ஐயோ அப்புறம் என்ன ஆச்சு
JKC
ஓடையில் விழுந்து …
நான்
மட்டுமா, நான், என்னுடைய புது ஸ்கூட்டர். 4 வயதான இரண்டாவது மகன் எல்லோரும் தான்.
ஏன். எங்கு, எப்படி என்று கேட்கிறீர்களா?
கொஞ்சம் விவரமாக சொல்கிறேன். கதையில் அவசியம் அல்லாத விவரங்களும் உண்டு.
திருவனந்தபுரம்
சமவெளி இல்லாமல் சிறு சிறு குன்றுகளும் கடற்கரைப்பக்கம் கொஞ்சம் சமமாகவும்
இருக்கும் சிறு நகரம். மூன்று ஆறுகள்
(வாமனபுரம் ஆறு, கிள்ளி ஆறு, கரமனை ஆறு), அதில் கலக்கும் உப நதிகளான தோடுகள்
(வாய்க்கால்கள்), இத்தோடுகளில் சேரும் இயற்கை உருவாக்கிய ஓடைகள், இவ்வோடைகளின்
பக்கத்தில் சாலைகள் என்று
இருக்கும்/இருந்த அழகிய ஊர். தற்போது எப்படி என்று கேட்காதீர்கள்.
இந்த தோடுகளில் நகரத்தின் நடுவே செல்லும் ஆமையிழைஞ்சான் தோடு மிகவும் பிரசித்தம். (ஆமை நீந்தும் வாய்க்கால்). இந்த தோடில் சேரும் ஒரு ஓடை தான் சிறகுளம் ஓடை. ஒரு ஆர்டீசியன் கிணறில் இருந்து வெளியேறும் உபரி நீர் வழிந்தோடும் ஓடை.
இவ்வோடை
ரோடில் இருந்து சுமார் 6 அடி ஆழத்தில் 6 அடி அகலத்தில் இரண்டு பக்கமும் ரோடில்
இருந்து 3 அடி தடுப்பு சுவரும் உள்ள
ஒன்று. வஞ்சியூர் என்பது இடத்தின் பெயர்.
இந்த ஓடையின் கரையில் இருந்தது தான் 1988இல் நான் குடியிருந்த வீடு. 2
வருடத்திற்கு ஒரு முறை வீடு மாறி ஐந்தாவதாக குடி வந்த வீடு. கொசு தொந்திரவு, சாக்கடையான ஓடையின் நாற்றம்
என்ற சில மைனஸ் பாய்ண்டுகளுக்கு இடையில் 250 ரூ வாடகையில் 4 அறைகள், அடுக்களை
என்று இருந்த சிறு வீடு. தண்ணீர் பஞ்சம் இல்லை.
ஒரு படம் மாதிரிக்காக. தடுப்பு சுவர் கற்பனையில் வைத்துக்கொள்ளுங்கள்.
நான்காம் சம்பளக் கமிஷனும், ஜனவரி 1986 இல் கிடைத்த பதவி உயர்வும் சேர்ந்து மாத வருவாயில் ஒரு ஏற்றத்தை கொடுத்தது. ஆகவே ஆஃபிஸில் ஒரு டூ வீலர் லோனுக்கு விண்ணப்பித்தேன். அந்தக் காலத்தில் புதிய டூ வீலர் வேண்டுமானால் பதிவு செய்து காத்திருக்கவேண்டும். ஏற்கனவே வெஸ்பா XE புக் செய்தது கான்செல் ஆகிவிட்டது. அதற்குப் போட்டியாக என்ஃபீல்ட், சில்வெர்ப்ளஸ் என்ற மொபெடையும் பஜாஜ் cub என்ற 100 cc ஸ்கூட்டரையும் விற்பனைக்கு விடுத்தன. எல்லாவற்றிற்கும் புக்கிங் செய்து கான்செல் ஆகிவிட்டன.
அன்றைய காலகட்டத்தில் மத்யமருடைய ஸ்டேட்டஸ் கிரைண்டர், மிக்ஸி, பிரிட்ஜ், பைக்/ஸ்கூட்டர், கலர் டிவி, வாஷிங் மெஷின் போன்ற white goods வைத்திருக்கிறார்களா என்பதின் மூலம் அளவிடப்படும். லோன் வாங்கி ஸ்கூட்டர் வாங்குவது சாதாரணம்..
