நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
13.11.26
வெண்ணிலா காட்டியே பாலன்னம் ஊட்டியே கொஞ்சிடும் நாள் வந்திடுமே
சும்மா ஒரு பொழுது போகாத வெட்டி அரட்டை!
குழந்தை அழுது கொண்டிருக்கும் போது ஏதாவது ஒரு பாடல் கத்துவது வழக்கம்! இன்று சட்டென்று "பலுகவே மி நா தெய்வமா" பூர்ணசந்திரிகா பாடல் நினைவுக்கு வந்து இரண்டு வரி பாடும் போதே, வழக்கம் போல அதே ராகத்தில், 'உன்னால் முடியும் தம்பி: யில் இளையராஜா இசையில் யேசுதாஸ் பாடிய "மானிட சேவை துரோகமா" பாடலும் நினைவுக்கு வந்து அதுவும் இரண்டு வரி பாடினேன்.
அப்புறம் கொஞ்ச நேரம் அப்படியே சென்றது. குழந்தை எப்படியோ சமாளித்து தூங்கி விட்டது. வேறு ஏதோ பேசிக் கொண்டிருந்தோம். பிறகு கண்கள் லேஸாக சொக்க, உள்ளே வந்து செல்லில் பாலமுரளியின் பலுக வேமி நா தெய்வமா கேட்டேன். எப்பொழுதோ மதுரையில் கேட்டதற்கு பிறகு இப்போது தான் கேட்கிறேன்!
திடீரென எனக்கு இந்தப் பாடலும் நனு கன்ன தல்லி நா பாக்கியமா பாடலும் கிட்டத்தட்ட ஒரே சாயலில் இருப்பது போல தோன்றியது! இது பூர்ணசந்திரிகா, அது கேசரி அதாவது சிந்து கர்நாடகா. வேறு வேறு ராகங்கள் என்று தெரியும்.
உடனே பாலமுரளியின் நனு கன்ன தல்லியும் கேட்டேன்.
ஏனோ அடுத்து தானாகவே ஆப்ஷனில் வந்த அதே பாடல், எம் எல் வசந்தகுமாரி குரலில்... அதையும் கேட்டேன்.
இங்கு ஒரு சின்ன கம்பாரிஸன். எம் எல் வசந்தகுமாரி பாடும் போது ஸ்ருதி சுத்தமாக, ஸ்வர சுத்தமாக எல்லாம் சிறப்பாக பாடுகிறார். குறை சொல்ல ஏதுமில்லை. ஆனால் பாலமுரளி பாடலில் Bhaaவம் இருக்கிறது என்று தோன்றியது.
இது என் அபிப்பிராயம்தான். அபிப்பிராயங்கள் மாறலாம்! நீவு ப்ரோவகா எவரு புரோத்துரு என்று பாலமுரளி கேட்கும் போது மகன் தன்னை மறந்துவிட்டான என்று கவலைப்படும் தாய்க்கு ஆறுதல் சொல்வது போல, நீ காப்பாற்றாவிட்டால் யார் காப்பாற்றுவார் என்று உரிமையுடன் கேட்பது போலவும், அல்லது தன்னை கவனிக்காமல் இருக்கும் தாயிடம் அரற்றும் குழந்தை போல உன்னை விட்டால் யார் இருக்கா சொல்லு என்று கேட்பது போலவும் பாவத்தில் பாடுகிறார்.
ஆனால் எம்எல்வி ஒரு தாயும் மகளும் பேசிக் கொள்வது போல,
மகள் துணிகளை மடித்து வைத்துக் கொண்டே உடன் இருக்கும் அம்மாவிடம் நியாயம் கேட்பது போல "ஆமாம்... நீ செய்யாவிட்டால் யார் செய்வார்கள் சொல்லு.. செய்யறது உனக்கே நல்லா இருக்கா " என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிட்டு கிளம்புவது போல பாடுகிறார். அதோடு நீவு ப்ரோவகுண்ட்டே எவரு ப்ரோத்துரு என்று அதே வரியை சிறிய மாறுதலுடன் பாடுகிறார்.
அஷ்டபதி ஆகட்டும், ஆபேரியில் நகுமோ ஆகட்டும் ஆரபியில் ஸ்ரீ ரமண விபோ ஆகட்டும்.. பாலமுரளியின் Bhaaவங்கள் தனி தான்.
அடுத்ததாக நான் கேட்டது 'மானஸ சஞ்சரரே.' இது செம்பையின் குரலில். அது கேட்கும் போது எனக்கு சங்கராபரணம் எஸ்பிபி குரலில் இதே பாடல் நினைவுக்கு வந்தது. நீங்களும் கேட்டிருப்பீர்கள்.
அந்த கம்பாரிஸன் சொல்ல வேண்டுமா என்ன! பயப்படாதீர்கள். நான் சொல்லவில்லை செம்பை பாடும் ஸ்வர வரிசை கேட்பதற்கு ரொம்ப சுவாரஸ்யம்!!
வழக்கமாகக் கேட்கிற செய்தி அறிக்கையில் 441 கோடி ரூபாய் என்று காதில் பட்டபோது, மேலும் ஒரு இலவச அரசு திட்டம் வந்துவிட்டதோ, அல்லது சமீபத்திய பிரபல தமிழ்ப் படத்தின் வசூல் சாதனையோ, இல்லை மேலும் ஒரு ஊழல் வழக்கு விசாரணையில் வந்திருக்கிறதோ என்றெல்லாம் தோன்றியது. செய்தியை மீண்டும் ஒருமுறை எடுத்துப் போட்டுப் பார்த்ததில் , இது தீபாவளி சமயத்தில் அரசின் சாராயக் கடைகளின் விற்பனைச் சாதனை என்றறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அதற்கு மேலும் அதிர்ச்சி ஊட்டியது அந்த செய்தியை ஒலிபரப்பிய பாணி. மாவட்ட வாரியாக எந்தெந்த மாவட்டத்தில் எவ்வளவு கோடி ரூபாய்க்கு சாராயம் விற்றது, இதில் முன்னணி எந்த ஊர் என்பதெல்லாம் விலாவாரியாகச் சொல்லப்பட்டது.
