சிச்சன் இட்ஸா மற்றும் பிற இடங்கள்
நாம் சிச்சன் இட்ஸா என்ற மாயன் வரலாற்றை ஒட்டிய இடத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். வழியில் கலைப்பொருட்கள் விற்கும் கடையில் பேருந்து நின்றது. அங்கிருந்த பொருட்களின் படங்களைப் பார்த்துக்கொண்டு வருகிறோம்.
நீங்கள் எல்லோரும் ‘மாயன்’ என்பதைப் பற்றி நிச்சயம் கேள்விப்பட்டிருப்பீர்கள். மாயன் காலண்டர் 2012ல் உலகம் அழியும் என்று சொல்லுது எனப் பலர் ஜல்லியடிச்சிருப்பாங்க. அதனை நம்பி இருக்கும் சொத்தையெல்லாம் நன்கு செலவழித்து ஓட்டாண்டியாகியிருக்கமாட்டாங்க. ஆனால் மாயன் காலண்டர் என்ற வார்த்தைகள் அந்த வருடத்தில் பல இடங்களிலும் ஒலித்தது.
மாயா என்பது இனத்தின் பெயர். உலகத்தில் ஐந்து நாகரிகங்கள்தாம் நன்றாக முன்னேறிய எழுத்துக்கள், எழுதும் சிஸ்டம் கொண்ட இனங்கள். அவற்றில் மாயா இனமும் ஒன்று. அமெரிக்காவிலேயே அப்படிப்பட்ட ஒரே ஒரு இனம் மாயா.
வானியலில் மிகவும் முன்னேறியவர்கள் மாயா இனம். கிரகங்கள், நட்சத்திரங்கள், அவைகள் எப்படி நகர்கின்றன, அதிலும் குறிப்பாக வீனஸ் கிரகத்தைப் பற்றி நன்கு அறிந்திருந்தனர். வானியல் அறிவு மற்றும் கணக்கில் அவர்கள் கொண்டிருந்த திறமையால் கிரகணம் எப்போது ஏற்படும் மற்றும் பலதரப்பட்ட வானியல் நிகழ்வுகளையும் அறியும் திறமை பெற்றிருந்தனர்.
மாயா மக்கள், நிறைய நகரங்களையும் உருவாக்கியிருந்தனர் (நம்ம மயன் தானப்பா அங்க போயிருக்கான். அவன் நகரை உருவாக்குவதற்குக் கேட்கவா வேணும்… என்ன சொல்றீங்க?)
அவர்கள் கோயில்களையும் உருவாக்கியிருந்தனர். அதில் பல்வேறுபட்ட வழிபாட்டு முறைகளை மேற்கொண்டிருந்தனர். அதிலும் குறிப்பாக நரபலி. இதன் மூலம் தேவதைகளைத் திருப்திப்படுத்தி, அவர்கள் தங்களுக்கு நல்லது செய்யவைக்க முடியும் என்று நம்பியிருந்தனர்.
நம்மைப் போலவே, மழைக்கு, சந்திரனுக்கு, சுவர்கத்துக்கு எல்லாம் தனித் தனி கடவுள் என்று நம்பினர்.
கோகோ விதைகளை வைத்து ஒரு பானம் (அதில் பால் சேர்த்தால்தான்பா ஹாட் சாக்லேட் செய்யமுடியும்) தயாரித்தனர். கோகோ, செல்வச் செழிப்புள்ளவர்கள் உபயோகிக்கும் பொருளானது. நாணயத்துக்கு ஒப்பாக அது செல்வாக்கு பெற்றிருந்தது.
அறிவியலாளர்கள், மாயா மக்கள், ஒருவகை சிமெண்ட் செய்யும் திறமை பெற்றிருந்தனர். அதனை உபயோகப்படுத்தி வளைவுகள், கட்டுமானங்கள் அமைத்தனர் என்று சொல்கிறார்கள்.
