வியாழன், 25 ஜனவரி, 2024

கலாவதியும் காலாவதியும்

 ஏதோ சாக்லேட் வாங்கறதுதான்..  சாப்பிடறதுதான். 

அதற்கெல்லாம்  காலாவதி தேதி இருக்கும், அந்நாள் வரை அது விற்பனை ஆகாமல் கடையில் இருந்திருக்கும் - அதுவும் ஒரு பரபரப்பான கடையில் என்று நான் யோசித்துக் கூட பார்த்ததில்லை.

மாத்திரைகளே பெரும்பாலும் காலாவதி தேதியைத் தாண்டி சாப்பிட்டால் மருந்தின் வீர்யம் குறையுமே தவிர வேறு பெரிய உயிரிழப்பு ஆகும் விளைவுகள் எதுவும் ஏற்பாடாது என்று சொல்வார்கள்.  சில மருந்துகள் மட்டும் விதிவிலக்காக இருக்கலாம்.

கடந்த நவம்பர் மாதம் மருத்துவர் அறிவுரைப்படி வெர்ட்டின் மாத்திரை எடுத்துக் கொண்டேன்.  அவர் மூன்றுவேளை சாப்பிடச் சொல்லி இருந்தாலும் (8 Mg)நான் ஒருவேளை மட்டும் (16 Mg) எடுத்தேன்.  பணியில் இருக்கும்போது அதனால் தூக்கம் வந்தால் என்ன ஆவது?  நான்கு நாட்கள் சாப்பிட்டபின் எதேச்சையாக அதன் தேதி விவரங்கள் பார்த்தால் அது செப்டம்பரில் காலாவதி ஆகியிருந்தது. சரி என்று புதிய வெர்ட்டின் வாங்கி உபயோகபபடுத்தினேன்.  அதை நண்பரிடம் சொன்னதும் வாங்கிப் பார்த்தவர் 'காலாவதி ஆன தேதி செப்டம்பர்தான்...  கரெக்ட்டு..  ஆனால் இந்த வருடம் அல்ல..  2022' என்றார்!  அட, ஆமாம்.  அப்போது வாங்கி வைத்தது போல..  மிச்சம் வைத்திருந்திருக்கிறேன்.  இப்போது சமீபத்தில் வாங்கியதுடன் குழப்பிக்கொண்டு நான்கு நாள் சாப்பிட்டிருக்கிறேன்.  ஒன்றும் ஆகவில்லை!

நான் அடிக்கடி வீண் செய்வது மஷ்ரூம்.  அது வாங்கும்போதே நான்கு நாட்கள் அல்லது ஐந்து நாட்கள் மட்டுமே கெடு வைத்துதான் விற்பார்கள்.  ரெடிமேட் பரோட்டாவும் அப்படிதான்.  மஷ்ரூமில் ஒரு சிரமம் ன்ன என்றால், நானும் என் இளையவனும் மட்டும்தான் சாப்பிடுவோம்.  பெரும்பாலும் விரும்பியபடி தயார் செய்து சாப்பிடவேண்டி, நானோ அவனோதான் அதை சமைக்க வேண்டியும் இருக்கும்.  ஏதாவது ஒரு காரணத்தால் அது தேதி தாண்டி விடும்.  தூக்கிப் போடவேண்டியதுதான்.  அதில் ரிஸ்க் எடுப்பதில்லை.

அதேபோல பிரெட்.  வாங்கி ப்ரிட்ஜில் வைத்தால், சட்டென காலாவதி தேதி வந்துவிடும்.  பரவாயில்லை உபயோகிக்கலாம் என்பார் என் மாமாவின் மருமகள்.   ஏனோ அதையும் செய்வதில்லை!

இந்த ஜனவரி ஐந்தாம் தேதி அன்று ஒரு பிரபல பெரிய கடையில் சில கேக்ஸ் வாங்கிவிட்டு, துறை நண்பர்களுக்கு ஆளுக்கு ஒன்று நீட்டலாம் என்று எக்லேர்ஸ் பாக்கெட் ஒன்றும் வாங்கி கொண்டேன். 


எல்லோருக்கும் எடுத்து நீட்டும் முன் ஆவல் தாங்காமல் நான் ஒன்று எடுத்து வாயில் போட்டுக்கொண்டேன்.  ஒரு சிறிய வித்தியாசம் தெரிந்தது.  சுவையில் ஒரு மாறுபாடு, மேலும் லேசான ஒருமாறுபட்ட வாசம் ஒன்றை உணர்ந்தது போல இருந்தது.  

முதலில் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.  நண்பருக்கு ஒன்று எடுத்துக் கொடுத்தேன்.  அவரும் ஆர்வமாக பிரித்து வாயில் போட்டவர், சற்றே முகம் மாறினார்.  அவருக்கும் அதே போல தோன்றி இருக்கிறது.

சொல்லவும் சொன்னார்.

அப்போதும் சந்தேகம் வரவில்லை என்றாலும் 'ரொம்பப் பழசோ' என்று சும்மா எடுத்து பார்த்தேன்.  அதில் தயாரித்த தேதியும், காலாவதி தேதியும் போட்டிருந்தது.   ஆச்சர்யமாயிருந்தது.  சாக்லேட்டுக்கு எல்லாம் கூட காலாவதி தேதியா?  இருக்கும்தான்.  பெரும்பாலும் அவ்வளவு நாள் விற்காமல் இருக்காது, அல்லது யாரும் அதைப் பார்க்க மாட்டார்கள்.


டிசம்பரோடு முடிந்து போயிருந்தது.  அதிக நாட்களும் ஆகவில்லை.  பெரிய வித்தியாசமெதுவும் இல்லை.

இப்பொழுதும் கூட பாக்கெட்டில் போட்டிருந்ததைப் பார்த்தேனே தவிர உள்ளே இருந்த சாக்லேட்டில் இது அச்சிடப்பட்டிருந்ததா என்று பார்க்கவில்லை.  இனி பார்க்க வேண்டும்.  உள்ளே ஒவ்வோர் தனி சாக்லெட்டிலும் இந்த விவரங்கள் கொடுக்கப் படுகிறதா என்று இனி பார்க்க வேண்டும்.

நான் இதை அந்த பிரபலக்கடையில் வாங்கியபோது அவசரமாக வாங்கியதில் G pay (நல்லவேளை!) செய்திருந்தாலும் பில் எதுவும் பெறவில்லை.  விலை 'பாட்டா ஷூ' போல 299 ரூபாய்.

அந்தக் கடையை சஜஸ்ட் செய்த நண்பனுக்கு தொலைபேசினேன்.  'ஓவர் நம்பிக்கை உடம்புக்கு ஆகாதுப்பா' என்றான் வழக்கம்போல.  'தம்பி..  ரொம்ப எதிர்பார்க்காதே...  அனேகமாக ஏதாவது சாக்குபோக்கு சொல்லி விடுவார்கள்.  இதெல்லாம் ரொம்ப ரேர் நிகழ்வுகள்..  நீ அங்கே போகும்போது உன்னிடம் விற்றவனே கடையில் இருக்கணும்னும் அவசியம் இல்லையே...' என்றான்.

