நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
10.4.26
மயில்சாமி என்கிற மாமனிதன்
வீட்டில் அவ்வப்போது நடக்கும் கலாட்டாக்களில் ஒன்று...
லேடிஸ் டெய்லரிடம் பாஸ் பேசிக்கொண்டிருந்தார்.
"ரேகா.. (பெயர் மாற்றப்ப்படவில்லை) வரவர சட்டையெல்லாம் சரியாவே தைக்க மாட்டேன்றீங்க... கிழவி சட்டை மாதிரி இருக்கு.. கடைசி ரெண்டு தடவையும் அப்படிதான் இருக்கு. நான் சொல்லலை... கொஞ்சம் பார்த்து தைங்க ரேகா.."
ரேகா என்ன சொன்னாரோ சிரித்துக் கொண்டே போனை வைத்து விட்டார் பாஸ். மகன் சொன்னான்.
"அம்மா ஏன் சிரிக்கறா தெரியுமா?"
"தெரியலையே.."
"போனை வைச்சுட்டு ரேகா அவங்க வீட்டுல சொல்லி இருப்பாங்க.. "பாரேன்.. கிழவி சட்டை மாதிரி இருக்காம்... கிழவிக்கு கிழவி சட்டை மாதிரி தைக்காம குமரி சட்டை மாதிரியா தைப்பாங்க?"
"அப்படிச் சொன்னா அம்மா எப்படி சிரிச்சுகிட்டே ஃபோனை வைப்பாங்க?" பெரியவன் இடைபுகுந்தான்.
பாஸுக்கு கோபம் வந்தது.. "ஏண்டா? எனக்கென்ன வயசாச்சு? இந்த நவம்பருக்கு எனக்கு -- தானேடா (வயசு மறைக்கப்பட்டுள்ளது) ஆச்சு?"
"சரிம்மா.. இருக்கட்டும்... அவங்க கிட்ட நீ சொன்ன மாதிரி சொல்லாம இப்படி சொல்லலாம் " ' கிராமத்துல இருப்பாங்களே காதுல பாம்படம்லாம் போட்டுக்கிட்டு ரொம்ப வயசானவங்க.. அவங்க போடற சட்டை மாதிரி இருக்கு' ன்னு சொல்லலாம்"
"அவங்க சட்டையே போடமாட்டாங்கடா.."
"போங்கடா... ஃபோன்ல பேசறதை எல்லாம் கவனிச்சுக்கிட்டு வார்த்தைக்கு வார்த்தை குற்றம் கண்டுபிடிக்காதே.."
தெலுங்கு ஒரிஜினல் படம். தமிழ் வசனங்களில் பார்த்தேன். குண்டு கொழுகொழு ஹீரோ ஸ்ரீ விஷ்ணு செய்தித்தாளில் ஆபிச்சுவரி செய்தி சேகரிப்பவன். வெற்றிகரமாகச் செய்கிறான். எங்கெங்கு சாவு நடக்கிறதோ அங்கங்கு ஆஜராகி அந்தந்த நபர்களின் மதம், ஜாதி சார்ந்தவனாக வேஷமிட்டு, அங்கு நடக்கும் பேச்சுகளை கவனித்து, அதை வைத்து பேசி விளம்பரம் பெற்று விடுகிறான். அவனுக்கு க்ரைம் நியூஸ் நிருபராக ஆசை! அளவான ஆசை! அவனால் முடியாது என்கிறார்கள் அவனுடைய பாஸ், , மற்றும் நண்பர்கள்.
அவன் கடைசியில் பார்த்த இரு மரணங்களில் ஒரு ஒற்றுமையை கவனிக்கிறான். அதை அவன் இதை விசாரிக்கும் பெண் அதிகாரி ரெபா மொனிக்காவிடம் சொல்கிறான். அவள் இவனை மதிக்கவே இல்லை. அவள் இதை இயற்கை மரணம் இல்லை என்று சொன்னதை அவள் மேலதிகாரிகள் ரசிக்கவில்லை. முன்னதாக இறந்தவர்களில் ஒருவன் யாரோ தன்னைப் பின் தொடர்ந்ததாக உணர்கிறான். அதை ஹீரோ இறந்தவன் உறவு, நட்புகளிடம் விசாரித்து தெரிந்து கொள்கிறான். மனைவியை இழந்த அவனுக்கு ஒரே மகள். தன் தந்தையின் மரணத்துக்கு காரணம் தேடுகிறாள். அதற்கு விடை கண்டு பிடிப்பதாய்ச் சொல்கிறான். வில்லன் ரொம்ப புத்திசாலி. தடயங்ககளை விடாதவன். முகம் காட்டாத வாடகைக் கொலைகாரன்.. வில்லனுக்கும் ஹீரோவுக்கும் ஒரு ஒற்றுமை. இருவரும் மகா புத்திசாலிகள் (அப்படிதான் படத்தில் சொல்கிறார்கள்) இருவருமே மரணத்தோடு சம்பந்தப் பட்டவர்கள். ஹீரோ மரணத்துக்கு பின். வில்லன் மரணத்துக்கு முன். யார் யாரை முதலில் கண்டு பிடிக்கிறார்கள் என்ன ஆகிறது என்பது கதை. NetFlix ல் பார்த்துத் தொலைத்தேன்! சிம்பிளான துப்பறியும் கதை.
பாரதியார் பாடல் என்றாலே கண்ணம்மா பாடல்களும் வேறு புகழ்பெற்ற பாடல்களும் எடுத்தாளும் இடத்தில் இந்தப் பாடலை எத்தனைபேர் அறிவார்கள் என்பதே கேள்விக்குறி. நான் முன்பு அறியாதவன்!
தோள்கண்டேன் தோளே கண்டேன், உன்னை நான் பார்க்கும்போது மண்ணை நீ பார்க்கின்றாயே, சின்னஞ்சிறு கிளியே போன்ற கம்பராமாயணம், திருக்குறள், பாரதியார் பாடல்களின் தாக்கத்தில் கண்ணதாசன் எழுதியது பார்த்திருக்கிறோம். இங்கே மதன் கார்க்கி எழுதி இருப்பது.
குன்றினின்றும் வருகுவதோ எனப் பாரதி கேட்பதை, மாமலையின் மீதிருந்தோ? என மதன் கார்க்கி கேட்கிறார். காற்றைக் கொண்டு தருகுவதோ எனப் பாரதி கேட்பதை, காற்றிலேறி வருகுவதோ? என மதன் கார்க்கி கேட்கிறார். யமுனை அலை பற்றிப் பாரதி கேட்க, கடல் அலை பற்றி மதன் கார்க்கி கேட்கிறார்.
ஆயினும், நாணறுந்த இன்பமெலாம் நானருந்த வருகுவதோ? என்ற மதன் கார்க்கியின் வரியை நான் மிகவும் ரசித்தேன். இந்த இடத்தில் பின்னணி இசையில் ஏதேனும் மாயம் செய்திருக்கலாம். நாணறுந்து இன்பமெல்லாம் வருவதை இசையிலும் நாம் உணர வேண்டும்.
இதன் பல்லவியில் ஒலி எங்கிருந்து வருகிறது என்று கேட்ட பிறகு, மாமலையின் மீதிருந்தோ? - வெள்ளி மாகமதன் மீதிருந்தோ? எனக் கேட்கிறார். வெள்ளி மாகம் என்பது எதைக் குறிக்கிறது? மாகம் என்பதற்கு மேலிடம், ஆகாயம், சுவர்க்கம், திக்கு, மேகம் எனச் சில பொருள்கள் அகராதியில் உள்ளன. மேகம் எனக் குறிப்பிட விரும்பினால் நேரடியாக வெள்ளி மேகமதன் மீதிருந்தா என்றே கேட்டிருக்கலாம். மாகம் என முற்றிலும் புதிய சொல் தேவையில்லை. வெள்ளி என்பதுடன் இணைத்துப் பார்த்தால், வெள்ளி ஆகாயம் என்பதே பொருளமைதியுடன் உள்ளது. இதைத்தான் மதன் கார்க்கி சொல்ல விரும்புகிறாரா? என்று கேட்கிறார் அண்ணா கண்ணன்.