இவங்க கலாச்சாரத்திலும், அரசன், தலைமைப் பூசாரி, மற்ற பூசாரிகள் என்றெல்லாம் வகுப்பினர்கள் இருந்தனராம். (மதம், கடவுள், பூசாரி என்பதே ஒரு கூட்டத்தை அடங்கியிருக்கச் செய்வதற்கும், ஒரு மாரல் பயத்தை வரச்செய்வதற்கும், அட்டூழியங்கள் செய்தாலோ/தண்டனைகள் கொடுத்தாலோ அதனை நியாயப்படுத்துவதற்காக இருக்குமோ? (இப்படித்தான் இங்கிலாந்து அரசன் 7ம் ஹென்றி, அரசுக்கு ஆண் வாரிசு வேண்டுமே என்று தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள முயன்றான். போப் ஒத்துக்கொள்ளவில்லை என்பதால், நீ என்ன சொல்வது, நானே எங்கள் நாட்டிற்கு ஒரு மதத்தையும் சர்ச்சையும் உருவாக்கிக்கொள்கிறேன் என்று church of England வந்ததென்று சொல்வார்கள்)
இதுதான் மாயன் எழுத்துகள். கடத்தி வைத்தால், இருக்கும் இடமோ இல்லை ஆபத்து என்று எழுதுவதற்கோ ரொம்பவே மெனெக்கிடணும் போலிருக்கு
இதை எழுதும்போது, நான் ஒரு இன்ஷ்யூரன்ஸ் கம்பெனிக்கு கணிணி மென்பொருள் அப்ளிகேஷனுக்கு கன்சல்டண்ட் ஆக இருந்த போது, அந்தக் கம்பெனி I.T. Dept Managerஉடன் பழகினேன். அவர் சீனாவைச் சேர்ந்தவர் (ஆஸ்திரேலியா நாட்டுக்குக் குடிபோனவர்). அவர் சீன எழுத்துகளை எப்படி படம் போன்று எழுதுவார்கள் என்றெல்லாம் சொன்னார். எனக்கும் எழுதிக் காண்பித்து கற்றுக்கொள்ளலாமே என்று மனதில் தோன்ற வைத்தார். நம்ம தமிழ் எழுத்துக்களே 200க்கு மேல் இருப்பதால் கற்றுக்கொள்வது கடினமா இருக்குன்னு சொல்றாங்க. இதுல படம் போடும் எழுத்துக்களை எப்படிக் கற்றுக்கொள்வது?
மொத்தத்தில் மாயா நாகரிகம் வான்வெளி இயலில் மிகவும் சிறந்து விளங்கிற்று. இந்திய கலாச்சாரத்தைப் போலவே கோயில், பலி, தேவதைகள் போன்றவற்றில் மிகுந்த நம்பிக்கை பெற்று விளங்கினார்கள்.
இப்போ நாம அந்த சுற்றுலாப் பயணிகளுக்கான மெக்சிகன் கலைப்பொருட்கள் விற்கும் கடையில் இருந்த மற்றவற்றைப் பார்ப்போம். (எங்கப்பா ஒரு பெண்ணையும் காணோமே என்று கவலைப்படுகிறீர்களா? அன்று அவர்களையும் சேர்த்துப் படங்கள் எடுக்க ரொம்பவே தயங்கினேன். இந்தத் தயக்கம் எனக்கு தாய்வானிலோ இல்லை பிலிப்பைன்ஸிலோ இல்லை. அவங்க ரொம்பவே friendly என்று நான் நினைத்தது/நம்பியதுதான் காரணம்.
யானைக்கு மேல் யானைகளா? எங்கிருந்தாவது காப்பியடித்திருப்பாங்களா? அந்த ஊர்ல எங்கே யானைகள்?
'ஒண்ணும் வாங்கலையா? பரவாயில்லை… ஒரு மெக்சிகன் தொப்பியாவது வாங்கிட்டுப் போப்பா!'
சுவரில் பொருத்திவைக்கலாம். அழகான கலைப்பொருட்கள். நம்ம ஊர்ல ஒவ்வொரு வீட்டிலும் பெரிய பெரிய காலண்டர்களைத் தொங்கவிட்டு அசிங்கமாக வைத்துக்கொள்வதற்குப் பதிலா இது பரவாயில்லை என்று சொன்னால் என்ன சொல்வீங்களோ?
இதை எழுதும்போது சேலம் அருகே வேலையில் நான் இருந்தபோது என்ன செய்தேன் என்பது நினைவுக்கு வருது. வீட்டு அலவன்ஸுக்குப் பதிலா நான் பேச்சலர் என்பதால் எனக்கு ஒரு அறை கொடுத்திருந்தார்கள், கட்டில் மெத்தை, மேசை, சேருடன். அந்த வரிசையின் கடைசியில் குளிக்க நல்ல வெந்நீருடன் கூடிய பாத்ரூம்கள் மற்ற வசதிகளுடன். முன்பெல்லாம் என் Rankக்கிற்கு காலனியில் வீடுகள்தாம் கொடுப்பார்களாம். அப்புறம் எனக்கு முன்னர் இருந்த சில பல பேச்சலர்கள் அவர்கள் வேலையைக் காண்பித்ததால், குடும்பத்தோடு இருப்பவர்களின் பெண்களை லவட்டிடப் போறாங்களே என்று இந்த மாதிரி தள்ளி ஒரு பெரிய கட்டிடம் கட்டிவிட்டார்கள்.
