1.8.25

வரும் காலம் பொன்னாகட்டும் சொந்தம் ஒண்ணாகட்டும் அது கண்ணோடு கண்ணாகட்டும்

 மௌன கீதங்கள்.

 திரைக்கதை மேதை என்றுதான் பாக்யராஜை சொல்வார்கள்.  மிகவும் வெற்றிகரமான திரைக்கதை வசனகர்த்தா.  அவர் எழுதிய இந்தக் கதை படம் வெளிவருவதற்கு முன் குமுதத்தில் தொடராக வெளிவரச் செய்ததும் இதன் வெற்றிக்கு காரணம்.

மிகவும் சுவாரஸ்யமான படம் என்பதை நீங்கள் எல்லோருமே அறிவீர்கள்.  வெளிவந்து 25 வாரங்கள் ஓடிய படம்.

முத்துலிங்கமும், கண்ணதாசனும் ஒவ்வொரு பாடல் எழுத, இந்தப் பாடலை வாலி எழுதி இருக்கிறார். இந்தப் படம் அபார வெற்றி பெற்று ஹிந்தி, தெலுங்கு, கன்னட மொழிகளிலும் எடுக்கபப்ட்டது. 

முதலில் சந்தோஷப் பாடல்.  அது கே ஜெ யேசுதாஸ் ஜானகி அம்மா குரலில்.  இசை கங்கை அமரன்.

'உண்மை சுடும்' என்னும் ஜெயகாந்தன் கதையின் தாக்கத்தாலும் பாக்யராஜ் இந்தக் கதையை எழுதினர் என்கிறது விக்கி.  மேலும் அது அவரின் சொந்த அனுபவமும் கூட என்கிறார்.  முதல் மனைவி பயங்கர பொஸஸிவாம்.

இந்தப் பாடலின் ராகம் மாயாமாளவகௌளை என்கிறது விக்கி.

KJY : மூக்குத்தி பூ மேலே காத்து உக்காந்து பேசுதம்மா
S. JANAKI : ஹ்ஹீம்ம்ம்
KJY : அது உக்காந்து பேசையிலே தேனு உள்ளூர ஊறுதம்மா…
S. JANAKI : ஆஹா……ஹா…..

KJY : அது ஏந்தான் புரியலையே அதை நான்தான் அறியலையே
ஒரு மோகம் ஒரு தாகம் இங்கு உன்னாலே இந்நேரம் உண்டானது

S. JANAKI : மூக்குத்தி பூ மேலே காத்து உக்காந்து பேசுதய்யா
KJY : ஹா ஹான்
S. JANAKI : அது உக்காந்து பேசையிலே தேனு உள்ளூர ஊறுதய்யா
KJY : ஓ…..ஹோ….

S. JANAKI : அது ஏந்தான் புரியலையே அதை நான்தான் அறியலையே
ஒரு மோகம் ஒரு தாகம் இங்கு உன்னாலே இந்நேரம் உண்டானது

KJY : மூக்குத்தி பூ மேலே காத்து உக்காந்து பேசுதம்மா

S. JANAKI : {மேற்க்காலே போகின்ற மேகங்களே
மண்ணில் வாருங்களேன் மழை தாருங்களேன்
உடல் சூடாச்சி பாருங்களேன்} (2)

KJY : மழை மேகம் நானாகவா மலர் தேகம் நீராட்டவா
மடி ஏந்தி தாலாட்டவா
மனமாற சீராட்டவா வெறும் ஏக்கம் ஆகாதம்மா
விட்டு போகாதம்மா நான் கொஞ்சாம தீராதம்மா…..ஆமா….

