செவ்வாய், 14 மே, 2024

சிறுகதை : சிலுசிலு என - துரை செல்வராஜூ

 

சிலுசிலு என.

துரை செல்வராஜூ

*** *** **** ****

" அப்புறம் பாலா எப்படியிருக்கே!... "

ஆயிரத்து எட்டாவது முறையாகக் கேட்டாள் ஜோதி ..

பாலா திரிபுரசுந்தரியின் முகத்தில் மாறாத பூஞ்சிரிப்பு..

இருவரும் பால்ய சிநேகிதிகள்.. பள்ளித் தோழிகள்.. இப்போது குடும்பம்.. அது.. இது என்று ஆகி - கண்ணாடி போட்டுக் கொள்கின்ற வயது!..


பொதுத் தேர்வின் கடைசி நாளில் கட்டிப்பிடித்துக் கொண்டு கண் கலங்கியது.. 

அதன் பிறகு - போதும் புத்தக மூட்டை தூக்கியது என்று சுபயோக சுப தினத்தில் கல்யாணம் என்ற பெயரில் புதிய சுமையை ஏற்றி வைத்து எல்லாரும் கொண்டாடிக் குதுகலித்த போது அப்படியும் இப்படியும் பார்த்தபடியே  அந்தரங்கம் பேசிக் கொண்டது என்று எல்லா நினைவுகளும் நெஞ்சில் பொங்கி எழுந்து ஆரவாரித்துக் கொண்டிருந்தன..

" ஒரே ஊர்ல நீ இந்தப் பக்கமும் நான் அந்தப் பக்கமும் மூனு வருசமா இருந்தும் இன்னிக்குத் தான் ஒருத்தர ஒருத்தர் பார்த்துக்கறோம்.. நேரம் தான்.. " 

காய்கறி மார்க்கெட்டில் ஒருவரை பார்த்துக் கொண்டதும்  தொண்டைக்குள் வார்த்தைகள் சிக்கிக் கொள்ள கண்ணீர் மடை திறந்து கொண்டது.. சற்று நேரத்திற்கு ஒன்றும் புரியவில்லை இருவருக்கும் .. 

மனதின் அதிர்வுகள் ஓரளவுக்கு அடங்கியதும் இயல்பாக பேசிச் சிரித்துக் கொண்டு பாலா திரிபுர சுந்தரியின் வீட்டுக்கு வருகின்றாள் ஜோதி..

" அக்கா.. பிள்ளையார் கோயில் வந்திருச்சி.. இந்தத் தெரு தானே... "  ஆட்டோக்கார தம்பியின் கேள்வி..

" இங்கேயே நிறுத்திக்க தம்பி.. அதோ அந்த வீடு தான். தெருவுல எதுக்காக பள்ளம் தோண்டுனாங்களோ தெரியலை.. மூனு மாசமா  அப்படியே கெடக்கு.. அவசரத்துக்கு வேகமா நடந்தா ஆஸ்பத்திரிக்குத் தான் போகணும்.. ஆட்டோ உள்ளே வந்தா திரும்பக் கூட முடியாது.. நாங்க இங்கேயே எறங்கிக்கறோம்.. "

" நீங்க இருங்க அக்கா.. காய்கறிப் பைகளை தூக்கிக்கிட்டு நடக்குறது கஷ்டம்.. நா வீட்டு வாசல்ல எறக்கி விடறேன்.. "

" உனக்கு ஏன் தம்பி வீண் சிரமம்?.. " 

" இப்படியே நேரா போனா பஸ்டாண்டு போய்டலாம் தானே!.. "

அந்தத் தம்பியிடம் புன்னகை..

வாசலில் ஆட்டோ நின்றதும்  நூறும் ஐம்பதுமாகக் கொடுத்தாள் பாலா.. 

ஐம்பது ரூபாயைத் திருப்பிக் கொடுத்தான் அந்தத் தம்பி..

" ஏம்பா.. உள்ளூர் நூத்திஇருபது தானே.. "

" நூத்திஇருபது தான்.. ஆனாலும் வாய்க்கு வாய் தம்பி தம்பி ந்னு சொன்னது..ல.. "

" பணத்தை வச்சிக்குங்க அக்கா... நான் சரவணன்.. இது செல் நம்பர்.. சவாரி ன்னா கூப்பிடுங்க.. வந்து நிக்கிறேன்.. "

என்றபடி  பைகளை இறக்கி வைத்தான்.. 

" சரி தம்பி நல்லபடியா போய்ட்டு வா.. "

வீட்டுக்குள் இருந்து பெண்ணொருத்தி வந்தாள்..

' பாலாவின் மகளா.. இருபத்திரண்டு ந்னு சொன்னாளே.. கொஞ்சம் கம்மியாத் தெரியுது.. முகச் சாயல் பாலா மாதிரி தெரியலையே..  ஆனாலும் நல்லாத்தான் இருக்கிறா!.. ' ஜோதியின் நினைப்பு.. 

" வாங்க.. வாங்க.. " - என்றபடி எல்லாப்  பைகளையும் எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் சென்றாள் அந்தப் பெண்..

' உன் மகளா.. ' சந்தேகம் விழிகளின் வினா ஆகியது..

' இல்லையில்லை... ' என்றன பாலாவின் விழிகள்..

' ஓ.. வேலைக்கு இருக்கின்றாளா.. '  ஜோதியின் நெஞ்சில் சற்றே நிம்மதி..

வீட்டுக்குள் மின் விசிறி மெல்லச் சுழன்றது.. 

" ஜோதி.. நாம எல்லாம் படிக்கிறப்ப நமக்கு வீட்ல எவ்வளவு வேலை.. நாலஞ்சு பேர் இருந்தாலும் ஆளுக்கு ஒரு வேலையா பார்த்து.."