இது ஒரு புறம் இருக்க, நான் பார்க்கிற ஒரே தொலைக்காட்சி தொடரில், அடிக்கடி மது அருந்தும் காட்சி வருவது மட்டுமல்ல, அந்தத் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னால் போடப்படும் தலைப்புகளில் கூட புகையிலை பற்றிய எச்சரிக்கை அறிக்கை இருக்கிறதே தவிர, மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு என்று முன்பெல்லாம் போடப்படும் அறிவுறுத்தல் செய்தி வரவே இல்லை. கிட்டத்தட்ட, இந்தக் குடிக்கிற பார்ட்டிக் காட்சிகளை அடிக்கடி ஒளிபரப்புவது மூலம், மக்களை மது அருந்தத் தூண்டுகிறார்களோ என்கிற ஐயமும் , அப்படித் தூண்டச் சொல்வது யார் என்கிற கேள்வியும் எழத்தான் செய்கிறது. மது விற்பனை நிலையங்களில் கூட " மது - வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு " என்கிற வாசகம் இருக்கிறதா என்று தெரியவில்லை. ( விவரம் தெரிந்தவர்கள் சொல்லலாம் !) அது இருந்து மட்டும் என்ன பெரியதாக சாதித்து விடப் போகிறது !!
" இவ்வளவு கொலை நடந்திருக்கிறது ", " இவ்வளவு வழிப்பறி நடந்திருக்கிறது ", " அரசு என்ன செய்கிறது ? " " இந்த ஆட்சியில் இப்படித்தான் இருக்கிறது ! " என்றெல்லாம் அரசைக் குறை கூறிக் குற்றங்களைப் பட்டியலிடுவது நமது வழக்கமாகிவிட்டது.
வெறித்தனமான, தவறான மன எழுச்சியின் காரணமாகக் கொலை செய்யத் துணிபவர்களை எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் , எப்படித் தடுத்து நிறுத்த முடியும் ? ஆனால் கோபதாபங்கள் கொலையில் முடிவதற்குப் பெரும்பாலும் , மது மற்றும் இதர போதை வஸ்துக்கள் தான் காரணம் என்பது பரவலாக அறிஞர்களாலும் ஆய்வாளர்களாலும் ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயம். புலியின் வாலைப் பிடித்தவர் அதை விட்டு விட முடியாது என்பது போல மதுக்கடை தரும் வருமானங்களை பலமாக நம்பித்தான் அரசு செயல்படுகிறது என்பதால் மக்கள் போதைக் கவர்ச்சியில் இருந்து விடுபடும் சாத்தியக் கூறுகளே இல்லை. இந்த நிலையில் குற்றங்களில் எண்ணிக்கை எப்படிக் குறைய முடியும் ?
குற்றப் பின்னணி கொண்ட ரவுடிகள் என்பவர்களின் மேல் ஒரு கண் வைத்து அவர்களின் நடவடிக்கைகளைக் கவனிப்பதன் மூலம் அரசு இதைத் தடுக்க முடியும் என்று சிலர் நினைக்கிறார்கள். இதில் எந்த அளவு உண்மை இருக்கும் என்பது அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். ஆனால், பண பலம் இருந்தால் எந்த குற்றத்தில் இருந்தும் தப்பி விடலாம். அதிகபட்சமாக இரண்டு மூன்று ஆண்டுகள் சிறையில் இருக்கும் துணிச்சல் இருந்தால் போதும் என்கிற மனோபாவம் இருப்பது சமூகத்திற்கு நல்லது அல்ல.
சட்டத்தின் பின் பலம் மட்டும் இருந்தால் போதும் நியாயம் கிடைத்து விடும் என்கிற நிலைமை மாறி, சட்டத்தின் நுணுக்கத்தை சாமர்த்தியமாகச் சொல்லுகிற பெரிய பெரிய வக்கீல்கள் - அதாவது ஒரு முறை நீதிமன்றத்தில் வந்து நின்று பேச பிரம்மாண்டமான தொகையை ஊதியமாக கேட்டு பெறுகிறவர்கள் - நம் பக்கத்தில் வந்து நின்றால் எந்த குற்றத்திலிருந்தும் தப்பி விடலாம் என்கிற மனப்பான்மை என்று கூட சொல்ல கூடாது திட நம்பிக்கை பெரும் பணம் வைத்திருப்பவர்கள் மத்தியில் இருக்கிறது. ஒரு வழக்கை பத்து பதினைந்து வருடங்களுக்கும் மேலாக எடுத்துக் கொண்டும் போகும் சாமர்த்தியம் வழக்கறிஞர்களுக்கு கோடிக்கணக்கில் லாபத்தை அளிக்கிறது. சட்டம் ஒழுக்கத்தை சாதாரண வக்கீல் சொன்னால் ஈடுபடாது அதற்கு 20 லட்சம் ஊதியம் பெறுகிற பெரிய வக்கீல் தான் வந்து சொல்ல வேண்டும் என்று இருக்கும் அவலத்தை என்ன சொல்லி விளக்குவது ?
