சென்ற வாரமும் யாரும் கேள்விகள் கேட்காததால், எங்கள் கேள்விகள் :
1) இப்பொழுதும் தீப்பெட்டி - வீட்டு உபயோகத்திற்காக வாங்குகிறீர்களா?
2) மொபைல் ஃபோன், தொலைக்காட்சி, போன்ற நவீன சாதனங்கள் எதுவும் இல்லாத மின் வசதி கூட இல்லாத கிராமம் ஒன்றில் நீங்கள் போய் தங்கவேண்டும் என்றால், உங்களால் எவ்வளவுநாட்கள் தாக்குப் பிடிக்க முடியும்?
3) ஒரே ஒரு பிரமுகரிடம், ஒரே ஒரு கேள்வி மட்டும் நீங்கள் கேட்கலாம் என்றால், எந்தப் பிரமுகரிடம் என்ன கேள்வி கேட்பீர்கள்?
= = = = = = = =
KGG பக்கம்:
அரை டிராயர் பையில் இரகசியமாக வேர்க்கடலை (வேகவைத்த) சாப்பிட்டபோது பிடிபட்டது எப்படி?
அரைநாள் machine shop - Lathe வகுப்பிற்கு நாங்கள் சென்றதும், மடித்து வைக்கப்பட்டிருக்கும் 20 சீட்டுகளிலிருந்து ஒவ்வொருவரும் ஆளுக்கு ஒரு சீட்டு எடுக்கவேண்டும்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகை மெஷினிலும் வேலை அனுபவம் பெறவேண்டும் என்பதற்காக செய்யப்பட்ட ஏற்பாடு இது. சில lathe களில் வேலை சுலபம். சிலவற்றில் வேலை செய்வது கஷ்டம்.
அவரவர்களுக்கு உரிய மெஷின் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் எல்லோரும் படை எடுப்பது கைகளைத் துடைத்துக்கொள்ள மற்றும் மெஷின் பாகங்களைத் துடைக்க உபயோகப்படும் துணி / பஞ்சு நூல் வேஸ்ட் மூட்டை நோக்கி.
ஆளுக்குக் கொஞ்சம் வேஸ்ட் எடுத்துக் கொண்டுவந்து மெஷின் ட்ரேயில் போட்டு வைத்துக்கொள்வோம். அவ்வப்போது கைகளைத் துடைத்துக்கொள்ள அது பயன்படும்.
சில மாணவர்கள் வேஸ்ட் எடுத்துக்கொள்ள மறந்து போய்விடுவார்கள். சில நாட்களில் வேஸ்ட் தட்டுப்பாடு இருக்கும்.
என்னுடன் படித்த ஜனார்தனன் என்னும் பையன் நாகைக்கு வெளியே தூரத்தில் இருந்த சிற்றூர் ஒன்றிலிருந்து தினமும் வந்து செல்வது வழக்கம். இரண்டு பஸ் மாறி வந்து செல்லவேண்டும்.
அதனால் காலை நேரத்தில் பெரும்பாலும் லேட் ஆக வருவான். ஒருநாள் அவன் அப்படி லேட் ஆக வந்தபோது மீதி இருந்த ஒரே lathe மெஷினில் வேலை செய்யவேண்டியதாக இருந்தது. வேஸ்ட் மூட்டை காலியாக இருந்தது.
அதனால் அவன் ஒவ்வொருவரிடமும் கொஞ்சம் கொஞ்சம் வேஸ்ட் பிச்சை வாங்கியபடி வந்தான். நான் அவனிடம் - 'வேஸ்ட் மூட்டையிலிருந்து எனக்கே கொஞ்சம் மட்டும்தான் வேஸ்ட் கிடைத்தது. அதனால் என்னிடம் உனக்குத் தருவதற்கு வேஸ்ட் ஸ்டாக் இல்லை' என்றேன்.
என்னை ஒருமுறை தலை to கால் நோட்டமிட்ட அவன், " யேய் - ஏண்டா பொய் சொல்றே? வெளியிலே மெஷின் டிரேயில் கொஞ்சம் மட்டும் போட்டுவைத்துவிட்டு மீதியை எல்லாம் உன்னுடைய நிஜார் பையில் போட்டு வெச்சிருக்கே " என்று சொல்லியவாறு, என் நிஜார்ப் பையில் கைவிட்டான்.