மயில்சாமியின் நெருங்கிய நண்பர் லட்சுமணன் ஒரு பேட்டியில் மறைந்த அவரை பற்றிய சுவாரசிய தகவல்களை கூறியிருந்தார். பேட்டியில் பழைய நிகழ்வு ஒன்றை நினைவு கூர்ந்த அவர் கூறியதாவது “நாங்கள் ஒருமுறை ஹோட்டலுக்கு சாப்பிட சென்றிருந்தோம், பொதுவாக 80ஸ் காலங்களில் சர்வருக்கு டிப்ஸ் ஓன்று அல்லது இரண்டு ரூபாய் தான் வைப்பார்கள். ஒரு ரூபாய் வைத்தாலே அது பெரியது. அப்படிப்பட்ட நிலையில் அவர் மட்டும் 10 ரூபாய் வைப்பார். இதனால் சுற்றியிருக்கும் நபர்கள் இவரை என்ன சர்வருக்கு 10ரூபாய் வைக்கிறார் என்று குறுகுறுவென்று பார்ப்பார்கள்.
சர்வர் டிப்ஸ் எடுத்துவிட்டு சென்ற பிறகு அதற்கு மயில்சாமி காரணமும் ஒருமுறை கூறியிருக்கிறார் “அதவாது நானும் ஒரு சர்வராக இருந்தது தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன் எனவே எனக்கு சர்வரின் வேலை பற்றிய கஷ்டம் தெரியும். நாம் எவ்வளவு சம்பாரித்தாலும் அதனை அப்படியே வைத்துக்கொள்ளாமல் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். அதனை கொடுக்கும் போது மனதிற்கு மகிழ்ச்சி. அதோடு இதனை யாருக்கு வழங்குகிறோம், அவருக்கு உதவியாக இருந்ததா? என்று சொல்ல முடியாது ஆனால் அந்த நாள் அவர்கள் மிகவும் மகிச்சியாக இருப்பார்கள்.
அந்த மகிழ்ச்சி போதும், அதோடு நான் எம்ஜிஆரின் தீவிர ரசிகர் அவரை பார்த்துதான் நான் அனைவருக்கும் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதை கற்றுக் கொண்டேன் என எப்போதுமே கூறுவார். இதே போல ஒருமுறை மயில்சாமி எங்களுடைய இசை ட்ரூபில் பணியாற்றி வரும் போது அவருக்கு 250 ரூபாய் தான் சம்பளம், ஆனால் ஆட்டோக்கு 300 ருபாய் கொடுப்பார். ஆட்டோவிற்கு 100 முதல் 150 ரூபாய் வரையில் தான் ஆகியிருக்கும் ஆனால் 300 ரூபாய் கொடுப்பர். அவர் எதற்கு கொடுக்கிறார் ஏற்று நான் இதுவரையில் கேட்டதில்லை.
ஆனால் ஒருமுறை என்னிடம் என்னடா மச்சா பாக்குற? என்று கேட்டுவிட்டார். அதற்கு பிறகு தான் ஏன் கொடுக்கிறேன் என்று விளக்கமும் கூறுவார். அந்த குணம் யாருக்குமே வராது. சில நேரங்களில் அவரிடம் பணம் இல்லையென்றால் கூட பக்கத்து வீட்டிலோ அல்லது தன்னுடைய நண்பர்களிடமோ கேட்டு உதவி செய்வார். அவருக்கு பணம் தேவைப்பட்டால் என்னிடம் கேட்பார். மயில்சாமி பொதுவாக பணம் கேட்க மாட்டார், அவர் அப்படி கேட்டால் முக்கியமான விஷயம் என்பதை அறிந்து கொண்டு எதுவும் கேட்காமல் கொடுத்து விடுவேன்.
ஆனால் என்னையும் அவருடன் அழைத்து சென்று யாருக்கு உதவி தேவை படுகிறதோ அவருக்கு தேவயானவற்றை வாங்கி என் முன்னர் தான் கொடுப்பார். அவர் அப்படி கொடுக்கம் போது நான் யோசிப்பேன். இவரிடமே பணம் இல்லை என்று கூறுகிறார். இவர் நம்மிடம் வாங்கி மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற அவசியம் அவருக்கு கிடையாது. இல்லை என்று சொல்லலாம் அல்லது பிறகு உதவி செய்கிறேன் என்று கூறலாம். ஆனால் உடனடியாக உதவி செய்யும் அந்த மனப்பான்மை அவரிடம் எப்படி வந்தது என ஆச்சரியமாக இருக்கும்.
நன்றி: Behind Talkies - நன்றி R. கந்தசாமி ஸார் பேஸ்புக்.
தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதி. வாங்கும் விலையில் தேங்காய் இல்லையென்றால் தேங்காய் வியாபாரத்தையே முடக்கி விடுவோம் என்கிறார் கவுண்ட்டர்!
"5 வலமிருந்து இடம்" என்ற க்ளூவில் சொதப்பி விட்டேன். "6 வலமிருந்து இடம்" என்று இருந்திருக்க வேண்டும்.
நீங்கள் எல்லா வார்த்தைகளையும் கரெக்டாகவே கண்டுபிடித்துள்ளீர்கள்.
நீங்கள் கூறியது போல் யுத்தத்தை போர் என்று சொன்னால் பழுத்த பழத்துக்கு வார்த்தை சரியாய் வராது...."செரு" என்பதே சரி. (பைங்கனி தீங்கனி செங்கனி என்று இது கொஞ்சம் நேரத்தை சாப்பிட்டது! - ஸ்ரீராம்)
ஹிந்திப் பாடலின் முதல் இரண்டு எழுத்துகள் "தம்" . (நான் பாபி, யாதோங்கிபாராத் ஆராதனாவில் தடுக்கி நின்று விட்டேன்! இதை யோசிக்கவில்லை! - ஸ்ரீராம்)
8 வலமிருந்து இடம்...."குலம்" ( இது நான் சொல்லி இருந்தேன், கண்டுபிடித்திருந்தேன் - ஸ்ரீராம்)
தலமுகம்talamukam , n. (Nāṭya.) A hand pose; நிருத்தக்கைவகை. (சிலப். 3, பக். 81, கீழ்க்குறிப்பு.) இது கொஞ்சம் கடினமான குறிப்புதான். ('தல' மனதில் வந்து விட்டது. மற்ற வார்த்தைகளின் எழுத்துக்களோடு போராடினேன். அந்த வார்த்தைகளை மாற்றவேண்டுமா என்று கூட யோசித்தேன் - ஸ்ரீராம்)
குரும்பை என்றால் இளசு என்ற அர்த்தத்தில் எடுத்துக் கொண்டேன். நீங்கள் சுட்டிக் காட்டியதற்குப் பின்தான் அது பொருந்தாத க்ளூ என்று புரிந்தது
விடைகள் நான் உங்களுக்கு அனுப்பிய word டாகுமெண்டின் கடைசிப் பக்கத்திலேயே இருந்ததே! ஒரு விதத்தில் பார்க்காததும் நல்லதுதான். என் சொதப்பலைக் கண்டுபிடிப்பதற்கு ஒரு வாய்ப்பானது. திரும்பவும் விடையைக் கீழே கொடுத்துள்ளேன்.