இதையெல்லாம் மனதில் கொண்டு பார்த்தால், மதுக்கடை மூடப்படப் போவதும் இல்லை, ஊழல் ஒழியப் போவதும் இல்லை, நேர்மையான காவல் மற்றும் வழக்காடு துறை வரப்போவது இல்லவே இல்லை என்கிற பயம் வருகிறது அல்லவா ?
கலி முற்றி, பேரழிவு வரப்போகிறது என்று சாத்திரங்கள் சொல்வதை நோக்கித்தான் நாம் போய்க் கொண்டிருக்கிறோம். எப்போதும் அப்படித்தானே போய்க் கொண்டிருந்தோம் என்கிறீர்களா ? இப்போது சற்று வேகம் அதிகமாக இருக்கிறது !!
* 2083 ஆகஸ்ட் 11 என்ற தலைப்பிட்ட கவிதை ஆத்மாநாம் இரண்டாவ தாகத் தொடங்கிய சிற்றேடு. இதற்கு 2083 ஒரு அகால ஏடு என்று பெயரிட்டு தட்டச்சு செய்து ஒற்றைத் தாளில் வெளியிட்டார். இந்த ஒற்றைக் கவிதையுடன் இதழ் நின்றுவிட்டது. ஆரம்பம் கவிதையில் தொடங்கி தரிசனம் வரையிலான 39 கவிதைகள் காகிதத்தில் ஒரு கோடு என்ற தொகுப்பாக 1981 ஆம் ஆண்டு மே மாதம் ழ வெளியீடாக பிரசுரிக்கப் பட்டது. சில கவிதைகள் படிகள், நிகழ், மீட்சி போன்ற இதழ்களில் வெளிவந்தன. பிற கவிதைகள் எல்லாம் முதல் முறையாக அச்சேறுகின்றன.
** 1982 வருடத்தில் ஆத்மாநாமுக்கு 'காகிதத்தில் ஒரு கோடு' தவிர வேறு எந்த தொகுப்பும் வந்திருக்கவில்லை. எனவே என்னை திரு. மீராவை அணுகி எப்படி யாவது தனது இரண்டாவது தொகுதியான "சில எதிர்கால நிஜங்களை வெளிக் கொணர எனக்கு ஆத்மாநாம் எழுதியது. மேலும் இந்த சமயத்தில் 'அன்னம் நவ கவிதை வரிசை வெளிவந்து கொண்டிருந்தது. நவகவிதை வரிசை இதுவரை ஒரு தொகுப்பும் வெளியிட்டிருக்காத கவிஞர்களுக்கு முதலிடம் தந்தது. எனவே எதிர்கால நிஜங்கள் என்னிடமே கைப்பிரதிகளாகத் தங்கிவிட்டது.
ஆத்மாநாமைப் பற்றியும் கவிதையைப் பற்றியும் ஆத்மாநாம் ஐ
சமீபகாலமாகக் கவிதை எழுதிவரும் 25 வயது இளைஞர். தனிமனிதனுக்கும் சமூகத்திற்கும் உலகத் திற்கும் இடையே உள்ள தொடர்பு பற்றி தனிமனிதனின் அவலங்கள் வாழ்க்கை மதிப்பீடுகள் பற்றி கவிதைகள் வாயிலாக வெளிப்படுத்தும் முயற்சியில் சுதந்திரம் முதலியன தற்காலக் கவிதைக்குக் கிடைத்துள்ள ஒரு முக்கியமான வசதி. இதன் மூலம் விரிவான ஆன்மீக தத்துவ அரசியல் சமூக ஆராய்ச்சிகளுக்கான வழிகள் பல உண்டு. இலக்கண அறிவு இல்லாதவர் தற்காலப் பேச்சு வழக்கே கவிதை வெளியீட்டிற்கு ஏற்றதாகக் கருதுபவர். \
\
இதன் எளிமை கவிதையை சமகாலத்தினர் எல்லோ ரும் புரிந்து கொள்வதற்குப் பயன்படுகிறது. பேச்சு வழக்கு பிற்கால மொழியியலாளருக்கு உதவி செய்யும். கலாச்சார மதிப்பீட்டிற்கும் உரிய பார்வைக்கும் சொற்செட்டுக்கும் மேற்பட்ட ஒன்றுதான் கவிதை. மக்களிடமிருந்து வரும் கவிதை மீண்டும் மக்களிடம் செல்லும் போது ஒவ்வொரு கவிஞனுக் கும் உள்ள ஒரு 'தொனி'யுடன் செல்கிறது. அது எவ்வளவு தூரம் ஆழமானதாகவும் வலுவுள்ளதாக வும் இருக்கிறதோ அவ்வளவு தூரம் அது மக்களைத் தாக்கும். பிரசுர சாதனங்களும் சமூகத்தில் உள்ள பொருளாதார வேறுபாடுகளும்தான் கவிதை சிலரிடையே மட்டும் புழங்குவதற்குக் காரணமாயிருக் கின்றன. கொள்கைகளைப் பற்றிய அதிகப்படிப்பு இவருக்கு இல்லாததால் வாழ்வில் சொந்த அனு பவங்களிலிருந்து மட்டுமே கவிதை எழுதுகிறார். ஒவ்வொரு கவிதையும் புதிதாகப் பிறக்கும் பச்சைக் குழந்தையைப் போல அதனால் கவிதைகளைக் குத்திக் கிளறிப் பார்க்காமல் ஆர்வத்தோடு நாசூக்காக ஏன் எப்படி எவ்வாறு என்று கேள்விகளுடன் அணுகி வந்தால் அதன் முழு வர்ணங்களும் தெரிய வரும்.* படிப்பவனினின் அறிவுநிலைக்கேற்ப கவிஞனுக்கே தெரியாத சில அர்த்தங்கள் பிடிபடும். கவிதையில் உள்ள அதிசயங்களில் இதுவும் ஒன்று. இலக்கியத் தொடர்பின் காரணமாகவே வாழ்க்கை வாழத் தகுதியுள்ளதாக நினைக்கும் இவர் இலக்கியத் தொடர்பாலேயே வாழ்க்கை முடியுமோ என்றும் அஞ்சுகிறார்.
