கேள்வி பதில்கள்:
நெல்லைத்தமிழன் :
1. கிரிக்கெட் மாதிரியான குழு விளையாட்டில் அணித் தலைவரின் பங்கு என்ன? சூர்யகுமார் யாதவின் கேப்டன்சினாலத்தான் உலகக் கோப்பை நமக்குக் கிடைத்தது என்று ரிக்கி பாண்டிங் போன்றவர்கள் சொல்கிறார்களே, அணித் தலைவர் ரன் அடிப்பதோ, விக்கெட் எடுப்பதோ தேவையில்லையா?
# ஆடும் வரிசை, யார் எப்போது பௌல் செய்ய வேண்டும் , எப்படியான ரிஸ்க் யார் எப்போது எடுக்க வேண்டும் இதெல்லாம் காப்டனின் பொறுப்பு. இத்தோடு ரன்/விக்கெட் எடுத்தால் போனஸ்.
2. முத்தையா முரளீதரன், தன்னுடைய முதல் கிரிக்கெட் சீரீஸுக்கு 2000 ரூபாய்தான் கொடுத்தார்கள், தான் கொஞ்சம் கிரிக்கெட்டில் சம்பாதித்தாலும் தன் சொந்தத் தொழிலில்தான் சம்பாதித்தேன் என்று சொல்லியிருக்கிறார். ஐ.பி.எல் வந்த பிறகுதான் கிரிக்கெட் விளையாடுபவர்கள் நல்லா சம்பாதிக்கிறாங்க என்கிறார். நம் நாட்டில் கிரிக்கெட் விளையாட்டை, பணம் கிடைக்காவிட்டாலும் நன்கு விளையாடி பிரபலப்படுத்திய பழைய கிரிக்கெட் வீரர்களுக்கு பி.சி.சி.ஐ நிறைய பணம் தர வேண்டாமா?
# கிரிக்கெட் வாரியம் வீரர்களை நன்றாகவே பார்த்துக் கொள்கிறது என்று தெரிகிறது.
3. கிரிக்கெட் முழு மேட்சை உட்கார்ந்து பார்த்து நாளைக் கடத்துவதற்குப் பதிலாக அப்போ அப்போ இல்லை நாள் முடிவில் மேட்ச் ஸ்டேடஸ் பார்த்தால் மாத்திரம் போதாதா? மக்களின் உழைப்பு மணி நேரம் வீணாகிறது இல்லையா?
# இதெல்லாம் பார்ப்பவர் ஆர்வம் சார்ந்த விஷயம்.
4. மற்ற விளையாட்டுகளில் இருப்பதுபோல, இருபாலாரும் சேர்ந்து விளையாடுவதுபோல, கிரிக்கெட் அணி அமையும் என்று தோன்றுகிறதா?
# வராது, எனினும் நாளை வருவதை யார் அறிவார் ?
5. கிரிக்கெட் மேட்சை ஸ்டேடியத்தில் பார்ப்பதற்குப் பதிலாக (யார் விளையாடறா, என்ன பால் வந்தது, ஏன் ரன் அவுட் ஆனாங்க என்று ஒன்றையுமே சரியாகப் பார்க்க, புரிந்துகொள்ள இயலாது) வீட்டில் ஹாயாக பெரிய ஸ்க்ரீனில் பார்ப்பது சிறந்தது என்று தோன்றுகிறதா?
# மிகவும் சரி.
பானுமதி வெங்கடேஸ்வரன்:
தேர்த்திருவிழா, தெப்பத்திருவிழா என்றெல்லாம் கேள்விப் பட்டிருக்கிறேன். இப்போது புத்தகத் திருவிழா, தேர்தல் திருவிழா, உணவுத் திருவிழா என்றெல்லாம் சொல்கிறார்களே? நீங்கள் பங்கு கொள்ள விரும்பும் திருவிழா எது?
# மக்கள் கவனத்தைக் கவர எல்லாமே வேண்டித்தான் இருக்கின்றன.
புத்தக விழா எனக்குப் பிடிக்கும். உணவு விழா (தட்டில் விழமாட்டாவா?) பரிச்சயம் இல்லை. ஆர்வமும் இல்லை.