" ஆமா.. கருக்கல் ல கோழி தெறந்து விட்டுட்டு மாட்டைப் பிடிச்சு மாத்திக் கட்டி மடியக் கழுவி பாலக் கறந்து கொடுத்துட்டு கேணி ல தண்ணி இறச்சி தலைல ஊத்திக்கிட்டு ஆட்டுக்கல்லுல சட்னி அரச்சுக் கொடுத்துட்டு - இத்தனைக்கும் தலைக்கு ஊத்திக்காம சமையல் கட்டுக்குள்ள நுழயக்கூடாது.. எல்லா வீட்லயும் வேலை இதே மாதிரி இருக்காது.. இருந்தாலும் எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்குமா.. அவ பெரிய அக்கா ஒருபக்கம் உட்கார்ந்திருப்பா.. சின்ன அக்கா வயத்தை வலிக்குதும் பா.. என்னமோ இந்தக் காலத்துல எல்லாம் தனி மரமா தனித்தனி மரமா ஆயிடிச்சு.. "

" கொஞ்சம் வசதி இருக்கிற வீட்ல தான் வேலைக்கு ஆள் அம்பு சேனை எல்லாம்.. படிப்பு வாசனை மூளைக்கு ஏறலை ன்னா கைக்கு கரண்டி வந்துடும்.. இல்லத்து இளவரசி தான்.. சமையக்கட்டு ராஜாங்கம் தான்... இப்போ அப்படியெல்லாம் இல்லை.. இவ்வளவு ஏன்... லதாவுக்கு இன்னும் டீ போடவே தெரியாது... " பாலாவிட்ம் சிரிப்பு..

" சரி.. எங்கே உன் மக.. கண் ல காட்டவே இல்லயே.. "

" இரு கூப்பிடறேன்.. மாடியில ஏதோ கம்ப்யூட்டர் புரோக்ராம் பண்ணிக்கிட்டு இருக்கா.."

" பையன் தானே பெங்களூர் ல இருக்கறதா சொன்னே.. "

" லதாவும் தான்... கம்ப்யூட்டர் ல புரோக்ராம் பண்றா..."

காஃபி வந்தது..

" இந்தப் பொண்ணு கைக்கு உதவியா இருக்கட்டுமே ன்னு.. "

" ஆமா.. அம்மி இல்லை.. ஆட்டுக்கல் இல்லை.. இடி உரல் இல்லை.. திருகல் இல்லை.. உரல் இல்லை உலக்கை இல்லை.. கேணி இல்லை கேணிக் கயிறும் இல்லை... எதுவும் செய்ய உடம்புலயும் வலு இல்லை.. "

" இலக்கிய மன்றத்துல பேசற மாதிரியே இருக்கு.. "

" அது ஒன்னு தான் மனசுக்கு நிம்மதி.. அப்போதைக்கு அப்போது நானே பைத்தியக்காரி மாதிரி பேசிக்குவேன்.. அவர் ரசிப்பார்.. மகன் டோண்ட் வேஸ்ட் யுவர் எனர்ஜி மா ன்னுவான்.. சரி.. லதாவைக் கூப்பிடு.. நாலு வார்த்தை பேசிட்டு கிளம்பறேன்.."

" என்னது?.. கிளம்பறயா!.. போய் என்ன பணணப் போற?.. அவர் ஒரு பேங்க்.. மகன் ஒரு பேங்க்.. ரெண்டு பேருக்கும் சாப்பாடு காலையிலயே கொடுத்தாச்சு..  வேற என்ன வேலை வீட்ல இருக்கு?.. "

கேட்டுக் கொண்டே செல்போனில் செய்தி அனுப்பினாள் பாலா..

ஜோதி பதில் சொல்ல இயலாமல் விழித்தாள்..

" காய்கறி எல்லாம்... " 

" காய்கறி எல்லாம்.. அப்பவே சில்லர் ல வச்சாச்சு..  நாளைக்குப் போறப்ப!.. "

" நாளைக்கா!.. '  ஜோதியிடம் அதிர்ச்சி..

பாலா சிரித்தாள்.. 

" சாயங்காலம் நாலு மணிக்கு கேசரி, தவள வடை ..  காஃபி அவ்வளவு தான்.. கிளம்பிடலாம்.. "

" அம்மா.. இன்னிக்கு  என்ன.. இத்தனை ஹேப்பி?.. .. " 

மாடியில் இருந்து லதா வந்து கொண்டிருந்தாள்.. கையில் அகலமான கைத்தல பேசி..

" நான் சொல்லியிருக்கேனே.. ஜோதி!.. அன்புச் சிநேகிதி.. " 

" வாங்கம்மா!... "

உரிமையுடன் அருகில் அமர்ந்து கொண்டாள்.. நாகரிகமும் நளினமும் அவளிடம் பொலிந்தது.. மேல் சட்டையில் இருந்து மல்லிகை வாசம் ..

" அம்மா.. நீ சொல்லியிருக்கே கிளாஸ் கட் அடிச்சதா.. அது இவங்க கூட தானா!?.. "

அம்மாக்களிடம் சிரிப்பு..

" சரிங்கம்மா கொஞ்சம் வேலை இருக்கு.. நாம அப்புறமா பேசலாம்.. " - என்றபடி லதா நகர்ந்ததும்,

" என்ன பாலா... உடம்பு வளர்த்தி இல்லாம இருக்கா உன் பொண்ணு.. "

" ஏன் நல்லாத்தானே வளர்ந்து இருக்கா!.. "

" உனக்கு விவரமே பத்தாது.. நாமல்லாம் இந்த வயசுல இப்படியா இருந்தோம்..   பின்னாலயே லோ லோ ன்னு அலைவானுங்க.. லதா இப்படி  மெலிஞ்சு இருக்காளே.. " - என்றதும் ,

" திங்கிறது ஒரு இட்லி.. ஒன்ரை தோசை.. தயிர்  வெண்ணெயப் பார்க்கவே பயம்..  உடம்பு வேற எப்படி  இருக்கும்?.. அது சரி.. எங்கே உன் மகன் போட்டோ?.. "

" இதோ.. " கைத்தல பேசியில் இருந்து எடுத்துக் காட்டினாள்..

" சரியாத் தெரியலயே.. இங்கே கொடு.. " என்று கையில் வாங்கிய பாலா கண்ணாடியை எடுத்து மாட்டிக் கொண்டாள்..