ஆச்சரியம் நிறைந்த குழந்தையின் பார்வை வாயிலாகத் தெரியும் மனநிலை தொடர்ந்து இருக்க விருப் பப்படுகிறார். ஒரு கணத்தில் உலகம் முழுவதும் வியாபித்துள்ள வெவ்வேறு மனிதர்களின் செயல் களை நினைக்கும் போது உண்டாகும் பிரமிப்பு, கரையில் நின்றபடி நீலக்கடலை வானம் தொடும் இடம் வரை பார்ப்பதில் உள்ள இன்பம் தன்னை மறக்கச் செய்யும். ஒவ்வொரு மலையையும் அதன் உச்சியை அடைய நினைக்கும் மனம் ஆகியவற்றில் மனம் இழக்கிறார். உண்மையைத் தவிர வேறு எதுவும் இலக் கியமாக முடியாது என்பதில் நம்பிக்கை உள்ளவர். கோவிலுக்கு அதிகம் வழிபடப் போகாதவர். மனிதசக்திக்கு மீறிய ஒன்று மனிதனிடம்தான் உள்ளது என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளவர். கவிதைகளின் வெற்றி தோல்விகள் பற்றிய விவாதம் அபத்தம் என்று நினைக்கிறார். தன்னி லிருந்து தானே விடுபடும்போது ஒருவன் மனிதனுக்கு ஒருபடி மேலே செல்கிறான். இவை கவிதை கள் என்றால் கவிதைகள்தான். கவிதைகள் இல்லை என்றால் என்ன செய்வது. \
\
ஆத்மாநாமைப் பொறுத் தவரை இவை கவிதைகள்தான். அவரைப் பொறுத்தவரை இந்த வரையரையில்தான் ஆத்மாநாமுக் கும் உலகத்திற்கும் உள்ள தொடர்பு தெரிகிறது. இருவருக்கு இடையே உள்ள மெல்லிய கண்ணாடித் திரையை உடைக்கப் பார்க்கும்போது அவை தடித்த இரும்புச் சுவர்களாகிவிடுகின்றன. இது அறிவு என்றால் இது கவிதை.\
*இந்த சுய அறிமுகக் கட்டுரையை ஆத்மாநாம் தனது 25 வது வயதில் எழுதியிருக்கிறார். ஆனால் எந்த இதழிலும், நூலிலும் இதுவரை வெளியிடவில்லை. மேலும் இன்று ஸ்ட்ரக்சுரலிஸத்தில் பிரபல மாகி வரும் Reader Reception Theory யை அன்றே (1976) முன்னோக்கி இருப்பது ஆச்சரியத்தைத் தருகிற து. 1981 ஆம் ஆண்டு திரு. யேசுராஜா, திரு.சுந்தர ராமசாமி இவர்களுடனான சந்திப்பில் Cre-Aவில் இதே விஷயத்தை உறுதிப் படுத்திப் பேசியதாக நேர்ப்பேச்சில் கூறியிருக்கிறார். அதாவது கவிதை எழுதப்பட்ட பின்பு கவிஞனுக்கே புரியாமல் கூட போகலாம். ஆனால் கூர்ந்து வாசிக்கும் ஒரு வாச கன் கவிதையை அணுகி விட முடியும். (தொகுப்பாளர்)
The book size is Penguin Modern Poets (Brodsky) size. 5" 73/4". The cover is made exactly to that size. The book cover should be printed on white board with maroon or Olive Green colour tint till the drawing lines. There should be white space in the drawing. The drawing and lettering can be Black Colour. (i.e.) There should be Two Blocks. One for tint till the border lines of the drawing and another lettering with drawing. I hope I am clear in conveying what the artist K. Muralidharan has told me. If you need any clarification please write to me. Please inform Mr. Meera accordingly. Mr. Rajagopal was telling me that the size is new to Tamil books and care should be taken.
The other drawings are to be printed against each poem which I have mentioned on the reverse of the drawings. The direction is also marked. You kindly let me know how the drawings have come.
என் தாத்தா சொத்தும் வைக்கவில்லை. என் அப்பாவிடமும் சொத்து எதுவும் இருந்ததில்லை. எனவே நான் அப்படி எல்லாம் கேட்கவுமில்லை. ஆனால் சட்டம்தான் என்னென்ன சொல்கிறது இல்லை?
ஊர் உறங்கிய அந்த இரவில் யாருமில்லாத தெரு வழியாக அந்த ஐவரும் நடந்து கொண்டிருந்தார்கள்.. ஒரு மிக முக்கியமான வேலையாக அங்கு வந்து கூடி இருக்கிறார்கள். அங்கே இருந்த ஒரு இடத்தில் டேபிளைச் சுற்றி அமர்ந்து பேசத் தொடங்கினார்கள்.
