புதன், 31 ஜனவரி, 2024

பாலுக்கும் உண்டோ ஹீட் யூனிட் !

 

சென்ற வாரமும் எங்களை யாரும் கேள்வி கேட்காததால் --- 

இதோ எங்கள் கேள்விகள் :

1) இன்ஸ்டன்ட் காப்பி சுவையா இல்லை டிக்காஷன் காப்பி சுவையா ?

1 a ) டிக்காஷன் காப்பி என்றால், சிக்கரி சேர்ந்ததா - அல்லது பியூர் காபியா - காபி : சிக்கரி என்ன விகிதம்? 

2) கத்தரி வெயில் என்று பெயர் வரக் காரணம் என்ன? 

3) ரொம்ப நாள் பழகியவர் ஒருவர் - ஏதோ மனஸ்தாபத்தால் கொஞ்சநாள் விலகி இருந்தவர் ஏதோ ஒரு குடும்பக் கொண்டாட்டத்தில் உங்களைப் பார்த்து புன்னகை செய்கிறார் - நீங்கள் என்ன செய்வீர்கள்? 

4) உங்களின் பலம் என்ன? பலவீனம் என்ன?

5) உங்கள் வாழ்க்கையில் இதுவரை தீராத அல்லது நிறைவேற்ற முடியாமல் போன ஆசை ஏதும் உண்டா?

= = = = = = = = =

KGG பக்கம் : 

நாகை JTS கணக்கு வாத்தியார்கள் பற்றி சிறு குறிப்புகள். 

மூன்று வருடங்களில் நான்கு கணக்கு வாத்தியார்களை நாங்கள் பார்த்தோம். 

முதலில் வந்த கணக்கு வாத்தியார் ரொம்ப ஸ்டைல் ஆக ஆங்கிலம் பேசுவார். ஆனால் அல்லது அதனால் - ரொம்ப மாணவர்களுக்கு கணக்கு பாடம் புரிந்துகொள்வது கடினமானது. நவ் லெட் அஸ் டேக் நேதர் (அனதர்!)  ப்ராப்ளம்  .. வேர் .. 

அடுத்து வந்த கணக்கு ஆசிரியர் ஒவ்வொரு அத்தியாயமும் விளக்கிவிட்டு, ஒரே ஒரு 'மாதிரி' கணக்கை போர்டில் எழுதி அதை முழுவதும் போட்டுக் காட்டிவிட்டு, அந்த அத்தியாயத்தில் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள பயிற்சி கணக்குகளை எங்கள் நோட்டில், எங்களைப் போடச்சொல்லிவிட்டு , தன் கையில் உள்ள Erle stanley gardner - பெர்ரி மேசன் நாவலைப் படித்துக் கொண்டிருப்பார். 

ஒருநாள் அல்ஜீப்ரா பகுதியில் அவர் போர்டில் போட்டது ஏதோ ஒரு milk - calories சம்பந்தப்பட்ட x, y கணக்கு. எங்களுக்கு அப்போது calory என்றால் என்ன என்று தெரியாது. ஜெயபால் என்னும் பையன் - ஆசிரியரிடம் - " சார் calory என்றால் என்ன?" என்று கேட்டான். அதற்கு அவர் மிகவும் எளிதாக " calory என்பது heat சம்பந்தப்பட்ட ஒரு அளவை" என்று மட்டும் சொல்லிவிட்டு சிக்கலான அந்தக் கணக்கை தொடர்ந்து போட்டுக்கொண்டிருந்தார். 

என்னென்னவோ செய்து பார்த்தாலும் கணக்கின் விடை நெகட்டிவ் வேல்யூ வந்துகொண்டிருந்தது. அதாவது கணக்கில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் படி பாலின் உஷ்ணத்தை குறிப்பிட்டுள்ள அளவுக்கு ஏற்ற -348 calories தேவை என்றே வந்துகொண்டு இருந்தது. அவர் ஒவ்வொரு ஸ்டெப் ஆக மீண்டும் மீண்டும் சரிபார்த்தார் - ஊஹூம் - பலனில்லை. 