புத்தகம் படிப்பது கூட இப்போது குறைந்து வருகிறது.
ஒருவர் கடுமையாக உழைக்கும் பொழுது அசுர உழைப்பு என்கிறோம், ஏன் தேவ உழைப்பு என்று செல்வதில்லை?
# தேவர்கள் உல்லாசிகள். சொகுசுப் பேர்வழிகள். கடின உழைப்பாளிகளல்ல.
இராட்சசர்கள் கடின உழைப்பாளிகள். இரவு கண் அயராதவர்கள். வலிமையானவர்கள்.
40 வயதில் 19 வயது மோகனாம்பாளாக நடித்த பத்மினி, நந்தினியாக நடித்த ஐஸ்வர்யா பச்சன் - யாரை ரசிப்பது கஷ்டமாக இருந்தது?
# எனக்கு இரண்டுமே கஷ்டமாகத்தான் இருந்தது. மோகனாவாக பத்மா சுப்ரமணியம் தோன்றியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.அவர் MGR வற்புறுத்தியும் கூட சினிமாவுக்கு வருவதை விரும்பவில்லை. சிவாஜி பத்மினி இருவருமே ஓவர் ஆக்டிங் செய்பவர்கள். என் மன உருவை அவர்கள் சிதைத்ததாக உணர்ந்தேன்.
அதை விடப் பன்மடங்கு ஏமாற்றம் நம்ம மெழுகு பொம்மை ஜஸ்வர்யா ராய். நந்தினியின் இடத்தில் ஒரு உயிரில்லாத பொம்மையாக வந்து போனார்.
தாய்கிழவியாக ஊர்வசி நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?
# நான் படம் பார்க்கவில்லை. எனினும் அந்தப் பாத்திரம் பற்றிய என் கற்பனைக்கு வடிவுக்கரசி பொருந்துவார். ஊர்வசி சமர்த்துப் போக்கிரி வேஷத்துக்கு ஏற்ற நபர்.
& படத்தின் பெயரைப் பார்த்து என் மனதிலும் வடிவுக்கரசிதான் வந்து போனார். இந்தக் கேள்வியைப் படித்தபின் கூகிள் செய்து பார்த்துதான் தாய் கிழவி படம் பற்றிய விவரங்களை தெரிந்துகொண்டேன். படத்தின் பெயரே கவரவில்லை ; இந்தப் படத்தைப் பார்த்து ரசிக்க முடியுமா என்ற யோசனை. சரி பா வெ மேடம் கேள்வி கேட்டிருக்கிறார்கள் என்றால் ஏதோ நல்ல படமாக இருக்கும் என்று நினைத்து விவரங்கள் பார்த்தேன்!
இப்போது திரை உலகில் பிரபலமாக உள்ள 60+ வயது நடிகைகள் என்று பார்த்தால் வடிவுக்கரசி & ராதிகா இருவர்தான். ஊர்வசிக்கு வயது இன்னும் 57 முடியவில்லை.
அதனால் தாய் கிழவியாக நடிக்க கிழக்கே போன (கிழ)ரயிலைப் போட்டுவிட்டார்கள் போலிருக்கு!
ஒரு முறை பிலிப்பைன்ஸ் சென்றிருந்தபோது, அங்கு பாக்சஞ்சன் நீர்வீழ்ச்சி என்று ஒரு இடத்திற்குச் சென்றிருந்தேன். அது நெடிய தொலைவில் ஒரு கிராமத்துக்குச் சென்று, அங்கிருந்து UpStream என்று சொல்லப்படும் ஆற்றின் மேற்புறமாக சிறிய படகில் பயணித்துச் சென்றடையவேண்டிய இடம். இந்தப் படகு என்பது மிகக் குறுகலானது, தண்ணீர் மட்டத்திலிருந்து அரை அடி உயரமே இருக்கும். எப்படித்தான் தைரியமாக இந்த மாதிரி இடங்களுக்குச் சென்றேன் என்று இப்போது நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கு. அப்போ நீச்சலும் தெரியாது. நீர்வீழ்ச்சியை நோக்கிய பயணம் என்பதால், சில இடங்களில் பாறைகள் மிகுதியாக இருக்கும். படகிலிருந்து இறங்கி பாறைகளில் நடக்கணும், நம் படகை ஓட்டுபவர், படகைத் தள்ளிக்கொண்டு வருவார். ஆனால் இருபுறமும் மலை. ஆறு பள்ளத்தாக்கில் வருவதுபோல இருக்கும். இரண்டு புறங்களிலும் நான் விதவிதமான சிறிய பறவைகள் வண்ணத்துப் பூச்சிகளைப் பார்த்தேன். உலகில் எங்குமே கண்டிராத நிறங்களில்.