அப்போ நிறையப் பேர்கள் பேச்சலராக இல்லை. அதனால் முதல் நாளிலேயே இரண்டு மூன்று அறைகளுக்குச் சென்று இரண்டு மெத்தைகளை எடுத்துக்கொண்டு வந்து என் கட்டிலில் மூன்று மெத்தைகளை ஒன்றன்மேல் ஒன்றாகப் போட்டுக்கொண்டேன். அறைச் சுவரில் அப்போது ஸ்பெஷலாக வெளியாகும் மிகப் பெரிய கேலண்டருடன் (பெண் படம்தான்..பகிராமலா போகப்போகிறேன்) நான் வரைந்த பல ஓவியங்களையும் ஒட்டியிருந்தேன். பத்தாக்குறைக்கு அப்பா எனக்கு வாங்கிக்கொடுத்த டூ இன் ஒன், சில பல கேசட்டுகள். நானே வாங்கிக்கொண்ட அலறும் ஸ்பீக்கர். ஆனால் ரொம்ப நல்ல பையனாக இருந்தேன். எல்லோரும் அவரவர் வீட்டிற்கு என்னைக் கூப்பிடுவார்கள். அங்கேயே அதாவது அந்த நிறுவனத்திலேயே இருந்திருந்தால் நல்ல ஒரு மிடில் கிளாஸ் (Classபா… Glass இல்லை) குடும்பமாக இருந்திருப்பேன். அதைப்பற்றிப் பிறிதொரு சமயம்.
எல்லாத்தையும் போட்டோ எடுக்கிறானே… ஒன்றாவது வாங்குவானா?
இந்த மாதிரிப் பொருட்களை வாங்குவதில் எனக்கு மிகுந்த தயக்கம் உண்டு. Exorcist படத்தில் காண்பிப்பது போல ஏதாவது ஆவி, இந்தப் பொருட்களோடு வந்துவிடுமோ என்று நினைப்பேன்.
அதுவும் அவங்க அலங்காரம்லாம் கொஞ்சம் பயமுறுத்துவது போலவே இருக்கு. அது சரி… நம்ம ராஜாக்கள் எல்லாம் அஜித், எம்ஜியார் மாதிரி அழகாக இருப்பாங்கன்னு வரையும் ஓவியர்கள் காண்பிக்கறாங்க. ஆனால் அவங்களோ அந்தக் கால உடைகள் அணிந்துகொண்டு, தொந்தியும் தொப்பையுமா சாதாரணமாக நம்ம கண்ணு முன்னால தென்பட்டாங்கன்னா, நாம அவங்க சக்ரவர்த்தி என்று நம்புவோமா? (திருமலைநாயக்கர், சரிந்த தொந்தியும்… என்றெல்லாம் அவரைப் பற்றி வருணனை வரும்)
கழுத்தில் அடையாள அட்டை, எந்தச் சுற்றுலாக் குழுவினர் என்று உடனே அடையாளம் தெரிந்துகொள்ள. ஒருவேளை வழி தவறினாலும் அங்குள்ளவர்கள் உடனே சேர்த்துவிடுவார்களாம். (கடைகளில் பொருள் வாங்கினால் இதனை வைத்து கமிஷன் தரவும் உபயோகமாக இருக்குமோ?)
இதான் அலங்காரமான மெக்சிகன் தொப்பி. அணியும்போது கொஞ்சம் சிரம மாக இருந்தது. இதைப் போட்டுக்கொண்டால் குதிரைல பயணித்தால்தான் சரியா இருக்கும். பேருந்துக்கெல்லாம் இது சரிப்படாது.
விதவித முகமூடிகள் மற்றும் சுவர் அலங்காரப் பொருட்கள். இடது மேற்புறம் பாருங்கள்.. மாயா எழுத்து எப்படி இருக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள். இரண்டு கோட்டைக் குறுக்காகப் போட்டு X என்று எழுதுவதை விட்டுவிட்டு படம் போட்டுக்கொண்டிருந்தால் விடிந்துவிடும். (தமிழ்ல எக்ஸ் எழுதறதுக்கே மூணு எழுத்து வேண்டியிருக்கேப்பா.. நீ என்ன பொசுக்குனு சொல்லிட்ட)
பொருளின் விலை அதிகமாக இருந்தாலும், அதன் கலைநயம் என்னைக் கவர்ந்தது.