S. JANAKI : மூக்குத்தி பூ மேலே காத்து உக்காந்து பேசுதய்யா
KJY : அது உக்காந்து பேசையிலே தேனு உள்ளூர ஊறுதம்மா…

KJY : {கல்யாணம் கச்சேரி ஊர்கோலமும் ஒரு பூமாலையும்
திரு பொன்னூஞ்சலும் அடி நான் காண நாளாகுமோ} (2)

S. JANAKI : திருநாளும் தானே வரும் உனைத்தேடி தேனே வரும்
வரும்போது வேலை வரும் அது வந்தா மாலை வரும்
அட நானும் உன் போலத்தான் அத கொண்டாடத்தான்
எதிர்பார்த்தேனே அந்நாளைதான்…..ஆமா

KJY : மூக்குத்தி பூ மேலே காத்து உக்காந்து பேசுதம்மா
S. JANAKI : அது உக்காந்து பேசையிலே தேனு உள்ளூர ஊறுதய்யா

KJY : அது ஏந்தான் புரியலையே
S. JANAKI : அதை நான்தான் அறியலையே
KJY : ஒரு மோகம்
S. JANAKI : ஒரு தாகம்
KJY : இங்கு உன்னாலே
இந்நேரம் உண்டானது

இருவர் : தான்னான தானன்னா தானா
தானனான நன்னா னா
தான்னான தானன்னா தானா
தானனான நன்னா னா 

=====================================================


கலகலப்புக்கு ஒரு கங்கை அமரன்.



ராஜபார்வை படத்துக்கு கவிஞர் பாட்டு சொல்லச் சொல்ல உதவியாளர் கண்ணப்பன் எழுதினர்.  அப்புறம் ஸ்க்ரிப்ட் தயாரானதும் கவிஞர் அதை வாங்கி படிப்பாராம்.  அதே போல இதையும் படித்திருக்கிறார்.  கமல் இதை எல்லாம் ஃபோட்டோ எடுத்துக் கொண்டிருந்தாராம்.  கவிஞர் பாடலைப் படித்துக் கொண்டிருக்கும்போது பின்னால் நைஸாக கங்கை அமரன் எட்டிப் பார்த்திருக்கிறார். 

கங்கை அமரன் படம் எடுத்துக் கொண்டிருந்த கமலிடம் , "கமல்..  எனக்கு இந்த போட்டோ காபி ஒன்று வேண்டும்" என்று கேட்டாராம்.

கமல் எதற்கு என்று கேட்டாராம். கங்கை அமரன் , "பாடல்கள் கவியரசர் கண்ணதாசன்.  மேற்பார்வை கங்கை அமரன் என்று போடுவதற்கு"

கண்ணதாசன் "ஆங்.." என்று நிமிர்ந்து பார்த்து விட்டு சிரித்தாராம்.

இதைச் சொல்லி விட்டு கங்கை அமரன் சிரிக்கிறார்.  "நடுநடுல இப்படி எல்லாம் காமெடி வேணும்.  ஒரேயடியா அண்ணனை மாதிரி சீரியஸா இருக்க முடியாது"

ஆனால் இதுவரையும் அந்த ஃபோட்டோவின் காபி வாங்கிக் கொள்ளவில்லையாம் அவர்.

அவர் முதலில் திரைக்கு எழுதிய பாடலாக "செந்தூரப்பூவே செந்தூரப்பூவே" பாடலைச் சொல்கிறார்.  பாடிய முதல் பாடல் என்றால் 'முதலில் அலைகள் ஓய்வதில்லை' படத்தில் வரும் 'வாடி என் கப்பக்கிழங்கே' பாடலில் கொடுத்தத்தைச் சொல்லி விட்டு அப்புறம் சொல்கிறார்.

இளையராஜா கங்கை அமரனை அவருடைய பாட்டு வாத்யார் TVG இடம் கூட்டிப்போய் இவனுக்கு குரல் நல்லா இருக்கு அதை சரிப்படுத்தி கொடுங்க என்று சொன்னாராம்.  அவர் கிட்ட சொல்றாரு....  என்கிட்டே சொல்லவிலை என்கிறார்  கங்கை அமரன்..  TVG இடம் போனதுமே கோழி கூவுது வாய்ப்பு வந்து விட்டது என்று சொல்லி விட்டு, முழுப்பாடலாக அவர் பாடியது 'நீ தொடும்போது' என்னும் படத்துக்காக "பண்பாடும் தாமரையே" என்னும் பாடலைச் சொல்கிறார்.  ஜானகி அம்மாவுடன் இணைந்து அந்தப் பாடலைப் பாடியதாகச் சொல்லும் அவர் சுசீலாம்மா, ஜானகியம்மா போன்றோருடன் பாடும் பாக்கியம் கிடைத்தது என்று சிலிர்க்கிறார்.


