5.6.26

மனமே மௌனமா?

 
சென்ற வருடம் மே மாதம் எங்களுக்கும் ஒரு அதிர்ச்சிகரமான மாதமாக அமைந்தது.  திடீரென தன் வீட்டில் மயங்கி விழுந்தார் சம்பந்தி.  சர்க்கரைக்கு குறைபாடு என்று கண்டறியப்பட்டு அதற்கான மருத்துவம் பார்க்கப்பட்டு வீடு வந்தார்கள்.  இரண்டொரு நாளில் பேசியத்தையே பேச ஆரம்பித்தார்.  மாற்றி மாற்றி பேசினார்.  ஓரியன்டேஷன் குறைந்தது.  மறுபடி  செக்கப்.  மருத்துவம்.  இந்தமுறை தன்னிச்சையாக இருந்த இடத்திலேயே இயற்கை உபாதையை கழித்தார்.  செக்கப் தொடர்ந்தபோது தெரிந்தது அரக்க நோய் உள்வ(ளர்)ந்திருப்பது. அதுவும் நான்காவது ஸ்டேஜ்.

அவரிடம் சொல்லாமல் சென்னை அழைத்து வந்து மருத்துவம் தொடங்கியது.  அதிலிருந்த நிறைய உள்ளார்ந்த பிரச்னைகளை எழுதப் போவதில்லை. ஒரு ஸ்டேஜில் அவர் தனக்கு இன்னது என்று அறிந்து கொண்டார். காப்பீட்டுக் குளறுபடிகள்.  அது சம்பந்தமாக பேச்சு வந்தபோது எங்களுக்கு TVS ன் காப்பீட்டுத் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது.  நாங்கள் எல்லோருமே பயத்திலும், முன்னெச்சரிக்கையிலும் காப்பீடு செய்யப்புகுந்தோம். அப்போது தெரிந்துகொண்ட சில விஷயங்கள் பற்றி இங்கே..

எந்த ஒரு காப்பீடும் 65 வயதுக்குள் தொடங்கப் படவேண்டும்.  ஆரம்பிக்கும்போது இருக்கும் எந்த வியாதிக்கும் கூலிங் பீரியட் என்று சொல்லப்படும் முதல் மூன்று வருடத்தில் சிகிச்சைச்சலுகை எதிர்பார்க்க முடியாது.  எதிர்பாராமல் புதிதாக வரும் வியாதிகளுக்குதான் விபத்துகளுக்குதான் முதல் மூன்று வருடங்களில் பார்க்க முடியும்.  இதற்காக ஏற்கனவே உங்களுக்கு என்னென்ன வியாதி அதாவது ரத்த அழுத்தம், கொழுப்பு, சர்க்கரை என்று என்னென்ன வியாதிகள் இருக்கிறதென்று பாட்டியாலா கேட்பார்கள்.  அதற்கு என்னென்ன மாத்திரை சாப்பிடுகிறீர்கள், என்ன மருத்துவம் செய்து கொள்கிறீர்கள் என்று கேட்பார்கள்.  அதையெல்லாம் நிரப்ப வேண்டும்.

வேறு ஏதாவது காப்பீட்டுத் திட்டத்தில் இருந்தால் அதைக் குறிப்பிட வேண்டும்.  சமயங்களில் அதற்குத் தகுந்தாற்போல ஐந்து லட்சம், பத்து லட்சம் தாண்டி இந்தப் புதிய காப்பீட்டுத் திட்டம் தொடங்கும்.

முன்னதாக ஏதாவது வியாதி இருந்தால் முன்பெல்லாம் இந்த கண்டிஷன்களை சொல்லி விட்டு காப்பீட்டுக்கு ஒத்துக்கொள்வார்கள்.  ஆனால் இப்போதெல்லாம் அப்படி இல்லை,  ரத்தக்கொதிப்பு 2009 லிருந்து இருக்கிறது. மாத்திரை சாப்பிடுகிறேன், கட்டுக்குள் இருக்கிறது என்று சொன்னால் கூட நிராகரித்து விடுகிறார்கள்.  இது சம்பந்தமாக அந்த நிறுவன மருத்துவருடன் சண்டையே போட்டேன்.  அவர் கண்டு கொள்ளவே இல்லை.  இருக்கும் சிரமங்களுக்கு மருத்துவம் பார்ப்பது மிகவும் செலவு பிடிக்கும் விஷயமாக இருக்கும் இந்நாளில் காப்பீடு என்று சொல்லி அழைத்து விட்டு, எதுவும் உடல் பிரச்னை இருந்தால் காப்பீடு கிடையாது என்று சொல்வது என்ன நியாயம்?  ஒரு உடல் பிரச்னையும் இல்லாமல் நாம் அதில் பதிவு செய்து கொண்டு வருடத்துக்கு முப்பது முதல் அறுபதாயிரம் ரூபாய் வரை தண்டம் அழவேண்டும்.  திரும்பி வராது.  மக்களை எப்படி ஒரு பயத்திலேயே வைத்திருக்கிறார்கள் என்பது மட்டும் இல்லை, அந்த நாட்களில் ஒரு செலவும் இல்லாமல் ஒவ்வொருவரிடமிருந்தும் அவர்கள் வரவு வைக்கும் தொகை!  

நம்மை சேர்த்து விடுபவர் தற்போது எந்த உடல் உபாதையும் இல்லை என்று சொல்லச் சொல்கிறார்.  நமக்குதான் துணிவதில்லை.  எப்படியும் அது இல்லை என்றானது.  நான் ஏற்கனவே என் வங்கியுடன் இணைத்து ஒரு காப்பீட்டுத் திட்டத்தில் இருந்தேன்.  அது வருடா வருடம் ப்ரீமியம் அமவுண்ட் ஏறிக்கொண்டே இருந்தது.  அதை நான் அக்டோபரில் உபயோகித்த கதையை பின்னர் எழுதுகிறேன்.  அது ஒரு தனிக்கதை!

அப்புறம் ஸ்டார் ஹெல்த் நிறுவனத்துடன் ஒரு உபயோகமான திட்டத்தில் இருக்கிறேன்.  மகன்தான் ஆராய்ந்து போட்டு விட்டான்.  25 லட்சம் காப்பீட்டுத்தொகைக்கு இந்த வருடம் பிரீமியம் 17,000.  அடுத்தடுத்த வருடங்களில் ஏறலாம்.  இதில் என்ன ஒரு விசேஷம் என்றால் இந்த வருடம் ஏதோ ஒரு சிகிச்சைக்காக எனக்கு 15 லட்சம் செலவாகி விட்டது என்று வைத்துக் கொள்வோம்...   அடுத்த மாதமே அது மீண்டும் 25 லட்சம் ஆகிவிடும்.

ஆனால் எல்லோருக்கும் ஒன்று சொல்வேன்.  இன்றைய கார்பொரேட் மருத்துவ உலகில் சரியான காப்பீடு இல்லாமல் பிழைக்க முடியாது.  எல்லாமே வியாபாரமாகி விட்டது.  ஒரு ஸ்கேன் என்றாலே எக்கச்சக்கமாக சார்ஜ் செய்கிறார்கள்.  ஒவ்வொன்றுக்கும் ஏகப்பட்ட டெஸ்ட் எழுதித் தருகிறார்கள்.  அவ்வளவு முன்னேறிய மருத்துவ வசதி வந்திருக்கிறதுதான்.  நல்ல மெடிக்கல் பாலிசியாகப் பார்த்து ஒன்றாவது (!) போட்டு வைத்துக் கொள்வது நலம்.

===================================================================================

சாண்டில்யன் பக்கம்  :

என் கதைகளைப் பற்றி ஒரு புகார் உண்டு. எப்பொழுதும் சிருங்கார ரசத்தை அதிகமாக எழுதுகிறேனென்று சொல்லுகிறார்கள். உண்மையில் வால்மீகியும், காளிதாசனும், கம்பனும், ஷேக்ஸ்பியரும், கீட்ஸும் எழுதியதில் நூற்றில் ஒரு பங்குகூட என் கதைகளில் அந்த ரசம் கிடையாது. ஆனால், அந்த ரசத்தை எழுதும்போது அனுபவித்துப் படித்துவிட்டு, அது நன்றாயிருக்கிறது என்று ஒப்புக்கொண்டால், எங்கே தங்களைத் தவறாக எண்ணிவிடுவார்களோ என்ற பயத்தில், சிலர் 'சே! இது ரொம்ப அதிகம்' என்று கூறுகிறார்கள். சாதாரண மக்கள் இந்தப் பயத்தை வைத்துக்கொள்ளலாம். கதாசிரியன் வைத்துக் கொள்ள முடியாது. பயத்தில் கருத்து உருவாகாது. கதை விளையாது. விளைந்தாலும் ரசமாயிருக்காது. ஆதிசங்கரர்கூட தமது ராமகர்ணாமிருதத்தில் 'சிருங்காரம் க்ஷுதிநந்தினி விஹரனே' என்று, சிருங்கார ரசத்தைப் பிரதான ரசமாக வைத்தே சுலோகம் புனைந்திருக்கிறார்.

மனிதனுடைய அடிப்படை உணர்ச்சியைத் தொடுவதும் வாழ்க்கையின் சுவையை மிகுதியாக அளிப்பதுமான ஒரு ரசத்தைக் கண்டு பயப்பட வேண்டாம்.  ரசத்தை விரசமாக்கக் கூடாது.  ஆனால் சிருங்காரம் நல்ல நூலுக்குத் தேவை.  இது எல்லோரும் ஒப்புக்கொண்ட விஷயம். தவிர, இந்த ரசம் 'மன்னன் மகள்' புத்தகத்தில் நாலைந்து அத்தியாயங்களில்தான் வருகிறது. மற்ற சுமார் 65 அத்தியாயங்களில் தத்துவங்கள், அரசியல் தந்திரங்கள், போர் விவரங்கள் மண்டிக் கிடக்கின்றன.  ஆகவே, ஏதோ ஒரு குறிப்பிட்ட ரசத்தை அதிகமாக எழுதி விட்டதாக நினைக்க வேண்டாம். எல்லாம் அளவோடுதான் இருக்கிறது. கொஞ்சம் குறைவு என்பதுகூட என் நம்பிக்கை.

நான் படித்ததும் கோடை - அக்னி நட்சத்திரத்தில்.  அவரும் அதைப் பற்றி எழுதி இருக்கிறார் அவர் எழுதிய காலம் 1968.  அவர் சொல்லும் காலம் பதினோராம் நூற்றாண்டு!  அப்போது வெய்யில், வெப்பம் கோடை எப்படி இருந்தது பாருங்கள்..

- சித்திரைத் திங்கள் துவங்கி 15 நாட்களுக்கு மேலாகி விட்டதால் இரவு முழுவதும் மக்களை வாட்டி வதைத்த அந்தக் கோடை வெப்பம் கூட காலை வேளையில் அடியோடு நீங்கி சூடாமணி விகாரத்தின் சுற்றுப்புறம் பூராவிலும் இதமான சீதனன் நிலை நிலவில் உதவி புரிந்தது.

- இரவு முழுவதும் வெப்பத்தின் காரணமாக உறக்கம் பிடிக்காது இருந்த நாகப்பட்டினத்தை பொதுமக்கள் இன்பமான அந்த காலை நேரத்தை அனுபவிக்க எழுந்திருக்கவில்லையே தவிர சூடாமணி விகாரத்தின் விமானங்களில் இருந்த புறாக்களும் பிள்ளைகளும் எழுந்து சப்திக்க தொடங்கிவிட்டன.

=======================================================================================

மனமே மௌனமா?


