திங்கள், 10 ஜூன், 2019

"திங்க"க்கிழமை – செளசெள துவையல் உளுத்தம் பச்சிடி - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி

எனக்கு ஒரு காலத்தில் கொத்தமல்லி துவையல் (நாங்க தொகையல் என்போம்), அதிலும் தண்ணீர் விடாம புளி உபயோகித்து இடித்துப் பண்ணுவது மட்டும்தான் பிடிக்கும். பிறகு கத்தரித் துவையல் பிடிக்க ஆரம்பித்தது. சிறுவயதில் இரயில் பயணங்களின்போது என் பெற்றோர் கொண்டுவரும் தயிர் சாதமும், தேங்காய் துவையலும் ரொம்பப் பிடிக்கும். இந்த செளசெள (மேரக்காய்? இது எந்த மொழில? அல்லது பெங்களூர் கத்தரிக்காய்னும் சொல்லுவோம்) துவையல் என் மனைவி செய்துதான் சாப்பிட்டிருக்கிறேன் (ஆரம்பத்தில் நான் சாப்பிடலை. பசங்கதான் சாப்பிடுவாங்க. நான் சமீப வருடங்களில்தான் போனாப் போகுதுன்னு சாப்பிட ஆரம்பித்திருக்கேன்).


பெங்களூர் ஒரு வாரம் வந்திருந்தேன். பையனுக்கு கல்லூரி விடுமுறை, ஆனால் ஏதே ப்ராஜக்ட் பண்ணிக்கொண்டிருக்கிறான், அதனால் சென்னை வரவில்லை. ஹாஸ்டலிலேயே சாப்பிடுவதால், ‘நல்லா அவனுக்குப் பிடித்ததாப் பண்ணிப்போடுங்கோ’ என்று என் மனைவி சொன்னா (ஏதோ அம்மாக்களுக்குத்தான் பசங்கமேல அக்கறை இருப்பதுபோல் இந்தப் பெண்கள் எப்படி இப்படி நடிக்கறாங்க?...சரி..சரி..இதைப்பற்றி கடைசில சொல்றேன்).

இன்று செளசெள துவையலும் உளுத்தம்பொடி பச்சிடியும் (டாங்கர் பச்சிடின்னு சொல்றாங்க…. இதெல்லாம் வாழ்க்கைல கேள்விப்படாதது, சாப்பிடாதது) அவனுக்குப் பிடிக்குமே என்று செய்தேன். அதன் செய்முறை இங்கு.

செளசெள துவையலுக்குத் தேவையானவை

சிவப்பு மிளகாய் வற்றல் – 3  (செத்தல் மிளகாய்-அதிராவை நாங்க மறக்கலைனு காட்ட)
கடுகு – 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 2 மேசைக் கரண்டி
பெருங்காயக் கட்டி – சிறிது
செளசெள - ஒன்று
நல்லெண்ணெய் சிறிது
புளி – சிறிய அளவு
உப்பு தேவையான அளவு

காரம் இன்னும் தேவைனா 1 மிளகாய் சேர்த்துக்கொள்ளலாம். ஆயுள் முழுவதும் துவையல் போன்றவை சாப்பிடும் அளவு வயிற்றை வைத்துக்கொள்ளணும் என்றால் 2 மிளகாயே போதுமானது. 

செய்முறை

செளசெள தோலெடுத்து கட் பண்ணிக்கோங்க. வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, உப்பு சேர்த்து, இதனை வதக்கிக்கோங்க. செளசெள நன்றாக வேகுவதற்கு நிறைய நேரம் பிடிக்கும். அதனால் நான் பெரிய துண்டுகளாக கட் செய்து, குக்கரில் ஒரு விசில் விட்டுவிட்டு, பின்பு அதனை வாணலியில் வதக்கினேன். 
சுலபமாக வெந்துவிட்டது.  பிறகு இதனை நன்கு ஆறவிடவும். இதற்கு சிறிது நேரம் பிடிக்கும்.

வாணலியில், சிறிது எண்ணெயில், மிளகாய், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் இவற்றைப் போட்டு வறுத்துக்கொள்ளவும்.  இதனை ஒரு தட்டில் போட்டு ஆறவைக்கவும்.நான் பொதுவா புளி பேஸ்ட் உபயோகிப்பேன். பெங்களூரில் மாமனார் வீட்டில் அதனை உபயோகிக்க தடா. அதனால் 2 ஸ்பூன் வெந்நீரில், புளியைப் போட்டு கொஞ்சம் நெகிழ்த்திக்கொண்டேன்.வறுத்தவைகளும், செளசெளவும் ஆறினபிறகு, மிக்சியில் முதலில் வறுத்தவைகளைப் பொடித்துக்கொண்டு, அதனுடன் புளி, செளசெள சேர்த்து அரைக்கவேண்டும்.  நான் புளி சேர்த்ததால் நன்கு அரைபடணும்னு, கொஞ்சம் அதிகமாகவே மிக்சியை ஓட்டி வழுமூன அரைத்தேன்.
      

உளுத்தம் பச்சிடிக்குத் தேவையானவை

மேசைக் கரண்டி உளுத்தம் பருப்பு
சிறிது சீரகம்
சிறிது பெருங்காயப் பொடி
தயிர் தேவையான அளவு
உப்பு தேவையான அளவு

செய்முறை

முதலில் உளுத்தம் பருப்பை சிவக்க வறுத்துக்கொண்டு ஆறவிடவும். (எண்ணெய் வேண்டாம். நான் சிறிது எண்ணெய் உபயோகித்தேன்)

பிறகு மிக்சியில் நைசாக பொடிக்கவும்.தயிரில் உளுத்தம் பொடியைப் போடவும். சீரகத்தை அப்படியே சேர்க்கலாம், இல்லை சிறிது பொடித்துச் சேர்க்கலாம். சிறிது பெருங்காயப் பொடி சேர்த்துக்கொள்ளவும்.தேவையான உப்பு சேர்த்து, கொஞ்சம் மோரும் சேர்த்து பச்சடி பதத்துக்கு தயார் செய்துக்கோங்க. (தண்ணீர் மாதிரி ஓடவும் கூடாது, இட்லி மாவு மாதிரியும் இருக்கக்கூடாது).சிறிது கொத்தமல்லித் தழை தூவிவிடவும்.நான் முதல் தடவை செய்ததால், கடுகு திருவமாறினேன். அது தேவையில்லை.
  
என் பையன் இதனை விரும்பிச் சாப்பிட்டான்.  அம்மா, உளுத்தமா பச்சிடிக்கு கடுகு திருவமாறமாட்டாளே என்றான்.  செளசெள துவையல் கொஞ்சம் கரகரப்பா அரைப்பாளேன்னு சொன்னான்.  இதெல்லாம் எனக்கு ஞாபகத்தில் இல்லைடா என்றேன்.

இது மாதிரித்தான் நேற்று காலை, அவனுக்குப் பிடித்த வெந்தயக் குழம்பு செய்தேன். 

சாப்பிடும்போது எங்க ‘பருப்பு’ என்றான். ஏடா…வாழ்க்கைல நான் வெந்தயக் குழம்பு சாதத்துக்குப் பருப்பு போட்டுண்டதே இல்லையே என்றேன்.  

“எனக்கு பருப்பு சாதத்துக்குத்தான் வெந்தயக் குழம்பு ரொம்பப் பிடிக்கும், அம்மா எப்போதும் அப்படித்தான் செய்வா.  அப்புறம் மோர் சாதத்துக்கும் வெந்தயக் குழம்பு பிடிக்கும்” என்றான். 

அவனிடம், அதுதாண்டா அப்பாவுக்கும் அம்மாவுக்கும் உள்ள வித்தியாசம். பசங்கள்ல யாருக்கு எது பிடிக்கும் என்று அவள் ஞாபகத்தில் வச்சுப்பா.  எப்போ பசிக்கும், தண்ணி குடிக்கிறானா என்றெல்லாம் கவனிப்பா. ஆனால் எனக்கு அதெல்லாம் தோணவே தோணாது என்றேன். உண்மைதானே..

என் பையன்கிட்ட எனக்குப் பிடித்த விஷயம் பிறரையும் மதிப்பது. Ie being fair to others. (அது என்னிடம் கிடையாது..ஹாஹா). அவன் கிளம்பும்போது வாசல் கதவை பூட்ட வந்தேன். ‘இன்னைக்கு உணவு நல்லாருந்ததுப்பா. தாங்ஸ்’ என்று சொல்லிக்கொண்டே சென்றான்.


அன்புடன்

நெல்லைத்தமிழன்

167 கருத்துகள்:

 1. யார் சமையல்? காலங்கார்த்தாலே பசி, சாப்பிடலாம்னு வந்திருக்கேன்! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கீதா அக்கா... வணக்கம், நல்வரவு.

   நீக்கு
  2. வாங்க கீதா சாம்பசிவம் மேடம்... உங்களுக்கு 'காலங்கார்த்தால பசி' என்றால், நான் 'கஞ்சி' செய்முறைதான் எழுதணும்.... ஆனா ஸ்ரீராம், அதையும் அனுப்பினால் வெளியிடுவார் என்ற நம்பிக்கைதான்.

   நீக்கு
  3. நெ.த. கஞ்சி குடிச்சுட்டுத் தான் உட்கார்ந்திருக்கேன். :)))) ஆனால் இப்போல்லாம் துகையல்/துவையல் பண்ண முடியறதில்லை. எனக்கு ஒத்துக்கொள்ளுவது இல்லை. இரண்டு பேருக்கும் குருக்ஷேத்திரம்! :)))))) அவருக்கு மட்டும் பண்ணி வைக்கிறேன் என்றால் ஒத்துக்க மாட்டேன்னு அடம்! :(

   நீக்கு
 2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்....

  பதிலளிநீக்கு
 3. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம் மற்றும் எல்லோருக்கும்

  நெல்லையின் ரெசிப்பி ஆஹா!

  இரண்டுமே செய்வது நெல்லை எப்படி செய்திருக்கிறார் என்று பார்க்க அப்புறம் வருகிறேன்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.

   நீக்கு
  2. வாங்க கீதா ரங்கன்...இன்றைய செய்முறை எல்லோருக்கும் (என்னைத் தவிர) ஜூஜூபியாச்சே...

   நீக்கு
 4. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், துவையல்? காலங்கார்த்தாலே! வந்திருக்கும் அனைவருக்கும் இனி வரப்போகும் அனைவருக்கும் என்னைத்தனியாக வரவேற்கும் துரைக்கும் நல்வரவும், வணக்கம், வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்று இருக்கும் மூடுக்கு துவையல் (தொகையல்) சாப்பிடலாம் என்றுதான் தோன்றுகிறது!

   நீக்கு
  2. வாங்க கீதா சாம்பசிவம் மேடம்... என்னோட ஆசைக்கெல்லாம் பண்ணினா, பையன் விருப்பப்பட்டு சாப்பிடணுமே..

   தொகையல், ஒரு கூட்டு அல்லது வெள்ளரி பச்சிடி, வெல்லம் போட்ட பாயசம் பண்ணினால், நான் உங்க வீட்டுக்கு உடனே சாப்பிட வந்துடுவேன்....

   அதுசரி... ஏன் 'காலங்கார்த்தால' என்று சொல்றீங்க? எனக்கு காலைல 7:30 மணிக்கே முழுச் சமையலும்-சாதம்,குழம்பு, கூட்டு என்றெல்லாம் சாப்பிடணும் (பெற்றோருடன் இருந்த வரை).

   நீக்கு
  3. நெ.த.நேற்றுத் தான் கோதுமை உப்புத் தோசைக்குப் பல வருடங்கள் கழித்துக் கொஞ்சம் போல் தோசை மி.பொடி போட்டுக்கொண்டேன். பயம் தான்! நல்லவேளையா ஒண்ணும் பண்ணலை! அதான் காலங்கார்த்தாலே துகையல்/துவையல் சாப்பிட முடியுமானு யோசனை! :))))) என்னோட கோணத்திலே தானே நான் பார்த்தாகணும். ஆனால் எங்க வீட்டில் எல்லோருக்கும் ஒத்துக்கும்! :)))))

   நீக்கு
  4. ஏழரை மணிக்கே முழுச் சமையலும் பண்ணிய நாட்கள் எல்லாம் மாமா ஆஃபீஸ் போன காலங்களில்! அப்போவும் அமாவாசை தவிர்த்த பிற நாட்களில் காலை டிஃபன் அல்லது கஞ்சி குடிச்சுட்டு காரியர் எடுத்துப் போவார்! மத்தியானத்துக்குச் சாப்பாட்டுக்குப் பின் சாயந்திரம் கொறிக்கனு ஏதேனும் கொடுத்து அனுப்பியதும் உண்டு!