" டேய் - நிஜார்ப் பையில் இப்படித்தான் தினமும் வேர்க்கடலை போட்டுக்கிட்டு வந்து திங்கறயா ? நான் உன்னை எல்லோரிடமும் மாட்டிவிடாமல் இருக்கவேண்டும் என்றால், மரியாதையாக எனக்கு நீ வைத்திருக்கும் கடலையில் பாதி பங்கைக் கொடுத்துவிடு " என்று மிரட்டி அமலாக்கத் துறை அதிகாரி போல என்னிடமிருந்து பறிமுதல் செய்துகொண்டு போய்விட்டான்.
அது மட்டும் அல்ல; அப்புறம் தினமும் காலையில் பள்ளிக்கு வந்ததும், என்னிடம் வந்து " டேய் திங்கறதுக்கு என்ன வெச்சிருக்கே ?" என்று டார்ச்சர் பண்ண ஆரம்பித்தான்.
அதன் பின் நான் வேர்க்கடலையை ஒரு பாலிதீன் பையில் போட்டு எடுத்துக்கொண்டு, பள்ளிக்கு வந்தவுடன், என்னுடைய டிராயிங் டேபிள் டிராயரில் போட்டுப் பூட்டி வைத்துவிடுவேன். டிராயிங் டேபிள் டிராயர் என்பது டிராயிங் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ், டீ ஸ்குயர், டிஃபன் பாக்ஸ், மெஷின் ஷாப் யூநிஃபார்ம் போன்ற விஷயங்களைப் போட்டு வைத்துக்கொள்ளப் பயன்படும் பாங்க் லாக்கர் போன்ற இடம்.
லஞ்ச் நேரத்தில், leisure நேரங்களில் அந்தப் பொக்கிஷ அறையிலிருந்து வேர்க்கடலை சிறிது அளவு எடுத்து, அதை நிஜார்ப் பையில் போட்டு வைத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக கொறிப்பேன்!
= = = = = = = =
நீங்கள் கொறிப்பதற்கு :
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான புதன் கேள்வி - பதில் பகுதியிலிருந்து சில :
கீதா ரெங்கன்:
சிறந்த கேள்விக்கு பொற்கிழி உண்டா?
ப : ஓ !
உண்டே! (கேள்விக்குதான்; கேள்வி கேட்டவருக்குக் கிடையாது!)
எங்கள் கேள்விகளுக்கு ஆசிரியர்கள் கிழி.............நிரப்புக.
ப: 'ச்சுகிட்டு ஓடிடுவாங்க!'
அப்பாதுரை:
இட்லி, தோசை எது மேலான டிபன்?
ப: இட்லி = அனுஷ்கா; தோசை = தமன்னா . (ரெண்டுமே ஃபீமேல்தான். )
வல்லி சிம்ஹன்:
காலையில் எழுந்ததும் குடிக்க வேண்டியது நீரா...காப்பியா?
ப: காலையில் எழுந்ததும், திருமதியிடம், "வாய் கொப்பளிக்க வெந்நீரும், குடிக்க காபியும் கொடு. எது, எது எந்த டம்ப்ளரில் இருக்கு என்று சொல்லிக்கொடு" என்று கேட்டேன். வாய் கொப்புளிச்சுப் போயிடுச்சு!
= = = = = = =
1) இப்பொழுதும் தீப்பெட்டி - வீட்டு உபயோகத்திற்காக வாங்குகிறீர்களா?
பதிலளிநீக்குஉண்டு விளக்கேற்றுவது தீக்குச்சிகளால் தான்.
2) மொபைல் ஃபோன், தொலைக்காட்சி, போன்ற நவீன சாதனங்கள் எதுவும் இல்லாத மின் வசதி கூட இல்லாத கிராமம் ஒன்றில் நீங்கள் போய் தங்கவேண்டும் என்றால், உங்களால் எவ்வளவுநாட்கள் தாக்குப் பிடிக்க முடியும்?
போன், டிவி இல்லாமல் சமாளித்து விடுவேன். ஆனால் பேன் இல்லாமல் இருக்க முடியாது. அதுதான் .முக்கியம்.
