வெள்ளி, 19 ஜனவரி, 2024

வெள்ளி வீடியோ : மூர்த்திக்கு ஒருவன் ஸ்ரீ ராமன், முடிவில்லாதவன் அனந்த ராமன்

 

இன்றைய தனிப்பாடல் TMS பாடிய 'அருளே மானிட வடிவாகி' எனும் பாடல்.  இது ஒரு செட் பாடல்.  இதனுடன் இன்னொரு பாடலும் உண்டு.  "ராம நாமத்தை சொல்பவன் எவனோ பூமியில் அவனே பாக்கியவான்" பாடல்.  

யார் இயற்றியது என்பதோ, யார் இசை அமைத்தது என்பதோ தெரியவில்லை.  TMS பாடி புகழ்பெற்ற பாடல்.

அருளே மானிட வடிவாகி அயோத்தி நகரில் பிறந்தது
அது ராமனின் அவதாரம் ஸ்ரீராமனின் அவதாரம்

அருளே நிறைந்த மண்ணுலகில் மறுபடி
தர்மங்கள் வளரட்டும் என்று (அருளே)

பெற்றவர் மகிழும் பிள்ளையென்றும் உடன்
பிறந்தவர் மகிழும் அண்ணன் என்றும்
வாழ்ந்திடச் சொன்னவர் பலராகும்
வாழ்ந்திடச் சொன்னவர் பலராகும்
இங்கு வாழ்ந்தது ராமனின் கதையாகும்
இங்கு வாழ்ந்தது ராமனின் கதையாகும் (அருளே)

அழகிய சீதை துணையாக அந்த
அனுமான் வல்லமை வெளியாக
மனிதன் பாதை தெளிவாக
மனிதன் பாதை தெளிவாக
வந்த ரகுகுலம் விளக்கும் சுடராக
வந்த ரகுகுலம் விளக்கும் சுடராக (அருளே)

வீரத்தில் விளைந்த வில்லெடுத்தான் உயர்
ஞானத்தில் தெளிந்த சொல்லெடுத்தான்
பாசம் கருணை அன்பாகும்
பாசம் கருணை அன்பாகும்
மணம் பரவிடும் மலராய் உருவெடுத்தான்
மணம் பரவிடும் மலராய் உருவெடுத்தான்   (அருளே) 


==============================================================================================

​லட்சுமி கல்யாணம். 

1968 ல் வெளியான ஒரு சிவாஜி திரைப்படம்.  

லக்ஷ்மிக்கு திருமணம் செய்வதில் ஏற்படும் சிரமங்களை பற்றிய கதையாயிருக்க வேண்டும்.  தலைப்பு அப்படித்தானே சொல்கிறது?  

லட்சுமியாக வே ஆ நிர்மலா!  நான் படம் பார்க்கவில்லை.  ஆனால் படத்தின் பாடல்களை ரசித்துள்ளேன்.  பிருந்தாவனத்துக்கு வருகின்றேன், யாரடா மனிதன் இங்கே, தங்கத்தரோடும் வீதியிலே, மற்றும் இன்று பகிரப்படும் 'ராமன் எத்தனை ராமனடி' பாடல்..

பி சுசீலா குரலில், சிந்துபைரவி ராகத்தில் இனிமையான பாடல்.  கண்ணதாசன் பாடல்.  எம் எஸ் விஸ்வநாதன் இசை.

ராமன் எத்தனை ராமனடி ராமன் எத்தனை ராமனடி

ராமன் எத்தனை ராமனடி அவன் நல்லவர் வணங்கும் தேவனடி தேவன் ராமன் எத்தனை ராமனடி அவன் நல்லவர் வணங்கும் தேவனடி தேவன் ராமன் எத்தனை ராமனடி

கல்யாண கோலம் கொண்ட கல்யாண ராமன் கல்யாணக் கோலம் கொண்ட கல்யாண ராமன் காதலுக்கு தெய்வம் அந்த சீதாராமன் அரசாள வந்த மன்னன் ராஜா ராமன் அரசாள வந்த மன்னன் ராஜா ராமன் அலங்கார ரூபன் அந்த சுந்தர ராமன் ராமன்

