12.4.26

நாங்கள் தரிசனம் செய்த கோயில்கள் - கங்கைகொண்ட சோழபுரம் - நெல்லைத்தமிழன்

 


கருவூர் தேவர் ராஜராஜ சோழனின் ராஜகுரு என்று அழைக்கப்படுபவர். இவர் 10ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 11ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்தவர் (பொதுஆண்டு 950-1050). தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் சிவலிங்கம் சரியாக ஆவுடையாரில் பொருந்தாத போது, சேர்த்து பிரதிஷ்டை செய்ய உதவியவர் என்று சொல்கின்றனர். இவர் பன்னிரு திருமுறைகளில் ஒன்பதாம் திருமுறையான திருவிசைப்பாவின் ஒரு பகுதியை இயற்றினார் என்பர். அதில் அவர் பத்து ஊர்களில் உள்ள கோயில்களைப் பாடியிருக்கிறார். (தில்லை, திருக்களந்தை, கங்கைகொண்ட சோழேச்வரம், திருப்பூவனம், தஞ்சை ராஜராஜேச்வரம், திருவிடைமருதூர் உட்பட பத்துத் தலங்கள்). இதில் கூர்ந்து கவனிக்க வேண்டியது, கங்கைகொண்ட சோழேச்வரத்தை ராஜேந்திரன் சுமார் 1020-1025ல் கட்டிமுடித்திருப்பான். அங்குள்ள சிவனுக்கும் பத்து பதிகங்கள் பாடியிருக்கிறார் கருவூர்த்தேவர்.

பக்திப் பாசுரங்களான அந்தப் பத்தில் ஓரிரண்டை கங்கைகொண்ட சோழபுரம் பற்றிய பகுதியில் காண்பது பொருத்தம்தானே.

அன்னமாய் விசும்பு பறந்தயன் தேட

அங்ஙனே பெரியநீ சிறிய

என்னை ஆள்விரும்பி என்மனம் புகுந்த

எளிமையை என்றும்நான் மறக்கேன்

முன்னம்மால் அறியா ஒருவனாம் இருவா

முக்கணா நாற்பெருந் தடந்தோள்

கன்னலே தேனே அமுதமே

கங்கை கொண்டசோ ளேச்சரத் தானே.

பொருள்: அன்னப் பறவை வடிவெடுத்து பிரமன் ஆகாசத்தில் போய்த் தேடியும் காண முடியாதவனேமுன்பு திருமால் உன் திருவடி தேடி பாதாளம் வரை சென்றும் அதனைக் காணமுடியாதவனே, தேடலுக்கெட்டாத அவ்வளவு பிரம்மாண்டமான பெரிய தெய்வமான நீ, உன் அடியவனும், மிகவும் சிறியவனுமான என்னை ஆட்கொள்ள விரும்பி, என்னுடைய மனத்துள் புகுந்த எளிமையை நான் என்றும் மறந்துவிடமாட்டேன். மூன்று கண்களையும் நான்கு பெரிய தோள்களையும் உடையவனே, கரும்பு, தேன் மற்றும் அமுதம் போல மிக இனிமையானவனே, கங்கைகொண்ட சோழீச்வரத்தில் குடிகொண்டிருக்கும் பெருமானே!

உண்ணெகிழ்ந்து உடலம் நெக்குமுக் கண்ணா !

ஓலமென்று ஓலமிட்டு ஒருநாள்

மண்ணினின்று அலறேன் வழிமொழி மாலை

மழலையஞ் சிலம்படி முடிமேல்

பண்ணிநின்று உருகேன் பணிசெயேன் எனினும்

பாவியேன் ஆவியுள் புகுந்தென்

கண்ணினின்று அகலான் என்கொலோ கங்கை

கொண்டசோ ளேச்சரத் தானே.  