என்னுடைய 
மௌனம் தொடர்கிறது
 
அப்போது 
அவர்கள் புண்படுவார்கள் 
என்பதால் மௌனம்
  
இப்போது 
நான் புண்பட்டு விடுவேன் 
என்பதால் மௌனம்
 
எல்லா நேரங்களிலும் 
எல்லாவற்றையும் 
பேச முடிவதில்லை
 
சில விஷயங்களை 
எப்போதுமே 
பேசமுடியாமல் போகிறது 

=========================================================================================

நான் டைரக்டரானேன்
கொத்தமங்கலம் சுப்பு


அப்போது சௌண்ட் ஸ்டி ஏ. காராயணன் இருந்தார். அவருக்குப் பணம் கேட்காமல் எழுத-உதவி புரிய ஆள் தேவை எனக்கு எழுத-தொண்டு புரிய இடம் தேவை. இந்த நிலையிலே எனக்கும் நாராயண னுக்கும் இடையே ஒரு அலாதி பிணைப்பு ஏற்பட்டதில் வியப்பில்லை. அதை ஒரு பாசம் என்றே சொல்வேன். புடங்களில் என் பாடல்களும் வசனமும் வரும். ஆனால் என் பெயர் வராது, எழுதுவது தான் எனக்கு அப்போது ஆசை, புகம் பெறும் ஆசையே இல்லை,
எனக்கு இரண்டாவது மணமாக ஏற்பாடாகியது. கையிலோ பண வில்லை, நாராயணனிடம் கேட்டேன். இருநூற்றைம்பது ரூபாய்ககு ஒரு செக் கொடுத்தார். மணத்தன்று முதல் நாள் பாங்கிக்குச் சென்ற போது செக்குக்குப் பணமில்லை என்று தெரிந்தது. எனக்கு ஒரே ஆத்திரம். மணமானதும் அந்தச் செக்கைப் படம் போட்டுமாட்டி விடத் தீர்மானித்தேன் அப்போது தானே அதைப் பலர் பார்த்து நாராயணனுககு அவமானம் ஏறபடும்?

மணமாகி விட்டது. அதற்கு நாராயணன் வரவில்லை. மறுதினம் காரில் வந்தார். காரில் ஏறச் சொன்னார். கோபத்தை அப்போதைக்கு வெளிக்குக் காட்டிக் கொள்ளாமல் ஏறி உட்கார்ந்தேன். நேரே ஐவுளிக் கடைக்கு அழைத்துச் சென்றார். சுமார் இருபது புடவைகளையும் ஒரு டஜன் வேஷ்டிகளையும் எடுத்துப் போடச் சொன்னார் தேவையானதை எடுத்துக் கொள்ளச் சொன்னார். வேண்டா வெறுப்புடன் சாதாரணமானதை எடுத்தேன். அவரே சுமார் இருநூறு ரூபாய் விலையுள்ள பட்டுப் புடவையையும் தொண்ணூறு ரூபாய் மதிப்புள்ள வேஷ்டி உத்தரியமும் எடுத்துக் கொடுத்தார். இருபது பூமாலைகள் வாங்கினார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. 'இரவு உன் மனைவி. உறவினர்களுடன் ஸ்டூடியோவுக்கு வா!  வணடி அனுப்பு கிறேன்' என்றார்.
இரவு வண்டி வந்தது. ஸ்டூடியோவுக்குச் சென்றேன் சுமார் அறுபது பேருக்குச் சாப்பாடு நடந்தது. எழுத்தாளர்கள் பத்திரிகையாளர்கள் மட்டும் நூற்றுக்கு மேற்பட்டவர் வந்திருந்தனர்

"சுப்பு ஒரு சிறந்த அறிஞர், எனக்குப் பலவிதத்திலும் உதவி புரிந்திருக்கிறார். இந்த விருந்து அவர் சார்பில் ஏற்பாடானதுதான்.  அவருடைய பிரதிநிதியாகத்தான் உங்களை யெல்லாம் அழைத்திருக்கிறேன்" என்றெல்லாம் என்னைப் பிரமாதமாகப் புகழந்து பேசினார் நாராயணன். எனக்கு உடம்பெல்லாம் புல்லரிக்தது அத்துடன் எனக்கும் என் குடும்பத்தினருக்கும் நான் தயாரித்த படங்களைப் போட்டுக் காட்டினார். இரவு நேரங்கழித்து வீடு திரும்பியதும் முதல் காரியமாக செக்கைக் கிழித்துப் போட்டுவிட்டேன். அதன் மூலம் கடமையைச் செய். பலனை எதிர்பார்க்காதே" என்பதை நான் தெரிந்து கொண்டேன்.

நாராயணனிடமிருந்து விலகியலும் மயூரா பிலிம்ஸாரின் 'அதிருஷ்டம்' படத்தில் நடிக்கச் சந்தர்ப்பம் கிடைத்தது. அசட்டுக் குடியானவனின் வேஷம் எனக்கு அதில் நடிக்க விருப்பமில்லை. ஆனால் பணம் வாங்கி விட்டதால் வேண்டா வெறுப்புடன் நடித்தேன். வி வி. சடகோபன். சூரியகுமாரி முதலியோர் அதில்டித்தனர்.

சன்மானம் வாங்கவில்லை... 

என் மனைவிக்கு ஸ்டூடியோ பார்க்க வேண்டுமென்று ஆசை கணவன் பெரிய முதலாளி என்று அவளுக்கு எண்ணம்.  ஒரு நாள் ஸ்டூடியோவில் நான் தேவயானி அணிய வேண்டிய பாவாடை தாவணி முதலிய வைகளைக் கையில் வைத்துக் கொண்டு நின்றிருந்தேன்.என் மனைவி வந்து என்னைப் பார்த்தாள், ஏளனமாகச் சிரித்தாள்.

"இந்த உத்தியோகதனா உங்க ளுக்கு? இதை வீட்டில் செய்யப் படாதோ?" என்று கேட்டுத் தோளில் இடித்துக் கொண்டாள்.

"இதுக்குத்தான் உளளை இங்கேயெல்லாம் வரக்கூடாதுன்னு சொன்னேன்."  கூறிவிட்டு உள்ளே சென்று விட்டேன்.

1939-ல் எனக்கு டைரக்டர் சுப்பிரமணியன் பரிச்சயமேற்பட்டது. எனக்கு காண்டிராக்டில் பேசி  நடிப்பதை விட ஸ்திரமாக மாதச் சம்பளத்தில் வேலை செய்யவே விருப்பம். சுப்ரமணியத்திடம் மாதச் சம்பளத்தில் ஏற்பாடு செய்து கொண்டு மதராஸ் யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ் கார்ப்பொரேஷனில் வேலைக்கமர்ந்தேன். அப்போது அதுதான் மிகப் பிரபல பெரிய படக்கமபெனி எனக்கு உழைப்பதற்கு நல்ல நிறைய வாய்ப்பு கிடைத்தது.  அங்கே பாவாடை சரிபார்ப்பது முதல் உதவி டைரக்க்ஷன் வரை எல்லாவற்றிலும் எனக்கு ஈடுபாடு இருந்தது.  கச்சதேவயானி, சூர்யபுந்திரி இரு படங்களிலும் நடித்தேன். மற்ற பொறுப்புக்களும் உண்டு. அய்யருக்கு என்னிடம் அன்பு அதிகம்  நனகு உழைத்தேன். பாராட்டப்பட் டேன். சூரியபுத்திரியில் கதை, வசனம், பாட்டு இவற்றுடன் இரு வேஷங்களில் நடிக்கவும் செய்தேன்.

இந்த இரண்டு படங்களுக்குப் பின் மதராஸ் யுளைடெட் ஆர்டிஸ்ட்ஸ் கார்ப்பொரேஷன் பல காரணங்களால் சரிவர நடைபெறவில்லை.  என் மனதில் ஒரே போராட்டம்.  இதன் இடையே ரேடியோவில் மாதத்தில் மூன்று நான்கு முறை பொறுப்பேற்று நிறைய செய்யவும். சினிமா மூலம் பாட்டுக்கு உழைக்கவும் எனக்கு ஆசை.  அதே சமயம் ஊருமான் மற்றும் பல பத்திரிகைகளில்  நிறைய கதை, கவிதைகள் எழுதிக் குவித்துக் கொண்டிருந்தேன். ஏராளமான. இலக்கிய நண்பர்களிருந்தனர். எப்படியும் சினிமாவில் பணிபுரியவே எனக்கு ஆசை அதிகமாயிருந்தது. சந்தர்ப்பமும் பெற்று வந்தேன் அதைத் தொடருவதா சினிமாவில் வேறெங்காவது பணிபுரிவதா என்று புரியாமல் திணறினேன்.   

நான் வேலை செய்த மோஷன் பிக்சர்ஸ் ஸ்டூடியோவையே ஸ்ரீ வாஸன் பெரும் விலைக்கு வாங்கி விட்ட தாக அறிந்தேன். நான் ஒரு இலக்கிய-சினிமா தொண்டன். சிரிக்காதே, அப்பாவி,  திருநீலகண்டர் முதலிய படங்களில் நடித்திருக்தேன். நிறைய எழுதிக் கொண்டிருந்தேன். பத்திரிகைகளிலும் நான் சன்மானம் வாங்கவில்லை. அதற்குப் புத்தகங்களாக வாங்கிக் கொண்டு விடுவேன். இந்த நிலையில் நான் வேலை செய்த ஸ்டூடியோவை ஸ்ரீ வாஸன் வாங்கி விட்டதால் அவரிடம் வேலை செய்ய விரும்பினேன்.

இந்த ஆசை   எனக்கு ஏற்பட்டவுடனே இரண்டு தினங்கள் சென்றதும் நான் ஸ்ரீ வாஸன் அவர்களிடம் சென்றேன்.  இதற்கிடை யே பல இடங்களிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. நான் ஏற்கவில்லை. ஸ்ரீ வாஸனிடம் பணிபுரிய விரும்பிற்று என் மனம்.  நேரில் கண்டேன். எல்லாவற்றுக்கும் ஒப்புக் கொண்டார். ஆனால் வேறு எங்கும் வேலை செய்யக் கூடாது' என்றார்.  ரேடியோவில மட்டும் பணிபுரிய அனுமதி கேட்டேன். மறுத்து விட்டார் அவர். நான் சனியன்று சென்றிருந்தேன். திங்களன்று கூறுவதாகச் சொல்லித் திரும்பினேன்.

அப்போது ஜி டி, சாஸ்திரி சென் ரேடியோ நிலைய டைரக்டராக இருந்தார் அவரிடம் விவரமாக எல்லாவற்றையும் சொன்னேன்.

வாஸன் ஒரு சிறந்த மனிதர். அவர் சேவையினால் சினிமா உலகம் பிரபலமும் கௌரவமும் அடையும். அவரை நீங்கள் விட்டு விடாதீர்கள்.வருஷத்தில் ஆறு புரோகிராமகளுக்கு மட்டும் அனுமதி கேளுங்கள்கா என்றார் சாஸ்திரி. தீர்க்கதரிசி அவர்!

திங்கள்  ஸ்ரீ வாஸனைச் சந்தித்தேன் விஷயத்தை விவரித்துக் கூறினேன்.

'ரேடியோ மூலம் அதிக வருமானம் கிடையாது. ஆனால் எழுதுவதற்கு அதன்மூலம் நிறைய வாய்ப்பு உண்டு.- என் தாயகம் என்பதை விளக்கினேன். ஆறு புரோகிராம் களுக்கு அனுமதி தந்தார். ஜெமினியில் வேலை ஏற்றேன்.  என் வாழ்வில் இரண்டாவது திருப்பம் அது. முக்கியத்துவம் நிறைந்ததும் கூட, ஸ்திரமற்ற நிலையிலே பட உலகிலும் இலக்கிய உலகிலுமாகத் திண்டாடிக கொண்டிருந்த எனக்கு இருவகையிலும் பணிபுரிய உதவியது ஜெமினி ஸ்தாபனம், ஸ்ரீ வாஸன் ஆறு புரோகிராம்களுக்கு அனுமதி தந்தார். ஆனால் கரியாகிப் பரியாகி காசெருமை தானுமாகி' என்று ஒளவை பாடியது போல, ஆறு நான்காகி, காது இரண்டாகி இப்போது நேரம் கிடைத்து ஒன்று நடப்பதே அபூர்வமாகி விட் டது! இதுவரை ரேடியோவுக்கென அறுநூறு பாடல்கள் இயற்றியிருக்கிறேன் சுமார் நூற்றிருபது நாடகங்கள் எழுதித் தயாரித்தேன். நிறைய பேசியிருக்கிறேன். இப்போதெல்லாம் வாய்ப்பும் ஓய்வும் கிடைப்பதில்லை.

