திங்கள், 6 மே, 2024

"திங்க" க்கிழமை  : காய்கறி கலவை சாதம் -- துரை செல்வராஜூ ரெஸிப்பி 

 காய்கறி கலவை சாதம்.

துரை செல்வராஜூ  

தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி 2 கப்
பசு நெய் 2 டே ஸ்பூன்
குங்குமப்பூ ஒரு சிட்டிகை

பட்டை  சிறு துண்டுகளாக 2
கிராம்பு 4
ஏலக்காய் 4
முந்திரிப்பருப்பு 10
உலர் திராட்சை 15
பிரிஞ்சி இலை 2
அன்னாசிப் பூ 1

பெரிய வெங்காயம் 1 + 1
பச்சை மிளகாய் 3
இஞ்சி 1 அங்குலம்
பூண்டு 4 துணுக்குகள்

கல் உப்பு தேவையான அளவு
 
பச்சைப் பட்டாணி 50 கிராம்
பீன்ஸ் 50 கிராம்
கேரட் 1 நடுத்தரமாக
காலிஃப்ளவர் 1 சிறியதாக

குறிப்பு: 
பச்சைப் பட்டாணி என்றால் பறித்தெடுக்கப்பட்டவை.. 

உலர் பட்டாணி தான் வீட்டில் இருக்கின்றது என்றால் முதல் நாள் இரவே ஊறவைத்து காலையில்  வடிகட்டிக் கொள்ளவும்..

பச்சடிக்கு :
வீட்டுத் தயிர் ½ கப் ¼ கப்
பெரிய வெங்காயம் - 1 



முதலில் 
காலிஃப்ளவரை முத்து முத்தாக நறுக்கி
வெதுவெதுப்பான நீரில் சிறிது உப்பைக் கரைத்து அதில் ஊறவைக்கவும்..

அடுத்து
பாஸ்மதி அரிசியை சுத்தம் செய்து - 20 நிமிடங்களுக்கு
தண்ணீரில் ஊற வைக்கவும்.. 

இந்த 20 நிமிடங்களுக்குள்
பெரிய வெங்காயம் பீன்ஸ் மிளகாய்  இஞ்சி பூண்டு இவற்றை சுத்தம் செய்து கொள்ளவும்..
கேரட்டை சிறு சிறு சதுரத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.. 
(ஏன்?.. கசமுசா என்று நறுக்கிக் கொள்ளக் கூடாதா?.. என்றால் அது உங்க சாமார்த்தியம்.. )

பீன்ஸ், பெரிய வெங்காயம்  இவற்றை மெல்லியதாகவும் 
பச்சை மிளகாய்களை நீளவாக்கிலும் நறுக்கிக் கொள்ளவும்.. 

இஞ்சி பூண்டு இரண்டையும் மிக்ஸியில் (அம்மி தான் இல்லையே!..) நைய அரைத்துக் கொள்ளவும்..

20 நிமிடங்கள் ஆயிற்றா!..

நீரை சுத்தமாக வடித்து விட்டு
ஒரு கப் பாசுமதி அரிசிக்கு ஒன்றரை கப் வீதம் நீர் சேர்த்து மிதமான சூட்டில் அடுப்பில் ஏற்றவும். 

இப்போது - இதனுடன்  நறுக்கி வைத்திருக்கும்   காலிஃப்ளவர், கேரட், பீன்ஸ் பச்சை மிளகாய், பச்சைப் பட்டாணி,  ஆகியவற்றை சேர்த்து விடவும்..

கைப்பக்குவத்திற்கு கல் உப்பு போட்டு இதில் 2 tsp நெய் சேர்த்து  பாத்திரத்தை மூடி வைக்கவும்...

அடுத்து வரும் 20 நிமிடங்கள் கவனத்துக்குரியவை..

1) நீளவாக்கில் நறுக்கிய  வெங்காயத்தை நெய்யில் வதக்கி தனியே வைக்கவும்..

