வெள்ளி, 26 ஜனவரி, 2024

வெள்ளி வீடியோ : காணும் இந்த பூக்கள் மேலே காயம் என்ன காயமோ காற்சலங்கையோடு வண்டு பாடிச் சென்ற மாயமோ

 

அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள்.

நீல மயில் மீது ஞாலம் வலம் வந்த நீதான் எமக்கருள வேண்டும் முருகா...

இன்றைய தனிப்பாடல் சீர்காழி கோவிந்தஹராஜன் பாடிய பாடல்.

நீல மயில் மீது ஞாலம் வலம் வந்த 
நீ தான் எனக்கருள வேண்டும் முருகா! (நீல மயில் மீது)

நீலத் திருமாலின் சிந்தை மகிழ் மருகா 
சேவற்கொடி அழகாய் தாங்கி நிற்கும் சண்முகா! (நீல மயில் மீது)

வேலினைக் கையிலேந்தும் வேலவனே 
எழில் வேழ முகம் படைத்தோன் சோதரனே! 
வேல் விழி குறமாதின் மணாளனே 
என் சிந்தைக்கு உகந்தவனே கந்தனே குகனே! 
நீல மயில் மீது ஞாலம் வலம் வந்த
நீ தான் எனக்கருள வேண்டும் முருகா!


===========================================================================================

வேலைக்காரன்.  

இந்தத் தலைப்பில் தமிழில் மூன்று படங்கள் வெளிவந்துள்ளன.  முதலாவது 1952 ஆம் ஆண்டு டி ஆர் மகாலிங்கம் நடித்த படம்.  ஆர். சுதர்சனம் இசை.

இரண்டாவது ரஜினி - அமலா நடித்த படம்.  

மூன்றாவது சிவகார்த்திகேயன் நடித்த படம் ஒன்று.  இது 2017 ஆம் ஆண்டு வெளியானது.

நமக்கு முதலும் வேண்டாம், மூன்றாவதும் வேண்டாம்.  நடுவில் வந்த இளையராஜா படம்தான் வேண்டும்.  சரியா?

ரஜினி - அழகு அமலா நடித்த இந்தப் படத்திலிருந்து மு மேத்தா எழுதிய (படத்தில் எல்லா பாடல்களையும் அவர்தான் எழுதி இருக்கிறார்) வா வா வா கண்ணா வா பாடல்.  இந்தப் பாடல் எனக்கும் பாஸுக்கும் கொஞ்சம் விசேஷம்.  ஹிஹிஹி.. 

இந்தப் படத்துக்கு ரஜினி காசு எதுவும் வாங்கி கொள்ளாமல் நடித்தாராம்.  காரணம் அவர் இவர்கள் பேனரில் நடித்த முந்தைய படமான ஸ்ரீ ராகவேந்திரர் தந்த நஷ்டம்.

இளையராஜா இசையில் மனோ - சித்ரா பாடிய பாடல்.  பாடலே இனிமை.  குறிப்பாக சரணங்களின் இரண்டாம்பகுதி கேட்க மிகவும் இனிமை. 

வா வா வா வா கண்ணா வா

வா வா வா வா கண்ணா வா தா
தா தா தா கவிதை தா
உனக்கொரு சிறுகதை நான் இனிமையில்
தொட தொட தொடர்கதைதான் தனிமையில்
உனக்கொரு சிறுகதை நான்
தொடத் தொடதொடர்கதை தான்
உருகி உருகி இதை படித்திட வா வா வா வா
கண்ணா வா வா வா வா

வானில் காணும் வானவில்லின் வண்ணம் ஏழு வண்ணமோ
தோகை உந்தன் தேகம் சூட மேகமாடை பின்னுமோ
காணும் இந்த பூக்கள் மேலே காயம் என்ன காயமோ
காற்சலங்கையோடு வண்டு பாடிச் சென்ற மாயமோ
நூறு நூறு தீபமாய் வானில் அங்கு கார்த்திகை
வாழும் காதல் சின்னமாய் ஆகும் எங்கள் யாத்திரை
நாலு கண்கள் பாதை போட நாகரீகம் தொடர்ந்தது

வா வா வா வா கண்ணா வா 

ஆசையோடு பேச வேண்டும் ஆயுள் இங்கு கொஞ்சமே
ஆவலாக வந்த பின்னும் தஞ்சம் இந்த நெஞ்சமே
ஆசை கொண்ட தேகம் ரெண்டு நீதிமன்றம் போகுமே
பேசத் தேவை இல்லை என்றே அங்கு தீர்ப்பு ஆகுமே
ராக வீணை போலவே நானும் வந்து போகவோ
தேகம் வீணை ஆகவே தேவகீதம் பாடவோ
நானும் நீயும் காதல் கைதி எண்ண எண்ண இனிக்குது

வா வா வா  அன்பே வா 

காளிதாசன் காண வேண்டும் காவியங்கள் சொல்லுவான்
கம்பநாடன் உன்னை கண்டு சீதை என்று துள்ளுவான்
ஷாஜகானை பார்த்ததில்லை நானும் உன்னை பார்க்கிறேன்
தாகம் கொண்ட தேகம் ஒன்று பாடும் பாடல் கேட்கிறேன்
தாஜ்மஹாலின் காதிலே ராமகாதை கூறலாம்
மாறும் இந்த பூமியில் மதங்கள் ஒன்று சேரலாம்
பாதி நீயும் பாதி நானும் ஜோதியாக இணைந்திட


வா வா வா வா கண்ணா வா தா தா தா தா கவிதை தா


==========================================================================



நேற்று திண்டுக்கல் தனபாலன் அவர்களின்  தந்தை மறைந்து விட்டதாக தகவல் வந்திருக்கிறது.  DDக்கும் அவர் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.  இந்தத் துயரத்தைத் தாங்கும் வலிமையை அவர்களுக்கு இறைவன் வழங்கிட பிரார்த்திக்கிறோம்.

