ஞாயிறு, 26 மே, 2024

நான் தரிசனம் செய்த கோயில்கள் – ஐந்து துவாரகைகள் யாத்திரை – பகுதி 21 : நெல்லைத்தமிழன்

 

புஷ்கரில், பிரம்மா கோவில் தரிசனத்திற்குப் பிறகு, ரங்க்ஜி கோவில் மற்றும் ஸ்ரீராம வைகுந்தர் கோவில் தரிசனத்திற்குப் பிறகு அருகே இருந்த ஸ்ரீ வராஹர் கோவிலுக்குச் சென்றோம். கொஞ்சம் ஆள் அரவமற்ற கோவில். ஆனால் மிகப் புராதானமானது.

அங்கும் தரிசனம் செய்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம்.

ஸ்ரீ வராஹர் கோவில்


ஸ்ரீ வராஹ ஸ்வாமி மூலவர் மற்றும் உற்சவர்.

மிக வித்தியாசமான கருவறை மண்டபம்.

எனக்கென்னவோ பழைய கோவில் தாக்கப்பட்டு அழிவு பட்டதால், மேலே புதிதாக் கூரை அமைத்திருப்பது போலவே தோன்றியது.

கோவிலின் மூலவர் பளிங்கினால் இருந்தாலும், கோவில் மிகப் புராதானமான கோவில்.


அங்கு இருந்த ஸ்ரீ பத்ரிவிஷால் கோவில்.


புஷ்கரின் கடைவீதிகள் 

தங்கியிருந்த இடத்திலிருந்து எல்லாமே நடக்கும் தூரம்தான். இருந்தாலும் வயதானவர்களுக்காக ஆட்டோ உபயோகப்பட்டது. காலாற கடைவீதிகள் வழியாக நடந்தால் ஏரி, பிரம்மா கோவில் மற்றும் பல கோவில்களில் தரிசனம் செய்துவிட முடியும்.

கடைவீதிகளில் எங்கும் கிடைக்கும் பொருட்கள்தாம். இருந்தாலும் புஷ்கர், ராஜஸ்தானுக்கு உரித்தான கலைப் பொருட்களும் விற்பனை செய்கிறார்கள்.



சீக்கியர்களுக்கான கடை என்று நினைக்கிறேன்.

நாங்கள் தங்கியிருந்த ஹோட்டல்

நாங்கள் ஒரு இரவுதான் (அதிலும் நள்ளிரவு வந்துவிட்டு, மறுநாள் மதியம் கிளம்பிவிட்டோம்) புஷ்கரில் அந்த ஹோட்டலில் தங்கினோம். சௌகரியமாக இருந்தது. ஆனால் தூங்கி ஓய்வெடுக்கத்தான் நேரம் இல்லை. யாத்திரைகளில் சில இடங்களில்தான் இந்த மாதிரி அழகிய தங்குமிடங்கள் அமையும். ஆக்ரா, தில்லி போன்ற இடங்களில் சுமாராகத்தான் அமையும்.


அழகிய அறை. இருந்த குளிருக்கு இன்னும் சில மணி நேரங்கள் தூங்கியிருக்கலாம்.

ஹோட்டலின் உட்புறப் படங்கள்.


ஹோட்டல் சுவற்றில் இருந்த பல ஓவியங்களில் சில

வெளிநாட்டுப் பயணிகளும் நிறைய புஷ்கருக்கு வருகிறார்கள். தங்கியிருந்த ஹோட்டலின் பின்பகுதி, ரிசார்ட் போன்று.

ஹோட்டல் பின்பகுதியில் குதிரை லாயத்தைப் பார்த்தேன். குதிரைக் குட்டிகளும்.


ஹோட்டல் மாடியிலிருந்து புஷ்கரின் அழகிய காட்சிகள்


சுத்தமான சுகாதாரமான உணவு தயாரிக்கும் யாத்திரைக் குழுவினர்.