வெங்காயத்தை பொன் நிறமாக வதக்க வேண்டும் என்றெல்லாம் சொல்வார்கள். அது நடக்காத காரியம்.. 

கருகி விடாமல் வதக்கிக் கொள்வதே முக்கியம்..

2) அடுப்பின் இந்தப்பக்கம் வாணலியில் மேலும் சிறிது நெய் விட்டு முந்திரிப் பருப்பு உலர் திராட்சையையும் 

3) அடுத்து  பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை,
அன்னாசிப் பூ இவற்றையும் பொரித்துக் கொள்ளவும்.. 

4) அடுத்து இஞ்சி பூண்டு விழுதையும் நெய்யில் நன்கு வதக்கிக் கொள்ளவும்...

இந்நேரம் முதல் கொதி வந்திருக்கும்..  

பிறகென்ன.. 

குங்குமப் பூவுடன் நெய்யில் வதக்கி எடுத்த  (1, 2, 3, 4 ) வகையறாக்களை இதனுடன் சேர்த்து பதமாகக் கிளறி விடவும்..

அரிசியை அடுப்பில் ஏற்றிய 15/18 நிமிடங்களில் - 
தண்ணீர் வற்றிய நிலையில் அரிசி சோறாக மலர்ந்திருக்கும்..

நிறைவாக கொத்தமல்லித் தழை, புதினா இவற்றை (நம்ம காமாட்சியம்மாள் செய்த மாதிரி இல்லாமல்) கவனத்துடன் மெல்லியதாக நறுக்கிப் போட்டு  நெய்யில் வதக்கப்பட்ட வெங்காயத்தையும் சேர்த்து சிறிது நெய் ஊற்றி - பதமாகக் கிளறி விட்டு அடுப்பை நிறுத்தி விடவும்..

கலவை சாதம் (!?) தயார்..

 மீதமுள்ள ஒரு வெங்காயத்தை மிக மெல்லியதாக நறுக்கிப் போட்டு தயிர் பச்சடி செய்து கொள்ளவும்..

தயிர் பச்சடிக்கு வீட்டில் உரை ஊற்றிய தயிர் தான் சிறந்தது..
(மறுபடியும் சொல்லி விட்டேன்..)

இன்றைய சமையலில் வற மிளகாய், தக்காளி இல்லாததைக் கவனிக்கவும்..

கலவை சாதம் தயார்.. தயிர் பச்சடியும் தயார்..  ஊற்றிக் கொள்ள கார சாரமாக ஒன்றும் இல்லையா?.. என்றால் அதுதான் தயிர் பச்சடி இருக்கின்றதே.. அது போதும் ..  

தேவையானால் உருளைக் கிழங்கு குருமா செய்து கொள்ளுங்கள்..

அதி கார மசாலாக்கள் உடலுக்கு நல்லதல்ல!.. 

***

54 கருத்துகள்:

  1. யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
    அதனின் அதனின் இலன்.
    குறள் வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. இன்று சமையல் களம் காண்பதற்கு வருகை தரும் அன்பு நெஞ்சங்களுக்கு நல்வரவு..

    பதிலளிநீக்கு
  3. இன்று யான் எழுதிய குறிப்பினைப் பதிப்பித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..

    பதிலளிநீக்கு
  4. சமையல் பண்டங்களைப் படம் எடுப்பதற்கு சூழ்நிலை அமையவில்லை.. எனவே தான் தொகுப்புப் படங்கள்..

    இதுவும் எளிதாக இருக்கின்றது..

    பதிலளிநீக்கு
  5. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  6. தண்செய்யும் வாழ்க.. தஞ்சையும் வாழ்க..
    தளிர் விளைவாகித்
    தமிழும் வாழ்க..