" நல்லாத் தான் இருக்கிறான்.. என்ன வயசு?.. ' 

" இந்தக கார்த்திகை வந்ததும் இருபத்து நாலு.. கார்த்திகை மூனாம் நாள் பொறந்தவன்.. அதனால தான் சபரீஷ் ன்னு பேர்.."

" சபரீஷ்.. நல்ல பேர்.. " 

அருகிருந்த கைத்தலம் - ரிங்க் ரிங்க்... என்றது..

" ஏதோ சேதி வருது.. " கைத்தலத்தை நோண்டிய பாலாவிடம் குறுஞ்சிரிப்பு..

" ஆமாமா.. அத வாங்குங்க.. இத வாங்குங்க... அந்த ஆபரேஷன் பண்ணிக்குங்க.. இந்த ஆபரேஷன் பண்ணிக்குங்க.. ன்னு ஒரே குடைச்சல்.. "

சில நிமிடங்களில் மறுபடியும் ரிங்க் ரிங்க்...

" அம்மா!.. " - அந்தப் பெண் வந்து நின்றாள்..

" ஜோதி.. வா சாப்பிடலாம்.. " 

மேலிருந்து துள்ளலுடன் லதா.. ஏதோ ஒரு மகிழ்ச்சிப் பிரவாகம்...

அவளே எல்லாவற்றையும் எடுத்துப் பரிமாறினாள்.. 

"சமைக்கத் தெரியாது  ன்னாலும்.. நல்லா சர்வ் செய்வேன்.. வீட்ல இருந்து  முறுக்கு கொண்டு வந்து டீச்சர்ஸ்க்குத் தெரியாம தின்னுவீங்களாமே.. அம்மா அடிக்கடி சொல்வாங்க.. "

இருவருக்கும் பிரியமுடன் பரிமாறி விட்டு தானும் அமர்ந்து கொண்டாள்..

' எங்க வீட்டுக்கு வந்து பரிமாறுவியா லதா... ' ஜோதியின் மனதில் நினைப்பு..

" எனக்கு மூனு மாசமாவே சபரீஷைத் தெரியும்.. " - லதா இதழ் மலர்ந்தாள்..

" என்னோட அக்கவுண்ட் அந்த பேங்க்ல தானே..  sabari Very smart .. "

ஜோதி திகைத்தாள்..

" பேர் எல்லாம் சொல்லக் கூடாது.. " 

பாலாவிடம் புன்சிரிப்பு..

' அம்மா..   This is two thousand twenty four.. sabari my dear.."

ரிங்க் ரிங்க்.. வந்ததுக்கு எல்லாம் இது தான் அர்த்தமா!..

ஜோதியின் கண் முன்னே வண்ண வண்ண தேவதைகள் பறந்து கொண்டிருக்க மறுபடியும் ரிங்க் ரிங்க்.. இந்த முறை ஜோதியின் கைத்தலத்தில்..

' ஜோதி.. பொண்ணு புடிச்சிருக்கா!.. சபரி இப்போ தான் சொன்னான்.. என்ன சொல்றா மருமகள்.. "

சிலு சிலு என்றிருந்தது வீட்டிற்குள்..

***

76 கருத்துகள்:

  1. அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு..

    வாழ்க குறள்..

    பதிலளிநீக்கு
  2. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. தண்செய்யும் வாழ்க.. தஞ்சையும் வாழ்க..
    தளிர் விளைவாகித்
    தமிழும் வாழ்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க... வாழ்க... வாழ்க... வாங்க செல்வாண்ணா ...  வணக்கம்.

      நீக்கு
  4. இன்று கதைக் களம் காண்பதற்கு வருகை தரும் அன்பு நெஞ்சங்களுக்கு நல்வரவு..

    பதிலளிநீக்கு
  5. இன்று எனது கதையினைப் பதிப்பித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கும்

    கண் கவரும் ஒளிப்படத்துடன் அழகு செய்த சித்திரச் செல்வர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
  6. அண்ணா கதை நன்று. நட்பு வேறு உறவாகத் தொடரப் போகுது...அதுவும் நட்புடன்..

    முதலில் கதை டக்குனு புரியலை இதோ இந்த வரியினால்..

    //வாசலில் ஆட்டோ நின்றதும் நூறும் ஐம்பதுமாகக் கொடுத்தாள் பாலா..//

    பாலா வீட்டுக்கு ஜோதிதான் வருகிறாள்? இல்லையா..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாலா வீட்டுக்குத் தான் ஜோதி வருகிறாள்?..

      குழ்ப்பத்துக்கே இடம் இல்லை..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி சகோ..

      நீக்கு
    2. துரை அண்ணா புரிந்துவிட்டது பாலாவோடு ஜோதியும் வருகிறாள்!

      கீதா

      நீக்கு
  7. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள்..

      ததாஸ்து..

      நீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    இன்றைய கதை நன்றாக உள்ளது. திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயக்கப்படும் என்று சொல்வார்கள். இங்கு பழைய நினைவுகள் மாறாது, அனைவரிடமும் அன்புடனும், பாசத்துடனும் இருக்கும் பாலாவின் வீடே ஒரு சொர்க்கம் மாதிரி இருப்பதால், இங்கும் ஒரு திருமணம் சட்டென நிச்சயமாகி விட்டது. சட்சட்டென வரும் வார்த்தை முடிவுகளை ரசித்தேன். இப்படி எழுத தங்கள் ஒருவரால்தான் முடியும். அருமையான எழுத்து. மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

    கதைக்கேற்ற ஓவியமும் மிக அழகாக இருக்கிறது. சகோதரர் கௌதமன் அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ கமலா ஹரிஹரன்

      /// பாலாவின் வீடே ஒரு சொர்க்கம் மாதிரி இருப்பதால், இங்கும் ஒரு திருமணம் சட்டென நிச்சயமாகி விட்டது. சட்சட்டென வரும் வார்த்தை முடிவுகளை ரசித்தேன்.///

      திருமணங்கள் உடனே கை கூடி வருவதற்கு அன்பும் ஆதரவும் இறைவனின் நல்லாசிகளும் தான் காரணம்..

      இதன் அடிப்படை சுபமங்கலமான சூழ்நிலைகள்..