நன்றாகச் சாப்பிட்ட பிறகு எங்கள் லக்கேஜ்களைத் தயார் செய்தோம்இன்றைய உணவு, பூசணி மோர்க்குழம்பு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு கறி, அவரைக்காய் பருப்புசிலி, சர்க்கரைப் பொங்கல், பகோடா.

உணவிற்குப் பிறகு, யாத்திரைக் குழுவினர் அவர்கள் வேலையை முடித்துக்கொண்டு கிளம்ப 1 மணி நேரமாகும் என்று கூறியதால், முடிந்தவர்கள் புஷ்கர் கடைவீதிகளில் நடந்துகொண்டிருந்தோம். ஆக்ராவில் எங்கள் லக்கேஜ் இறக்கப்படாது, அதனால் ஒரு செட் டிரெஸ் எடுத்துக்கொள்ளும்படிச் சொன்னார்கள். தனிப் பையில் தட்டு டம்ளர், மருந்துகளோடு ஒரு செட் டிரெஸ், குளிப்பதற்குத் தேவையானவற்றையும் எடுத்துக்கொண்டோம்எல்லோரும் தயாரானதும், பேருந்தில் எங்கள் லக்கேஜ் ஏற்றப்பட்டது. பிறகு 3 மணிக்கு ஆக்ரா நோக்கிப் பயணப்பட்டோம்இடையில் எந்த இடத்தைப் பார்த்தோம் என்பதை வரும் வாரத்தில் பார்க்கலாம். தொடர்ந்து படிக்கும் அனைவருக்கும் நன்றி.

(தொடரும்) 

 

47 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம். தண்ணீர் பிரச்சனை எல்லாம் தீர்ந்துவிட்டதா? பெங்களூர் கடந்த மூன்று வாரங்களாக அதன் இயல்பான சிறிது குளிருடன் கூடிய காலநிலைக்கு மாறிவிட்டதே.

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      மழை என்னவோ பெய்கிறது. சிறிது குளிர் தகிக்கும் வெய்யிலை அப்புறபடுத்தியுள்ளது. . ஆனால், எங்கள் அப்பார்ட்மெண்டில் இன்னமும் தண்ணீர் பிரச்சனை தீரவில்லை. ஒரு வீட்டிற்கு கடந்த இரண்டு மாதங்களாக, ஒவ்வொரு மாதத்திற்கும் ரூ 3000 கொடுத்து டேங்கர் லாரியை வரவழைக்கிறோம். (கிட்டத்தட்ட 40 வீடுகள் உள்ளன.) இதுவரை தண்ணீருக்காக ரூ 6000 கொடுத்தாகி விட்டது. அப்படியும் காலை, மாலை இரண்டு மணி நேரம் மட்டுந்தான் தண்ணீர் வீட்டு குழாய்களில் வரும்.அதை பிடித்து வைத்து உபயோகிக்க வேண்டும். சிரமம்தான். நிலைமை பழையபடிக்கு திரும்புமா என்றிருக்கிறது. நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. ஒரு அபார்ட்மெண்ட் வளாகத்தில் (மழை நீராகத்தான் இருக்கும்), 35,000 லாரித் தண்ணீரைச் சேமித்திருக்கிறார்களாம். கடும் கோடை காலத்தையும் அவர்களால் சமாளிக்க முடியுமாம்.

      இப்போவே மாதம் 3000 ரூ என்றால், பத்து வருடங்கள் கழித்து நிலைமை எப்படி இருக்குமோ? நான் 2000த்தில் பார்த்த பெங்களூருக்கும் இப்போ இருக்கும் பெங்களூருக்கும் மிக மிக வித்தியாசம் இருக்கிறது.

      நீக்கு
    4. ஆம். உண்மை. அப்போதைக்கு இப்போது மிக மிக வித்தியாசம் ஏற்பட்டுள்ளது.

      நீக்கு
  2. ஸ்ரீவராகர் கோவில் முதல் படமே வித்தியாசமாக அழகா இருக்கு

    ஏதோ அரச கோட்டைக்குள் செல்வது போல!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா ரங்கன்(க்கா). இந்தக் கோவிலைத் தேடிச் செல்ல வேண்டும். ஒடுங்கி மறைந்திருக்கிறது.