   நீக்கு
  5. கோதுமை மா தோசை...ஆஹா.... ஆசை வந்துடுச்சே..... இன்னைக்கு நான் மைதாவும் சேர்த்து கரைத்தமா தோசைதான். அதுவும் மிளப்பொடியும், குளிரிந்த மோர்சாதமும்....யம்மி...

   பையனுக்கு உடலுக்கு நல்லதுன்னு இன்னைக்கு வேப்பம்பூ ரசம், தொட்டுக்க வெண்டைக்கறி (சொதப்பிடுச்சு, அதுனால கொஞ்சம் உருளை கட் கரேமதும்) பண்ணியிருக்கேன். காலைல அவனுக்கு இஞ்சிச் சாற்றில் தேனும் சேர்த்துக்கொடுத்தேன்.

   அதுசரி... மதியானம் டிபன் கேரியரில் எப்படி குழம்புசாதம், சாத்துமது சாதம்லாம் கொண்டுபோறாங்க? என்னக்கு கொஞ்சம் ஆறினாலே சாப்பிடமாட்டேன். தொட முடியாத சூட்டில்தான் குழம்புசாதம், சாத்துமதுலாம் பிடிக்கும். என்ன... கோஸ் மிளகூட்டு/புடலை மிளகூட்டுலாம் ஆறின சாதத்தில் சாப்பிடுவேன்.

   நீக்கு
  6. அப்போ இருந்த சூழ்நிலை அது மாதிரி! கையிலேயே எல்லாம் கொண்டு போவார்! அதன் பின்னர் தினம் மத்தியானங்களில் வீட்டுக்குச் சாப்பிடவும் வந்தது உண்டு! அதெல்லாம் ராஜஸ்தான், குஜராத், ஊட்டி போன்ற ஊர்களில்!

   நீக்கு
 5. அன்பின் ஸ்ரீராம்..
  கீதாக்கா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்வரவு துரை ஸார்... உங்களுக்கும், இனி வரப்போகும் நம் நட்புறவுகள் யாவருக்கும்.

   நீக்கு
 6. உளுத்தம் பருப்பு பச்சடி என் மாமியாரிடம் கற்றது. டாங்கர் பச்சடி என்று சொல்வாங்க....ஜீரகம் சேர்த்ததில்லை...இதுகண்ணுல பட்டுச்சு ஸ்க்ரோல் பண்ணும் போது எனவே...இப்ப சொல்லிவிட்டு அப்புறம் வருகிறேன்..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தி/கீதா, டாங்கர் பச்சடிக்கு மோரில் ஜீரகத்தைக் கையால் கசக்கிச் சேர்க்கணும். அதான் முக்கியம் அதிலே!

   நீக்கு
  2. நாங்களும் டாங்கர்னுதான் சொல்லுவோம். சுவை!

   நீக்கு
  3. நான் ஜீரகத்தை (கொஞ்சம்) உளுந்தோடு அரைத்தேன். திரும்ப இருமுறைகள் செய்துட்டேன். பையன் விருப்பப்படி, எண்ணெய் விடாமல் வறுத்து, நன்கு பொடி செய்துட்டேன் (துளி ஜீரகத்தோட). பெருங்காயம், உப்பு, கொஞ்சம் நீர்க்க தயிர் சேர்த்து, 'அட்டஹாசம்' என்று அவன் இருதடவை சொல்லிட்டான். வேற எதுவும் (அவனுக்குப் பண்ணும்போது) சேர்க்கப்போவதில்லை....

   நீக்கு
  4. டாங்கர் பச்சடிக்கு ஜீரகத்தை மோரில் உளுந்து மாவைப் போட்டுக்கலக்கும்போது கூட சேர்க்கலாம். தப்பில்லை. போட்டு அரைக்கணும்னு எல்லாம் இல்லை. மாமியார் வீட்டில் பச்சை (வறுக்காத) உளுந்த மாவில் கூட டாங்கர் பச்சடி பண்ணுவாங்க!

   நீக்கு
  5. ப மி கூட போடுவாங்க எங்க மாமியார் ஆனால் ஜீரகம் சேர்த்த நினைவில்லை கீதாக்கா இனி நீங்க சொல்லிருக்காப்ல சேர்த்துச் செய்துடலாம்...டன்!!

   கீதா

   நீக்கு
  6. வாங்க கீதா ரங்கன். காலையில் எழுத மறந்துவிட்டது.... நீங்க பெங்களூர்லதான் இருக்கீங்களா? உங்க ஊருக்கு பஸ் ஏறினப்பறம் சென்னையில் இருக்கேன்னு சொல்லிடப்போறீங்க.....

   பச்சை மிளகாய் நல்லா இருக்குமா இதில்?

   நீக்கு
 7. டாங்கர் பச்சடி செய்துட்டு அதுக்கு இம்புட்டு பில்ட் அப்பா? :P

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கர்ர்ர்ர்ர்...... அதை விட்டுட்டீங்க!

   நீக்கு
  2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..... குழந்தை, முதல் முதல்ல எழுந்து கொள்வதோ, திரும்பிக்கொள்வதையோ நீங்கள் எத்தனை முறை வியந்து பார்திருப்பீர்கள், அக்கம் பக்கத்துல, உறவினர்கள்ட சொல்லியிருப்பீங்க. (அட... நேற்றைக்கு அவன் கவுந்து படுத்துண்டான். அப்படியே என்னைப் பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தான் என்றெல்லாம்). அப்போல்லாம், யாராவது 'ப்பூ..இதுக்கா மெனெக்கெட்டு போன் பண்றா..குழந்தைனா அந்த அந்த பருவத்துல கவுந்துக்கும், தலையைத் தூக்கும், எழுந்துக்க டிரை பண்ணும்' அப்படீன்னு யாராவது சொல்வாங்களா?

   நம்ம முயற்சியை நாமதானே பாராட்டிக்கணும் (அதிரா இயல்புப்படி). ஹா ஹா...

   மற்றவற்றிர்க்குப் பிறகு வருகிறேன்..... கணவர் இராணுவத்தில் பணியாற்றினார் என்பதற்காக, நான் செய்த 'உளுத்தமா பச்சிடி'யை, 'டாங்க்'கர் (அதிலும் 'கர்ர்ர்ர்ர்ர்ர்ர்' விடலை) பச்சிடின்னு சொல்றீங்க...ஹாஹா

   நீக்கு
  3. டாங்கர் பச்சடிக்குக் கடுகு நாங்கல்லாம் போடுவோம். கடுகு, பெருங்காயம், பச்சைமிளகாய், கருகப்பிலை தாளிப்பில் சேர்ப்பது உண்டு. இன்னிக்குக் கூடப் பண்ணலாம்னு இருந்தேன். ஆனால் இன்னிக்குக் குழம்போ/துகையலோ இல்லை. எலுமிச்சம்பழ சாதம்! சரியா வருமானு தெரியலை! :))))

   நீக்கு
  4. சென்ற சனிக்கிழமை அவனுக்குப் பிடிக்கும் என்று எலுமிச்சை சாதம் செய்திருந்தேன். அவன் 'ப்பூ... மஞ்சப்பொடி ஜாஸ்தி...அம்மா பண்ணறமாதிரி வரவே வராது'ன்னுட்டான். இன்னொரு முறை செய்யலாம்னு எலுமிச்சை வாங்கிவைத்திருக்கிறேன்.

   பையனும் என்னைப்போல்தான். பழக்கப்பட்ட உணவில் எந்த மாற்றத்தையும் (கருவேப்பிலை போடுவதைக்கூட) ஏத்துக்க மாட்டேங்கிறான்...

   நீக்கு
  5. எலுமிச்சம்பழச் சாதம் தான் பண்ணினேன். டாங்கர் பச்சடி வேண்டாம்னுட்டார். கொத்தவரைக்காய்த் தேங்காய் போட்டுக் கறி. எங்க பெண்ணுக்கு இந்தக் காம்பினேஷன் பிடிக்கும். பள்ளி நாட்களில் எலுமிச்சைசாதம், (மஞ்சள் நிறம்) கொத்தவரக்காய்க் கறி (பச்சை நிறம்) கேட்டு எடுத்துட்டுப் போவாள்! ஜீரகம், மிளகு வறுத்து அரைத்த ரசம். எனக்குக் காரமா இருந்தது. அதனால் அவருக்குச் சரியா இருந்தது! எங்க வீட்டில் இப்படித் தான்! அவர் காரம் என்றால் எனக்குக் காரமே தெரியாது! அவருக்கு உ.கி. ஒத்துக்காது, வாழைக்காய் ஒத்துக்காது! எனக்கு ரெண்டும் ஒத்துக்கும்! :)))))

   நீக்கு
  6. கீதாக்கா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதான் நெல்லையே சொல்லிருக்காரே உங்க எல்லாருக்கும் இது ஜுஜிபியா இருக்கும்னு...பாவம் என் தம்பி!! இம்புட்டு செய்யறாரே என்ன ஆரவத்தோடு...ரொம்ப மெட்டிக்குலசா செய்கிறார். நான் நிஜமாவே அவரைப் பாராட்டு மழை பொழிவேன்...பின்ன இப்படி ஒருத்தர் கிச்சன்ல செய்து கொடுத்தா கசக்கவா செய்யும்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!ஹா ஹா ஹா ஹா

   நெல்லை ஒரு மீம்ஸ்?? அல்லது ஆட்??? கூட வந்துது பார்த்தீங்கல எபி வாட்சப் க்ரூப்ல!!!!!!!!! கல்யாணத்துக்கு பையன் பார்க்கறது...

   நெல்லை ரொம்பவே நல்லாருக்கு குறிப்பு...சூப்பர்...சாப்பிடணும் போல இருக்கு. சரி ஒரு நாள் எபி வாசகர் எல்லாருக்கும் விருந்து வைச்சுருங்க!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! படையா வந்துர மாட்டோம்???!!!!!!!!

   கீதா

   நீக்கு
  7. கீசா மேடம்.... எனக்கு எலுமிச்சை சாதத்துக்கு தேங்காய் சட்னி பிடிக்கும். எங்க கல்லூரி ஹாஸ்டல்ல அப்படித்தான் போடுவாங்க. வெறும்ன எலுமிச்சை சாதம் சாப்பிடவும் பிடிக்கும்.

   என் பெண் 'கிழங்கு வகைகள் வேண்டாம்' என்பாள் (உ.கி தவிர). அதனால் எனக்குப் பிடித்த சேப்பங்கிழங்கையும் நான் விட்டுவிட்டேன். அவள் சொன்னால்தான் உ.கி.

   எங்க வீட்டுல, எங்க அப்பாதான் அன்றைய 'மெனு' சொல்வார். நானும் அதைத்தால் பலப் பல வருடங்களாக கடைபிடித்தேன். இப்போ ஓரிரு மாதங்களாகத்தான், அவள் என்ன செய்தாலும் சாப்பிடறதுன்னு வச்சிருக்கேன். அதுனால அவளால் நிறைய மெனு பண்ணமுடியுது. நான் சொல்லும்போது தக்காளி ரசம், பருப்புசுலி, சாம்பார், உருளை கறி, சாதம், கோஸ் மிளகூட்டு என்று சில காம்பினேஷன்களையே திரும்பத் திரும்ப செய்யச் சொல்லுவேன்.

   நீக்கு
 8. //செளசெள நன்றாக வேகுவதற்கு நிறைய நேரம் பிடிக்கும். அதனால் நான் பெரிய துண்டுகளாக கட் செய்து, குக்கரில் ஒரு விசில் விட்டுவிட்டு, பின்பு அதனை வாணலியில் வதக்கினேன்//

  ஹையோ, ஹையோ, எதுக்கு இத்தனை கஷ்டப்படணும், துருவல் கட்டையில் வைத்துத் துருவிட்டு வதக்கினால் அருமையாய் வதங்குமே! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! :))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்க பாயிண்ட் சரிதான் கீசா மேடம்... என்னவோ எனக்கு நான் செய்வது கொஞ்சம் சுலபமாகவும், தவறு நேர்ந்துவிடாதபடியும் இருக்கு.