=============================================================================================

அடுத்து இதே பாடலின் சோகப்பாடல்.  அது SPB குரலில்.

இரண்டு பாடல்களில் எது பெஸ்ட் என்று உங்களுக்குத் தோன்றுகிறது?

"என்னுடைய இசை அமைப்பு என் நண்பன் பாலுவுக்கு ஒரு பாட்டு நான் கொடுக்கணும்.  என்ன பண்றதுன்னு பார்த்துட்டு மூக்குத்திப் பூ மேலே பாடலின் சோகப் பாடலை அவனுக்கு கொடுத்துட்டேன்" என்கிறார் கங்கை அமரன்.  நண்பர்களுக்குள் அபப்டி ஒரு அண்டர்ஸ்டேண்டிங்.

மூக்குத்தி பூ மேலே
காத்து உக்காந்து பேசுதம்மா
அது உக்காந்து பேசயிலே
தேனு உள்ளூர ஊறுதம்மா

அதை நான்தான் மறக்கலையே
அதை நீதான் நெனக்கலையே
அந்த காலம் அன்பு கோலம்
இன்னும் நெஞ்சோடு நீங்காமல்
நின்றாடுது

மூக்குத்தி பூ மேலே
காத்து உக்காந்து பேசுதம்மா

ஆனந்தம் நம் வாழ்வில்
தென்பட்டது
அதில் கண்பட்டது
மனம் புண் பட்டது
இந்த பேதங்கள் ஏற்பட்டது

ஆனந்தம் நம் வாழ்வில்
தென்பட்டது
அதில் கண்பட்டது
மனம் புண் பட்டது
இந்த பேதங்கள் ஏற்பட்டது

தரை மேலே ஓடும் நதி
கிளை பாயும் போகும் வழி
கடல்தானே சேரும் இடம்
அந்த நாளூம் நாளை வரும்
வரும் காலம் பொன்னாகட்டும்
சொந்தம் ஒண்ணாகட்டும்
அது கண்ணோடு கண்ணாகட்டும்
வாம்மா

மூக்குத்தி பூ மேலே காத்து
உக்காந்து பேசுதம்மா

கல்யாணம் நன் நாளில்
நான் கண்டது
ஓர் ஊர்கோலமா வெறும் நீர்கோலமா
அது பொய்யான வைபோகமா

கல்யாணம் நன் நாளில்
நான் கண்டது
ஓர் ஊர்கோலமா வெறும் நீர்கோலமா
அது பொய்யான வைபோகமா

பிடிவாதம் ஆகாதம்மா
பந்த பாசம் போகாதம்மா
வந்த கோபம் ஆறாததோ
எந்த நாளும் தீராததோ
சிறு ஊடல் உண்டாகலாம்
சொந்தம் ரெண்டாகலாம்
அது தன்னாலே ஒன்றாகலாம் வாம்மா

மூக்குத்தி பூ மேலே காத்து
உக்காந்து பேசுதம்மா………
அது உக்காந்து பேசயிலே
தேனு உள்ளூர ஊறுதம்மா

அதை நான்தான் மறக்கலையே
அதை நீதான் நெனக்கலையே
அந்த காலம் அன்பு கோலம்
இன்னும் நெஞ்சோடு நீங்காமல்
நின்றாடுது

மூக்குத்தி பூ மேலே காத்து
உக்காந்து பேசுதம்மா………
அது உக்காந்து பேசயிலே
தேனு உள்ளூர ஊறுதம்மா 

20 கருத்துகள்:

  1. இன்றைக்கு ஒரே பாடலின் இரு வடிவங்களைப் பகிர்ந்துள்ளீர்கள். நிறைய தடவை கேட்டு ரசித்த பாடல்கள்.

    பாக்கியராஜ் அவர் திறமையால்உயர்ந்த நிலைக்குப் போனாலும் கீழே வந்துதானே ஆகவேண்டும். அதன்படி அவர் திரைவாழ்வில் கடைசியில் தோல்வி எனச் சொல்லத்தக்க படங்களையும் கொடுத்தார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை..  ஒரே டியூனாக இருந்தாலும் SPB குரலில் பாடலில் என்ன சோகம் கேட்டீர்களா?  இப்போது கேட்க மாட்டேன், பிறகுதான் என்பீர்கள்!

