல் டயரியில் நீங்கள் குறித்து வைப்பது எனக்கும் அப்பழக்கம் உண்டு. நல்ல ஐடியா. ஆம் இடத்தின் பெயர், தேதி என்று குறித்து வைத்துக் கொண்டால் மிகவும் உதவியாக இருக்கும். இப்படியான பல ஐடியாக்கள் உங்கள் யாத்திரை விவரணத்திலிருந்து கிடைக்கிறது.

    இறை தரிசனத்திற்கு இறைவன் நமக்கு அனுமதி கொடுக்க வேண்டும். இல்லை என்றால் அது நமக்குக் கிடைப்பது கடினம்.

    நாம் நினைக்கிறோம் நாமாகப் ப்ளான் பண்ணிச் செல்கிறோம் என்று. இல்லை இறைவன் அருள் இல்லை என்றால் நடக்காது. அதற்குத்தான் நாம் பிரார்த்தனையும் இறைவா உன்னைக் காண உன் இடம் வந்து தரிசிக்க, சிந்தையில் சில நாட்கள் அங்கிருந்திட அருள் தா என்று வேண்டிக்கொள்ள வேண்டும்.
    பூரி ஜெகன்நாதர் அருளும் கிடைக்கட்டும்.

    வெங்கட்ஜி, இடுகையில் மட்டுமல்ல பின்னுரையிலும் தகவல்கள் தருகிறார் நமக்கு,

    கருத்து கொடுக்கத் தாமதமாகிவிட்டது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் கடந்த 3 நாட்களாக சேலத்துக்குச் சென்றிருந்தேன். அதனைப் பற்றி நேரம் வாய்க்கும்போது எழுதுகிறேன். சேலத்தினால் பிழைத்துக்கொண்டிருப்பவர்களின் பிழைப்பில் நான் எதற்கு மண்ணை அள்ளிப்போடவேண்டும்?

      பதில் கொடுக்க தாமதமாகிவிட்டது.

      நீக்கு
    2. யாத்திரையில் பல நேரங்களில் அகாலங்களில்தான் நாம் தங்குமிடத்திற்குப் போய்ச் சேருவோம். அதனால் நான் உடனே தூங்க நினைக்காமல், வாய்ப்பிருந்தால் துணிகளைத் தோய்த்துவிடுவேன். சாப்பிட்ட உணவுதான் மறந்துபோய்விடும். அதனால் அதனைக் குறித்துக்கொண்டுவிடுவேன். இடங்கள் மறக்காது, காரணம் நான் நிறைய புகைப்படங்களும், அதிலும் இடத்தின் பெயர் தெரியுமாறு எடுத்துவிடுவேன். நான் 2004 மே மாதம் பயணித்திருக்கிறேனா, பொதுவாக என்ன செய்தேன் என்பது என் புகைப்படங்களிலிருந்து தெரிந்துவிடும்.

      என்னுடைய பிரயாணப் பெட்டியில் (Trolly bag) சங்கிலி, பூட்டு (இரயில் பயணத்திற்காக), முக கவசங்கள் 2, Ear phone, கிளிப்பு, பயணத்தைப் பொறுத்து கயிறு, சிறிய பிளாஸ்டிக் பையில் டூத் பிரஷ், பேஸ்ட், ஷேவிங் செட், சிறிய சோப் முதலியவைகளை வைத்திருப்பேன். இரயில் பயணத்தில் காலையில் பெட்டியைக் குடைந்துகொண்டிருக்காமல், சைட் bagல் இவைகளை எடுக்க சௌகரியமாக இருக்கும்.

      பயணம் செல்வதற்கு முன்பு, அந்த இடங்களைப் பற்றிக் கண்டிப்பாகத் தெரிந்துகொள்வேன். இல்லைனா, கோவில்ல, முக்கியமாக தரிசிக்க வேண்டியவைகள் தெரியாது. உதாரணம் காசி விசாலாக்ஷி கோவிலில், மூலவருக்குப் பின்புறம் உள்ள மூலவர்தான் original என்று படித்துள்ளதால், அவரையும் தரிசிப்பேன். இதுபோல ஸ்ரீரங்கம் தாயார் சன்னிதியில் உள்ள இரண்டு மூலவர்களையும் தரிசனம் செய்வேன். இதுபோன்று பல.

      நீக்கு
    3. என்னுடைய குறைகள், கொஞ்சம் அதிகமாக துணிகள் எடுத்துச் செல்வது (முன் ஜாக்கிரதை முத்தண்ணா). இதனால் பயனும் உண்டு, சமீபத்தைய பயணம் போல. பெரும்பாலும் ஒரு செட் உடை, துண்டு போன்றவை உபயோகம் ஆகாமலேயே திரும்ப வரும். இன்னொரு குறை, கொஞ்சம் செல்ஃபிஷ் ஆக இருப்பது தோற்றமளிப்பது. இதுவும் காரணமாகத்தான் என்பதால் எனக்கு அது தவறாகத் தோன்றாது.

      உங்கள் நெடிய கருத்துக்கு நன்றி துளசிதரன் சார்.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!