   நீக்கு
 9. துவையல் அரைக்கையில் தாளிதத்தைக் கடைசியில் சேர்த்து ஒரே முறை ஓட்டிவிட்டுப் பின்னர் எடுத்துவிட்டால் அந்த ருசி தனி! எங்க வீட்டில் இந்த ருசியில் தான் துவையல் அரைப்பது. பறங்கிக்காய், சௌசௌ போன்றவற்றில் துவையல் செய்தால் அவற்றைத் துருவி விட்டுப் பின்னர் வதக்கினால் சீக்கிரமாய் வதங்கும். துவையலும் நன்றாக இருக்கும். வேக வைத்தால் துவையல் ரொம்ப நேரம் இருக்காது என்பதோடு எங்க வீடுகளில் வேக வைத்துச் சேர்க்கும் வழக்கமும் இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி கீதா சாம்பசிவம் மேடம்... அடுத்த முறை தாளிதத்தை கடைசியில் சேர்த்து ஒரு முறை ஓட்டுகிறேன். என் பையன், 'ரொம்ப மசிய அரையாம கொஞ்சம் கர கரன்னு-அதாவது செளசெள பீஸ் அங்க அங்க வரணும்' என்றான். எல்லாம் நேயர் விருப்பம்தான். ஹா ஹா.

   நீக்கு
  2. கீதாக்கா நான் உங்க ரெசிப்பி கத்திரிக்கா பொரிச்ச கூட்டு செஞ்சிட்டேன் இதோட 3 டைம்ஸ் :)

   நீக்கு
 10. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்!

  பதிலளிநீக்கு
 11. இன்று அன்பாய் செய்த சமையல் குறிப்பு
  மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது படிக்கும் போது.

  செளசெள தோலில் இது போல் துவையல் செய்யலாம்.( மருந்து அடிக்காத காய் தோல் வேண்டும்) தோலை வதக்கி விட்டு செய்யலாம்.


  கடுகு, உளுந்து ,பெருங்காயம் வறுத்ததை கடைசியில் கீதா சொன்னது போல் மிக்ஸியில் ஓரு ஓட்டு ஓட்டி விடுவோம்.
  அம்மியில் அந்தக்காலத்தில் அரைக்கும் போது கடைசியில் வைத்து ஒரு உருட்டு உருட்டு என்பார்கள் என் அத்தை.

  அம்மா குழந்தைக்கு என்ன பிடிக்கும் என்று தெரிந்து வைத்து இருப்பது போல், குழந்தையும் அம்மாவின் பக்குவத்தை சொல்வது தெரிந்து வைத்து இருப்பது உண்மை.

  ஸ்ரீராம் ஒருமுறை பின்னூட்டத்தில் பெண்களை விட அம்மாவின் சமையலை நினைத்து கொண்டு இருப்பது ஆண்கள்தான் என்றார். ஆண்கள்தான் அம்மாவை அதிகம் நினைக்கிறோம் என்றார் அதுவும் உண்மை என்பதை பதிவு சொல்லுது.

  //‘இன்னைக்கு உணவு நல்லாருந்ததுப்பா. தாங்ஸ்’ என்று சொல்லிக்கொண்டே சென்றான்.//

  இது போதுமே! படிக்கும் போது கண்ணில் நீர் துளிர்த்து விட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //ஸ்ரீராம் ஒருமுறை பின்னூட்டத்தில் பெண்களை விட அம்மாவின் சமையலை நினைத்து கொண்டு இருப்பது ஆண்கள்தான் என்றார். ஆண்கள்தான் அம்மாவை அதிகம் நினைக்கிறோம் என்றார்//

   அப்படியா சொன்னேன்? எனக்கு நினைவில்லை. ஆனால் அது உன்மடி என்றுதான் எனக்கும்.. ச்ச்சே... இப்போதும் தொட்டின்றுகிறது. எனக்கு அம்மாவின் நினைவு இந்த வரிகளால் வந்துவிட்டது.

   நீக்கு

  2. ஸ்ரீராம்.
   6 மே, 2014 ’அன்று’ பிற்பகல் 3:05
   எதைக் கேட்டாலும் 'அம்மா' என்றே சொல்லும் குழந்தை! ஆம். உண்மைதான். எல்லாக் கணவர்களும் மனைவி சமையல் சாப்பிட்டு விட்டு 'எங்க அம்மா சமையல் இதை விட நல்லா இருக்கும்' என்பார்கள்! இந்த வகையில் பெண்கள் கூட அம்மாவை அந்த அளவு நினைக்க மாட்டார்கள்! :))))))))

   https://mathysblog.blogspot.com/2014/05/blog-post_6.html

   அம்மா என்றால் அன்பு பதிவில் கொடுத்த பின்னூட்டம் ஸ்ரீராம்.

   நீக்கு
  3. வாங்க கோமதி அரசு மேடம்.... தளத்திலிருந்து செல்வதற்குமுன் சட் என்று உங்கள் பின்னூட்டம் கண்ணில் பட்டுவிட்டது. பெற்றோர்கள், பெரும்பாலும் பசங்கள்ட இருந்து எதையும் எதிர்பார்க்கமாட்டார்கள். நம்ம கஷ்டத்தில் (உடல், முதுமை) அவங்க நிச்சயம் பங்குபெற முடியாது. ஆனால் ஒரு, கண்பார்வை, ஒரு நல் வார்த்தை, ஒரு நினைவுகூறும் சொல் - இதுவே அவங்களுக்கு முழுமையான திருப்தியைத் தந்துவிடும் என்று நினைக்கிறேன்.


   உங்கள் வரி, 'கண்ணில்ல் நீர் வந்துவிட்டது' என்பதைப் படித்து இதனை எழுதத் தோன்றியது.

   பெண்களைவிட ஆண்கள்தாம் அம்மாவை நினைக்கிறோம் என்பது உண்மையான்னு தெரியலை. நான் சகோதரிகளுடன் பிறக்கலை. என் பெண், அவள் அம்மாவிடம் காட்டும் அன்பு/நேசத்தை நான் பார்க்கிறேன், அதில் more of உரிமை தெரியுது (ஏன் டக்குனு டிபன் பாக்ஸ் எடுத்துவைக்கலை... இந்தோ ஒரு நிமிஷத்தில் நான் ஆபீசுக்குக் கிளம்பிடுவேன்..லேட்டாச்சுனா சாப்பிடமாட்டேன்...). இந்த மாதிரியியெல்லாம் இந்த வயதில் அப்பாவிடம் உரிமை இருக்காதுன்னு நினைக்கிறேன் (என் உதாரணத்தில்). நான், அவங்க சொன்ன டயத்துக்குத்தான் சாப்பிட வரணும், ரொம்ப லேட் ஆக்கினாங்கன்னா, எனக்குக் கோபம் வரும், எல்லாத்திலயும் ஒரு ஒழுந்து இருக்கணும்னு நினைப்பேன்.

   உங்கள் பின்னூட்டம் கண்டு மகிழ்ச்சி. செளசெள தோலில் இதுவரை தொகையல் செய்ததில்லை (இப்போல்லாம் எந்தக் காயின் தோலும் மருந்து தாக்கப்பட்டிருக்கும். என்ன கழுவினாலும் போகாது என்பது என் எண்ணம்).

   நீக்கு

  4. //ஒரு, கண்பார்வை, ஒரு நல் வார்த்தை, ஒரு நினைவுகூறும் சொல் - இதுவே அவங்களுக்கு முழுமையான திருப்தியைத் தந்துவிடும் என்று நினைக்கிறேன்.//

   உண்மைதான் நெல்லைத்தமிழன் அது போதும் எங்களுக்கு வேறு எதும் வேண்டாம்.

   மகனுக்கு 7ம் தேதி திருமண நாள். மருமகள் பீட் ரூட், காரட் அல்வா செய்து இருந்தாள். மகன் என்னிடம் காட்டி விட்டு நீ கட்டியாக பர்பி மாதிரி செய்வாய் இவள் இப்படி செய்து இருக்கிறாள் என்றான் . எனக்கு அது தான் பிடிக்கும் என்றான். ஒரு பக்கம் மகிழ்ச்சி என்றாலும் மருமகள் ஆசையாக செய்ததை இப்படி சொல்கிறனே என்று . நான் செய்தது பர்பி, அவள் செய்து இருப்பது அல்வா. உனக்கு சிறுவயதில் கையில் ஒட்டினால் பிடிக்காது அதனால் பர்பியாக செய்தேன் என்றேன்.

   ஓவனில் சிறிது வைத்து எடுத்தால் பர்பியாக மாறி விடும்.மருமகள் அப்படியே செய்து கொடுத்து விட்டாள். உங்கள் பேரனுக்கும் கையில் பிசு பிசு என்று ஒட்டக்கூடாது அத்தை என்றாள்.

   பயணங்களின்போது என் பெற்றோர் கொண்டுவரும் தயிர் சாதமும், தேங்காய் துவையலும் ரொம்பப் பிடிக்கும்.//

   நீங்களும் அம்மாவின் துவையல் பிடிக்கும் என்று சொல்லி இருக்கிறீர்கள் நெல்லைத் தமிழன்.

   அம்மா பெண்ணிடம் கொஞ்சம் கண்டிப்பு காட்டுவார்கள். நான் அப்பாகுழந்தை அப்பாவிடம் எடுத்துக் கொண்ட உரிமையை அம்மாவிடம் எடுத்துக் கொள்ளவில்லை.

   என் தங்கைகள் அப்பா இல்லாமல் அம்மாவிடம் வளர்ந்தவர்கள் அவர்களுக்கு அம்மா அப்பாவின் பாசத்தையும் சேர்த்து கொடுத்ததால் உங்கள் பெண் உரிமை எடுத்துக் கொள்வது போல் அம்மவிடம் எடுத்துக் கொள்வார்கள். அவர்க்ளுக்கு பிடித்த மாதிரி அம்மா செய்ய வேண்டும். அம்மாவிடம் கூடுதல், உரிமை, கூடுதல் பாசம் எல்லாம் காட்டுவார்கள். விடுமுறைக்கு அம்மாவீட்டுக்கு போனால் நான் என் தங்கைகள் அம்மாவிடம் நடந்து கொள்வதைப் பார்த்து(அதிக உரிமை எடுத்துக் கொள்வதை)ஆச்சிரியபடுவேன்.

   ஆமாம் ,நீங்கள் சொல்வது போல் இப்போது காய்கறிகள் , பழங்கள் எல்லாம் மருந்து அடித்து இருக்கும் பயம் உள்ளது தான்.

   நீக்கு
  5. எனக்கு அம்மா தான்! அதிலும் இட்லி பண்ணும் அன்று நான் செய்யும் அடத்தை நினைத்து ஒரு பக்கம் வருத்தப்பட்டாலும் இன்னொரு பக்கம் அப்பாவுக்குத் தெரியக் கூடாதேனு பயந்து கொண்டே சின்ன மொட்டைச் சட்டியில் அம்மா வார்த்துக் கொடுத்த இலுப்பச்சட்டி தோசையும், அதன் மேல் போடும் மிளகாய்ப் பொடியும் மறக்க முடியாதவை!

   நீக்கு
  6. //நான், அவங்க சொன்ன டயத்துக்குத்தான் சாப்பிட வரணும், ரொம்ப லேட் ஆக்கினாங்கன்னா, எனக்குக் கோபம் வரும், எல்லாத்திலயும் ஒரு ஒழுந்து இருக்கணும்னு நினைப்பேன்.//

   நீங்கள் என் அம்மா போல் இருக்கிறீர்கள். என் அம்மாவுக்கு

   அந்த அந்த நேரத்தில் அந்த அந்த வேலையை முடிக்க வேண்டும். அதில் முக்கியமானது நேரத்திற்கு சாப்பிடுவது.