ராமன் எத்தனை ராமனடி ராமன் எத்தனை ராமனடி

தாயே என் தெய்வம் என்ற கோசல ராமன் தாயே என் தெய்வம் என்ற கோசல ராமன் தந்தை மீது பாசம் கொண்ட தசரத ராமன் வீரம் என்னும் வில்லை ஏந்தும் கோதண்ட ராமன் வீரம் என்னும் வில்லை ஏந்தும் கோதண்ட ராமன் வெற்றி என்று போர் முடிக்கும் ஸ்ரீஜெய ராமன் ராமன்

ராமன் எத்தனை ராமனடி அவன் நல்லவர் வணங்கும் தேவனடி தேவன் ராமன் எத்தனை ராமனடி

வம்சத்திற்கொருவன் ரகு ராமன் மதங்களை இணைப்பவன் சிவ ராமன் வம்சத்திற்கொருவன் ரகு ராமன் மதங்களை இணைப்பவன் சிவ ராமன் மூர்த்திக்கு ஒருவன் ஸ்ரீ ராமன் முடிவில்லாதவன் அனந்த ராமன் மூர்த்திக்கு ஒருவன் ஸ்ரீ ராமன் முடிவில்லாதவன் அனந்த ராமன்

ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் நம்பிய பேருக்கு ஏது பயம் ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் நம்பிய பேருக்கு ஏது பயம் ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ராமனின் கைகளின் நான் அபயம் ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ராமனின் கைகளின் நான் அபயம்

ராம்ராம்...ராம்ராம்... ராம்ராம்...ராம்ராம்... ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம்

ராமன் எத்தனை ராமனடி.


இந்தப் பாட்டில் மொத்தம் 108 ராமநாமம் வந்துள்ளது. வரும் இருபத்திரெண்டாம் தேதி நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் இந்தப் பாடலைப் பாடி புண்ணியம் அடையுங்கள். 

= = = = = = =

30 கருத்துகள்:

  1. ஸ்ரீராமஜெயம்
    ஸ்ரீராமஜெயம்
    ஸ்ரீராமஜெயம்
    ஸ்ரீராமஜெயம்
    .................

    இரண்டு பாடல்களும் மனத்திற்கு நெருக்கமானது. அருமை.

    பதிலளிநீக்கு
  2. என் பக்கத்தில் நேற்று சற்றுத் தூக்கலாக நிகழ்ந்திருந்த ட்ராஃபிக்கை ஆச்சர்யமாகக் கவனித்தேன் சற்றுமுன். ஒரு எண்ட்ரி ‘ஜெகம் புகழும் புண்யகதை ராமனின் கதையே..’ என்றது! அட நாமும் புண்யராமனைப்பற்றி ஒருகாலத்தில் எழுதியிருக்கிறோமா?அதையும் ஒருவர் வந்து பார்த்துவிட்டுப் போயிருக்கிறாரா.. அது ராமனைப் பற்றியதா, ராமனை எழுதிய மருதகாசிபற்றியதா என்று நினைத்தவாறே எபி-க்குள் நுழைந்தால் இங்கே.. ‘ராமன் எத்தனை ராமனடி!’

    இந்த ராமன் யாரையும் விட்றாப்பல இல்லை.. Boss of the Universe..!

    பதிலளிநீக்கு
  3. முதல் பாடலைக் கேட்ட நினைவே இல்லை.

    இரண்டாவது பாடல் பலமுறை கேட்ட நல்ல பாடல். அயோத்யாஜி கோவில் ப்ராணப் ப்ரதிஷ்டை நேரத்தில் சிறந்த பகிர்வு.

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் காலை வணக்கம்__/\__ __/\__

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.

    இன்றைய வெள்ளி பாடல் பகிர்வில் முதல் பாடல் இதுவரை கேட்டதில்லை. இன்று கேட்டு மகிழ்ந்தேன்.

    இரண்டாவது பாடல் அடிக்கடி வானொலியில் கேட்டிருக்கிறேன். இந்தப் படம் கூட தொலைக்காட்சியில் பார்த்ததாக நினைக்கிறேன். அருமையான பாடல்.

    ஸ்ரீ ராமரின் பாதம் பற்றி அவர் அருள் பெறுவோம். இரண்டு பக்தி பாடல்கள் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலா அக்கா. முதல் பாடல் கேட்டிருக்கிறீர்கள்!