    பதிலளிநீக்கு
  7. அங்கே இருந்த கால கட்டத்தில் பத்து வருடங்களுக்கு மேலாக சொந்த சமையல்.. ஏதோ நான் அறிந்ததை எனக்குத் தெரிந்ததை இங்கே எழுதுகின்றேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லது..  ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சுவை.  வருக, தொடர்க...

      நீக்கு
  8. /// அதி கார மசாலாக்கள் உடலுக்கு நல்லதல்ல!.. ///

    இது கூட நல்லா இருக்கே...

    எது கலவை சாதமா?..

    இல்லே... அதி காரம்!..

    பதிலளிநீக்கு
  9. இதைக் குஸ்கா என்றும் செந்தமிள் ல சொல்லுவாங்க!..

    பதிலளிநீக்கு
  10. பச்சைப் பட்டாணி பீன்ஸ் கேரட் காலிஃப்ளவர் நாலு மட்டுமே காய்கறி ஆய்டுமா,?...

    ஏன்... கத்தரிக்கா காக்கிலோ வாங்கிப் போட்டுக்கலாமே... சௌசௌ, புடலங்கா ந்னு எதை வேணாலும் சேர்த்துக்கலாம்...

    ஆனா இன்னார்க்கு இன்னார்ன்னு யாரோ எய்தி வெச்சுட்டாங்களே!...

    பதிலளிநீக்கு
  11. இதுல பார் யா.. தக்காளி கூட கெடயாது...

    இதெல்லாம் ஒரு இது ன்னு...

    இது அரபு முறை.. சோறு பொல பொல ன்னு தான் இருக்கணும்!...


    யாரோ உங்களக் கொயப்பி உட்ருக்காங்க!..

    பதிலளிநீக்கு
  12. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  13. கலந்த சாதம் என்றாலே தேங்காய் சாதம், எலுமி, எள், தயிர் போன்றவைதான். மற்றவைகளுக்கு பிரியாணி (பிரியாமணி அல்ல), புலாவ் என்றுதானே பெயர். இவர் தூய தமிழில் காய்கறி கலவை சாதம்னு சொல்றாரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கலவை சாத வரலாறு தெரிந்ததே...

      ஆயினும் வெஜ் பிரியாணி என்று சொல்வதற்கு இஷ்டமில்லை..

      எனவே தான் கலவை சாதம் என்று சொல்லியிருக்கின்றேன்..

      எழுதுவதில் இலக்கணம் அது இது எதுவும் எனக்குத் தெரியாது..

      புலால் எனும் சொல்லில் இருந்தே புலவு என்று வந்தது..

      தேவாரத்தில் காணப்படுகின்றது..

      பிரியாணி என்ற வார்த்தை எந்த மொழி?...

      நீக்கு
  14. காய்கறி கலவை சாதம் செய்முறை அருமை. சாதம் சாப்பிட்டால் தொந்தி வருகிறது, எடை ஏறுகிறதே... ன்ன பண்ணலாம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க தான் கடுமையான நடைப் பயிற்சி செய்பவர் ஆயிற்றே...

      நலம் வாழ்க..

      நீக்கு
  15. வணக்கம் சகோதரரே

    இன்றைய திங்களின் பதிவு அருமை. அளவான பொருட்களுடன், அளவான நிறத்துடன் அருமையாக உள்ளது. தாங்கள் பதிவில் சொல்லிய செய்முறைகளை படித்து ரசித்தேன். அதிலேயே பாதி வயிறு நிறைந்து விட்டது போல் உணர்ந்தேன்.
    இந்த பாசுமதி கலவை சாதத்தின் பக்குவங்களை அழகாக சொல்லிய தங்களுக்கு மனமார்ந்த நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவங்க எழுதியிருக்கறதைப் பார்த்தால், இவர் வீட்டுக்குப் போனால், பாதி வயிறு நிரம்பும்படி சாப்பாடு போட்டு, மீதி வயிறுக்கு, செய்முறையைச் சொல்லி அனுப்பிடுவாரோ?