எனக்கும் அதுதான் தோன்றிஅயது.

அன்றைய தினம் நேரமில்லாததால் மறுநாள் நம்பிக்கை இல்லாமலேயே என்னுடன் பொருள் வாங்க கூட வந்த நண்பரை அந்தக் கடைக்கு அனுப்பினேன்.  நிச்சயம் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்றே நம்பினேன்.  அதேபோல முதல் நாள் நான் வாங்கியபோது கடையில் இருந்தவர் ஒரு ஆண்.  இவர் போனபோது அங்கிருந்தது ஒரு பெண்ணாம்.  சாக்குபோக்கு சொல்லி அலைய விடுவார் என்று தோன்றியது.

ஆனால் நடந்தது என்னவோ வேறு.  அவர் மன்னிப்பு கேட்டுக்கொண்டதோடு, நண்பரை அமர வைத்து சமோசா, பப்ஸ் எல்லாம் வலுக்கட்டாயமாக கொடுத்து உபசரித்திருக்கிறார்.  இலவசமாகத்தான்!

சமோசாவை சுவைத்தபடியே பேச்சுவாக்கில் நண்பர் அந்தப் பெண்ணின் பெயர் கேட்டாராம்.

"கலாவதி" என்றாராம் அவர்!  ஆஹா...  நல்லாத்தாண்டா அமையுது!

இதே பேக் புதிது இல்லாத காரணத்தால் கையில் 300 ரூபாய் கொடுத்து அனுப்பி விட்டாராம் - ஏராளமான மன்னிப்புகளோடு.  "நன்றி ஸார்..  இதை பெரிது படுத்தாமல் விட்டதற்கு"

ஒரு ரூபாய் அதிகம் கிடைத்தது!

=============================================================================================

இளையராஜா இசை... பாடுவதை மறந்து அழுத எஸ். ஜானகி: வரிகளில் ஜாலம் செய்த வாலி
தமிழ் சினிமா பாடலாசிரியர்களில் தனக்கென்று தனி பாணியை வைத்திருப்பவர் வாலிபக் கவிஞர் வாலி. அனைத்து வயதினருக்கும் ஏற்ற, அந்த காலக்கட்டத்திற்கு ஏற்ற பாடல்களை இயற்றுவதில் வல்லவர் வாலி. காதல், தத்துவம், ஏக்கம், சோகம், காமம், குத்து பாட்டு என எந்த சூழ்நிலைக்கும் பாடல்களை இயற்றி, ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் வாலி. தன் வரிகளால் ரசிகர்களை மயக்கும் வாலி, பாடகி ஜானகியை பாட முடியாமல் அழச் செய்த சம்பவமும் நடந்துள்ளது.
1978 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அச்சாணி. காரைக்குடி நாராயணின் கதையில் உருவாகிய இந்த படத்தில் முத்துராமன், லட்சுமி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல்களை வாலி எழுதியிருந்தார்.
இந்தப் படத்தில் இடம்பெற்று மிகப்பெரிய வரவேற்பை பெற்ற பாடல் தான் ‘மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன்’. இந்த பாடலை ஜானகி பாடியிருந்தார். அருமையான டியூன், சிறப்பான பாடல் வரிகள் அமைந்ததால் இளையராஜா தன் பங்கிற்கு இசைமூலம் இப்பாடலுக்கு உயிர் ஊட்டியிருந்தார். ​ இயேசுவை பெறாமல் பெற்றதாயாக மேரி மாதா இருந்தது போல இந்த படத்தின் கதாநாயகிக்கு காட்சிகள் அமைக்கப்பட்டு, அந்த சூழலில் இந்த பாடல் இடம் பெறும்.
முன்னதாக இந்த பாடல் உருவான போது பல தடங்கல்கள் ஏற்பட்டது. பிரசாத் ஸ்டுடியோ பிஸியாக இருந்ததால் இளையராஜாவால் காலையில் இந்த பாடலை ஒலிப்பதிவு செய்ய முடியவில்லை. எனவே, வேறு ஒரு ஸ்டுடியோவுக்கு சென்றனர். ஆனால், அங்கு சில கருவிகள் வேலை செய்யவில்லை. எனவே, மதியம் மீண்டும் பிரசாத் ஸ்டுடியோ வந்து பாடலை ஒலிப்பதிவு செய்தனர். அப்படி ஒலிப்பதிவு செய்தபோது, ஸ்டூடியோவில் மியூசிக் கண்டக்டர் என ஒருவர் இருப்பார். அவர் கை அசைவுக்கு ஏற்ப இசைக்கலைஞர்கள் இசையை வாசிக்க துவங்குவார்கள். ஆனால், இந்தப் பாடல் இசையில் மயங்கி அவர் கை காட்டவே இல்லை. இசைக்கலைஞர்கள் வாசிக்காததால் இளையராஜா என்ன ஆச்சு என கேட்டபோது ‘டியூனில் என்னை மறந்துவிட்டேன்’ என சொன்னாராம்.
அதன்பின் எல்லாம் சரியாக நடந்துக் கொண்டிருந்தபோது, பாடலை பாடிக்கொண்டிருந்த ஜானகி ‘பிள்ளை பெறாத பெண்மை தாயானது.. அன்னை இல்லாத மகனைத் தாலாட்டுது’ என்கிற வரிகளை பாடாமல் நிறுத்திவிட்டாராம். எல்லோரும் ஜானகியை பார்த்தபோது அவர் தொடர்ந்து பாட முடியாமல் அழுது கொண்டிருந்தாராம். ஜானகியிடம் என்ன ஆச்சு என இளையராஜா கேட்க ‘இந்த இசையும், வரிகளும் என்னை ஏதோ செய்கிறது’ என சொல்லியிருக்கிறார். பின்னர் ஜானகியை ஆசுவாசப்படுத்தி சிறிது நேரம் கழித்தே அந்த பாடலை ஒலிப்பதிவு செய்து முடித்துள்ளனர்.

இதனிடையே இந்த பாடலை கேட்டுவிட்டு இதே மாதிரி பாடல் எனக்கு வேண்டும் என இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன் இளையராஜாவிடம் கேட்டு அடம் பிடித்துள்ளார். அப்படி உருவான பாடல்தான் பயணங்கள் முடிவதில்லை படத்தில் இடம் பெற்ற ‘மணி ஓசை கேட்டு எழுந்து’ என்கிற பாடல். இந்த பாடலையும் ஜானகியே பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ்செல்வி கயல்விழி முகநூலில்  

=========================================================================================

ஏகாந்தமாய் 


அலி டேரே (Ali Dere) !