அங்கெல்லாம் காலநிலை அடிக்கடி மாறும். ஒருவேளை மழை பெய்து சட் என்று நீர்வீழ்ச்சியில் நீர் அதிகமாகி வெள்ளம் வந்தால்? அவ்ளோதான். அப்போ அதையெல்லாம் யோசிக்கவில்லை. இப்போ படங்களை ஆற அமர பார்க்கும்போது இதையெல்லாம் யோசிக்கத் தோணுது
சென்ற வழியெல்லாம் ஆங்காங்கே சிறிய சிறிய நீர்வீழ்ச்சிகள் இருபுறமும் (மலைதான் இரண்டு புறங்களிலும் என்று சொல்லியிருந்தேன் அல்லவா?)
ஒரு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு நீர்வீழ்ச்சிப் பகுதிக்கு வந்து சேர்ந்தேன். அங்கிருந்து 100 மீட்டர்களுக்கு இந்த மாதிரி ராஃப்ட் எனப்படும் மூங்கிலினால் செய்யப்பட்ட மிதவையில் சென்று நீர்வீழ்ச்சியில் குளித்தேன் (ரொம்பத்தான் தைரியம்). இறைவன் அருளால் ஒன்றும் நிகழவில்லை. பத்திரமாக வந்து சேர்ந்தேன். ஆனால் நீர்வீழ்ச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் சூப்பர்.


கௌதமன் சாருக்கு வாரம் முழுவதும் நேரம் இல்லையா? அவ்வளவு பயணங்களா?
பதிலளிநீக்குஉதவியாளர் வோட்டுப் போட சொந்த ஊர் சென்றதால் லாப்டாப்
நீக்குஇல்லாத வேறு இடத்தில் தஞ்சம் புகுந்தேன்.
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பிரார்த்தனைக்கு நன்றி
நீக்கு//மற்ற விளையாட்டுகளில் இருப்பதுபோல, இருபாலாரும் சேர்ந்து விளையாடுவதுபோல, கிரிக்கெட் அணி அமையும் என்று தோன்றுகிறதா?// என்ன கேள்வி இது? இப்போது மட்டும் தனித் தனியாகவா விளையாடுகிறார்கள்?
பதிலளிநீக்குMixed doubles டென்னிஸ்ல கேள்விப்பட்டிருக்கீங்களா? நீங்க பார்த்தருக்கும் Mixed crcket விளையாட்டை நாங்கள் பார்த்ததில்லை பா வெ மேடம்.
நீக்கு:))))
நீக்குதி.மோ.வில் பத்மினியை மோகனாம்பாளாக ஏற்றுக் கொள்வது கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. சிவாஜி ஒரு நாதஸ்வர வித்வானை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருந்தார் என்றுதான் தோன்றியது. நான் தி.மோ. கதையை படிக்காததால் எந்த வித மன பிம்பமும் இல்லை.
பதிலளிநீக்குநந்தினி ஏமாற்றம், அதை விட பெரிய ஏமாற்றம் பூங்குழலி, வானமாதேவி.
/நந்தினி ஏமாற்றம், அதை விட பெரிய ஏமாற்றம் பூங்குழலி, வானமாதேவி./
நீக்கு100% கரெக்ட். நந்தினி பாத்திரத்தை ஐஸ்வர்யா சொதப்பியதை விட பூங்குழலி, வானதி பாத்திரங்கள் 100 மடங்கு சொதப்பினார்கள். ஓரளவுக்கு திரிஷாவுக்கு பாஸ் மார்க் போட்டு விடலாம்.