மீண்டும் ஜெயபால் அவரிடம், " என்ன சார் பிரச்சனை?" என்று கேட்டான். 

அதற்கு அவர் " இந்தக் கணக்குக்கு நெகட்டிவ் ஆன்சர் வரக்கூடாது. பாசிட்டிவ் வேல்யூ வரவேண்டும்." என்றார். 

ஜெயபால் உடனே " சார் உங்க ஆன்சர் சரிதான் " என்றான். 

அவர் உடனே மேலும் குழப்பமாகி, அவனிடம் " எப்படி?" என்று கேட்டார். 

ஜெயபால் அதற்கு " சார் நீங்க இது heat பற்றிய கணக்கு என்கிறீர்கள். பால் உடம்புக்குக் குளிரச்சிதானே - ஹீட் இல்லையே அதனால்தான் நெகட்டிவ் வேல்யூ வருகிறது" என்றான். வகுப்பில் இருந்த எங்கள் எல்லோருக்கும் இது லாஜிகல் என்றே தோன்றியது. ஆசிரியர் ஒன்றும் சொல்லவில்லை. "இந்தக் கணக்கை நான் நாளை வந்து சரி செய்கிறேன். நீங்கள் இதைத் தவிர்த்து மீதி கணக்குகளை போடுங்கள்" என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். 

பிறகு பாலிடெக்னிக் படித்த காலத்தில்தான் எனக்கு அந்த calory கணக்குக்கு நெகட்டிவ் வேல்யூ வந்தது பற்றி ஜெயபால் சொன்ன விளக்கம் எவ்வளவு அபத்தம் என்று தெரிந்தது. அந்தக் காரணத்தை இங்கே நான் விவரிக்க ஆரம்பித்தால் உங்களுக்கு போர் அடிக்கும் என்பதால் சிறிய உதாரணத்துடன் விடுகின்றேன். - பப்பாளிப்பழம் உடம்புக்கு ஹீட் என்றும், பால் உடம்புக்குக் குளிர்ச்சி என்றும் வைத்துக்கொள்வோம். குறிப்பட்ட அளவு பப்பாளிப்பழ ஜாம் செய்ய 2700 கிலோ கலோரி தேவைப்படுகிறது என்றால், குறிப்பிட்ட அளவு பாலைக் காய்ச்ச ஏதாவது பாசிட்டிவ் வேல்யூ கலோரிதான் தேவைப்படும். நெகட்டிவ் வேல்யூ கலோரி கிடையாது. 

பிறகு வந்த கணித ஆசிரியர் தேவதாஸ்  என்பவர். 

வந்த முதல் நாளே போர்டில் பத்து கணக்குகளை எழுதிப் போட்டுவிட்டு எங்கள் எல்லோருக்கும் ஒரு சர்ப்ரைஸ் டெஸ்ட் என்று சொன்னார். அந்தக் கணக்குகளை ஒரு தாளில் அந்த வகுப்பிலேயே சால்வ் செய்யச் சொன்னார். பரீட்சைத் தாளில் எங்கள் பெயரை எழுதி மடித்துக் கொடுக்கச் சொன்னார். 

பத்து கணக்கும் மிகவும் கடினமான அல்ஜீப்ரா கணக்குகள். 

எங்கள் எல்லோருக்குமே தலை சுற்றி மயக்கம் வராத குறைதான். 

நான் எழுதிய பரீட்சை பேப்பருக்கு என்னுடைய சுய மதிப்பீட்டின் படி 28% மார்க் வந்தால் அதிகம் என்று நினைத்தேன். 

ஆனால் .. 

(தொடரும்) 


31 கருத்துகள்:

  1. 1) இன்ஸ்டன்ட் காப்பி சுவையா இல்லை டிக்காஷன் காப்பி சுவையா ?

