14.9.26

"திங்க" க்கிழமை   :  காராவடை - கீதா சாம்பசிவம் ரெஸிப்பி 

 

நானும் அண்ணாவும் சின்ன வயசில் அதிகம் தாத்தா வீட்டிலேயே இருந்தோம். அப்பாவுக்கு அப்போ நிரந்தரமான வேலை ஏதும் இல்லை. கொஞ்ச நாட்கள் பெரியப்பா வீடு, பின்னர் தாத்தா வீடு என மாறி மாறி இருந்தோம். அப்பா எப்போதோ வருவார், போவார். ஆகையால் நாங்க அவரை "மாமா" என்றே கூப்பிட்டு வந்தோம். ஆச்சு, தம்பியும் பிறந்துட்டான்.   அப்பாவுக்கு சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் நிரந்தரமான வேலையும் கிடைத்துவிட்டது.  ஆகவே அப்பா அம்மாவுடன் எங்களையும் அழைத்துக்கொண்டு கழுதை அக்ரஹாரம் எனப்பட்ட மேலப் பாண்டியன் அகழித் தெருவில் (ராஜா பார்லிக்கு நேர் எதிரே) குடித்தனம் வைத்தார். எங்களைப் பள்ளியிலும் சேர்த்தாச்சு. ஆனாலும் நானும் அண்ணாவும் "மாமா"எனக் கூப்பிடுவதை நிறுத்தவில்லை. அப்பா எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். தம்பியும் மாமானே கூப்பிட ஆரம்பிப்பான் என்றெல்லாம் சொன்னார். அக்கம்பக்கம் எல்லோரும் சொன்னார்கள். ஆனாலும் எங்களுக்கு மாமா என்றே வந்தது.

அப்போதெல்லாம் மதுரையில் மாலை மூன்று மணி ஆனால் தவலை வடை, போண்டா, வெள்ளை அப்பம், காராவடை, போளி போன்றவைகள் போட்டுச் சூடாகக் கண்ணாடிப் பெட்டிக்குள் வைத்துக் கொண்டு வருவார்கள். வீடு வீடாகப் போய்க் கேட்பார்கள். அதில் ஒருத்தர் போடும் காராவடை நன்றாக இருக்கும். நாங்க காராவடை சாப்பிடுவதில் ஆர்வம் காட்டவும் அப்பா எங்களிடம் அந்த நபரிடம் (அவர் பெயர் நரசிம்மன்) காராவடை  வேண்டும் எனில் நீங்க இரண்டு பேரும் என்னை அப்பானு கூப்பிடணும் என்றார். இந்த டீல் நன்றாக இருக்கே என நாங்களும் ஒத்துக் கொண்டோம். இதிலே ஒரு பிரச்னை என்னன்னா, என் அம்மாவோட அத்தை பையர் பெயரும் நரசிம்மன். அவர் மதுரை முனிசிபாலிடியில் சுகாதார அதிகாரியாக வேலை செய்து வந்தார். அவர் தான் எனக்கும், என் தம்பிக்கும் அப்போ வீட்டுக்கு வந்து அம்மைப் பால் வைத்துவிட்டுப் போனார். நரசிம்மா என அம்மாவும் அப்பாவும் கூப்பிட்டுப் பேசவே நான் அவரைப் பார்த்து, "காராவடை ஏன் கொண்டு வரலை?" னு கேட்டு வைக்க அவர் திருதிரு.  

அம்மாவும் அப்பாவும் சிரிப்பை அடக்கிக் கொண்டு அவரிடம் விவரித்தனர்.  பின்னர் அவரும் சிரித்துக் கொண்டே என் கன்னத்தைத் தட்டிவிட்டுப் போனார்.   மீ அப்போ ரொம்பச் சின்னக் குழந்தை தானே! எனக்கு என்ன தெரியும்? அதுக்கப்புறமாக் காராவடை நரசிம்மனைப் பிடித்துக் காராவடை வாங்கித் தந்து, நாங்கள் அப்பானு கூப்பிட்டதெல்லாம் தனிக்கதை.