ஒவ்வொரு பொருளின் விலையும் மிக அதிகம் என்பது என் எண்ணம் (வாங்காம வந்ததற்கு ஒரு சாக்கா?)
எங்கள் குழுவினர் எல்லோரும் கடையிலிருந்து (சுமார் 12 பேர்கள் இருப்பார்கள்) பேருந்துக்குத் திரும்பினர். பேருந்து மாயா கலாச்சாரச் சின்னமான சிச்சன் இட்ஸா என்ற இடத்திற்குச் செல்ல ஆரம்பித்தது. அடுத்த பகுதியில் சிச்சன் இட்ஸா என்றால் என்ன என்பதைப் பார்க்கலாம்.
(தொடரும்)
மாயன் காலண்டர் 2012ல் உலகம் அழியும் என்று சொல்லுது எனப் பலர் ஜல்லியடிச்சிருப்பாங்க. //
பதிலளிநீக்குஅப்படியா? புதுசா இருக்கே. நான் கவனிக்கலை போல. என் காதில் படவில்லையே.
அப்பதான் மகன் கல்லூரிப் படிப்பை முடித்தான் என்பதால் அடுத்த கட்டத்துக்கான முயற்சிகளில் ரொம்பக் கவனமாக இருந்ததால் இதெல்லாம் கவனிக்கலை போல.
கீதா
வாங்க கீதா ரங்கன் க்கா. இதை வைத்தெல்லாம் படங்கள் வந்தன. ஆனால் இதை நம்பி, இருக்கும் சொத்தையெல்லாம் ஆடம்பரமாகச் செலவழித்தார்களா, 2012ல் உலகம் அழியவில்லை என்பதால் ஏமாற்றமடைந்தார்களா எனத் தெரியவில்லை.
நீக்குமாயன் நாகரிகம் பற்றி வாசித்திருக்கிறேன். அவங்க மீசோஅமெரிக்கா (மெக்சிகோ) ல ன்னும். அதான் அவங்களுக்கு வட அமெரிக்காவோடு ரொம்பவே தொடர்புண்டு. கூடவே நீங்க சொல்லியிருக்கும் இந்த நரபலி, அமானுஷ்ய விஷயங்களில் ரொம்ப நம்பிக்கையுடைவங்க அதைச் செய்தவங்களூம்னும். இந்த occultism உலகம் முழுசும் அவங்கவங்க கலாச்சார, வரலாற்று விஷயங்களைத் தழுவியதாக இருக்கும்.
பதிலளிநீக்குகீதா
ஆனால் பலியாவது என்னவோ அப்பாவிகளோ இல்லை குற்றவாளிகளோதான். நம்ம ஊர்லயும், தான் திருடவில்லை, குற்றம் செய்யவில்லை என்று நிரூபிக்க, நல்லபாம்பு இருக்கைம் குடத்துக்குள் கைவிடுவதும், கொதிக்கும் எண்ணெயில் கைகளை விடுவதும் போன்ற தண்டனைகள் உண்டே
நீக்குஅப்ப, நம்ம வீட்டுக்கு வந்த மெக்சிக்கன் ஒருவர் இது பற்றிச் சொல்லி நம்ம ஊர்ல எப்படினும் கேட்டிருக்கிறார்.
பதிலளிநீக்குஅது போல அமெரிக்கப் பெண்மணி ஒருவர், மனச்சிதைவுக்கு ஆராய்ச்சி பண்ணினப்ப அதுவும் அப்ப இங்கு வந்து ஆராய்ச்சி செய்தவர், இதைப் பற்றிப் பேசினார். மனச்சிதைவு நோய்க்கு ஆட்பட்டசிலரை அவர் கேள்விகள் கேட்டும் ....ஏனென்றால் இது மனச்சிதைவுக்கு முக்கியமான காரணங்களில் ஒன்று என்று சொல்லப்படும்.
கீதா
என்னாது... நரபலி கொடுப்பது மனச்சிதைவு நோயா? இந்த அம்மா, போகிற போக்கில் சாஸ்திர சம்பிரதாய சாங்கியங்களை குறை சொல்லிட்டுப் போறாரே
நீக்குபடங்கள் எல்லாம் அட்டகாசம் நெல்லை. என்ன சொல்ல!
பதிலளிநீக்குகோக்கோ unprocessed powder அது ககோவா எனப்படும். ககோவா டார்க் சாக்கலேட் (ஸ்வீட் சுத்தமாக இல்லாதது) அது பிபிக்கு நல்லது என்பர்.