      நீக்கு
    2. //// இவர் வீட்டுக்குப் போனால், பாதி வயிறு நிரம்பும்படி சாப்பாடு போட்டு.. ////

      பாரம்பர்ய மருத்துவ க் குறிப்புகளே அரை - பாதி வயிறுக்குச் சாப்பிடுவது தானே..

      நீக்கு
    3. /இவங்க எழுதியிருக்கறதைப் பார்த்தால், இவர் வீட்டுக்குப் போனால், பாதி வயிறு நிரம்பும்படி சாப்பாடு போட்டு, மீதி வயிறுக்கு, செய்முறையைச் சொல்லி அனுப்பிடுவாரோ?/

      ஹா ஹா ஹா. எங்கள் வீட்டுக்கு வந்தவரெல்லாம் நன்றாக (முழு வயிறு) சாப்பிட்டு விட்டு எப்படி செய்தீர்கள் என செய்முறையையும் (அது அடிக்கடி அவர்கள் வீட்டிலும் செய்வதாக இருந்தாலும்) கேட்டுச் செல்வார்கள். ஆனால் எனக்கும் இப்படி பாரம்பரிய உணவு வகைகள்தான் வழிவழியாக அம்மா, பாட்டி, மாமியார் என அவர்களிடமிருந்து கற்று தெரிந்து கொண்டதுதான் தெரியும். மற்றபடியான இந்த கேக், பிஸ்கட் இந்த மாதிரியான சிறு திண்டி உணவு வகைகளை திறம்பட செய்ததில்லை.

      சகோதரர் துரை செல்வராஜ் அவர்கள் சொல்வது போல இப்போது அரை வயிறுதான் சாப்பிட வேண்டுமென நம் இளைய தலைமுறைகளிடமிருந்தே அறிவுரைகள் வந்து விட்டனவே..! நன்றி.

      நீக்கு
    4. ஹா ஹா ஹா. எங்கள் வீட்டுக்கு வந்தவரெல்லாம் நன்றாக (முழு வயிறு) சாப்பிட்டு விட்டு//

      கமலாக்கா நீங்க ரொம்ப பாவம். நெல்லை கிட்ட இப்படி மாட்டிக்கலாமா?!!!!!!!!!!!!!

      நெல்லை என்ன சொல்வார்னா.....அப்ப உங்க வீட்டுக்கு வந்து சாப்பிட்டா எனக்குத் தொந்தி போடும்னு சொல்லுங்க......என்று சொல்லி உங்களை மேலும் வம்புக்கு இழுப்பார். இழுத்தா சொல்லுங்க. உங்கப் பக்கம் நான் ஒண்டிக்கு ஒண்டி நின்னு பாத்துடறேன்!!!!

      கீதா

      நீக்கு
    5. இவங்க எழுதியிருக்கறதைப் பார்த்தால், இவர் வீட்டுக்குப் போனால், பாதி வயிறு நிரம்பும்படி சாப்பாடு போட்டு, மீதி வயிறுக்கு, செய்முறையைச் சொல்லி அனுப்பிடுவாரோ?//

      தப்பு தப்பு.....கமலாக்காவுக்கு கை கால் ஓடாது நீங்க அவங்க வீட்டுக்குப் போனீங்கனா...சந்தோஷத்துல உங்களை அன்போடு உபசாரம் செய்தே நனைய வைச்சு அதுலயே உங்க மனசும் வயிறும் குளிர்ந்து ரொம்பிடும்!!! அப்புறம் பாதி வயிறுதானே சாப்பிட முடியும்!!!

      கீதா

      நீக்கு
    6. /// உங்க மனசும் வயிறும் குளிர்ந்து ரொம்பிடும்!!! அப்புறம் பாதி வயிறுதானே சாப்பிட முடியும்!! ///

      உண்மை..
      உண்மை..