பொருள்: இறைவனின் அருளை நினைத்து உள் நெகிழ்ந்து, பக்தியால் உடல் நெக்குருகி, உன்னை நினைத்து ஓலமிட்டு , இந்தப் பூவுலகில் பிறந்து ஐயோ என்று அலறமாட்டேன்உன்னுடைய புகழைப் பாடும் துதிகளைச் சொல்ல மாட்டேன். நான், கொஞ்சும் மழலைச் சிலம்பை அணிந்த உன் திருவடியை என் சென்னிமேல் வைத்துக்கொள்ளும் பேறு பெற்றதில்லை. மனமுருகி உன்னை இசைப்பாடல்களால் துதித்ததில்லைஇருந்தாலும், இந்தப் பாவியின் உள்ளத்தில் புகுந்து என் கண்ணைவிட்டு நீ அகன்றதில்லை. இது எப்படி? கங்கைகொண்ட சோழேச்வரத்தில் இருக்கும் ஈசனே?

சுருதிவா னவனாம் திருநெடு மாலாம்

சுந்தர விசும்பின்இந் திரனாம்

பருதிவா னவனாம் படர்சடை முக்கண்

பகவனாம் அகஉயிர்க்கு அமுதாம்

எருதுவா கனனாம் எயில்கள் மூன்று எரித்த

ஏறுசே வகனுமாம் பின்னும்

கருதுவார் கருதும் உருவமாம் கங்கை

கொண்டசோ ளேச்சரத் தானே.

பொருள்: கங்கைகொண்ட சோழீச்வரத்தில் இருக்கும் ஈசனே, வேதங்களால் போற்றப்படுபவனும் இலக்குமி தேவியின் மணாளனுமாகிய திருமாலும் நீயே. அழகிய வானுலகிற்குத் தலைவனான இந்திரனும் நீயே. ஒளிவீசும் சூரியனும் நீயே. விரித்துவிட்ட சடையையும் மூன்று கண்களையும் உடையவனும் நீயே. ஆன்மாக்களுக்கு உள்ளே அமுதம் போன்று இருப்பவனும் நீயே. ரிஷபத்தை வாகனமாகக் கொண்டவனும்திரிபுரத்தை எரித்த வீரனும் நீயே. மேலும் உன்மீது பக்தி கொண்ட பக்தர்கள் எந்த வடிவில் இறைவனை நினைக்கிறார்களோ, அந்த வடிவில் அவர்களுக்குக் காட்சி தருபவனும் நீயே. சிவனே எல்லாம் என்று இந்தப் பாசுரத்தில் அறுதியிட்டுச் சொல்கிறார்.

தத்தையங் கனையார் தங்கள்மேல் வைத்த

தயாவைநூ றாயிரங் கூறிட்டு

அத்திலங்கு ஒருகூறு உன்கண்வைத் தவருக்கு

அமருலகு அளிக்கும்நின் பெருமை

பித்தனென்று ஒருகால் பேசுவ ரேனும்

பிழைத்தவை பொறுத்தருள் செய்யும்

கைத்தலம் அடியேன் சென்னிவைத்த கங்கை

கொண்டசோ ளேச்சரத் தானே

பொருள்: கங்கைகொண்ட சோழீச்வரத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானேகிளி போன்ற மகளிர் மீது வைத்த அன்பினை, நூறாயிரம் கூறுகளாகச் செய்து, அதில் ஒரு கூறு அளவினதாகிய அன்பை உன்பால் வைத்தவருக்கு, தேவர்கள் வாழும் உலகையே பரிசாக அளிக்கும் அளவுக்கு உன்னுடைய பெருமை அளவிடற்கரியது. உன்னைப் பித்தன் என்று ஒருவர் பேசினாலும், அவருடைய பிழையைப் பொறுத்து அருள் செய்யும் பெருந்தன்மை கொண்டவன் நீ. அத்தகைய கருணை கொண்ட நீ, உன்னுடைய கையை அடியனாகிய என் தலை மீது வைத்தாய். அந்த அளவு கருணை கொண்டவன் கங்கைகொண்ட சோழீச்வரத்தில் தரிசனம் தரும் சிவபெருமான்.

கருவூர்த் தேவர், எந்த அளவு மனமுருகி திருவிசைப்பா பாடியிருக்கிறார் என்பதை ஒரு சில பாசுரங்களை வைத்தே அறிந்துகொள்ள முடிகிறது. எனக்கு திருவிசைப்பா பாசுரங்களையும் அதன் அர்த்தத்தையும் எழுதும் ஆசை வந்துவிட்டது. ஆனால் உங்களுக்குப் படிக்க விருப்பம் இருக்குமா என்பதில்தான் சந்தேகம்.

