வெள்ளி, 12 ஜனவரி, 2024

வெள்ளி வீடியோ : வேப்பமர நிழலு விசிலடிக்கும் குயிலு மாட்டு மணி சத்தம் வயசான முத்தம்...

 இன்னும் இரண்டு மூன்று தினங்களில் மகரஜோதி தரிசனம்.  இன்றைய பாடல் ஐயப்பனின் பாடல், எல்லோராலும் விரும்பிக் கேட்கப்படுவது.  கே ஜே யேசுதாஸ் பாடிய 'ஹரிவராசனம்..'

கம்பங்குடி சுந்தரம் குளத்து அய்யர் பிரசுரித்த சாஸ்தா ஸ்துதி கதம்பம் என்ற புத்தகத்தில் உள்ளது இந்தக் கீர்த்தனம். இந்தப் பாடல் வழக்கத்திற்கு வருவதற்கு முன், சபரிமலையில் சாந்தியாக இருந்த செங்ஙன்னூர் கிட்டுமணி திருமேனி (நம்பூதிரி) புல்லாங்குழல் வாசித்து நடை சார்த்துவது நடப்பில் இருந்தது.


ஹரிவ ராஸனம் விஸ்வ மோஹனம்
ஹரிததீஸ்வரம் ஆ ராத்ய பாதுகம்
அரிவிமர்தனம் நித்ய நர்த்தனம்
ஹரிஹராத்மஜம் தேவ மாஸ்ரயே
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!

சரண கீர்த்தனம் சக்த மானஸம்
பரணலோ லுபம் நர்த்தனாலஸம்
அருண பரஸுரம் பூத நாயகம்
ஹரி ஹராத்மஜம் தேவ மாஸ்ரயே

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!

ப்ரணய ஸத்யகம் ப்ராண நாயகம்
ப்ரணவ கல்பகம் ஸுப்ர பாஞ்சிதம்
ப்ரணவ மந்திரம் கீர்த்தனப் ரியம்
ஹரிஹராத்மஜம் தேவ மாஸ்யயே
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!

துரக வாகனம் ஸுந்த ரானனம்
வரக தாயுதம் தேவ வர்ணிதம்
குருக்குருபாகரம் கீர்த்தனப்ரியம்
ஹரி ஹராத்மஜம் தேவ மாச்ரயே

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!


த்ரி புவனார் சுதம் தேவாத்மகம்
த்ரி நயன ப்ரபும் திவ்ய தேசிகம்
த்ரிதச பூஜிதம் சிந்தித ப்ரதம்
ஹரி ஹராத்மஜம் தேவ மாச்ரயே

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!

பவபயா பகம் பாவு காவகம்
புவன மோகனம் பூதிபூஷணம்
தவள வாகனம் திவ்ய வாரனம்
ஹரிஹராத்மஜம் தேவ மாச்ரயே

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!

களம்ருது ஸ்மிதம் ஸுந்தரானனம்
களப கோமளம் காத்ர மோகனம்
களப கேசரி வாஜி வாகனம்
ஹரிஹராத்மஜம் தேவ மாஸ்ரயே

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!

ஸ்ரித ஜனப்பிரியம் சிந்திதப்ரதம்
ஸ்ருதி விபூஷணம் ஸாது ஜீவனம்
ஸ்ருதி மனோகரம் கீதலாலஸம்
ஹரிஹராத்மஜம் தேவ மாஸ்ரயே

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா! 



================================================================================================

ஒன்பது ரூபாய் நோட்டு..

இந்தியத் திரையுலக வரலாற்றிலேயே முதல் முறையாக வித்தியாசமான முறையில் ஒன்பது ரூபாய் நோட்டுப் படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தனர்.

அதன்படி "ஞாயிற்றுக்கிழமை (2007 டிசம்பர் 9ஆம் தேதி), முற்பகல் 11.30 மணிக்கு தமிழகம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 தியேட்டர்களில் இப்படம் திரையிடப்படும். இப்படத்தை பொதுமக்கள் எந்தவிதக் கட்டணத்தையும் முன்கூட்டியே செலுத்தாமல் பார்க்கலாம். பார்த்த பின்னர் தியேட்டர் வாசலில் வைக்கப்பட்டுள்ள உண்டியலில் தங்களுக்கு விருப்பமான தொகையை செலுத்தலாம்" என அறிவிப்புகள் வெளியாயின.