அவங்க உடை உருவங்கள் எல்லாமே பயமுறுத்தும். எழுத்து , வடிவங்கள் (முன்ன வாசிச்சப்ப ) எனக்குத் தோன்றியது இப்ப இந்த ஜோஸ்ய ராசிகளுக்கு ஒரு படம் போடுவாங்களே அது இவற்றிலிருந்து மருவி, இவால்வ் ஆகி வந்திருக்குமோ என்றும் தோன்றியதுண்டு...
கீதா
படங்களை ரசித்ததற்கு நன்றி. ராசிகளுக்கான படங்கள்... வித்தியாசமான சிந்தனை. அது சரி.. ராசிக்கான படங்களை வைத்து அவர்களின் குணாதிசயங்களைச் சொல்ல இயலுமா?
நீக்குஅந்த ராசிகளின் முக்கிய மிக முக்கிய குணாதிசயத்தைத்தானே அந்த ராசியின் படமாக வைத்திருக்காங்கன்னு சொல்வதை நான் கொஞ்சம் ஆராய்ந்து பார்ப்பதுண்டு. ஆனால் இதற்கு நிறைய புள்ளியியல் அதாவது நிறைய மனிதர்களைத் தெரிந்து கொள்ள வேண்டுமே. ஆனால் இதிலுமே மூன் முறைப்படியான சிம்பல்ஸ்களுக்கும் சூரிய முறைப்படியான சிம்பல்ஸ்களுக்கும் கொஞ்சம் வித்தியாசம் வருதே.
நீக்குகலைப்பொருட்கள் பட்ங்களும், நெல்லை நீங்க தொப்பி போட்டு அசத்தும் ஃபோட்டோவும் வாவ்!!!! சூப்பர் போங்க!
பதிலளிநீக்குகீதா
அட்டா... அந்தத் தொப்பியை வாங்கியிருந்திருக்கலாமோ? குடைக்குத் தேவையிருந்திருக்காது
நீக்குவாங்கியிருக்கலாம் நெல்லை. சூப்பரா இருந்திருக்கும் ஆனா ரொம்ப விரிஞ்சு இருந்தா பஸ்ல ரயில்ல போறப்ப எடுத்து உள்ளார வைச்சுக்க வேண்டியதுதான், அப்புறம் எங்கியாச்சும் ரொம்ப நெரிசல் இல்லா பகுதிகளில் போட்டு நடக்கலாம்
நீக்குகீதா
இந்தக் கலைப்பொருள் உருவங்களைப் பார்க்கறப்ப (இணையத்திலும் முன்ன....) எல்லா நாட்டிலும் கிட்டத்தட்ட இப்படித்தான் உருவங்கள் இருக்கும் போலன்னு...இங்கும் கூட இப்படியானதைப் பார்க்கலாம் இல்லையா?
பதிலளிநீக்குகீதா
எனக்குத் தோன்றிற்று.. இவங்க பழங்குடி சம்பிரதாயத்தைச் சேர்ந்தவங்க என்று. இங்கும் அந்தமானிலும் அப்படிப்பட்ட கலாச்சாரத்தைச் சேர்ந்தவங்க அதுபோலவே இருப்பாங்க
நீக்குபழங்குடி கலாச்சாரம் தான் நெல்லை, இங்குமே நீங்க அப்பகுதிகளுக்குப் போனா பார்க்கலாம் நெல்லை. தமிழ்நாட்டில்.
நீக்குகீதா
மயன் நாகரீகம் பற்றிய தகவல்கள் 2012 ல் கலக்கியபோது சுவாரஸ்யமாகத்தான் இருந்ததே தவிர, பயமாக இல்லை. நம்ப தயக்கமாக இருந்தது என்பது மட்டுமல்லாமல், நாமெல்லாம் சாகமாட்டோம், வாழ்வோம் என்கிற ஆதார நம்பிக்கை ஒவொரு மனிதனுக்குள்ளும் இருக்கும். அந்த நம்பிககைதானே நம்மை வாழ வைக்கிறது!
பதிலளிநீக்குஅப்போது வலைத்தளங்களில் வெளியான மயன் கட்டுரைகளை படங்களுடன் வெகு சுவார்ஸயதுடன் வாசித்ததோடு, அதை ப்ரிண்டவுட் எடுத்து ஆபீசில் கொடுத்து அவர்களை பயமுறுத்தி வைத்திருந்தேன். 2012 முடிவுக்கு வந்தபோது ஒன்றும் நேரவில்லை என்று உணர்ந்தபோது சுஜாதாவின் கடவுள் வந்திருந்தார் கதை நினைவுக்கு வந்ததது.