பக்திப் பாசுரங்களைப் படித்து, அதன் பொருளையும் அறிந்துகொண்டால், நம் மனதில் தானாகவே பக்தி பெருகும். அர்த்தம் தெரியாமல் பாசுரங்களைப் பாடினாலும் நமக்குப் பலன் கிடைக்கும், ஆனால் அர்த்தத்துடன் பாடும்போது நம் மனது இறை பக்தியில் ஒன்றிவிடும்சிவபெருமான் க்ருபை வேண்டும், வேறென்ன வேண்டும் எம்.கே.தியாகராஜ பாகவதரின் பாடலைக் கேட்டிருக்கிறீர்களா?  (ஸ்ரீராம் அந்த மாதிரி பாடல்களை வெளியிடுவதில்லை என்பதையும் கவனித்திருக்கிறீர்களா? கேட்டால் அது எங்கள் தாத்தா காலத்தது என்று சொல்லிவிடுவாரோ? )

இன்றைக்கு சரித்திரத்திற்குப் பதிலாக திரு இசைப்பா பாசுரங்களில் ஓரிரண்டின் பொருளை எழுதியது என் மனதுக்கு நிறைவாக இருந்ததுஉங்களுக்கும் இது வித்தியாசமான ஞாயிறாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன். இனி கங்கை கொண்ட சோழீச்வரத்தில் எடுத்த படங்கள்.

அபிஷேகத் தீர்த்தம் விழும் இடம். அந்த அமைப்பே கலைநயத்துடன் அமைந்திருக்கிறது.

 

 

 

 

படிக்கும் விதத்தில் அமைந்த கல்வெட்டுகளில் ஒரு சிலவற்றை இந்தப் பதிவுகளில் (கங்கைகொண்ட சோழபுரம்) நான் பகிர்ந்துவருகிறேன். எப்போதும் ஒரு கோவிலில் நான் அதிட்டாங்னகளிலோ  வேறு இடங்களிலோ கல்வெட்டுகள் இருப்பதைப் பார்த்தால் அது புராதானமான கோவில் என்ற எண்ணம் வரும். துரதிருஷ்டவசமாக, பல கோவில்களில் அத்தகைய கல்வெட்டுகள் காணப்படுவதில்லை. காரணம் அந்தக் கோவில் புராதானமானது இல்லை என்று அர்த்தமில்லை. கற்களை தங்கள் உபயோகத்துக்கு மக்கள் எடுத்துச் சென்றிருக்கலாம், அல்லது சீர் படுத்தும்போது அத்தகைய கற்களின் முக்கியத்துவத்தை அறியாமல் விட்டிருக்கலாம், அதனைச் சிதைத்திருக்கலாம்.

கங்கைகொண்ட சோழபுரத்தைப் பற்றிப் படித்தபோது, அது ஒரு காலத்தில் சோழப் பேரரசின் தலைநகராகவும் இருந்திருந்த போதிலும், 1290க்குப் பிறகு சிதைவுறலாயிற்று. அதிலும் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் படையெடுப்பிற்குப் பிறகு பலவும் சிதிலமடைந்தன. கோயிலை அவன் தொடாத போதிலும் (அதற்கு சிறிது கைங்கர்யங்களும் செய்திருக்கிறான்) கோவில் மதிள்கள் போன்றவை காலத்தால் சிதைவுற ஆரம்பித்தன. அரண்மனை முழுவதுமாக தரைமட்டமாக்கப்பட்டது. பிறகு வந்த நூற்றாண்டுகளில் மக்கள் சிதைந்த கற்களை தங்கள் சொந்த உபயோகத்திற்கு எடுத்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டார். மக்கள் மாத்திரம் இதனைச் செய்யக்கூடாதே. அதனால் ஆங்கிலேயர் அரசும், அணை கட்டும் வேலைகளுக்கு, யார் கற்களைத் தேடுவது என்று நினைத்து கோயில் கற்களை எடுத்து உபயோகப்படுத்திவிட்டனர் (ஆதாரங்கள் உண்டு). அதனால் நிறைய கல்வெட்டுகள் காணாமல் போய்விட்டன. கங்கைகொண்ட சோழபுரம், தஞ்சை பெரிய கோயிலை மாதிரியாக வைத்துக் கட்டப்பட்டதால், இங்கும் இரண்டு மதிள்கள் இருந்திருக்கவேண்டும்.