      பாக்யராஜ் திரைக்கதை மன்னர் என்பதில் சந்தேகமில்லை.  ரசிகர்களுக்கு ரசிக்கத் தெரியவில்லை.  அவர்கள் ரசனை மாறி விட்டது.

      நீக்கு
  2. கங்கை அமரன் அவர் வீட்டில் விதிவிலக்கு. கலகல பேச்சுக்கு, சிறப்பாக நிகழ்ச்சி நடத்துவதற்குப் பெயர் போனவர் அவர். அவருடைய பேட்டிகள், பேச்சுகள் எல்லாமே ரசிக்கத்தக்கதாக இருக்கும்.

    அவர் எப்போதுமே சொல்வது, இளையராஜா தனக்கென ஒரு வட்டத்தைப் போட்டுக்கொண்டு கலகலப்பில்லாமல் வாழ்கிறார் அது தேவையற்றது என்பார். ஆனால் பிறரிடம் மரியாதை பெறவும், நான் தலைவன் என்ற மதிப்புப் பெறவும் அதற்கான முதல்படி பேச்சைக் குறைப்பது.

    கங்கை அமரன் பகிர்வு அருமை, ஏற்கனவே பலமுறை படித்ததாக இருந்தாலும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கங்கை அமரன் பாணி வேறு.  இளையராஜா பாணி வேறு.  இளையராஜா பக்குவப்பட்டவர்.  அவரைக் குறை சொல்ல முடியாது.

      இந்த பேட்டி -

      விஷயம்  அவர் ஏற்கனவே சொல்லி இருந்தாலும் பேட்டி இப்போது மூன்று வாரங்களுக்கு முன் தந்தது. 

      நீக்கு
    2. மேலும் இந்த விஷயத்தை அவர் ஏற்கனவே சொல்லி இருந்ததாக நினைவில்லை!

      நீக்கு
  3. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  4. இந்த "மூக்குத்தி பூ மேலே "பாடல் பழைய நினைவுகளை கொண்டு வந்தது. என் குழந்தைகள் இருவரும் இந்த பாடலையும், டாடி டாடி !ஓ மை டாடி ! பாடலையும் பாடுவார்கள் மழலை குரலில் அதை பதிவு செய்து வைத்து இருந்தோம்.

    மாயவரத்தில் கோமதி தியேட்டரில் பார்த்த படம்.
    மகன் இப்போது மாயவரம் போய் வந்த போது கோமதி தியேட்டர் புது வடிவம் பெற்று இருக்கிறது என்று சொன்னான்.

    அப்போது எல்லாம் நானும் நிறைய கண்ணாடி வளையலை புடவைக்கு பொருத்தமாக அணிந்து கொள்வேன், அதுதான் அப்போதைய நாகரீகம். என் கணவரும் பாக்கிய ராஜ் போல பெல்பாட்டம் பூப்போட்ட சட்டைகள், தலைமுடியை இப்படி வைத்து கொள்வது என்று இருப்பார்கள். கல்லூரியில் மாணவர்கள் சார் பாக்கியராஜ் போல இருக்கிறீர்கள் என்பார்கள். பிரின்ஸ்பால்
    AT நீங்கள் கல்லூரி மாணவர் போல இருக்கிறீர்கள் என்பார்.
    பிரின்ஸ்பால் என் கணவர் பி.ஏ படிக்கும் போது ஆசிரியராக இருந்தவர்.

    நிறைய நினைவுகளை தந்த பாடல்.

    இரண்டு பாடலையும் கேட்டேன். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பெயரிலேயே தியேட்டரா? 

      அட...   ஸார் அவ்வளவு மாடர்னாக இருந்தாரா...   

      நல்ல சில நினைவுகளைத் தூண்டி விட்டிருக்கிறது இந்தப் பாடல்கள் பதிவு.

      நீக்கு
  5. மெகா தொலைகாட்சியில் கங்கை அமரன் பாடல் நிகழ்ச்சிகளை பார்ப்பேன், நன்றாக பேசுவார். அவர் நேர்காணல் பகிர்வும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த நேர்காணல் நிகழ்ச்சியில் இதுதான் அவர் இதுவரை (அதிகம்) சொல்லாத நினைவு.  எனவே அதைப் பகிர்ந்தேன்.  பல்துறை வித்தகர்.