இப்போ இது எதுக்குனு கேட்கறீங்களா? நானும் பல வருஷங்களாகக் காராவடை பண்ண நினைச்சு முடியாமலே போயிட்டு இருந்தது. கடைசியாக் காராவடை வீட்டில் பண்ணிச் சாப்பிட்டது என்பது எங்க பையர் பிறந்தப்போ என நினைக்கிறேன். அதுக்கப்புறமா யாரானும் பண்ணிக் கொடுத்து எப்போவானும் சாப்பிட்டிருக்கலாம். இங்கே நம்ம புக்ககத்தில் இதெல்லாம் தெரியாது. காராவடையா என்று கேட்டுவிட்டுச் சிரிப்பார்கள். இப்போச் சிரிக்கவும் யாரும் இல்லை, நாங்க ரெண்டு பேர்தானே!  காராவடை ஆசையை எப்படித் தீர்த்துக்கறதுனு யோசிச்சேன். ஒருநாள் இட்லிக்கு மாவு அரைத்தேன். வழக்கம் போல் உளுந்து மாவு பொங்கிப் பொங்கி நிறைய வர அதில் கொஞ்சம் எடுத்து வைச்சேன். அன்றே முருங்கைக்கீரை போட்டு வடை தட்டலாமானு நினைச்சேன். அப்போத் தான் மூளையில் பளிச்! ஆஹா காராவடைக்கும் உளுந்து மாவை இப்படித் தான் அரைச்சுக்கணும். மற்றதெல்லாம் ஊற வைச்சு அரைச்சுச் சேர்த்தால் போதுமே எனப் பளிச், பளிச் என எண்ணங்கள். ஆனால் அன்று சாயங்காலமா அரைச்சதால் காராவடை பண்ண நேரம் ஆகிவிட்டது. ஆகவே மறுநாள் பண்ணினேன்


அரைச்ச உளுந்து மாவு, ஊற வைச்ச கடலைப்பருப்பு, ஊறிக்கொண்டிருக்கும் அரிசி, பருப்பு வகைகள் மிளகாய் வற்றலோடு. மிளகாய் வற்றலை இப்படிச் சேர்ப்பதால் நல்ல நிறம் கொடுக்கும்.

காராவடைக்கு ஒரு கிண்ணம் புழுங்கலரிசியை நன்கு கழுவிட்டு அதோடு காராவடைக்குத் தேவையான மிளகாய் வற்றலைப் போட்டு ஊற வைக்கணும். அரைக்கிண்ணம் துவரம்பருப்பு, அரைக்கிண்ணம் கடலைப்பருப்புத் தனித்தனியாக ஊற வைக்கணும். கடலைப்பருப்பு ஊறியதில் ஒரு கைப்பிடி எடுத்துத் தனியாக வைக்கணும். இங்கே நான் கொஞ்சமாகவே பண்ணப் போவதால் ஒரு கரண்டி புழுங்கலரிசியில் அரைக்கரண்டி துவரம்பருப்பும் அரைக்கரண்டி கடலைப்பருப்பும் சேர்த்தே கழுவி ஊற வைச்சு மிளகாய் வற்றலையும் அதோடு ஊற வைச்சேன். கைப்பிடி கடலைப்பருப்பைச் சின்னக் கிண்ணத்தில் தனியாக ஊற வைச்சிருக்கேன். உளுத்தமாவு இட்லி மாவுக்கு அரைக்கும் பதத்தில் எடுத்தது தனியாக ஒரு பாத்திரத்தில் இருக்கு. காராவடைக்கு என அரைக்கும்போதும் இப்படித் தான் அரைச்சுச் சேர்க்கணும்.


அரிசி, பருப்பு அரைச்சது

எல்லாவற்றையும் ஒன்றாக மிக்சி ஜாரில் போட்டு நன்றாக நைஸாக அரைக்கவேண்டும். கொஞ்சமாக அரைப்பதால் சேர்த்துப் போட்டு அரைப்பது சுலபம். நிறையப் பண்ணினால்   தனித்தனியாகவே அரைத்துச் சேர்க்கணும். அரைக்கும்போதே தேவையான உப்பைச் சேர்க்கலாம். உளுந்து மாவில் நாம் உப்புச் சேர்க்கலை என்பதால் எல்லா மாவையும் ஒன்றாகக் கலக்கும்போது நான் உப்புச் சேர்த்தேன். பெருங்காயம், மிளகாய் வற்றலோடு சேர்த்தே அரைக்கலாம். ஊற வைத்த கடலைப்பருப்பை நன்கு வடிகட்டி இந்த மாவில் சேர்க்கணும். கருகப்பிலை போட வேண்டும். மாவை நன்றாகக் கலக்க வேண்டும். கெட்டியாக அப்பம் ஊற்றும் பதத்தில் இருக்கும்.

