1) அமெரிக்காவில் உள்ள ஐநா சபையில் ஒருவர் ஒரு முறை பேசினாலே
வாழ்க்கையில்
பாக்கியம் பெற்றவர் ஆவார் ஆனால் பார்வையற்ற சென்னை மாணவி சுவர்ணலட்சுமி ஒரு
முறைக்கு இரு முறை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஐநாவில் பேசியுள்ள
சென்னை பத்தாம் வகுப்பு மாணவி என்ன செய்தார் இப்படி பாஸிட்டிவ் மனிதராக
மாற? படியுங்களேன்.
2) வழி தவறிய குழந்தைகள் கண்ணில் பட்டால் அல்ல, தினமும் பஸ்,
ரயில் நிலையங்களுக்குச் சென்று அப்படி வரும் குழந்தைகளை உரியவரிடத்தில்
ஒப்படைப்பதோடு, உரியவர் கிடைக்காத பட்சத்தில் அவர்களை இவரே படிக்கவும்
வைக்கிறார். பால் சுந்தர்சிங்
3) "கார் என்ன தண்ணியிலா ஓடுது?" ஓடினாலும் ஓடும்! அதற்கான மாதிரியைச் செய்து காட்டி பரிசு வாங்கியிருக்கும் சென்னை சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் மேல் நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் அபிஷேக்கும், ரேஹானும்
4) குழந்தையைக் காக்க கிணற்றில் குதித்த தலைமைக் காவலருக்குக் கிடைத்த பரிசுத் தொகையையும் ஊர் மக்களின் நன்மைக்காகச் செலவிடும் தலைமைக் காவலர் சுபாஷ் ஸ்ரீனிவாசன். [ஆனால் ஒரு காவலர் நீச்சல் தெரியாமல் இருக்கலாமா?]
5) புத்தகம் படிக்கும் வழக்கம் குறைந்து வரும் இந்நாளில்
மதுரை மாநகராட்சிப்பள்ளிப் பள்ளியில் அந்தப் பள்ளியின் தலைமையாசிரியை
முருகேஸ்வரி செய்திருக்கும் முயற்சி முன்மாதிரியாகக் கொள்ளவேண்டிய ஒன்று.
7) "ஏற்கெனவே என்னோடு 5-ம் வகுப்பு படித்தவர்கள், அப்போது 10-ம் வகுப்புக்குச்
சென்றுவிட்டார்கள். அந்த வயதில் 6-ம் வகுப்பு என்பது கொஞ்சம்
சங்கடமாகத்தான் இருந்தது. விடுமுறை நாள்களில் எனது வகுப்புத் தோழர்கள் எல்லாம் தங்கள் பாட்டி வீடு,
உறவினர்களின் வீடுகளுக்குச் செல்வார்கள். ஆனால் நான் மட்டும் தீப்பெட்டி
ஆலைக்குச் செல்வேன். எனது படிப்புச் செலவுகளை ஈடுகட்ட வேலைக்கு செல்வது
கட்டாயமாக இருந்தது"... குழந்தைத் தொழிலாளியாய் இருந்து பள்ளித் தலைமை ஆசிரியை ஆன ஏ.ராஜேஸ்வரி.
8) இந்தக்கால இளைஞர்கள் சினிமாவுக்குப் போவார்கள்,
பீச்சுக்குப் போவார்கள், 'மாலு' க்குப் போவார்கள். வருங்காலம் நன்றாக
இருக்க, பள்ளிப் பிள்ளைகளுக்கு உதவும் இந்தப் பாஸிட்டிவ் இளைஞர்கள் பற்றி மோகன் குமார் சொல்லியிருப்பதைப் படியுங்கள். சந்தோஷமான விஷயம்.
9) ஈர நெஞ்சத்தின் அடுத்த ஈரமான செயல்.