ஆஃபீஸ் மனிதர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பரிச்சயமானார்கள்.  குறிப்பாக லோக்கல் ஸ்டாஃப். (ஒவ்வொரு தூதரகத்திலும் ஸ்டாஃப் இரண்டு வகைப்படுவார்கள்: இந்தியாவிலிருந்து வந்த அரசு அலுவலர்கள் மற்றும் லோக்கலாகத் தேர்வு செய்யப்பட்டு, அங்கே பணிக்கு அமர்த்தப்பட்ட தூதரக ஊழியர்கள், ஆங்கிலம் ஓரளவு தெரிந்தவர்கள்.) லோக்கல் ஸ்டாஃப் மூலமே நாங்கள் பொதுவாக தலைநகர் அதன் சுற்றுப்புற விவகாரங்கள் (அரசியல் சாராதவை), ஜனங்களின் பழக்கவழக்கங்கள் எனத் தெரிந்துகொள்வோம். ’ஏன், பேப்பர் படித்து, டிவி சேனல் பார்த்துத் தெரிந்துகொள்ளலாமே’ என அசட்டுத்தனமாகக் கேட்கப்படாது! நான் குறிப்பிடுவது சோமாலியா என்கிற, ஆஃபிரிக்கக் கண்டத்திலேயே மிகவும் பின் தங்கியிருந்த ஒரு நாட்டைப்பற்றி. தினசரிப் பேப்பர்கள், டிவி சேனல் மூலம் செய்திகள் என்பதெல்லாம் அங்கே யாரும் கேள்விப்பட்டது கூட இல்லை. சோமாலி ரேடியோ ஸ்டேஷன் ஒன்றிருந்தது. அதில் நாட்டுப்புறப் பாடல்கள், அரபிப்பாடல்கள், எப்போதாவது அரசு வழங்கும் செய்தி என்று கொஞ்சம் வரும். அதிலிருந்து உண்மையான, சமீபத்திய நாட்டு நடப்புகள் என எதையும் தெரிந்துகொள்ள வாய்ப்பில்லை. ராணுவ ஆட்சியின் கெடுபிடி, தொலைத் தொடர்பு, செய்திப் பறிமாற்றம் ஆகியவை சரிவர நிகழாதவாறு பார்த்துக்கொண்டது. குறிப்பாக உள்நாட்டு எதிர்ப்புகள், மற்றும் சர்ச்சைக்குரிய நிழ்வுகள் எதைப்பற்றியும் தகவல்கள்
எதுவும் பொதுமக்களைப் போய்ச் சேராதவாறு கவனம் செலுத்திவந்தது முகமது பர்ரே (Mohamed Barre)யின் அரசாங்கம்.

தூதரகத்துக்காரர்கள், ஐ.நா. மற்றும் உலகவங்கி போன்ற சர்வதேச நிறுவனங்களில் பணிபுரிபவர் மட்டும் ஒரு ஜாக்ரதை உணர்வுடன் தங்களுக்குத் தெரிந்ததை பார்ட்டிகளில், அக்கம்பக்கம் பார்த்தவாறே ஸ்காட்ச்சுகள், பீர்களில் கலந்தவாறே கிசுகிசுத்துக்கொள்வர்.  அலுவலக உரையாடல்களின்போதும் நாங்கள் ஜாக்ரதை உணர்வுடன் இருப்போம். குறிப்பாக நாட்டின் தெற்கே (முன்னாள் பிரிட்டிஷ் காலனிப்பகுதி), கடற்கரை ஓரத்தில் சில நாட்கள் முன் என்ன நடந்தது என்பது எங்களுக்குத் தெரிந்திருந்தாலும், அதை லோக்கல் ஸ்டாஃபின் முன் பேசுவதில்லை. அந்த நாட்டு அரசு ஏஜென்சிகளுக்குத் தெரியவந்தால், சிக்கல்களை ஏற்படுத்தலாம்
என்பதால் இந்த உஷார் நிலை.

இந்தியாவிலிருந்து தூதரக அதிகாரிகள், அலுவலர்களுக்காகவும், லைப்ரரிக்காகவும், அவ்வப்போது அரசு வெளியீடுகளான புத்தகங்கள், இந்திய சுற்றுலாத்தலங்கள்பற்றிய வெளியீடுகள், ஆங்கில வார, மாதப் பத்திரிக்கைகள் ஆகியவை எங்கள் அலுவலகத்திற்கு வந்துசேரும். 

வெளியுறவுத் துறையின் விளம்பர, தகவல்தொடர்புப் பிரிவுக்கு எழுதிக்கேட்டுக்கொண்டால், விசேஷமாக சில ஜனரஞ்சகப் பத்திரிக்கைகளையும் அனுப்பிவைப்பார்கள். எங்கள் கைக்குக் கிடைக்கையில் இரண்டு மூன்று வாரங்கள் பழசாகி விட்டிருந்தாலும், இருண்ட கண்டத்தில் உட்கார்ந்துகொண்டு இந்திய சஞ்சிகைகள், நாளிதழ்களைப் படிப்பதில் ஒரு அலாதி ஆனந்தம் இருந்தது.

அங்கு வசித்த ஐநா, உலகவங்கி போன்றவற்றில் பணிசெய்த சில இந்திய நண்பர்கள், பெரும்பாலும் சின்னச் சின்னக் கடைகள் நடத்திவந்த குஜராத்திகள் என சிலர், இந்தியப் பத்திரிக்கைகள், பேப்பர்களைப் பார்வையிட தூதரக நூலகத்திற்கு அவ்வப்போது வருவார்கள். விஸ்ராந்தியாக உட்கார்ந்து படித்துவிட்டுச் செல்வார்கள். எடுத்துச் செல்ல அனுமதியில்லை. சுற்றுலா சம்பந்தப்பட்ட இதழ்கள், வெளியீடுகள் மட்டும் தாராளமாக அவர்களுக்கு வழங்கப்பட்டன.

இண்டியன் எக்ஸ்ப்ரெஸ், டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஹிந்துஸ்தான் டைம்ஸ், ட்ரிப்யூன், ஸ்டேட்ஸ்மன் ஆகிய ஆங்கில நாளிதழ்களும், ஜன்சத்தா, நவ்பாரத் டைம்ஸ், ஹிந்துஸ்தான் என ஹிந்தி நாளிதழ்களும் அப்படி வந்துகொண்டிருந்தன. ’சந்தேஷ்’ என்ற பெயரில் ஒரு பிரபல குஜராத்தி நாளிதழும் வந்தது நினைவில் இருக்கிறது. அங்கு வசித்த குஜராத்திகளிடையே அது வெகு பாப்புலர். ஆங்கில வார இதழ்களில் இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி
ஆஃப் இந்தியா, சண்டே, மிர்ரர், கேரவன் போன்றவை தரிசனம் தந்தன. அவ்வாறே சரிதா, முக்தா போன்ற சில ஹிந்தி வார, மாத இதழ்களும். இந்திய சினிமாபற்றித் தெரிந்துகொள்ள யாருக்குத்தான் ஆசையில்லாமல் இருந்தது! எங்கள் ஆஃபீஸில் பாலிவுட் பைத்தியங்கள் சில இருந்தன. நாங்கள் டெல்லியிடம் வேண்டுகோள் வைத்ததால், ஸ்டார்டஸ்ட், ஃப்லிம்ஃபேர், ஃபில்மி துனியா(ஹிந்தி) போன்ற கலர்ஃபுல்லான சினிமா இதழ்களையும் அமைச்சரகம், மொகதிஷு ஆஃபீஸிற்கு அனுப்பிவைத்தது. எங்களுக்குள் ஒரு
ரவுண்டு வந்தபின், அவற்றை லைப்ரரியில் வாசகர்களுக்கென வைப்போம். மொகதிஷுவின் சிறு இந்திய சமூகத்தில் அவற்றிற்கு மவுசு அதிகம்.