அரண்மனைக்கும் கோயிலுக்கும் சில மீட்டர் இடைவெளிதான் இருந்ததாம். அதற்கு இடையில் அகழி. என்னுடைய அனுமானம் சரியாக இருந்தால், கர்பக்கிரஹத்துக்கு முன் உள்ள நடு மண்டபத்தில் அரசரும், அமைச்சர் பெருமக்களும் முக்கிய அதிகாரிகளுமே நுழைவது போல இருந்திருக்கும். பொதுமக்கள் அதற்கு முன்னால் இருந்த நீண்ட செவ்வக மண்டபத்திலிருந்து தரிசித்திருப்பார்கள். அதனால்தான் கதவில் இரண்டு துளை, மூங்கில் தடுப்பு வைப்பதற்காக அமைத்துள்ளன்ர என்று தோன்றியது.

 

 

சிறிய கற்களிலும் அழகிய சிற்பங்கள் செதுக்கியுள்ளனர். படம் பெரியதாகத் தெரிந்தாலும் மற்ற படங்களைப் பார்க்கும்போது இது எவ்வளவு சிறிய கல் என்பது தெரியும்.

 

 

 

 

ஒரு சில தென்னை மரங்கள் பின்னணியில் இருக்க, கோயில் எவ்வளவு அழகாகத் தோற்றம் அளிக்கிறது.

 

 

 

 


 

 

 

 

தஞ்சைப் பெரியகோயில், கங்கைகொண்ட சோழீச்வரம் மற்றும் தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் ஆகிய மூன்று கோயில்களையும் எத்தனை முறை பார்த்தாலும் அலுப்பதில்லை. அங்கிருக்கும் சிற்பங்கள், கட்டிடத்தின் அமைப்பு என்று எல்லாவற்றையும் எனக்கு பதிவுகளில் பகிர்ந்துவிடவேண்டும் என்ற ஆசைஇன்னும் ஓரிரண்டு வாரங்களில் கங்கைகொண்ட சோழபுரம் பகுதி நிறைவுபெற்றுவிடும். அடுத்த வாரம் தொடர்வோம்.

(தொடரும்) 

37 கருத்துகள்:

  1. கருவூர்த் தேவர் //

    இக்குறிப்பு எங்கேயோ வாசித்தேனா, கேட்டேனா என்று நிழலாக நினைவாடுகிறது!

    பாசுரம் (முதலாவது) அதுதான் இறை பற்றிய தத்துவத்தில் மெயின் பொருளே. நல்ல பொருள் பொதிந்த பாசுரம். எளிய பாசுரம் ஆனால் கனமான பொருள் பொதிந்த ஒன்று. வாசிக்கும் போதே புரிகிறது. மனதுள் இருக்க.....

    கீதா


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா ரங்கன். எனக்கு திருவிசைப்பாவில்்பல பதிகங்கள் மிகவும் பிடித்திருந்தது. பக்தி மனதை ஆக்கிரமிக்கும்போதுதான் இப்படிப்பட்ட பாடல்களை இயற்றுவதே சாத்தியப்படும்.

      நீக்கு
  2. அருமையான பொருள் கொண்ட பாசுரங்கள், நெல்லை. முதல் முறை அறிகிறேன். நன்றி நெல்லை.

    எல்லாமே ஒன்றே. அதைப் பிரித்துப் பார்க்காமல் ஆழ்ந்து ஈடுபட்டால் பேதங்கள் தோன்றாது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்றைக்கோ எழுதிய பகுதி. இன்றைக்குப் படிக்கும்போது, நேற்றும் பாசுர விளக்கம், இன்றுமா? எனத் தோன்றியது.

      நீக்கு
  3. (ஸ்ரீராம் அந்த மாதிரி பாடல்களை வெளியிடுவதில்லை என்பதையும் கவனித்திருக்கிறீர்களா? கேட்டால் அது எங்கள் தாத்தா காலத்தது என்று சொல்லிவிடுவாரோ?//

    உங்களுக்கு வயசாயிடுச்சுங்க நெல்லை!!!! ஹாஹாஹாஹா....