தங்கர்பச்சானே எழுதி இயக்கி இருக்கும் இந்தப் படம் 2007  ஆம் ஆண்டு திரைக்கு வந்ததது.  படம் மெதுவாக நகர்ந்தாலும்  ரசித்துப் பார்த்த படம்.  தமிழின் தரமான படங்களில் ஒன்று.

சத்யராஜ், அர்ச்சனா, நாசர், ரோகிணி ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்தின் பாடல்களை வைரமுத்து எழுத, பரத்வாஜ் இசை அமைத்திருக்கிறார்.

அந்தப் படத்திலிருந்து ஸ்ரீனிவாஸ் பாடியுள்ள மிகப் பிரமாதமான பாடல் ஒன்று இன்றைய பகிர்வாக...  மிஸ் செய்யாமல், வரிகளோடு பாடலைக் கேட்டு ரசிக்க வேண்டுகிறேன்.


மார்கழியில் குளிச்சு பாரு குளிரு பழகிப் போகும்
மாதவனா வாழ்ந்து பாரு வறுமை பழகிப் போகும் 
உப்பில்லாம குடிச்சு பாரு கஞ்சிப் பழகிப் போகும்
பாயில்லாம படுத்து பாரு தூக்கம் பழகிப் போகும் 
வறுமையோட இருந்து பாரு வாழ்வு பழகிப் போகும்
சந்தோசத்த வெறுத்து பாரு சாவு பழகிப் போகும்

மார்கழியில் குளிச்சு பாரு குளிரு பழகிப் போகும்
மாதவனா வாழ்ந்து பாரு வறுமை பழகிப் போகும் 

என்னோட சொத்தெல்லாம் தொலச்சுப்புட்டேன்
இப்போ என்பேரில் உலகத்தையே எழுதிக்கிட்டேன்
துறவிக்கு வீடுமனை ஏதும் இல்ல
ஒரு குருவிக்கு காசேதான் தேவை இல்ல
சில்லென காத்து சித்தோட ஊத்து
பசிச்சா கஞ்சி படுத்தா உறக்கம்
போதுமடா போதுமடா போதுமடா சாமி
நான் சொன்னாக்கா வலஇடமா சுத்துமடா பூமி

மார்கழியில் குளிச்சு பாரு குளிரு பழகிப் போகும்
மாதவனா வாழ்ந்து பாரு வறுமை பழகிப் போகும் 

காசு பணம் சந்தோசம் தருவதில்ல
வைரகல்லுக்கு அரிசியோட ருசியும் இல்ல
போதுமென்னும் மனசு போல செல்வமில்ல
தன் பொண்டாட்டி போல ஒரு தெய்வமில்ல
வேப்பமர நிழலு விசிலடிக்கும் குயிலு
மாட்டு மணி சத்தம் வயசான முத்தம்
போதுமடா போதுமடா போதுமடா சாமி
அட என்னப்போல சுகமான ஆளு இருந்தா காமி  

46 கருத்துகள்:

  1. ஆஹா. இன்னிக்கு ஆரம்பமே ஜேசுதாஸ் அவர்களின் தெய்வாம்சம் இழைந்த குரலில் 'ஹரிவ ராஸனம்' -- 'சரணம் ஐயப்பா, ஸ்வாமி சரணம் ஐயப்பா..ஆத்ம சமர்ப்பணமாய் கை தொழுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதில் பல வெர்ஷன்கள் உண்டு. நான் படத்தில் இடம்பெற்ற வெர்ஷனை தந்திருக்கிறேன்.

      நீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. அது என்ன, மாட்டுமணி சத்தம், வயசான முத்தம்?..
    வாய்ப்பு வாய்க்கும் பொழுது மாட்டுமணி சத்தத்தை உன்னிப்பா கேட்டுப் பாக்கணும்.
    நமக்கும் வயசாயிடுச்சில்லே, வைரமுத்து ஸாருக்குத் தெரிஞ்சது நமக்கும் தெரிய வேண்டாமா?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குடிசையில் இருந்தால் தொழுவத்தில் மாடுகள் கழுத்தை அசைக்கும் போது கேட்கிற சத்தம் அதிகாலை எழுப்பி விட்டால் பக்கத்தில் தூங்கும் கிழவியைப் பார்த்து புன்னகையுடன் அன்பாய் ஒரு உம்மா!!

      நீக்கு
  4. தொலைக்காட்சியில் சுபஸ்ரீ தணிகாசலம் அவர்களின் மார்கழி மஹா உற்சவம் நிகழ்ச்சியில் 'ஆடாத மனமும் உண்டோ?'.. கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
    நீங்களும் ஒரு நாள் இந்த அமர பாடலைப் பகிர்ந்து விடுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுபஸ்ரீ தணிகாச்சலம் நிகழ்ச்சி சில பார்த்திருக்கிறேன்.