3) ஒரே ஒரு பிரமுகரிடம், ஒரே ஒரு கேள்வி மட்டும் நீங்கள் கேட்கலாம் என்றால், எந்தப் பிரமுகரிடம் என்ன கேள்வி கேட்பீர்கள்?
எதற்கு வம்பு. எந்த பிரமுகரையும் எந்த கேள்வியையும் கேட்க முடியாத காலத்தில் தற்போது இருக்கிறோம். கேட்டால் ED CBI IT அல்லது ஆட்டோ வரும்.
Jayakumar
பதில்களுக்கு நன்றி.
நீக்கு1. இப்போதும் தீப்பெட்டிகள் வாங்குவது உண்டு விளக்கு ஏற்றுவதற்கு. ஆபத் பாண்டவன் கேஸ் லைட்டர் திடீர்னு வேலை செய்யாம இருந்தா தீக்குச்சி உதவும்
பதிலளிநீக்கு2. இருக்க முடியும் . இந்த ஆசை உண்டு ஏதேனும் ஒரு மலை கிராமம் குறிப்பாக இமயமலை பக்கம் உள்ள கிராமம் என்றால் ரொம்ப பிடிக்கும் அங்கே போய் இப்படி அமைதியாகக கொஞ்ச நாள் இருந்து விட்டு வர வேண்டும் என்று ஆசை உண்டு. ஆனா வெயிலும் சூடும் அதிகமாக உள்ள கிராமம் என்றால், வெயில் ஒத்துக் கொள்ளாதே அப்ப ஃபேன் வேண்டுமே....
3. எஸ்கேப்... கீதா ஓடிக்கோ..
கீதா
:))) கருத்துரைக்கு நன்றி.
நீக்குகற்பக கணபதி
பதிலளிநீக்குகனிவுடன் காக்க..
முத்துக்குமரன்
முன்னின்று காக்க..
தையல் நாயகி
தயவுடன் காக்க..
வைத்திய நாதன்
வந்தெதிர் காக்க..
இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
பிரார்த்திப்போம்..
எல்லாருக்கும் இறைவன்
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
வாழ்க நலம் !
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. சகோதர, சகோதரிகள் எல்லோர்க்கும் காணும் பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்.
எங்களிடம் கேட்ட கேள்விகள் அனைத்தும் அருமை.
1.தீப்பட்டி உபயோகம் எப்போதும் உண்டு. தினமும் வீட்டில் விளக்கு ஏற்ற உபயோகப்படுத்துவதுண்டு.
2.எங்கும் போய் டி. வி, ஃபோன், ஃபேன் இல்லாமல் தனியாக இருந்து விடலாம். ஆனால் பேச்சுத்துணைக்கு வீட்டிலிருந்து யாராவது ஒருவராவது துணைக்கு வர வேண்டும். அவர்கள் வர மறுக்கும் பட்சத்தில் இது நடப்பது கஸ்டந்தான்.
3. பிரமுகர்... அவரிடம் கேள்வி சிரமம்தான். பொதுவாகவே கேள்விகள் கேட்கத் தெரியாது. இதில் பிரமுகரிடம் எப்படி கேள்வி கேட்பது.? அவர்தான் நமக்கு "பிற முகர்" ஆயிற்றே.. :))
பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கருத்துரைக்கு நன்றி.
நீக்கு1) தீப்பெட்டி விளக்கு ஏற்றுவதற்கு உபயோகிப்போம்.
பதிலளிநீக்கு2) கிராமத்தில் சண்டைக் காலத்தில் சிலவருடங்கள் எலக்ரி சிற்றி இல்லாமல் , உணவுத் தட்டுப் பாட்டுகளுடன் ,உயிர் பயத்துடன் ஏற்கெனவே வாழ்ந்திருக்கிறோம்.
ஓ ! அப்படியா! கருத்துரைக்கு நன்றி.
நீக்குசிறப்பான பதிவு..
பதிலளிநீக்குகேள்விகள் அருமை..
நன்றி.
நீக்குதீப்பெட்டிக்கு மாற்று கண்டு
பதிலளிநீக்குபிடிக்கப் போவதாகச் சொன்னீர்களே..
பிடித்து விட்டீர்களா கௌதம்?!..
எப்போ சொன்னேன்?? !!