    1 a ) டிக்காஷன் காப்பி என்றால், சிக்கரி சேர்ந்ததா - அல்லது பியூர் காபியா - காபி : சிக்கரி என்ன விகிதம்?

    எனக்கு பிடித்தது டிகாஷன் காபி 80:20 சிக்கரி சேர்த்து. பொதுவாக கேரளத்தில் காபி அவ்வளவு பிரபலம் இல்லை, ஆகவே காபிப்பொடி கிடைப்பதும் கஷ்டம். காபி போர்ட் தயவால் காபிப்பொடி வாங்கிக் கொண்டிருந்தேன். தற்போது கான்டினென்டல் காபி ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்குகிறேன்.

    2) கத்தரி வெயில் என்று பெயர் வரக் காரணம் என்ன?

    சுட்ட கத்திரிக்காய் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். கொஸ்து, பைங்கண் பர்த்தா துவையல் செய்ய சுடுவோம். அடுப்பில் சுடாமல் வெயிலில் சுட்டு எடுக்கும் அளவிற்கு வெயில் இருக்குமானால் அந்த வெயில் கத்திரி வெயில் எனப்படும்.

    3) ரொம்ப நாள் பழகியவர் ஒருவர் - ஏதோ மனஸ்தாபத்தால் கொஞ்சநாள் விலகி இருந்தவர் ஏதோ ஒரு குடும்பக் கொண்டாட்டத்தில் உங்களைப் பார்த்து புன்னகை செய்கிறார் - நீங்கள் என்ன செய, வீர்கள்?

    பதிலுக்கு ஒரு புன்னகை அவ்வளவு தான். தற்போது

    4) உங்களின் பலம் என்ன? பலவீனம் என்ன?

    பலம், பலவீனம் என்பவை மற்றவர் சொல்லி அறிவது.
    என்னுடைய பலம் என்று நான் நம்புவது analysis and planned activity (ஆராய்ந்து திட்டமிட்டு செயல்படுதல்), பலவீனம் எளிதில் ஏமாறுவது. இரக்கம் காட்டுவது.

    5) உங்கள் வாழ்க்கையில் இதுவரை தீராத அல்லது நிறைவேற்ற முடியாமல் போன ஆசை

    அவை ரகசியம்.
    Jayakumar​

    பதிலளிநீக்கு
  2. இதுவரை நிறைவேறாத ஆசை.... அதற்கு நான் முயற்சி எடுக்கவில்லை. -35 டிகிரி இருக்கும் குளிர் நாட்டில் (கேனடா போன்று) ஓரிரண்டு மாதங்கள் இருக்கவேண்டும் என்பது. (வீட்டுக்குள் சூடான உணவு கிடைத்துவிடும் இல்லையா?). அதாவது, வீட்டை விட்டு வெளியே சென்றால் முழங்கால் வரை புதையும்படி பனி இருக்கணும். பனிமழை பொழியும்போது நடக்கணும் என்றெல்லாம் ஆசை.

    ஆனால் பலரின் அனுபவப் பதிவுகள் எண்ணங்களைப் படிக்கும்போது, குளிர்காலம் மிக்க் கடுமையானது என்று அறிகிறேன். பையன் காணொளி காண்பித்து அவன் நடக்கும்போது என்ன பிரச்சனை என்றெல்லாம் சொல்லும்போது, நாம் நினைத்திருந்தபடி இருக்காதோ என்று எண்ணுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குளிர்ந்த வானம்
      குளிர்ந்த பூமி
      எங்கும் பனிமழை பொழிகிறது-
      நான் நடக்கையிலே
      முன் முழங்கால்கள்
      பனியில் புதைகிறது - ஹோஹ்ஹோஹஹோ!