வைத்தி மற்றும் வடிவாம்பாள் பாத்திரங்கள் சிறப்பாகவே வந்திருந்தன. அவ்வளவு பெரிய நாவலை மூன்று மணி நேரப் படமாக ஏபிஎன் சுருக்கியது ஒரு சாதனைதான்.
ஆம். உண்மைதான்
நீக்கு//பா வெ மேடம் கேள்வி கேட்டிருக்கிறார்கள் என்றால் ஏதோ நல்ல படமாக இருக்கும் என்று நினைத்து விவரங்கள் பார்த்தேன்! // அட! இது வேறயா? நன்றி.
பதிலளிநீக்குஊர்வசி நன்றாகத்தான் நடித்திருப்பார், ஆனால் என்ன இருந்தாலும் நேடிவிடி கிடைக்காது. வடிவுக்கரசி இது போல நிறைய செய்திருக்கிறார், ஸ்டீரியோ டைப்பாக ஆகி விடும்.
நெல்லையின் தைரியத்தை ஏற்கனவே வியந்திருக்கிறேன். படங்கள் அழகு!
பதிலளிநீக்குஅசட்டு தைரியமோ? இறைவன் அருளால் இது வரை தப்பியிருக்கிறேன்.
நீக்குநீடூழி வாழ்க!
நீக்குதைரியமாக ஒரு படகுப் பயணம் - சிறப்பு. வாழ்த்துகள். இப்படிச் சில விஷயங்கள், அந்த விஷயத்தினைச் செய்யும் போது நமக்கு அதில் இருக்கும் ஆபத்து தெரிவதில்லை. பின்னொரு சமயம் யோசித்தால் அதிக ரிஸ்கான விஷயத்தினை செய்திருக்கவும் தேவையா என்று தோன்றும்.
பதிலளிநீக்குநாள் முழுவதும் அமர்ந்து கிரிக்கெட் - அது ஒரு காலம்! அப்படிப் பார்த்ததுண்டு. இப்போதெல்லாம் அடுத்த நாள் காலையில் மேம்போக்காக யார் ஜெயித்தார்கள் என்று மட்டும் பார்த்துவிட்டு நகர்ந்து விடுகிறேன்.
நான் லைவ் மேட்ச் பார்ப்பதில்லை. டென்ஷன் அதிகமாகிறது என்பதால். நாம ஆசைப்படறவங்க நல்லா விளையாட மாட்டாங்க, சொதப்புவாங்க.
நீக்குசூர்ய வன்ஸி இதுவரை ஏமாற்றவில்லை
நீக்கு//ஆடும் வரிசை, யார் எப்போது பௌல் செய்ய வேண்டும் , எப்படியான ரிஸ்க் யார் எப்போது எடுக்க வேண்டும் இதெல்லாம் காப்டனின் பொறுப்பு. இத்தோடு ரன்/விக்கெட் எடுத்தால் போனஸ்.//
பதிலளிநீக்குஇது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஐ.பி.எல்-ல் முடிவுகள் எடுப்பது கோச் உள்பட, அந்த உரிமையாளரும் கூட என்கிறார்கள்!
அப்படியா!
நீக்கு//கிரிக்கெட் மேட்சை ஸ்டேடியத்தில் பார்ப்பதற்குப் பதிலாக (யார் விளையாடறா, என்ன பால் வந்தது, ஏன் ரன் அவுட் ஆனாங்க என்று ஒன்றையுமே சரியாகப் பார்க்க, புரிந்துகொள்ள இயலாது) வீட்டில் ஹாயாக பெரிய ஸ்க்ரீனில் பார்ப்பது சிறந்தது என்று தோன்றுகிறதா?//
பதிலளிநீக்குதெளிவிற்கும் ரசனைக்கும் வீட்டில் பெரிய ஸ்க்ரீனில் கிரிக்கெட் பார்ப்பது தான் சிறந்தது. ஆனால் ஸ்டேடியத்தில் உணர்வுப்பூர்வமான கிரிக்கெட் ஆர்ப்பரிக்கும். எப்போதாவது ஸ்டேடியத்தில் அமர்ந்து ரசிக்கலாம். ஸ்னாக்ஸ் சாப்பிடுவது, அடுத்தவரின் ரசனையோடு மோதுவது, இதோடு கொஞ்சம் கிரிக்கெட்டும் ரசிக்கலாம். உலாளாவிய கிரிக்கெட் என்றால் ஸ்டேடியம் சென்று ரசிப்பது நன்றாயிருக்கும்.