      நீக்கு
  3. ஏன் சுவாமி அருகில் வேறொருவர் படம்?! வேறு இடத்தில் மாட்டியிருக்கலாம் என்று தோன்றுகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். வட நாட்டில் பல கோவில்களில் இப்படிப் பார்க்கிறேன்.

      நீக்கு
  4. கருவறை வெளித்தோற்றம் மிக அழகு! பழமையானதுன்னு தெரிகிறது. ஆமாம் மேல் கூரை புதுசா இருக்கு இல்லைனா மேலே பூச்சு பூசியிருப்பாங்கன்னு தோணுது. மூழுவதுமே வெள்ளைப் பூச்சு தெரிகிறதே, நெல்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழைய மாதிரியே ஆனால் புதிது பண்ணி வைத்துக்கொள்ளும் டெக்னாலஜி இருந்தாலும், அதற்கான வசதி இந்தியக் கோவில்களில் பெரும்பாலும் கிடையாது. ஏன், திருப்பதியிலும் Operation Expenditure அதிகமான அளவு, பழைமையைப் போற்றுவது இல்லை. நம்ம ஊரில் பெரும்பாலான கோவில்களில் கும்பாபிஷேகத்தின்போது, கல்வெட்டுகள், சிற்பங்கள் மீதிலும் நீலப் பெயின்ட் அடித்துவிடுகிறார்கள்.

      நீக்கு
  5. கடை வீதிகள் வழி நடபப்தே சுவாரசியம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். நிறைய கலர்ஃபுல் பொருட்களைப் பார்த்துக் கொண்டே செல்லலாம். நான் வாங்குவேனோ இல்லையோ பார்ப்பது ரொம்பப் பிடிக்கும். சில கலைப் பொருட்கள் வாங்கும் ஆசை வந்தாலும், அதன் விலை யோசிப்பேன், தூசி அடையும் பாதுக்காக்கணும், நமக்கோ சட்டி பானை தூக்கும் வாழ்க்கை. இப்ப இருக்கற வீடுகள்ல வைக்கவும் இடம் கிடையாது ஸோ ரொம்ப யோசிப்பேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் கடை வீதிகளைப் பார்த்துக்கொண்டும், விலைகளைக் கேட்டுக்கொண்டும் செல்வது ரொம்பப் பிடிக்கும். அதுபோலவே காய்கறி பழ மார்க்கெட்டுகளிலும் நடந்து செல்வது பிடித்தமானது.

      நம்ம வீட்டுக்கு எதை வாங்கிவந்தாலும் குப்பைதான்.

      நீக்கு
  6. என் தங்கை வீட்டில் எல்லாம் கலைப்பொருட்கள், செடிகள் விதம் விதமாக வீட்டில் வைச்சிருக்காங்க. அவற்றைத் துடைக்க பராமரிக்க ஆட்கள் உண்டு.

    சீக்கியர் கடை என்றே தோன்றுகிறது.

    தங்குமிடம் நல்லாருக்கு.

    //அழகிய அறை. இருந்த குளிருக்கு இன்னும் சில மணி நேரங்கள் தூங்கியிருக்கலாம்.//

    ஹாஹாஹாஹா அண்ணே! நீங்க போனது சுத்திப் பாக்க!!! தூங்கறதுக்கு இல்ல!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கலைப் பொருட்கள் வைத்திருக்கும் வீடுகளைப் பார்த்திருக்கிறேன், சில உறவினர் இல்லங்களிலும். செலவழித்து உதவியாளர்களை வைத்துக்கொண்டு பராமரிக்கணும். எனக்கு செலவழிக்கணும்னா கசக்கும். அதனால் கலைப் பொருட்களை வாங்குவது இல்லை.

      நீக்கு
    2. 1200-1500 ரூ வாடகை கொடுத்துட்டு ஒரு எட்டு மணி நேரமாவது தூங்க முடியலைனா மனசுக்குக் கஷ்டமாக இருக்காதா?