கடாயில் எண்ணெயைக் காய வைத்துக் கொண்டு கரண்டியால் எடுத்து ஊற்றினால் ஊற்றியதுமே மேலே உப்பிக் கொண்டு வரும். நன்கு வெந்ததும் மெதுவாகத் திருப்பி மறுபுறமும் வேக வைக்க வேண்டும். இரு பக்கமும் சிவக்க வெந்ததும் எடுத்துத் தேங்காய்ச் சட்னி அல்லது அப்படியே அல்லது தக்காளி, கொத்துமல்லிச் சட்னிகளோடு சாப்பிடலாம்.


நம்ம நெல்லை இது என்ன கொஞ்சம் தான் வரும் என்பார். நான் கலந்த மாவில் எனக்கு 4 அவருக்கு 4 பண்ணினது போக மிச்சம் மாவு இருக்கு. அதை மறுநாளைக்குச் செலவழிக்க என்ன செய்யலாம்னு அன்னிக்கே யோசிச்சு வைச்சுட்டேன். அது சஸ்பென்ஸ்.


===========================================================================================================


செப். 11 பாரதியார் நினைவு நாளுக்காக  பேஸ்புக்கில் பகிர்ந்தது..   சினிமாசெய்தி, சமையல் இவை தவிர வேறு எதுவும் அங்கு ஷேர் செய்தால் போணியாகாது!  இதுவும் குறைந்த பார்வைகளே பெற்றன.
இந்த இதழில் சி. சுப்பிரமணிய பாரதியின் "தமிழருக்கு' என்ற ஒரு கட்டுரை யாகியிருக்கிறது. அதிலிருந்து சில வரிகள்:

1. தமிழா, பயப்படாதே. ஊர்தோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் போட்டு திரங்களையெல்லாம் தமிழில் கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்

2. ஜாதி வேற்றுமைகளை வளர்த்தாதே. 'ஜாதியிரண் டொழிய வேறில்லை பழந் தமிழ் வாக்கியத்தை வேதமாகக் கொள்

3. பெண்ணை அடிமை யென்று கருதாதே. முற்காலத்துத் தமிழர் மனைவியை வாழ்க்கைத் துணை' என்றனர். ஆத்மாவும் சக்தியும் ஒன்று. ஆணும் பெண்ணும் ஒன்று.  

4. வேதங்களை நம்பு! அவற்றின் பொருள் தெரிந்து கொண்டு பின் நம்பு. புராணங்களைக் கேட்டுப் பயனடைந்து கொள்.  புராணங்களை வேதங்களாக நினைத்து கடமைகள் பேசி, விலங்குகள் போல நடந்து கொள்ளாதே.

5. தமிழா, எழுதிப் படிப்பதெல்லாம் மெய்யுமில்லை. எதிர் நின்று கேட்பதெல்லாம் பொய்யுமில்லை. "முந்திய சாஸ்திரந்தான் மெய், பிந்திய சாஸ்திரம் பொய்" -என்று தீர்மானம் செய்து கொள்ளாதே. காலத்துக்கும் உண்மைக்கும் எதிரிடை ஒரு கணக்கு ஏற்பட்டிருக்கிறதா? "தகப்பன் வெட்டிய கிணறென்று சொல்வி மூடர்கள் உப்பு நீரைக் குடிக்கிறார்'' என்று பஞ்ச தந்திரம் நகைக்கிறது  

==========================================================================================

துக்ளக்கில் வந்த தலையங்க கட்டம் கட்டி சோ போட்ட செய்தி.


பாரதியார் எழுதியது என்ன?

கே.ஆர். எஸ்.சம்பத், திருச்சி - 17
கே: 'ஜாதிகள் இல்லையடி பாப்பா' என்று கூறிய பாரதியின் வாக்கு, பொய்யாகி விட்டதே?