ஸ்கூட்டர் லோன் 10,000 Sanction ஆகியது. இனி ஸ்கூட்டரை கண்டுபிடிக்க வேண்டும். பலரும் திருச்சி நிஷா மோட்டார்ஸ் சென்று புது லேம்பெரட்டா வாங்கி கொண்டு வந்தார்கள். நாங்கள் பாப்பணம்கோடு தீதி பஜாஜ் சென்று விசாரித்தோம். ஒரு cub ஸ்கூட்டர் உடன் வேண்டும் என்று கேட்டோம். எங்களுடைய அதிர்ஷ்டம் அலாட்மென்ட் கிட்டிய ஒருவர் அதை கான்செல் செய்ய அங்கே அல்லோட்மென்ட் லெட்டரை கொடுத்திருந்தார். சாதாரணமாக அலாட்மென்ட் கான்செல் ஆனால் அவருடைய பேரில் வந்த ஸ்கூட்டர், வரிசையில் உள்ள அடுத்த ஆளுக்கு கொடுக்கப்படவேண்டும்.
இங்கே தான் ஒரு சின்ன அட்ஜஸ்ட்மென்ட் செய்யப்பட்டது. ஸ்கூட்டர் அல்லோட்மென்ட் ஆனவர் வாங்கியது போல் பில் இட்டு பின்னர் ரிஜிஸ்டர் செய்து, அந்த ஸ்கூட்டரை அவர் எங்களுக்கு விற்ற மாதிரி காண்பித்து ரிஜிஸ்திரேஷன் என்னுடைய பெயரில் மாற்றி ஹைபாதகேஷன் செய்து எல்லா வேலைகளையும் முடித்து ஸ்கூட்டர் RC டெலிவரி கொடுப்பதாக ஒரு அட்ஜஸ்ட்மென்ட். இதற்கு செலவு தொகையாக 500 ரூ பிரீமியம் கொடுக்க ஒப்புக்கொண்டேன். அப்படியாக வீட்டுக்கு பின் வீட்டில் இருக்கும் ஒரு மெக்கானிக் சென்று பச்சை கலர் பஜாஜ் cub ஸ்கூட்டரை கொண்டு வந்து வீட்டில் நிறுத்தினார்.
L லைசென்ஸ் எடுத்து ஸ்கூட்டர் ஓட்ட பழகிக்கொண்டேன். கொஞ்சம் தைரியம் கிடைத்து ஆபீஸ் வரை ஓரிரண்டு நாட்கள் சென்று வந்தேன்.
அன்று ஆபீசில் நண்பர் ஒருவர் அவருடைய மகளின் 5 வயது பிறந்த நாள் கொண்டாடுவதாகவும் அதற்காக ஒரு சின்ன பார்ட்டி வைப்பதாகவும், சாயந்திரம் குடும்ப சமேதம் வந்து பங்கெடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ஆபிசிலிருந்து வீட்டிற்கு வந்தபோது வீட்டில் முன்பே கூறியிருந்தபடி மனைவியும் மகனும் புறப்பட்டு தயாராக இருந்தனர்.
அவருடைய வீட்டிற்கு ஸ்கூட்டரில் செல்லலாம் என்று ஒரு தோணல், பந்தா. அதன்படி ஸ்கூட்டரை ரோடில் கொண்டு வந்து ஸ்டார்ட் செய்து முன்பக்கம் பையனை நிறுத்திவிட்டு பின் சீட்டில் மனைவியை இருக்கச் சொன்னேன். அவர் இதுவரை எந்த வாஹனத்திலும் பின் சீட்டில் இருந்து பயணம் செய்யாதவர். ஆகவே அவர் ஸ்கூட்டர் வேண்டாம் என்று மறுத்தார். நான் விடாப்பிடியாக 'ஏறு' என்று சொல்லிவிட்டு பிரேக்கில் இருந்து காலை எடுத்துவிட்டு, கிளட்ச் ரிலீஸ் செய்தது தான்.
அடுத்த வினாடி நான், ஸ்கூட்டர், பையன் எல்லாம் சாக்கடையில் கிடந்தோம்.