      நீக்கு
  3. கேலரி என்பதே இன்டெரெஸ்டிங் சப்ஜெக்ட். வயிறு நிரம்பினாலும் கேலரி அதிகமாகாத வெள்ளரி, தர்பூசனி போன்றவை ஒருபுறம்... ஐம்பது கிராம் சாப்பிட்டாலும் எடையைக் கூட்ட வைக்கிற அல்வா போன்ற இனிப்புப் பண்டங்கள் ஒருபுறம்.... இது ஆச்சர்யம்தான்.

    250 கிராம்தானே என்று எண்ணி அல்வாவைச் சாப்பிட்டு ஒன்றரை கிலோ ஏறி, வி எல் சி சி மூலமாக இதனைப் புரிந்துகொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்லும் கலோரி வேறு எங்கள் கணக்கில் வந்த கலோரி வேறு. கணக்கில் வந்த கலோரி, கலோரி மீட்டர் கொண்டு அளக்கப்படும் specific heat.

      நீக்கு
    2. specific heat capacity
      nounPHYSICS
      noun: specific heat
      the heat required to raise the temperature of the unit mass of a given substance by a given amount (usually one degree).

      நீக்கு
  4. 250 சாப்பிட்டதால், 1500 ஏறிருச்சா! விஞ்ஞானம் ரொம்ப முன்னேறிக்கெடக்கு...

    பதிலளிநீக்கு
  5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  6. காப்பில ஆரம்பிக்குது இன்னிக்கு நாள். அதனாலே நுழைஞ்சாச்சு..

    1. இதென்ன கேள்வி? டிகாக்ஷன் காப்பிதான்.
    a. 85:15 தான் பிடித்த விகிதம். கோத்தாஸ் காப்பி இங்கே பிரமாதமா இருக்கு. டெல்லி போகும்போதும் இங்கேருந்து எடுத்திட்டுப்போறேன்
    2. வெண்டைக்காய் வெயில்னு சொன்னா வழவழா கொழகொழான்னு ஆயிருமே .. அதனாலேதான்.
    3. சின்னப் புன்னகையை நானும் தருவேன். மேற்கொண்டு நெருங்கினால், நான் பேசவும்கூடும்.
    4. பலம்: என் இருத்தல். பலவீனம்? அதேதான்.
    5. இதெல்லாமா யாரும் சொல்லுவாக!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிக்கனமான பதில் கருத்துரைகள் - நன்றி.
      அதிகாலையில் ஃபில்டர் காபி ஒரு தம்பளரில் வைத்துக்கொண்டு,
      டி ஆர் மகாலிங்கத்தின் குழல் - காபி ராக ஆலாபனையைக் கேட்டுக்கொண்டு மெது மெதுவாக காபியை உறிஞ்சிக் குடித்தால் சொர்க்க லோகம் - அதுதான்!

      நீக்கு
    2. Link-ஐத் திறந்து பார்க்கிறேன்.
      அதிகாலைக் காப்பியோடு புல்லாங்குழல்.. ஆஹா.

      சென்ற வாரம் ஏனோ டிஎம் கிருஷ்ணாவில் ஆழ்ந்திருந்தேன். மேல்வரும் மேதமை ...

      அப்புறம்.. அயோத்தி ராமர், அரசியல் லோக்கல் கிச்சடி, ஆஸ்திரேலியா, இந்தியா சம்பந்தப்பட்ட அதிரடி டெஸ்ட் மேட்ச்கள்.. இப்படிப் போகிறது பொழுது.

      நீக்கு
  7. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  8. டிகாக்ஷன் காஃபி! சிக்கரி சேர்க்காத காஃபி நம் வீட்டில்.
    Cappuccino, Cold Coffee இப்படித் தயாரிக்கும் போது instant coffee தான் அதில் நன்றாக இருக்கும்.