சாண்டில்யன் பக்கம் : யவனாராணியோ இளஞ்செழியன் மேல் காதலாகிக் கசிகிறாள். அவனோ பூவழகியின் மீது(ம்) காதலாயிருக்கிறான். யவன கடற்படைத் தளபதி தனக்கு உதவி செய்த இளஞ்செழியனை வஞ்சகமாக கொல்ல ஏற்பாடு செய்து, அவன் உயிர் பிழைத்தாலும் தமிழகம் வரமுடியாதபடி யவனாக கப்பலில் அனுப்பி விடுகிறான். யவனராணி, பூவழகி, ப்ரம்மானந்தர், கரிகாலன் எல்லோருக்குமே அவன் போனது வருத்தம், இழப்பு. கையொடிந்தது போல இருக்கிறது. ஆறு மாதங்களுக்கும் மேலாக, இனி அவன் வருவான் என்கிற நம்பிக்கையே போகிறது. அந்நிலையில் சில மர்மமான சம்பவங்கள் புகாரில் நிகழ்கின்றன.
இளஞ்செழியனை மாஸ் ஹீரோவாகக் காட்டி இருக்கிறார் சாண்டில்யன். இந்த இடத்தில இது கொஞ்சம் கம்மிதான் என்றாலும் அதுவும் சுவாரஸ்யம் என்பதால் பகிர்கிறேன். ராஜபேரிகை, ராஜமுத்திரை போன்ற நாவல்களில் இந்த மாஸ் ஹீரோ வெளிப்பாடு இன்னும் அமர்க்களமாயிருக்கும்.
ராணியின் நினைப்புப் பின்னோக்கி ஓடுவதை அவள் நீலமணிக் கண்களில் ஏற்பட்ட லேசான மயக்கப் பார்வை வலியுறுத்தியது. ஏதோ கனவில் பேசுவதுபோல், இல்லை ஏதோ சொர்க்கத்தில் சிக்கிவிட்டதுபோல் பேசினாள் ராணி.
"பல மாதங்களுக்கு முன்பு ஒரே முறை வந்தேன் அல்லி! உன்னைப்போல் என்னையும் ஒருவர் கடற் பகுதியிலிருந்து தான் தூக்கி வந்தார். ஆனால் உனக்கும் எனக்கும் ஒரு வித்தியாசம். நீ முழு உணர்வுடன் அவர்மீது சாய்ந்து கிடந்தாய். நான் உணர்வற்ற நிலையில் இருந்தேன். இங்குதான் கண் விழித்தேன். இந்த மஞ்சத்தில்தான் அவர் என்னைப் படுக்க வைத்து மதுவை ஊட்டினார். வேறு உடையும் கொடுத்தார். அந்தச் சம்பவங்களை இன்று நினைக்கக்கூட வெட்கமாயிருக்கிறது எனக்கு. ஆனால் கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் கழித்து அதே அறைக்கு இன்று வருகிறேன் ஒரு ஓலையின் உத்தர வுக்குப் பணிந்து..." என்று பேசிக்கொண்டு போன ராணி சற்றுப் பேச்சை நிறுத்தினாள்.
"ஓலையா!” என்று வியப்புடன் வினவினாள் அல்லி.
"ஆம். இந்த மாளிகை விவரத்தை எழுதி இங்கு இன்றிரவு சந்திக்கும்படியாக எழுதியிருந்தது. இதோ பார் ஓலையை" என்று மடியிலிருந்து ஓலையை எடுத்துக்கொடுத்தாள் ராணி.
அந்த ஓலையின் அடியில் பொறிக்கப்பட்டிருந்த அன்னப்பறவைக் குறியைக் கவனித்த அல்லி, "யவனர்களின் அரச முத்திரை” என்று முணுமுணுத்தாள்.
"ஆம். இந்த முத்திரைபோல் செய்யப்பட்ட ஆபரணத்தையும் இங்குதான் கண்டார் அவர். பிறகு இந்த மாளிகையில் பிரமிக்கத்தக்க நிகழ்ச்சிகள் நடந்தேறின. அன்றுதான் தமிழர் வீரம், எத்தகைய நிலையையும் சமாளித்துக் கொள்ள அவர்களுக்குள்ள திறமை, இவற்றைக் கண்கூடாகக் கண்டேன்" என்று பழைய கதையை விவரித்த ராணி, "ஆகவே இங்கு வரவழைத்தவர் யாராயிருந்தாலும் அவர் இத்தனை ரகசியங் களையும் அறிந்தவராகத் தானிருக்க வேண்டும்” என்று கூறினாள்.
"அதிருக்கட்டும் ராணி. இத்தனை ரகசியங்களையும் அறிந்தவர் வேறு யாராக இருக்க முடியும்?”
ராணி சிறிது நேரம் மௌனம் சாதித்தாள். அவள் பளிங்கு முகத்தில் சிவப்பு மெள்ள ஏறி கன்னக் கதுப்புகளைக் குங்குமக் குழம்பாக அடித்தது.
"வேறு யாருமல்ல, அவர்தான்; சந்தேகமில்லை, சந்தேகமில்லை" என்று தட்டுத் தடுமாறிச் சொன்னாள் ராணி.
"ஏன் பெயரைச் சொல்லி விடுவதுதானே? பெயர் அத்தனை கசப்பாகவா இருக்கிறது?" எனக் கணீரென்று அறையை ஊடுருவிச் சென்ற சொற்களைக் கேட்ட ராணியும் அல்லியும் பிரமித்துப் போய் அறைக் கதவை நோக்கித் திரும்பினார்கள். கையில் தலைக் கவசத்துடனும் இதழ்களில் எந்த எழிலரசியையும் மயக்கும் இன்பப் புன்னகையுடனும் சோழர் படையின் உபதலைவனான இளஞ்செழியன் நின்றிருந்தான்....
இதன் பிறகு அண்ணன் தங்கை போல என்று சொல்லிக்கொள்ளும் இளஞ்செழியனும், அல்லியும் தொட்டு விளையாடுவதைக் கண்டு வெகுளும் யவனராணி அவள் இளஞ்செழியனுடனான தன் முன் அனுபவத்தை கூறுவாள். சங்கடப்பட்டு கோபப்படும் அல்லி, இதையெல்லாம் இப்படிச் சொல்ல உனக்கு வெட்கமாக இல்லை, ராணி?" என்று கேட்க, "நீங்கள் இருவரும் அண்ணன் தங்கை உறவு என்று சொல்லிக்கொண்டு இப்படி விளையாடுவதும் எனக்கு அதே எரிச்சலைத்தான் தருகிறது" என்பாள் ராணி!
யாருக்கும் மண்டியிடாத ராணி..
அல்லியின் விழிகள் ஆச்சரியத்தாலும் இளஞ்செழியன் ஆபத்துக்களிலிருந்து தப்பியதால் ஏற்பட்ட திகைப்பாலும் மலர்ந்தன. "யார் அவன் இலி-ஆஸு?" என்று கேட்டாள். பல
"சாம்பிராணி நாட்டுத் தலைவன்.”
"சாம்பிராணி நாடா!” என்றாள் மீண்டும் அல்லி ஆச்சரியத்துடன்.
ராணியின் விழிகளில் ஆச்சரியத்துக்குப் பதில் துயரம் மண்டிக் கிடந்தது. ஆகவே சட்டென்று நின்ற இடத்திலிருந்து திரும்பிய ராணி, "அல்லி! படைத் தலைவரை மேற்கொண்டு எதுவும் கேட்காதே. அவர் பிழைத்துவந்ததற்குப் பிரார்த்தனை செய்" என்று கூறிவிட்டுத் தானிருந்த இடத்தில் மண்டியிட்டுக் கண்களை மூடினாள். இலி-ஆஸுவின் பெயர் எதற்கும் அஞ்சாத ராணியின் இதயத்தில் பெரும் பயத்தை விளை வித்தது. 'அவனிடமிருந்து எப்படித் தப்பினார் படைத் தலைவர்?' என்று தனக்குள் கேட்டுக் கொண்ட ராணி, 'எப்படியோ தப்பினாரே அதுவரை நன்றி' என்று தன் தெய்வத்தைத் துதிக்க ஏதோ முணு முணுத்தாள்.