      இன்றைக்கு அடிப்படை காரணிகளே மாறி விட்டன...

      அளவுக்கு அதிகமான பணமும் அதிகார மமதையும் குறுக்காக நிற்கும்போது வீட்டில் மங்கல நிகழ்வுகள் எளிதாகக் கூடி வருவதில்லை..

      கூடி வந்தாலும் - நாம் ஒன்றும் சொல்லக் கூடாது..

      ஆனாலும் உப்பைத் தின்றவர் தண்ணீர் குடித்தாக வேண்டுமே!..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி

      நீக்கு
  9. நேசத்துடன் இரண்டு நட்புகள், அவர்களின் பசங்களுக்கு இயல்பான ஒட்டுறவு மலர்கிறதை மிக நன்றாக எழுதியிருக்கிறார்.

    எப்போதும்போல் சுபமான கதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெல்லை..

      /// நேசத்துடன் இரண்டு நட்புகள், அவர்களின் பசங்களுக்கு இயல்பான ஒட்டுறவு மலர்கிறதை மிக நன்றாக எழுதி///.

      இதுதான் வேண்டும்...
      இதற்கு மேல் என்ன வேண்டும்...

      ஆதரவு பட்ட இன்பம் வாழ்வில் இனிக்குமே..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நெல்லை அவர்களுக்கு நன்றி

      நீக்கு
  10. திருமணம் இவ்வளவு எளிதாக நடந்துவிடுவதையெல்லாம் துரை செல்வராஜு அவர்களின் கதையில்தான் படிக்க வேண்டும். விதி விலக்குகள் தவிர, திருமணங்கள் நிச்சயமாவதற்கே பல வருடங்கள் பிடிக்கும் காலம் இது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ அன்பின் நெல்லை
      /// திருமணம் இவ்வளவு எளிதாக நடந்துவிடுவதையெல்லாம் துரை செல்வராஜு அவர்களின் கதையில்தான் படிக்க வேண்டும். .///

      எனது மகளின் திருமணம்
      பத்து வருடத்திற்கு முன்பு - மூன்று மாதங்களுக்குள் நிறைவானது..

      இணைய தளத்தில விவரங்கள் பரிமாற்றம்..

      புன்னை நல்லூர் மாரியம்மன் கோயிலில் யாரோ ஒரு புண்ணியவதி செய்த ஆசீர்வாதம்...

      பெரிய கோயில் ஸ்ரீ வராஹி அம்மனுக்கு முன்பாக இருவரும் பார்த்துக் கொண்டனர்..

      அவர்கள் இருவரையும் வராஹி அம்மன் பார்த்துக் கொள்கின்றாள்..

      அவர்கள் தரப்பில் எதுவும் நிர்பந்திக்கப்படவில்லை..

      இப்போது குறைவின்றி வாழ்கின்றனர்..

      இப்போது சொல்லுங்கள்..
      மங்கல மரபுகள் உணர்வுகளுடன் எனது கதைகள் பயணிப்பது சரிதான் என்று!..

      எல்லாருக்கும் நலம் விளைய வேண்டும்..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    2. ஹாஹாஹாஹா நெல்லை பாயின்ட்தான்...

      ஆனா அண்ணாவின் கதையில் இரு குழந்தைகளும் தங்களின் விருப்பத் தேர்வு!! பல பெற்றோர்களும் இதுக்கு ஆதரவாகத்தான் இருக்காங்க இப்பலாம்...பின்ன அவங்களுக்கு ஒரு வேலை மிச்சம் அதை விட, தேடித் தேடி நிராகரிக்கப்பட்டு, நிராகரித்து மன உளைச்சல் மிச்சமில்லையா?

      கீதா

      நீக்கு
    3. என் உறவினர் வீட்டிலும், ஒரே வாரத்தில் திருமணம் கைகூடியது. (ஒரு வருடத்துக்கு முன்பு) இதெல்லாம் விதிவிலக்குகள்னு நினைக்கிறேன். ஸ்ரீராம்தான் சொல்லணும். (கீதா ரங்கன் eligible இல்லை ஹிஹிஹி)

      நீக்கு
    4. நெல்லை அதெல்லம் ரொம்ப ரொம்ப அபூர்வமா நடக்கும் ஒன்று இப்ப. ஆமா விதிவிலக்குகள்தான். ஆனா என் உறவு அக்காவின் பையன் 36/37 ஆகுது. ம்ஹூம். சைவமா இருந்தா போதும் வேற எதுவும் பார்க்கலைன்னு இறங்கி வந்தும் இன்னும் அமையலை. பையன் சொக்கத் தங்கம்! ஒரே பையன் அக்காவும் பையனும் மட்டும் தான்.

      //(கீதா ரங்கன் eligible இல்லை ஹிஹிஹி)//

      ஹாஹாஹாஹா....நெல்லை. நான் மைக் க ஆஃப் பண்ணி வைச்சிருக்கேன்!

      கீதா

      நீக்கு
  11. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  12. நல்ல கதை .இயல்பான நடையில் தோழிகள் உரையாடல், அம்மாவின் நட்பிடம் பாலாவின் மகள் அன்பாக பேசி உபசரிப்பது என்று போனது அருமை.

    சிறு வயது நட்பு இப்போது சொந்தமாக கை கோர்க்க போகிறது.

    //எங்க வீட்டுக்கு வந்து பரிமாறுவியா லதா... ' ஜோதியின் மனதில் நினைப்பு.//

    மனதில் நினைத்தது உடனே நிறைவேறி விட்டதே!
    இயல்பாக பேசும் நல்ல மருமகள் கிடைத்து விட்டது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல எண்ணங்கள்..
      நட்பின் கரங்கள்..

      நன்மைகளுக்குக் கேட்க வேண்டுமா!..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு
  13. அகஸ்மாத்தாக மார்க்கெட்டில் சந்திந்த பழைய நட்பு தான். கூப்பிட்டாளே என்று ஏன் அவள் வீட்டிற்குப் போனோம் என்றிருந்தது
    ஜோதிக்கு.