   நீக்கு
  7. நான் அப்பா பெண் எனக்கு வேண்டியதை அடம் பிடித்து அப்பாவிடம் சொல்லி வாங்கி கொள்வேன் கீதா.இரவு சாப்பாடு பிடிக்கவில்லை என்றால் அப்பா சாப்பிடும் வரை சப்பிட பிடிவாதம் பிடித்து கொண்டு இருப்பேன் அம்மாவிடம்.
   அப்பா தான் சாப்பிடும் போது கோமதிம்மா, கோமு வா சாப்பிட என்று கெஞ்சி, கொஞ்சும் போது அப்பாவின் பக்கத்தில் இடித்துக் கொண்டு உட்கார்ந்து விடுவேன்.
   அப்பாவிற்கு புளியாத தோசை செய்து கொடுப்பார்கள் அம்மா (அப்பாவிற்கு அது மிகவும் பிடிக்கும்) மெத் மெதென்று தோசை எனக்கு வைக்கபடும் மகிழ்ச்சியாக சாப்பிட்டு விட்டு அம்மாவின் முறைப்பை பொருட்படுத்தமால் ஓடி விடுவேன்.
   எனக்கும் தோசைதான் மிகவும் பிடிக்கும் கீதா.

   நீக்கு
  8. கீசா மேடம்..... 'அம்மா அப்பாவுக்குத் தெரியாமல் வார்த்துக்கொடுப்பா' என்று எழுதியதைப் படித்தபோது என்ன என்னவோ நினைவுகள்.......

   வாழ்க்கைல நாம 'திருப்தியா நன்றியுடையவனாக இருந்தோம்' என்று சந்தோஷப்பட்டுக்கொள்ள முடியாமல், எத்தனையோ நல்ல உள்ளங்களுக்கு, நம் வாழ்க்கை முன்னேற்றத்தில் பங்குகொண்டவர்களுக்கு, 'நன்றி உடையவனாக' இருந்ததில்லையே.... 'நன்றி தெரிவித்ததில்லையே'... என்றெல்லாம் மனதில் தோன்றுகிறது. நான் ரொம்ப வருத்தப்படுவது, எங்க அப்பாவை, வெளிநாட்டுக்குக் கூட்டிச் செல்லலையே... என் காரில் உட்காரவைத்து அவருக்கு ஊரைச் சுற்றிக் காண்பிக்கவில்லையே என்பதுதான்..... இறைவன், என் அம்மாவை அப்படி வெளிநாட்டுக்கு பலமுறை கூட்டிச்செல்லும் வாய்ப்பை அளித்தான். எங்க ஊரில், 'அரசர்களின் இடுகாடு' முதற்கொண்டு நான் எல்லா இடங்களையும் என் அம்மாவுக்குக் காண்பித்தேன் (தேசத்தில் பதற்றம் ஏற்பட்டு டாங்கிகள்லாம் ஆங்காங்கே நிறுத்தி ராணுவத்தினர் அங்கு காவல் காத்துக்கொண்டிருந்தது முதல்கொண்டு....ஹாஹா)

   நீக்கு
 12. சமையல் குறிப்பு படங்களுடன் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இங்க பெங்களூரில் எனக்கு 'அதிசய' வாய்ப்பு கிடைத்தது. பையனுக்கு செமெஸ்டர் விடுமுறை, ஆனால் ஏதோ பிராஜக்ட் பண்ணிக்கிட்டிருக்கான், காலேஜ் போறான். அவனுக்கு காலையிலும் இரவிலும் உணவு தயார் செய்கிறேன் (ஹாஹா). என்னவோ அவனுக்கு 'உதவுவது' போல. (அவன் மனதில், அம்மா பண்ணுவதுபோல இல்லை. ஏதோ.. சாப்பிடுகிறேன்... என்று நினைக்கிறானோ என்னவோ... ஹாஹா

   நீக்கு
  2. முடிந்தவரை அவன் விருப்பம் கேட்டு சமைத்து கொடுத்தால் இன்னும் மகிழ்ச்சி அடைவானே குழந்தை.

   //இன்னைக்கு உணவு நல்லாருந்ததுப்பா//
   மகன் சொன்னது உண்மை. அப்பா, கைமணத்தை அம்மா வந்தவுடன் சொல்வான்.

   நீக்கு
 13. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

  மேரக்காய் - கோவையில் சௌசௌ-வை இப்படித்தான் அழைக்கிறார்கள் - வட்டார வழக்கு!

  டாங்கர் பச்சடியும், தொகையலும் நன்று. சௌசௌ தோலில் தொகையல் செய்வதுண்டு - சௌசௌவில் கூட்டு!

  நெல்லைத் தமிழன் அவர்களின் ரெசிப்பி நன்று. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய காலை வணக்கம் வெங்கட். வாங்க.. வாங்க...

   நீக்கு
  2. வாங்க வெங்கட் நாகராஜ்.... மேரக்காய் (நான் இந்தப் பெயரை உபயோகப்படுத்தியதே இல்லை) எழுதும்போது உங்களை நினைத்துக்கொண்டேன்.

   இரண்டு நாட்களுக்கு முன் பெங்களூரில், பிக்கானீர் கடையைப் பார்த்தவுடன், எனக்கு தில்லியில் சாப்பிட்ட நினைவும், உங்கள் நினைவும் வந்தது. பெங்களூர் பிக்கானீர் எப்படி இருக்குன்னு போய்ப்பார்க்கணும்.

   வருகைக்கு நன்றி

   நீக்கு
 14. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
  அருமையான தொகையலும் பச்சடியும். எனக்குத் துவையல்னு சொன்னா சாப்பிட்ட மாதிரி இருக்காது.

  அழகானபடங்கள், படிப்படியா விளக்கங்கள்.
  எல்லாக் காய்கறித் தொகையலும் சிறப்பு தான்.
  சௌசௌ, ரொம்பச் சின்னதாக நறுக்கி வதக்கி
  அரைத்து விடுவேன். வேக வைத்தால் அந்த authentisity
  போய் விட்ட மாதிரி இருக்கும்.
  டாங்கர் பச்சடியும் ஜோர்.
  முதலில் எல்லாம் பிடிக்காது.
  இப்பொழுது நாக்கு நன்றாகச் சாப்பிட வேண்டும் என்று
  அடம் பிடிக்கிறது.

  படங்களைப் பார்த்தாலே பசி வந்துவிட்டதுமா.
  மனம் நிறைந்த வாழ்த்துகள் நெல்லைத்தமிழன்.
  பையனைப் பற்றின கூடுதல் தகவல்கள் இனிமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அம்மா.. வணக்கம்.

   நீங்கள் சொன்ன மாதிரியே மேலே கீதா அக்காவுக்கு பதில்சொல்லும்போது தொகையல் என்றும் சொல்லி விட்டேன்.

   நீக்கு
  2. வாங்க வல்லிம்மா... நீங்க சொல்லியிருப்பது சரிதான். இலுப்புச் சட்டியில் வதக்கி ஆற வைத்து தொகையல் செய்யணும். வேகவைத்து வதக்கினால் ஒரிஜினாலிட்டி போய்விடும் என்பது மிகச் சரிதான். இருந்தாலும், கருகிடுமோ, நல்லா வேகறதுக்கு ரொம்ப நேரம் அடுப்பு முன்னால இருக்கணுமே என்றெல்லாம் நினைத்துத்தான் நான் இதனைச் செய்கிறேன்.

   உங்க கருத்துக்கு மிக்க நன்றி...

   நீக்கு
 15. அனைவருக்கும் காலை வணக்கம். ஆஹா! கொத்துமல்லி துவையல் மற்றும் டாங்கர் பச்சிடி. இரண்டுமே எனக்கு பிடித்த விஷயங்கள். பின்னர் வருகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க பானு அக்கா... காலை வணக்கம்.

   //கொத்துமல்லி துவையல்//

   இருங்க.. நான் போய் மறுபடி தலைப்பைப் பார்த்துட்டு வர்றேன்.

   நீக்கு
  2. வாங்க பானுமதி வெங்கடேச்வரன் மேடம்.... கவுத்துட்டீங்களே.... தலைப்பையே மாத்திட்டீங்களே...

   காலை வணக்கம்.... வேலைகளை முடித்துவிட்டு பிறகு வாருங்கள்.

   நீக்கு
  3. //எனக்கு ஒரு காலத்தில் கொத்தமல்லி துவையல் (நாங்க தொகையல் என்போம்), அதிலும் தண்ணீர் விடாம புளி உபயோகித்து இடித்துப் பண்ணுவது மட்டும்தான் பிடிக்கும்.// வேறொன்றுமில்லை, காலையில் கொத்துமல்லி துவையல் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அப்போது, முன்பெல்லாம் எங்கள் வீட்டில் கல்லுரலில், இரும்பு உலக்கையால் இடித்து அம்மா செய்யும் கொத்துமல்லி துவையல் நினைவுக்கு வந்தது. நெல்லை தமிழனும் அதை குறிப்பிட்டிருந்ததைப் பார்த்ததும் உணர்ச்சி வசப்பட்டு விட்டேன். சௌ சௌ வேறு எனக்கு பிடிக்காதா?, அதுவும் ஒரு காரணமாக அமைந்திருக்கலாம். ஹி ஹி.

   நீக்கு
  4. கொத்தமல்லி புளி வைத்து இடித்த தொக்கு - என் ஆல் டைம் ஃபேவரைட். ஆனால் மிக்ஸில அதுமாதிரி வருவதில்லை. சிக்கிக்கொள்வதால், தண்ணீர் விட்டால் டேஸ்ட் மாயமாயிடுது. அந்த இடித்த தொக்கு + மோர் சாதம், இல்லைனா, தொக்கில் நல்லெண்ணெய் விட்டுக்கொண்டு, கடுத்த தோசை...இல்லைனா சப்பாத்தி...யம்மி...

   'அந்த நாளும் வந்திடாதோ'ன்னு பாடாத குறைதான்.

   நீக்கு
  5. சொல்லாதீர்கள், நாக்கில் ஊறிய ஜலம் கீழே வழிந்து விட்டது. ஹூம்..!

   நீக்கு
 16. திங்கக் கிழமை..வழக்கம்போல ருசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க முனைவர் ஜம்புலிங்கம் ஐயா. வருகைக்கு நன்றி.

   நீக்கு
 17. அருமையான திங்கக்கிழமை....

  வாழ்க நலம்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க துரை செல்வராஜு சார்... வருகைக்கு நன்றி.. குவைத்திலும் செளசெள கிடைக்குமே (பிலிப்பினோக்கள் விரும்பி சாப்பிடுவாங்களே)

   நீக்கு
  2. ஆமாம்... சௌசௌ தாராளமாகக் கிடைக்கிறது... அப்போதெல்லாம் சௌசௌ சூப் செய்வேன்...

   ஆனால்,
   இப்போது சமையல் அறை கை விட்டுப் போயிற்று...

   மிகவும் சிரமமாகி இருக்கிறது...

   நீக்கு
  3. ஆமாம் துரை செல்வராஜு சார்.... என் மனதிலும் தோன்றியது. விரைவில் இந்த நிலை மாறும். (இதை எழுதும்போது எனக்குப் பிடித்த, ஆனால் அறச்சொற்கள் நிரம்பியதால் பாடத் தயக்கமான ஒரு பாடல் நினைவுக்கு வருது.

   நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே......
   .....
   இந்த நிலை என்று மாறுமோ.......


   நன்றி...

   நீக்கு
 18. அனைவருக்கும் காலை வணக்கம்.

  சிறிது நேரம் கழித்து வருகிறேன்.

  பதிலளிநீக்கு
 19. தோடக்கத்தில் மனைவியை குட்டி விட்டு முடிவில் தட்டிக் கொடுத்த விடயங்களை ரசித்தேன் நண்பரே..

  துவையலும் நன்றே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நானும் ரசித்தேன் தேவகோட்டை ஜி.

   நீக்கு
  2. வாங்க கில்லர்ஜி....பையன்/பெண் - அம்மா இவங்களுக்குள்ள ரிலேஷன்ஷிப் ரொம்ப வித்தியாசமானது. என்னதான் நாம் உயிரைக்கொடுத்து எதைச் செய்தாலும், 'அம்மா' போல பசங்களுக்கு வராது. பொதுவா ஆண்கள் கொஞ்சம் 'கண்டிப்பு', 'டிசிப்பிளின்' என்று ரோல் மாடலா இருப்பாங்க. ஆனா அம்மா, பசங்களோட குழைந்து ஒண்ணுக்குள்ள ஒண்ணா இருப்பாங்க. பசங்க நம்மகிட்ட கோபமாவோ எதுத்தோ பேசினா, பொதுவா நாம அதை அனுமதிக்கமாட்டோம் (டேய்...இங்க நான் பாஸ் என்று சொல்லாமல் சொல்லிவிடுவோம்). ஆனா அம்மாகிட்ட சண்டை போட்டாலும், உடனே ஒட்டிக்குவாங்க. அந்தக் கோபத்தைச் சாக்கிட்டு நாம மெதுவா, 'என்னை மாதிரி வராதுல்ல' என்று சொன்னாலும் அதை ஏத்துக்கமாட்டாங்க... உங்களுக்கு ஓரளவு இதில் அனுபவம் இருந்திருக்கும்.