ஐயோ அப்புறம் என்ன ஆச்சு?
எதிர்த்த வீடு, பக்கத்து வீடு என்று நிறையப் பேர் சாக்கடையில் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களின் தயவால் மேலே ஏறி வீட்டிற்கு சென்று குளித்துவிட்டு பார்ட்டிக்குப் போவதை கேன்சல் செய்தேன். அடுத்த வீட்டுக்காரர் பரிசோதித்து விட்டு இருவருக்கும் வெளிக்காயம் எதுவும் இல்லை, எதற்கும் ஆஸ்பத்திரிக்கு சென்று வரலாம் என்று கூறி எங்களை ஜெனரல் ஆஸ்பத்திரி கேஷுவால்ட்டிக்கு கூட்டி சென்றார். உள்காயமும் இல்லை, வீட்டிற்குத் திரும்பினேன்.
அன்று முதல் இது வரையிலும் மனைவி ஸ்கூட்டரில் என் பின்னால் அமர்ந்து பயணம் செய்ததில்லை.
பின்னர்தான் பக்கத்துக்கு வீட்டுக்காரர்கள் எப்படி ஸ்கூட்டர் சாக்கடைக்குள் விழுந்தது என்பதை விளக்கினர். மனைவி ஸ்கூட்டரில் புட்ரெஸ்ட்டில் காலை எடுத்து வைக்கும்போது முன்சக்கரம் தூக்கி விட்டது அதோடு கிளட்ச் ரிலீஸ் செய்ய ஸ்கூட்டர் பறக்கும் குதிரை போல் பறந்து தடுப்பு சுவரையும் தாண்டி சாக்கடைக்குள் தொப்பென்று விழுந்தது. இதுவே நடந்தது.
இப்படியாக வீட்டிற்கு முன்புள்ள சாக்கடையில் ஒரு ஞானஸ்நானம் பெற்றேன். God blessed me.
=========================================================================================
தமிழ் படும் பாடு பற்றி நா பா...
குவாட்டர்லி லீவுக்கு பாம்பேயில் தில், ஆஷிக்கி, தில் ஹை கே மாந்த்தா நஹி இத்தியாதி பாடல்களுடன் அப்பாவுடன் வாசம்.
ஆஃபீஸ் குவாட்டர்ஸ் ரஹேஜா டவுன்ஷிப் மலாட் ஈஸ்டில் கொடுத்திருந்தார்கள்.
தி நைனா கார்த்தால ஐஞ்சரைக்கே சாணித்தண்ணியை எடுத்துண்டு வாசல் தெளிச்சு கோலம் போட ஆஃபீஸ் போய்டுவார். அவருக்கு பெட்டர் ரோட்டில் வேலை.
அம்மாவுக்கு சதா ஃப்ளாட் மக்களுடன் எதாவதொரு அஜெண்டா இருக்கும். வாக்கிங் போவார், ஜாலியாக இருப்பார். வீட்டில் நானும் தங்கைமணியும்.
டூ இன் ஒன்(அதை அப்படித்தான் சொல்லோணும், அதர்வைஸ் சாமிக்குத்தம் ஆய்டும்) இருந்ததால் சதா இளையாராஜா SPB ஸ்மரணையில் சஞ்சரிப்போம்.
தனியாக 1500 சதுரடி வீட்டில் நானும் இவளும் மட்டும் தனித்திருந்த ஒரு காலையில் வாசலில் பெல். விஸிட்டர்ஸ் என்று பார்த்தால், பால், பேப்பர், கரி பிஸ்கட் விற்பனையாள் - இந்த மூவரைத் தவிற வேறு யாரும் வரமாட்டார்கள்!
இப்போது கையில் பச்சைக்குத்திய சற்றே இளமையான பெண்.
கையில் குழந்தை, 8-10 ஒட்டடைக்குச்சி.