சோ ப: எப்போதாவது இதைப் பற்றி எழுத வேண்டும் என்று இருந்தேன். உங்கள் கேள்வி இதற்கு ஒரு வாய்ப் பைக் கொடுத்திருக்கிறது. உண்மையில் பாரதியார், 'சாதிகள் இல்லையடி பாப்பா' என்று எழுதவே இல்லை. 'சாதி பெருமை இல்லை பாப்பா, அதில் தாழ்ச்சியுயர்ச்சி செய்தல் பாவம்' என்றுதான் 1913-ல் அவர் துவங்கிய 'ஞானபாநு' (1915- மார்ச், பக் கம்.287-88) இதழில் எழுதினார். அது நெல்லையப்பர் பதிப்பில் (1917-ல்) 'சாதிகளில்லையடி பாப்பா, குலத் தாழ்ச்சியுயர்ச்சி சொல்லல் பாவம்' என்று மாறி விட் டது. இந்த விவரங்களை பாரதியாரைப் பற்றி ஆய்வு செய்து, தன் வாழ்நாளையே அர்ப்பணித்த சீனி. விஸ்வநாதனின் 'காலவரிசையில் பாரதி படைப்புகள்' (அல்லயன்ஸ் பதிப்பம்) என்கிற தலைப்பில், 16 தொகுதிகளாக பல ஆயிரம் பக்கங்களில் வெளிவந்த பாரதியின் களஞ்சியத்தில், 9-ஆவது தொகுதியில் 148-ஆம் பக்கத்தில் இந்த உண்மை விவரம் கூறப் பட்டிருக்கிறது. எனவே பாரதியார் 'ஜாதியில் பெருமை ஒன்றும் இல்லை. அதை வைத்து உயர்ச்சி தாழ்ச்சி செய்யக் கூடாது' என்றுதான் எழுதினார். ஜாதிகள் இல்லை என்று எழுதவில்லை என்பதே உண்மை.  

======================================================

சோ குறிப்பிட்டுள்ள அந்த புத்தகம் பற்றி 'துக்ளக்'கிலேயே வந்த விமர்சனம்.

புத்தக விமர்சனம் 

நூல்: பிரிட்டிஷ் அர சின் பார்வையில் பாரதி. தொகுப்பாசிரியர்: சீனி. விசுவநாதன். விலை: ரூ.350/-, பக்கம்: 416. வெளியீடு: சீனி.விசுவ நாதன், 'லைலாக்' அடுக்கு மாடிக் குடி யிருப்பு, ஃபிளாட் எண்-F1, புதிய எண்-13. E- பிளாக், மூன்றாம் தெரு, அண்ணாநகர் - கிழக்கு, சென்னை-102. : 9444029137.

இந்நூலாசிரியர் மகாகவி பாரதி மீது கொண்ட அளப்பரிய அபிமானத்தால், அவர் எழுதிய கவிதைகள், கதைகள், கட்டுரைகள் முதலான அனைத்தையும் தேடிக் கண்டுபிடித்து அவற்றை தொகுத்து, சுமார் 16-க்கும் மேற்பட்ட பெரும் நூல்களை வெளியிட்டுள்ளார். இவரது இந்தச் சாதனையை இதுவரை யாரும் எட்டியதில்லை. இந்த நூலும் ஒரு தொகுப்பு நூலே சுதந்திரப் போராட்ட காலத்தில் பாரதியின் கவிதைகளும், மேடைப் பேச்சுக்களும் மக்களிடையே சுதந்திர வேட்கையை ஏற்படுத்தின.
-
அவை ஆங்கிலேய அரசை  எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டங்களுக்கு எழுச்சியூட்டின. அதனால் பிரிட்டீஷ் அரசின் உளவுத் துறை' யும். காவல்துறையும் பாரதியைக் கண்காணித்தன. அவரது பாடல்களையும், பேச்சுக்களையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து பிரிட்டிஷ் அரசிற்கு அனுப்பி வைக்கப்பட்டன. 1908 முதல் 1918 வரை சுமார் 11 ஆண்டு கால பாரதியின் நடவடிக்கைகள் யாவும் கண்காணிக்கப்பட்டன. இன்று அவை அரசு ஆவணக் காப்பகத்தில் உள்ளன. அவற்றை சென்னை ஆவணக் காப்பகத்திலும், புதுடெல்லி தேசிய ஆவணக் காப்பகத்திலும் சேகரித்து இந்நூலைத் தொகுத்துள்ளார். 