    நினைக்க நினைக்க தான் எவ்வளவு அப்பாவியாக இருக்கிறோம் என்ற சுய பரிதாபம் எரிச்சலாக மாறியது அவளுக்கு.. பிறர் வீட்டிற்குப் போய் தான் பெற்ற மகனைக் காதலிப்பவளைத் தெரிந்து கொண்ட எரிச்சல் அது.

    இது பற்றி ஒரு வார்த்தை சொல்லவிலையே சபரீசன்? அவ்வளவு அழுத்தக்காரனா தன் மகன் என்று பெற்ற மனது துடித்தது.

    வத்தல் தொத்தலா இப்படி ஒரு பெண்.. இவனுக்காகவே கொழு கொழு அழகுடன் காத்திருக்கும் இவன் அத்தை மகளுக்கு சொந்த பந்தங்களுக்கு நான் என்ன பதில் சொல்வேன் என்ற நிஜங்கள் கேள்விகளாக முகத்தில் அறைந்ததும் தடுமாறிப் போனாள் ஜோதி.

    இந்தக் கதை இப்படியாக ஆரம்பம் கொண்டிருந்தால் பிரமாதமாக இருந்திருக்கும்.

    தம்பி! உங்கள் விருப்பப்படியே சபரீஷூக்கும் லதாவிற்கும் திருமணம் முடித்து வையுங்கள். இருக்கவே இருக்கு அந்த கதை முடிவு.

    ஆனால் ஒரு கதை என்றால் ஒரு முடிச்சும் அது இயல்பாகவே அவிழும் நேர்த்தியையும் எழுத்தில் வடித்தால் தான் அழகாக இருக்கும்.

    தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். உங்கள் எழுத்தில் செழுமை கூடத் தான் இதெல்லாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு விநாடி அதிர்ந்து விட்டேன்...

      பிறகு தான் இதெல்லாம் உத்திகள் என்று புரிந்தது..

      இப்படித்தான் எனது படைப்பு ஒன்றை மடை மாற்றி 80 களில் வார இதழ் ஒன்று வேறொரு பெயரில் வெளியிட்டிருந்தது..

      ஜீவி அண்ணா அவர்களுக்கு நன்றி..

      மகிழ்ச்சி..

      நீக்கு
    2. /வத்தல் தொத்தலா இப்படி ஒரு பெண்.. இவனுக்காகவே கொழு கொழு அழகுடன் காத்திருக்கும் இவன் அத்தை மகளுக்கு // - ஜீவி சார் ஆசையையும் கெடுப்பானேன். இரண்டையும் சேர்த்துவிடுங்கள் அந்தப் பையனுக்கு துரை செல்வராஜு சார்.

      நீக்கு
    3. இதைத்தான் ஆசைக்கு ஒண்ணு, ஆஸ்திக்கு ஒண்ணு என்று முன்னோர்கள் சொல்லியிருந்தார்களோ? (ஹா ஹா ஹா)

      நீக்கு
    4. நெல்லை. அவரின்
      பதில்கள் தனிப்பட்ட சொந்த விஷயங்களோடு கலந்ததாய் இருப்பது வருத்தமாய் இருக்கிறது. அதனால் விளையாட்டு வேண்டாம்.

      நீக்கு
  14. கதையின் போக்கில்
    வக்கிரமான எண்ணங்களை எழுத்தில் வடித்து
    இதுதான் செழுமை இதுவே செழுமை என்று நாட்டுவது எந்த வகையான நியாயம்?..

    பதிலளிநீக்கு
  15. உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டு!..

    பதிலளிநீக்கு
  16. @ ஜீவி அண்ணா..

    /// தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். உங்கள் எழுத்தில் செழுமை கூடத் தான் இதெல்லாம்.///

    இப்படியொரு செழுமை இன்றியே எனது கதைகள் வளரும்!..

    மீனும் தவளையும் தண்ணீரில் என்றாலும் - தவளைக்குத் தான் இரு வாழ்வி எனப் பெயர்..

    கன்னி ராசி துலா லக்னத்தில் கெட்ட எண்ணங்கள் உண்டாவதில்லை..

    பதிலளிநீக்கு
  17. நலமுடன் நிகழட்டும் டும், டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டும்.. டும்.. டும்..

      வைகாசியில் முதல் முகூர்த்தம்..

      மகிழ்ச்சி.. நன்றி ஜி..

      நீக்கு
  18. /// தம்பி! உங்கள் விருப்பப்படியே சபரீஷூக்கும் லதாவிற்கும் திருமணம் முடித்து வையுங்கள். இருக்கவே இருக்கு அந்த கதை முடிவு.. ///

    எடுத்துக் கொடுத்த மாங்கல்யத்தின் முடிச்சுகள் இப்போதோ எப்போதோ என்றிருக்கின்ற இந்தக் காலகட்டத்தில்,

    எழுத்தில் வடித்த மாங்கல்யங்கள் எனக்கும் என் சந்ததிக்கும் மங்கலத்தைத் தரும்!.... சர்வ நிச்சயம்...

    நீங்கள் குறிப்பிட்ட பிறகு தான் எனக்கே தெரிய வருகின்றது -

    நானும் நானே தான் என்று!..

    பதிலளிநீக்கு
  19. /// தம்பி! உங்கள் விருப்பப்படியே சபரீஷூக்கும் லதாவிற்கும் திருமணம் முடித்து வையுங்கள். இருக்கவே இருக்கு அந்த கதை முடிவு.. ///

    எடுத்துக் கொடுத்த மாங்கல்யத்தின் முடிச்சுகள் இப்போதோ எப்போதோ என்றிருக்கின்ற இந்தக் காலகட்டத்தில்,

    எழுத்தில் வடித்த மாங்கல்யங்கள் எனக்கும் என் சந்ததிக்கும் மங்கலத்தைத் தரும்!.... சர்வ நிச்சயம்...

    நீங்கள் குறிப்பிட்ட பிறகு தான் எனக்கே தெரிய வருகின்றது -

    நானும் நானே தான் என்று!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படியெல்லாம் சொந்த விஷயங்களைப் பிணைத்து கதையைக் கதையாக நினைத்து கருத்துச் சொல்பவர்களை எதிராக நிறுத்த வேண்டாம் தம்பி.
      இது என் வேண்டுகோள்.