புரிந்தது
யாருக்கும் மண்டியிட்டோ தலை வணங்கியோ பழக்க மில்லாத ராணி, அந்த அறையில் தங்கள் இருவருக்கும் எதிரில் அனாதைபோல் மண்டியிட்டுத் தலைவணங்கிக் கண்களை மூடியிருந்ததையும், ராணியின் முகத்தில் பரவியிருந்த பெரும் சாந்தியும் தெய்வீக ஒளியும் அவளை ஒரு தேவதையாக அடித்திருந்ததையும் கவனித்த அல்லி, 'பூவழகி மட்டும் படைத் தலைவன் இதயத்தில் முன்னதாகப் புகுந்திராவிட்டால் ராணி இளஞ்செழியன் இதயத்தில் நொடிப் பொழுதில் அரியணை அமைத்து ஏறி விடுவாள்' என்று மனத்துக்குள் சொல்லிக் கொண்டாள். படைத் தலைவனிடம் ராணிக்கிருந்த பரிபூரணக் காதலும், அந்தச் சமயத்தில் அவளுக்குத் தெளிவாகத் தெரிந்தது.
இந்த சமயத்தில் உள்ளே வரும் அலீமா யாருக்கும் தலைவணங்காத தன் ராணி மண்டியிட்டு தலைகுனிந்திருப்பதைப் பார்த்து பெரு வியப்பும், குழப்பமும் அடைந்து பின்னர் ராணியை விசாரிப்பாள்.
19564 ல் வெளியான கர்ணன் படம் பிரம்மாண்டமான தயாரிப்பு. பெங்களூரு அரண்மனையிலும், ஜெய்ப்பூர் அரண்மனையிலும் காட்சிகள் எடுக்கப்பட்டன. திரௌபதி வஸ்திராபரபாரணம் காட்சி எடுக்கப்பட்டு பின்னர் வெளிநாடுகளில் இந்தியாவின் பெயர் எதிர்மறையாக பதிவாகும் என்று ஸ்க்ராப் செய்து விட்டார்களாம். ஏகப்பட்ட ஆட்கள் ஒவ்வொரு காட்சியிலும் நடித்ததால் இரண்டு நிமிட காட்சி எடுப்பதற்கு நான்கு நாட்கள் கூட ஆயினவாம். கல்விக்கூடத்தை எரித்த மாணவனாக நடித்த மாஸ்டர் ஸ்ரீதருக்கு அந்தக் காலத்திலேயே ஆயிரம் ரூபாய் தரப்பட்டதாம். ஒரே டேக்கில் நடித்தாராம் ஸ்ரீதர். வி எஸ் ராகவன் கேரக்டரோடு இன்வால்வ் ஆகி கோபத்தில் அரச சபையை விட்டு வெளியேறும் காட்சியில் சேட்டை விட்டும் நடந்து கொண்டே இருக்க, என் டி ராமராவ் வந்து அவரைத் தடுத்து நிறுத்தினாராம்.
விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் கண்ணதாசன் பாடல். சுசீலாம்மாவின் மதுரமான குரலில், கம்பீர இசையோடு பஹாடி ராகத்தில் அமைந்த பாடல் "கண்ணுக்கு குலமேது".
குலத்தைப் பற்றி பேசப்பட்டதால் வேதனையில் இருக்கும் கர்ணனுக்கு ஆறுதல் கூற அவன் மனைவி பாடும் பாடல். என்ன சொன்னாலும் ஆறுதலடையாத கர்ணன் "தர்மத்தின் தாயே கலங்காதே" என்றதும் பெருமிதம் அடைகிறான். அவன் தான தர்மம் அவன் தாழ்வு மனப்பான்மையாலேயே உருவாகி இருக்க வேண்டும்! படத்துக்கான மொத்த பாடல்களையும் கண்ணதாசன் இரண்டு நாட்களில் எழுதி விட்டாராம்.
கர்ணன் படத்தைப் பற்றி எத்தனை முறை படித்தாலும் ரசனைதான். இன்னொரு முறை பார்ப்போமா என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது.
அடிக்கடி கர்ணன் படப் பாடல்களைக் கேட்பேன். கண்ணதாசனின் திறமை அப்படிப்பட்டது. என் ஆசிரியரிடம் சென்றவாரம் பேசிக்கொண்டிருந்தபோதும் (சுமார் ஏழு மணி நேரம்) மனதில், மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா, பாடல் ஓடிக்கொண்டிருந்தது. அவர் எங்கேஇடம் சொல்லிக்கொண்டிருந்தது கீதை பற்றிய செய்திகள்.
வாங்க நெல்லை.. ஆமாம். சிறந்த படங்களில் ஒன்று. ஆனால் அப்போது அது வசூலைக் குவிக்கவில்லை!
'மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா' பாடல் மறைந்த என் மாமா - kggயின் அண்ணன் - விசு மாமாவுக்கு பிடித்த பாடல். அடிக்கடி குரலெடுத்து பாடுவார். அவரது ஸ்பெஷல் பாட்டு அது.
கர்ணன் படத்தை என்னால் கொண்டாட முடியாது. மிகவும் ஆசையாக சென்று ஏமாந்த படம். கர்ணன் சுபாங்கியை சந்திக்கும் வரை ஓழுங்காக சென்று கொண்டிருந்த படம் அதற்குப் பிறகு சிவாஜி, தேவிகா காதல், கல்யாணம், வளைகாப்பு என்று அவர்கள் பின்னால் சென்று விடும். மேலும் அந்தப் படத்தில் சித்தரித்தது போல கர்ணன் ஒன்றும் அவ்வளவு உள்ளத்தில் நல்ல உள்ளமெல்லாம் கிடையாது. என் கருத்தை கீதா அக்கா கன்னாபின்னாவென்று ஆதரிப்பார் என்று நம்புகிறேன்.
//கர்ணன் உள்ளத்தில் நல்ல உள்ளமெல்லாம் கிடையாது// - மகாபாரத்த்தில் யார் யார் நல்ல உள்ளம் கொண்டவர்கள், சரியாக நடந்திருக்கிறார்கள், அப்பழுக்கில்லாத குணத்தைப் பெற்றிருந்தார்கள் என ஒரு லிஸ்ட் போட்டிருக்கலாமே. எனக்குமே விதுர்ர் தவிர நல்லவர்கள் யார் யார் எனத் தெரிந்துகொள்ள ஆசை.
என்னடா இது? காலங்கார்த்தாலே ஸ்ரீராம் பழைய பதிவுக்குப் போயிருக்காரேனு நினைச்சால் இப்போத் தெரியுது காரணம். அவரால் நானும் பானுமதியின் அந்தப் பதிவுக்கு மறுபடி போயிட்டு வந்துட்டேன். பி.எஸ்.ராமையாவின் "தேரோட்டி மகன்" நாடகம் தான் ச-அகஸ்ரநாமம் குழுவினரால் மேடை நாடகமாக நடிக்கப்பட்டுப் பின்னர் திரைப்படமாக மாறினதுனு நினைவு. படத்தில் ஜிவாஜி! ஆகவே கர்ணன் குணாதிசயங்களே மிகவும் உசத்தியாகத் தான் சொல்லப்பட்டிருக்கும். அவனுடைய வள்ளல்தனத்திற்கும் காரணம் உண்டு.
ஆனால் படத்துக்காக அவற்றை எல்லாம் நீக்கிவிட்டுக் கர்ணன் ஏதோ தியாகி எனச் சித்தரித்து இருப்பார்கள். எல்லோரும் நினைப்பது போல் கர்ணனுக்கு குருகுலவாசமோ, அல்லது துரோணர் போன்ற ஆசாரியர்களிடம் கற்பதோ மறுக்கப்படவில்லை. கௌரவர்கள், பாண்டவர்கள் போல அவனும் கிருபாசாரியார், துரோணாசாரியார் ஆகியோரின் குருகுலத்தில் படித்தவனே. இன்னும் மேலே சொன்னால் பரசுராமரை அணுகித் தான் ஒரு பிராமணன் எனப் பொய் சொல்லி அவரிடம் வில் வித்தைகளுக்கான சாஸ்திர அறிவைப் பரிபூரணமாகப் பெற்றவன். பரசுராமரின் சாபத்தால் அவற்றை அவனால் பயன்படுத்த முடியலை. கர்ணனின் வாழ்நாள் லக்ஷியமே அர்ஜுனனைக் கொல்வதே. பாண்டவர்களை அழிப்பதே.