அவர்கள் 2012 என்று சொன்னதிலும் என்ன சூட்சுமமோ... உலகம் அழியும் என்று சொன்னதிலும் என்ன சூட்சுமமோ....
வாங்க ஶ்ரீராம்.. ஸ்கைலேப் பூமியைத் தாக்கப்போகுதுன்னு சொல்லி பாளையங்கோட்டையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தது நினைவுக்கு வருது.
நீக்குநல்லவேளை, 2012 விஷயத்தைத் தெரிந்துகொண்டு, பிறகு கட்டத் தேவையிருக்காது என நனைத்து கடன்லாம் நீங்க வாங்கிடலை
மெக்சிகன் தொப்பியோடு உங்களை பார்த்தபோது குதிரை வீரன் கிஸ்கோகிட் என்ற காமிக்ஸ் கதை படித்தது நினைவுக்கு வந்தது.
பதிலளிநீக்குஹாஹாஹா... தொப்பியெல்லாம் போட்டுக்கிட்டு படங்கள் எடுத்திருக்கான்... ஒண்ணும் வாங்கலியே என்று நினைத்திருப்பார்கள்.
நீக்குமயன் நினைவுப் படங்கள் சுவாரஸ்யம். உடை மற்றும் அலங்காரங்களில் ஒரு குறிப்பிட்ட பாணியை பின்பற்றி இருக்கிறார்கள்.
பதிலளிநீக்குஅவர்களின் வழித்தோன்றல்கள் எப்படியும் இன்றும் இருப்பார்கள். அவர்கள் ரத்தங்களில் மயன்களின் ஜீன் இருக்கும்.
என் அலுவலகத்தில் 'மாயன்' என்றே ஒருவர் பணிபுரிந்தார். அவர் பேசுவது யாருக்கும் புரியாது.
கற்பனையை ஓடவிடவேண்டாம். அவ்வளவு குழப்பமாக பேசுவார் என்று சொல்ல வந்தேன்! இன்னும் இருக்கிறார்!
மயனின் வழித்தோன்றல்களைப் போலவே, பல்லவ சோழ அரச மரபினரின் வழித் தோன்றல்களும் இப்போதும் இருக்கலாம், அவர்களில் சிலர் நம் அலுவலகத்திலேயே நமக்குக் கீழே உதவியாளர்களாகப் பணிபுரிந்திருக்கலாம் என யோசித்திருக்கிறீர்களா ஶ்ரீராம்?
நீக்குஅடிக்கடி நினைப்பதுண்டு! மதுரையில் எங்கள் வீட்டுக்கு பாத்திரம் தேய்க்க வந்த பெண்மணி, தான் மதுரை சோமுவின் உறவினர் என்று சொல்லி எங்களை சங்கடப்படுத்தியது நினைவுக்கு வருகிறது. முகத்தில் சிரிப்பே இருக்காது.
நீக்குஇதைப் படித்தபோது, நானும் அலுவலகத்தில் ஒரு சில பேரை, என்னவோ காரணமே இல்லாமல் அடிக்கடி கோபித்துக்கொண்டதும், பிறகு அவர்கள் அலுவலகத்தை விட்டு விலக நேர்ந்ததும் நினைவுக்கு வருகிறது. அவர்களுடைய பின்னணிக்கதை தெரிந்தால் ரொம்பவே சங்கடப்பட்டுவிடுவோம். வாழ்ந்து கெட்டவர்கள் மனது ரொம்பவே சங்கடப்படும். ஆமாம் ஏ ஆர் ரகுமானுக்கும் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதருக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா?
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குபடங்களில் பார்க்கும்போது கோவணம் போல இடுப்பில் இவ்வளவு நீளமாக தொங்க விட்டுக் கொண்டு சண்டை செய்வது போல வாளை நீட்டிக்க கொண்டு நிற்பது போல நிற்கிறார்கள்...
பதிலளிநீக்குசண்டையிடும் அந்த நீள கோவணம் தடுக்காது? இடறாது?
ஒருவேளை சண்டையிடும்னோது இழுத்துச் சொருகிக்கொண்டிருப்பார்களோ? அபோகபலிப்டோ படம் பார்த்திருக்கிறீர்களா? அதில் மாயன் கலாச்சாரம், மக்கள் பற்றி வருகிறது
நீக்குஏனோ அந்தப் பட வரிசை பார்க்கும் ஆர்வமே வந்ததில்லை.