      நீக்கு
    7. /// உங்கப் பக்கம் நான் ஒண்டிக்கு ஒண்டி நின்னு பாத்துடறேன்!!!! ///

      ஆகா.. இதுவல்லவோ அன்பு...

      நீக்கு
    8. வணக்கம் கீதா ரெங்கன் சகோதரி

      தங்கள் கருத்தைக் கண்டு சிரித்து விட்டேன்.

      /கமலாக்காவுக்கு கை கால் ஓடாது நீங்க அவங்க வீட்டுக்குப் போனீங்கனா...சந்தோஷத்துல உங்களை அன்போடு உபசாரம் செய்தே நனைய வைச்சு அதுலயே உங்க மனசும் வயிறும் குளிர்ந்து ரொம்பிடும்!!! அப்புறம் பாதி வயிறுதானே சாப்பிட முடியும்!! /

      உண்மை. உண்மை. உங்களைப் போல எனக்கு பேசி சமாளிக்கத் தெரியவில்லை. என் சார்பாக நீங்கள் பேசிய அன்புக்கு மிக்க நன்றி சகோதரி. ஆனாலும், பாவம் சகோதரர்... வீட்டுக்கு வந்தும், அரை வயிறு சாப்பாட்டோடு சென்று விட்டால், எனக்கும் மனதுக்கு கஸ்டமாக இருக்கும். எனவே நன்றாக சாப்பிடத்தான் முதலில் வலியுறுத்துவேன். என்ன இருந்தாலும் நாம் அனைவரும் நெல்லை அல்லவா? நெலலை விருந்தினர் உபசாரத்திற்கு பெயர் பெற்றதில்லையா ? (இதற்கு முதல் மறுப்பே சகோதரர் நெல்லைத் தமிழர் தான் சொல்லுவார் எனவும் எனக்குத் தெரியும். இருப்பினும் பிறந்த மண் வாசம் நம்மை விட்டுப் போகாது என நான் நினைக்கிறேன்.) நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  16. இதில் உபயோகப்படுத்தும் காய்கறிகளைப் பார்த்தாலே, இந்த உணவு நம் நிலத்துக்கானதல்ல என்பது தெரியும்.

    என்ன பெரிய நிலம்? பாரம்பர்யம், கலாச்சாரம்னு இன்னுமா ஜல்லியடிக்கிறீங்க எனக் கேட்கிறீர்களா? அதுவும் சரிதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// இதில் உபயோகப்படுத்தும் காய்கறிகளைப் பார்த்தாலே, இந்த உணவு நம் நிலத்துக்கானதல்ல என்பது தெரியும்... ///

      உண்மை தான்...

      ஆனாலும் தக்காளி வறமிளகாய் இல்லை..

      ஆப்பிரிக்க மசாலா இல்லை..
      ஆரோக்கியம் தானே..

      நீக்கு
  17. @ கமலா ஹரிஹரன்..

    /// இந்த பாசுமதி கலவை சாதத்தின் பக்குவங்களை அழகாக சொல்லிய தங்களுக்கு மனமார்ந்த நன்றி///

    அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
    நன்றி..

    பதிலளிநீக்கு
  18. /// இதில் உபயோகப்படுத்தும் காய்கறிகளைப் பார்த்தாலே, இந்த உணவு நம் நிலத்துக்கானதல்ல என்பது தெரியும்.///

    அரபு நிலத்தில் இப்படியொரு தயாரிப்பு ஒன்று...

    அங்கே இங்கே உருட்டித்தான் இந்தக் குறிப்பு..

    மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  19. @ கமலா ஹரிஹரன்

    /// நன்றாக சாப்பிட்டு விட்டு எப்படி செய்தீர்கள் என செய்முறையையும் (அது அடிக்கடி அவர்கள் வீட்டிலும் செய்வதாக இருந்தாலும்) கேட்டுச் செல்வார்கள்... ///

    அப்படியொரு நாகரிகமும் நம்மிடையே இருந்தது..

    மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த நாகரீகம் இப்போதும் உண்டு. ருசியான உணவை உண்டால் செய்முறையைக் கேட்டுத் தெரிந்துகொள்வேன்.

      நீக்கு
    2. இருந்தாலும் குழாயடி (யுடியூப் ) ஒருபுறம் குழப்பி விடுகின்றது..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    3. யூடியூப் பார்த்து நான் செய்பவற்றை (அதாவது வெங்காய சாம்பார் போன்று வீட்டில் செய்பவற்றை யூடியூபில் பார்த்துச் செய்தால்) என் பசங்க ஒத்துக்கொள்வதில்லை. அம்மா பண்ணற மாதிரி இல்லை, நல்லால்லைன்னு சொல்லிடறாங்க. அதனால எங்க வீட்டில் ரெகுலரா செய்பவற்றை யூடியூப் வெர்ஷன் பார்த்து முயற்சிப்பதில்லை.

      இது பற்றிய கேள்வியை நான் கேஜிஜிக்கு அனுப்புகிறேன்.

      நீக்கு
    4. நல்லது... நல்லது...

      தாய் அளிக்கும் சுவையே சுவை..

      என்றும் மாறாதது..

      நீக்கு
  20. துரை அண்ணா காய் சாதம் செய்முறைக் குறிப்பு சூப்பர்!!

    மிகவும் பிடிக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏதோ எனக்குத் தெரிந்ததை சொல்லி இருக்கின்றேன்..

      தங்கள் அன்பிற்கு மகிழ்ச்சி..
      நன்றி சகோ..

      நீக்கு
  21. கலவை சாதம் நன்றாக இருக்கிறது . சொல்லிய விதம் ரசிக்க வைத்தது.

    /// இதில் உபயோகப்படுத்தும் காய்கறிகளைப் பார்த்தாலே, இந்த உணவு நம் நிலத்துக்கானதல்ல என்பது தெரியும்./// எமது நிலத்துக்கான மரக்கறிகளை உண்ண விரும்பாத இளம் சமுதாயத்தினருக்கு இப்படியான காய்கறிகள் கலந்த சாதம் பிடிக்கும்.

    எங்கள் வீட்டில் பரங்கிக்காய், முள்ளங்கி பாவக்காய் பிடிப்பதில்லை. நானும் கணவரும் சாப்பிடுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான்..
      இளம் தலைமுறை பாரம்பரிய காய்களை விரும்புவது இல்லை..

      மகிழ்ச்சி
      நன்றி மாதேவி..

      நீக்கு
  22. செய்முறை விளக்கம் சுவாரஸ்யமாக இருந்தது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஜி..

      நீக்கு
  23. கலவை சாதம் எந்த வித மசாலாவும் அதிகம் இல்லாமல் ஆரோக்கியமாக அமைந்திருப்பதுடன் எளிமையான குறிப்பாகவும் அமைந்திருப்பது அருமை!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

      சமையல் கலை வித்தகம் அறிந்திருக்கும் தங்களது கருத்துக்கு நன்றி..

      நீக்கு
  24. கலவை சாதம் செய்முறை நன்றாக இருக்கிறது. படங்களும் நன்றாக இருக்கிறது. மசாலா பொருட்கள் அதிகம் இல்லை. நன்றாக இருக்கிறது.
    நான் பாசுமதி அரிசி வாங்குவது இல்லை, பேரன் வந்தால் மட்டும் வாங்குவேன். பிரியாணி அரிசி என்று சன்ன ரக அரிசி விற்கிறார்கள் அதில் காய்கறி கலவை சாதம் செய்து விடுவேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாசுமதி அரிசி குழைவதில்லை.

      சன்ன ரக அரிசியும் நல்லது தான்..

      தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி... நன்றி..

      நீக்கு
  25. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  26. அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.. நன்றி..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!