எங்களது லோக்கல் ஸ்டாஃபில் முகமது ஹுஸேன், ஷயர் முகமது இருவரும் முக்கியமானவர்கள். ஹுசேன் எங்களது லைப்ரரியன், மொழிபெயர்ப்பாளர். விசா செக்‌ஷனிலும் ஒத்துழைப்பான்.  ஒல்லியாக, உயரமாக இருப்பான். சதா புகைத்துக்கொண்டிருப்பான்.  மற்றபடி ஒரு அப்பாவி. என்னை ஏர்ப்போர்ட்டிலிருந்து அழைத்துவந்திருந்த ஷயர் முகமது எங்களது மெஸெஞ்சர்.  புரோட்டகால் அஸிஸ்டண்ட் வேலையும், மேலும் பல அலுவலக
வேலைகளிலும் பிஸியாக இருப்பவன். இந்திய வீட்டு உபயோக சாமான்கள், அந்த ஊரில் எங்கே, எப்போது கிடைக்கும் என்றெல்லாம் லோக்கல் நிலவரம் தெரிந்திருந்த ஒரே ஜீவன்.  எங்களுக்காகத் தேடிப்போய் வாங்கிவந்து தருவான். இப்படி நிறைய ஒத்தாசை செய்த நல்லவன்.

மாலை 3 ½ மணிவரைதான் எங்கள் அலுவலக நேரம். அன்று இந்தியாவிலிருந்து டிப்ளொமாட்டிக் மெய்ல், பெரிய அலுவலகப் பை ஒன்றில் வந்திருந்தது. எங்கள் மேற்பார்வையில், ஹுஸேனும், ஷயரும் திறந்து அலுவலகப் பேப்பர்கள், கவர்கள் தாங்கிய உள் பை பை ஒன்றை எங்களிடம் கொடுத்தார்கள். அவற்றைத் திறந்து அடுத்தநாள் அம்பாஸடர் பார்க்க ஏதுவாக தனித்தனி ஃபோல்டர்களில் வகைப்படுத்திவைத்தோம். எங்களின்
பொழுதுபோக்கு, ரசனைக்கான சங்கதிகள் இருந்த பெரிய பொட்டலங்களை ஷயரும், ஹுஸேனும் பிரித்து வகைப்படுத்தினார்கள். சிலருக்கான கடிதங்கள் இன்லண்ட் லெட்டர்கள் வடிவில் வந்திருந்தன. இந்தியாவின் பல்வேறு பகுதிலில் இருந்து முதலில் அமைச்சகத்திற்கு வந்துசேர்ந்தபின், டிப்ளொமாட்டிக் பையில் அந்தந்த தூதரகங்களுக்கு அக்கடிதங்கள் அனுப்பிவைக்கப்படுவது வழக்கம். தாமதமாகத்தான் வந்து சேருமென்றாலும், கடிதம் என்றால் கடிதம்தான்.  அந்தக்காலகட்டத்தின் ஒரு உன்னதம் அது. 

இவற்றோடு, பத்திரிக்கைகள், நாளேடுகள் போன்றவையும் சிறு சிறு பொட்டலங்களாக அந்தப் பையில் வந்திருக்கும்.

இரண்டு மூன்று வாரங்கள் முன்பு வந்திருந்த பத்திரிக்கைகளை லைப்ரரிக்குத் தந்துவிட்டு, இப்போது பளபளவென வந்திருக்கும் புதிய பத்திரிக்கைகளை, இந்திய அலுவலர்கள் ஆளுக்கு ஒன்றாக படிக்க எடுத்துக்கொண்டோம். வீட்டிற்கு எடுத்துக்கொண்டுபோய் நிதானமாய் வாசிப்போம். என் கைக்கு வந்தது ஒரு ஸ்டார்டஸ்ட் இதழ். ஹுஸேன், ஷயர் இருவரும் ரொம்பநாட்களாக இங்கே வேலை பார்க்கிறார்களே.. இந்திய சினிமாபற்றிய இவர்களது ஞானம்
எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் என நினைத்தவாறே சீனியரான ஹூஸேனை சீண்டினேன்.

ஸ்டார்டஸ்ட் மாத இதழில் முழுப்பக்கத்தில் தெரிந்த நர்கீஸ் தத் (Nargis Dutt) புகைப்படம் ஒன்றை காட்டி, இது யார் என்று உனக்குத் தெரியுமா என்றேன். ஹுஸேன் சிகரெட்டை வேகமாக இழுத்துவிட்டு, ”ஐ நோ!” என்று சிரித்தான். ”யாரு?” என்றேன் மீண்டும்.

”மதர் ஆஃப் இண்டியா!” என்றான்! 

தூக்கிவாரிப்போட்டது எனக்கு.

காந்தி படத்தோடு ’ஃபாதர் ஆஃப் இண்டியா’ என்று படித்திருப்பான்.  இந்த இந்திய நடிகையைப் பார்த்ததும், இவளை ’மதர் ஆஃப் இண்டியா’ ஆக்கிவிட்டானா பாவி..

”என்னது, மதர் ஆஃப் இண்டியாவா?” என்று நான் கேட்க, எனக்குத் தெளிவுபடுத்தினான் ஹுஸேன்: “இந்த ஆக்ட்ரெஸ் நடித்த ஃபேமஸ் படம், மதர் ஆஃப் இண்டியா. அதனால் அவள் ’மதர் ஆஃப் இண்டியா’தானே.. என்றுவிட்டு என்னைப் பார்த்தான் பரிசுவென்றுவிட்ட முகபாவனையோடு.

”ஹூஸேன்! அந்த இந்தியப் படத்தின் பெயர் ’மதர் இண்டியா’. ’மதர் ஆஃப் இண்டியா’ அல்ல என்று புரியவைப்பதற்குள் எனக்கு வியர்த்தது. பாலிவுட்டிற்கு இவ்வளவு நெருங்கிவந்திருக்கிறானே.. பரவாயில்லை.. என்று திருப்திப்பட்டுக்கொண்டேன்.

பானகம் போல் இனிப்பு பொங்கும் டீ தயாரித்து எடுத்து வந்த ஷயர் முகமது, எனக்கும் ஒரு கிளாஸைக் கொடுத்தான். டீ ஒரேயடியாக என்னை ரிலாக்ஸ் செய்துவிட்டதோ.. ஷயரின் பாலிவுட் அறிவை சோதித்துவிடுவோம் எனத் தோன்றியது. ஸ்டார்டஸ்ட் இதழின் வேறொரு பக்கத்தில், கலர்ப்படமாக அமிதாப் பச்சன்! ஷயரைக் கூப்பிட்டுக் காண்பித்தேன். ”இவர் ஃபேமஸான இந்திய ஆக்டர். பேர் தெரியுமா ஒனக்கு?” அவனைக் கேட்டேன்.