கிழவியும் குழவியும் கைகூப்பி..

1941-ம் ஆண்டில் நான் ஜெமீனியில் சேரும்போதே ஸ்ரீ வாஸன் தன் லட்சியங்களைப் பற்றிச் சொன்னார். அதன்படி இதுவரை விடாது வருவதுதான் எனக்கு ஆச்சரியமாயிருக்கிறது பணமோ, மனிதர்களோ அவரது லட்சியத்தை மாற்றாதது ஆச்சர்யமே!

கதை, வசனம், பாட்டு, நடிப்பு. உதவி டைரகக்ஷன் இவ்வளவு பொறுப்புக்களுடனும் அங்கே நான் அமர்ந்தேன். மதன காம சாஜன் படம் தயாராக ஏற்பாடுகள் நடந்தன.  மைசூரிலுள்ள ஸ்ரீரங்கப் பட்டணத்திற்கு நாங்கள் சில காட்சி களைப் படம் பிடிப்பதற்காகச் சென் றோம். ஒரு இடத்தில் ஒரு மரத்தில் ஒருவன் இலை பறிப்பதாக ஒரு காட்சி, காமிரா தயாராக இருந்தது.  எல்லோரும் காட்சியைக் காமிரா மூலம் பார்ததோம். ரொம்பத்தரமாக அமைந்திருந்தது. காகிராமேன் பார்த்தார். எல்லாம் சரியாக இருக்கிறதென்றார்.

ஸ்ரீ வாஸன் வந்தார். அதே காமிரா மூலம பார்த்தார். 'இந்தக் காட்சி நன்றாக இருக்காது - இருக்க முடியாது என்று அழுத்தந்திருத்தமாகச் சொன்னார். எங்களுக்கு அவரிடம் வருத்தம்,  'இதைப்போய் நன்றாக இருக்க முடியாது என்கிறாரே' என்று அலக்ஷியமாகச் சிரித்தார்கள் அவர்கள், காட்சி படமாக்கப்பட்டது. போட்டுப் பார்த்தோம். சகிக்கவில்லை. பச்சை மரத்திற்குப் பின்னால் இன்னொரு பச்சை மரம் இருந்தால் அது எடுபடாது என்று ஸ்ரீ வாஸன் கூறியது சரியாகி வீட்டது. அந்த முதல் தடவை காமிரா பார்வை மூலமே பட உலகைப் பிடித்து விட் டார் எங்கள் தலைவார். பட உலகம் எப்படிப்பட்டது என்பதை அந்த முதல் பார்லையிலேயே தீர்மானம் செய்து விட்டார் அவர். அந்தக காட்சியை வெட்டி எடுத்து விட்டோம். காட்சி பிரமாதமாக இருந்தால் போதாது, கண்ணுக்கும் கருத்துக்கும் அழகாக அது படவேண்டும் என் பதைக் கண்டு கொண்டோம்.

ஒருகாள் மைசூரைச் சுற்றிப் பார்ககப் போய் வருவதற்கு அனுமதி கேட்டேன் சரி என்றர் ஸ்ரீவாஸன்,  சுமார் பத்தடி தூரக்தான் கடந்திருபபேன்.  அவர்
இங்கே வா' என்றார். திரும்பி வந்தேன்  'நாம் இங்கே வேலை செய்வதற்கு வந்திருக்கிறோம், வேடிக்கை பார்க்கப் போவதாகச் சொல்லுகிறாயே வேலையைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்தால் எவ்வளவு இன்பமாக இருக்கும் தெரியுமா?  வேடிக்கை பார்ப்பதற்கு, என்று கிளம்பினால்தான் அந்த வேடிக்கையை அனுபவிக்க முடியும். வேலை செய்யும் போது வேடிக்கை பார்க்கப் போனால் அதில் மனம் லயிக்காது, நீ போய் வா'  என்றார்.  அதன் பிறகு போவதற்கு எனக்கென்ன பைத்தியமா என்ன? மைசூரிலே நல்ல மழை: ஒரே குளிர், அருமையான சமையல்; சம்பிரமமான சாப்பாடு எல்லாம் பகு சுகந்தான், ஆனால் நாங்கள் நினைத்த காட்சி படமாக்க முடியவில்லை ஆகவே அங்கிருந்து நேராக பஸ்ஸில் கள்ளிக்கோட்டைக்குக் கிளமபினேன். நஞ்சன்கூடு வந்தது ஒரே வெய்யிலாக அங்கே. பஸ் ஒரு இடத்தில் நாஷ்டா' வுக்காக நின்றது. நான் இறங்கி காலாற நின்றேன் ஒரு மரத்தடியில் அங்கே ஒரு. குடிசை, வாசலில் ஒரு கிழவி இளநீர் விற்றுக்கொண்டிருந்தாள். ஒரு இளநீர் வாங்கிக் குடித்தேன். தேங்காய் வழுவலை ருசிபார்த்து விட்டு தலையிலே கட்டியிருந்த முண்டாசுத துணியை எடுத்து முகத்தையெல்லாம் துடைத்து விட்டுக் கொண்டேன்.

கிழவி என்னைக் கூர்ந்து கவனித்தாள். உட்பக்கம் திரும்பி கன்னடத் தில் ஏதோ சொன்னாள். ஒரு குழந்தை வெளியே ஓடி வந்து நின்றது. அவ்வளவுதான்  கைகூப்பிய வண்ணம் என்னை வலம்வர ஆரமபித்து விட்டனர். எவ்வளவு சொல்லியும் நிறுத்தவில்லை. வலம் வந்து முடிந்ததும் சாஷ்டாங்கமாக விழுந்து கமஸ்கரித்து எழுந்தனர். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அவர்களை என்னுடன் வந்த ஒரு நடிகர் விசாரித்தார்.  'சூர்யபுத்திரியில் சூரியனாக நான் நடித்ததற்காகத தான் இந்தக கலாட்டா என்று தெரிந்தது. எப்படியிருக்கிறது கதை? அப்போதுங் கூட படம் வேறு. இயற்கை நிகழ்ச்சிகள் வேறு என்று தெரியாத அப்பாவிகள் இருந்தனர். . ஞானசூனியனான என்னை ஒளி என்று தீர்மானித்து விட்ட கிழவி எவ்வளவு சொல்லியும்கூட இளநீருக்குப் பணம் பெற்றுக் கொள்ள மறுத்து விட்டாள். அன்று முதல் எனக்கு ஒரு ஆசை. சின்ன  பாத்திரத்தில் நடித்ததற்கு இவ்வளவு நல்ல பிரதி பலன் கிடைத்திருக்கிறதே. இனி நல்ல வேஷத்திலேயே நடிக்க வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டேன. ஆனால் என் தீர்மானம் என்னுடன்தான் நின்று கொண்டது.
மறு வருஷத்தில் அதாவது 1942-ல் நந்தனார்' படம் தயாரிக்க ஏற்பாடுகள் நடந்தன எனக்கு அதில் அலாதி தெம்பு ஏனெனில் நான் காரைக்குடியில் இரும்பு, மாக்கடை யில் முன்பு வேலை செய்திருந்தேனல்லவா? அப்போது பகவத் குணம் குத் வர்ஷணி சபை என்ற நாடக சபையை கவி குஞ்சர பாரதியின பேரர் மு. வெங்குசாமி அவர்கள் நடத்தி வந்தார்கள்.  தமிழிலும் கலையிலும் சிறந்த பாண்டித்தியம உடையவர் அவர். அவரிடம் எப்படியும் வேலை செய்ய எனக்கு ஆசை சம்பளமில்லா விட்டாலும்கூட எப்படியும் அதை நாடக சபையில் நடிக்கத் தீர்மானித்தேன் நான்  அதற்கு எத்தனையோ சிபார்சுகள பெற்று ஒருவிதமாகச் சந்தாப்பம் பெற்றேன். அந்தச் சபை 'நந்தனார்'வள்ளி' இரண்டே காடகங்களைத்தான் நடத்தியது அதற்குப் பிறகு பிரமாகமான புகழ், அகத நந்தனார் நாடகத்தில் பனிரெண்டு வேஷங்களில் நடிப்பேன் இருபத்தியொன்பது அப்ளாஸ்கள் விழும். எனக்கு இந்த நாடகத்திலே பிரமாத புகழ் கிடைத்தது. அனேகமாக நந்தனார் கதையும் பாடல்களும் எனகருத் தலைகீழ்ப் பாடம் ஒரு நாள் முப்பது அப்ளாஸ் விழுந்து விட்டது. அப்போதெல்லாம் அப்ளாஸ் யாருககுக கிடைக்கிறதோ அவர்தான திறமைசாவி என்று பொருள். 

எனக்கு அன்று கணக்கப்பிள்ளை வேஷம், ஸ்டேஜில் கணக்குப்பிள்ளை யின் மேஜைக்கடியில் நான் உட்கார்ந்திருந்தேன். எனது மாஜி முதலானி நூர்முகம்மது ராவுத்தர் சபையில் எதிரே உட்கார்ந்திருந்தார் என் சம்பந்தப்பட்ட காட்சி முடிந்து விட்டது. 'கிரின் ரூமுக்குள்ளே நின்று கொண்டிருந்தேன். ராவுததர் வத்தார். 

ஏய்யா மணி' எங்கிட்ட கணக்குப் குப் பிள்ளே வேலையை விட்டுட்டு வந்தியே. இங்கெள்ள வாழுதாம்?  கரகோஷம் சாதம் போடாதய்யா. என்னிடமே வந்து விடு' என்றார். பேசாமல் அவருடன் இளம்பினேன். 

===============================================================================================

சுவாரஸ்யம்.



========================================================================================

பாஹே பக்கம் :






==========================================================================

சுவாரஸ்யம். 2


======================================================================================================



கவிதைப்பக்கம்  :

வைரமுத்து 

இவரின் தனிக்கவிதைகள் சில இங்கு தந்திருந்தாலும் இவற்றைவிட திரைப்பாடல்களில் நிறைய வரிகள் ரசிக்க வைக்கும்.


சீப்பெடுத்து 
உன் கூந்தலைச் சீவி 
அலங்கரித்துக்கொண்டாய் 
அந்தச் சீப்போ 
உன் கூந்தலில் ஒரு முடி எடுத்து 
தன்னை அலங்கரித்துக்கொண்டது.


தனியே நீ முணுமுணுக்கும் 
இனிய பாடல்கள் 
இசைத்தட்டில் ஒலிக்கையில் 
இனிமை இழப்பதேன்? 


உனக்கு பிடித்த மண்வாசத்தில் 
நீயும் 
எனக்கு பிடித்த உன்வாசத்தில் 
நானும் 
ஒற்றை குடைக்குள்

======================================================================================

சுஜாதா...  

எந்த வருடத்தில் எழுதி இருப்பார்?  கல்கி ராஜேந்திரன் பெண் சீதா மேடத்துக்கு திருமணம் நடந்த ஆண்டு!  சுஜாதா வஸந்த்துடன் பேசுகிறார்!

கல்கி வீட்டுக் கல்யாணம்

கல்கி ராஜேந்திரன் புதல்வி சீதாவின் கல்யாண ரிசப்ஷனில் ஏவி.எம். புல்வெளி எழுத்தாளர்களால் நனைந்திருந்தது. சிறுகதைகள் நற்காலிகளை நிரப்ப தொடர்கதைகளும், மாத நாவல்களும் சந்தனப் பேலாவில் விரல்களை முக்கின. சந்ததிகளில் சந்திப்பில் வ.வே.சு. அய்யரிலிருந்து நாளைய மாலன் வரை பேசப்பட்டனர். மந்திரிகள் பளிச் வந்தார்கள். பளிச் சிரித்தார்கள். பளிச் சென்றார்கள்.

செம்மங்குடியைக் கடந்து மாடிப்பக்கத்து உணவு சாத்தியங்களை நோக்கி நகர்ந்தேன்.

"என்ன சார் ஆச்சு?''

"என்ன?"

"அதான் அந்த சிலை விவகாரம்."