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    இன்றைய வெள்ளி பாடல் பகிர்வில் முதல் பாடல் அடிக்கடி பக்தியுடன் கேட்டு ரசிக்கும் அருமையான பாடல்.. பாடகர் ஜேசுதாஸ் அவர்களின் அமைதியான குரலில், இந்தப் பாடலை கேட்கும் போதெல்லாம் மனதுக்குள் ஐய்யப்பனின் புன்னகை தவழும் அருள் முகம் நிழலாடும். மனதை கரையச் செய்யும் பாட்டு. பொங்கலின் சிறப்பாக இன்று இந்தப் பாடலை எழுதியவர் யார் என்ற விபரத்துடன் பகிர்ந்தமைக்கு உங்களுக்கு என் அன்பான நன்றி. கலியுக தெய்வமான ஸ்ரீ ஹரிஹரசுதனின் அருள் அனைவருக்கும் கிடைக்க பிரார்த்தனை செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  7. ஹரிவராசனம்...
    ஐயப்ப கீர்த்தனம்..
    ஆத்மார்த்த சமர்ப்பணம்..

    பதிலளிநீக்கு
  8. ஆனாலும்
    இந்தக் கீர்த்தனத்தைப் பாடுதற்கு நியதிகள் இருக்கின்றன..

    ஸ்வாமி ஐயப்பன் எனும் திரைப் படத்தின் வாயிலாக இறையன்பர்களது நெஞ்சில் இடம் பெற்றது..

    1989 ல் முதல் மாலை இடுவதற்கு முன்பே எனது நெஞ்சுக்கு நெருக்கம்..

    இந்த சரண கீர்த்தனத்தை ஐயப்ப பூஜையில் பாடி - வழிபாட்டினை நிறைவு செய்வதே முறை..

    இன்று நவீன தொழில் நுட்பத்தில் இந்தக் கீர்த்தனம்
    பல விதமாக ஆகிவிட்டது..

    கண்ட நேரத்திலும் கேட்பதற்காக அல்ல இந்தக் கீர்த்தனம்..

    இதன் பின்னணியில் வேறு சில செய்திகளும் இருக்கின்றன..

    இங்கே பொது வெளியில் வைத்ததும் கூட எனக்கு சரியாகப்படவில்லை..

    எல்லாம் ஐயப்பனின் விருப்பம்..

    ஸ்வாமியே சரணம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்று இதை வெளியிட வைத்ததும் அய்யப்பன் விருப்பமாக இருக்கலாம்.  அவனின்றி செயலில்லை.

      நீக்கு
  9. இரண்டு பாடல்களும் சிறப்பான பாடல்கள் ஜி

    ஹரிவராசனம் பாடல் முன்பு எனக்கு மனப்பாடம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  நான் பகிர்ந்திருக்கும் பாடலில் பல சரணங்கள் விடுபட்டு போயிருக்கின்றன.  அவற்றை சிறிய எழுத்துகளில் கொடுத்திருக்கிறேன்.

      நீக்கு
  10. அந்தப் படத்திலிருந்து மிகப் பிரமாதமான பாடல் ஒன்று இன்றைய பகிர்வாக...  மிஸ் செய்யாமல், வரிகளோடு பாடலைக் கேட்டு ரசிக்க வேண்டுகிறேன்...

    இதுவும் தேவையா?..

    சரண கீர்த்தனத்தையே (இந்த நேரத்தில்) கேட்காத போது இந்தப் பாடலையா கேட்பது?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் விருப்பம் அண்ணா. ஆனால் இது நல்ல பாடல் என்பதில் ஐயமில்லை.

      நீக்கு
  11. ஹரிவராசன கீர்த்தனம் சபரிமலை சந்நிதியில் இரவு திருநடை சாத்தப்படும்போது பாடப்படுவதாகும்..

    இதனை ஒட்டித்தான் ஐயப்ப பூஜையில் நிறைவாகப் பாடி மங்களம் செய்வர்..

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    இன்றைய இரண்டாவது படப்பாடலும் அருமையான பாடல். இந்தப்படம் கேள்விப்பட்ட மாதிரி உள்ளது. ஆனால் அதில் வரும் பாடல்களையும் இதுவரை கேட்டதில்லை. , படமும் பார்த்ததில்லை. அதன் விபரங்கள் (கட்டணமில்லாது பல தியேட்டர்களில் வெளிவந்தது) இப்போதுதான் அறிந்து கொண்டேன்.