ஷயர் சிரித்தான். ”தெரியுமே.. இது அலி டேரே! (Ali Dere”) என்றான்.

நான் விழித்தேன். என்னது? அலி, எலின்னு என்னென்னமோ சொல்றான்..

”ஷயர்! இந்த இந்திய ஆக்டர் பேரைச் சொல்லு” என்றேன் சீரியஸாக.

”எஸ்.. ஹி இஸ்.. அலி டேரே !” என்றான் மீண்டும். கொஞ்சம் பெரிசாக சிரிக்கவும் செய்தான்.

”இவர் பேரு ’அமிதாப் பச்சன்’. அலி டேரே –லாம் இல்லே!” என்றேன் எரிச்சலைக் காட்டி.

”இங்கே, சோமாலியால, இவரு ’அலி டேரே’ தான்” என்றான் ஷயர்.

”அலி -யாவது சரின்னு வச்சிக்குவோம். ’டேரே ’ -ன்னு ஏன் சொல்றே?” மண்டை வெடிப்பதற்குள் இது தெரிந்தாகவேண்டும் இப்ப....

ஷயர் விளக்கினான்: ”அலி அவர் பெயர். ’டேரே’- ன்னா டால் (tall) - ன்னு சோமாலி பாஷைல அர்த்தம். அதாவது ’டால் அலி’ (உயரமான அலி) ..அதனாலே அவரு, அலி டேரே !”

”சரி.. சரி.. எடுத்து உள்ளே வை. பூட்டு. போவோம்!” என்றேன், அப்பப்பா..! ரொம்ப சோதனையான போஸ்ட்டிங்தான் இது என்று நினைத்தவாறே.

**

(வளரும்..)

==============================================================================================

நியூஸ் ரூம் 

பானுமதி வெங்கடேஸ்வரன் 

அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, 'ஸ்ரீராம் ஜெய்ராம்' என்ற வாசகம், ராமர் கோவிலில் படம் அச்சிடப்பட்ட டி.ஷர்ட்கள் போன்றவை திருப்பூரில் நாட்டின் பல பகுதிகளுக்கும் அனுப்பப்படுகின்றன. - ஜெய் ஸ்ரீராம்!

அன்னபூரணி திரைப்பட சர்ச்சை, மன்னிப்புக் கேட்டார் நயன்தாரா. - தோல்வி தந்த பாடம்.

டூத் பேஸ்ட் என்று நினைத்து எலியை கொல்ல பயன்படுத்தும் பேஸ்டால் பல் துலக்கியவர் மரணம் - வாசனையும்,சுவையும் தெரியாதா?

தூர்தர்ஷன் ஒளிபரப்பின் தமிழ் சேவை 'பொதிகை' என்ற பெயரில் வழங்கப்பட்டு வந்தது. இனி அது டி.டி. தமிழ் என்ற பெயரில் தொடரும். - பெயர் மாறுவது இருக்கட்டும். நிகழ்ச்சிகளின் தரம்?

இந்த வருடம் நடந்து முடிந்த புத்தக கண்காட்சிக்கு 15 லட்சம் வாசகர்கள் வருகை தந்திருக்கிறார்கள். 18 கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன. - மகிழ்ச்சி

டாக்டருக்கு படிக்க வைப்பதாக கூறி, கிராமத்திலிருந்து பட்டியல் இனப்பெண்ணை வீட்டு வேலைக்கு வைத்துக் கொண்டதோடு, அந்த பெண்ணை அடித்து, சூடு போட்டு கொடுமை படுத்திய பல்லாவரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ மகன், மருமகள் மீது போலீசில் புகார். அவர்களுக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது என எம்.எல்.ஏ. அறிவித்ததை தொடர்ந்து அவர் மகன்,மருமகள் தலைமறைவு. - தலைகுனிவு

கோயம்பேடா? கிளாம்பாக்கமா? ஆம்னி பஸ் பயணிகள் அவதி.

===============================================================================================


விவாகரத்து விஷயமாக கோர்ட்டுக்கு வந்த ராமராஜனிடம் ஒரு நிருபர் உங்கள் திருமணவாழ்கை பற்றியும் நளினி பற்றியும் சொல்லுங்கள் என்று கேட்டார்

அதற்கு அவர் ,இப்போது நளினி என் மனைவி அதனால் அவரை பற்றி நான் உங்களிடம் சொல்வது நாகரிகமாக இருக்காது என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டார்

விவாகரத்து தீர்ப்பாகியது . அன்றைய தினமும் அதே நிருபர் ராமராஜனை வழிமறித்து அதே கேள்வியை கேட்டார் . இப்போதாவது சொல்லுங்களேன் என்று

அதற்கு ராமராஜன் அவர்கள் இப்போது எங்களுக்கிடையே விவகாரத்தாகிவிட்டது. இப்போது அவர் யாரோ ?நான் யாரோ ?அடுத்த பெண்பிள்ளைகளை பற்றி நான் பேசமாட்டேன் அது நன்றாக இருக்காது என்றவாறு நகர்ந்துவிட்டார். 

பிரசாந்த் குமார் - Face Book 

===================================================================================================

2013 ல் தினமணியில் வந்த ஒரு செய்தி,  ஹோசூரில் யானையை வேடிக்கை பார்க்கப்போன இடத்தில் முனியப்பா என்பவரை யானைப் பிடித்து வளைத்து இழுத்து மிதித்துக் கொன்றது.  அப்போது எழுதியது இது...

விதியின் அழைப்பு 

ஹோசூர்
முனியப்பாவுக்குப்
பிடித்தது
சனியப்பா...
வேடிக்கைப் பார்க்கப் போனதால்
வந்த வினையப்பா..
தினமணியில்
பாரப்பா
ஒற்றை யானையிடம்
சிக்கி
அவர் உயிரிழக்கும்
படமப்பா...
பாவமாக இருக்கிறது.
பயமாகவும்!
யானை
அழகான மிருகம் மட்டுமல்ல
ஆபத்தானதும் கூட!  

===========================================================================================

பொக்கிஷம் 

புள்ளி விவரம்!


செமினாரில் கேட்ட ஷேவிங் மேட்டர்!


ஹாஸ்யம் என்கிற வார்த்தை இப்போது உபயோகத்தில் இருக்கிறதா?  இன்னும் என்னென்ன பழைய வார்த்தைகள் வழக்கொழிந்து போய்க்கொண்டிருக்கின்றன?


அதுவரையிலான சரித்திரம்!

என்ன ஒரு முன்முயற்சி....  இந்தப் புத்தகமே என்னிடம் உள்ளது...  

இந்த பண்பாடு இன்றேன் இல்லை?

68 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    வியாழன் கதம்ப பதிவு அருமை. . நாங்களும் காலாவதிக்கு விளையாட்டுக்காக கலாவதி என்றுதான் சொல்வோம். கலாவதி, காலாவதி பெயர் பொருத்தம் இங்கு தானாக அமைந்தது சூப்பர்.