நீக்குஅதுதான் நல்லது.
நீக்குஒரு தடவை ஓட்டிப்பார்க்கலாம் ஸ்ரீராம். அப்படித்தான் நம் கரையோர மக்களையும் மதம் மாற்றினார்கள்.
நீக்குகௌதமன் சார் ரொம்பவே நொந்து நூடுல்ஸாகிவிட்டார் போலிருக்கிறது. டி டி ரிட்டர்ன்ஸ் படத்தைப் பார்த்துவிடுங்கள்.
அது என்ன இன்னொரு யூகலிப்டஸ் படமா?
நீக்குDD Returns.. சந்தானம் படம். எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.
நீக்குபடங்கள் தெளிவாக இருக்கின்றன. யானைகள் கூட காணப்படுகிறதே?
பதிலளிநீக்குமாயன் கல்சர் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்.
வாங்க பானுமதி வெங்கடேஸ்வரன் மேடம். எனக்குமே அது ஆச்சர்யம்தான். ஆனால் காடுகளில் யானைகள் இருப்பது சகஜம்தானே. அவர்களின் வழிபாட்டில் பாம்பு இடம்பெற்றிருந்தது.
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குமுருகா என்றதும் உருகாதா மனம் ... என்ற பாடல்தான் எனக்கு நினைவில் இப்போது ஓடுகிறது துரை செல்வராஜு சார் (ஆனால் இந்த ஸ்ரீராம் இத்தகைய பாடல்களையெல்லாம் பகிர்வதில்லை. கேட்டால் குழைவு நெளிவு என்றெல்லாம் சொல்லிவிடுகிறார். என்ன பண்ணறது? வெள்ளிக்கிழமை, ஒரு பக்தி பாடல், பிறகு திரைக்கதைகள்-தற்போது வருவதைப்போல, ஒன்றோ இரண்டோ தான் ரசித்த பாடல்கள் என்று பகிர்ந்தால் என்னவாம்? - உடனே எழுத்தாளர் சுதந்திரத்தில் எப்படித் தலையிடலாம் என்று கேட்டுவிடாதீர்கள்)
நீக்குஅன்பின் நெல்லை அவர்களுக்கு வணக்கம்
பதிலளிநீக்குவாங்க துரை செல்வராஜு சார். ஆகஸ்டு முதல் வாரத்தில் நாம் சந்திக்க வாய்ப்பிருக்கிறதா (ஊரில்தானே இருக்கிறீர்கள்?)
நீக்குவாழ்க நலம் எங்கெங்கும்
பதிலளிநீக்குவாழ்க வளமுடன். காலையில் நல்ல சிந்தனையுடன் கருத்து எழுதியிருக்கிறீர்கள். வாழிய நலம்
நீக்கு// மாயன் கலாச்சாரத்தைச் சொல்லும் திரைப்படம் புகழ் பெற்ற அபோகலிப்டோ Apocalypto). // போன வாரம் இப்படி நெ த எழுதியிருந்ததால் - அதை போன வாரம் பார்த்து
பதிலளிநீக்கு--- வாழ்க்கையே வெறுத்துப் போய் விட்டது.
யாருக்காவது மூக்கில் சளி வருவதைப் பார்த்தால் கூட குமட்டிக் கொண்டு வரும். இந்தப் படத்தில் மூக்கிலிருந்து கொம்புகள் மோவாயிலிருந்து வால் என்று சர்வ அவலட்சணங்கள்.
போதாக்குறைக்கு ஆட்களை வெட்டி இதயத்தை உருவி எண்ணையில் பொறித்து
ஐயா வேண்டாம் சாமீங்களா - அந்தப் பக்கமே போகாதீங்க !
வாங்க கௌதமன் சார்... நானும் படத்தை ஓட்டி ஓட்டிப் பார்த்தேன். இது ஒரு புகழ்பெற்ற படம். கதையின் சாராம்சமாக நான் புரிந்துகொண்டது, ஒரு கலாச்சாரத்தை ஸ்பானிஷ் கிறுத்துவர்கள் வந்து அழித்து மதமாற்றம் செய்துவிட்டார்கள். அதற்கு முன்பு அவர்கள் காட்டுப் பழங்குடியினராக வாழ்ந்தார்கள் என்பது.