நீக்குகாணும் பொங்கல் அதுவுமாக எல்லாரும் பாரி வேட்டைக்குப் போய் விட்டார்களா !?..
பதிலளிநீக்குஅதானே!
நீக்கு(பாரி வேட்டை என்றால் என்ன?)
நீக்குதீக்குச்சியால் விளக்கேற்றுவது வழக்கம், வீடுத் தோட்டத்தில் குப்பைகளை எரிக்க, விறகு அடுப்பு இப்போதும் வீட்டில் உண்டு. அதை ஏற்ற என்று தீப்பெட்டியின் பயன்பாடு உண்டு.
பதிலளிநீக்குகொஞ்சம் கடினம்தான். மின்வசதி இல்லை என்றால்.
துளசிதரன்
கருத்துரைக்கு நன்றி.
நீக்குகேஜிஜி சார் அனுபவங்கள் சுவாரசியமாக இருக்கின்றன.
பதிலளிநீக்குதுளசிதரன்
மிக்க நன்றி.
நீக்குகௌ அண்ணா, ஒவ்வொரு வகுப்பிலும் உங்களை ப்ளாக்மெயில் பண்ண ஒரு பையன் இருந்திருக்கார் போல!!! மாட்டிக்கிட்டாலும் டெக்னிக் வைத்து கொறிச்சிருக்கீங்க!!
பதிலளிநீக்குகீதா
:))) அதே, அதே!
நீக்குகீதா ரெங்கன்:
பதிலளிநீக்குசிறந்த கேள்விக்கு பொற்கிழி உண்டா?
ப : ஓ ! உண்டே! (கேள்விக்குதான்; கேள்வி கேட்டவருக்குக் கிடையாது!)//
ஹாஹாஹா நினைவு இருக்கு! நன்றி கௌ அண்ணா
கீதா
வணக்கம் சகோதரி
நீக்குஉங்கள் பதிவுக்கு என் கருத்துரை ஒன்று நேற்று தாமதமாக தெரிவித்திருந்தேன். ஒரு வேளை அது வரவில்லையோ? விபரம் தெரிந்து கொள்வதற்காகத்தான் கேட்கிறேன். வேறு ஒன்றுமில்லை. நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி தி கீ!
நீக்குஇப்பொழுதும் தீப்பெட்டி - வீட்டு உபயோகத்திற்காக வாங்குகிறீர்களா?//
பதிலளிநீக்குவாங்குகிறேன். விளக்கு ஏற்ற.
//மொபைல் ஃபோன், தொலைக்காட்சி, போன்ற நவீன சாதனங்கள் எதுவும் இல்லாத மின் வசதி கூட இல்லாத கிராமம் ஒன்றில் நீங்கள் போய் தங்கவேண்டும் என்றால், உங்களால் எவ்வளவுநாட்கள் தாக்குப் பிடிக்க முடியும்? //
முன்பு இது இல்லாமல் இருந்தவர்களை நினைத்து கொண்டு கொஞ்ச நாள் தள்ளலாம். இப்போது கடினம் தான்.
கருத்துரைக்கு நன்றி.
நீக்குKGG சார் எப்படியோ கடலை கொறிப்பதை விடவில்லை.
பதிலளிநீக்குஅதை விட்டுட முடியுமா!
நீக்குபாரி வேட்டை / பரி வேட்டை
பதிலளிநீக்குஎன்பது ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப் பெறும் திருவிழா..
ஸ்ரீரங்கத்தில் நடைபெறுகின்றதே..
நேற்று திருமலையில் நடத்தப்பட்டதை தேவஸ்தான தொலைக்காட்சி யில் காட்டினார்கள்..
விஜயதசமியில் அம்பாள் அம்பு போடுகிற வைபவம் மாதிரி..
ஊருக்கு கேடு செய்ய வரும் விலங்குகளை விரட்டியடிப்பதாக சம்பிரதாயம்.
இப்போது தான் ஊருக்குள்ளேயே ஏகப்பட்ட விலங்குகள் திரிகின்றனவே..
:))) தகவல்களுக்கு நன்றி.
நீக்குகேள்வி கேட்டவர் வீட்டில் ஸ்வாமி விளக்கை எதில் ஏத்துவாங்க? ஙேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ மண்டை குடையுதே!
பதிலளிநீக்கு