    பெயர் பெற்ற நிறுவன சாக்லேட் இப்படி "லேட்டாகிப்" போனது வருத்தம்தான். எதை நம்பி இனி வாங்குவது என்ற கவலை வருகிறது. நல்ல வேளை..! நீங்கள் ஒர் நாள் லேட்டாக்கிப் போனாலும் கூடவே ஒரு ரூபாய் கிடைத்திருப்தற்கு சந்தோஷம். கலாவதி அவர்கள் வாழ்க... கடைக்கு மேலும் பிரச்சனைகள் வந்து விடக்கூடாதென்ற விபரம் தெரிந்தவர் போலும்..!! பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // சாக்லேட் இப்படி "லேட்டாகிப்" போனது வருத்தம்தான் //

      ஹா..  ஹா...  ஹா...   அதுதான் கமலா அக்கா.  சட்டென வார்த்தைகளில் விளையாடி விடுகிறீர்கள்...

      நன்றி கமலா அக்கா.

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    கவிஞர் வாலி அவர்களின் பாடல்களைப் பற்றி அறிந்தேன். சிறப்பான கவிஞர். "மாதா உன் கோவிலில்" பாடல் அதன் வரிகளும் இசையும் எப்போது கேட்டாலும் நம்மை நெகிழ்விக்கும். அதைப் போலவே பயணங்கள் முடிவதில்லை படப்பாடலான"மணிஓசை கேட்டு" பாடலும். இரண்டுக்கும் ஏதோ ஒரு ஒற்றுமை இருப்பதாக இதுநாள் வரை எனக்கும் தோன்றியதுண்டு. இன்று இந்த பாடல்களைப் பற்றிய விபரங்கள் அறிந்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. Kalavathi vs Kalavathi நல்ல சிலேடை. கன்சுமெர் கோர்ட்டுக்கு போயிருந்தால் அவர்களுக்கு பல ஆயிரங்கள் நஷ்டமாகி இருக்கும். மேலும் கடை பெயரும். மாகி நூடில்ஸ் கதை நினைவிருக்க்க்கிறதா. அதனால் தான் திருப்பித்தந்தபோது அந்த உபசரிப்பு.

    ஜானகி அழுது பாடிய செய்தி முன்பே படித்ததாக நினைவு. அதே போலத்தான் ராமராஜன் பதில்களும்.

    மிருகக்காட்சிசாலையில் இருந்து வந்திருக்கிராயா சிலேடை நல்ல sarcasm.

    ஏகாந்தன் சாரின் சமோசா, மன்னிக்கவும் சோமாலிய நினைவுகள் சிறிது சிரிப்பையும் உண்டாக்குகிறது. குறிப்பாக மதர் ஆப் இந்தியா.

    இந்த வாரம் ராஜாஜி பிறந்த நாள் அல்லது இறந்த நாள் ஏதாவது உண்டா? அவரைப் பற்றிய இரண்டு செய்திகள் இடம் பெற்றிருக்கின்றனவே

    Jayakumar​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // அதனால் தான் திருப்பித்தந்தபோது அந்த உபசரிப்பு. //

      தெரிந்ததுதானே...

      //ஜானகி அழுது பாடிய செய்தி முன்பே படித்ததாக நினைவு. அதே போலத்தான் ராமராஜன் பதில்களும். //

      அச்சச்சோ... ரிப்பீட்டா...  நான் அப்பீட்டு!

      //அவரைப் பற்றிய இரண்டு செய்திகள் இடம் பெற்றிருக்கின்றனவே //

      பொக்கிஷம் தேடும்போது கிடைத்தது.  போட்டு விட்டேன்.  தட்ஸ் ஆல்!

      நீக்கு
  5. பாருங்க ஸ்ரீராம், கலாவதில ஒரு கால தூக்கிப் போட்டீங்கனா அது காலாவதியாகிடுது!!!
    கலாவதி காலாவதி ஆகிட....ஆ ஒரு நல்ல கதை பிறக்குதே...ஹூம் அதுபாட்டுக்குப் பொறந்துட்டே இருக்கு வளக்கத்தான் முடியலை!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கலாவதில ஒரு காலை தூக்கிப் போட்டா அவங்க எப்படி நடப்பாங்க..  பாவம் கீதா! :))

      நீக்கு
  6. சாக்'லேட்" - லேட்டாகிப் போச்சே!

    ஸ்ரீராம் எது வாங்கினாலும் காலாவதி பார்த்து வாங்குங்க!. பார் சாக்லேட்டுகளில் காலாவதி தேதி இருக்கும். பார்த்து வாங்குவதுண்டு.

    உருண்டையாக தனித்தனியாக உருட்டி பேப்பர் சுற்றி வருவதில் அப்படி இருக்குமா என்று தெரியவில்லை. நான் எது வாங்கினாலும் தேதி பார்த்து வாங்குகிறேன் ஸ்ரீராம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. இந்த வியாழனின் கதம்பம் பகிர்வு சிறப்பு. ஏகாந்தன் அவர்களின் அனுபவங்கள் ஒவ்வொன்றும் சிறப்பாக இருக்கிறது.

    காலாவதியான சாக்லேட் - இப்படி நடப்பதுண்டு. என்னதான் பார்த்துப் பார்த்து வாங்கினாலும் இப்படி நடக்கிறது. Blinkit போன்ற செயலிகள் மூலம் வாங்கும்போது ஒவ்வொன்றும் எடுத்துப் பார்த்து வாங்க முடியாது என்பதால், வீட்டுக்கு வந்த பின்னர் பார்ப்பது வழக்கம். ஒரு முறை திருப்பி அனுப்பி இருக்கிறேன். எங்கள் அலுவலகத்தில் உள்ள ஒரு தோழி பெயர் கலாவதி.

    மற்ற விஷயங்களும் நன்று. தொடரட்டும் பதிவுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Blinkit நான் உபயோகித்ததில்லை.  வருகைக்கும் சுவையான கருத்துக் பகிர்வுக்கும் நன்றி வெங்கட்.

      நீக்கு
  8. ஸ்ரீராம், இப்பலாம் பொருள் சரியா இல்லைனாலோ, காலாவதி ஆனாலோ நாம் போய்ச் சொன்னால் மாற்றிவிடுகிறார்கள். அதற்கு வேறு ஏதாச்சும் வாங்கிக்கங்கன்னு சொல்றாங்க இல்லைனா பணம் கொடுத்துவிடறாங்க. ஸாரி சொல்லி...அவங்களுக்கும் தெரியுது ஸ்டாக் அப்பப்ப மாத்தலைனு.

    நல்லகாலம் நீ வாங்கறப்ப காலாவதி பாத்து வாங்கிருக்கணும்னு சொல்லலையே சில அதி புத்திசாலிகள் கேட்டிருக்கு எங்கிட்ட உடனே நான் சொல்றது - உங்க கடை ரொம்ப ஃபேமஸ் அதை நம்பித்தானே நீங்க ஸ்டாக் எல்லாம் க்ளியர் பண்ணி ஃப்ரெஷ் வைச்சிருப்பீங்கன்னு நம்பித்தானே வந்து வாங்கறோம். அந்த நம்பிக்கைல பாக்கலை. ஐஸூ....ஆனா நான் அவங்களுக்கு ஒரு ஊக்கம் கொடுக்கத்தான் அப்படிச் சொன்னேன்

    ஆனா பாருங்க ஃப்ரெஷ்ஷா ஒன்னு அவங்களே எடுத்துக் கொடுத்துட்டு, கூடவே நம்ம வாயை அடைக்க ஒரு பிஸ்கட் பாக்கெட்டைக் கொடுத்தாங்க...நான் வேண்டாம் என்று சொல்லி வந்துவிட்டேன். அப்புறம் தோணிச்சு நம்ம வீட்டு வாசல்ல இருக்கற பைரவிங்க ஆசையா சாப்பிட்டிருக்குமேன்னு!!