      நீக்கு
    2. இப்படியெல்லாம் சொந்த விஷயங்களைப் பிணைத்து கதையைக் கதையாக நினைத்து கருத்துச் சொல்பவர்களை எதிராக நிறுத்த வேண்டாம் தம்பி.
      இது என் வேண்டுகோள்.

      நீக்கு
    3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    4. இது உண்மையில் புரியவில்லை..

      நீக்கு
    5. எது தான் உங்களுக்குப் புரிந்திருக்கிறது?

      எந்த உங்கள் கருத்துக்குப் பின்னால் இந்தக் கருத்து வந்திருக்கிறது என்று பாருங்கள். புரியும்.

      நீக்கு
  20. எத்தனையோ ஆண்டுகள் வாழ்ந்தார்களாம்...

    இப்போது மனக் கசப்பினால்
    பிரிந்து விட்டார்களாம்...

    இனி நட்பில் தொடர்வார்களாம்!...

    இன்றைய செய்தி...

    இதுதான் நிதர்சனம் என்று தெருவாசிகள்!..

    பதிலளிநீக்கு

  21. ஜீவி அண்ணா.

    அடுத்தவனைப் பார்த்து எழுது .. என்று வகுப்பு ஆசிரியர் சொன்னதை ஒத்துக் கொள்ளாத மகாத்மாவின் பக்தராகிய தாங்கள் -

    வக்கிர புத்தியுடன் குடி கெடுக்கின்ற குணாதிசயங்களை வைத்துக் கதை எழுது என்று சொல்லலாமா?..

    அப்படியான கதைகளை நான் ஏன் சொல்ல வேண்டும்?...

    வயிற்றில் கோரோசனை உடைய பசு மட்டுமே தண்ணீரைக் கண்டதும் இறங்கி நிற்கும்..

    தண்ணீர் இல்லையென்றால் சேற்றில் விழுந்து புரள்வதில்லை...

    கிழடு ஆனாலும் குரங்கு மரத்தினை மறப்பதில்லை!..
    எனது இந்தக் கருத்துகள் எனது இயல்பினைக் காட்டுவதற்காகவே!...

    செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை.. - குறள்..

    கள்ளி மேல் கை நீட்டார்.. - நாலடியார்..

    பதிலளிநீக்கு

  22. ஜீவி அண்ணா.

    அடுத்தவனைப் பார்த்து எழுது .. என்று வகுப்பு ஆசிரியர் சொன்னதை ஒத்துக் கொள்ளாத மகாத்மாவின் பக்தராகிய தாங்கள் -

    வக்கிர புத்தியுடன் குடி கெடுக்கின்ற குணாதிசயங்களை வைத்துக் கதை எழுது என்று சொல்லலாமா?..

    அப்படியான கதைகளை நான் ஏன் சொல்ல வேண்டும்?...

    வயிற்றில் கோரோசனை உடைய பசு மட்டுமே தண்ணீரைக் கண்டதும் இறங்கி நிற்கும்..

    தண்ணீர் இல்லையென்றால் சேற்றில் விழுந்து புரள்வதில்லை...

    கிழடு ஆனாலும் குரங்கு மரத்தினை மறப்பதில்லை!..
    எனது இந்தக் கருத்துகள் எனது இயல்பினைக் காட்டுவதற்காகவே!...

    செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை.. - குறள்..

    கள்ளி மேல் கை நீட்டார்.. - நாலடியார்..

    பதிலளிநீக்கு
  23. ஜீவி அண்ணா.

    அடுத்தவனைப் பார்த்து எழுது .. என்று வகுப்பு ஆசிரியர் சொன்னதை ஒத்துக் கொள்ளாத மகாத்மாவின் பக்தராகிய தாங்கள் -

    வக்கிர புத்தியுடன் குடி கெடுக்கின்ற குணாதிசயங்களை வைத்துக் கதை எழுது என்று சொல்லலாமா?..

    அப்படியான கதைகளை நான் ஏன் சொல்ல வேண்டும்?...

    வயிற்றில் கோரோசனை உடைய பசு மட்டுமே தண்ணீரைக் கண்டதும் இறங்கி நிற்கும்..

    தண்ணீர் இல்லையென்றால் சேற்றில் விழுந்து புரள்வதில்லை...

    கிழடு ஆனாலும் குரங்கு மரத்தினை மறப்பதில்லை!..
    எனது இந்தக் கருத்துகள் எனது இயல்பினைக் காட்டுவதற்காகவே!...

    செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை.. - குறள்..

    கள்ளி மேல் கை நீட்டார்.. - நாலடியார்..

    பதிலளிநீக்கு
  24. கௌ அண்ணா படம் நல்லாருக்கு.

    சரி....அவங்க போட்டிருக்கறா மாதிரி கண்ணாடி எங்க கிடைக்கும்னு சொல்லுங்க கௌ அண்ணா! ஸ்டைலிஷா இருக்கு! நிஜமாவே!

    கீதா

    பதிலளிநீக்கு
  25. ஜீவி அண்ணா...

    அடுத்தவனைப் பார்த்து எழுது .. என்று வகுப்பு ஆசிரியர் சொன்னதை ஒத்துக் கொள்ளாத மகாத்மாவின் பக்தராகிய தாங்கள் -

    வக்கிர புத்தியுடன் குடி கெடுக்கின்ற குணாதிசயங்களை வைத்துக் கதை எழுது என்று சொல்லலாமா?..

    அப்படியான கதைகளை நான் ஏன் சொல்ல வேண்டும்?...

    வயிற்றில் கோரோசனை உடைய பசு மட்டுமே தண்ணீரைக் கண்டதும் இறங்கி நிற்கும்..

    தண்ணீர் இல்லையென்றால் சேற்றில் விழுந்து புரள்வதில்லை...

    கிழடு ஆனாலும் குரங்கு மரத்தினை மறப்பதில்லை!..
    எனது இந்தக் கருத்துகள் எனது இயல்பினைக் காட்டுவதற்காகவே!...

    செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை.. - குறள்..

    கள்ளி மேல் கை நீட்டார்.. - நாலடியார்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு தாயின் இயல்பான ஆதங்கத்தை வக்கிர புத்தி என்று நினைப்பவர்களிடம் எதையும் விளக்கி பயன் இல்லை.
      பெற்ற மகன் தன் காதலை அந்தத் தாயிடம் சொல்லியிருந்தால்
      "நானாச்சு ராஜா.. இதை நடத்தி வைப்பது என் பொறுப்பு.
      உன் சந்தோஷம் தான் எனக்கு முக்கியம்" என்று வாக்களித்திருப்பாள்.
      அந்தக் காரியத்தை கதையில் செய்யாத நீங்கள் அந்தத் தாயின் பெற்ற மனம் பட்ட பாட்டை வக்கிர புத்தி என்கிறீர்கள்.
      இன்னொருத்தர் தெரியப் படுத்தி மகனின் காதல் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டிய அபாக்கிய நிலை அந்தத் தாய்க்கு.

      நீங்கள் அந்தப் பெண் லதாவின் உடல் தோற்றம் பற்றி 'அப்படி' எழுதியிருந்ததால் தான் அதற்குக் கோர்வையாக
      சபரீசனின் அத்தை மகள் உடல் வளப்பத்தைப் பற்றி அந்தத் தாய்க்கு நினைக்க வேண்டியதாயிற்று.

      வாழ்க்கையில் எல்லாமே கற்றுக் கொள்வது தான். எழுத்தும் அப்படித் தான். எழுதுவதில் எனக்கு ஆசானாக வாய்த்த முன்னோடிகள் பலர். அவர்களை நன்றியுடன் இந்த நேரத்தில் நினைத்துக் கொள்கிறேன்.
      அவர்களுக்கு என் கரம் குவித்த நன்றி இந்த நேரத்தில் மேலோங்குகிறது.

      நீக்கு
    2. /// பெற்ற மகன் தன் காதலை அந்தத் தாயிடம் சொல்லியிருந்தால்.. ///

      அத்தைக்கு மீசை முளைத்திருந்தால் என்பது மாதிரியான சிந்தனைகளுக்கு
      என்னிடம் கல்வியறிவு இல்லை...

      தாங்கள் குறிப்பிட்டிருக்கும் விதம் எனது சிந்தனைக்கு வக்கிரம் தான்...

      வேறொரு கதைப் பதிவில் - மனம் இருந்தால் சந்திப்போம்..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    3. கருத்துப் பிழைக்களுள்ள கவிதைகளை அரசவையில் கேட்க நேர்ந்தால் எழுத்தாணியால் தன் தலையில் குத்திக் கொள்வாராம் ஒட்டக்கூத்தர்.

      பாவம் ஒட்டக்கூத்தர் என்று இந்த சமயத்தில் நினைக்கத் தோன்றுகிறது. யார் எதை எப்படி எழுதினாலும் சகித்துக் கொண்டு 'தானுண்டு தன் பாடுண்டு' என்று போகத் தெரியவில்லையே அவருக்கு என்று இப்பொழுது நினைப்பு மேலோங்கிறது.

      'எதை வக்கிர எண்ணம்' என்று திருப்பித் திருப்பி நீங்கள் சொன்னாலும்
      அது உங்கள் அறியாமையாகவே
      இருந்து விட்டுப் போகட்டும்.
      உடல் தளர்வுற்ற இந்த வயதில் இந்த ஆயாசம் எனக்கு வேண்டாத வேலை தான்.

      இனி இந்தப் பக்கம் வருவதையெல்லாம் குறைத்துக் கொள்கிறேன். அனுபவமே ஆசான்.
      நன்றி.

      நீக்கு
  26. இதையும் கதை என்று ஏற்றுக் கொண்டு பதிப்பித்த ஸ்ரீராம் அவர்களுக்கு
    மீண்டும் நன்றி..

    பதிலளிநீக்கு
  27. /// ஒரு தாயின் இயல்பான ஆதங்கத்தை வக்கிர புத்தி என்று நினைப்பவர்களிடம் எதையும் விளக்கி பயன் இல்லை.///

    கதையில் நான் சிந்திக்காத ஒன்றை சிந்திக்கத் தூண்டும் இயல்பினை என்ன என்பது?..

    யாதறிவீர்கள் என் இயல்பைப் பற்றி?..

    ஒதுங்கிக் கொள்வோம்!...

    பதிலளிநீக்கு
  28. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  29. "........."
    '........'

    --- இந்த மாதிரியான குறியூடுகளையெல்லாம்
    எந்தந்த சமயங்களில் இடுவது என்று ஆரம்ப காலத்தில் சொல்லிக் கொடுத்ததே நான் தான்.

    ஒதுங்குங்கள்..
    ஒதுங்குங்கள்..

    ஒதுங்கினாலும் ஒரு காலத்தில் உணர்வீர்கள்.

    பதிலளிநீக்கு
  30. தினம் தினம் எபிக்கு வரும் பொழுதெல்லாம்
    'கடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது'
    எதுவாக இருக்கிறது என்று பாருங்கள்.

    முக்கியமாக இந்த மாதம் முடியும் வரை பார்க்கத் தவறாதீர்கள்.