இதற்கு முன் இந்த முயற்சியில் ஆ.இரா.வேங்கடாசலபதி, பெ.சு.மணி மற்றும் கோ.கேசவன் போன்றவர்களும் ஈடுபட்டு, அவற்றில் சிலவற்றைத் தங்கள் நூல்களிலும் பயன்படுத் திக் கொண்டனர். ஆயினும் இந்நூலாசிரியர் இந்த ஆங்கில ஆவணங்களை எல்லாம் எளிய நடையில் மொழிபெயர்க்கச் செய்து, அந்த ஆவணங்களைப் பற்றிய பின்னணிச் சம்பவங்களையும் விளக்கி, அவற்றை காலவரிசையில் தொகுத்து, உறுதியான பைண்டிங்குடன் இந்நூலை வெளியிட் டுள்ளது பாராட்டத்தக்கது. இந்நூல் பாரதி ஆர்வலர்களுக்கு மட்டுமல்ல, ஆய்வாளர்களுக்கும் பயன்தரக்கூடியது.


பரக்கத்

56 கருத்துகள்:

  1. அனைவரும் நலமாக வாழப் பிள்ளையாரிடம் பிரார்த்தனைகள். இனிய வினாயக சதுர்த்தி வாழ்த்துகள். மைலாப்பூர் கோலாஹலமாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா.  ஆமாம்.  மைலாப்பூர் மட்டுமா?  ஒவ்வொரு விநாயகர் கோவிலும் இன்று சுண்டலுடன் விளங்கும்!!  உங்கள் வீட்டுக்குப் போகும் வழியில்தான் ராஜ் டிவி புகழ் விநாயகர் இருக்கிறார் இல்லையா?

      நீக்கு
  2. கீதா (சாம்பசிவம்)மாவின் காரா வடை படிக்கவே சுவாரஸ்யம். பார்க்கவே மொறு மொறுனு இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். சாப்பிடவும் "என் ஆசை பெருகுதே..."

      நீக்கு
  3. சோ பதில்கள் எப்பவுமே க்ளிப்தமாக டு த பாயிண்ட் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  4. மஹாகவியின் மூன்று பாடல்களை முதன்முதலாக ஹைகோர்ட் ஜட்ஜ் வி.கிருஷ்ணஸ்வாமி பதிப்பித்தார் என்பது மைலாப்பூர் செய்தி. இன்னும் கிருஷ்ணஸ்வாமி அவன்யூ லஸ்ஸில் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அம்மா. சென்ற வருடம் பாரதி நினைவு நாளுக்கு அதைப் பகிர்ந்திருந்தேன்.

      நீக்கு
  5. சாதிப்பெருமை இல்லை என்று சொன்ன மஹாகவியின் உயர்வு எப்பொழுதும் தமிழுடன். நன்றி ஶ்ரீராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் காலத்தில் அவரைப் போற்றினார் இல்லை அம்மா!

      நீக்கு
  6. காராவடை...பார்க்கவே அழகா இருக்கு. வெறும்னயே சாப்பிடலாம்.

    ஏன் மாவு குறைவுன்னு கேட்கமாட்டேன். விதிவிலக்குகள் தவிர, எங்கள் இருவருக்கும் குறைவாகவே செலவழியும். மனைவிக்கு பண்ணுவதும் கஷ்டமாக இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை..    "அரைச்சவளுக்கு அம்மி" என்பார் என் அம்மா.  செய்து கொடுக்க கொடுக்க எல்லோரும் சாப்பிடுவார்கள்.  செய்து கொடுப்பவருக்கு கடைசியில் டேஸ்ட்டுக்கு மட்டும் ஒன்று மிஞ்சும்.  அவரும் அதைப் பொருட்படுத்த மாட்டார்.  அதுதான் அம்மா.  நான் எதையாவது செய்யும் நாட்களில் இது எனக்கும் நேரும்.  செய்து கொடுப்பவர்களுக்கு அதைச் சாப்பிடும் ஆசை குறைவாகத்தான் இருக்கும் என்பது என் துணிபு.

      நீக்கு
  7. இந்த காரா வடையில் வெங்காயம் சேராதுன்னு நினைக்கிறேன்.

    காராவடைக்கு வழுமூன அரைப்பதுதான் வழக்கமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேக்கு தெரியலை கேட்டேளா...  அதுக்கு மாமிதான் பதில் சொல்லணுமாக்கும்...  என்ன, இப்படி அரைச்சுப் பாருங்கோ சரியா வரலைன்னா அப்படி அரைங்கோ 

      நீக்கு
  8. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இணைந்து பிரார்த்திப்போம். வணக்கம். வாங்க கமலா அக்கா.