நீக்குஅது சரி.. நானும் சில பெண்கள் பழங்கால புல்லாக்கு போன்ற நகையை அணிந்து (இந்தக் காலப் பெண்கள்) வருவது, உருண்டையான மணியை நாக்கில், உதடுகளில் குத்திக்கொள்வது போன்றவற்றைப் பார்த்து நொந்துபோயிருக்கிறேன். ஆனால் மத்தவங்க இப்படி நான் எழுதுவதைப் பார்த்து, இந்தக் கால நாகரீகத்துக்கு நீங்கள் இன்னும் வரவில்லை என்று சொல்லிடுவாங்க.
:))))
நீக்குமெக்ஸிகோ கடை படங்கள் நன்றாக உள்ளன.
பதிலளிநீக்குJayakumar
வாங்க ஜெயகுமார் சார். மிக்க நன்றி
நீக்குநேற்று உங்கள் பதிவில் உங்களைக் காணோமே... வெளியில் சென்றுவிட்டீர்களா ஜெயகுமார் சார்?
நீக்குமாயன் கலாச்சாரங்கள் விரிவாக தந்துள்ளீர்கள்.
பதிலளிநீக்குஅவர்களின் வரையும் எழுத்துக்கள் அடேயப்பா. வரைவதற்குள் எமக்கு தலை சுற்று வந்துவிடும்.
போர்வீரன் உடல்வாகுடன், அவர்களின் கலர் ஆடைகள் எனக்கும் பூசாரிகளை நினைவூட்டியது.
தொப்பிகள், கலைப்பொருட்கள் என அனைத்தையும் தனித்தனியே கண்டு களித்தோம்.
படங்கள் பிடித்திருந்தன.நன்றி.
வாங்க மாதேவி அவர்கள். இந்த மாதிரி எழுத்துகளுக்கு என்ன அர்த்தம் என்று எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள் என்று எனக்குச் சந்தேகம் வரும்.அதுபோல, கலைப்பொருட்களை மெக்சிகோவில் தயார் செய்கிறார்களா இல்லை சீனாவிலா என்று.
நீக்குநன்றி
அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அரசு மேடம். வாழ்க வளமுடன்
நீக்குமாயன் வரலாற்றை ஒட்டிய இடத்திற்கு போய் அவர்களின் எழுத்து முறைகளை பற்றி படங்களுடன் விளக்கமாக சொன்னது அருமை. கலைப்பொருட்கள் விற்கும் கடையில் நாங்களே சுற்றிப்பார்த்த்து போல அனைத்தையும் பார்த்தோம், நீங்கள் சொல்வது போல நமக்கு வாங்க தோன்றாது இவைகளை.
பதிலளிநீக்குதொப்பி போட்டுக் கொண்டு நீங்கள் இருக்கும் படம் நன்றாக இருக்கிறது. அதை போட்டுக் கொண்டு அடுத்தவ்ர மேல் இடிக்காமல் வர முடியாது தான். குதிரை சவாரி செய்யலாம் தான்.
மாயன் படங்கள் மகனுடன் பார்த்து இருக்கிறேன். தலமை பூசாரிகள்
தனக்கு பிடிக்காதவ்ரகளை பலி கொடுப்பது, கதாநாயகன் பெரிய அருவியிலிருந்து கீழே விழுவது, குழிக்குள் உயிருக்கு பயந்து ஒளிந்து கொண்டு இருப்பது என்று கொஞ்சம் நினைவுக்கு வருகிறது , படம் பேர் நினைவு இல்லை.
அடுத்தவர் மேல் இடிக்காமல் - ஹாஹாஹா. ஆமாம்ல. குதிரை சவாரி செய்தால் அழகாக இருக்கும் தொப்பியோடு.
நீக்குநீங்கள் சொல்லும்படம் அகோபலிப்டோ. அதில்தான் குழிக்குள் ஒளிந்துகொண்டிருப்பது. அந்தக் காட்சி எனக்குப் பிடித்தது.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குமாயன் பற்றிய விவரங்களும் எழுத்து முறை பற்றிய விவரங்களைப் படங்களுடன் சொன்ன விதம் நன்றாக இருக்கிறது,
பதிலளிநீக்குபடங்கள் எல்லாமே அருமை.
நீங்கள் சொல்லியது போல் சைனா எழுத்துகளுக்கும் மாயன் எழுத்துகளுக்கும் ஏதேனும் தூரத்துச் சொந்தம் இருக்குமோ என்றும் தோன்றியது.
தொப்பி வைத்து குதிரையில் தான் செல்ல வேண்டும். அப்படமும் எல்லாப் படங்களுமே மிக நன்றாக இருக்கின்றன.
அடுத்த பகுதிக்குக் காத்திருக்கிறேன்.
துளசிதரன்