குழப்பத்துடன் பார்த்தேன். கதவைப் பார்த்துக்கொண்டே, 603 ஹைன்னா? என்றாள். நானும் கதவைப் பார்த்துக்கொண்டே, அவ நம்பிக்கையுடன் மண்டையாட்டினேன். "நீச்சே ஆப்கே மம்மீ நே யே தேனேகோ கஹா" என்றபடியே ஒன்றை நீட்டினாள்.அபார்ட்மெண்ட் கட்டியே மூன்று மாதங்கள் தான் ஆகிறது, அதற்குள் எதற்கு ஒட்டடைக்குச்சி என்றெல்லாம் அனலிட்டிக்கலாக யோசிக்கத்தெரியாத அசட்டு பருவம். (இப்போவும் அப்படியே, ஹிஹி)
பொறுப்புடன் ஒட்டடைக்குச்சியை வாங்கி வைத்குக்கொண்டேன். அவள் கொடுத்துவிட்டு நிற்கவே, ஓ பணமும் கொடுக்க வேண்டுமே! என்று நினைவு வந்தவளாய், கித்னா என்றேன். பச்ப்பன்் ருப்யே என்றாள். அம்மா வீட்டுச்செலவு பணம் வைத்திருக்கும் டப்பாவை எடுத்து, ஐந்து பத்து ரூபாய்கள் ஒரு ஐந்து ரூபாய் நோட்டு எல்லாம் எடுத்து, ஒழுங்காக எண்ணி சரிபார்த்து எடுத்துக் கொடுத்தேன்.
வாங்கிக்கொண்டு போனாள்.
நவீன திஉவிளையாடல் ரங்கனாதன் கணேஷண்ணா மாதிரி எங்கே போனாளோ தெரியாது. காக்கா ஓஷாகிவிட்டாள் அந்த கிராதகி.
அம்மா வாக்கிங் போய்விட்டு வந்தார், நானும் ஒரு உத்தமபுத்திரி போல், அம்மா ஒட்டடைக்குச்சி வாங்க சொன்னீங்களே, வாங்கிப்டேன் என்று பலத்த பெருமையுடன், ஒரு சென்ஸாஃப் அக்காம்ப்ளிஷ்மெண்டுடன் சொன்னேனா? அம்மா எவ்ளோடீ என்றார். ஐம்பத்தி அஞ்சு ரூபாயாம்மா! என்று நான் சொன்னதும், அவர் மயக்கம் போட்டு விழுந்தார்.
இல்லியாம். தட் கிராதகி ஏமாத்திஃபைட் மீ. ஐ, ஒன் இன்னொஜெண்ட் கேள். அடுத்த ஒரு வாரம காலனி பூரா நான் காலணியானேன் எல்லோர் உதட்டிலும் என் பேர் தான். லாஃபிங் ஸ்டாக். மஜூம்தாரின் மனைவி தான் ஓவராக காண்டேத்தினார். அய்யோ, நான் ஒரு புடவை வாங்கியிருப்பேனே என்று அங்கலாய்த்தார். எது? அம்பத்தைஞ்சு ரூபாய்க்கு புடவையா? உம்மூஞ்சி மாதிரின்னா இருக்கும் அது என்று மிகச்சத்தமாய் மநசுக்குள்ளேயே சொல்லிக்கொண்டேன்!
இப்பிடி ஏமாந்துட்டாளே என்று கை கொட்டி ஷிரித்தார்ஹள்ள்!

"ஆமாம்... 'கப்பலோட்டிய தமிழன்' படத்துல சோல்ஜரா வருவார். 'இருவர் உள்ளம்' படத்துல வக்கீல் கேரக்டர். 'ஆடிப்பெருக்கு' படத்துல டி.டி.ஆர் வேடத்துல நடிச்சிருப்பார். அவர் பண்ணினதுலேயே பெரிய கேரக்டர்னா ருத்ரய்யாவோட ரெண்டாவது படம் 'கிராமத்து அத்தியாயம்'ல கதாநாயகனுக்கு அப்பா கேரக்டர்!"
"சினிமால நீங்க யார் ரசிகர்?"