   நீக்கு
 20. நெல்லைத் தமிழரே, அதென்னமோ உங்களை வம்பிழுக்காமல் கருத்துச் சொல்ல முடியலை! அதனால் ஆரம்பத்தில் வம்பை வளர்த்து விட்டேன். உண்மையில் உங்களுடைய இந்த முயற்சிகள் எல்லாம் பாராட்டத்தக்கவை என்பதோடு நீங்கள் முனைந்து செய்து பார்த்துவிட்டுப் பின்னர் பெண்கள் எத்தனை சிரமப்படுவார்கள் என்பதையும் உணர்கிறீர்கள். உங்கள் மகனையும் அப்படியே பழக்கி விடுங்கள்! பின்னால் நல்லது! மகனிடமிருந்து பாராட்டுக்கள் கிடைத்ததில் மனம் நிச்சயமாக மகிழ்ந்திருக்கும். அதை மனைவியிடம் பகிர்ந்து கொண்டிருப்பீர்கள் என்றும் நம்புகிறேன். உங்கள் மனைவிக்கு நீங்கள் செய்யும் உதவிகளைப் போலவே என் தம்பி அவன் மனைவிக்குச் செய்வான். சில சமயங்களில் உங்களைப் போல் முழுச் சமையலுமே அவன் செய்வான். நீங்கள் குறிப்பிடும்போதெல்லாம் நான் என் தம்பியைத் தான் நினைத்துக் கொள்வேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீசா மேடம்... நீங்க வம்பிழுத்தால்தான் எனக்கு பதில் சொல்லும் எண்ணமே வருது. அதனை வரவேற்கிறேன். ஹா ஹா

   'பெண்கள் சிரமப்படுவார்கள்', 'மனைவிக்கும் சமையல் செய்வது' - இதெல்லாம் நான் அங்கே தனியாக சமையல் செய்ய ஆரம்பித்தபிறகுதான் உணர்ந்தேன்...அதாவது திருமணத்துக்கு 15-18 வருடங்களுக்குப் பிறகுதான். அதற்கு முன்னால் 'சமையல்' மற்றும் மனைவியின் சிரமங்கள் பொதுவாக நான் அறிந்ததில்லை, அதைப்பற்றி பெரிய அக்கறை கொண்டதில்லை.

   ஆனால் ஒவ்வொரு நாளும் அவங்களோட முக்கியத்துவமும், கஷ்டமும் புரியுது. இது மனைவின்னு இல்லை, எந்தப் பெண்ணுக்கும் பொருந்தும். சமையல் மற்றும் வீட்டு வேலை என்பது ஹெர்குலீயன் டாஸ்க், அதைவிட குழந்தைகள் வளர்ப்பும் சேரும்போது....நிறைய ரெஸ்பான்சிபிலிட்டீஸ் 'தாய்' என்ற பாத்திரத்துக்கு உண்டு.

   என் பையனிடமும் அப்போ அப்போ இதனைச் சொல்லுகிறேன், அவன் மனதிலும் இது ஏறும் என்று..... மேல் சாவனிஸ்டாக இருப்பதைப்போன்ற 'அடாவடி' கிடையாது... ஹா ஹா ஹா.

   நீக்கு
 21. // (ஆரம்பத்தில் நான் சாப்பிடலை. பசங்கதான் சாப்பிடுவாங்க. நான் சமீப வருடங்களில்தான் போனாப் போகுதுன்னு சாப்பிட ஆரம்பித்திருக்கேன்).// நீங்க கொஞ்சம் சீக்கிரம். நம்ம வீட்டில் அவர் இப்போப் பத்து வருடங்களாகத் தான் சாப்பாடு விஷயத்தில் சமரசம்! முன்னெல்லாம் கொஞ்சம் கூட மாற்றிப் பண்ண முடியாது/கூடாது! இப்போவெல்லாம் நான் என் மாமியார் செய்யும் முறையிலும் சமைக்கிறேன். அம்மா செய்யும் முறைகளிலும் சமைக்கிறேன். மறக்காமல் இருப்பது தான் எனக்குக் கிடைத்திருக்கும் வரம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //மறக்காமல் இருப்பது தான்// - தளத்திலும் பிறருக்கு உபயோகப்படும் என்று நினைத்து பதிந்து வைக்கிறீர்களே கீசா மேடம்... எல்லோருக்கும் உபயோகம்.

   நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன். பாவ்-பாஜி, புலாவ், வெஜ் பிரியாணி, அவல் உப்புமா.....என்று நிறைய ஐட்டங்களை நான் தொட்டதே கிடையாது, திருமணமாகி 15+ வருடங்களுக்கு மே. பசங்களுக்குப் பண்ணினாலும் எனக்குன்னு ஸ்டாண்டர்டாக ஏதேனும் செய்துடுவாள். அப்புறம்தான் ரியலைஸ் பண்ணினேன்...இத்தனை ஐட்டங்களை சாப்பிடாமலேயே இருந்துவிட்டோமே என்று

   நீக்கு
 22. //தோடக்கத்தில் மனைவியை குட்டி விட்டு முடிவில் தட்டிக் கொடுத்த விடயங்களை ரசித்தேன் நண்பரே..
  துவையலும் நன்றே...//

  இல்லையே, மனைவி செய்வதைச் சாப்பிடாமல் இருந்ததுக்கு நெ.தவைத் தான் குட்டி இருக்கணும் எல்லோருமாச் சேர்ந்து! :))))) பாவம் அவங்களுக்கு எவ்வளவு வருத்தமா இருந்திருக்கும்! (என்னோட ஃபீலிங்க்ஸ் ஆஃப் இந்தியா! நான் மாற்று முறையில் செய்தால் அவர் சாப்பிடலைனா ரொம்பவே வருத்தமா இருக்கும். அதே போல் இந்த வெஜிடபுள் சாதம், தக்காளி சாதம், ஜீரா சாதம், கொண்டைக்கடலைசாதம்னு பண்ணுவதை எல்லாம் தொடவே மாட்டார் முன்னெல்லாம். இப்போ அவரே சில நாட்கள் பண்ணச் சொல்லிடுகிறார்.) முன்னெல்லாம் குழந்தைகள் கேட்டால் இந்த சாதம் எல்லாம் பண்ணிக் கொடுத்துட்டு அவருக்கும், மாமியாருக்கும் குழம்பு, ரசம், கறி அல்லது கூட்டுனு இரண்டு சமையல்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //‘நல்லா அவனுக்குப் பிடித்ததாப் பண்ணிப்போடுங்கோ’ என்று என் மனைவி சொன்னா (ஏதோ அம்மாக்களுக்குத்தான் பசங்கமேல அக்கறை இருப்பதுபோல் இந்தப் பெண்கள் எப்படி இப்படி நடிக்கறாங்க?...சரி..சரி..இதைப்பற்றி கடைசில சொல்றேன்).//   இதைதான் நானும், தேவகோட்டை ஜியும் ரசித்தோம் கீதா.
   அம்மாவை ந்டிக்கிறாங்க என்று சொல்லி விட்டு

   எங்க ‘பருப்பு’ என்றான். ஏடா…வாழ்க்கைல நான் வெந்தக் குழம்பு சாதத்துக்குப் பருப்பு போட்டுண்டதே இல்லையே என்றேன். “எனக்கு பருப்பு சாதத்துக்குத்தான் வெந்தயக் குழம்பு ரொம்பப் பிடிக்கும், அம்மா எப்போதும் அப்படித்தான் செய்வா. அப்புறம் மோர் சாதத்துக்கும் வெந்தயக் குழம்பு பிடிக்கும்” என்றான். அவனிடம், அதுதாண்டா அப்பாவுக்கும் அம்மாவுக்கும் உள்ள வித்தியாசம். பசங்கள்ல யாருக்கு எது பிடிக்கும் என்று அவள் ஞாபகத்தில் வச்சுப்பா. எப்போ பசிக்கும், தண்ணி குடிக்கிறானா என்றெல்லாம் கவனிப்பா. ஆனால் எனக்கு அதெல்லாம் தோணவே தோணாது என்றேன். உண்மைதானே..

   கடைசியில் இப்படி மகனிடம் அம்மாவை அம்மாவின் கவனிப்பை சொன்னாரே அதை ரசித்தோம் கீதா.

   நீக்கு
  2. அதாவது தாயின் கவனிப்பில்தான் உண்மை பதுங்கி இருக்கிறது என்பதை நெ.த. சொல்லி இருக்கின்றார்.

   (இதை நான் ரசித்தேன் கோமதி அரசு சகோவும் ஆதரித்தார்கள்)

   ஆண் வர்க்கத்திடமிருந்து இந்த வார்த்தை வந்ததை திருச்சிகாரவுங்க புரிந்து கொள்ளணும்.

   நீக்கு
  3. கீசா மேடம்... உணவு விஷயத்தில் நான் ரொம்பப் பிடிவாதம். எந்த புது உணவையும் நான் சாப்பிடமாட்டேன். உதாரணமா, நீங்களே, 'கொண்டைக்கடலை சாதம்' எடுத்துக்கிட்டுப் போறீங்களான்னா, ஒருவேளை என் மனைவி ஓகேன்னுடுவா ஆனா எனக்கு , கொண்டைக்கடலைல சாதமா, நல்லாவே இருக்காதே என்று முதலிலேயே முடிவு செய்துவிடுவேன். பாஸ்தா, இது மாதிரி நிறைய நிறைய ஐட்டங்களை இன்றுவரை சாப்பிட்டதில்லை. (பாஸ்தாவா..ஐயே கொழகொழன்னு...என்று முதலிலேயே நான் முடிவு செய்துவிடுவேன்).

   என் பெண், என்னை மாற்றணும்னு நிறைய ஹோட்டல்களுக்கு கூட்டிட்டுப்போவா...ஆனா எனக்கென்னவோ எதுவுமே பிடிப்பதில்லை...ஹாஹா (கடுகோரையும் அப்படித்தான். என் மனைவிதான் செய்துபார்த்து பெண்ணுக்கு ரொம்பப் பிடித்திருந்ததுன்னா. நான் இன்னும் சாப்பிட்டமாதிரி நினைவு இல்லை)

   வட இந்திய சைட் டிஷ்லயும் நான் 'மட்டர் பனீர்', 'வெஜ் கடாய்', 'மலாய் கோஃப்தா' அவ்ளோவுதான். சோலாபூரின்னா வெள்ளை கொண்டைக்கடலைல செனா மசாலா. வேற எதையும் ஆர்டரும் பண்ணமாட்டேன், முயற்சிக்கவும் மாட்டேன்... என் பெண், பிடிவாதமா என்னை டிரை பண்ணவச்சுடுவா. அப்போ அவையும் நல்லா டேஸ்டியா இருப்பதை (இருந்தால்) ஒத்துக்கொள்வேன்..

   நீக்கு
  4. கோமதி அரசு மேடம்... 'அம்மா' என்பது ஒரு தனி ரோல். அதை அப்பா ஒருபோதும் செய்யமுடியாது. அதேமாதிரி சிப்லிங்க்ஸ் (சகோதர சகோதரி) ரிலேஷனும் தனி........ ஆனா பாருங்க 'டிசிப்ளின்'ல, அப்பாவை மிஞ்ச முடியாதுன்னு நினைக்கிறேன். 'அம்மா'கிட்ட செல்லம் கொஞ்சறமாதிரி பெரும்பாலும் அப்பாட்ட செல்லம் கொஞ்ச முடியாதுன்னு தோணுது. பெண் வளர வளர, அப்பாவிற்கு அவள் மீது அன்பு அதிகமாகும்.

