வெள்ளி, 31 மே, 2024

வெள்ளிப் பனிமலை அருவியில் விழுந்து... வெற்றித் திருமகன் மடியினில் கிடந்து

 ​L R ஈஸ்வரி பாடிய கற்பூர நாயகியே பாடல் இன்றைய தனிப்பாடல்.  அவிநாசி மணி இயற்றிய பாடலுக்கு சோமு கஜா இசை.


கற்பூர நாயகியே… கனகவல்லி….
கற்பூர நாயகியே…. கனகவல்லி….
காளி மகமாயி! கருமாரி அம்மா…..
பொற்கோவில் கொண்ட சிவ காமியம்மா
பூவிருந்த வல்லி தெய்வானையம்மா
கற்பூர நாயகியே… கனகவல்லி….
காளி மகமாயி… கருமாரி அம்மா….

[நெற்றியில் குங்குமமே நிறைய வேண்டும்
நெஞ்சில் உன் திருநாமம் வழியவேண்டும்] (2)

கற்றதெல்லாம் மேன் மேலும் பெருக வேண்டும்
பாடும் கவிதையிலே உன் நாமம் வாழ வேண்டும்
கற்பூர நாயகியே… கனகவல்லி….
காளி மகமாயி… கருமாரி அம்மா….

[காற்றாகி லாகிக் கடலாகினாய்
யிராகி உயிராகி உடலாகினாய்] (2)

நேற்றாகி இன்றாகி நாளாகினாய்
நிலமாகி பயிராகி உணவாகினாய்
தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய் (2)
தொழுதாலும் அழுதாலும் வடிவாகினாய்
போற்றாத நாளில்லை தாயே உன்னை! (2)
பொருளோடு புகழோடு வைப்பாய் என்னை
பொருளோடு புகழோடு வைப்பாய் என்னை


கற்பூர நாயகியே… கனகவல்லி….
காளி மகமாயி… கருமாரி அம்மா….
கருமாரி அம்மா
கருமாரி அம்மா


========================================================================================

1974 ல் எஸ் ஏ அசோகனின் சொந்தத் தயாரிப்பாக அமலராஜ் பிலிம்ஸ் பெயரில் வெளியிடப்பட்டு 150 நாட்கள் ஓடியதாக சொல்லப்படும் படம் 'நேற்று இன்று நாளை'.

ஆனால் இந்தப் படம் எடுத்துஅசோகன் நஷ்டமடைந்தார் என்று படித்த ஞாபகம்.  MGR, மஞ்சுளா, லதா, நம்பியார், அசோகன் நடித்த படம்.  ப நீலகண்டன் இயக்கத்தில் எம் எஸ் விஸ்வநாதன் இசை.  ஒரே ஒரு பாடல் மட்டும் வேறு ஏதோ படத்துக்கு கே வி மகாதேவனால் இசை அமைக்கப்பட்ட நெருங்கி நெருங்கி பழகும்போது பாடல் உபயோகப்படுத்தப்பட்டுள்ளதாம்..

TMS சுசீலா பாடிய இன்றைய பாடலை புலமைப்பித்தன் எழுதி இருக்கிறார்.  இந்தப் படத்தில் இரண்டு தலைவர் பாடல்கள் உண்டு.

நீ என்னென்ன சொன்னாலும் கவிதை
உன்னை எங்கெங்கு தொட்டாலும் இனிமை
நீ என்னென்ன சொன்னாலும் கவிதை
உன்னை எங்கெங்கு தொட்டாலும் இனிமை

நீ என்னென்ன செய்தாலும் புதுமை
உனை எங்கெங்கு தொட்டாலும் இளமை
இனிமை... இளமை...
நீ என்னென்ன செய்தாலும் புதுமை
உனை எங்கெங்கு தொட்டாலும் இளமை
இனிமை... இளமை...

சின்னஞ்சிறு மலர் பனியினில் நனைந்து (2)
என்னைக் கொஞ்சம் வந்து தழுவிட நினைந்து (2)
முல்லைக் கொடியென கரங்களில் வளைந்து (2)
முத்துச்சரமென குறு நகை புரிந்து 
குறு நகை புரிந்து
நீ என்னென்ன சொன்னாலும் கவிதை
உன்னை எங்கெங்கு தொட்டாலும் இனிமை

பொன்னில் அழகிய மனதினை வரைந்து (2)
பொங்கும் தமிழினில் கவிதைகள் புனைந்து (2)
பன்னீர் புதுமலர் இதழ்களில் நனைந்து (2) 
கங்கை நதியென உறவினில் கலந்து
உறவினில் கலந்து...
நீ என்னென்ன சொன்னாலும் கவிதை

வெள்ளிப் பனிமலை அருவியில் விழுந்து
வெற்றித் திருமகன் மடியினில் கிடந்து
உள்ள சுகத்தினை முழுவதும் அளந்து
இந்த உலகினை ஒரு கணம் மறந்து
ஒரு கணம் மறந்து...