நேரு மறைந்தால் எங்கே இந்திரா காந்தி வந்து விடுவாரோ என்கிற பயம் நிறைய காங்கிரஸ் காரர்களைப்போல அந்த ஐவருக்கும் இருந்தது. நேருவுக்கும் மகளைக் கொண்டு வந்து விட வேண்டும் என்கிற விருப்பம் இருந்தது. எனவே அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் நிர்ப்பந்தத்தில் இருந்தனர் அவர்கள். அப்படி தேர்ந்தெடுக்கப்படும் அந்த நபர் அப்புறம் தேவைப்படும்போது வளைந்து கொடுப்பவராக இருக்க வேண்டும். பதவியை விட்டு இறங்க மாட்டேன் என்று அடம் பிடிப்பவராக இருக்கக் கூடாது. இந்த காங்கிரஸ் தலைவர் பதவியானது பிரதமர் பதவிக்கு இட்டுச் செல்லும் வழி என்பதை அவர்கள் அறிந்திருந்தனர்.
சீனாவிடம் அப்போது வாங்கிய அடியால் அப்போது நடந்த பரகாபாத், அம்ரோஹா, ராஜ்கோட் ஆகிய மூன்று இடைத் தேர்தல்களிலும் காங்கிரஸ் மண்ணைக் கவ்வி இருந்ததது. நேருவின் கடவுள் இமேஜ் சரிந்திருந்தது. ஏதாவது செய்தாக வேண்டும். நேருவின் இமேஜ் மட்டும் பாதிக்கப்பட்டிருக்கவில்லை, அவர் உடல் நிலையும்! எந்த நேரமும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்கிற நிலை.
இந்த வீழ்ச்சியைத் தடுக்க என்ன செய்யவேண்டும் அதற்குதான் சாதகமான ஒரு அமைப்பை உருவாக்குவது என்று முடிவுக்கு வந்திருந்தனர். அதற்கு பொருத்தமான தலைமை இவர்களுக்கு வேண்டியவராய் இருக்க வேண்டும்.
அப்போது நிதி மந்திரியாக இருந்த மொரார்ஜியின் தங்கக் கட்டுப்பாட்டுக் கொள்கை வேறு மக்களை கடுப்பேற்றி இருந்தது. மொரார்ஜி பிடிவாதக்காரர். தான் சொல்வது, தான் செய்வதுதான் சரி என்று நினைப்பவர். அவரை தலைமைப் பொறுப்புக்கு கொண்டு வந்தால் அப்புறம் அவர் தேவையான சமயத்தில் வளைந்து கொடுக்க மாட்டேன் என்று நின்றால் சமாளிக்க முடியாது. எனவே இந்த போட்டியில் அவர்கள் மொரார்ஜியை சேர்க்கக் கூடாது என்பதில் கவனமாக இருந்தனர்.
இவர்களது தெரிவில் இருந்தவர் லால்பகதூர் சாஸ்திரி. இவர்கள் விருப்பத்தை அவர் மறுக்க மாட்டார் என்று இவர்களுக்கும் தெரியும். சாஸ்திரி நேர்மையானவர். குறைந்த எதிரிகளையே வைத்திருந்தவர். பல பூட்டுகளுக்கு சாவியாய் இருக்கக் கூடியவர்!
இந்த முடிவை நேருவிடம் சொல்லும் பொறுப்பை காமராஜ் ஏற்றுக் கொண்டார். அந்த வேளையில் ஜினலிங்கப்பா அந்த சந்தேகத்தைக் கிளப்பினார்.
ஒருவேளை சாஸ்திரி இந்தத் திட்டத்துக்கு ஒப்புக்கொள்ளாவிட்டால்
நேருவின் அத்யந்த சீடரான சாஸ்திரி எதையும் நேருவைக் கேட்டே செய்வார். இதையும் கூட அப்படியே செய்ய வாய்ப்பு அதிகம். நேருவோ ஒருபக்கம் நடந்த தோல்விகளுக்கு காரணமாக்கி சிலரை ஒழித்துக் கட்ட முயன்றார்.
கிருஷ்ணமேனனை கேபினட்டிலிருந்து நீக்க முடிவு செய்திருந்தார் என்பதோடு அவரே காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் பிரதம மந்திரியாகவும் செயல்பட்டு வெற்றி காண எண்ணம் கொண்டார். அப்படி நடந்தால் பின்னர் விபரீதம்தான் விளையும் என்று நினைத்தே இவர்கள் சாஸ்திரியை அந்த இடத்துக்கு கொண்டு வர முயற்சி மேற்கொண்டனர்.
நிஜலிங்கப்பாவின் கேள்விக்கு பதில் இல்லை என்றாலும் எல்லோர் பார்வையும் காமராஜ் பக்கம் திரும்ப, அவர் வேகமாக இல்லை இல்லை என்று மறுத்தார்.
ஆனால் கோஷ் முடிவாகச் சொல்லி விட்டார் சாத்தியமானால் சாஸ்திரி, அவசியமென்றால் காமராஜ். ஆனால் சாஸ்திரி மறுக்க மாட்டார் என்கிற நம்பிக்கை அவர்களிடம் இருந்தது.
சாஸ்திரியை தேர்வு செய்ததன் மூலம் அடுத்ர்த்த பிரதமர் இடத்தையும் நிரப்பிவிடலாம் என்பதும் தெளிவு.
இந்த திருப்பதி மீட்டிங் விவரம் மொரார்ஜி காதுக்கும் எட்டியது அவர் கடுப்பானார். சஞ்சீவ ரெட்டியும் கோஷும் அவரை சமாதானப்படுத்த ஓடினார்கள்.இதனால் உங்கள் வாய்ப்பு ஒன்றும் பறிபோகாது என்றார்கள். மொரார்ஜியும் சாஸ்திரியை எதிர்த்து நிற்பது போட்டியிடுவது என்று முடிவு செய்தார். இது இந்த ஐவர் குழுவை கொஞ்சம் பாதித்தது. ஆனால் சாஸ்திரி நேரு இதை ஆதரிக்கிறார். எனவே எதிர்ப்பில். ஏன் மொரார்ஜி பாய் இவ்வளவு பிடிவாதமாக இருக்கிறார் என்று தெரியவில்லை என்று வெளிப்பசடையாகவே பேச ஆரம்பித்தார்.