"சிவாஜி கணேசன். 'தங்கப் பதுமை', 'நானே ராஜா', 'பராசக்தி' 'துளி விஷம், இல்லற ஜோதி, தெய்வப்பிறவி படங்கள்ல நடிச்ச ஆரம்ப கால சிவாஜி ரசிகன்
"வறுமையும் வேதனையும் பசியும் நிறைஞ்சது என் பால்யம். அஞ்சாவது பாஸ் பண்ணின பிறகு, 1958-ம் ஆண்டு தொடங்கி ஏழு வருஷம் குழந்தைத் தொழிலாளியா, நான் பார்க்காத வேலைகளே மளிகைக் கிடையாது. கடைப் பையன், சித்தாள் வேலை, இட்லி விக்கிறவன், காயலாங்கடை உதவியாளர், ஹோட்டல் கிளீனர், கட்பீஸ் ஸ்டோர் உதவியாளர்னு ஏகப்பட்ட வேலைகள். அதுக்குப் பிறகு அஞ்சு வருஷம் கழிச்சி சென்னை மேற்கு மாம்பலம் கார்ப்பரேஷன் ஸ்கூல்ல, ஆறாம் வகுப்பு சேரப் போனபோது டெஸ்ட் வெச்சாங்க. அதுல 'பொன்'கிற வார்த்தைக்கு 'பொண்'னு எழுதினேன். அதனால மறுபடியும் அஞ்சாங் கிளாஸ்லயே போட்டுட்டாங்க. அப்படிப்
"நான் கவிதை எழுதுறதுக்குக் காரணம் சென்னையும் கண்ணதாசனும்தான். அப்போ, புரட்சி நடிகர் மன்றம், எஸ்.எஸ்.ஆர் மன்றம், அண்ணா மன்றம், நாவலர் மன்றம்னு தெருவுக்குத் தெரு தி.மு.க மன்றங்கள் இருக்கும். அங்கே கிடைக்கிற பத்திரிகைகளை வாசிப்பேன். அப்படி வாசிச்ச புத்தகங்கள்ல ஒண்ணுதான், 'கண்ணதாசன் கவிதைகள்'. கவிதைகளோட சொல்லாட்சி எனக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு. கவிதை எழுதனும்னு எனக்கு உந்துதல் வந்தது அப்போதான். தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் கண்ணதாசன் பிறந்த நாள் விழாவில் கவியரங்கம் நடக்கும்; தவறவே விடமாட்டேன். என் மனசு முழுக்க கண்ணதாசன் இருந்த காலகட்டம் அது."
"உங்க கவிதைகளை கண்ணதாசன்கிட்ட காண்பிச்சிருக்கீங்களா... அவர் என்ன சொன்னார்?'
"என் ஒரு கவிதையைக்கூட காண்பிச்சது இல்லை. ஆனா, ரெண்டு முறை அவரை பேட்டி எடுத்திருக்கேன். எம்.எஸ்.உதயமூர்த்தி ஆரம்பிச்சு மணியன் பொறுப்பில் வெளிவந்த 'மயன்' பத்திரிகையில நான் புரூஃப் ரீடர். அப்போ கண்ணதாசனோட 'சேரமான் காதலி' நாவல் சாகித்ய அகாடமி விருது வாங்கியது. அப்பவும், 'துக்ளக்' பத்திரிகையிலேர்ந்து அனந்து வெளியே வந்து ஆரம்பிச்ச 'விசிட்டர்' பத்திரிகையின் மதுவிலக்கு கவர்ஸ்டோரி சம்பந்தமாகவும் அவரைப் பேட்டி எடுத்திருக்கேன்!"
சுகுமாரன், "பெரும்பாலான நவீன இலக்கியவாதிகள் புத்தகத்துக்கு புரூஃப் பார்த்திருக்கேன். பிரமிள், தேவதேவன், வண்ணதாசன், கலாப்ரியா... இவங்களோட புத்தகங்களில் பெரும்பாலானவை என்னால் புரூஃப் பார்க்கப்பட்டவை. அவர்கள் அதற்காக எனக்கு சன்மானம் தருவார்கள். பிரமிள் தந்தது கிடையாது. ஆனால், அதை வேறு வழியில் வாங்கிவிடுவேன். அப்புறம் குன்றக்குடி அடிகளார் ஆதீனத்தில் அட்டெண்டர் வேலை... அவருக்கு வருகிற திருமணப் பத்திரிகைகளுக்கு வாழ்த்து எழுதித் தருவது. அதில் நான் தொடர்ந்து இருந்திருந்தால், வாழ்க்கையில் செட்டில் ஆகியிருப்பேன். ஆனால், 'இது என் வேலை அல்ல' என மூணாவது நாளே தூக்கிப் போட்டுட்டு வந்துட்டேன்."