ஆம். சரிதான்!
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குசரணம் முருகா
நீக்குவாழ்க.. வளர்க..
பதிலளிநீக்குநன்றி
நீக்குநான் பங்கு கொள்ள விரும்புவது தேர்த்திருவிழா புத்தகத்திருவிழா.
பதிலளிநீக்குகீதா
கருத்துரைக்கு நன்றி
நீக்குதேர்த்திருவிழா முன்னெல்லாம் மதுரையில் நிறையப் பார்த்தாச்சு. ஆனால் கல்யாணம் ஆகி வந்தப்புறமா இதெல்லாமே ரொம்பவே குறைஞ்சு எதுவுமே இல்லாமலும் போயிடுச்சேனு வருத்தமா இருக்கும். ஸ்ரீரங்கத்தில் தை மாதத்திலிருந்து தேர் நடைபெற்றாலும் உடல்நிலை காரணமாகப் போக முடிந்தது இல்லை. ஒரே ஒரு வருஷம் போனோம். கூட்டம் தாங்க முடியாமல் உள்ளே மாட்டிப்பேன் போல் இருந்ததால் நம்மவர் என்னை இழுத்துட்டு வந்துட்டார். :(
நீக்குபானுக்கா, தாய்க்கிழவியாக, ஆசிரியர்கள் சொன்னது போல் வடிவுக்கரசி செமையா பொளந்து கட்டியிருப்பார். நான் படம் பார்க்கவில்லை. இருந்தாலும் என் மனதில் வடிவுக்கரசி.
பதிலளிநீக்குகீதா
அதே அதே
நீக்குநெல்லை - உங்க முதல் படம் விவரம் கற்பனையைத் தட்டிவிட்டது நீங்கள் விவரித்திருக்கும் காட்சிகள் அப்படியே மனசுல ஓடி....ஆஹா
பதிலளிநீக்குகீதா
அ சா நன்றி
நீக்குரெண்டாவது படம் பார்க்கறப்ப, ஹ....போட் ஒன்னும் ரொம்ப சின்னதா இல்லை கேட்டேளா தண்ணியும் ரொம்ப இருக்காப்ல தெரியலை!!!!!!
பதிலளிநீக்குகீதா
:)))
நீக்குபாறைப்பகுதி படத்துலதான் தண்ணீரின் போக்கு பார்க்கறப்ப வேகமாக ஓடுதுன்னு தெரிகிறது ஆனா ரொம்ப ஆழம் இருக்காப்ல இல்லையே
பதிலளிநீக்குகீதா
கட்டமரம் படகு!! அதான் இப்ப பார்க்கறப்ப பயம் தோன்றியிருக்கு. கோவளத்தில் நானும் கட்டமரப் படகில் போயிருக்கிறேன் கடலில். ஹையோ செம அனுபவம். பயம் அறியா சின்னக் குழந்தை நான்!!!!!!!!!!!!!!!
பதிலளிநீக்குகீதா
ஆஹா
நீக்குraft super. படங்கள் எல்லாம் செமையா இருக்கு நெல்லை. இப்படிப் படம் எல்லாம் போட்டு எனக்குக் கொதியாகுன்னு கேட்டோ!