      நீக்கு
    3. ஹாஹாஹா அது சரி, நெல்லை போன பர்ப்பஸ் என்னவோ அது முக்கியமாச்சே! அதுக்கும்தானே காசு! காசு கட்டிட்டு இடம் பார்க்கலைனா?

      கீதா

      நீக்கு
  7. தங்கும் இடத்தில் சுற்றுப் புறம் உட்புறம் எல்லாமே சூப்பர். அட ரிசார்ட் போன்றும்!

    ஹோட்டல் பின் பகுதியில் குதிரை லாயம் ! குதிரை எதுக்கு வளர்க்கறாங்க? வண்டிகள் இருக்கோ? வெளிநாட்டவர்களைக் கவர குதிரை வண்டிகள் இருக்கோ?

    மொட்டைமாடி maze போல் இருக்கு!!!

    உணவு தயாரிப்பது சுத்தமா இருக்கு நல்ல விஷயம். அதோடு இப்படி
    // தனிப் பையில் தட்டு டம்ளர், // கொண்டு போனா வெளில குப்பை போடுவது இருக்காது பாருங்க! சுகாதாரமும் கூட.

    சுற்றுலாப் பயணிகளும் இப்படிச் செஞ்சா சுத்தமா இருக்குமோ?! அனாவசியமான ப்ளாஸ்டிக் பேப்பர் குப்பைகள் தட்டுகள் குப்பைகள் தவிர்க்கலாம் இல்லையா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரிசார்ட் தான் கீதா ரங்கன். இங்கு வெளிநாட்டவர்கள் தங்குகின்றனர் (ஆமாம்.. புகை பிடிப்பது, குறைந்த உடை)

      நாம் அளவுக்கு அதிகமாக பிளாஸ்டிக் பேப்பர்/குப்பைகள் தட்டுகள் உபயோகிக்கிறோம். விலை மலிவு என்பதே காரணம்.

      நீக்கு
  8. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

    இன்றைய ஞாயிறு கோவில் யாத்திரை பதிவும், படங்களும் நன்றாக உள்ளது.

    வராஹர் கோவில், அருகிலேயே இருக்கும் ஸ்ரீ பத்ரிவிஷால் கோவில் என கோவில்களின் படங்கள் அழகாக இருக்கிறது. வராஹ மூர்த்தியையும் உற்சவரையையும் தரிசித்து கொண்டேன்.

    வராஹ மூர்த்தியின் அருகில் போட்டோவில் இருப்பவர்தான் அந்த கோவிலை நிர்மாணித்தவரா? கருவறை மண்டபம் நட்சத்திர வடிவில் அழகாக உள்ளது. புஷகரின் கடை வீதிகள், தங்கியிருந்த ஹோட்டலின் படங்கள், அங்கு சுவற்றில் வரைந்திருந்த ஓவியங்கள், குதிரை லாய படங்கள் என அத்தனைப் புகைப்படங்களும் நன்றாக உள்ளது.

    நல்ல விபரமான பதிவு. உணவுகளின் மெனு நன்றாக உள்ளது. உணவு தயாரிப்பவர்களுக்கும் , ஒவ்வொரு இடத்திலும் எவ்வளவு வேலைகள் இருந்து கொண்டே இருக்கும். எல்லாவற்றையும் இருக்கும் இடத்திற்கு தகுந்தவாறு சமாளிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.இப்படி ஒவ்வொரு இடத்திலும் நல்ல விதமாக அவர்கள் சமையல் செய்வதற்கு பாராட்டுக்கள்.

    அடுத்தப்பயணம் ஆக்ராவா? . விபரமாக சொல்லிக் செல்லும் பயணத்துடன் தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலா ஹரிஹரன் மேடம். பெரும்பாலும் கோவிலில் போட்டோ இருந்து அதில் உள்ளவர், அந்தக் கோவிலைச் சீர்படுத்தியவராக இருப்பார். இப்போதானே கடந்த இருபது வருடங்களாக கமெர்ஷியல் பார்வை வந்துள்ளது.