16 கருத்துகள்:

  1. அனைவருக்கும் காலை வணக்கம்!. குடியரசு தின வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  2. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. திரு தனபாலன் அவர்களின்  தந்தை மறைந்து விட்டதாக கிடைத்துள்ள தகவல் மிகவும் வருத்தம்... 

    இந்தத் துயரத்தைத் தாங்கும் வலிமையை அவர்களுக்கு இறைவன் வழங்கிட வேண்டும்..

    பதிலளிநீக்கு
  4. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார் என பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் தந்தை இறைவனடி சேர்ந்து விட்டதாக வந்த தகவல் மனதை வருத்தமடையச் செய்கிறது.

    இந்த துயரத்தை தாங்கும் மன வலிமையை சகோதரர் தனபாலன் அவர்களுக்கும், அவர் குடும்பத்திற்கும் இறைவன் தர வேண்டுமாய் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    அன்புடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. திண்டுக்கல் தனபாலன் ஜி அவர்கள் தந்தையாரின் ஆத்மா இறைவனின் திருப்பாதத்தில் இளைப்பாறட்டும்.

    பதிலளிநீக்கு
  7. திண்டுக்கல் தன்பாலன் அவர்கள் தந்தை இறைவனடி சென்றது அறிந்தேன், ஆழ்ந்த இரங்கல்.
    அவருக்கும், அவர் குடும்பத்தினர்களுக்கும் ஆறுதலையும், தேறுதலையும் தர பிரார்த்திக்கிறேன் இறைவனிடம்.

    பதிலளிநீக்கு
  8. இன்று பகிர்ந்த முருகன் பாடல் அடிக்கடி கேட்ட பாடல். திண்டுக்கல் தனபாலன் அப்பா முருகன் பாடல்களை பாடுவார் என்று சொல்லி இருக்கிறார் தனபாலன்.

    பதிலளிநீக்கு
  9. வா வா வா வா கண்ணா வா..

    பாடல் இனிமை தான்..

    ஆனால் இன்றைய சூழ்நிலையில் ரசிக்க முடியவில்லை..

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாடல்கள் பகிர்வில் முதல் பாடல் எனக்கு மிகவும் பிடித்தமானது. மனப்பாடமாக ஆகிவிட்டதால் நானும் அடிக்கடி பக்தியுடன் பாடுவேன். சீர்காழி அவர்களின் முருகன் பாடல்களில் அடிக்கடி கேட்டு மகிழ்ந்துள்ளேன்.

    இரண்டாவது திரைப்பட பாடலும் கேட்டதாக நினைவில் உள்ளது. பாடலை இனிதான் கேட்க வேண்டும். கேட்கிறேன். உங்களுக்கும் உங்கள் பாஸுக்கும் இது பிடித்த பாடல் என்பதில் மகிழ்ச்சி. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  11. இரண்டு பாடல்களும் அடிக்கடி கேட்ட பாடல்.
    இரண்டாவது பாடல் உங்கள் இருவருக்கும் பிடித்த பாடல் என்பது அறிந்து கொண்டேன். பழைய நினைவுகளை தரும் பாடல் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    இரண்டாவது பாடலும் இப்போது கேட்டேன். ஏற்கனவே அடிக்கடி கேட்ட பாடல்தான். பாடல் வரிகள், இசை பாடியவர்கள் குரல் இனிமை அனைத்தும் மயங்க வைக்கிறது. நான் முதலில் எஸ். பி. பி என நினைத்தேன். பின் தாங்கள் தந்த விபரங்களில் மனோ என அறிந்தேன். மனோ அவர்களின் குரலும் எனக்கு (எனக்கு மட்டுந்தான்.. வீட்டில் குழந்தைகள் அதை மறுத்து விடுவார்கள். தாங்களும் மறுப்பீர்கள் என்று தெரியும். ஹா ஹா. ஹா.) சட்டென எஸ். பி. பியை நினைவுபடுத்தும். படம் பார்த்ததாக நினைவில்லை. ஒரு வேளை இப்போது பார்த்தால் தொ. காட்சியில் ஏற்கனவே பார்த்த நினைவு வந்தாலும் வரலாம்.:)) எல்லாம் மறதிதான் காரணம். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  13. முதல் பாடல் நிறைய கேட்டிருக்கிறேன்.... ரொம்ப பிடிக்கும். உபயம் ஊரிலுள்ள கோயில். ...

    கீதா

    பதிலளிநீக்கு
  14. திண்டுக்கல் தனபாலன் அவர்களின் தந்தை மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். குடும்பத்தினர்கள் துயரில் இருந்து மீள இறைவன் அருளை வேண்டுகிறோம்.

    இரண்டு பாடல்களும் கேட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  15. இரண்டாவது பாடலும் அருமையான பாடல் ஸ்ரீராம். பிடித்த பாடல்.

    இந்தப் பாட்டு கல்யாணி ராகம் என்பது டக்கென்று தெரிகிறதா? ஸ்ரீராம். ராஜா கல்யாணி ராகத்தில் பல பாடல்கள் ஆனா ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாகப் போட்டிருக்கிறார் ...

    கீதா

    பதிலளிநீக்கு
  16. இரண்டு பாடல்களுமே கேட்டிருக்கிறேன். முதல் பாடல் மிகவும் பிடித்த பாடல். இரண்டாவது பாடலை இப்போது கேட்ட போதுதான் நினைவுக்கு வந்தது. நல்ல பாடல். பகிர்வுக்கு மிக்க நன்றி, ஸ்ரீராம்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!