    பாடலில், சத்யராஜ், வீடு அர்ச்சனா இருவரின் நடிப்பு நன்றாக உள்ளது.பாடகர் ஸ்ரீ னிவாஸ் அவர்களின் அமைதியான குரலினிமையும், பாடலின் வரிகளும் அருமையாக இருந்தது. கவிஞர் வைரமுத்துவின் வரிகளுக்கு கேட்கவா வேண்டும்.

    நேற்று கூட தங்கள் பதிவில் முதல் பகுதி படிக்கும் போது, ஒரு டி. வி தொடரின் டைட்டில் பாடலாக "ஆண்டவன் என்னும் கற்பனை கூட அச்சம் கொண்ட நம்பிக்கை." என்று அவர் எழுதிய வரிகள்தான் நினைவுக்கு வந்தது.

    இன்று நீங்கள் பகிர்ந்த பாடல் "வாலிபங்கள் ஓடும்.. . வயதாக கூடும்... ஆனாலும் அன்பு மாறாதது" . என்ற "கல்யாண மாலை" பாடலை நினைவுபடுத்தியது. இன்றைய இரு பாடல்களுமே கேட்டு மகிழ்ந்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  13. அருமையான பாடல்களை கேட்டு மகிழ்ந்தேன்.
    முதல் பாடல் மிகவும் பிடித்த பாடல்.

    இரண்டாவது பாடல் இரண்டு , மூன்று தடவை கேட்டு இருக்கிறேன், பாடல் காட்சி மனதை நெகிழ வைக்கிறது. வளர்ந்த ஆடுகளை பிரியும் போது அர்ச்சனாவின் முகம் வாடி போகிறது, குட்டி நாயை(செல்லத்தை) கண்டதும் அர்ச்சனாவின் முகத்தில் மகிழ்ச்சி.
    பாய் விற்பவரிடம் பேரம் பேசும் மனைவியிடமிருந்து பணத்தை வாங்கி கொடுக்கும் சத்யராஜ் , கடைசி காட்சியில் பொம்மைகள் வாங்கும் அர்ச்சனா பேரன் , பேத்திகள் இருக்கிறார்கள் என்று சொல்கிறது, படத்தை பார்க்க தூண்டும் பாடல் காணொளி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படம் பார்க்கவில்லை என்றால் கட்டாயம் ஒருமுறை பார்க்கலாம் கோமதி அக்கா.

      நீக்கு
    2. நேற்று இந்த படத்தை பார்த்தேன் ஸ்ரீராம் .
      மனம் கனத்து போனது. குழந்தைகளுக்கு கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த அப்பாவின் அருமை தெரியவில்லை. அவர்கள் கை செலவுக்கு அப்பாவின் கையை ஏந்தும் நிலை, அப்படி அப்பா பிள்ளைகளை வைக்க கூடாது.

      பிள்ளைகள் கேட்பார் பேச்சு கேட்டு கெட்டு போவது என்று
      எப்படி வாழக் கூடாது என்று அழகாய் சொல்கிறது கதை.

      நீக்கு
    3. ஆமாம் அக்கா..  சேரனின் 'சொல்ல மறந்த கதை' பார்த்திருக்கிறீர்களா?   தங்கர் பச்சானின் 'அழகி'?

      நீக்கு
  14. ஹரிவராஸனம் - பாடல் எவ்வளவு கேட்டிருப்பேன். முன்பு மனப்பாடமாகத் தெரியும்! அப்ப இப்ப? ஹிஹிஹிஹி

    இதைக் கேட்காதவர்கள் ரசிக்காதவர்கள் இருக்கமாட்டார்கள் என்றே நினைக்கிறேன், ஸ்ரீராம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  சிலவற்றைத் தொடர்ந்து சொல்லாதபோது / கேட்காதபோது மறந்து விடுகிறது.  முன்பு லிங்காஷ்டகம் மனப்பாடமாகத் தெரியும்.  சமீபத்தில் கேட்டபோது உடன் பாட மனம் தடுமாறியது!

      நீக்கு
  15. ஒன்பது ரூபா படம் ரிவியூ வாசித்திருக்கிறேன் ஸ்ரீராம் ஆனா படம் பார்க்கலை. பார்க்க நினைத்த படம்.

    பாட்டு சூப்பரா இருக்கு ஸ்ரீராம். வரிகளும். எனக்குப் பிடித்தது. ஸ்‌ரீநிவாசின் குரல் சில இடங்களில் டக்கென்று எஸ்பிபி குரல் சாயல் தெரிகிறது. ஆனா ஸ்ரீநிவாஸ்னு கண்டு பிடிக்கலாம்தான். மெலடி...