    பொன்மேனி பாடல் கேட்டாலும், மனம் சலனப்படாது என்று ஸ்ரீராம்.....!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வயசாயிடுச்சுன்னு சொல்லிடக் கூடாதுன்னு, எடையைக் குறைக்கிறேன். இருந்தாலும் இப்படிச் சொல்றாங்களே

      நீக்கு
  4. நல்லாருக்கு நெல்லை, புதுசா பாசுரங்கள் தெரிந்து கொண்டது. இந்த ஞாயிறு!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் இன்று மீண்டும் படித்து நினைவுபடுத்திக்கொண்டேன்.

      நீக்கு
  5. படங்கள் வழக்கம் போல் சூப்பர், நெல்லை.

    சில படங்களை ஒட்ட வைக்காமல் தனியாகத் தந்திருக்கலாமோ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனித் தனியாக்க் கொடுக்க ஆரம்பித்தால் பதிவுகள் அதிகமாகிடும் என்ற எண்ணம்தான்.

      நீக்கு
  6. கற்களை தங்கள் உபயோகத்துக்கு மக்கள் எடுத்துச் சென்றிருக்கலாம், அல்லது சீர் படுத்தும்போது அத்தகைய கற்களின் முக்கியத்துவத்தை அறியாமல் விட்டிருக்கலாம், அதனைச் சிதைத்திருக்கலாம்.//

    அதே தான் நெல்லை.

    அல்லது, எப்படி சில வரலாற்றில் எழுதப்பட்டவற்றில் இடைச்செருகல்கள் இருக்கிறதோ அப்படிச் சில கல்வெட்டுகளை நீக்கியும் இருப்பாங்களோ என்றும் தோன்றும் எனக்கு. ஆட்சி மாறும் போது நடக்குமே அப்படி!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கல்வெட்டுகளை நீக்குவதைவிட, அதனைத் தங்கள் உபயோகத்துக்குக் கொண்டுபோயிருப்பார்கள். காஞ்சீபுரத்தில் பல இடங்களை அகழ்வாய்வு செய்தால் பல சிலைகள் செப்பேடுகள் ஆதாரங்கள் கிட்டும். காரணம் இந்தியாவில் அது புகழ் பெற்றிருந்த நகரம்.

      நீக்கு
    2. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், கீழணை (அணைக்கரை) பாலம் கட்டுவதற்காக கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலின் மதில் சுவர்கள் மற்றும் மண்டபக் கற்கள் பிரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டன. 19-ஆம் நூற்றாண்டில் (தோராயமாக 1836-ல்) திருவிடைமருதூர் - கும்பகோணம் சாலையில் உள்ள கீழணையை வலுப்படுத்த, அருகில் இருந்த இக்கோயிலின் கருங்கற்கள் சிதைக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டன.

      கோயிலின் வெளிப்புற மதில் சுவர் மற்றும் இரண்டடுக்கு மண்டபக் கற்கள் இதற்காகப் பயன்படுத்தப்பட்டன.//

      இதை என் பழைய கங்கை கொண்ட சோழபுர பதிவில் பகிர்ந்து இருப்பேன்.

      நீக்கு
    3. பதிவிலும்்குறிப்பிட்டிருக்கிறேன் கோமதி அரசு மேடம். கலைச் செல்வங்களை எடுக்க எப்படித்தான் துணிந்தார்களோ. ஆங்கிலேயர்கள், தேம்ஸ் ந்தியில் வெள்ளம் வந்தது என்று பக்கிங்காம் அரண்மனையை இடிக்காமல் இருந்தால் சரிதான்.

      நீக்கு
  7. உங்க அனுமானம்...யெஸ் இருக்கக் கூடும்.

    பத்மநாபபுரம் அரண்மனைக்கும், திருவனந்தபுரம் அரண்மனைக்கும் அடியில் ஒரு பாதை உண்டு தப்பித்துச் செல்வதற்கு என்று வாசித்ததுண்டு. அப்படி அமைக்கப்பட்டிருக்கலாம் பாதுகாப்பும் கருதி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுபோல காஞ்சீபுரம் வைகுண்டநாதர் கோயிலிலும் சுரங்கப் பாதை இருந்தது. ஏற்காடு சென்றிருந்தபோதும் ஒன்றைக் கண்டிருக்கிறேன்.