பதிலளிநீக்குகீதா
மீதி எல்லாருமே சாதாரண ட்ரெஸ்ஸில் கேஷுவலா இருக்காங்க. நெல்லை மட்டும் ஏதோ போர்க்களத்துக்குப் போறாப்ல ஹெல்மட்டு, லைஃப் ஜாக்கெட் எல்லாம் போட்டுக்கிட்டு நிக்கிறாரே 😃
பதிலளிநீக்கு:)))
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய கேள்வி பதில்கள் அனைத்தும் எப்போதும் போல் அருமை. தாய்க்கிழவி படம் நான் இன்னமும் பார்க்கவில்லை. குழந்தைகள் பார்த்து நன்றாக உள்ளதென கூறினார்கள். நானும் நேரம் கிடைக்கையில் பார்க்க வேண்டும் என நினைத்துள்ளேன்
நெல்லை சகோதரரின் படமும் பதிவும் நன்றாக உள்ளது . எந்த செயலையும் துணிந்து செயலாற்றுவது நெ. த. சகோதரருக்கு மிகப் பிடித்தமானது என்பதை அறிவோமே..! அவர் பகிர்ந்த படங்களையும் ரசித்தேன். இயற்கை சூழ இருக்கும் அருவி பிரதேசம் இந்த வெய்யிலுக்கு பார்க்கவே இதமாக உள்ளது. நெல்லை சென்றால் அங்கு அருகிலிருக்கும் அருவிகளை கண்டு வரலாம். பார்க்கலாம். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கருத்துரைக்கு நன்றி
நீக்குஎன்னோட கேள்விகள், அதற்கான பதில்கள் ஏன் இடம் பெறவில்லை. போனவாரம் கருத்தில் கூடச் சொல்லி இருந்தேன். மறுபடி கேள்விகள் அனுப்பி இருப்பதாக. நேற்றோ முந்தாநாளோ அதை ஃபார்வர்ட் கூடப் பண்ணினேன். ஆனாலும் வரலை. ஏன்? ஏன்? ஏன்?
பதிலளிநீக்குமெயில் ?? எதுவும் கண்ணில் படவில்லை. பார்க்கிறேன்.
நீக்குகேள்விகளை இப்போது பார்த்தேன். ஏப்ரல் 22 முதல்
நீக்குஏப்ரல் 27 வரை வேறு இடத்தில் முகாம் - அதனால் அந்தக் கேள்விகளை
பார்க்கவில்லை. இப்போ பார்த்துவிட்டேன். அடுத்த வாரம் பதில் அளிக்கிறோம்.
கேள்வி பதில்கள் கண்டோம். தாய் கிழவி படம் பார்த்துவிட்டேன் . ராதிகாவின் நடிப்பு சுமார். வடிகவுக்கரசியாக இருந்தால் சூப்பர்தான்.
பதிலளிநீக்கு.நந்தினி பாத்திரம் சொதப்பல்தான். இளவயதில் அழகுக்காக வந்துபோனவர்கள் இனிமேல் கேள்விக்குறிதான்?
நெல்லையின் பிலிப்பைன் படகுச் சவாரி படங்கள் நன்றாக இருக்கின்றன.
கருத்துரைக்கு நன்றி
நீக்குசிவாஜி பத்மினி இருவருமே ஓவர் ஆக்டிங் செய்பவர்கள். என் மன உருவை அவர்கள் சிதைத்ததாக உணர்ந்தேன்.
பதிலளிநீக்குஹையா, ஜாலி, ஜாலி, நான் நினைச்சதை, நினைப்பதையே சொன்னதுக்குக் கன்னாபின்னாவென நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஐஸ்வர்யா நடிச்ச படம் எதுவும் பார்த்ததில்லைனு நினைக்கிறேன். ம்ம்ம்ம்ம்ம்ம்? தேவதாஸ்? பார்த்தேனோ நினைவில் இல்லை. ஆனாலும் அவருக்கு என்னதான் பரதநாட்டியம் தெரியும்னாலும் முகத்தில் பாவமே வரதில்லை. பொம்மை மாதிரி நிற்கிறார். நல்லவேளையாகப் பொன்னியின் செல்வன் எல்லாம் பார்த்து மனதைக் கெடுத்துக்கலை. தொலைக்காட்சியில் வந்தப்போக் கூடத் தொலைக்காட்சிப் பெட்டி வேலை செய்யலை. அப்புறமா அதையும் கொடுத்தாச்சு.