''ஏன் சார் பசி வேளையிலே?" என்று சாவி அழைத்துச் செல்கிறார், மாடியில் குமுதம் பகாள பாத் ஸ்டேஜில் இருக்கிறது. கிருஷ்ணமூர்த்தி சமையலில் புதுசு புதுசாக அயிட்டங்கள் வருகின்றன. திசைகள், மயன், முத்தாரம்.

புல்வெளியில் சமுத்திரம். ராஜேந்திரகுமாரின் கைகளை உயர்த்தின நமஸ்காரம். அனந்தின் 'அப்பவே சாப்பிட்டாச்சே", ரா.கி.ரங்கராஜனின் “ராட்சசன்யா நீ!"

எனக்கு நாலாயிரம் ரூபாய் கட்டணம் என்று நெற்றியில் எழுதியிருக்கும் ஒருவர் என்னை அணுகி 'க்ளாட்டு மீட்யூ! நான் உங்க கதைகளைப் படிக்கிற தில்லை?"

"அப்ப எதுக்கு கிளாட்டு மீட்யூ!"

"என் ஒய்ஃப்தான் படிப்பா! அதோ அங்கே தெரியறா பாருங்கோ!"
அவர் காண்பித்த திசையில் 300 ஒய்ஃபுகள்.

அத்தனை எழுத்தாளர்களை ஒன்றுசேரச் சந்தித்த அந்தக் கணத்தில் என் S.F. கிளையில் ஒரு 'தாட்' நிரடுகிறது.

"திடுதிப்பென்று எல்லோரையும் இரான் பண்ணிக் கடத்திக் கொண்டு ஆயிரம் மைல் சென்று கண் காணாத ஒரு தண்ணியில்லாத ஸாரி பேப்பர், பேனா, போஸ்ட் ஆபீஸ் இல்லாத தீவில் பணயக் கைதிகளாக ஒரு வருஷம் வைத்து விட்டால் தமிழ்ப் பத்திரிகை உலகம் என்ன ஆகும்" என்று வஸந்தைக் கேட்டேன்.

''ஒண்ணும் ஆகாது, எல்லாப் பத்திரிகையும் ஜாம் ஜாம்னு நடக்கும். புதுசா இன்னும் ரெண்டு பத்திரிகை வரும்" என்றான்.

- குமுதம் - 

=========================================================================================

இன்று ஒரு தெலுங்குப் பாடல் கேளுங்களேன்..  இது எனக்கு பல வருடங்களாய் பிடித்த பாடல்.  SPB யே பாடி பல வெர்ஷன்கள் இருந்தபோதும் பல வருடங்களுக்குமுன் ஒரு தெலுங்கு வருடப்பிறப்பு நாளில் தொலைக்காட்சியில் - அது சன் டிவி கூட வராத காலம் - பன்மொழிப்பாடல் ஒளியும் ஒளியும் நிகழ்ச்சியில் பார்த்த, கேட்ட இந்தப் பாடல் மனதில் நின்று விட்டது.  மற்ற வெர்ஷன்களில் இந்தப் பாடலின் டெம்போ இருக்காது என்பதால்தான் 'பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணும்' என்று அலைந்தேன்.  ரொம்பநாள் கிடைக்கவில்லை, அல்லது கண்டுபிடிக்கத்தெரியவில்லை.  அப்புறம் ஒரு வழியாய் கண்டுபிடித்து எடுத்து விட்டேன்.  நடுவிலேயே ஒரு பென் டிரைவில் நங்கநல்லூர் கிரி ட்ரேடிங் ஏஜென்சியிலிருந்து MP 3 யாக காசு கொடுத்து சில ஸ்லோகங்களுடன் பதிவு செய்து கணினியில் காபி செய்து கொண்டேன்.  அப்போதே  மனப்பாடமாக பாடவும் செய்வேன்.

தமிழ்த் தாய் மாதிரி தெலுங்குத் தாய்.  நாயகன் யாரென்று தெரியாது.  நம்மூரு சுஹாசினி நாயகி.  இனிமையான பாடல்.  

129 கருத்துகள்:

  1. இன்ஷ்யூரன்ஸ் ப்ரீமியம்.... பலருக்கும் விஷயம் தெரிவதில்லை. எனக்கும்தான். இல்லையென்றால் எப்போதோ சுதாரித்துக்கொண்டிருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை..  எனக்கும் அப்படிதான்.  வீட்டில் நிகழ்ந்த ஒரு சம்பவமும் செலவும் கண் திறக்க வைத்தது.  அது 2019ல்.

      நீக்கு
    2. அப்போல்லாம் வியாழனில் நல்லா உறைக்கிற மாதிரி எழுதி மத்தவங்க கண்ணையும் திறந்திருக்கலாமே

      நீக்கு
    3. 2019 ல் நான் என் வங்கியுடன் இணைந்த ஹெல்த் இன்ஷியூரன்ஸ் எடுத்து விட்டேன்.  ஆனால் அது ஜுஜுபி என்று கடந்த இரண்டு வருடங்களாகத்தான் உறைத்தது.  அதிலும் கேன்சர், ஆர்த்தோ போன்ற சிகிச்சைகள் ஏராளமான பணம் பிடிப்பவை.  இப்போதைய காலகட்டத்தில் இதுதான் பணம் கம்மியாக ஆகிறது!  புதுசு புதுசாக மெஷின் கண்டு பிடிச்சு - நல்ல விஷயந்தான் - ஆனால் அதற்குரிய கட்டணம் வேண்டியிருக்கிறது.  சம்பந்தி விஷயத்தில் ஒரு மாத மாத்திரை செலவே 40,000 ரூபாய் சொச்சம்.

      நீக்கு
  2. அரக்க வியாதிக்கு நாலாவது ஸ்டேஜ் வரை வலிகூடத் தெரியாதா? எப்படி செக்கப் பண்ணுவது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதற்கு ஒரு சோதனை இருப்பதாக சமீபத்தில் அறிந்தேன்.  உடல் முழுவதும் எங்காவது பிரச்னை இருந்தால் சோதனை ஊசி மூலம் தெரிந்து கொள்ளலாம் என்றார்.  வீட்டில் அப்பா அம்மா தாத்தா என்று யாருக்காவது ஹிஸ்டரி இருந்தால் வருடத்துக்கொருமுறை அல்லது ஆறு மாதத்துக்கொருமுறை கூட சோதித்துப் பார்த்து விடலாம்.

      நீக்கு
  3. மா தெலுகு கானமும் காட்சியும்
    அருமை...


    இங்கே இதுமாதிரி செய்ய விடமாட்டார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாடலை ரசித்ததற்கு நன்றி செல்வாண்ணா 

      நீக்கு
    2. அப்பாட! ஒரு வழியா வந்துவிட்டது. கேட்டுட்டு இருக்கேன். உண்மையிலேயே நல்ல பாடல். பகிர்வுக்கு நன்றி.

      நீக்கு
    3. வாங்க கீதா அக்கா...   காட்சி இல்லாமல் பாடலை ரசித்தால் இன்னும் சுகம்.

      நீக்கு
  4. Health Insurance - இதில் நிறைய தகிடு தத்தங்கள் இருந்தாலும் நிச்சயம் தேவை. இக்கட்டான சமயங்களில் உதவும்.

    வைரமுத்து - தேவைதான் :) அவரது பல கவிதைகள் பல அடுத்தவர்கள் எழுதியது என்று சொல்வதுண்டு.

    தெலுகு பாடல் ரசித்தேன்.

    மற்ற பகுதிகளும் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வெங்கட்..   நிறையவே தகிடுதத்தம்.  ஆனாலும் அனைத்தையும் மீறி தேவையாகத்தான் இருக்கிறது!

      நீக்கு
  5. சிவன் கோயில் இருக்கும் ந்ந்தியால் மாவட்டத்து பனகனப்பள்ளிதான் பங்கனப்பள்ளி மாம்பழத்தின் பிறப்பிடமாக இருக்குமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​யாருக்குத் தெரியும்?!

      நீக்கு
    2. அருமையான கோயில். அதென்னமோ நம்மவருக்கு ஆந்திரா சுற்றுலா என்றாலே அலர்ஜி. முக்கியமாய் சாப்பாட்டு தான் காரணம். :( ஆந்திராவில் எங்கேயுமே போனதில்லை. சிகந்திராபாதில் இருக்கும்போது கூட அங்கே இருந்த ஸ்கந்தகிரி, மற்றும் ஒரு ஐயப்பன் கோயில், பிர்லா மந்திர் தான் போயிருக்கோம். :(

      நீக்கு
    3. ஆந்திராவில் இருக்கும் ஸ்ரீசைலம் உட்பட சில கோவில்கள் சாகசம் செய்துதான் பார்க்க ​வேண்டிய கோவிலாக இருக்கின்றன.

      நீக்கு
    4. //முக்கியமாய் சாப்பாட்டு தான் காரணம்// ஆந்திரா காரசாரமான சாப்பாடு நல்லா இருக்கும். ஆனால் அவங்க மதிய உணவுக்கு, காய் கறிகள் போடுவதில்லை. அது அவங்க வழக்கம் இல்லைனு நினைக்கிறேன்

      நீக்கு
    5. இங்கே சென்னையில் கூட ஆந்திரா மெஸ் இருக்கிறது.  அங்கு போடப்படும் காரம் 'காரமே இல்லை, காரமே இல்லை இன்னும் காரம் இருந்தால் ஓகே' என்றெல்லாம் சொல்லும் என்னாலேயே சாப்பிட முடியவில்லை.

      நீக்கு
    6. ஸ்ரீராம்.... ப்யூர் வெஜ் ஆந்திரா மெஸ் இருக்கிறதா (சைவம்+அசைவம் ஜல்லி வேண்டாம்). திநகர் அல்லது அதன் சுற்றுப்புறங்களில்?

      நீக்கு
    7. தி.நகர் பஸ் ஸ்டான்ட் அருகே மாட்லி ரோடிலோ அல்லது எதிரே உள்ள பர்கிட் ரோடிலோ ஆந்திரா மெஸ், ஆந்திரர்களின் சங்கம் முதலியன வெகு காலமாக இருக்கின்றன. அந்தப் பக்கமெல்லாம் போயே 20 வருஷங்கள் ஆவதால் இப்போ எப்படினு சொல்ல முடியலை. அதோடு எல்லா பாலாஜி பவன்களும் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் நடத்துவதே. பாண்டி பஜாரில் ஒரு ஆந்திர ஓட்டலே இருக்கு. அல்லது ஜி.என்.செட்டி ரோடிலா நினைவில் இல்லை. அங்கே எல்லாம் இப்போப் போவதே இல்லை.

      நீக்கு
    8. கீழத்திருப்பதி பீமவிலாஸில் (ஸ்டேஷன் அருகே உள்ளது) மதியச் சாப்பாட்டில் ஒரு கறி, ஒரு கூட்டு, சாலட், பச்சடி எல்லாம் தராங்க. காரமெல்லாம் மிதமாகத் தான் இருந்தது. அவங்க பண்ணி இருந்த பீன்ஸ் கறி மாமாவுக்குப் பிடிச்சுப் போய் வீட்டில் வந்து கூட அது போலப் பண்ணித் தரச் சொல்லுவார். பண்ணி இருக்கேன்.

      நீக்கு
    9. 1. பாண்டிபஜார் ஆந்திரா ஹோட்டல் வெஜ், நான் வெஜ். உஸ்மான் ரோடில் (அதாவது முன்பு சரவண பவன் இருந்த பகுதிக்கு எதிரே) ஆந்திரா மெஸ் 89ல் இருந்தது. நான் ஒரு முறை சாப்பிட்டிருக்கேன். பிறகு நான் வெஜ் மிக அதிகமாகிவிட்டது. ஆந்திரா வெஜ் உணவு கிடைப்பதில்லை. 2. பீம விலாஸ் - அங்க நிறைய தடவை சாப்பிட்டிருக்கேன். அதுல விசேஷம் என்னன்னா, மத்த ஹோட்டல்கள்ல, சட்னி போன்றவற்றைத்தான் நாம் எடுத்துக்கொள்ளும்படியாக நம் மேசையில் வைப்பார்கள். பீமவிலாஸில், சாம்பார், ரசம் நாம் எடுத்துக்கொள்ளும்படியாக பெரிய சைஸ் பாத்திரங்களில் வைப்பார்கள். நான் இதான் சாக்கு என்று சாம்பாரில் உள்ள காய்கறிகளை மாத்திரம் அதிகம் போட்டுக்குவேன். அவங்க ஒண்ணும் சொன்னதில்லை.