    பப்ஸ் சமோஸா எல்லாம் வெளிய போய் சொல்லிடாதீங்கன்னு சொல்றதுக்கான சமாச்சாரங்கள்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாதி சொல்லி பாதி சொல்லாம விட்டிருக்கீங்கன்னாலும் புரியுது.  உங்களுக்கும் இதே மாதிரி ஒரு அனுபவம் இருந்திருக்குன்னு!

      நீக்கு
  9. "நன்றி ஸார்.. இதை பெரிது படுத்தாமல் விட்டதற்கு"//

    இதுதான் இதுக்குத்தான் அந்த உபசாரம்....பாருங்க ஸ்ரீராம், competitive market ன் நன்மை!!

    கீதா

    பதிலளிநீக்கு
  10. ஹா.. ஹா.. ஹா.. இறுதியில் கலாவதி வந்த இடம் ரசிக்க வைத்தது ஜி.

    பதிலளிநீக்கு
  11. இளையராஜா இசை அமைத்த மாதாவின் கோயில் பாட்டு ரொம்ப மனதைத் தொடும் ட்யூன். மாயாமாளகௌளை ராகம் பேஸ். ஆனா அந்த ராகம் முழுசும் இல்லை சில வேறு ஸ்வரங்கள் எட்டிப் பார்ப்பதால்.

    மணி ஓசை கேட்டு எழுந்து பாடலும் செம பாடல்.

    இப்பகுதி தகவல்கள் சுவாரசியம். இப்பதான் தெரியவருகிறது

    கீதா




    பதிலளிநீக்கு
  12. கதம்பம் நிறைந்த விடயங்களை தந்திருக்கிறது. நன்றி.

    ஏகாந்தமாய் ரசனை. நியூஸ் ரைம், பொக்கிசம் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  13. ஏகாந்தன் அண்ணா, லோக்கல் மக்கள் இருவரோடு பட்ட பாடு! சிரித்துவிட்டேன். ஆனாலும் பாருங்க பத்தி கொஞ்சமாச்சும் தெரிஞ்சு வைச்சிருக்காங்களே! உலகெங்கும் வேகமாகப் பரவுவது சினி நட்சத்திரங்கள்தான். நாடு பற்றி எதுவும் தெரிந்திருக்காது.

    சுவாரசியமான அனுபவங்கள். கற்பனையில் விரிகின்றன காட்சிகள். இப்போது எப்படி இருக்கும் அந்த இடங்கள் என்றும் எண்ணம் எழுகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  14. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  15. புத்தகக் கண்காட்சி விவரம் மகிழ்ச்சியான விஷயம். புத்தக ஆர்வம் வாசகர்கள் இருக்கிறார்கள்.

    கோயம்பேடு கிளாம்பாக்கம்...என்னவோ ரொம்பவே குழப்பறாங்க. ஒழுங்கா செய்திருக்கலாம். கிளாம்பாக்கம் போய் ஏறுவது என்பது ரொம்ப சிரமம் தான் அங்கிருந்து நகருக்குள் வர வேண்டும் என்பதும் ரொம்ப சிரமம் இல்லையோ. போக்குவரத்தைக் குறைக்கவோ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// கோயம்பேடு கிளாம்பாக்கம்...
      என்னவோ ரொம்பவே குழப்பறாங்க.. ///

      ஜென்னையே..
      உன்ற பேர் கொயப்பமோ!..

      நீக்கு
    2. ஹாஹாஹா சிரித்துவிட்டேன் துரை அண்ணா.

      கீதா

      நீக்கு
    3. சென்னையின் பேர் குழப்பம் இல்லை.  ஆட்சியாளர்கள்தான்!

      நீக்கு
  16. அருமை..
    சிறப்பான பதிவு..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  17. ராமராஜன் அவரின் பதில் நச்! ரொம்ப ரசித்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  18. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  19. பதிவின் சில விஷயங்கள் கண்டு மனம் நெகிழ்கின்றது..

    பதிலளிநீக்கு
  20. //வேடிக்கைப் பார்க்கப் போனதால்
    வந்த வினையப்பா..//

    வல்வின தீர்ப்பாயாமே'
    பிள்ளையாரப்பா

    //தினமணியில்
    பாரப்பா//

    ஆனை முகத்தப்பா

    //ஒற்றை யானையிடம்
    சிக்கி
    அவர் உயிரிழக்கும்
    படமப்பா...//

    பிள்ளையாரப்பா என்று
    உனைப் பார்க்க வந்தவரை
    பந்தாடுவது நியாயமாப்பா!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யப்பா யப்பா தொப்பை கணேசா... எனக்கு அப்பா அம்மா நீ கணேசா...

      நீக்கு
  21. அகதா கிறிஸ்டி - வியப்பு!

    ஹாஸ்யம் - இந்தச் சொல்லைக்கேட்டு ரொம்ப நாளாச்சு. பொக்கிஷம். ராஜாஜி பற்றிய விஷயங்கள் எல்லாமே சிறப்பபு, ஸ்ரீராம்

    கீதா

    பதிலளிநீக்கு
  22. காலாவதி ஆன எல்லா பொருட்களும் பிரச்சனைதான். உடனேயே அதன் பின் விளைவுகள் தெரியவராவிட்டாலும் நம் லிவர், கிட்னி க்கு பிரச்சனைதான். ஸ்ரீராம், எனவே கவனமாகப் பார்த்து வாங்குங்கள். வீட்டில் உள்ளதையும் பார்த்து, தேதி தெரியாமல் கிழிபட்டிருந்தால் தூரவேனும் போட்டுவிடுங்கள்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  23. ராமராஜனின் பெருந்தன்மையைப் பாராட்டியே தீர வேண்டும்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  24. 70 களில் முத்துராமனின் சில நல்ல படங்கள் வந்திருந்தன.
    மாதா உன் கோயிலில் பாடலைப் பற்றிய செய்தி மனதைத் தொட்டது. அருமையான பாடல்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  25. பொக்கிஷப் பகுதி தகவல்களும் பழைய காலங்களை நினைவுக்குக் கொண்டுவருகின்றன.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  26. "கலாவதி" என்றாராம் அவர்! ஆஹா... நல்லாத்தாண்டா அமையுது!//

    உங்கள் தலைப்பின் அர்த்தம் புரிந்தது.
    காலாவதியை விசாரிக்க போனால் அங்கு கலாவதி . பெயர் கேட்க எப்படி தோன்றியதோ உங்கள் நண்பருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவருக்கு காலாவதி எனும் தமிழ் வார்த்தையே தெரியவில்லை அக்கா!