      நீக்கு
  6. பதில்கள்
    1. ஓம் முருகா...

      வாங்க செல்வாண்ணா..  வணக்கம்.

      நீக்கு
  7. சிறப்பான பதிவு..
    நலம் வாழ்க

    பதிலளிநீக்கு
  8. மூக்குத்தி ப் பூ மேலே....பாட்டு ரொம்ப ரசித்துக் கேட்ட பாடல். வழக்கமாகப் பாட்டு கேட்டுக் கொண்டே தட்டுவேன் இங்கு ஆனா இப்ப கேட்கலை ஸ்ரீராம்...வேலைப் பளு. திங்கள் முடியும் வரை.

    மாயாமாளவ கௌளை தான். அசாத்தியமாகப் போட்டிருக்கிறார் க.அ. அங்கிள்! பல்கலை வித்தகர்! நல்ல திறமைசாலி.

    கீதா

    பதிலளிநீக்கு
  9. க அமரன் சொல்லியிருக்கும் இந்த நிகழ்வு இப்பதான் வாசிக்கிறேன், ஸ்ரீராம். கேட்டதில்லை.

    இவர் ரொம்ப ஜோக்கடிப்பவர். கல கல மனிதர்.

    //"நடுநடுல இப்படி எல்லாம் காமெடி வேணும். ஒரேயடியா அண்ணனை மாதிரி சீரியஸா இருக்க முடியாது"//

    ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகத்தான் இருப்பாங்க. அண்ணன் தம்பியாகவே இருந்தாலும் கூட. ராஜா தான் செய்யும் வேலையில் மிகவும் முனைப்பாக இருப்பார். அவருக்கு அமைதி தேவைப்படலாம்.

    ஒரு சிலருக்கு எந்தச் சூழலிலும் வேலை செய்ய முடியும். இதில் கம்பேரிசன் வேண்டாம் என்று தோன்றும். ரொம்ப தங்கள் வேலைகளில் முனைப்புடன் இருக்கறவங்க அமைதியாக இருப்பாங்க டக்கென்று எல்லோருடனும் பழகவும் மாட்டாங்க. விதிவிலக்குகள் இருக்கலாம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  10. எஸ் பி பி சோகத்தைப் பிழிகிறார் பாடலில்! இதுவும் கேட்டிருக்கிறேன் ஸ்ரீராம். எஸ் பி பிக்கு இதெல்லாம் ஜூஜிபி இப்படி feelings கலப்பதும், flavour கொடுப்பதும்! அவரை மிஞ்ச இதுவரை யாரும் இல்லை. சின்னதுங்க எல்லாம் நல்லா பாடினாலும், இப்படி varieties, flavour, feel கொடுத்துப் பாடுவதில்லை. அவங்களுக்கு வரவும் இல்லை. அதே போல ஜானகி போல பாடுவதற்கும் யாரும் இல்லை. சின்னக் குழந்தையின் குரலில் கூடப் பாடுவார்.

    கீதா

    பதிலளிநீக்கு
  11. இன்றைய பாடல்கள் கேட்டு இருக்கிறேன்.

    எஸ் பி பி குரல் இப்பாடலில் மிகவும் சோகமாக இருக்கும்.

    பாக்கியராஜ் படங்கள் சில பார்த்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  12. குமுதத்தில் மௌனகீதங்கள் தொடராக வந்ததை வாசித்திருக்கிறேன்.

    இப்பாடல் மிகவும் அருமையான பாடல் கே ஜே ஜேசுதாஸும், எஸ் பி பியும் பாடியதை இப்போது மீண்டும் கேட்க முடிந்தது உங்கள் பகிர்வால்.

    கங்கை அமரனின் அனுபவங்கள் அதையும் மிகவும் ரசித்தேன்.

    வாடி என் கப்பைக் கிழங்கு பாடலை இவர்தான் பாடினார் இல்லையா? அதை மறந்தே போனேன். அவர் ஏராளமான பாடல்கள் பாடியிருக்கிறார். நல்ல தகவல்களுடன் பகிர்வுகள்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!