      நீக்கு
  6. கொத்தமங்கலம் சுப்பு.... ரசித்துப் படித்தேன். யாரும் சும்மா ஓவர்நைட்டில் ஒபாமா ஆகிவிடமுடியாதுதான். அவரது தன் வரலாறு இருக்கிறதா என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீளமாக ஷேர் செய்கிறோமே என்று கவலைப்பட்டேன்.

      நீக்கு
  7. சாண்டில்யன் வர்ணனைகள்லாம் ஓகே. ஆனால் அந்த வர்ணனைகளைப் படித்துவிட்டு லதா ஓவியத்தைக் கற்பனை செய்து அது நமக்குப் பிடிக்காமல் போகும் சாத்தியம் அதிகம்.

    கோடை என்றதும், 77ல் மதுரையில் ஒரு நாள் தங்கியபோமு, மாடியில் மாலையில் நீரை நிறையத் தெளித்ததும், அப்போதுதான் இரவு படுக்க முடியும் என்று சொன்னது நினைவில் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. லதா ஓவியங்களை இணைக்க முடியவில்லையே என்று எனக்கு வருத்தம்.  எனக்குப் பிடிக்கும்.  

      கோடை என்றால் அது ஒன்றுதான் நீங்கள் கஷ்டப்பட்ட அனுபவமா?  ஆ...

      நீக்கு
    2. மதுரையில் இது வழக்கமான ஒன்று. மாலை ஐந்து மணிக்கும் மேல் கிட்டத்தட்ட விளக்கேற்றும் நேரம் மொட்டை மாடியில் இப்படித் தண்ணீர் தெளிச்சுடுவோம். பின்னர் ஏழு மணிக்கு ஒரு தரம், எட்டு மணிக்கு ஒருதரம் தண்ணீர் தெளீச்சுட்டால் ராத்திரி மொட்டை மாடியிலேயே படுக்கை. இரண்டு மணிக்கு மேல் லேசாகக் குளிரும். எனக்கு ரொம்பப் பிடிச்ச விஷயம் மொட்டை மாடியில் படுப்பது தான். சின்ன வயசில் நிறையவே அனுபவிச்சாச்சு.

      நீக்கு
    3. அதென்ன ஸ்பெஷலாக மதுரையில்?  நாங்கள் சென்னையிலும் அப்படிதான் செய்தோம்.  மொட்டை மாடியில் படுத்ததில்லை.  பெரிய அரச மரத்தடி என்பதால் படுக்கத் தயக்கம்.

      நீக்கு
    4. அம்பத்தூரிலும் படுத்துப்போம். ஆனால் ஒரு தரம் அம்பத்தூரில் எங்க சித்தி(வேரே ஒரு சித்தி) சித்தி, சித்தப்பா குடும்பம் மாடியில் படுத்திருக்கையில் கீழே கதவை உடைத்துக் கொண்டு திருடன் வந்து எல்லாவற்றையும் தூக்கிக் கொண்டு போய்விட்டான். அதனால் பயமாக இருக்கும். பின்னர் நிறுத்திட்டோம். மதுரையில் எங்க வீட்டு மாடியில் இருந்து இடப்பக்கம், வலப்பக்கம் எல்லா வீடுகளுக்கும் தாண்டித் தாண்டிப் போகலாம் தெருக்கோடி வரை போய்விடலாம். புராதன சென்னையிலும் அப்படி இருந்திருக்கு என்பது சி.ஐ.டி சந்துருவின் மூலம் தெரிஞ்சுக்கலாம்.

      நீக்கு
    5. //மாடியில் படுத்திருக்கையில் கீழே கதவை உடைத்துக் கொண்டு திருடன் // கீசா மேடம் சொல்றதைப் பார்த்தால், மதுரையைவிட சென்னையில் மொட்டைமாடியில் படுத்தால் மிக ஆழ்ந்த தூக்கம் வரும் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கறாங்களே.. சொந்த ஊரை விட்டுக்கொடுத்துவிட்டார்களே...

      நீக்கு
    6. எல்லோருமே மாடிக்குப் போய்விடக் கூடாது.  யாராவது கீழேயும் இருக்க வேண்டும்.  நாங்கள் மொட்டை மாடியில் தண்ணீர் ஊற்றுவோம்.  இரவு அங்கேயே ஓடி ஓடி குளிப்போம்!  ஆனால் படுக்கை கீழே வீட்டில்தான்!

      நீக்கு
    7. @Nellai, Please read again. ஆனால் ஒரு தரம் அம்பத்தூரில் எங்க சித்தி( வேறே ஒரு சித்தி) சித்தி, சித்தப்பா குடும்பம் மாடியில் படுத்திருக்கையில் கீழே கதவை உடைத்துக் கொண்டு திருடன் வந்து எல்லாவற்றையும் தூக்கிக் கொண்டு போய்விட்டான்

      நீக்கு
    8. நல்லாத்தான் படிச்சேன் கீசா மேடம்... உங்க சித்தி சித்தப்பாவா இருந்தா என்ன? சென்னைலதானே ஒரு வீட்டுல மொட்டை மாடில படுத்திருந்தாங்க. அப்போ நல்லா தூக்கம் வந்ததனாலத்தானே திருடன் கீழ்த்தளத்துல ஆட்டையைப் போட்டது தெரியலை.....

      நான் இங்க வந்த புதுசுல பால்கனில ஜிலுஜிலுன்னு காத்து வரவும், குளிர்ச்சியா இருக்கவும், படுக்கையை பால்கனில போட்டுப் படுத்துக்கொண்டேன். இரவு செம குளிர். இரண்டாவது நாளே ஜலதோஷம் வர ஆரம்பித்தது. அதற்குப் பிறகு பால்கனில படுக்கறதை விட்டுவிட்டேன்.

      நீக்கு
  8. //எல்லாப் பத்திரிகையும் ஜாம் ஜாம்னு வரும்//- உண்மைதான். இன்ஸ்டிடியூஷன் அது பாட்டுக்கு நடக்கும். அது யாரை நம்பியும் இல்லை. இருந்தாலும் திறமைசாலிகள் மறைந்தால் எழுத்தின், பத்திரிகையின் தரம் குறையும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொஞ்சம் குறையும். எதையாவது செய்து மறுபடி ஏற்றி விடுவார்கள்!

      நீக்கு
  9. மனமே மௌனமா?

    தலைப்பே வசீகரம். நிஜமாகவே மனம் மௌனமாக இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்ல!?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடியுமா என்ன!  வாயை அடக்குவதே கஷ்டமாக இருக்கிறது!  வாங்க கீதா.

      நீக்கு
    2. மனதை அடக்கத் தான் தினமும் பாடுபட்டுட்டு இருக்கேன். எங்கே? :( வாயை அடக்கிடுவேன். பிரச்னை இல்லை. அது என் கட்டுப்பாட்டில். ஆனால் இந்த மனம் இருக்கே!

      நீக்கு
    3. கஷ்டம்தான்.  எல்லோருக்குமே!   "அடக்கு.. மனதை அடக்கு.." என்றொரு பாட்டு இருக்கு தெரியுமோ....

      நீக்கு
  10. முன்பெல்லாம் இந்த கண்டிஷன்களை சொல்லி விட்டு காப்பீட்டுக்கு ஒத்துக்கொள்வார்கள். ஆனால் இப்போதெல்லாம் அப்படி இல்லை, //

    அதேதான் இப்பலாம் சர்க்கரை, ரத்த அழுத்தம் இருக்குனா நிராகரித்துவிடுகிறார்கள். பல காப்பீடு நிறுவனங்கள். அடுத்தலைன்ல உங்கள் கருத்தும் வந்துவிட்டது.

    , நீங்க மருத்துவர்கிட்ட சண்டை போட்டது போலதான் எனக்கும் வந்தது. அந்த நியாயமான கேள்வி. இந்தக் காப்பீடுகளில் என்னவோ எனக்கு ஈர்ப்பில்லை.

    ஒன்றுமே வரலைனா போச்சு அமௌன்ட்....வரும்னு இப்படி எடுக்கறதே ஒரு எதிர்மறையோ என்றும் தோன்றும்...பாதுகாப்புன்னு நினைச்சு. அது ஒழுங்கா இருட்ந்தாலாவது சரி இருக்கட்டும் எனலாம். ஆனால்...நடைமுறை அப்படி இல்லை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயங்கர  கொள்ளைக்காரர்களா இருக்கிறார்கள் இந்த இன்ஷியூரன்ஸ் காரர்கள்.

      நீக்கு
  11. நான் கருத்துல சொன்னது நீங்க அடுத்தடுத்து சொல்லீட்டிங்க!! இருங்க அப்ப முழுசும் பார்த்துவிட்டே வரேன் ஹாஹாஹா

    நம்மை சேர்த்து விடுபவர் தற்போது எந்த உடல் உபாதையும் இல்லை என்று சொல்லச் சொல்கிறார். //

    அதே....அப்படி எதுக்குப் பொய் சொல்லணும் இல்லையா? அதுவுமில்லை டெஸ்ட் ரிசல்ட் கேட்டாங்க எந்த நிறுவனம்னு மறந்து போச்சு. சென்னைல இருக்கறப்ப.

    அப்புறம் ஸ்டார் ஹெல்த் நிறுவனத்துடன்//

    இதுதான் நம்மவரும் பார்த்துக் கொண்டிருந்தார். நான் கேட்கலை. ஸ்டார் பரவால்ல.
    டாடா எய்க் நல்லாருக்குன்னு கேள்விப்பட்டேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டாடாலயும் மோசமான அனுபவம்.  பார்க்க, படிக்க நல்லாயிருக்கு.  பக்கத்துல போனா கண்டிஷன்ஸ் பயமுறுத்துது.  ஏஜெண்ட் பொய் சொல்லச் சொன்னாலும் நம் வாய் பயத்தில் உளறி விடுகிறது!

      நீக்கு
  12. ஆனால் எல்லோருக்கும் ஒன்று சொல்வேன். இன்றைய கார்பொரேட் மருத்துவ உலகில் சரியான காப்பீடு இல்லாமல் பிழைக்க முடியாது. //

    உண்மை, ஸ்ரீராம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  13. ​Department of Space இல் மருத்துவ வசதி தனித்தன்மையுடையது, CGHS போலத்தான், CHSS என்று பெயர். வேலையில் உள்ளபோது, சம்பளத்தில் ஒரு சதவிகிதம் இன்சூரன்ஸ் தொகையாக பிடிக்கப்படும். ஒய்வு பெறும்போது மொத்தமாக 1 மாத சம்பளத்தை கட்டிவிட்டால் வாழ் நாள் முழுதும் பாதுகாப்பு.

    CGHS கும் CHSS க்கும் வித்தியாசங்கள் பல. உதாரணமாக வீட்டுக்கு பக்கத்தில் 2 கிமி தூர அளவிற்குள் ஒரு டாக்டர் family டாக்டராக இருப்பார். சிறு வியாதிகளுக்கு அவர் prescription தருவார். குறிப்பிட்ட மெடிக்கல் ஷாப்புகளில் தந்தால் அவர்கள் மருந்தை தந்து விட்டு பணத்தை ஆஃபிஸில் இருந்து பெற்றுக்கொள்வார்கள்.