    பதிலளிநீக்கு
  31. ஜீவி ஸார்...  உங்கள் வருகை மட்டுமல்ல, செல்வாண்ணா வருகையும், ஏன், நம் நண்பர்கள் ஒவ்வொருவர் வருகையும் நமக்கு முக்கியமே....  "இருவரும் ஒருபுறம் இருவரும் நண்பர்கள் அதுதான் அன்பின் எல்லை " என்கிற வரி நினைவுக்கு வருகிறது.  செல்வாண்ணாவை தம்பி என்று அருமையாக அழைக்கிறீர்கள்.  எனவே தம்பி சொல்வது உங்களை பாதிக்காது என்று நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
  32. செல்வாண்ணா...   என்ன திடீர்னு இப்படி பதில்கள்?   கேட்டிருந்த கேள்விகள் எனக்குமே இந்தக் கதையைப் படிக்கும்போது வந்ததுதான்.   மகனைப் பற்றிய உண்மை, ஒரு அந்தரங்கமான விஷயம் திடீரென ஒரு மூன்றாம் மனிதரிடத்திலிருந்து வந்தபோது அந்த எண்ணம் வரத்தானே செய்யும் - என்னதான் அது தோழியாய் இருந்தாலும்?  கேட்டிருந்தால் எனக்கும் இப்படிதான் பதில் வந்திருக்குமா?  அல்லது லதா வீட்டில் திட்டமிட்டு ஜோதியை சந்திப்பது போல காட்டியிருந்தாலும் சரி...இதெல்லாம் ஒரு வாசகர் மனதில் தோன்றினால் அதை எழுதக் கூடாதா?  ஏன் திடீரென சொந்த விஷயங்கள் எல்லாம் எழுதி கடுமை காண்பித்து விட்டீர்கள்?  அவர் சொல்லி இருந்த கருத்தில் வக்கிரம் ஒன்றும் தெரியவில்லையே எனக்கு.  ஒரு படைப்பு பொதுவில் வரும்போது நாலு வகையாகவும் விமர்சனங்கள் வரும்தானே?  அதற்கு அமைதியாய் பதில் சொல்லலாமே..  ஏன் விலகிக் கொள்கிறேன், விலகிக் கொள்ளலாம் என்றெல்லாம் பிரித்து எண்ணுகிறீர்கள்?  ஜீவி ஸார் பொதுவாக கதைகளில், மற்றும் எழுத்துகளில் ஒரு ஏற்றம், மாற்றம் வரவேண்டும் என்று எல்லோரையுமே அடிக்கடி சொல்பவர்தானே..  தீயினால் சுட்டபுண் போல ஆகி விட்டதே...  வருத்தமாய் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  33. பழம் நழுவி பாலில் விழ்ந்து அது நழுவி தேனில் விழுந்தது போல்..தோழிகளின் குழந்தைகள் ஒன்றாகிறார்கள். தோழிகளின் நட்பும் புதிய உறவாகி உறுதிப்படுகிறது. வாழ்த்துகள், துரை செல்வராஜு சார்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// தோழிகளின் குழந்தைகள் ஒன்றாகிறார்கள். தோழிகளின் நட்பும் புதிய உறவாகி உறுதிப்படுகிறது..///

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி துளசிதரன்..

      நீக்கு
  34. @ துளசிதரன்..

    // நட்பும் புதிய உறவாகி உறுதிப் படுகிறது. வாழ்த்துகள் //

    வாழ்த்துகள் மணமக்களுக்குத் தானே!...

    மகிழ்ச்சி.. நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் வாழ்த்துகள் சொன்னது உங்கள் கதைக்கும் எழுதியதற்கும்.

      துளசிதரன்

      நீக்கு
    2. தங்கள் அன்பினுக்கு மகிழ்ச்சி ..
      நன்றி துளசிதரன்..

      நீக்கு
  35. மகனைப் பற்றிய உண்மை, ஒரு அந்தரங்கமான விஷயம் திடீரென ஒரு மூன்றாம் மனிதரிடத்திலிருந்து வந்தபோது அந்த எண்ணம் வரத்தானே செய்யும் - என்னதான் அது தோழியாய் இருந்தாலும்? //

    எனக்கும் இது தோன்றியது. 'ஜோதி திகைத்தாள்' ன்ற வரியை வாசித்ததும். ஆனால் சொல்லத் தயக்கமாக இருந்தது.

    நான் கதையை மிகவும் ஊன்றி வாசிப்பது வழக்கம். எனவே தோன்றியது. நானும் அம்மா. என்னை ஜோதியின் இடத்தில் வைத்துப் பார்த்தேன். என் மனம் எப்படி வருந்தியிருக்கும் என்று நினைத்தேன்.

    அதன் பின் ஒரு வேளை நான்தான் கதையை சரியாகப் புரிந்து கொள்ளவில்லையோ, என்றும் தோன்றியதால் அப்படியே சென்றுவிட்டேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  36. மற்றும், இப்போதெல்லாம் எபி யில் கருத்துகள் சொல்வதற்குமே தயக்கமாக இருக்கிறது. நேர் கருத்தாகவே இருந்தால் நமக்குச் சிந்திக்க முடியாமல் போகுமோ என்று தோன்றும்....எதிர் கருத்தும் வந்தால் தான் சிந்திக்க வைக்கும்....ஆனால் எதிர் கருத்தும் கூட ஆரோக்கியமாகவும் இருந்தால் நல்ல விவாதமாக இருந்தால் சிந்திக்க வைக்கும் அது நல்ல எழுத்திற்கு வழிவகுக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை கீதா..  பாராட்டும் கருத்துகளை மட்டுமே எதிர்பார்க்க முடியாது என்பது தெரியும்.  ஆரோக்கியமான மாற்றுக கருத்தும் வந்தால்தான் நாமும் சரி செய்து கொள்ள முடியும்.  trial and errors. நீங்கள் தயங்காமல் உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்.  அதைத்தான் எங்கள் பிளாக் எதிர்பார்க்கிறது.

      நீக்கு
    2. ஆரோக்கியமான மாற்றுக கருத்தும் வந்தால்தான் நாமும் சரி செய்து கொள்ள முடியும்.//

      ஆமாம் ஸ்ரீராம். நிச்சயமாக. இதில் ஆரோக்கியமான என்பது மிக மிக முக்கியம்.

      //trial and errors. நீங்கள் தயங்காமல் உங்கள் கருத்துகளை சொல்லுங்கள். அதைத்தான் எங்கள் பிளாக் எதிர்பார்க்கிறது.//

      Yes! மிக்க நன்றி ஸ்ரீராம்.

      கீதா


      மிக்க நன்றி ஸ்ரீராம்!

      நீக்கு
  37. நட்புகள் சந்திப்பு சம்பந்திகளாக மாறுவது மகிழ்ச்சியான திருப்பம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல எண்ணங்கள்..
      நட்பின் கரங்கள்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி மாதேவி..

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!