"அப்படின்னா உங்க வேலைதான் என்ன?"
"நான் ஆரம்பத்துல சொன்னதுபோல, நான் கவிஞனா இருப்பது என் கர்மவினை. கவிதை எழுதுறதும் கவிதை பற்றி எழுதுறதும்தான் என் வேலை. ஒரு கவிஞன் மிஞ்சி மிஞ்சிப் போனால், ஒரு பத்தாண்டு காலம் கவிதை எழுதலாம். அதன் பிறகு கவிதை எழுத காலமும் மொழியும் அவனை அனுமதிக்காது. பாண்டித்தியமும் இருந்தால், இன்னும் மொழியில் சகல ஒரு பத்தாண்டுகள் அனுமதிக்கும். அந்தக் காலத்துக்குள் அவன் எழுதிய நல்ல கவிதைகள் பத்தா இருவதா, முப்பதா, நாற்பதாங்கிறது அவனவன் கொடுப்பினை. அதுக்கு மேல ஒரு கவிஞனால் ஒன்றும் செய்துவிட முடியாது. நாமளாவே நம்மை ஏறக்கட்டிக்கிறது நல்லது. அல்லது வேற வேலை பார்க்கப் போயிடணும்."
"கடைசிக்காலம் இல்லை... கவிதையில் என் முடிஞ்சிருச்சுங்கிறதுதான் யதார்த்தம். மனசு அதை காலம் ஒப்புக்க மாட்டேங்குது. இதைச் சொல்றதால எனக்கு எந்தச் சங்கடமும் இல்லை."
"நீங்க காதலிச்சிருக்கீங்களா?"
"அடேயப்பா... எத்தனை காதல்கள் (பெருங்குரலெடுத்துச் சிரிக்கிறார்) எதைச் சொல்ல, எதை விட? ஆனா, ஒரு நல்ல காதலனால் மட்டும்தான் நல்ல கவிஞனாக இருக்க முடியும். பெண்மையைக் கொண்டாடத் தெரியாதவனால் ஒரு கவிதைகூட எழுதிவிட முடியாது."
"நீங்க எவ்ளோ போதையில இருந்தாலும் சைவம்தான் சாப்பிடுவீங்களாமே?"
"நீங்க சொல்றதுபடி பார்த்தா அசைவ உணவு சாப்பிடறது கெட்ட பழக்கம்னு ஆகுதே?"
"என் நாற்பது வயசுல இந்தக் கேள்வியைக் கேட்டிருந்தா... 'ஆமாங்க அசைவ உணவு ஏற்புடையது அல்ல'னு ஏதாவது சொல்லியிருப்பேன். இப்போ இந்தக் கேள்விக்கு என்கிட்ட பதில் இல்லைனுதான் சொல்லணும். அப்புறம் நாம எல்லாருமே புலால் உணவு சாப்பிட்டு அதுலேர்ந்து மாறி வந்தவங்கதானே? எனக்கு இருப்பது சாதி சார்ந்த சைவப் பற்று அல்ல. தமிழ்ப் பற்று, கவிதைப் பற்று மாதிரி இருக்கிற சைவப் பற்று. மற்றவர்களின் உணவுப் பழக்கத்தை நல்லது கெட்டதுன்னு சொல்ல நாம் யார்?"
"என் உலகம் ரொம்பச் சுருங்கிருச்சு. 'அண்ணாச்சி வர வர முதுமக்கள் தாழி ஆகிட்டார்'னு விளையாட்டா சொல்வார் கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணன். இந்த வாழ்வே ஒரு கர்மவினைதான். கர்மவினைனு சொன்னதும் இந்து மதம் சொல்ற கர்மவினைனு நினைச்சுக்காதீங்க. விக்ரமாதித்தன் இந்துத்துவம் பேசுறான்னும் நினைச்சிராதீங்க. நான் சொல்ற கர்மவினை... 'தீதும் நன்றும் பிறர்தர வாரா'னு கணியன் பூங்குன்றனார் சொன்ன, 'நீர் வழிப் படூஉம் புணைபோல... ஆரூயிர் முறைவழிப் படும்' கர்மவினை. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'னு வாழ்வைக் கொண்டாடச் சொல்லும் கர்மவினை!"