    இப்பதான் முதல் முறையா கேட்கிறேன். நல்லாருக்கு. பரத்வாஜ் இசையா...இவர் பெயர் கேட்டு ரொம்ப நாட்களாகிவிட்டன!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் முறை கேட்கிறீர்கள் என்பது ஆச்சர்யம்.  மனதில் தங்கி விடும் பாடல்.

      நீக்கு
  16. இரண்டாவது பாடலின் காட்சி செம. மனதை நெகிழ வைக்கிறது. இதில் நடித்திருப்பவர்கல் எல்லாருமே அசாத்தியமாக நடிப்பவங்கல் இயல்பாவும்.

    ரொம்பக்கவர்ந்த காட்சி நாய்க்குட்டி! தங்கர்பச்சான் தன்படங்களில் இந்த ஜீவராசிகளைக் கண்டிப்பாக சீனில் வைத்துவிடுவார் என்று தோன்றுகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓய்வு கிடைக்கும்போது போரடிக்கும் ஓர் நாளில் இந்தப் படம் பார்க்கலாம் கீதா.

      நீக்கு
  17. இதே மெட்டு போல பழைய பாடல் ஒன்று இருக்கு டக்கென்று நினைவுக்கு வர மாட்டேங்குது வரிகள். அப்படியே என்று சொல்ல முடியாது ஆனால் அது போலன்னு சொல்லலாம். வேறு ஒரு பாடலும்...ஆனா அதிகம் கேட்காததால் டக்கென்று வரிகள் நினைவுக்கு வரமாட்டேங்குது ஸ்ரீராம்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா..  அப்படியா?  ஞாபகம் வந்ததும் கட்டாயம் சொல்லுங்க..  இதில் ஏதாவது ராகம் பிடிபட்டதா?

      நீக்கு
  18. முதலாவது பக்தி ரசம் சொட்டும் பாடல். கேட்டிருக்கிறேன்.

    இரண்டாவது ஒன்பது ரூபா நோட்டு விரும்பிப் பார்த்த படம். பாடல்,படம் இரண்டும் நெஞ்சைத் தொடும்.

    இன்றைய பாடல் பகிர்வுகளுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேட்டு ரசித்து கருத்திட்டமைக்கு நன்றி மாதேவி.

      நீக்கு
  19. மிகவும் பாப்புலரான முதல் பாடல் ஹரிவராஸனம் கேரளத்தில் ஒலிக்காத இடம் இல்லை எனலாம். சபரிமலை செல்லும் காலங்களில் இப்பாடல் கேட்டுக் கேட்டு ரசித்த பாடல். இப்போதும் கேட்டு ரசித்தேன். மனதை அப்படியே தாலாட்டி அமைதிப்படுத்தும். கண்ணை மூடிக் கேட்கையில் சுகம்.

    இரண்டாம் பாடல் கேட்டதே இல்லை. படம் பற்றியும் உங்கள் பதிவு மூலம்தான் அறிகிறேன், ஸ்ரீராம். பாடல் மிகவும் இனிமையாக இருக்கிறது. நீங்கள் பதிவில் சொல்லியிருப்பது போல் வரிகளுடன் பாடலையும் கேட்டேன் வரிகள் அருமை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேட்டு அனுபவித்து ரசித்ததற்கு நன்றி துளஸிஜி.

      நீக்கு
  20. ஐயப்ப விரத காலத்தில் பகலில் கூட்டு வழிபாடு எனில் படிப்பாட்டுடன் மங்களம் செய்வதும்

    இரவில் கூட்டு வழிபாடு எனில் படிப்பாட்டுடன் ஹரிவராசன கீர்த்தனமும் பாடி மங்களம் செய்வதும் - 1989 ல் எங்கள் குருசாமி எங்களுக்குப் பயிற்றுவித்தார்..

    ஏனெனில் ஹரிவராசன கீர்த்தனம் ஸ்வாமிக்கு தாலாட்டு போல..

    திருநடை அடைக்கப்படும் போது பாடப்படுவது..

    பதிலளிநீக்கு
  21. ஸ்ரீ வேங்கடேச சுப்ரபாதத்தை உச்சிப் போதில் கேட்க இயலுமா?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடியுமா என்றால் முடியும்.  பொருத்தமா என்றால் இல்லை என்று சொல்லலாம்!!

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!