      யாத்திரையின் உதவியாளர்களுக்கு நிறைய வேலை இருக்கும், சௌகரியக் குறைவு இருக்கும், அந்த வேளை, அடுத்த வேளை என்று தயாரிப்பு இருந்துகொண்டே இருக்கும். போதாக்குறைக்கு தினமும் மாலை 4 மணிக்கு ஒரு இனிப்பு/காரம் ரெடி பண்ணணும். சம்பளம் என்ற விஷயத்தைத் தாண்டி, அவர்கள் இதனை 'கைங்கர்யம்' என்று எடுத்துக்கொள்கிறார்கள்.

      ஆமாம் ...அடுத்தது ஆக்ராதான். கடவுள்கள், கோவில்களைக் கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு வரலாற்றுப் பக்கம் செல்லும் வரும் சில வாரங்கள்

      நீக்கு
    2. அடுத்த ஞாயிறு இதைப் போல காலையிலேயே வர இயலாது என்றுதான் நினைக்கிறேன். பார்ப்போம்.

      நீக்கு
    3. அதனாலென்ன... உங்கள் தளத்தில் ஞாயிறு உலா பதிவு வரலாம் என நினைக்கிறேன்.

      நீக்கு
    4. இல்லையில்லை. அன்று காலை வெளிநாட்டிலிருக்கும் எங்கள் இளைய மகன், குடும்பத்துடன் பெங்களூர் வருகை. அப்புறம் சற்று பிஸியாகி விடுவேன். அதனால்தான் அப்படிச் சொன்னேன். நன்றி.

      நீக்கு
  9. நெல்லை, இப்படி யாத்திரையில் உதவுபவர்களுக்கு கோயில்கள் சென்று பார்க்க முடியுமா? டர்ன் வைச்சேனும்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாத்திரையில் உதவுபவர்களுக்கு கோவில் தரிசனம் கிட்டுவது கடினம். இருந்தாலும் பலர் கோவிலுக்கு வருவதைக் கண்டிருக்கிறேன். அப்போதைய வேலைப்பளுவைப் பொறுத்தது அது. குழுத் தலைவர் எங்களுடன் வந்தாலும் கடைசியாக தரிசனத்துக்கு வருவார்

      நீக்கு
    2. பலர் கோவிலுக்கு வருவதைக் கண்டிருக்கிறேன். அப்போதைய வேலைப்பளுவைப் பொறுத்தது அது.//

      அப்படினா நல்லது தான்.

      கீதா

      நீக்கு
  10. அதென்னவோ மிகப் பழமையான கோவில் என்றால் பார்க்க ஒரு ஆவல்தான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கும்பகோணம் பகுதியிலேயே நிறைய பழமையான கோவில்கள் உண்டு. புஷ்கரில் ஒரு காலத்தில் முஸ்லீம் படையெடுப்பில் பல கோவில்கள் அழிந்துபட்டன

      நீக்கு
  11. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  12. தண்செய்யும் வாழ்க.. தஞ்சையும் வாழ்க..
    தளிர் விளைவாகித்
    தமிழ் நிலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  13. அழகிய படங்களுடன் -
    நல்ல பதிவு..

    காணக் கிடைக்காத தலங்களைப் பதிவினில் கலை நயத்துடன் சொல்லிச் செல்கின்ற அன்பின் நெல்லை அவர்களுக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  14. நேற்றிரவு தஞ்சை ராஜ வீதிகளில் திருஞானசம்பந்தர் குருபூஜையை முன்னிட்டு 15 கோயில்களின் பல்லக்கு திரு வீதி உலா.. இரவு பத்து மணிக்கு மேல் என்பதால் செல்வதற்கு இயலவில்லை..

    எழூர் சென்றிருந்த கண்ணாடிப் பல்லக்கு கரந்தைக்குத் திரும்பியதும் நேற்று மாலையில் தான்..

    கலந்து கொள்ள இயலாத வருத்தம்...