      நீக்கு
  8. யாளியில் வீரர், கேடயம் வாள்/அல்லது ஏதோ ஒன்று அப்படியானது...எல்லாமே ரொம்ப அழகா செதுக்கியிருக்காங்க.

    //ஒரு சில தென்னை மரங்கள் பின்னணியில் இருக்க, கோயில் எவ்வளவு அழகாகத் தோற்றம் அளிக்கிறது//

    அதே எனக்கு இப்படியான படங்கள் ரொம்பப் பிடிக்கும்!

    அலுக்காத சிற்பங்கள். அமைப்புகள். எல்லாமே ரசித்தேன் நெல்லை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிற்பங்கள் அலுக்கவில்லை என்பதில் மகிழ்ச்சி

      நீக்கு
  9. கருவூர்த்தேவரின் எளிய, பக்திபூர்வமான பாசுரம். அழகான படங்கள். சிறப்பான பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானுமதி வெங்கடேஸ்வரன் மேடம். நன்றி.

      நீக்கு
  10. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  11. கருவூர்த் தேவர், எந்த அளவு மனமுருகி திருவிசைப்பா பாடியிருக்கிறார் என்பதை ஒரு சில பாசுரங்களை வைத்தே அறிந்துகொள்ள முடிகிறது. எனக்கு திருவிசைப்பா பாசுரங்களையும் அதன் அர்த்தத்தையும் எழுதும் ஆசை வந்துவிட்டது. ஆனால் உங்களுக்குப் படிக்க விருப்பம் இருக்குமா என்பதில்தான் சந்தேகம்.//

    கருவூர்தேவர் மனமுருகி பாடிய பாடல்களும் பாடல் விளக்கமும் அருமை.
    எப்போதும் இறைவன் நினைவில் இருப்பவர் இசை பாடல்களால் துதிக்கவில்லை என்று சொல்லி கொண்டே திருவிசைப்பா பாடி இருக்கிறார். தஞ்சையில் அவர் சன்னதி முன் தியானத்தில் இருந்து வருவேன். மன அமைதியும் , நிம்மதியும் கிடைக்கும் இடம். பலரும் கண் மூடி அமர்ந்து இருப்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். கருவூர்தேவருக்கான சிறிய கோயிலை நானும் பலமுறை தரிசித்திருக்கிறேன். அவர் பெருமை பாசுரங்களைப் படிக்கப் படிக்கப் புரிந்தது.

      நீக்கு
  12. பதில்கள்
    1. சரணம் சண்முகா... துரை செல்வராஜு சார்.. நேற்று ஒருவர் பகிர்ந்தருந்தார்... பழனி முருகன் ஆண்டிக் கோலத்தில்.. பஞ்சாமிருதக் கான்டிராக்ட் எடுத்திருப்பவரின் மகள் தலையிலிருந்து கால் வரை முழுமையான தங்க நகைகளோடு.

      நீக்கு
  13. ‘//சிவபெருமான் க்ருபை வேண்டும், வேறென்ன வேண்டும்’ எம்.கே.தியாகராஜ பாகவதரின் பாடலைக் கேட்டிருக்கிறீர்களா//

    பல முறை கேட்டு இருக்கிறேன். எனக்கும் இந்த பாடல் பிடிக்கும்

    ? (ஸ்ரீராம் அந்த மாதிரி பாடல்களை வெளியிடுவதில்லை என்பதையும் கவனித்திருக்கிறீர்களா? கேட்டால் அது எங்கள் தாத்தா காலத்தது என்று சொல்லிவிடுவாரோ? )//

    பழைய பாடல்களையும் விரும்பி கேட்பார் தான் ஸ்ரீராம்.
    நேயர் விருப்பமாய் கேட்டு விடுவோம் , அவர் கண்டிப்பாய் பகிர்ந்து விடுவார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ற்கு எம் கேடி அவர்களின் பல பாடல்களும் மிகவும் பிடிக்கும். பெண்ணின் நலுங்கில் அவர் பாடலைத்தான் பாடினேன், கண்டிப்பா ஏதேனும் பாடணும் என்று சொன்னதால்.