பானுமதி சொல்லி இருப்பது போல் கர்ணன் பற்றிய என் கருத்து அவர் கருத்தோடு ஒத்துப் போவதைச் சொல்லிக் கொண்டு அவரைக் கன்னாபின்னாவென ஆதரிக்கிறேன். நன்றி. வணக்கம்.
மயில்சாமி ஆபூர்வமான மனிதர். அவர், சிங்கமுத்து, ஒருதலை ராகத்திலிருந்து பயணத்தைத் துவங்கிய தியாகு.. இவர்களின் நகைச்சுவைக் காட்சிகளை மிகவும் ரசிப்பேன். குடித்து ஊதியிருக்க வேண்டாமே என மயில்சாமி பற்றி நினைத்துக்கொள்வேன்.
அப்படியே இருந்ததுதான். இந்த நாவலில் அப்படிதான். ஆனால் கதையைத் தொடர்ந்து படித்து வந்தால்தான் அதன் தாக்கம் தெரியும். அதனால்தான் கொஞ்சம் முன்கதையும் கொடுத்திருக்கிறேன்.
நேற்று பாலகுமாரனின் 'மெர்க்குரி பூக்கள்' படிக்க ஆரம்பித்தேன். அந்த சுவாரஸ்யத்தில் ஒரு சுவாரஸ்யமான வியாழன் பதிவை மிஸ் பண்ணி விட்டேன் என்பதை இன்று காலைதான் உணர்ந்தேன். வியாழன் காலையில் வேலை அதிகம் இருக்கும். அதனால் மதியத்திற்கு மேல்தான் பதிவு பார்க்க முடிந்தது. அதற்கு மேல் கருத்து போட்டால் என்ன? போடா விட்டால் என்ன?
நல்ல குறுக்கெழுத்துப் போட்டியை செட் செய்துள்ளார் பானுமதி வெங்கடேஸ்வரன். விடையை ஸ்ரீராமுக்கு மெயில் செய்துள்ளேன் (Don't want to spoil the fun for others). Question to Banumathi Venkateswaran: 3ஆம் colum 7ஆம் row...அந்த செல் blank ஆகவே இருக்கிறதே எல்லா க்ளூக்களையும் சால்வ் பண்ணிய பிறகு! அந்த செல்லுக்குக் கருப்புப் பெயிண்ட் அடிக்கணுமோ?
மயில்சாமியின் மிமிக்ரியும், சன் தொலைகாட்சியில் டெலிஃபோனில் நேயர்களை சந்தித்த நிகழ்ச்சியும் ரொம்ப பிடிக்கும். தில், அல்லது தூள் படங்களுள் ஒன்றில் விவேக்கோடு காமெடி செய்திருப்பார். நன்றாக இருக்கும்.
தானம் செய்வதில் எம் ஜி ஆரைவிட பெரிய மனிதன் மயில்சாமி என்று தோன்றும். எம் ஜி ஆரிடம் காசு இருந்து தானம் செய்தார். இவரிடம் இருப்பதையெல்லாம் தானம் செய்தார்.
ஏதோ ஒன்று அதுவும் பிழைப்புக்காக சும்மா காமெடிக்கு செய்தார் என்பதை அவ்வளவு பெரிதுபடுத்தத் தேவை இல்லை என்பது என் பணிவான கருத்து.
அவர் என்ன பொருளாதார மேதையா? அது சேனல்கள் செய்த அட்டகாசம். நான் அவர் நகைச்சுவை நடிப்பையும், தானம் செய்யும் குணத்தையும் மட்டும் பார்க்கிறேன். அவர் ஒரு மதுப்பிரியர் என்பதை அவரே மேடையில் பேசுவார்.
கபிலன் பாடல் எதுவும் நினைவில் இல்லை. கார்க்கியின் பாடலும் எதுவும் இது என்று குறிப்பிட்டு சொல்லும் அளவு சிறப்பு இல்லை என்பதையும் சொல்ல வேண்டும். அதாவது நான் அறிந்த வரையில்.
வியாழன் பதிவில் ஜோக்குகளுக்கு நிறைய முறை சிரித்து விட்டோம். அஜித வடேகர் இடது கை ஆட்டக்காரர் இல்லையா? அவர் மனைவியைப் பற்றி அவர் கூறியிருக்கும் விஷயங்கள் ரசிக்கும்படி இருந்தன. வேறு ஒரு கிரிக்கெட்டரின் மனைவி கூட கணவர் விளையாடும் பொழுது டி.வி.யை போடவே மாட்டாராம், அவர் டி.வி.யை ஆன் போட்டால் அவர் கணவர் உடனே அவுட் ஆகி விடுவாராம். பட்டௌடியின் மனைவியான ஷர்மிளா டாகூருக்கு கிரிக்கெட் பற்றி அ,ஆ, கூட தெரியாதாம். யாராவது அவரிடம் இன்று உங்கள் கணவர் நன்றாக விளையாடினார் என்றால் இவர்,"அப்படியா? எத்தனை கோல் போட்டார்?" என்று கேட்பாராம்.
பாஸ் - சிரித்துவிட்டேன். அவங்க:ளுக்கு நேர் எதிர் நான். எனக்கு ப்ளவுஸ் லூஸாக இருக்க வேண்டும். டைட்டா தைச்சா கோபம் வந்துவிடும். என்ன எல்லாரும் சொல்றது ....என்ன இது பாட்டி மாதிரி ப்ளவு போட்டுக்கற என்று. எனக்கு இறுக்கமாகப் போட முடியாது என்பதாலேயே நான் புடவை கட்டுவதே அபூர்வம்.
மதன் கார்கியின் பாடல் நல்லா இருக்கே ஸ்ரீராம். இது படத்தில் இடம் பெற்ற பாடலா? பரவாயில்லை பாரதியின் தாக்கத்தில் எழுதியிருந்தாலும் நல்லா எழுதியிருக்கிறார் என்றே நான் சொல்வது.
அண்ணா கண்ணன் அலசியிருப்பதைப் போல அலசத் தெரியவில்லை ஆனால் பாடல் வரிகளின் ரிதம், இசை, ராகம், பாடியவர் கேட்கணுமா எல்லாமே நல்லாருக்கும். பாட்டுக்கு ஏற்ப இசை...காட்சி பார்க்கணும் மீண்டும்.
மயில்சாமி நிஜமாகவே அந்த மனது எல்லாருக்கும் வராதுதான். ஆனால் இதை எவ்வளவு தூரம் சரி என்று சொல்லலாம் என்பதை நான் ஆராய விரும்பவில்லை. அவருடைய அந்த மனதை attitude ஐ மரியாதையுடன் வியப்புடன் ரசிக்கிறேன்
கர்ணன் படத்தைப் பற்றி எத்தனை முறை படித்தாலும் ரசனைதான். இன்னொரு முறை பார்ப்போமா என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது.
பதிலளிநீக்குஅடிக்கடி கர்ணன் படப் பாடல்களைக் கேட்பேன். கண்ணதாசனின் திறமை அப்படிப்பட்டது. என் ஆசிரியரிடம் சென்றவாரம் பேசிக்கொண்டிருந்தபோதும் (சுமார் ஏழு மணி நேரம்) மனதில், மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா, பாடல் ஓடிக்கொண்டிருந்தது. அவர் எங்கேஇடம் சொல்லிக்கொண்டிருந்தது கீதை பற்றிய செய்திகள்.
வாங்க நெல்லை.. ஆமாம். சிறந்த படங்களில் ஒன்று. ஆனால் அப்போது அது வசூலைக் குவிக்கவில்லை!