    இன்னும் சில தினங்களில் தஞ்சையில் 25 கருட சேவை..

    பார்க்கலாம்.. எல்லாம் அவன் சித்தம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல வாய்ப்பு உங்களுக்கு. ஆனால் கூட்டம் நெருக்கித் தள்ளுமே. உங்களைப்போன்றவர்களுக்கு கஷ்டம் அல்லவா?

      நீக்கு
    2. நெரிசல் மிகவும் சிரமம்.. சென்ற வருடமே ஜனங்களின் தள்ளு முள்ளு அதிகம்..

      நாராயணனே நமக்குப் பறை தருவான்...

      ஓம் நமோ நாராயணாய..

      நீக்கு
  15. தஞ்சை ராஜவீதிகளில் எதிர்வரும் புதன் கிழமை வைகாசி பதினாறாம் நாள் (29/5) 25 கருட சேவை.. மறு நாள் வெண்ணெய்த் தாழி..

    அனைவரும் வருக..

    பதிலளிநீக்கு
  16. படங்கள் அனைத்தும் வழக்கம் போல அழகாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  17. வராஹர் கோவில் அழகாக உள்ளது. ஓவியம்,கலைப்பொருட்கள் ,குதிரை லாயம் கவர்கின்றன.

    பதிலளிநீக்கு
  18. பதிவு அருமை. படங்கள் எல்லாம் தெளிவாக அருமையாக இருக்கிறது.
    வராஹர் கோவில் அழகு. வாசலில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை போல ஒரு சில்லை இருக்கே!

    ஹோட்டல் சுவற்றில் இருந்த ஓவியங்கள் அழகு.

    சுத்தமான சுகாதாரமான உணவு தயாரிக்கும் யாத்திரைக் குழுவினர், மற்றும் உணவு பட்டியல், தங்கும் இடம் விவரங்கள், கடைத்தெரு படங்கள் எல்லாம் அருமை. தங்கும் இடம் வசதியாக இருந்தாலும் காலையில் விரைவில் எழுந்து கிளம்ப வேண்டும் என்பதால் தூக்கம் வராது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அரசு மேடம்.

      யாத்திரையில் பல நேரங்களில் சரியான தூக்கம் கிடைக்காது (சுகமான தூக்கம்). காலையில் 6-6:30 மணிக்கு காபி என்று சொல்லிவிட்டால், அதற்கு முன்பே குளித்துத் தயாராக இருக்கவேண்டும். எல்லாம் யாத்திரையின் பத்து நாட்களில்தான், பிறகு ரெஸ்ட் எடுத்துக்கலாம் என்ற நினைப்புதான் எங்களை ஓட்டும்.

      நீக்கு
  19. அழகிய கோயில் தாக்கப்பட்டு பின்னால் அதன் மேல் கூரை அமைத்தது போல் எனக்கும் தோன்றியது. ஒரே இடத்தில் அருகருகே கோயில்கள் என்பது ஆச்சரியம். அஙகு இருக்கும் மக்களுக்கும் எப்போதும் ஏதேனும் கோயில் நிகழ்வுகள் என்று கொண்டாட்டமாக இருக்கும் என்று நினைக்கிறேன். மக்களுக்கும் இப்படிச சுற்றுலா பயணிகள் வருவது வருமானம் கிடைக்கும்.

    படங்கள் எல்லாம் மிக அழகாக இருக்கின்றன. கோயிலும் வித்தியாசமாக இருக்கிறது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துளசிதரன் சார்.... கோவில்கள், சுற்றுலாப் பயணிகள் வருகை, அந்த ஊருக்கு எப்போதுமே பணவரவையும் வேலை வாய்ப்பையும் தரும். அதை எப்படிப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்து ஊருக்கு நல்லது.

      நீக்கு
    2. மஞ்சுமல் பாய்ஸ் படம் பார்த்தேன். ரசிக்கும்படி இருந்தது. ஆனால் ஆஹா ஓஹோ என்று இல்லை.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!