      நீக்கு
  9. நேற்று சாலமன் பாப்பையா பற்றிப் பார்த்துக்கொண்டிருந்தபோது பாரதி, பெட்டைத்தனம் என ஓரிடத்தில் சொல்லியிருப்பது, பெண்களைத் தாழ்த்தி அல்ல என்பதைப் பார்த்தேன்.

    ஜா பெரியதல்ல பாப்பா... பாரதி யுக கவிதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா..  கொஞ்சம் விளக்கிச் சொன்னால் நாங்களும் தெரிந்து கொள்வோமில்ல...

      நீக்கு
    2. திரௌபதியை துகிலுரியும்கோது வாளா இருந்தது பெட்டைத்தனம் என பாரதி குறிப்பிட்டுள்ளார். ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம் என்று எல்லா இடத்திலும் சொன்ன பாரதி, இந்த இடத்தில் மாத்திரம் வார்த்தைப் பிரயோகத்தில்்சறுக்கியிருக்கிறார். மகாகவியின் அனைத்துப் படைப்புகளையும் கருதும்போது இது மிகச் சிறிய விஷயமாக எடுத்துக்கொண்டு கடக்க வேண்டும். பெரிதுபடுத்தக்கூடாது என்று நடுவர் சாலமன் பாப்பையா குறிப்பிட்டாராம்.

      நீக்கு
  10. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  11. யாராவது பிள்ளையார் சதுர்த்திக்குச் செய்த பிள்ளையார் கொழுக்கட்டை படங்களை இன்று பகிர்ந்து, பதிவில் சேர்ப்பார்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் பதிவு போட்டு இருக்கிறேன் ஆனால் இங்கு காட்ட மாட்டேன் என்கிறது.
      எங்களுக்கு நாளை தான். பழைய பதிவில் கொழுகட்டை , மோதகம், எள் உருண்டை எல்லாம் இருக்கிறது. அதையும் சேர்த்து இருக்கிறேன்.

      நீக்கு
    2. வணக்கம் சகோதரி

      இனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்.நீங்கள் பதிவு போட்டிருப்பதற்கு மிக்க மகிழ்ச்சி. சில சமயம் எனக்கும் நம் நட்புகள் போட்ட பதிவை சரியாக காட்ட மாட்டேன் என்கிறது. உங்கள் பதிவுக்கும் வருகிறேன். நன்றி சகோதரி. நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. நான் அப்பவே வந்து கருத்து சொல்லி இருக்கிறேன் கோமதி அக்கா.. ராமலக்ஷ்மி முந்திக்கொண்டார்!

      நீக்கு
    4. வாழ்க வளமுடன் கமலா ஹரிஹரன் வாங்க பொறுமையாக.
      சதுர்த்தி வேலைகள் இருக்குமே!
      வாழ்கவளமுடன் ஸ்ரீராம், நன்றி . பார்த்து விட்டேன் உங்கள் கருத்துகளை.
      ராமலக்ஷ்மி முதலில் வந்து விட்டார்கள்.

      நீக்கு
  12. காரவடையும் இனிய மலரும் நினைவுகளும் அருமை.
    காரவடைமாவில் தேங்காயை பொடி பொடியாக நறுக்கி போட்டு செய்யும் போது சுவையாக இருக்கும்.
    செய்முறை படங்களுடன் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அக்கா..  இது காரவடை இல்லை காராவாடை 

      நீக்கு
    2. ஆமாம் ஸ்ரீராம், கால் விட்டு போய் விட்டது. காரா வடைதான். சுட்டி காட்டியதற்கு நன்றி.

      நீக்கு
  13. அனைவருக்கும் ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அக்கா.  உங்களுக்கும் எங்கள் வாழ்த்துகள்.

      நீக்கு
  14. பாரதியார் நினைவு நாளுக்காக பேஸ்புக்கில் பகிர்ந்தது. மற்றும் அனைத்து பகிர்வுகளையும் படித்தேன்.