தாய்க்கிழவி படம் பத்தி முன்னரே அவ்வளவாக நல்ல அபிப்பிராயம் இல்லை. பா.வெ. விமரிசனத்தை முகநூலிலோ, மத்யமரிலோ பார்த்துட்டு நல்லவேளை தப்பிச்சோம்னு தான் நினைச்சேன். வடிவுக்கரசியை விட சாந்தி வில்லியம்ஸ் இன்னும் நன்றாகப் பொருந்துவார் என பானுமதியின் விமரிசனம் மூலம் யோசனை வருது. ஏனெனில் வட்டிக்காரராக வராராம் ராதிகா. அதில் கடுமை காட்டுகிறாராம். அதுக்கெல்லாம் சாந்தி வில்லியம்ஸ் பொருந்தறாப்போல் வேறே யாரானும் பொருந்துவாங்களா சந்தேகமே! வடிவுக்கரசி எல்லாம் அப்புறமாத் தான்.
பதிலளிநீக்குபுத்தகத் திருவிழானு எல்லாம் போனதில்லை. சென்னையில் முன்னெல்லாம் வருடா வருடம் ஆன்மிகக் கண்காட்சி நடைபெறும். அதில் புத்தக விற்பனையும் உண்டு. அதுக்குப் போறப்போப் புத்தகங்கள் வாங்கி இருக்கேன். மற்றபடி உணவுத் திருவிழானு எதுக்கும் நம் நாட்டில் இருக்கையில் போகலை. ஒரு தரம் அம்பேரிக்கா போனப்போ ஹூஸ்டனில் எங்க பேத்தியின் பள்ளியில் ஜனவரி 26 குடியரசு தினத்தைக் கொண்டாட இந்திய உணவு வகைகளை அறிமுகம் செய்து ஒரு கண்காட்சி நடத்தினார்கள். அதிலே எங்க பேத்தியின் சார்பில் எங்க பெண் காஃபி இந்திய முறைத்தயாரிப்பு, தேநீர் மற்றும் சில பாரம்பரிய உணவுகளைச் செய்து வைத்தார். அவருடன் அவருடைய சில தோழிகளும் சேர்ந்து இதில் பங்கு பெற்றார்கள். வேறே ஏதும் பார்த்ததில்லை.
பதிலளிநீக்குமாமாவுக்குக் கிரிக்கெட்டில் ஆர்வம் இருந்தாலும் அவர் நண்பர்கள் அலுவலகத்துக்கு லீவ் போட்டுட்டு முன்னெல்லாம் வானொலியில் வரும் வர்ணனையைக் கேட்பார்கள். குழந்தைகளுக்கும் நிறையவே ஆர்வம் உண்டு. ஆனால் பள்ளிப்பாடங்களுக்கே முன்னுரிமை என்பதால் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு இருந்தாலும் உட்கார மாட்டார்கள். நாங்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பார்த்த ஒரே கிரிக்கெட் போட்டி கபில் தேவ் காப்டனாக இருந்தப்போ உலகக்கோப்பை வாங்கியது தான். அதன் பின்னரும் அவ்வப்போது பார்த்தாலும் முழுக்க முழுக்க உட்கார்ந்து பார்ப்பதில்லை. பெண் இப்போக்கிரிக்கெட்டே பார்ப்பதில்லை. பையர் மாட்ச் முடிந்ததும் வரும் தொகுப்பைப் பார்க்கிறார். அந்த அளவில் குறைந்திருக்கிறது இப்போதெல்லாம்.
பதிலளிநீக்குஎல்லாம் வல்ல இறை அருள் தொடர்ந்து உங்களைக் காப்பாற்றட்டும் நெல்லை. படங்கள் எல்லாம் அருமை. எல்லோருக்கும் கிடைக்காத ஒன்று உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. அது வாய்ப்பு. அதை நீங்கள் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்கிறீர்கள். என்றென்றும் இறை அருள் உங்களைக் காப்பாற்றட்டும்.
பதிலளிநீக்கு