பானைத்தலை சாய்த்து புல் பிதுங்கும் கைகளோடு சட்டைப் பொத்தான் வெடிக்க தொப்பையில் புல் தெரிய தனியாய் யாருன்னைத் தூக்கில் போட்டார் சணற் கயிற்றால் கட்டிப் போட்டு உன் காற்சட்டை தருவேன் சென்றுன் எதிரியைத் தேடு
மறு பரிசீலனை
நான் எதனையுமே மறுபரிசீலனைக்கே விட்டு விடுகிறேன் நான் படித்த புத்தகங்கள் என்னைக் கேலி செய்கின்றன நீ பழைய மனிதன்தான் என்கிறது ஒரு புத்தகம் புதிய மனிதன் தான் என்கிறது இன்னொரு புத்தகம் நான் மனிதன் தானா என்று சோதித்துக்கொள்ளும் நிர்ப்பந்தங்கள் தொண்டையில் சிக்கிக் கொண்ட மீனின் முள்ளென பச்சைப்புல்வெளியிடை சிக்கிக் கொண்ட கரும்பாம்பு வெறுமனே சும்மா இருக்கமுடியாத பேனா சிதறிப்பறக்கும் பிணந்தின்னிக் கழுகுகள் எங்கோ கேட்கும் கூக்குரல் துணிக்கயிற்றில் தொங்கும் குரல்வளைகள் தூங்குபவர்களையும் தூங்குவது போல் நடிப்பவர்களையும் எழுப்பும் வார்த்தைக் கூட்டங்கள் புறப்பட்டாகிவிட்டது கருப்புப் படை
கனவு
என்னுடைய கனவுகளை உடனே அங்கீகரித்து விடுங்கள் வாழ்ந்து விட்டுப் போனேன் என்ற நிம்மதியாவது இருக்கும் ஏன் இந்த ஒளிவு மறைவு விளையாட்டு நம் முகங்கள் நேருக்கு நேர் நோக்கும் போது ஒளி பளிச்சிடுகிறது நீங்கள் தான் அது நான் பார்க்கிறேன் உங்கள் வாழ்க்கையை அதன் ஆபாசக் கடலுக்குள் உங்களைத் தேடுவது சிரமமாக இருக்கிறது அழகில் நீங்கள் இல்லவே இல்லை உங்கள்கனவு உலகத்தைக் காண்கிறேன் அந்தக் கோடிக் கணக்கான ஆசைகளுள் ஒன்றில் கூட நியாயம் இல்லை தினந்தோரும் ஒரு கனவு அக் கனவுக்குள் ஒரு கனவு உங்களைத் தேடுவது சிரமமென்று நான் ஒரு கனவு காணத் துவங்கினேன் உடனே அங்கீகரித்து விடுங்கள்
அங்கு குழுமி இருந்தோர் மிக்க ஆச்சரியம் அடைந்து "மொழிக்கும் நிர்வாகத்திற்கும் சம்பந்தம் என்னவோ?!" என்று கேட்டார்கள்.
"மொழி செம்மை பெறாவிடில் எதைச் சொல்ல விரும்புகிறார்களோ அதைக் கேட்கிறவர்கள் தெளிவுற, ஐயம் திரிபு அற அறிந்து கொள்ளும் முறையில் சொல்ல முடியாது. நினைக்கப்பட்டது சொல்லப்படவில்லையானால் எது செய்யப்பட . வேண்டுமோ அது நிறைவேறாது. நிறைவேற வேண்டியது நிறைவேறாமல் போகும். ஒழுக்கமும் பண்பும் குறையும்! நீதியும் நியாயமும் திரியும்: மயக்கமும் குழப்பமும் உண்டாகும். எனவே சொல்லப்படுவதில் ஐயம் எதுவும் இல்லாமல் தெளிவாக இருக்க வேண்டும். ஆகவே, மொழி செம்மையுற வேண்டியது எல்லாச் செயலுக்கும் முன்
நிற்கிறது" என்றார் கன்ஃபூஸியஸ்,
சுங்க இலாகாவிற்கு முன்னால் பிரபல ஆசிரியர் ஆஸ்கார் வைல்ட் வந்து நின்றார். "நீங்க 'டிக்ளேர்' பண்ண ஏதாவது பொருள் உண்டா?" என்று சுங்க அதிகாரி கேட்டார்.
"என் மேதாவிலாசத்தைத் தவிர 'டிக்ளேர்' செய்ய வேறு ஒன்றுமில்லை!" என்று பதிலளித்தார் ஆஸ்கார் வைல்ட். வேடிக்கையாக ஆஸ்கார் வைல்ட் கூறியது சுங்க இலாகாவிற்கு ஒரு குட்டு வைத்துவிட்டது போலத்தான் என்றாலும் சுங்க இலாகாவின்பணி இன்றியமையாததாகும். அதுவும் இறக்குமதிக் கட்டுப்பாடுகள் மிகவும் அதிகமாக உள்ள நம் நாட்டில் கள்ளக் கடத்தல்களும் அதிகமாகத்தானே இருக்கும்? அரசின் கொள்கைகள் மாறினாலொழிய இந்நிலையில் மாறுதல் ஏற்படப் போவதில்லை. அவ்வாறு இருக்க இந்தியா, கள்ளக் கடத்தல்காரர்களின் சொர்க்கமாக மாறிவிடாமல் காப்பவர்கள் சுங்க இலாகாவினர்.