      நீக்கு
  14. திரு இசைப்பா பதிகங்களும் திருக்கோயில் படங்களுமாக மீண்டும் சுற்றுலா சென்ற அனுபவம்....

    அருமை.. அருமை...
    மகிழ்ச்சி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி துரை செல்வராஜ் சார்... நம் பக்தி இலக்கியங்களை பாடப் புத்தகத்தில் அதிக அளவு சேர்க்காத்து ஆட்சியாளர்களின் குறை.

      நீக்கு
  15. கங்கைகொண்ட சோழபுரம் படங்கள் எல்லாம் மிக அருமை.
    கல்வெட்டு படிக்க முடிகிறது. நிறைய படங்கள் எடுத்து இருக்கிறீர்கள் ஒன்று விடாமல்.

    //அதனால் ஆங்கிலேயர் அரசும், அணை கட்டும் வேலைகளுக்கு, யார் கற்களைத் தேடுவது என்று நினைத்து கோயில் கற்களை எடுத்து உபயோகப்படுத்திவிட்டனர் (ஆதாரங்கள் உண்டு). அதனால் நிறைய கல்வெட்டுகள் காணாமல் போய்விட்டன. கங்கைகொண்ட சோழபுரம், தஞ்சை பெரிய கோயிலை மாதிரியாக வைத்துக் கட்டப்பட்டதால், இங்கும் இரண்டு மதிள்கள் இருந்திருக்கவேண்டும்.//

    இதை படிக்காமல் கீதாவின் பின்னூட்டத்திற்கு நீங்கள் கொடுத்த பதிலில் பதில் அளித்து விட்டேன்.

    நிறைய பேர் வீட்டு உபயோகத்திற்கு எடுத்து போய் இருப்பார்கள். கிடைத்தவைகளே இவ்வளவு கதைகள் சொல்கிறது. அவை எல்லாம் இருந்து இருந்தால் மேலும் விவரம் அறிந்து கொண்டு இருக்கலாம்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரண்மனை, அதைச் சுற்றியுள்ள பகுதிகள் எல்லாமே தனியார் வசம் சென்றுவிட்டது. எப்படி கோயில் சொத்துகளுக்கு தனியார் உரிமை கொண்டாட முடிந்தது என்பதே ஆச்சர்யம்.

      நீக்கு
  16. //ஒரு சில தென்னை மரங்கள் பின்னணியில் இருக்க, கோயில் எவ்வளவு அழகாகத் தோற்றம் அளிக்கிறது.//

    எனக்கும் இப்படி தென்னைமர பின்னணியில் படங்கள் எடுக்க பிடிக்கும் பார்க்க அழகாய் இருக்கும்.

    பத்துப் பன்னிரண்டு - தென்னைமரம்
    பக்கத்திலே வேணும் - நல்ல
    முத்துச் சுடர்போலே - நிலாவொளி
    முன்பு வரவேணும்,

    பாரதியாரும் தென்னைமரங்களையும், கீற்றுக்கு இடையே தெரியும் நிலாவெளியை ரசித்து இருக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். இருந்தாலும் நம் காணி நிலத்தில் இருந்துதான் அவற்றை ரசிக்க முடியும் இல்லையா?

      நீக்கு
  17. /// பக்தி இலக்கியங்களை பாடப் புத்தகத்தில் அதிக அளவு சேர்க்காத்து ஆட்சியாளர்களின் குறை..///

    அதே.. அதே...

    பதிலளிநீக்கு
  18. பக்தி இலக்கியங்களை பாடப் புத்தகத்தில் நீக்கியது
    அந்நியர்களின் சதி...

    பதிலளிநீக்கு
  19. நெல்லை, என் தமிழ் ஆசிரியை பெயர் சொல்லி நேத்து கொடுத்திருந்த கருத்து - அது டைப்போ. ஆசிரியை பெயர் சங்கரவடிவு! நான் அடிக்கும் போது வடிவேலு என்று வந்துவிட்டது.

    அங்க சொல்ல நினைத்து கரன்ட் போய் போய் வந்ததால் விட்டுப் போச் அதன இங்கு

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!