    ரேட் கொஞ்சம் மெச்சப்பட்டதால் நிறைய தனியார் ஆஸ்பத்திரிகள் இவ்வமைப்பில் உள்ளன.
    மனைவியின் colon cancer surgery, மற்றும் chemo therapy, எனக்கு hernia surgery, angio plasty ஆகியவை செலவில்லாமல் நடந்தது

    ஒரு நன்மை என்னவென்றால் திருவனந்தபுரத்தில் நிறைய சூப்பர் ஸ்பெசாலிட்டி ஆஸ்பத்திரிகள், மற்றும் இலவச மேடிக்கல் காலேஜ், SCTIMS (AIMMS) உண்டு.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரவாயில்லை.  இஸ்ரோ தனது ஊழியர்களை நன்றாகவே வைத்திருக்கிறது.  தமிழ்நாடு அரசின் இன்ஷியூரன்ஸ் திட்டம் ஒரு தண்டம்.  இரண்டு லட்ச ரூபாய்.  இருக்கும் மெம்பர்களில் எத்தனை பேர் இருந்தாலும் அந்த இரண்டு லட்சத்துக்குள்தான்!

      நீக்கு
    2. சிஜிஎச் எஸ்ஸிலும் இருக்கின்றன என்றாலும் நாங்க ஜாஸ்தி அதைப் பயன்படுத்தியதில்லை. இப்போக் கூட நம்ம ரங்க்ஸுக்கு ஸ்ட்ரோக் வந்து மருத்துவமனையில் சேர்க்கையில் அவரே யூ ட்யூபில் பார்த்து இந்த மருத்துவமனையைத் தேர்ந்தெடுத்திருந்தார். நியூரோ ஒன் மருத்துவமனை. இது ஒரு அறக்கட்டளையின் மூலம் நடக்கிறது என்பதால் மருத்துவரோட கட்டணம் கூட போன வருஷம் வரை (இப்போத் தெரியலை) 2025இல் 600 ரூபாய் தான். மருத்துவமனை மருத்துவரோ அல்லது சிறப்பு மருத்துவரோ யாராக இருந்தாலும் சரி. அது தான் கட்டணம். மற்ற மருத்துவமனைகளில் தனி அறை கிடைக்காது. குறைந்தது இருவரோடு பகிர்ந்துக்கணும். சில சமயம் அதுக்கும் காத்திருப்பு. பட்டியலில் உள்ளவர்களை ஒரு பெரிய ஹாலில் கட்டில்களைப் போட்டுப் படுக்க வைத்திருப்பாங்க எனக் கேள்வி. கூடத் தங்குபவர்கள் வாசலில் ரிசப்ஷனிலோ அல்லது வேறே எங்கோ உட்கார நாற்காலி கிடைக்குதோ அங்கே உட்கார்ந்திருக்கணும். இந்த மாதிரி எல்லாம் நாங்க போன மருத்துவமனையில் இல்லை. ஆனாலும் என் மைத்துனருக்கு அப்போலோவோ அல்லது காவேரி மருத்துவமனைக்கோ போயிருக்கலாம் என்பது அவர் கருத்து. எங்க பையரோ மருத்துவமனை யில் சேர்க்கும் முன்னரே அவரைக் கலந்து ஆலோசிக்கலைனு வருத்தம். என்னவோ எப்படியோ நல்லாத் தான் இருந்தார். தானே எந்த உதவியும் இல்லாமல் நடக்க, சாப்பிடனு ஆரம்பிச்சார். கடைசியில் இந்த NG ட்யூபினால் உடல் நலம் கெட்டது. :( திரும்பவும் அங்கேயே வரேன். :(((

      நீக்கு
    3. தனி அறையும் மற்ற மருத்துவமனைகளைப் போல் அதிகக் கட்டணம் இல்லை. 3,500 ரூபாய்க்குள் தான். இன்னும் சொல்லப் போனால் ஏழை, எளிய மக்கள் அதிகம் வருவார்கள். கூட்டம் அதிகம் இருக்கும். காலையில் ஏழு மணிக்குள் போய்ப் பதிவு செய்து கொண்டால் மட்டுமே மருத்துவரைப் பார்த்துட்டு ஒரு மணிக்குள் வீடு திரும்பலாம். பல சிறப்பு மருத்துவர்களும் அங்கே வருகின்றனர் என்பதாலும் பெண்கள் மருத்துவமும் உண்டு என்பதாலும் எப்போதும் கூட்டமாகவே இருக்கும்.

      நீக்கு
    4. நேற்று சேலம் மருத்துவமனை பற்றிய ஒரு காணொளி பார்த்தேன்.  ஒரு பெண் மருத்துவரிடம் சண்டை போடுகிறார்.  அந்த மருத்துவர் பயங்கரமாக டென்ஷனாகி  கத்து கத்து என்று கத்துகிறார், "ஏன் கத்தறே?" என்று அந்தப் பெண்ணை கேட்கிறார்.

      ராமச்சந்திராவில் கூட அறைவாடகை சகாயம்தான்.  நாம் எத்தனை ரூபாய்க்கு இன்ஷியூரன்ஸ் எடுத்திருக்கிறோம் என்பதை பொறுத்து அறையின் தரம்.

      நீக்கு
    5. நாங்க அம்பேரிக்கா போனப்போ எடுத்த இன்ஷூரன்ஸ் தவிர்த்து வேறே எதுவும் எடுக்கலை. எடுத்ததில்லை. இப்போத் தான் மாமா பிரிந்ததும் பையர் எனக்கு ஆயுஷ் கார்டும் ஆபா அட்டையும் வாங்கி இருக்கார். மற்றபடி இரண்டு பேருக்குமான கண் ஆபரேஷன் கூட நாங்க இன்ஷூரன்ஸில் பண்ணிக்கலை. மாமாவின் மருத்துவமனைச் செலவுகள் எல்லாமே அவர் பென்ஷன் மூலம் நடந்தது தான். கட்டுப்படி ஆகும் வண்ணம் இருந்தது என்பதே உண்மை.

      நீக்கு
    6. இவை எல்லாம் ஓகே.  கண் சிகிச்சைக்கு நாற்பதாயிரத்துக்குள் செலவாகும் - லென்ஸையும் சேர்த்து.  பெரிய கஷ்டங்கள் வந்தால்தான் கஷ்டம்.

      நீக்கு
    7. இன்னொரு கண்ணிற்கு ஆபரேஷன் செய்துக்கணும்னு ஆதியை விசாரிச்சுச் சொல்லச் சொல்லி இருந்தேன். அகர்வாலில் ஒரு லக்ஷம் ஆகிறதாம். என்ன 90,000/- என்று சொன்னார். மற்றச் செலவுகளை எல்லாம் சேர்த்து ஒரு லக்ஷம் ஆகிவிடுமே. அகர்வால் வேண்டாம்னு பையரிடம் சொல்லிட்டேன். முன்னால் வலக்கண்ணுக்குச் செய்து கொண்ட மருத்துவமனையே பரவாயில்லை தான்.ஏழைகளுக்கு எல்லாம் லென்ஸுக்கான பணம் மட்டும் வாங்கிண்டு பண்ணிக் கொடுப்பாங்க. அந்த மருத்துவமனையில் உள்ளே போகவும் ஐந்து படிகள் உயரமாக. உள்ளே போய் மேலே உள்ள ஆபரேஷன் தியேட்டருக்குச் சுமார் 15 படிகள். குறுகலான படிகள். என்னால் முடியாது என்பதால் அங்கே போக முடியலை. :( வேறே மருத்துவமனைதான் பார்த்திருக்கோம். ஜோசஃப் மருத்துவமனைனு. சுமார் 90 வருடங்களாக இருக்கு. என் அப்பா 90களின் கடைசியில் அங்கே தான் ஆபரேஷன் செய்து கொண்டார்.

      நீக்கு
    8. அர்விந்த் முயற்சிக்கலாமே...

      நீக்கு
    9. மதுரையில் தான் இருக்கு. திருச்சியில் இல்லைனு சொன்ன நினைவு. ஏனெனில் எங்களுக்கு ஆபரேஷன் செய்த கண் மருத்துவர் பார்வதி என்பவர் மதுரை அர்விந்த் மருத்துவமனையில் வேலை செய்தவர் தான். அவர் தான் சொன்னாரோ என நினைக்கிறேன்.

      நீக்கு
  14. அப்படினா சாண்டில்யன் கதையில் வரும் அந்தக் காலகட்டத்தில் வெயில் காலையில் பரவாயில்லாமல் இருந்ததா? ஆனால் இரவு வாட்டி வதைத்ததுன்னுதானே எழுதியிருக்கிறார். அப்படினா அக்காலகட்டத்திலும் என்னதான் இந்த அளவு கட்டிடங்கள் இல்லாமல் மரங்கள் இருந்திருந்தாலும் சூரியன் அதை எல்லாம் கண்டுக்காமல் வெளுத்து வாங்கியிருக்கான்னுதானே தோன்றுகிறது இல்லையா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதேதான்.  வெயில் எப்பவும் வெயில்தான்!

      நீக்கு
    2. சின்ன வயசில் காலில் செருப்புக் கூட இல்லாமல் மதுரைத் தெருக்களில் நடந்து பள்ளிக்குப் போயிருக்கோம். கோயிலுக்கெல்லாம் செருப்புப் போட்டுக்கொண்டே போனதில்லை. பார்க்கப் போனால் செருப்பெல்லாம் வாங்கிக் கொண்டது அறுபதுகளின் மத்தியில் தான், அண்ணா வேலைக்குப் போனதும் வாங்கிக் கொடுத்தது தான். அதுவரையிலும் அப்பாவுக்கு மட்டும் தான் செருப்பு இருந்தது. :)))) கிராமத்தில் மாமனார் ஊரில் கேட்கவே வேண்டாம். செருப்பே அவங்களுக்கு நான் வந்தப்புறமா வாங்கித் தந்து பழக்கப்படுத்தியது தான். ஆரம்பத்தில் எல்லாம் நடக்கவே வரலை. பின்னர் பழகிக் கொண்டார்கள். ஆகவே வெயில் தாக்கம் தெரிந்திருந்தால் செருப்பு இல்லாமல் நடக்க முடியாது என்பதே இதன் கருத்து. :))))

      நீக்கு
    3. செருப்பு இல்லாமல் நடக்கலாம்.  காலை, மாலை அவ்வளவு சூடு தெரியாது.  அதுவும் ஏப்ரல் மே மாதங்களில் பள்ளி விடுமுறையாக இருக்கும்!

      நீக்கு
    4. பள்ளி அரைவேளை லீவ் விடும்போதெல்லாம் நட்ட நடு மத்தியானத்தில் மதுரை வடக்காவணி மூல வீதியில் இருந்து திண்டுக்கல் ரோடு மேலப்பாண்டியன் அகழித் தெரு (கழுதைஇ அக்ரஹாரம் என்பார்கள்) அங்கே வந்திருக்கோம் நானும், அண்ணாவும்.

      நீக்கு
    5. ஓ..  அங்கெல்லாம் வீடுகளின் நிழலிலேயே நடக்கலாம் கேட்டோ...!!

      நீக்கு
  15. மனமே மௌனமா! கவிதை ரொம்ப நல்லாருக்கு ஸ்ரீராம். ஆனால் ஒரு சின்ன கேள்வி வருது. மனம் மௌனமாக இருந்ததா இல்லை, மனதிற்குள் இரண்டு உண்டே ஹீரோ வில்லன்....வில்லன் அது உள்ளே குமைந்தாலும் வேண்டாம் அமைதியாக இரு என்று ஹீரோ வாயைக் கட்டுப்படுத்தியதா!?

    மனம் மௌனம் என்றால் ஞானியாகிட்டீங்க!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி.  ஆனால் குழம்பி விட்டேன் போல..  வியாழனில்தான் என் கவிதை வெளியிடுவேன். வெள்ளியில்  மற்றவர்கள் கவிதைதான்.  

      நீக்கு
    2. மனம் எங்கே மௌனமாக இருந்தது? அது படுத்தும் பாடு! :(

      நீக்கு
    3. தூங்கும்போது கூட கனவுகளாக மலர்கிறது, வெளிப்படுகிறது!

      நீக்கு
  16. ​அப்பாவின் கவிதைகள் புரியவில்லை. தலைப்பு தந்திருந்தாலாவது விஷயம் என்ன என்று தெரியலாம்.
    //சில விஷயங்களை
    எப்போதுமே
    பேசமுடியாமல் போகிறது //
    வாய் மூடி பேசாமல் இருப்பதும் தவமே ஆயினும் பல விஷயங்கள் உள்ளிருந்து வெளியே வராமல் அழுத்தத்தை அதிகரிக்கும் என்று உணர்வீர்.
    வைரமுத்து கவிதைகளா? மடக்கிப்போட்ட வார்த்தைகளா?

