எனக்கு ஒரு காலத்தில் கொத்தமல்லி துவையல் (நாங்க தொகையல் என்போம்), அதிலும் தண்ணீர் விடாம புளி உபயோகித்து இடித்துப் பண்ணுவது மட்டும்தான் பிடிக்கும். பிறகு கத்தரித் துவையல் பிடிக்க ஆரம்பித்தது. சிறுவயதில் இரயில் பயணங்களின்போது என் பெற்றோர் கொண்டுவரும் தயிர் சாதமும், தேங்காய் துவையலும் ரொம்பப் பிடிக்கும். இந்த செளசெள (மேரக்காய்? இது எந்த மொழில? அல்லது பெங்களூர் கத்தரிக்காய்னும் சொல்லுவோம்) துவையல் என் மனைவி செய்துதான் சாப்பிட்டிருக்கிறேன் (ஆரம்பத்தில் நான் சாப்பிடலை. பசங்கதான் சாப்பிடுவாங்க. நான் சமீப வருடங்களில்தான் போனாப் போகுதுன்னு சாப்பிட ஆரம்பித்திருக்கேன்).