    2. முழுக் கத்தரிக்காயை க் கூட வெயிலில் வைத்தால் சுட்டுப் பொசுங்கும் அளவுக்கு வெயில் அதனால் கத்தரி வெயில் என்று சொல்கிறோம் என்பது என் புரிதல். அப்படிச் செய்ததுண்டு. கத்தரிக்காய் கத்தரி சுட்டு எடுத்து கொத்சு செய்ததுண்டு!!

    3 - கண்டிப்பாகப் புன்னகை செய்வேன். நல்லாருக்கீங்களா என்று கேட்பேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  9. அதிகாலையில் ஃபில்டர் காபி ஒரு தம்ளரில் வைத்துக் கொண்டு,
    ராக ஆலாபனையைக் கேட்டபடி காபியை உறிஞ்சிக் குடித்தால் சொர்க்க லோகம் - அதுதான்!..

    ஆகா!..
    பழைய வாழ்க்கை முறை நினைவுக்கு வந்து விட்டது..

    பதிலளிநீக்கு
  10. காபியுடன், மாண்டலின் - ஆஹா ஆஹா!!!

    பலம் - ஆஞ்சுவிற்குத் தன் பலமே தெரியாதாமே அது போல
    என் பலமே எனக்குத் தெரியாது!!!!!!

    பலவீனம் - அதுக்கென்ன நிறைய இருக்கு. இரக்க குணம் என்பதால் ஏமாந்துவிடுகிறேன். சில சமயம் உள் மனது எச்சரிக்கை செய்துவிடும். சமீபகாலமாகத் தாழ்வுமனப்பான்மை + கோபம்.

    5. நிறைவேறாத ஆசை - தள்ளி நின்று பதில் சொல்கிறேன்!!!!! எதிர்பார்ப்பில்லாமல் வாழ்வதற்கு முயற்சி.

    கீதா

    பதிலளிநீக்கு
  11. ஆ இன்று கணக்கு வகுப்பா!! நான் தூரத்தில் நிற்கிறேன்.

    நீங்க கண்கக்குல புலின்னு தெரிகிறது! எனக்குக் கிலி!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :)) இதில் கணக்கு அதிகம் கிடையாது. இடக்குகள் மட்டுமே!

      நீக்கு
  12. பில்ட்டர் காப்பி பிடிக்கும்.

    கத்தரி வெய்யிலுக்கு பதில் கூறிவிட்டார்கள்.

    புன்னகைப்பேன் பேசினால் பேசுவேன்.

    பலவீனம் இரக்கம்.

    Kgg பக்கம் நன்று.








    பதிலளிநீக்கு
  13. கணகு ஆசிரியர்களைப் பற்றிச் சொன்னதும் என் கணக்கு ஆசிரியர்கள் ஒவ்வொருவராய் வந்து நான் ஏன் இலக்கியம் படிக்கப் போனேன் என்று தெளிவுபடுத்திவிட்டார்கள்!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  14. கேள்விகளும் பதில்களும் அருமை.
    டிக்காஷன் காப்பி தான் அருமை, நான் காப்பியை விட்டு 30 வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது. வீட்டுக்கு வருகிறவர்களுக்கு பில்டர் காப்பி தான் போட்டு தருகிறேன், எல்லோரும் மிக நன்றாக இருப்பதாய் சொல்கிறார்கள்.


    //ரொம்ப நாள் பழகியவர் ஒருவர் - ஏதோ மனஸ்தாபத்தால் கொஞ்சநாள் விலகி இருந்தவர் ஏதோ ஒரு குடும்பக் கொண்டாட்டத்தில் உங்களைப் பார்த்து புன்னகை செய்கிறார் - நீங்கள் என்ன செய, வீர்கள்?//

    நானும் பதிலுக்கு புன்னகை செய்வேன்.


    கணக்கு வாத்தியார்கள் பற்றி சொன்னது அருமை.

    //உங்களின் பலம் என்ன? பலவீனம் என்ன?//

    என் பலம் முன்பு கணவர், இப்போது பிள்ளைகள்
    பலவீனம் இரக்கம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!