நீக்கு'மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா' பாடல் மறைந்த என் மாமா - kggயின் அண்ணன் - விசு மாமாவுக்கு பிடித்த பாடல். அடிக்கடி குரலெடுத்து பாடுவார். அவரது ஸ்பெஷல் பாட்டு அது.
கர்ணன் படத்தை என்னால் கொண்டாட முடியாது. மிகவும் ஆசையாக சென்று ஏமாந்த படம். கர்ணன் சுபாங்கியை சந்திக்கும் வரை ஓழுங்காக சென்று கொண்டிருந்த படம் அதற்குப் பிறகு சிவாஜி, தேவிகா காதல், கல்யாணம், வளைகாப்பு என்று அவர்கள் பின்னால் சென்று விடும். மேலும் அந்தப் படத்தில் சித்தரித்தது போல கர்ணன் ஒன்றும் அவ்வளவு உள்ளத்தில் நல்ல உள்ளமெல்லாம் கிடையாது. என் கருத்தை கீதா அக்கா கன்னாபின்னாவென்று ஆதரிப்பார் என்று நம்புகிறேன்.
நீக்குவாங்க பானு அக்கா. கர்ணன் படம் கர்ணனை முன்னிறுத்தும் படம். அப்படிதான் இருக்கும்.
நீக்குhttps://draft.blogger.com/blog/post/edit/7491406889898573533/2934644086105693637ர்ணன் படத்திற்கு நான் எழுதிய விமர்சனம்
நீக்குலிங்க் தவறாகக் கொடுத்திருக்கிறீர்கள். டிராப்டிலிருந்து எடுத்து அனுப்பி இருக்கிறீர்கள் போல...
நீக்குhttps://thambattam.blogspot.com/2021/04/blog-post_26.html
நீக்கு//கர்ணன் உள்ளத்தில் நல்ல உள்ளமெல்லாம் கிடையாது// - மகாபாரத்த்தில் யார் யார் நல்ல உள்ளம் கொண்டவர்கள், சரியாக நடந்திருக்கிறார்கள், அப்பழுக்கில்லாத குணத்தைப் பெற்றிருந்தார்கள் என ஒரு லிஸ்ட் போட்டிருக்கலாமே. எனக்குமே விதுர்ர் தவிர நல்லவர்கள் யார் யார் எனத் தெரிந்துகொள்ள ஆசை.
நீக்குபாவெ மேடத்தின் எதிர்பார்ப்பின்படி எம்ஜிஆர் வரலாறு எழுதினா காளிமுத்துவை தோட்டத்தில் வெளுத்து வாங்கினதையும் ரஜினிக்குச் செய்ததையும் இன்னும் பிறவற்றையும் எதிர்பார்ப்பார் போலிருக்கு.
நீக்குவிதுரர் தவிர சகாதேவன் மகாதேவன்.. ச்சே... நகுலன், இடும்பி, கடோத்கஜன், அரவான் ஆகியோரைச் சொல்லலாமோ..
நீக்குஎன்னடா இது? காலங்கார்த்தாலே ஸ்ரீராம் பழைய பதிவுக்குப் போயிருக்காரேனு நினைச்சால் இப்போத் தெரியுது காரணம். அவரால் நானும் பானுமதியின் அந்தப் பதிவுக்கு மறுபடி போயிட்டு வந்துட்டேன். பி.எஸ்.ராமையாவின் "தேரோட்டி மகன்" நாடகம் தான் ச-அகஸ்ரநாமம் குழுவினரால் மேடை நாடகமாக நடிக்கப்பட்டுப் பின்னர் திரைப்படமாக மாறினதுனு நினைவு. படத்தில் ஜிவாஜி! ஆகவே கர்ணன் குணாதிசயங்களே மிகவும் உசத்தியாகத் தான் சொல்லப்பட்டிருக்கும். அவனுடைய வள்ளல்தனத்திற்கும் காரணம் உண்டு.
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குஆனால் படத்துக்காக அவற்றை எல்லாம் நீக்கிவிட்டுக் கர்ணன் ஏதோ தியாகி எனச் சித்தரித்து இருப்பார்கள். எல்லோரும் நினைப்பது போல் கர்ணனுக்கு குருகுலவாசமோ, அல்லது துரோணர் போன்ற ஆசாரியர்களிடம் கற்பதோ மறுக்கப்படவில்லை. கௌரவர்கள், பாண்டவர்கள் போல அவனும் கிருபாசாரியார், துரோணாசாரியார் ஆகியோரின் குருகுலத்தில் படித்தவனே. இன்னும் மேலே சொன்னால் பரசுராமரை அணுகித் தான் ஒரு பிராமணன் எனப் பொய் சொல்லி அவரிடம் வில் வித்தைகளுக்கான சாஸ்திர அறிவைப் பரிபூரணமாகப் பெற்றவன். பரசுராமரின் சாபத்தால் அவற்றை அவனால் பயன்படுத்த முடியலை. கர்ணனின் வாழ்நாள் லக்ஷியமே அர்ஜுனனைக் கொல்வதே. பாண்டவர்களை அழிப்பதே.
நீக்குபானுமதி சொல்லி இருப்பது போல் கர்ணன் பற்றிய என் கருத்து அவர் கருத்தோடு ஒத்துப் போவதைச் சொல்லிக் கொண்டு அவரைக் கன்னாபின்னாவென ஆதரிக்கிறேன். நன்றி. வணக்கம்.
நீக்குhttps://kannanvaruvan.blogspot.com/2011/12 கர்ணனின் பின்புலம்
நீக்கு// அவனுடைய வள்ளல்தனத்திற்கும் காரணம் உண்டு. //
நீக்குஎன்னன்னு சொல்லுங்க...
கன்னாபின்னான்னு ஆதரிக்கறீங்களா, கர்ணாபின்னா ன்னு ஆதரிக்கறீங்களா?
நீக்குமயில்சாமி ஆபூர்வமான மனிதர். அவர், சிங்கமுத்து, ஒருதலை ராகத்திலிருந்து பயணத்தைத் துவங்கிய தியாகு.. இவர்களின் நகைச்சுவைக் காட்சிகளை மிகவும் ரசிப்பேன். குடித்து ஊதியிருக்க வேண்டாமே என மயில்சாமி பற்றி நினைத்துக்கொள்வேன்.
பதிலளிநீக்குஆமாம். இபப்டிபப்ட்ட ஒரு ஆத்மா இருந்ததது என்பதே நெகிழ வைக்கிறது.
நீக்குவீட்டு கலாட்டா ரசிக்கக்கூடியுது. நமக்கு எப்போதுமே வயதாவது தெரியாது.
பதிலளிநீக்குநன்றி. மகன்கள் குசும்பு பிடித்தவர்கள்!
நீக்குஇன்றைக்காவது குறுக்கெழுத்துப் போட்டியை ஊன்றிக் கவனித்து விடையெழுதப் பார்க்கிறேன்.
பதிலளிநீக்குஅப்பாடி.. ஒரு நேயர் சேர்ந்திருக்கிறார்!
நீக்கும்ருத்த்யுஞ்செய நல்லா இருந்ததா இல்லையா? ரொம்ப அலுத்துக்கற மாதிரி இருக்கே.
பதிலளிநீக்கும்ம்ம்.. இருந்ததது.. ஒரு பெப் இல்லை. சுலபமா நகரும் அவிழும் புதிர்கள்... பாதி கவனத்தில் கூட படம் பார்க்கலாம்! நேற்று ஒரு படம் பார்த்தேன்..
நீக்குயவனராணி பகுதி ரசிக்கும்படி இல்லையே. சரியா எழுதலையோ?
பதிலளிநீக்குஅப்படியே இருந்ததுதான். இந்த நாவலில் அப்படிதான். ஆனால் கதையைத் தொடர்ந்து படித்து வந்தால்தான் அதன் தாக்கம் தெரியும். அதனால்தான் கொஞ்சம் முன்கதையும் கொடுத்திருக்கிறேன்.