சாது ஒருவர் விமானத்திலிருந்து இறங்கி வருவார். "என் உணவுக்கு ஒரு படி அரிசி இருக்கிறது, அவ்வளவுதான்!" என்று சொல்லிவிட்டு நடையைக் கட்டுவார். "எங்கே, பார்க்கலாம்!" என்று சோதனையிட்டாலோ அரிசியின் நடுவில் இருபத்தைந்து லட்சம் மதிப்புள்ள வைரங்கள் 'டால்' அடிக்கும்!
"நல்லவர்களையும் கள்ளக்கடத்தல்காரர்களையும் பாகுபடுத்துவது ரொம்பக் கஷ்டம். இம்பாலா காரில் பெரிய மனிதர் வேஷத்தோடு பயணம் வரும் கள்ளக் கடத்தல்காரரை இனம் கண்டு கொள்வது சிரமம். நல்லவர்களை, பெரிய மனுஷர்களைச் சந்தேகித்துவிட்டாலோ எங்களுக்கு 'பிளாக் மார்க்' வந்து விடும்" என்கிறார் திரு காந்திமதிநாதன். "ஆனால் இந்தச் சிரமமான காரியத்தை அவர் திறம்படத்தான் செய்து வருகிறார், இல்லாமலா, ராஷ்ட்ரபதி பாராட்டுப் பத்திரம் பெற்றார் அண்மையில்!
"கள்ளக் கடத்தல்காரர்கள் பற்றிய விவரத்தை நீங்கள் எப்படி அறிந்து கொள்கிறீர்கள் -
"பல நண்பர்களின் வாயிலாகப் பேச்சு வாக்கில் தெரிய வரும். சிலரை அமர்த்தி ஒற்றாட வைத்தும் அறிவோம். வர்த்தகப் பிரமுகர்களோடு ஊடாடுகையில் பல இரகசியத் தகவல்கள் கிடைக்கும்.விரோத பாவத்தினால் பலர் இந்தக் கள்ளக் கடத்தல்காரரைப் பற்றிய தகவல்களைத் தந்துவிடுவார்கள். சிலர் உதவ வேண்டும் என்ற நல்லெண்ணத்திலேயே கள்ளக்கடத்தல்காரரைப் பற்றிய தகவலைத் தருவது உண்டு! இரவில் பன்னிரண்டு மணிக்குச் சந்தேகாஸ்பதமாகப் பவனி வரும் நபர்களை வலை விரிப்பதும் உண்டு !" என்கிறார் முப்பது வருஷ அனுபவமுள்ள திரு ஏ. காந்திமதிநாதன். இவர் மனைவி கூட இவருக்குச் சில சமயங்களில் உதவுவது உண்டாம். 130 கள்ளக் கடத்தல் வழக்குகளைக் கண்டு பிடித்துக் கொடுத்திருக்கிறார். அவர் மீட்ட பொருட்களின் மதிப்பு அறுபத்துஎட்டு லட்ச ரூபாய். இந்த அரிய சேவையைப் பாராட்டி அரசாங்கம் ராஷ்ட்ரபதி பத்திரம் வழங்கியுள்ளது! இவர் மதுரையில் சுங்கத் தடுப்புத் துறை இலாகாவின் சூப்பிரெண்டண்டாகப் பணியாற்றி வருகிறார்.
"கள்ளக் கடத்தல்காரர்களிடம் நவீன ஆயுதங்களெல்லாம் இருக்கின்றன. அவர்களை ஒடுக்கும் எங்களுக்கு நவீன சாதனங்கள் தேவை!" என்று நியாயமான கோரிக்கை விடுக்கிறார் திரு காந்திமதிநாதன்.
திரு வரதராஜூலுவிடம், "உங்களுக்கு நாகப்பட்டினத்துக்கு அருகில் ஏற்பட்ட அனுபவத்தை இவர்களுக்குச் சொல்லுங்கள்!" என்று தூண்டுகிறார் 'இரு கோடுகள்' கதை ஜோசப் ஆனந்தன்.ஆனந்தன். இவரும் சுங்க இலாகா அதிகாரிதான்.
"நாகப்பட்டினத்திற்கு அருகில் 'விழுந்தமாவடி' எனுமிடத்தில் ஒரு யாழ்ப்பாண விசைப்படகு பாய்ந்து வந்து கொண்டிருந்தது. அந்தப் படகு எங்கள் படகைவிட இரு மடங்கு பெரியது. அந்தப் படகை நிறுத்தும்படி சைகை காட்டினோம். ஆனால் அவர்கள் தப்பியோட முனைந்தனர். எங்கள் படகை வேகமாகச் செலுத்தி அந்தப் படகை நெருங்கினோம். அவர்கள் எங்கள் படகைச் சேதமடையச் செய்தனர். இருந்தாலும் தைரியமாக முன்னேறினோம். எங்களை முறியடிக்க அவர்கள் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். நானும் அவர்களைக் குறி வைத்துச் சுட்டேன். அவர்கள், கடுமையான தாக்குதலுக்குப் பிறகு அடிபணிந்தனர். அந்தப் படக்கில் எங்களுக்குக் கிடைத்த வேட்டை 1,07,000 மதிப்புள்ள கடத்தல் பொருள்கள்" என்று அன்றைய சம்பவத்தை வரதராஜூலு விவரிக்கிறார். அவர் கையில் அடிபட்டதை அருகில் உள்ள ஜோசப் ஆனந்தன் காட்டுகிறார்.