   நீக்கு
  5. @கில்லர்ஜி - //இந்த வார்த்தை வந்ததை திருச்சிகாரவுங்க// - ஐயையோ...கன்ஃப்யூஸ் பண்ணாதீங்க. கீதா சாம்பசிவம் மேடம், ஸ்ரீரங்கம் காரங்க (இல்லைனா மதுரைன்னு சொல்லிக்குவாங்க). கோமதி அரசு மேடம்... பொதுவா 'நெல்லை' என்றாலும் 'மாயவரத்துக்காரங்க' என்றுதான் என் மனதில் பதிஞ்சிருக்கு. கில்லர்ஜின்னு ஒருத்தர் இருக்கார். அவர் எந்த ஊரில் பிழைப்பு நடத்தினாலும் 'தேவகோட்டைக்காரன்'' என்றே சொல்லிக்கொள்வார். நாங்க கொஞ்சம் ஏமாந்தால், இமயமலை அளவு பெரிய மலை 'எங்க தேவகோட்டையிலேயே இருக்கே' என்றும் சொல்லிடுவார்..ஹாஹா.

   நீக்கு
  6. ஹாஹாஹா கில்லர்ஜி, நீங்களும் கோமதியும் சொன்னதன் உட்பொருள் புரிந்து கொண்டேன். என்றாலும் நெல்லையை வம்புக்கு இழுத்தேன். அவ்வளவு தான்!

   நீக்கு
  7. //இமயமலை அளவு பெரிய மலை எங்க தேவகோட்டையிலேயே இருக்கு//

   ஒரு வகையில் இது உண்மையும்கூட முந்தைய ஆட்சியில் உள்ளவர்கள் பெயர்த்து வியாபாரம் செய்து விட்டதாக செவிவழிச்செய்தி.

   நீக்கு
  8. எனக்கு தேவகோட்டை 'நண்பர்' கிடையாது. கில்லர்ஜிதான் நண்பர். அதுனால அவர் சொன்னா, அப்படித்தான் இருக்கும். 'இப்பவும் பெரிய மலை இருக்கு' என்று சொன்னால், அப்படியா என்பதுதான் என் பதில்.

   நீக்கு
 23. சமையல் குறிப்பை விட, தந்தை மகனின் பாச உணர்வுகள் மிகவும் கவர்ந்தது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன். அதை உணரவைத்த இந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்ததை எண்ணி மகிழ்கிறேன்.

   நீக்கு
 24. //நான் சமீப வருடங்களில்தான் போனாப் போகுதுன்னு சாப்பிட ஆரம்பித்திருக்கேன்).
  //

  ஆஆஆஆஆஆஆ இந்தப் போனாப்போகுது:) வை விட்டிடாமல் அப்பூடியே என் குழைஜாதத்தையும் மகனுக்கு செய்து குடுத்திட்டு வாங்கோ ஊருக்கு:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அதிரா...குழை சாதம் என் லிஸ்டில் இருக்கு. என் பையன், நான் செய்தால் நிச்சயம் சாப்பிடுவான். ஒருநாள் செய்திடுவேன்.

   நீக்கு
 25. //(ஏதோ அம்மாக்களுக்குத்தான் பசங்கமேல அக்கறை இருப்பதுபோல் இந்தப் பெண்கள் எப்படி இப்படி நடிக்கறாங்க?...சரி..சரி..இதைப்பற்றி கடைசில சொல்றேன்).//

  ஹா ஹா ஹா மாத்திச் சொல்லாட்டில் வீட்டுக்குள் கால் வைக்க முடியாதே:))

  அம்ம:
  சிங்கம் போலே வெளியே போகும், ஆடுபோலே உள்ளே வரும் அது என்ன?

  மகன்:
  இது எனக்குத் தெரியாதோ அம்மா.. எங்க அப்பா:)) ஹா ஹா ஹா..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எங்க வீட்டுல நான் மனைவிட்ட இதுமாதிரி சொல்லிடுவேன். ஆனா பாருங்க...சில சமயம் அவளுக்கு ஹர்ட் ஆயிடும். பல சமயம் 'இந்தாளு இப்படித்தான்' என்று நினைச்சுக்குவா. 'ஹர்ட்' ஆயிடுச்சுன்னு ஃபீல் பண்ணினா, உடனே சமாதானக்கொடிதான் (ன்னு நினைக்காதீங்க... என்ன இத்தனை வருஷம் கூடவே இருக்க..நான் என்ன நினைத்து இதைச் சொல்லுவேன்னு புரிஞ்சுக்கமுடியாதா? என்று ப்ளேட்டைத் திருப்பிடுவேன்..ஹா ஹா ஹா). நீங்கதானே சொல்லியிருக்கீங்க..பெண்கள் மென்மையானவர்கள்...கொஞ்சம் ஐஸ் வச்சாலே உருகிடுவாங்கன்னு...

   நீக்கு
  2. ஹா ஹா ஹா நல்லாத்தான் தெக்கினிக்கு தெரிஞ்சு வச்சிருக்கிறீங்க:).... மனைவியை எதிர்த்தால் டபிளா எதிர்ப்பு வரும்:) வாயால இல்லாட்டிலும் செய்கையால:).. ஆனா விட்டுக் குடுத்தும் புகழ்ந்தும் பாருங்கோ:)... அப்பூடியே சரண்டராகிடுவாங்க:)... ஹா ஹா ஹா

   நான் ஒரு மனைவியாக இருந்து இதைச் சொல்லக்கூடா:)... இருந்தாலும் சொல்லிட்டேன்ன்ன்..:)..

   இது. ஹா ஹா ஏதோ ஒரு படத்தில ரேணுகாவின் வசனம் ஆர்யாவுக்கு என நினைக்கிறேன்:)

   நீக்கு
 26. ஆஆஆஆஆஅ துவையல்[தொவயல் அல்ல கர்:)] சூப்பரா வந்திருக்கு கலரும் நன்றாக வந்திருக்கு.. தோல் சீவிட்டீங்களோ? இல்லை எனில் பச்சையாகவே இருக்கும் என நினைக்கிறேன்.. நான் இதே முறையில் பொட்டில் கார்ட் [சுரக்காய்] செய்திருக்கிறேன் சூப்பராக வந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதிரா...சுரைக்காய் கூட்டு எனக்குப் பிடிக்கும்...ஆனால் எங்கள் வீட்டில் உபயோகிக்கமாட்டார்கள். கல்ஃபில் புத்தம் புதிதாக இளசாக நிறைய சுரைக்காய்கள் வரும். விலை கொள்ளை மலிவு. ஆனாலும் மனைவி, அதனை வாங்க அனுமதிக்கமாட்டாங்க. உங்களுக்குத்தான் தெரியுமே, மனைவி சொல்லை இந்த மாதிரி விஷயங்களில் அப்படியே கேட்பேன் என்று....

   நீக்கு
  2. அப்போ வெங்காயப் பக்கோடா வாணாமோ?:).. ஹா ஹா ஹா

   நீக்கு
 27. என்னாதூ உழுத்தம் பச்சடியோ? நான் தேங்காய்ச் சட்னி என நினைச்சுட்டேன்ன்.. இது எனக்கு தெரியவே தெரியாது கேள்விப்பட்டதே இல்லை.. கீசாக்கா கூடச் செய்து காட்டல்ல கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. சூப்பரா இருக்கு.. ஆனா தயிர்ச்சம்பல் போல இருக்குமோ? சுவை எப்படி இருக்கும்? செய்து பார்க்க ஆசை வருது.. பார்ப்போம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதிரா... கீசா மேடம்லாம். பெரிய செஃப். இந்த மாதிரி சின்னச் சின்ன விஷயங்கள்லாம் செய்ய மாட்டாங்க, சொல்ல மாட்டாங்க. அதுக்குத்தான் எங்களை மாதிரி ஜுனியர் செஃப் இருக்கோமே...

   வெள்ளரிக்காய் இல்லாத ரெய்த்தா மாதிரி இருக்கும். உளுத்தம்பருப்பை எண்ணெயில் வறுக்காம வெறும்ன வறுத்து செஞ்சு பாருங்க. குழை சாதத்துக்கும் நல்லாருக்கும்.

   நீக்கு
 28. //சிறிது கொத்தமல்லித் தழை தூவிவிடவும்.//

  எனை ஆரும் பேய்க்காட்ட முடியாதூஉ கொத்தமல்லி எங்கேஏஏஏஏ?:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதிரா...கொத்தமல்லி சேர்த்துவிட்டு, கலக்கிட்டேன். அழகா மேலாகவே வைத்து போட்டோ எடுத்த பிறகு கலைத்திருக்கலாம்.

   என்னதான் நீங்க போட்டி போட்டாலும், 'குறை கண்டுபிடிப்பதில்' என்னை மிஞ்ச முடியாது. 1000 மில்லி மீட்டர் ரேசில் இரண்டாவதாக வந்ததுபோல இதுலயும் இரண்டாவது இடத்துக்குத்தான் யாராவது போட்டி போடணும்.

   நீக்கு
 29. //என் பையன்கிட்ட எனக்குப் பிடித்த விஷயம் பிறரையும் மதிப்பது. Ie being fair to others. (அது என்னிடம் கிடையாது..ஹாஹா)//

  இல்லையே நீங்க அப்படி ஆட்களை மதிக்காதவர்போல இல்லையே பழகும்போது.. ஒருவேளை நேரில எனில் மதிக்க மாட்டீங்களோ? ஹா ஹா ஹா அப்போ கீதா வீட்டுக்குப் போய் ஆயாசம் குடிக்கோணும் கட்டாயமாக:))...

  அப்போ அம்மாவின் பழக்கம் மகனுக்கு வந்திருக்கு ஹா ஹா ஹா.. பெண்களின் குணமே தனிதான் தெரியுமோ?:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் ஆட்களை மதிப்பேன் அதிரா. ஆனால் ஒரு விஷயம் என்று வரும்போது, செல்ஃபிஷ் அப்ரோச் வந்துவிடுகிறது. ஆனால் அவன் அப்படி அல்ல. அதைக்கண்டு நிறையதடவை நான் வியந்திருக்கிறேன்.

   நான், மனைவி, என் மாமனார்/மாமியார் ஒரு யாத்திரைக்குச் சென்றோம். திரும்பும்போது, இரயில் வந்தவுடன் முதலில் ஏறி, எங்கள் லக்கேஜ் எல்லாம் கீழே பத்திரமாக வைத்தேன் (6 லக்கேஜ்). என் மாமனார் என்னிடம், 'நீங்க வேகமா வச்சீங்க சரி...ஆனால் நம்மோடு பயணிக்கும் மற்ற இரண்டுபேர் அவங்க லக்கேஜை எங்க வைப்பாங்க? 6 பேருக்கான இடம்தானே இது. அவங்களுக்கு இடம் விட்டுவிட்டு மீதிலதான நம்ம லக்கேஜ் வைக்கணும் என்று சொன்னார். அதெல்லாம் எனக்கு ஒரு லெஸன்'தான்.

   'அம்மாவின் பழக்கம்' - ஆமாம்..ஆனால் இது அவங்க வீட்டாரின் குணம். To be fair to others. ஹா.ஹா.

   நீக்கு
  2. நீங்க 8 ம் நம்பர்க்காரராக இருப்பீங்களோ? :)...

   நீக்கு
  3. அது என்ன 8ம் நம்பர்? நான் நவம்பர்... ஸ்கார்ப்பியன்..... ஓ பயந்துட்டீங்களா? ஹா ஹா ஹா

   நீக்கு
 30. //இதுமாதிரித்தான் நேற்று காலை, அவனுக்குப் பிடித்த வெந்தயக் குழம்பு செய்தேன். சாப்பிடும்போது எங்க ‘பருப்பு’ என்றான். ஏடா…வாழ்க்கைல நான் வெந்தக் குழம்பு சாதத்துக்குப் பருப்பு போட்டுண்டதே இல்லையே என்றேன். //

  ஹா ஹா ஹா அதுதானே..

  ஆனா இப்படி கஸ்டப்பட்டுச் சமைச்சுக் குடுக்கும்போது, அம்மா புராணம் பாடினால் கொஞ்ச நாளில் அப்பாக்களுக்கு சமைச்சுக் குடுக்கும் ஆசை போயிடும்:)).. அம்மாவையே கூப்பிட்டு சமைக்கச் சொல்லு எனச் சொல்லிடுவாங்க ஹா ஹா ஹா:)).... நாளைக்கு மனைவி வந்தா?:)) ஹா ஹா ஹா..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. /நாளைக்கு மனைவி வந்தா?// நான் இதில் நல்லா கவனம் எடுத்துக்குவேன்.... திருமணம் ஆயிட்டா அவங்க அவங்க, அவங்களோட மனைவி புராணம்தான் பாடணும். 'எங்கம்மா இப்படிச் செய்வாங்க, அப்பா இப்படி' என்று சொல்லுவதை நான் விரும்புவதில்லை, என் மகனுக்கும் அப்படித்தான் நேரம் வரும்போது சொல்லிக்கொடுப்பேன். நம்முடன் நம் ஸ்டேஷன் வரும்வரை பயணிப்பது மனைவிதான். அதுனால அது, 'கம்பேரிசன் பண்ணக்கூடாத' இடம்.