நீக்குநான் இந்த சாண்டில்யன் பகுதியை சாய்சில் விட்டு விடுகிறேன். ஹி ஹி!
நீக்குஅது பரவாயில்லை. சமயங்களில் நீங்கள் மொத்த பதிவையே சாய்ஸில் விட்டு விடுகிறீர்கள்!!!
நீக்குநேற்று பாலகுமாரனின் 'மெர்க்குரி பூக்கள்' படிக்க ஆரம்பித்தேன். அந்த சுவாரஸ்யத்தில் ஒரு சுவாரஸ்யமான வியாழன் பதிவை மிஸ் பண்ணி விட்டேன் என்பதை இன்று காலைதான் உணர்ந்தேன். வியாழன் காலையில் வேலை அதிகம் இருக்கும். அதனால் மதியத்திற்கு மேல்தான் பதிவு பார்க்க முடிந்தது. அதற்கு மேல் கருத்து போட்டால் என்ன? போடா விட்டால் என்ன?
நீக்குஇப்படி இருப்பதால்தான் சில மறுமொழிகளை நீங்க படிக்கறதில்லை போலிருக்கு.உங்கள்ட ஒரு விஷயம் பகிரணும்னு சொல்லியிருந்தேன்.
நீக்குஹிஹிஹி.. இதையும் பார்க்க மாட்டாங்களே..
நீக்குநல்ல குறுக்கெழுத்துப் போட்டியை செட் செய்துள்ளார் பானுமதி வெங்கடேஸ்வரன். விடையை ஸ்ரீராமுக்கு மெயில் செய்துள்ளேன் (Don't want to spoil the fun for others).
பதிலளிநீக்குQuestion to Banumathi Venkateswaran: 3ஆம் colum 7ஆம் row...அந்த செல் blank ஆகவே இருக்கிறதே எல்லா க்ளூக்களையும் சால்வ் பண்ணிய பிறகு! அந்த செல்லுக்குக் கருப்புப் பெயிண்ட் அடிக்கணுமோ?
ஆஹா... Too fast! நான் இன்னும் பார்க்கவில்லையே...
நீக்குநன்றி சூர்யா! ஆமாம், நீங்கள் சொல்லியிருப்பது சரி, 3ம் காலம், 7வது ரோ, கருப்பு வண்ணம் கொடுக்க விட்டுப் போய்விட்டது.
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குவாங்க செல்வாண்ணா... வணக்கம்.
நீக்குகர்ணன் படத்திற்கு ஈடு இணை ஏது!...
பதிலளிநீக்குகலைப் பொக்கிஷம்...
கரெக்ட்டு...
நீக்குதமிழ் குறுக்கெழுத்து மிகவும் பிடித்த ஒன்று...
பதிலளிநீக்குஇப்போது முடியவில்லை....
நலம் பெற பிரார்த்திக்கிறேன்.
நீக்குஈசியாகத்தான் இருக்கும். ஒரே நாளில் போட வேண்டாம், கொஞ்சம் கொஞ்சமாக முயற்சி பண்ணுங்கள். உங்கள் நலத்திற்காக பிரார்த்திக்கிறேன்.
நீக்குவாரியார் ஸ்வாமிகளை தன் குரல் வழி ஒரு முறை
பதிலளிநீக்குமனம் வருந்தச் செய்தவர் மயில்சாமி என்பதே ஒரு வருத்தம்....
அதை நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளலாம். மனதில் விஷம் கிடையாது.
நீக்குமயில்சாமியின் மிமிக்ரியும், சன் தொலைகாட்சியில் டெலிஃபோனில் நேயர்களை சந்தித்த நிகழ்ச்சியும் ரொம்ப பிடிக்கும். தில், அல்லது தூள் படங்களுள் ஒன்றில் விவேக்கோடு காமெடி செய்திருப்பார். நன்றாக இருக்கும்.
நீக்குநான் ரசித்த காமெடிகளில் ஒன்று அவரும் விவேக்கும் பங்குபெறும் விவேக்குடைய ஆக்ஷன்களை அவர் உறைப்படுத்தும் காட்சி!
நீக்கு* உரை
நீக்குவிவேக் இலங்கைத் தமிழில் (தூய தமிழில்) பேச, மயில்சாமி அதை சென்னைத் தமிழில் மொழிபெயர்ப்பாரே அதுவா? அது சூப்பர்!
நீக்குமயில்சாமி என்றதும் ஆர்த்தி, வடிவேல் நகைச்சுவைக் காட்சியும், திருப்பதி ஜிலேபியும் எனக்கு நினைவுக்கு வரும்.
நீக்குஇல்லை. இது வேற காமெடி. முடிந்தால் அடுத்தடுத்த வாரங்களில் பகிர்கிறேன்.
நீக்குஎன்னவோ மயில்சாமி விஷயத்தில் துரையின் கருத்துத் தான் எனக்கும். :(
நீக்குதானம் செய்வதில் எம் ஜி ஆரைவிட பெரிய மனிதன் மயில்சாமி என்று தோன்றும். எம் ஜி ஆரிடம் காசு இருந்து தானம் செய்தார். இவரிடம் இருப்பதையெல்லாம் தானம் செய்தார்.
நீக்குஏதோ ஒன்று அதுவும் பிழைப்புக்காக சும்மா காமெடிக்கு செய்தார் என்பதை அவ்வளவு பெரிதுபடுத்தத் தேவை இல்லை என்பது என் பணிவான கருத்து.
இல்லை. அவருடைய பொருளாதாரச் சிந்தனைகள். ஏற்புடையவை இல்லை. :( மன்னிக்கவும்.
நீக்குஅவர் என்ன பொருளாதார மேதையா? அது சேனல்கள் செய்த அட்டகாசம். நான் அவர் நகைச்சுவை நடிப்பையும், தானம் செய்யும் குணத்தையும் மட்டும் பார்க்கிறேன். அவர் ஒரு மதுப்பிரியர் என்பதை அவரே மேடையில் பேசுவார்.
நீக்குபாஸுக்கு சப்போர்ட்டாக நீங்கள் "ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ " என்று பாடியதை குறிப்பிட மறந்து விட்டீர்கள்.
பதிலளிநீக்குJayakumar
அச்சச்சோ... JKC ஸார்... அது நான் இல்லை..
நீக்குபாரதியின் கவிதையை படிக்கும் பொழுதே நெஞ்சம் நெகிழ்கிறது. அதன் பாதிப்பில் மதன் கார்க்கியின் கவிதை... என்னத்த சொல்ல..?
பதிலளிநீக்குகார்க்கியின் கவிதையும் மோசமில்லை என்றே எனக்குத் தோன்றியது!
நீக்குபாரதியைக் காப்பி அடித்திருக்கிறார்னு சொல்ல முடியாமல் வார்த்தைகளை மாற்றிப் போட்டிருக்கார்னு சொல்லலாமோ? கபிலன் கொஞ்சம் பரவாயில்லை ரகமோ?
நீக்குகபிலன் பாடல் எதுவும் நினைவில் இல்லை. கார்க்கியின் பாடலும் எதுவும் இது என்று குறிப்பிட்டு சொல்லும் அளவு சிறப்பு இல்லை என்பதையும் சொல்ல வேண்டும். அதாவது நான் அறிந்த வரையில்.
நீக்குஇன்றைய பதிவு - அனைத்து பாகங்களும் நன்று.
பதிலளிநீக்குகுறுக்கெழுத்து - நல்ல விஷயம். முன்பு ஆங்கில மொழியில் Crossword அதிகம்....... தினமும் பேப்பரில் வரும் அதை மாலைக்குள் போட்டி போட்டு முடிப்போம்.
வாங்க வெங்கட். அதேபோல் சுடோக்குவும் பிரபலம்.