"கள்ளக்கடத்தல்காரர்கள் ஒரு கையில் பணமும் மற்றொரு கையில் துப்பாக்கியும் வைத்திருக்கிறார்கள். ஆசைக்கோ, மிரட்டலுக்கோ அடிபணியாது நாங்கள் அவர்களை அடிபணிய வைப்பதுதான் எங்களது பணி!" என்று திரு வரதராஜூலு கூறுகிறார்.
"நான் கள்ளக் கடத்தல்காரர்களைப் பிடித்ததெல்லாம் மாறுவேஷத்தில்தான்! காங்ஆள், பூசாரி, வியாபாரி என்று பல வேஷங்களில் கள்ளக்கடத்தல்காரரைப் பிடித்திருக்கிறேன்! என்று பெருமையுடன் சொல்கிறார் திரு வாசுதேவன்.இவர் அண்ணாமலை சர்வகலாசாலையில் 'பிலாசபி' எம்.ஏ. பட்டதாரி! ஆந்திரத்திலும்கேரளத்திலும் திரு வாசுதேவன் எக்ஸைஸ் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றியிருக்கிறார். தென்னிந்தியாவில் கள்ளக்கடத்தலைப் பெருமளவில் செய்து வருபவர்களைக் கண்டு பிடித்த புலி இவர்.
ஒரு சமயம் பதினெட்டு லட்சம் மதிப்புள்ள தங்கக் கட்டிகளை காரில் ஒளித்துக் கொண்டு செல்வதை இவரது 'மோப்ப' அறிவு கண்டுபிடித்து விட்டது. 'பிலாஸபி' அறிவு இப்படி அக்கிரமம் நடப்பதைப் பார்த்ததும் மனமுடையாதிருக்க உதவுகிறது!
இப்பொழுது திரு வாசுதேவன் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் சுங்க அதிகாரியாகப் பணி புரிகிறார். இவரது கழுகுக் கண்களில் ஒருவர் சென்னையிலிருந்து இலங்கைக்கு ஒரு லட்சம் மதிப்புள்ள ஐம்பது தங்கக் கட்டிகளை ஷூக்களில் மறைத்துச் செல்வது பட்டுவிட்டது. கள்ளக் கடத்தல்காரர் இவரிடம் வகையாக மாட்டிக் கொண்டுவிட்டார்.
ராஷ்ட்ரபதி பாராட்டுப் பத்திரம் பெற்ற மூன்று சுங்க இலாகா அதிகாரிகளுக்கும் அப் பத்திரங்களை வழங்கிக் கெளரவித்தார், இந்திய சர்க்கார் ரெவின்யூ மந்திரி திரு கணேஷ். மூவரையும் வாழ்த்தியோடு, "உங்களுக்குப் பக்கபலமாக என்றும், இருப்பேன் !" என்ற உறுதிமொழியையும் தந்தார். கடமையைக் கண்ணும் கருத்துமாக நிறைவேற்றுபவர்களுக்கு இந்த உறுதிமொழிதானே தேவை!
1955ல் வெளியான கணவனே கண்கண்ட தெய்வம் படத்தில் முதலில் R கணேஷ் என்று அறியப்பட்ட ஜெமினி கணேஷை அந்தப் படத்தில் நடிக்க வைக்க வேண்டாம், ஏனென்றால் அவர் மிகவும் அழகாக இருக்கிறார் என்று அபிப்ராயப்பட்டார்களாம். இவ்வளவு அழகாக இருந்தால் எப்படி பிச்சைக்கார வேஷம் கொடுப்பது, பொருந்துமா என்கிற தயக்கம். ஜெமினி ஒரு பிச்சைக்காரர் மேக்கப் போட்டுக்கொண்டு வந்து தயாரிப்பாளரை நம்ப வைத்து ஏமாற்ற, அவருக்கே அந்த வேடம் தரப்பட்டதாம்.
இந்தப் படத்திலிருந்து மு மா பாலசுந்தரமணியம் எழுதிய பாடல் ஒன்று. P சுசீலா குரலில் A ராமராவ் இசையில்
இந்தப் பாடல் எங்கள் வீட்டில் ரொம்பப் பிரபலம். எங்கள் மாமா ஒருவர் இந்தப் பாடலை எல்லார் வீட்டிலும் பாடி புகழ் பெற்றிருந்தார்! அழகான ஒரு தாலாட்டுப் பாடல்.
வெண்ணிலா காட்டியே வந்ததுமே'' கூடவே பாடி, அன்பில் மலர்ந்த நல் ரோஜா வந்தது. நான் கண்பித்துவிட்டேன் என்று சொல்வதற்குள், பாடலே வந்து விட்டது:) இனிய காலை வணக்கம் மா. இந்த நாள் இனிய நாளாக இறைவன் அருளட்டும்.
வெண்ணிலா காட்டியே வந்ததுமே'' கூடவே பாடி, அன்பில் மலர்ந்த நல் ரோஜா வந்தது. நான் கண்பித்துவிட்டேன் என்று சொல்வதற்குள், பாடலே வந்து விட்டது:) இனிய காலை வணக்கம் மா. இந்த நாள் இனிய நாளாக இறைவன் அருளட்டும்.
பதிலளிநீக்குதிருமங்கலத்தில் பார்த்த படம். பின் வந்த நீள டைட்டில் படங்களுக்கு முன்னோடி:)
பதிலளிநீக்குநானும் இந்தத் தாலாட்டுப்பாடலை என் மாமாக்களின் குழந்தைகளுக்குப் பாடி இருக்கிறேன்:)
பதிலளிநீக்கு