   நீக்கு
  2. ///நான் இதில் நல்லா கவனம் எடுத்துக்குவேன்.//
   அதேதான் எங்கள் வீட்டிலும்... அதுவும் ஆம்பிளைப்பிள்ளைகள்.... வரும் பெண் கவலைப்பட்டிடக்கூடாது என்பதில் நாங்க எப்பவும் அக்கறை... அதனால மூத்தவருக்கு... மனைவி எனும் சொல்லை யூஸ் பண்ணாமல்.... உங்களுக்குப் பம்லி வரும்போது இப்படிச் செய்யக்கூடாது... எனச் சொல்லிக் குடுப்போம்...:)... ஏதோ 18 வயசானதும் தாம் பெரியவர்கள் போல நினைக்கினம் இக்காலத்தில்:).. நான் எல்லாம் 25 இலும் பே பே தான்ன்ன்ன் ஹா ஹா இப்போ சுவீட் 16 இலும் அதே அதே:)... இதைச் சொல்லாட்டில் பிழைச்சிடும் மானம்:)

   நீக்கு
 31. ஆஆஆஆஆஆஆஅ நேரமாகுதே.. பின்பு வருகிறேன்ன்..

  பதிலளிநீக்கு
 32. "இது அவனுக்கு ரொம்பப் பிடிக்கும்..."
  எனக்கு இது பிடிக்கும்..."

  என்றெல்லாம் சொல்கிறோம் இல்லையா... இந்தப் "பிடிக்கும்"ங்கறது எப்படி வருகிறது?

  அ. அம்மா நமக்கு அதையே திருப்பித்திருப்பி இளமையில் பரிமாறி வழக்கப்படுத்துவதால் வருகிறது..

  ஆ. அம்மா எவ்வளவு பரிமாறினாலும் அதிலும் நமக்கு சில சுவைகள்தான் பிடிக்கின்றனவா?

  இ. அப்படிப் பிடிக்கும் சுவைக்குக் காரணம் நம் ஜீன்!??

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஸ்ரீராம்...இப்போதுதான் கேஜிஜி சாருக்கு ஜென்ம சாபல்யம் ஏற்பட்டிருக்கும்... 'புதன்' கேள்விக்கு, ஆசிரியர் குழுவிலிருந்தே கேள்வி வந்திருக்கே என்று.... அவர் ஆசையைக் கெடுக்கும் விதமா, இங்கேயே பதில் சொல்லிடறேன்.

   'பிடிக்கும்' - அம்மா திரும்பத் திரும்ப பண்ணி, அவற்றில் ஒரு சில (அல்லது 10-15 ஐட்டங்கள்) நமக்குன்னு நம் நாக்கிற்குப் பிடித்துவிடுகிறது. அம்மா செய்த எல்லாமும் நமக்குப் பிடிக்கும் என்பது கிடையாது. ஏன் சொல்றேன்னா, என் பெண்ணுக்கு சில பிடிக்கும், என் பையனுக்குச் சில பிடிக்கும். அவளுக்குப் பிடித்த காம்பினேஷன் இவனுக்குப் பிடிக்காது என்பதுபோல.

   இதில் மறைந்திருப்பது, அம்மா அதை இனம் கண்டுணர்ந்து, ஒவ்வொருவருக்கும் பிடித்த ஐட்டத்தை, ஓரளவு வளர்ந்த பிறகு பண்ணிப்போடுவதான், 'அம்மா செய்கிற மாதிரி வராது' என்று பொது வாக்கியமாகச் சொல்லிடறோம்.

   நான் இதுல ஆச்சர்யப்படுவது என்னன்னா, ரொம்ப சுமாராத்தான் சமைக்கத் தெரிந்திருக்கும் ஒரு பெண்ணுக்கு. ஆனால் அவளுடைய பசங்க, 'எங்க அம்மா சமையல் போல் வராது' என்று சொல்வதுதான். அப்போ, அம்மாவின் 'அன்புமயமான மனது' சமையல் செய்யும்போது அதில் இறங்குவதுதான் காரணம் என்று நான் நினைக்கிறேன் (சமையல் செய்பவர்களின் மனம் மனச்சுத்தம்/சுத்தமின்மை, சமையலில் இறங்கும் என்று நான் நம்புகிறேன்)

   ஜீனுக்கு இதில் அவ்வளவு வேலை இல்லை என்று தோன்றுது.

   நீக்கு
  2. //ஆ. அம்மா எவ்வளவு பரிமாறினாலும் அதிலும் நமக்கு சில சுவைகள்தான் பிடிக்கின்றனவா?

   இ. அப்படிப் பிடிக்கும் சுவைக்குக் காரணம் நம் ஜீன்!??//

   ஆ.வுக்கு பதில் ஆமாம்.

   இ. நம் சுவைக்கு ஜீனும் ஒரு முக்கிய காரணம். என் பெரிய அக்காவின் மகன் மகள், அக்காவின் ஒரு மைத்துனரின் மகள் யாரும் மோர் சாப்பிட மாட்டார்கள். அக்காவின் மைத்துனரும் மோர் சாப்பிட மாட்டார். அக்காவின் மாமியார் சிறு வயதில் மோர் சாப்பிட மாட்டாராம்.

   எங்கள் வீட்டில் எனக்கு பிடித்தவை என் மகனுக்கும், என் கணவருக்கு பிடித்தவை என் மகளுக்கும் பிடிக்கும். என் மகன் பழங்கள் சாப்பிட மாட்டான், குறிப்பாக வாழைப்பழமும், ஆப்பிளும் இருக்கும் பையை தொடக் கூட மாட்டான். என் சின்ன மாமனாரின் பேரனும் என் மகனைப் போலவே பழங்கள் சாப்பிட மாட்டான், அதிலும் ஆப்பிளும், வாழைப்பழமும் இருக்கும் பக்கத்திலேயே வர மாட்டான் என்று அறிந்த பொழுது ஆச்சர்யமாக இருந்தது.

   எனக்கு சிப்ஸ், சாதத்திற்கு தொட்டுக்க கொள்ள பிடிக்காது, தனியாக சாப்பிடத்தான் பிடிக்கும். காரணம், மொறுமொறுவென்றிருக்கும் சிப்சை சாதத்தோடு சேர்த்து சாப்பிட பிடிக்காது. இதை நான் சொன்ன பொழுது, என் அத்தை, "சின்ன தாத்தாவை கொண்டிருக்கிறாய், சின்ன தாத்தாவுக்கும் சிப்ஸை தனியாக சாப்பிடத்தான் பிடிக்கும்". என்றார். எங்கள் சின்ன தாத்தாவைப் போல எனக்கும் காரசாரமான உணவுதான் பிடிக்கும்.

   நீக்கு
  3. சிப்ஸ்: எனக்கும் அதே போலதான்!

   இது மாதிரி ஒற்றுமைகள் நானும் எங்கள் வீட்டில் கண்டதால்தான் இந்தக் கேள்விகள் தோன்றின.

   நீக்கு
  4. பா.வெ. மேடம்... உங்கள் பதில் பார்த்தபிறகு, ஆமாம்..ஜீனிலும் கடத்தப்படலாம் என்று தோன்றியது.

   என் பையன் சிறிய வயதில் செய்யும் சில செயல்கள், எங்க அப்பா பண்ணுவது போலவே இருக்கும். படுக்கும்போது காலை மேலே தூக்கிவைத்துப் படுப்பது போன்று பல. சில குணநலன், அப்படியே என் இன்.லாஸ் வீடு மாதிரியே இருக்கும். முன்கோபம்.... என்னைப்போல்தான்...ஹா ஹா. ஆனா பாருங்க... ரெண்டுபசங்களும், 'தவறு' செய்வதை விரும்புவதில்லை. (பிறரை ஏமாற்றுவது... தவறுதலாக பூச்சியை கொசு மேட்டை வைத்துக் கொல்வது போன்று.... இருவரும் பொய் சொல்வதை விரும்பமாட்டார்கள். என் பையன் எங்கிட்ட சொல்லமாட்டான், நான் லைக் பண்ணமாட்டேன் என்று. என் பெண், என் எண்ணத்தைப் பற்றிக் கவலைப்படமாட்டாள், உண்மையைத்தான் பேசுவாள். இதெல்லாம் பரம்பரையில் சிலருடைய குணத்தை அனுசரித்து வருது)

   நீக்கு
 33. சமைப்பதில் ஈடுபாடு இருந்தால் நன்றாகவே இனொவேட் செய்யலாம் எனக்கு இன்னொவேஷன் பிடிக்கும் என்மனைவி பாரம்பரியம்தான் செய்வாள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி.எம்.பி சார்... நீங்க சொன்னமாதிரி, ஆர்வம் இருந்தால், எதிலுமே நிறைய ஈடுபாட்டுடன் செய்வோம்.

   நீக்கு
 34. வணக்கம் நெல்லை தமிழன் சகோதரரே

  இன்றைய "திங்க"சமையல் பகுதியை கையில் எடுத்துக்கொண்டு அசத்தி விட்டீர்கள். அத்தோடு அப்பா, அம்மாவின் அன்பு, பாசம் என விவரமாக பேச்சுகளையும், படங்களுடன் தந்த சவ்சவ் துவையலையும், அதற்கு பொருத்தமாக உ. ப போட்டு டாங்கர் பச்சடியையும், வெகுவாக ரசித்து ருசித்தேன். உ. ப வறுத்து பொடி பண்ணி தயிருடன் கலந்து செய்வதை டாங்கர் என்றுதான் நாங்களும் குறிப்பிடுவோம். காய்களில் துவையல் எங்கள் வீட்டிலும் செய்வேன். சாம்பார், ரசங்கள் போர் அடிக்கும் பட்சத்தில், ஒரு மாறுதல்களுக்கு இவை இடம் பெறும்.

  காய்களில் துவையல் செய்து சாதத்தில் கலந்து சாப்பிடும் போது இந்த டாங்கர் பச்சடி அதற்கு பொருத்தமான துணையாக இருக்கும். அதிலும் தாங்கள் அன்புடனே செய்து மகனுக்கு பரிமாறி இருக்கிறீர்கள். மகனும் அன்புடனே அதை சுவைத்து சாப்பிட்டு விட்டு தங்களை பாராட்டி இருக்கிறார்.

  அன்புடன் சமையல் செய்து போடும் போதும், ஆசையுடன் அதை சாப்பிடும் போதும், சமையல் சுவையின் பரிமாணம் எந்த சமையிலிலும் கூடி விடுவது இயல்புதானே..நல்ல சுவையுடன் மேலும் அன்பை கலந்து மகனுக்காக பார்த்துப் பார்த்து அழகாய் செய்த தங்களுக்கு அந்த பிராப்தம் கிடைத்து விட்டது. வாழ்த்துக்கள். பதிவு மிக அருமையாக இருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம்...

   'அந்தப் ப்ராப்தம் கிடைத்துவிட்டது' - உண்மைதான். நமக்காக 'அப்பா வந்து இதனைச் செய்தார்' என்ற எண்ணம்தான் அவன் மனதில் இருக்கும்.

   துவையல் சாதத்துக்கான காம்பினேஷன் டாங்கர் பச்சடி என்பது சரிதான்.

   அழகான கருத்துக்கு மிக்க நன்றி

   நீக்கு
 35. 100 விட101 தான் இருக்கணும்னு சொல்லுவாங்க!! ஹிஹிஹி

  101...

  நெல்லை நானும் இதே போலத்தான். ஆனால் கொர கொரனு அரைச்சுக்குவேன். ரெண்டாவது கொஞ்சம் க்டலைப்பருப்பும் சேர்த்து செய்வேன். இல்லைனா க ப மட்டும் சேர்த்துச் செய்வேன்...

  எப்படியானால் னைசா அரைக்காம ...