      நீக்கு
  6. ஸ்ரீராமர் பாடல்கள் இரண்டும் அருமையானவை. கேட்டிருக்கிறேன்.

    ஸ்ரீராமர் பாதம் பணிவோம்.

    பதிலளிநீக்கு
  7. ராமன் எத்தனை ராமனடி பாடல், எங்கள் வீட்டில் மிகவும் சிலாகிக்கப்பட்ட பாடல். காலம் சென்ற என்னுடைய அண்ணனுக்கு மிகவும் பிடித்த பாடல். ஏன் என்றால், அண்ணனுடைய நண்பர்கள் குழாமில் - ஜெயராமன், ரகுராமன், கல்யாண ராமன், சுந்தர ராமன், ராஜா ராமன், பக்கத்து வீட்டு ராமன் எல்லோரும் உண்டு!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போதும் போதாதற்கு யக்ஞராமன், ஸ்ரீராமன்....என்று எழுத ஆரம்பித்தால் பட்டியல் நீளுகிறதே..... ஹ ஹா ஹா

      நீக்கு
    2. KGG சார் -- இப்படித் தான் எங்கள் குடும்பத்திலும்...
      என் மாமனார் பெயர் சீதாராமன். மாமியார் சீதாலெஷ்மி. அவர்களது இளைய மகன், ஜெயராமன்.
      மாமனாரின் மூத்த மாப்பிள்ளை கோதண்டராமன்,
      நடு மாப்பிளை சங்கர ராமன். கடைசி மாப்பிள்ளை நான், வெங்கட்ராமன். என் அத்திம்பேர் பெயர் ஜெயராமன்.

      நீக்கு
    3. அடடா.. வீடே ராம ராம என்றிருக்கையில் நாடென் செய்யும் !

      நீக்கு
  8. இரண்டு பாடல்களும் மிக அருமையான பாடல்.
    கேட்டு மகிழ்ந்தேன், பகிர்வுக்கு நன்றி ஸ்ரீராம்.
    சிறு வயதில் சின்மயா மிஷன் பாலவிஹாரில் சின்ன பிக்னிக் டூரில் குறுந்தமலை முருகன் கோவிலுக்கு அழைத்து சென்றார்கள், அங்கு அனுமன் கோவிலும் மலைமேல் இருக்கும் அங்கு சற்று நேரம் ஓய்வு எடுத்தோம். அனந்தராமன் என்பவர் எல்லா குழந்தைகளையும் பாட சொன்னார், ஒரு பெண் மிக அருமையாக "இராமன் எத்தனை ராமனடி" பாடினாள், கடைசியில் முடிவில்லாதவன் அனந்தராமன் பாடிய போது மிகவும் மகிழ்ந்து போனார் என் பேர் , என்பேர் என்று குழந்தை போல குதுகலித்தார் அந்த இளமைகால நினைவுகள் மனதை விட்டு அலகாது.

    கோவையில் ஜிபி(GP) தியேட்டர் காந்திபுரத்தில் ஆரம்பித்தார்கள் முதல் முதலாக அதில் போட்ட படம் "லட்சுமி கல்யாணம்"
    என் அப்பாவுக்கு பிடித்த பாட்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா...  சின்னப்பிள்ளை போல சந்தோஷப பட்டிருக்கிறார்.  என் பெயரும் வருகிறது அதில்!  இந்தப் படத்தில் இன்னொரு அருமையான பாடல் 'யாராக மனிதன் அங்கே..'  நன்றி கோமதி அக்கா.

      நீக்கு
  9. இரண்டு பாடல்களும் சிறப்பானவை ஜி

    பலமுறை கேட்டு ரசித்து இருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  10. இரண்டு பாடல்களும் கேட்டிருக்கிறேன் ஸ்ரீராம். ரொம்ப அருமையான பாடல்கள். முதல் பாடல் ஊரில் கோயிலில் போடும் இசைத்தட்டில்!!

    பலமுறை ரசித்த பாடல்கள்!

    கீதா

    பதிலளிநீக்கு
  11. முதல் பாடல் கேட்டதாக நினைவில்லை. இரண்டாம் பாடல் பல முறை கேட்டிருக்கிறேன். அருமையான பாடல்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  12. பாடல்கள் பற்றிய குறிப்பு நன்று.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!