நீக்கு@ பானுமதி வெங்கடேஸ்வரன்
பதிலளிநீக்குஉங்கள் நலத்திற்காக பிரார்த்திக்கிறேன்.
மிக்க மகிழ்ச்சி.. நன்றி..
திரு. மயில் சாமியின் புகழ் வாழ்க
பதிலளிநீக்கு:))
நீக்குவியாழன் பதிவில் ஜோக்குகளுக்கு நிறைய முறை சிரித்து விட்டோம்.
பதிலளிநீக்குஅஜித வடேகர் இடது கை ஆட்டக்காரர் இல்லையா? அவர் மனைவியைப் பற்றி அவர் கூறியிருக்கும் விஷயங்கள் ரசிக்கும்படி இருந்தன. வேறு ஒரு கிரிக்கெட்டரின் மனைவி கூட கணவர் விளையாடும் பொழுது டி.வி.யை போடவே மாட்டாராம், அவர் டி.வி.யை ஆன் போட்டால் அவர் கணவர் உடனே அவுட் ஆகி விடுவாராம்.
பட்டௌடியின் மனைவியான ஷர்மிளா டாகூருக்கு கிரிக்கெட் பற்றி அ,ஆ, கூட தெரியாதாம். யாராவது அவரிடம் இன்று உங்கள் கணவர் நன்றாக விளையாடினார் என்றால் இவர்,"அப்படியா? எத்தனை கோல் போட்டார்?" என்று கேட்பாராம்.
நான் கிரிக்கெட் லைவ் பார்த்தால் ரொம்பவே டென்ஷனாகிவிடுவேன் என்பதால் லைவ் மேட்சுகள் எதையும் பார்ப்பதில்லை. ஆட்டத்தை ரசிக்க முடிவதில்லை.
நீக்குநான் பதிவை சாய்சில் விடவில்லை, விடவிலை, விடவில்லை. ரீ எக்சாம் எழுதி விட்டேன்.
பதிலளிநீக்குஅது சரி.. பிசிக்ஸ் எக்சாம் அட்டென்ட் பண்ணாத குறையைத் தீர்க்கடுத்த நாள் கெமிஸ்ட்ரி எக்சாமில் பிசிக்ஸ் எக்சாம் கேள்விகளுக்கு பதில் எழுதிடறீங்க.
நீக்குநானும் பதிலலளித்து விட்டேன்... பதிலலளித்து விட்டேன்... பதிலலளித்து விட்டேன்...!
நீக்குநெல்லை நான் ரீ எக்சாம் என்று சொன்னேன். ரீ எக்சாம் என்றால் எதை தவற விட்டோமோ அதை எழுதுவது.
நீக்குபாஸ் - சிரித்துவிட்டேன். அவங்க:ளுக்கு நேர் எதிர் நான். எனக்கு ப்ளவுஸ் லூஸாக இருக்க வேண்டும். டைட்டா தைச்சா கோபம் வந்துவிடும். என்ன எல்லாரும் சொல்றது ....என்ன இது பாட்டி மாதிரி ப்ளவு போட்டுக்கற என்று. எனக்கு இறுக்கமாகப் போட முடியாது என்பதாலேயே நான் புடவை கட்டுவதே அபூர்வம்.
பதிலளிநீக்குகீதா
வாங்க கீதா... ஒரெயடியாக லூசும் இல்லை, ஒரெயடியாக டைட்டும் இல்லை.
நீக்குNetFlix ல் பார்த்துத் தொலைத்தேன்! //
பதிலளிநீக்குஹப்பா ஒரு படம் என் லிஸ்டில் சேர்க்க வேண்டாம்!
--- கீதாவின் மைன்ட் வாய்ஸ் - இல்லைனா சேர்த்ததை மட்டும் அப்படியே பார்த்து கிழிச்சிடறாப்ல பேச்சு!!!!!....
கீதா
ஹா.. ஹா.. ஹா... ஒரு விடுதலை உணர்வுதான் இல்லையா?
நீக்குமதன் கார்கியின் பாடல் நல்லா இருக்கே ஸ்ரீராம். இது படத்தில் இடம் பெற்ற பாடலா? பரவாயில்லை பாரதியின் தாக்கத்தில் எழுதியிருந்தாலும் நல்லா எழுதியிருக்கிறார் என்றே நான் சொல்வது.
பதிலளிநீக்குகீதா
நினைவுக்கு வந்துவிட்டது....இப்பாடல் கேட்டிருக்கிறேன் ஸ்ரீராம் எனக்கு பிடித்த பாடல். நல்லாருக்கும் சமீபத்தில் ரசித்த பாடல் என்பேன்.
நீக்குகீதா
அதே கருத்துதான் எனக்கும். இந்தப் பாடலை நான் ஒரு வெள்ளியில் ஷேர் செய்திருந்தேன் கீதா.
நீக்குயெஸ்ஸு....நினைவுக்கு வந்து விட்டது. ஸ்ரீராம் அப்படித்தான் நான் இந்தப் பாட்டையே கேட்டேன்....அதைக் கீழ சொல்ல வந்தேன் இங்க பார்த்ததும்...இங்கு.
நீக்குகீதா
துல்கர் படம்? பாம்பே ஜெயஸ்ரீ தானே பாடியவர்? குரல் வித்தியாசமா சினிமாவுக்காக ...
பதிலளிநீக்குகீதா
Yessu...!
நீக்குஅண்ணா கண்ணன் அலசியிருப்பதைப் போல அலசத் தெரியவில்லை ஆனால் பாடல் வரிகளின் ரிதம், இசை, ராகம், பாடியவர் கேட்கணுமா எல்லாமே நல்லாருக்கும். பாட்டுக்கு ஏற்ப இசை...காட்சி பார்க்கணும் மீண்டும்.
பதிலளிநீக்குகீதா
ஆமாம், நல்ல அலசி இருக்கார் இல்ல? அதுதான் அப்படியே எடுத்துக் போட்டேன்.
நீக்குஆமாம் ஸ்ரீராம் ரொம்பவே!
நீக்குகீதா
நிஜமாகவே இந்த செயற்கை நுண்ணறிவு இப்படியான விஷயங்களில் டஉதவுகிறது.
பதிலளிநீக்குஇதைச் சொல்றீங்களே...நம்ம வீட்டுல 3 நாள் முன் வரை, வீட்டில எல்லாமே மொபைலில் வாட்சப் மூலம் தான் பேச்சு மூன்றாவது காதைப் பொருத்த முடியாமல் போனதால்!!!!
கீதா
எனக்கும் வியப்பாக இருந்ததால்தான்...
நீக்குமயில்சாமி நிஜமாகவே அந்த மனது எல்லாருக்கும் வராதுதான். ஆனால் இதை எவ்வளவு தூரம் சரி என்று சொல்லலாம் என்பதை நான் ஆராய விரும்பவில்லை. அவருடைய அந்த மனதை attitude ஐ மரியாதையுடன் வியப்புடன் ரசிக்கிறேன்
பதிலளிநீக்குகீதா
அவரவர் கருத்து... குறை இல்லாத மனிதருண்டா?
நீக்குகுறுக்கெழுத்து வேறு இருக்கிறதே! ஓ இன்று எப்ப முடிப்பேன்!! ப்ளாக்!!!!! எனக்கு ப்ளாக் வாசிக்க ரொம்ப நேரம் எடுக்கிறதோ??!!!
பதிலளிநீக்குகீதா
ஹா.. ஹா.. ஹா...
நீக்குதேங்காய்க்குள்ள வெடிகுண்டு!! ஸ்ரீராம் நகைச்சுவைக்கு இணையாக உங்க தலைப்பு வரகள் டாப்! ரசித்தேன்
பதிலளிநீக்குகீதா
ஹிஹிஹி நன்றி!
நீக்குஸ்ரீராம், இரண்டும் ஒரே காமெடி சீன்ஸ்? வெவ்வேறு தலைபுக்குப் பொருத்தி?
பதிலளிநீக்குகீதா