அடுத்து கோல்கொண்டா பற்றி எழுதணும்னு ஆரம்பிச்சேன். இப்போ பாத்து காணொளி போட்டுட்டீங்களா?
பதிலளிநீக்குஹா. ஹா.. ஹா... வாங்க நெல்லை.. எனக்கென்ன தெரியும்? இது சில வாரங்களாகவே டியூ!
நீக்குஇன்றைக்ம் பல்சுவையாக பதிவு இருக்கு. மாற்றணும் என்பதற்காக, பாடலைப் பெஇரலை போலிருக்கு.
பதிலளிநீக்குபாடல்கள்தான் நேற்றே போட்டாச்சே நெல்லை.. பார்க்கவில்லையா? கேட்கவில்லையா?
நீக்குஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஏமாறுவதற்குச் சொல்லியா தரணும்? இயல்பா நடப்பது தானே.
பதிலளிநீக்குஅப்போ அதையும் 'ஹையோ.. அப்புறம் என்னாச்சு' வில் எழுதலாமே... யாருமே அனுப்பலை!
நீக்குசில்வர்ப்ளஸ்... 90ல் நான் வாங்க நினைத்த வண்டி. அப்கோவே, அதாவது இளமையிலேயே பழகி இருந்தால் தைரியம் இருந்திருக்கும். எனக்கு டூ வீலர் ஓட்டத் தெரியாது. எக்காரணம் கொண்டும் பின்னால் உட்கார்ந்து பயணிப்பதில்லை.
பதிலளிநீக்குதமிழ் பற்றி நாபா எழுத்து சூப்பர். நிறைய தவறுகளைச் சுட்டிக் காட்டுது. நல்ல பெஇர்வு.
பதிலளிநீக்குபெயர்ப்பு என்றால் என்ன?
பதிலளிநீக்குஒரு உதாரணம் : அந்த இடத்தில் இருந்த கற்பாறையைப் பெயர்த்து இந்த இடத்தில் வைத்ததும் அழகாக இருக்கிறது.
ஒன்றை அப்படியே அந்த இடத்திலிருந்து எடுப்பது தான் பெயர்ப்பு.
அந்தக் காலத்தில் மொழிபெயர்ப்பு என்ற வார்த்தையை இந்த அர்த்தத்தில் தான் சர்வ சாதாரணமாக உபயோகித்து வந்தோம்.
அதனால் நா.பா.வின் மீது தப்பில்லை.
ஆனால் காலத்தின் செழுமையில் மொழிபெயர்ப்பு என்ற வார்த்தைதை இப்பொழுதெல்லாம் உபயோகிப்பதில்லை.
அதற்கு வேற்றுச்சொல் வந்த பிறகு தான் அந்த 'பெயர்ப்பு' வார்த்தை அவ்வளவு சரியில்லை என்று இப்பொழுது தெரிகிறது.
அட! அது என்ன அந்த வேற்றுச்சொல்?..
மொழி மாற்றம்னு சொல்றீங்களா ஜீவி சார்? ஒரு மொழியில் உபயோகிப்பதை, இன்னொரு மொழியில் அதே சந்தர்ப்பத்தில் எப்படி உபயோகிப்பாங்க அதே தட்டில் இருக்கும் மக்கள்னு தெரிந்து மொழிபெயர்த்தால் படிக்க நல்லா இருக்கும். பல மொழிபெயர்ப்புகள் படிக்க சகிக்காது. அதிலும் கூகுள் மொழிபெயர்ப்பை ஆதாரமா வச்சிக்கிட்டு முழிபெயர்க்கறாங்க.
நீக்குதிரைப்படத்தின் தாக்கம் நம்மிடம் அதிகம். சலங்கை ஒலி படம் பார்த்தப்பறம் இன்னமும் என் மனதில் ஷைலஜா ராங்கிக்காரி என்ற பிம்பம்தான். விக்ரமாதித்யறை ஒரு கவிஞர் என மனம் ஏற்றுக்கலை, அவரது திரைப் பங்களிப்பால்.வில்லன்கள் படத்தைப் பார்த்தாலே, அவங்க மனைவியை எவ்வளவு கொடுமைப்படுத்தறானோ எனத் தோன்றும்.
பதிலளிநீக்கு