நீ என்னென்ன சொன்னாலும் கவிதை
உன்னை எங்கெங்கு தொட்டாலும் இனிமை
நீ என்னென்ன செய்தாலும் புதுமை
உனை எங்கெங்கு தொட்டாலும் இளமை
இனிமை... இளமை... 

31 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    இன்றைய வெள்ளி பாடல் பகிர்வில் முதல் பாடல் அருமையான அம்மன் பாடல். திருமதி எல். ஆர். ஈஸ்வரியின் குரலில் இந்தப்பாடலுக்கே ஒரு தெய்வீக பக்தி உணர்வு வரும். நன்றாக பாடியிருப்பார். முழுப்பாடலும் எனக்கு மனப்பாடந்தான். நவராத்திரி சமயங்களில் மட்டுமில்லாது எப்போதும் கேட்கும் பாடல். இன்றும் கேட்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலா அக்கா... அம்மன் கோவில் திருவிழாக்களில் முதலாவதாக ஒலிக்கும் பாடல்!

      நீக்கு
    2. அதிசயமாக இவ்வளவு அதிகாலையில் வந்திருக்கிறார். இரண்டாவது பாடலைப் பற்றி எழுதுவதற்குள் வேலை வந்துவிட்டது போலிருக்கே

      நீக்கு
    3. அதியமாகவா? ஹா ஹா. முன்பு எப்போதும் இதே போலத்தான் வருவேன். நடுவில் தண்ணீர் பிரச்சனை காரணமாக சில மாதங்களாக தாமதம். இனி வரும் ஞாயறிலிருந்தும் வருகை தாமதமாகும். காரணம் உங்களுக்கு சென்ற ஞாயறில் சொல்லியுள்ளேன். நன்றி.

      நீக்கு
    4. சென்ற ஞாயிறில் அடுத்த ஞாயிறு தாமதமாகும்னு சொல்லியிருந்தீங்க. காரணம் சொல்லியிருந்தீங்களா? நினைவில்லை. ஏதும் விசேஷத்துக் போவதாக எழுதியிருந்தீர்களோ?

      நீக்கு
  3. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  4. தண்செய்யும் வாழ்க.. தஞ்சையும் வாழ்க..
    தளிர் விளைவாகித்
    தமிழ் நிலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  5. /// காற்றாகி சணலாகிக் கடலாகினாய்!
    கயிறாகி உயிராகி உடலாகினாய்!.. ///


    காற்றாகி கனலாகிக் கடலாகினாய்!..
    பயிராகி உயிராகி உடலாகினாய்!..

    பதிலளிநீக்கு
  6. அம்மன் கோயில் திருவிழாக்களுக்க்கு என்றே இந்தப் பாடல்..

    பதிலளிநீக்கு
  7. நெற்றியில் குங்குமமே நிறைய வேண்டும்..
    நெஞ்சில் உன் திருநாமம் வழியவேண்டும்..

    பதிலளிநீக்கு
  8. பக்திப் பாடல்களில் சில, காலத்தை வென்று எல்லோர் மனதிலும் நிறைந்துவிடும்.

    கற்பூர நாயகி பாடலும் அவற்றில் ஒன்று. ஒன்றிக் கேட்டவர்களுக்கு முழுப் பாடலும் மனப்பாடம்

    எல் ஆர் ஈஸ்வரி பேட்டிகள் கேட்டிருக்கிறேன். புகழ் வெளிச்சத்துக்கு வருமுன் எல்லாவித சோதனைகளையும் ஆண்டவன், பலர் மூலமாக்க் கொடுக்கிறான்.

    பதிலளிநீக்கு
  9. நீ என்ன்ன சொன்னாலும் கவிதை... மிக அருமையான பாடல். நிறைய தடவை கேட்டிருக்கிறேன். வரிகளைப் பார்க்கும்போதே பாடல் மனதில் ஒலிக்கிறது. நல்ல பகிர்வு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன்னவில் என்ன ஒரு அழுத்தம்...! ஹா ஹா மக்கள் திலகம் விரும்பியா?

      நீக்கு
    2. இந்தப் பாடலைச் சிறு வயதில் நிறைய தடவை கேட்டிருக்கிறேன். சின்ன வயதில் யாருடைய விரும்பியாகவும் இருக்க முடியாது கமலா ஹரிஹரன் மேடம். எப்பவாவது ஒரு தடவை, மத்யானமே எங்களைத் தூங்கச் சொல்லிவிட்டு, வெங் போட்ட உளுந்து போண்டா, தயிர் சாதம் சகிதம் டிபன் கேரியரில் அப்பா எடுத்துவர, பக்கத்திலிருக்கும் ஊரான பொன்னமராவதியில் படம் பார்த்துவிட்டு, சாப்பிட்டுவிட்டு வீடு வந்து சேருவோம். அதற்கு முந்தைய, இரண்டாம் வகுப்பு காலங்களில் அப்பா அம்மாவுடன் பரமக்குடியில் நடந்து சென்று படம் பாப்ப்கோம் (கருந்தேள் கண்ணாயிரம், ராஜராஜசோழன் )

      எதனாலேயோ எம்ஜிஆர் முதன் முதலில் தாமரையைச் சின்னமாகத் தெரிவு செய்தார். அதை பேப்பரில் வரைந்து பேருந்துகளின் பின்னால் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது ஒட்டியது நினைவுக்கு வருகிறது.

      நீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    இன்றைய பகிர்வில் திரைப்பட பாடலான இரண்டாவது பாடலையும், வானொலியிலும் ,தொலைக்காட்சியிலும் கேட்டுப் பார்த்துள்ளேன். அப்போது ஹிட்டான நல்ல பாடல்தான். இன்றும், நீங்கள் பகிர்ந்த இரண்டு பாடல்களையும் சற்று நேரத்திற்குப் பிறகு கேட்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  11. வியாழன் அழைக்கிறது.
    பின்நோக்குப் பார்வைகள் எப்பொழுதுமே பயன் உள்ளவைகளாக அமைவதில் ஆச்சரியமில்லை. :))

    பதிலளிநீக்கு
  12. ஆடி மாதம், தை மாதம் என்றால், அம்மன் கோயில் திருவிழாக்கள் என்றால் "கற்பூர நாயகியே" தான் இன்று திருவிழாப்பா.....ஆடி மாசம் ஆடிச்செவ்வாய்மா...ந்னு நினைவுபடுத்தும்!

    அருமையான பாடல் எல் ஆர் ஈஸ்வரி யின் கணீர் குரல் எல்லாம் கேட்கப் பிடிக்கும். மெட்டு ரொம்ப பொதுவான மெட்டு என்றாலும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  13. இரண்டாவது பாடல் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்பப் பிடித்த பாடல், ஸ்ரீராம்.
    பாகேஸ்‌ரீ ராகம். பாகேஸ்‌ரீ ராகம் பொதுவா patho இருக்கும், feeligns....கருணையோடான, கெஞ்சல், அதுல என்ன ஒருஅழகான காதல் பாடல்!!!

    ரசித்துக் கேட்டேன் ஸ்ரீராம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாகேஸ்வரி தாயே பார்வதியே என்ற வரிதான் நினைவுக்கு வருது. எபில ஒருத்தருக்கு மாத்திரம் ராகங்கள் தெரிவது எவ்வளவு ஈஸி. அவங்க பாகேஸ்வரி ராகம்னு சொன்னாலும் காமேஸ்வரி ராகம்னு சொன்னாலும், இருக்கும் இருக்கும் க்கும் னு கேட்டுக்க வேண்டியதுதான்.

      நீக்கு
    2. ஆமாம் நெல்லை அந்தப் பாட்டு அருமையான பாட்டு..

      அவங்க பாகேஸ்வரி ராகம்னு சொன்னாலும் காமேஸ்வரி ராகம்னு சொன்னாலும், இருக்கும் இருக்கும் க்கும் னு கேட்டுக்க வேண்டியதுதான்.//

      ஹாஹாஹாஹா காமேஸ்வரின்னு சொல்றதுக்குப் பதிலா ராகேஸ்ஸ்ரீ ந்னு சொல்லுங்க நெல்லை...பாகேஸ்‌ரீயும் ராகேஸ்‌ரீயும் இரட்டைகள்! டக்குனு கண்டுபிடிக்க முடியாத இரட்டைகள்!

      கீதா

      நீக்கு
  14. மயக்கும் மாலைப் பொழுதே, சிங்க்ளத்துச் சின்னக் குயிலே பாடல் தொடங்குவது வேறு ராகம் ஆனால் சரணம் அன்பே நீ இன்றி அலைகள் ஆடாது பாகேஸ்‌ரீ. எப்படி இந்த ஷிஃப்ட் கொண்டு வருகிறார் ராஜா!
    மழை வருது மழை வருது குடை கொண்டு வா, கலையே என் வாழ்க்கையை திசைமாற்றினாய், ரோஜா........நேரம், (இடையில் வார்த்தைகள் தெரியலை...இன்னும் நிறைய இருக்கு இந்த ராகத்தில் எனக்கு டக்கென்று வார்த்தைகள் பிடிகிட்டவில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
  15. கற்பூரநாயகியே....." மிகவும் அருமையான பக்திப்பாடல் ஈஸ்வரி அவர்களின் குரலில் பிரமாதமாக ஒலிக்கும்.

    இரண்டாவது பாடலும் நல்ல பாடல் கேட்டிருக்கிறேன்.

    வெள்ளிப் பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  16. எல்.ஆர்.ஈஸ்வரி அம்மா அவர்களின் இப்பாடலை கேட்காதோர் உண்டோ ?

    இப்படத்தினால் எஸ்.ஏ.அசோகன் அவர்களை ஏழையாக்கிய பெருமை எம்.ஜி.ஆரையே சேரும்.

    பதிலளிநீக்கு
  17. இரண்டு பாடல்களும் பிடித்த பாடல்.
    கற்பூர நாயகி பாடல் பழைய பாடல்மிக நன்றாக இருக்கும். இது வேறு ராகத்தில் இருக்கிறது.
    அடுத்த பாடல் அடிக்கடி கேட்ட பாடல்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!