      நீக்கு
  27. வாலி, இளைய ராஜா, மற்றும் ராமராஜன் சொன்ன கருத்து பகிர்வுகள் அருமை. உங்கள் "விதியின் அழைப்பு" கவிதை மனதை கனக்க வைக்கிறது.
    பொக்கிஷபகிர்வுகள் படித்தேன், நிறைய தகவல்கள் தெரிந்து கொள்ள முடிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாவம்தான் முனியப்பா.  கொடூர மரணம்.  நன்றி கோமதி அக்கா.

      நீக்கு
  28. ப்ரெடிலிருந்து எல்லாவற்றிற்கும் நாங்கள் தேதி பார்த்து விட்டே வாங்குவோம். சாக்லேட்டிற்கும் உண்டு என்பது இப்போத் தான் தெரியும். ஏகாந்தனின் சுவாரசியமான கலக்கல் அனுப்வங்கள் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  29. நான் எதை வாங்கினாலும் தேதியைப் பார்த்துப் பார்த்து வாங்குவதே வழக்கம் :). மருந்து மாத்திரையில் கவனமாக இருங்கள்.

    எஸ். ஜானகி பாடிய குறிப்பிட்ட அவ்விரு பாடல்களும் அருமையானவை. தகவல்களும்.

    பல யானைகளைப் படமெடுத்திருக்கிறேன். கூட்டத்திற்கு நடுவிலும் கேமராவைப் பார்த்து போஸ் கொடுத்திருக்கின்றன. அருகே செல்ல மட்டும் எப்போதும் கிலிதான்.

    தொகுப்பு நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் தேதி பார்த்து வாங்குவது உண்டு என்றாலும் சாக்லேட்டில் அதை எதிர்பார்க்கவில்லை!  மாத்திரை புதிய ஸ்ட்ரிப்பும், உபயோகப்படுத்தாத பழைய ஸ்ட்ரிப்பும் அருகருகே இருந்ததால் வந்த வினை!

      யானையை அருகிலே பார்க்க எப்போதுமே நெஞ்சம் திடுக் திடுக் என்னும்!

      நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  30. திருமயிலை, திரு அல்லிக்கேணி, திருவான்மியூர் கந்த கோட்டம் முதலான ஷேத்திரங்களைத் தவிர்த்து சென்னப்ப நாயக்க பட்டினத்தின் இன்றைய கட்டமைப்பு மனதில் அமையாமல் போய் விட்டது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாறிக்கொண்டே வரும் கட்டமைப்பு யார் மனத்திலும் நிற்காது.  ஒரு ஏரியாவுக்கு சென்று சில வருடங்கள் ஆகி இருந்தால் இப்போது செல்லும்போது அந்த ஏரியா முற்றிலும் மாறி இருக்கும்!

      நீக்கு
  31. கிளாம் பாக்கம் பேருந்து நிலையத்தில் கட்டணக கழிப்பிடங்கள் திறக்கப்பட்டு விட்டனவா?..

    பதிலளிநீக்கு
  32. 'அவர் யாரோ? நான் யாரோ?' என்பவர்கள் தாங்கள் பெற்ற குழந்தைகளையும்
    இவர் யாரோ? --- என்பார்கள் எனில்?...

    என்ன சொல்வது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்கள் இருவருமே அப்படி சொல்லவில்லை என்பது சிறப்பு.  அவர்களை ஆளாக்கி திருமணம் செய்வதில் இணைந்தே செயல்பட்டார்கள்.

      நீக்கு
  33. நேற்று டிவியில் ஒரு குவிஸ் போட்டி மாணவர்களுக்கு. பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் ஒரு கேள்வி.

    D-- யில் ஆரம்பித்து
    R--ரில் முடியும் ஒரு ஆங்கில வார்த்தை
    என்னவென்று கேட்கப்பட்டதற்கு பதில் தெரியாது விழித்தேன்.
    புதன் கேள்வியாக கேட்பதை விட உங்களிடமே கேட்டு விடலாம் என்று தோன்றியது, ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பத்து எழுத்து வார்த்தை அது என்பதைக் குறிப்பிட மறந்தேன்.

      நீக்கு
    2. இந்த லிங்க்கை க்ளிக் செய்து பாருங்கள்.  நான்கு எழுத்து முதல் ஆரம்பித்து செல்கிறது.  பத்து எழுத்து வார்த்தை நிறைய கொடுத்திருக்கிறார்கள்!  பொறுப்பு திறப்பு என்று டிஸ்கி போடுகிறோம், அது கூட பத்து எழுத்து வார்த்தைதான்!https://www.wordkeg.com/word-finder/words-starting-with-d-and-ending-with-r

      நீக்கு
    3. Disclaimer -- பொறுப்புத் துறப்பு.
      சரியான விடை.
      (எதற்காக இது என்று உங்களுக்கே தெரியும்.)

      நீக்கு
  34. சுந்தாவின் வேண்டுகோள் பற்றி வாசித்த பொழுது பிஞ்சால சுப்ரமணியன் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவல் ஏற்பட்டது.
    கூகுளில் பி.சு. பற்றி தேடிய பொழுது டோண்டு ராகவன் கிடைத்து அவர் சுந்தாவின் வீடு இருந்த பிஞ்சால சுப்ரமணியன் தெருவிற்கு சென்ற பதிவு படித்து பின்னூட்டத்தில் மதுரை கிருஷ்ணமூர்த்தி ஸார் கிடைத்தார்.
    அந்தப் பதிவிற்கு நான் போட்டிருந்த பின்னூட்டத்தில் வாசகர் வட்ட வெளியீடான 'சிறிது வெளிச்சம்' நூலில் கல்கி -- தி.ஜா. விவாதங்கள் பற்றி குறிப்பிட்டு தி.ஜா.வின் தந்தையார் "எழுத்தாளன் என்றால் கார் வைத்துக் கொண்டிருக்கும் கல்கி போல இருக்க வேண்டும்;
    ஒண்ணுமில்லாத ராஜகோபாலன் (கு.ப.ரா) போன்றோரோடு தான் உன் சகவாசம் எல்லாம்" என்று திட்டியதாக கரிச்சான் குஞ்சு ஸார் குறிப்பிட்டிருந்ததை வாசித்ததாக சொல்லியிருந்தது பழைய நினைவுகளைக் கிளர்த்தியது. ஒன்றைத் தொட்டு ஒன்று என்பார்களே, அது இது தான். இந்த வாசிப்பு அலைச்சலில் பிஞ்சால சுப்ரமணியன் மறந்தே போய்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  எனக்கும் இந்த அனுபவங்கள் ஏற்பட்டதுண்டு.  ஒன்றைத் தேடப்போய் தேடியதை மறந்து வேறு சில பக்கங்களில் அல்லது விஷயங்களில் மனதைத் தொலைத்து அங்கேயே மயங்கி நின்றதுண்டு.  ரவி பிரகாஷ் பக்கம் ஏற்கெனவே எனக்கும் அறிமுகம்!

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!