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் சகோதரரே

    தங்களுக்கும், மற்றும் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் அனைவரின் வாழ்விலும் அல்லல்களை நீக்கி, ஆனைமுகத்தோன் நல்லருள் தர வேண்டுமென "அவன்" பாதம் பற்றி பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன் .🙏.நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலா அக்கா..  உங்களுக்கும் வாழ்த்துகள்.  கொழுக்கட்டை எல்லோருக்கும் ​இந்த தினத்தில் தப்பாது கிடைக்க பிரார்தித்துக் கொள்கிறேன்.

      நீக்கு
  16. வணக்கம் கீதா சாம்பசிவம் சகோதரி

    இன்றைய திங்கள் பதிவில் தங்கள் செய்முறையான கார வடையும், அதன் படங்களும், மிகவும் நன்றாக உள்ளது. செய்முறையை தெரிந்து கொண்டேன். தங்களின் பால்ய நினைவுகளும் படிக்க சுவாரஸ்யமாக இருந்தது.பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // கார வடையும், //

      தப்பு தப்பு தலைவலி மேளம்...   தப்பு தப்பு..   !!!! 

      அது காராவடை 

      நீக்கு
    2. ஓ.. சரி, சரி," காரா வடை "துணையெழுத்தை நான் கவனிக்கவில்லை. பிழையை திருத்த துணையாக வந்து நீங்கள் உதவியதற்கு நன்றி. :))

      நீக்கு
    3. காராவடை என்றால் இந்த வடை காரவே காராது என அர்த்தம். காரவடை என்பதுதான் சரியாக இருக்கும்னு தோணுது, போட்டிருக்கும் சிவப்பு மிளகாய்களை நினைத்தால். பழம் பெரும் பதிவர் வந்து விளக்குவாரா?

      நீக்கு
  17. வணக்கம் சகோதரரே

    இன்றைய பதிவின் இணைப்பாக பாரதியார் பற்றிய செய்திகளை விளக்கமாக தெரிந்து கொண்டேன். ஜாதி இரண்டொழிய வேறில்லை என்ற வார்த்தையை நாம் அவர் சொன்னதாக இதுவரை சொல்லிக் கொண்டிருந்தோம் ஆனால், ஜாதி பெருமை பேச வேண்டாம் என்பதாக அவர் சொன்றதை இப்போத்தான் தெரிந்து கொண்டோம். நல்ல தகவல்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படித்து ரசித்ததற்கும், கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி கமலா அக்கா.

      நீக்கு
  18. காரவடை (காராவடை) என்று ஒரு ஸ்பெஷல் நான் தின்றிருக்கிறேனா என்று நினைவில்லை. பக்கோடா பஜ்ஜி மசால் வடை என்று எல்லாமே எனக்கு அபிமான விஷயங்கள் தாம்.
    சாதிகள் இல்லையடி என்று பாரதி எப்படிச் சொல்லலாம் என்று நினைத்ததுண்டு. சாதிப் பெருமையில்லை, அடடா !! சந்தம் மிகப் பொருத்தம் ! எவ்வளவு சத்தியமான விஷயம் ! பாரதி பாரதிதான். அறிவார்ந்த உண்மை..

    பதிலளிநீக்கு
  19. அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானு அக்கா.. நன்றி. உங்களுக்கும் எங்கள் வாழ்த்ர்த்துகள்.

      நீக்கு
  20. காராவடை போட்டவுடனேயே போனி ஆகி விட்டதே?

    பதிலளிநீக்கு
  21. காரா வடை சுடச் சுட போட்டவுடனேயே போணி ஆகி விட்டதே!!

    பதிலளிநீக்கு
  22. வர வர "எங்க வீட்டில் கொலு வைத்திருக்கிறோம், வெற்றிலை பாக்கு வாங்கிக்க வாங்கோ" என்று அழைப்பது போல "நான் என்னுடைய ப்ளாகில் புது பதிவு போட்டிருக்கிறேன், வந்து படித்து கருத்திடுங்கள்" என்று அழைக்க வேண்டும் போல.. ஆமாம், நான் விநாயக சதுர்த்திக்காக ஒரு சிறப்பு பதிவு போட்டிருக்கிறேன். வந்து, படித்து, கருத்திடுக.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். கஷ்டம்தான். ஆனால் நான் எப்படியும் பார்த்து விடுவேன்.

      நீக்கு
  23. பதில்கள்
    1. வாங்க செல்வாண்ணா வணக்கம். விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.

      நீக்கு

பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!