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பாவின் கவிதைகள் புரியவில்லையா?  எந்த இடம்?  எனக்குப் புரிகிறதா என்று பார்க்கிறேன்! 

      // அழுத்தத்தை அதிகரிக்கும் என்று உணர்வீர். //

      அழுத்தத்தைவிட அதிக துமின்பம் சில வேளைகளில் பேசி விட்டால்!

      நீக்கு
    2. "மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே..."

      நீக்கு
  17. கொத்தமங்கலம் சுப்பு அனுபவங்களை ரசித்து வாசித்தேன்

    காட்சி பிரமாதமாக இருந்தால் போதாது, கண்ணுக்கும் கருத்துக்கும் அழகாக அது படவேண்டும்//

    உண்மை உண்மை! அதுவும் கேமரா கண் வேறு,

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். நாம் அடிக்கடி சொல்வது. என்னதான் உயர் ரக கேமிராவாக இருந்தாலும் நம் கண்ணுக்கு ஈடாகாது அது!

      நீக்கு
    2. யெஸ்!!! அதே

      கீதா

      நீக்கு
  18. ரகசிய பாதை அந்தக் கோட்டை சித்ரதுர்கா செமையா இருக்கு....

    இங்கு பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய இருக்கு ஸ்ரீராம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் அந்த ஏக்கமும் பெருமூச்சும்தான் கீதா..    வெங்கட்டா பொறந்திருக்கலாம்!

      நீக்கு
    2. நானும் அப்படி நினைப்பதுண்டு ஸ்ரீராம். அது போல இப்படி ரீல்ஸ் போடுறவங்களைப் பார்த்தாலும் தோணும் ....

      கீதா

      நீக்கு
    3. //வெங்கட்டா பொறந்திருக்கலாம்!//ரீல்ஸ் போடுறவங்களைப் பார்த்தாலும் // - இன்னொருவராகப் பிறந்தால் அவங்க படற கஷ்டங்களையும் நாம படவேண்டியிருக்கும். வேண்டுமென்றால், பயணம் போக வெங்கட் மாதிரியும், ரீல்ஸ் போட அவங்களை மாதிரியும் என்று ஒரு பெரிய லிஸ்ட் தயார் செய்து இறைவன் காலடியில் போட்டால், ஒருவேளை எல்லாம் கலந்துகட்டி ஒரு பிறவி தந்தாலும் தருவான் (வெறும்ன நிறைய பயணம் போவதுபோல என்று வேண்டிக்கொண்டால், அடுத்த பிறப்பில் செங்கிஸ்கான் படையில் ஒரு சிப்பாயகப் பொறந்து தொலைத்துவிடுவோம்)

      நீக்கு
    4. -he-he-he-he @ Nellai. super answer.

      நீக்கு
  19. பாஹே அவர்களின் கவிதைகளை ரொம்ப ரசித்தேன் ஸ்ரீராம். அதுவும் கடைசில சொல்லிருக்கிறார் பாருங்க அஞ்சலி என்பதெல்லாம் சம்பிரதாயமான வார்த்தை....அதற்கும் மேலே என்று....அதை அப்படியே டிட்டோ செய்கிறேன். நம்ம எண்ணமும் அதுதானே.

    கீதா

    பதிலளிநீக்கு
  20. அட இரண்டாவது சுவாரசியம் செம...பங்கனப்பள்ளி/பனகனபள்ளி. ஃபேமஸ் மாம்பழமும் பங்கனப்பள்ளி

    வீடியோவில் அவர் கால் அருகில் தண்ணிக்குள்ள் பாம்பா அது? வீடியோவை நிறுத்திப் பார்க்க முடியவில்லை. நிறுத்தினால் வீடியோ ஆஃப் ஆகி மீண்டும் ப்ளே பண்ணினால்தான் காட்சி தெரிகிறது, அது பாம்புதான்....தண்ணீப் பாம்பா நிறுத்திவிட்டுப் பார்க்க முடியலை...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த இடமும் ரொம்ப ஈர்க்குது

      கீதா

      நீக்கு
    2. ரீல்ஸில் அது ஒரு கஷ்டம்.  சரியா பார்க்க முடியாது.  திரையிலேயே அந்த டியதின் பெயர் இருக்க, சிலர் கமெண்ட்ஸில் அந்த இடத்தின் பெயரைக் கேட்டு கெட்ட வார்த்தைகளில் வசைபாடிக் கொண்டிருந்தனர்.

      நீக்கு
    3. அடக் கடவுளே!!! என்ன பார்வையற்ற பார்வையாளர்களோ! ஹூம்

      கீதா

      நீக்கு
  21. வைரமுத்துவின் வரிகளில் நடுவில் உள்ளதையும் வலப்பக்கம் ஓரத்தையும் ரொம்ப ரசித்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் திரைப்பாடல்களில் இவரது வரிகளை இன்னமும் ரசிக்கலாம்.

      நீக்கு
    2. ஆமாம் ..ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  22. சுஜாதா எழுதியதை ரொம்ப ரொம்ப ரசித்தேன். என்னா ஒரு எழுத்துப்பா!!! பத்திரிகைகள் கதைகளை வைத்தே ...

    //அவர் காண்பித்த திசையில் 300 ஒய்ஃபுகள்.//

    சிரித்துவிட்டேன்!

    வஸந்தோடு உரையாடுதல் செம ! அசாத்திய கற்பனை. ஆனால் வசந்தின் பதில் ஜாம் ஜாம் நு நடக்கும்னு சொல்றது எப்படி எதிர்காலத்தை அப்படி சொல்லியவர் விஞ்ஞான ரீதியாகச் சொன்னவர் இதை எப்படி விட்டார்? இப்பவும் பத்திரிகைகள் இருக்குதான் ஆனால் வாசிக்கும்படி இருக்கா?

    கீதா

    பதிலளிநீக்கு
  23. தெலுங்குப் பாடல் நல்லாருக்கு ராகமாலிகையில் அமைந்த பாடல் செமையா இருக்கு. தலைவரின் மிகவும் இளைய குரல்!

    ஹீரோ வின் தோற்றம், டீ டோட்டலர் ரொம்ப பணிவான அடக்க ஒடுக்கமான பையன் போல தோற்றம்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொல்லணும்னு நினச்சு சொல்லாம விட்டது.. "காட்சியைப் பார்க்காமல் பாடலை மட்டும் கேளுங்கள்!"

      நீக்கு
    2. காட்சி அத்தனை மோசமாலாம் இல்லை ஸ்ரீராம்...பழையகால ஸ்டைல்.

      கடைசியில் வந்த பாஹேஸ்வரிதான் இப்ப மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது

      கீதா

      நீக்கு
  24. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். இன்றைய வெள்ளி சிதறல்கள் நன்றாக உள்ளது. காப்பீடு திட்டம் பற்றிய அலசல்கள் பயனுள்ளவை. தங்கள் நெருங்கிய உறவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதை படிக்க வருத்தமாக இருந்தது.

    மனதின் மௌனம் கவிதை நன்றாக உள்ளது. அப்படி மனதை மௌனமாக வைத்துக் கொள்ளத் தெரிந்து விட்டால், இந்த ஆயுள் காப்பீடு திட்டத்திற்கும், மருத்துவ செலவுக்கும் தேவையில்லாமல் போய் விடும். ஆனால் ஒவ்வொரு மனிதராலும் தத்தம் மனதை மௌனியாக்கிப் பார்க்க இயலவில்லை./ விருப்பமில்லை. அந்த இடத்தில்தான் இறைவனின் சக்தி முழுவதும் அடங்கியுள்ளது என நான் நினைப்பேன்.

    தங்கள் தந்தையின் கவிதைகள் அனைத்தும் மிக அருமையாக, உள்ளது. படித்து ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த நெருங்கிய உறவு கடந்த செப்டம்பரிலேயே மறைந்ததது.  அதைக் கூட எழுத வேண்டும் என்று நினைத்தேன்.  அப்படியே போய்விட்டது.

      // அப்படி மனதை மௌனமாக வைத்துக் கொள்ளத் தெரிந்து விட்டால், இந்த ஆயுள் காப்பீடு திட்டத்திற்கும், மருத்துவ செலவுக்கும் தேவையில்லாமல் போய் விடும். //

      அப்போதும் 80 சதவிகிதம்தான் பயன்!!

      நீக்கு
    2. //மனதை மௌனமாக வைத்துக் கொள்ளத் தெரிந்து விட்டால்// அப்படியே வாயையும் கட்டிவைத்துவிட்டால்... நூறு சதவிகிதம் மருத்துவச் செலவோ காப்பீடு திட்டத்திற்கான தேவையோ வராது.

      நீக்கு
    3. எனக்குச் சொல்லி இருந்தீங்கனு நினைவு. சில சந்தேகங்கள் கேட்கவென்று சொல்லி இருந்தீங்க. நினைவில் இருக்கு.

      நீக்கு
    4. Oho! is it for Kamala? I am sorry. :(

      நீக்கு
    5. வணக்கம் சகோதரி

      எதற்கு சாரி யெல்லாம். நீங்கள் சென்ற (அதற்கு முந்தைய) பதிவில் என் உடல் நலம் குறித்து சொல்லியிருந்தீர்கள். நான் படித்தேன். உடன் பதில் தர இயலவில்லை. அதற்குத்தான் நான் சாரி சொல்ல வேண்டுமென நினைத்திருந்தேன்.

      உண்மைதான்..! /அப்படியே வாயையும் கட்டிவைத்துவிட்டால்... நூறு சதவிகிதம் மருத்துவச் செலவோ காப்பீடு திட்டத்திற்கான தேவையோ வராது./
      உண்மை. நல்ல மனதோடு வார்த்தைகளினால், யாரையும் நோகடிக்காமல் வாழ்வும் கற்றுக் கொள்ள வேண்டும். இரு கைகள் இணைந்து தட்டினால்தானே சப்தம். ,

      /அந்த நெருங்கிய உறவு கடந்த செப்டம்பரிலேயே மறைந்ததது. / அடாடா..! வருத்தமான செய்தி. உயிர் இல்லையேல் நெ. உறவெனினும் அஃறிணையா..?

      நீக்கு
    6. //வாயையும் கட்டிவைத்துவிட்டால்.// க ஹ மேடம்... இது நாம கண்டதெல்லாம் சாப்பிட்டு வயிற்றைக் கெடுத்துக்கொள்வதைச் சொன்னது. பேச்சைப்பற்றிச் சொல்லவில்லை.

      நீக்கு
    7. ஓ. அப்படி ஒரு அர்த்தம் வருகிறதல்லவா.? நான் மனதோடு கண்டபடி வாயாலும் பேசி மனதையும் புண்படுத்தி நம்/ பிறர் உடல் நலத்தை வேதனைக் கொள்ளுமாறு செய்வதை இணைத்துச் சொன்னேன்.

      நீக்கு
  25. கொ.மங்கலம் சுப்பு பற்றிய கட்டுரையில் ஏகப்பட்ட பிழைகள். நீங்கள் தட்டச்சு செய்தீங்களா? அல்லது காப்பி, பேஸ்டா? வரிசையாப் படிச்சுண்டு வரேன். இந்தப் பிழைகளைப் பார்த்ததும் இங்கே சொல்ல நினைச்சேன். சொல்லிட்டேன். :)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்தவரை பிழைகளை திருத்தினேன். நிறைய நேரம் தேவைப்பட்டது அதற்கே... சில அந்தக் கால பாஷை. பிழையாக கருத முடியாது.

      நீக்கு
    2. ம்ம்ம்ம், ஓகே.

      நீக்கு
  26. சுவாரசியங்கள் ரொம்பவே சுவாரசியம். இரண்டுமே முழுதாகப் பார்த்துட்டேன். பகிர்வுக்கு நன்றி. உங்கள் அப்பாவின் எழுத்தைப் பகிர்ந்ததுக்கு நன்றி. ஒவ்வொரு தரமும் அவர் பிரபலம் ஆகாதது குறித்த வருத்தம் ஏற்படும். இப்போவும்.

    உங்கள் மௌனம் கவிதையும் மௌனத்தைப் பற்றி அருமையாகச் சொல்லுகிறது. கடைசி வாக்கியம் சொல்லுவது சரியே. சில விஷயங்களை எவ்வளவு நெருங்கியவரானாலும் சொல்ல முடிவது இல்லை. சாண்டில்யன் பகிர்வும் அவர் சொல்லி இருப்பதும் முன்னாடியே படிச்சாலும் மறுபடியும் படிச்சேன்.

    கார்ப்பொரேட் மருத்துவம் பற்றி நீங்க சொல்லி இருப்பதெல்லாம் 100% உண்மையே. ஆனால் ஏன் யாருமே மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்ட ஆயுஷ் அடையாள அட்டை பற்றியோ "ஆபா" அட்டை பற்றியோ அறிந்திருக்கவில்லை. ஒருவேளை தமிழகத்தில் மத்திய அரசின் இப்படியான ச்லுகைகள், உதவிகள் பொதுமக்களுக்குப் போய்ச் சேரக் கூடாது என்னும் எண்ணத்தில் பிரபலம் ஆகவில்லையோ? போகட்டும். எப்படியும் மத்திய அர்சின் 108 ஆம்புலன்ஸைப் போல் (ஆனால் மாநில அரசால் கொண்டு வந்ததைப் போல் நினைக்கப்படும்) இதுவும் பிரபலம் ஆகலாம் என நினைச்சுப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட அந்த திட்டங்கள் பற்றி உண்மையாகவே எனக்கு சரியாகாது தெரியாது.  என்னைப்போன்ற குழந்தைகளுக்கும் அது எலிஜிபிளா?  என் மாமா எல்லாம் நான் சேர்ந்து விட்டேன்,. நான் வாங்கி விட்டேன் என்றெல்லாம் க்ரூப்பில் போட்டுக் கொண்டிருந்தார்கள்.

      நீக்கு
    2. /"ஆபா"// - ஆபத்துக்குப் பாவமில்லை அட்டையா? 'ஆயுஷ்' அடையாள அட்டைக்குப் பதிலா, 'மத்திய அரசு ஆயுள் காப்பீடு' என்று தமிழில் எல்லோருக்கும் புரியும்படி திட்டங்களுக்கு பெயர் வைத்தால் குறைந்தா போய்விடுவார்கள்? அண்ணாமலை வந்தாலாவது இந்த மாதிரி மாற்றங்கள் வரும் என்று நம்புவோம்.

      நீக்கு
    3. அது எப்படி மத்திய அர்சுத்திட்டங்களுக்கு நீங்க தமிழகத்தில் மட்டும் செல்லுபடியாகும் மொழியில் பெயர் வைக்கச் சொல்லுவீங்க? அநியாயமா இல்லையோ? வேணும்னா ஆங்கிலத்தில் பெயர் வைக்கச் சொல்லலாம். ஆயுஷ் என்பதும் சரி ஆபா என்பதும் சரி தமிழ் பேசுபவர்களிடையே புழங்கும் சொல். ஆயுஷ்மான் பவ என வாழ்த்துவதில்லையா?

      நீக்கு
    4. ஸ்டாலினோ, விஜயோ பிரதமராக வந்தாலும் கூட இதான் நடக்கும். இதான் செய்ய முடியும்..
      ஸ்ரீராம், உங்களுக்கும் உண்டுனு நினைக்கிறேன். தளத்தின் லிங்க் அனுப்பறேன். பாருங்க. இல்லைனா வெங்கட்டைக் கேட்கவும். இன்னும் விபரமான பதில் கிடைக்கும். அவர் மத்திய அரசுப் பணியில் ஹெல்த் மினிஸ்ட்ரியில் தானே இருக்கார்! மாமாவைச் சேர்த்திருந்த ஆஸ்பத்திரியைப் பத்திக் கூட அவரிடம் கேட்டுக் கொண்டோம். முன்னிருந்தவரை சுமார் தான். இப்போக் கைமாறி நியூரோவாக ஆனப்புறமாப் பரவாயில்லை என்று வெங்கட் சொன்னார்.

      நீக்கு
    5. இப்போது அவர் துறை மாறி விட்டார் என்று நினைக்கிறேன் என்றாலும் அவருக்குத் தெரிந்திருக்கும். கேட்கிறேன்.

      நீக்கு
    6. Even now he can help you in this matter. He is in Deputation I think.

      நீக்கு
    7. //அது எப்படி மத்திய அர்சுத்திட்டங்களுக்கு நீங்க தமிழகத்தில் மட்டும் செல்லுபடியாகும் மொழியில் பெயர் வைக்கச் சொல்லுவீங்க? // கீசா மேடம்.... தமிழர்கள் பெரும்பாலானோருக்கு ஹிந்தி தெரியாது. அதனால அவங்க மத்திய அரசின் திட்டங்களைப் புரிந்துகொள்ளணும்னா தமிழ்லதான் இருக்கணும். மருத்துவர் நம்மிடம் தமிழில் பேசுவதில்லையா? அவர் படிச்ச படிப்பை வைத்து ஆங்கிலம் மற்றும் புரியாத வியாதிகளைப் பற்றிச் சொன்னால், யாருக்குப் புரியும்?

      இந்திராகாந்தி, (B)பீஸ் ஸூத்ரிய கார்யக்க்ரமம் என்பதை தமிழகத்தில் இருபது அம்சத் திட்டம் என்று பிரபலப்படுத்த வில்லையா? ஹிந்தியில் பெயர் இருந்திருந்தால், ஒருவேளை இது பட்டியலினத்துக்கான ஏதேனும் சலுகை போலிருக்கு என்று தமிழர்கள் நினைத்திருப்பார்கள்.

      நீக்கு
  27. எத்தனை மனிதர்கள் படித்து அரசு உத்தியாகங்களில் இருப்பவர்களுக்கு எல்லாம் இந்த ரேஷன் மத்திய அரசால் எல்லா மாநிலங்களுக்கும் அவரவர் தேவைக்கேற்ப இலவசமாக வழங்கப்படுகிறது என்பது தெரியும்? மற்ற மாநிலங்களில் எப்படியோ தமிழகத்தில் மட்டும் இதெல்லாம் மறைச்சுடுவாங்க. ஏழை ஜனங்களுக்குக் கூட இதெல்லாம் தெரியாமல் பார்த்துப்பாங்க.

    பதிலளிநீக்கு
  28. டி.எம்.எஸ். 2013 இல் தான் மறைந்தாரா? உங்கள் அப்பாவைப் போல பலரும் அவர் ரசிகர்கள் தான். என்னையும் சேர்த்து.
    வைரமுத்துவை எல்லாம் ரசிக்கும் அளவுக்குப் பெருந்தன்மை இல்லை என்னிடம். :( சாவி இருந்திருக்கார் என்பதால் 2001 க்கும் முன்னால் தான் சீதா ரவியின் திருமணம் நடந்திருக்கும். நல்லா ரசிச்சு எழுதி இருக்கார் சுஜாதா. அப்படியே சாப்பாட்டின் மெனுவையும் சொல்லி இருக்கலாமோ? இஃகி,இஃகி,இஃகி,இஃகி.

    தெலுங்குப் பாடலில் ஸ்லோகமும் இருக்குனு சொன்னதால் கேட்கலாம்னு பார்த்தால் க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சுத்திட்டே இருக்கு. இன்னமும் திறக்கவே இல்லை. என்னத்தைச் சொல்லுவது? எனக்கு இப்படித் தான் நடக்கும். :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வைரமுத்து வரிகள் இங்கு நான் பகிர்ந்திருப்பதைவிட அவரின் சில திரைப்படப்பாடல் வரிகள் ரசிக்கத்தக்கவை "நான் உறங்கும் நாள் வேண்டும். சாய்ந்து கொள்ள தோள் வேண்டும். என் கண்ணில் நீர் வேண்டும் சுகமாக அழவேண்டும்.. கண்ணில் என்ன கார்காலம்? "வானம் என் விதானம் இந்த பூமி சன்னிதானம் பாதம் மீது மோதும் ஆறு பாடும் சுப்ரபாதம்"

      நீக்கு
  29. கோட்டை பாதாள குகை, ஆந்திரா கோவில் அனைத்தும் அதிசயமாக இருக்கிறது. கண்டுகொண்டோம் நன்றி.

    இன்றைய பாடல் கேட்டோம் நன்றாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  30. Going to fly for India in a few hours. So will meet tomorrow if possible.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தியப் பயணம் வெற்றிகரமாகவும், மனதுக்கு அமைதி தரும் வகையிலும் நடக்கட்டும். அதற்காகப் பிரார்த்திக்கிறேன். இங்க இருக்கும்போது வேறு உடல் பிரச்சனைகள் வராமல், ஜம்முனு தமிழக உணவுகளை நிம்மதியாகச் சாப்பிட வாய்ப்புகள் கிடைக்கட்டும்.

      நீக்கு
  31. வணக்கம் சகோதரரே

    கொத்தமங்கலம் சுப்பு நடிகர் ஆனது குறித்து நன்றாக எழுதி இருக்கிறார். சாண்டில்யன் பக்கம் சுவையாக இருக்கிறது. ஸ்வாரஸ்யமான சுரங்கப்பாதைகளை, மற்றும் சிவன் கோவில் பற்றி அறிந்து கொண்டேன்.

    சுஜாதாவின் எழுத்து சூப்பர். அவர் கதை ஒன்றை படித்த திருப்தி வருகிறது. தெலுகு பாடல் நன்றாக உள்ளது. எஸ் பி அவர்களின் குரல் இனிமை மெய்மறக்கச் செய்கிறது. அந்த நடிகரின் பெயர் என்னவோ? எங்கோ பழைய திரைப்படங்களில் பார்த்த மாதிரி உள்ளது. இன்றைய பகுதி கதம்பம் அனைத்தும் இனிமையாக உள்ளது.

    அடுத்த வியாழக்கிழமையன்று மணவிழா காண இருக்கும் தங்கள் மகன், மற்றும் வருங்கால மருமகளுக்கும் என் அட்வான்ஸ் திருமண நல்வாழ்த்துகள்./ஆசிகள். உங்களுக்கும், உங்கள் பாஸூக்கும் என் அன்பான வாழ்த்துகள். நன்றி.

    அன்புடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  32. மருத்துவ காப்பீடுகள் எடுக்கும்பொழுது அந்த விண்ணப்பத்தை படிட்து பார்க்க வேண்டும். நாம் அதை செய்வதில்லை.

    பதிலளிநீக்கு
  33. உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது. உங்கள் தகப்பனாரின் கவிதைகளும் அபாரம்! மிகப்பெரிய விஷயங்களை அனாயாசமாக சொல்லிச் சென்றிருக்கிறார். __/\__

    பதிலளிநீக்கு
  34. காணொளிகள் கருத்தை கவர்கின்றன. ஆந்திர கோவில் மர்மங்களை ஏற்கனவே பார்த்த நினைவு!
    சுஜாதாவின் கட்டுரையும் பலமுறை படித்தாகி விட்டது. சுஜாதாவை விட்டுவிட்டு வேறு எந்த எழுத்தாளரின் கட்டுரைகளை பகிரலாமே.

    பதிலளிநீக்கு
  35. கொத்தமங்கலம் சுப்புவின் கட்டுரையில் எஸ்.எஸ்.வாசனைப் பற்றிய தகவல்கள் மிகவும் சுவாரஸ்யம். A true legend!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எஸ் எஸ் வாசன் பற்றி நான் படித்த தகவல்களும் அவர் மிகவும் எளிமை, வேலையில் ஸ்டிரிக்ட், தன்னை ஏமாற்ற நினைப்பவர்களை அவர்கள் மிகவும் ஏமாறும்படிச் செய்துவிடுவார் என்றெல்லாம் படித்திருக்கிறேன். அவ்வளவு பெரிய பணக்காரர், ஆனால் எளிமையைக் கடைபிடிப்பது என்பது நினைத்தும் பார்க்க முடியாத அதிசயம்.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!