  அப்புறம் டாங்கர் பச்சடி ப மி யும் போட்டு தாளிப்பேன் இல்லைனா வாயில் அகப்படக் கூடாது என்றால் அரைத்துச் சேர்ப்பேன். தாளிப்பதுண்டு...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி கீதா ரங்கன். அங்க அங்க பதில் கொடுப்பதனால் சடக் என்று 100 லிருந்து 108க்குப் போய்விட்டீர்கள்.

   கடலைப் பருப்பு, ப.மிலாம் என் மனைவி சொல்லலை. என் மகன் கொஞ்சம் மாத்தினாலும் கண்டுபிடிச்சுடுவான் (எனக்குப் பிடித்ததை ஏன் கெடுக்கிறீர்கள் என்பான்........என்ன நல்லா இருந்தாலும் ஒத்துக்கமாட்டான், என்னை மாதிரி ஹாஹா)

   நீக்கு
  2. ///
   Thulasidharan V Thillaiakathu10 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 4:26
   100 விட101 தான் இருக்கணும்னு சொல்லுவாங்க!! ஹிஹிஹி

   101.../////
   Karrrrrrrrrrr it’s not fairrrrrrrrrrrrrrrrrrrrrrr:)...

   நீக்கு
  3. //100 விட101 தான் இருக்கணும்னு சொல்லுவாங்க!! // - கீதா ரங்கன்.... 'நூற்றி ஒரு ஆண்டுகள்' வாழுங்கன்னு சொல்றாங்களா இல்லை 'நூறாண்டுகள் வாழ்க' என்று சொல்றாங்களா? 'நூறாண்டு காலம் வாழ்க...நோய் நொடியில்லாமல் வளர்க' பாடல் மறந்துட்டீங்களா?

   நீக்கு
 36. நெல்லை சௌ சௌ வ வதக்கிச் செஞ்சு பாருங்க ரொம்ப நல்லாருக்கும். நான் சௌ சௌ தோல் மட்டும் கூட செய்வதுண்டு. இல்லைனா இளசா இருந்தா தோல் கூட எடுக்க மாட்டேன். காயை அப்படியே கழுவி, துருவி அல்லது சின்ன சின்ன பீஸா கட் செய்து வதக்கிச் செய்வேன். பீர்க்கங்காயும் அப்படித்தான்.

  நெல்லை எங்க வீட்டுல சாப்பாடு பிரச்சனையே கிடையாது. மகனும். எது செஞ்சு கொடுத்தாலும் சாப்பிடுவான். நோ ரெஸ்ட்ரிக்ஷன். அது போல வித்தியாசமான சுவையையும் ரசிப்பான்.

  உங்கள் மகனுக்குப் பாராட்டுகள். நீங்கள் சொல்லியிருப்பது சூப்பர். பாராட்டிருக்கார் பாருங்க...உங்க ரெசிப்பியையும்.

  நீங்க அவருக்கு ஆசையா சமைச்சுப் போட, அவர் ஆசையா ரசித்து ருசித்து சாப்பிட...ஆஹா!!! சூப்பர் சூப்பர் நெல்லை!! ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு...

  என் மகன் நினைவும் வந்தது....

  என் மகனும் அப்படித்தான் யார் வீட்டுக்குப் போனாலும் அவர்கள் செய்யும் உணவை பாராட்டிவிட்டு வருவான்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இங்க பெங்களூர்ல (ராகிகுடா கோவில் பக்கம்), ஆச்சார் என்றொரு டாக்டர் உண்டு. ஒரு தடவை என் மாமனாருடம் சென்றிருந்தபோது (அது இருக்கும் 10-12 வருடம்) அவர் சொன்னார், அவருடைய பையனை எங்கு கூட்டிச் சென்றாலும், அங்கு பெரியவர்கள் இருந்தால் காலில் விழுந்து வணங்குவான். இதனை நான் சின்ன வயதிலிருந்தே அவனுக்குச் சொல்லிக்கொடுத்திருக்கேன். நானும் வயதில் பெரியவர்களை வணங்குவேன் என்றார்.

   நாம சொல்லிக்கொடுக்கும் நல்ல பழக்கங்களும் அவர்கள் வாழ்க்கைக்கு உரமாகும்.

   நான் 'நன்றி' சொல்லாமல் இருந்ததில்லை (யாராக இருந்தாலும்). 'உணவைப் பாராட்டும்' நல்ல பழக்கத்தை உங்கள் மகன் தொடரட்டும். வாழ்த்துகள்.

   நீக்கு
  2. அனைவரின் எண்ணங்களும் அம்மாவையும் அப்பாவையும் சுற்றி வர வைத்துவிட்டீர்கள். என் தம்பியும் பாத்திரங்கள் தேய்த்து, காய்கறி நறுக்கிக் கொடுப்பான்.
   அம்மாவுக்கே உதவிகள் படிக்கும்போதே செய்வான்.தோசை மிளகாய்ப்பொடி இடிப்பது போன்ற விஷயங்கள்
   அவனுக்குக் கைவந்த கலை.
   நான் சீக்கிரமாகவே திருமணம் செய்து போய்விட்டதால்
   அவன் என் வேலைகளை எடுத்துக் கொண்டான்.
   ஆண்மகனுக்கு, சமையல் ஒரு அழகு.

   எனக்கும் இவருக்கும் பல விஷயங்கள் சாப்பாடு விஷயத்தில் வேறுபாடுகள் வரும்.
   நான் எனக்குப் பிடித்த சமையலைச் சில நாட்கள் செய்து கொள்வேன்.
   என்னமோ அப்படியே ஓட்டியாச்சு.

   மிக நன்றி முரளிமா.

   நீக்கு
  3. //சாப்பாடு விஷயத்தில் வேறுபாடுகள் வரும்.// - இதுபற்றி பிறிதொரு சமயத்தில் கேட்கலாம்னு நினைத்தேன். 'பூண்டு, வெங்காயம்' போன்ற பொருட்கள் போட்டுப் பண்ணுவது உங்கள் வழக்கமா இல்லை உங்கள் கணவர் இல்ல வழக்கமா வல்லிம்மா?

   நீக்கு
 37. இரண்டு செய்முறையும் அருமை ...இரண்டும் செய்தது இல்லை ...


  உளுத்தம் பச்சிடி கீதா மா பதிவில் படித்து செய்யணும் ன்னு நினைத்தது ..இன்னும் செய்யவில்லை ....


  ‘இன்னைக்கு உணவு நல்லாருந்ததுப்பா. தாங்ஸ்’ என்று சொல்லிக்கொண்டே சென்றான்...மிக மகிழ்ச்சி ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அனு ப்ரேம்குமார். செய்துபாருங்க. மிக்க நன்றி.

   நீக்கு
 38. எந்த மணமும், சுவையும் இல்லாததால்தான் பெங்களூர் கத்தரிக்காயை 'சௌ சௌ' என்று சொல்லுகிறார்கள் போலிருக்கிறது என்று நினைத்துக் கொள்வேன். எனக்கு அவ்வளவாக பிடிக்காது.

  உங்கள் செய்முறை படங்களோடு நன்றாக இருக்கிறது. அதை விட சிறப்பு அம்மா, அப்பா, மகள், மகன் உறவு. பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்ன இப்படிச் சொல்லிட்டீங்க. எனக்கு அதில் உள்ள ரொம்ப மெல்லிய இனிப்புச் சுவை பிடிக்கும். கரேமது, தேங்காய் சீரகக் கூட்டு இரண்டும் செளசெளவில் செய்தால் எனக்கு ரொம்பப் பிடிக்கும். தொகையல் மனைவி செய்வாள் (எங்க வீட்டில் செய்ததில்லை). ரொம்ப வருடம் கழித்து அதையும் சாப்பிட்டேன்.

   கருத்துக்கு நன்றி பானுமதி வெங்கடேச்வரன் மேடம்...

   நீக்கு
 39. சமையல் குறிப்பு ஒரு பக்கம், அது கிளறிய நினைவுகள் மறு பக்கம் இன்றைய திங்கள் கிழமையை மிகவும் ருசிகரமாக்கிவிட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி பா.வெ. மேடம்... 'கிளறிய நினைவுகள்' - தன்யனானேன்.

   நீக்கு
 40. ஹலோவ் யாரவது இருக்கீங்களா ???

  லேட்டா வந்துட்டேன் டாங்கர் பச்சடி சௌ சௌ பச்சடி ஏதாச்சும் மிச்சம் இருக்கா எனக்கு :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஏஞ்சலின்.... உங்க கேள்விக்கு பதில் சொல்றது சங்கடமான விஷயம்.

   மிச்சம் இருக்கா எனக்கு? - இருக்குன்னு சொன்னா, செய்தது போணியாகலை, அவ்வளவு நல்லா இல்லைனு அர்த்தம். இல்லைனு சொன்னா, அது வந்த விருந்தினரை அவமரியாதை செய்வதுபோல.... என்ன பதில் சொல்ல?

   ஹா ஹா

   நீக்கு
  2. இருக்கு ஆனா அதிராவிடம் குடுத்து வச்சிருக்கிறென் எனச் சொல்லிடுங்கோ:)) இப்போ எப்பூடிப் புடுங்குவா என்னிடமிருந்து?:) மீ தூக்கிக்கொண்டு ஓடுவேனே அவ ஓட மாட்டா:)) ஹா ஹா ஹா..

   நீக்கு
 41. நம்ம பழக்கத்தை மாத்தக்கூடாதே :) ரிவர்ஸ் ஆர்டரில் இருந்துவரேன்

  //
  என் பையன்கிட்ட எனக்குப் பிடித்த விஷயம் பிறரையும் மதிப்பது. Ie being fair to others. (அது என்னிடம் கிடையாது..ஹாஹா). அவன் கிளம்பும்போது வாசல் கதவை பூட்ட வந்தேன். ‘இன்னைக்கு உணவு நல்லாருந்ததுப்பா. தாங்ஸ்’ என்று சொல்லிக்கொண்டே சென்றான்.//

  பார்த்திங்களா பிள்ளை அம்மா மாதிரியே :) ஜோக்ஸ் அபார்ட் நெல்லைத்தமிழன் இந்த p அன்ட் q ஸை எத்தனை பிள்ளைங்க செய்றாங்க !!! .இப்போ இதை வாசிக்கும்போது நானெல்லாம் ஒரு சின்ன நன்றி கூட சொல்லலியேன்னு சிறு வருத்தம் இருக்கு .சொல்லியிருந்தாலும் அம்மாவுக்கு எதுக்கு நன்றின்னும் எங்கம்மா சொல்லியிருப்பாங்க .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கு 'நீங்க' என்று மரியாதையாகத்தான் யாரையும் அழைக்கும் பழக்கம் சின்ன வயதிலிருந்தே (இது பொதுவா எங்க சமூகத்துல கிடையாது). அதுபோல 'தாங்க்ஸ்' என்று அனேகமா எல்லோரிடமும் சொல்லுவேன், ஆட்டோ டிரைவராக இருந்தாலும் யாராக இருந்தாலும், எனக்கு எந்த விதத்தில் உதவி செய்தாலும் 'தாங்க்ஸ்'தான்.

   துபாயில் ஒரு தடவை கம்ப்யூட்டர் சம்பந்தமான கோர்ஸுக்காக ஒரு வாரத்துக்குமே ஒரு பெரிய ஹோட்டலில் (பொதுவா அராபியர்கள் தங்குகின்ற) தங்கியிருந்தேன். கம்பெனி செலவுதான். ஆனா அவங்க ப்ரேக்பாஸ்டுல எனக்குத் தேவையான ஒண்ணுமே (இந்தியத்தனமானது) கிடையாது, ஆனால் ரொம்ப எலெகெண்ட், எக்ஸ்பென்சிவ். இரண்டு நாளில், அங்க உள்ள செஃபிடம் என் பிரச்சனையைச் சொன்னேன் (உங்க உணவு எதுவுமே எனக்குப் பிடிக்கலை, பழக்கமில்லை...இந்திய உணவு கிடைக்காதான்னு...அதாவது பொதுவா 4 ஸ்டார் துபாய் ஹோட்டல்ல உள்ள மாதிரி ஓரிரு இந்திய உணவாவது-பூரி, உப்புமா போன்று கேட்டேன்). அதுக்கு அவர், நான் ஹைதிராபாத்தைச் சேர்ந்தவன், இந்த ஹோட்டல் கஸ்டமர்ஸ் 90%க்குமேல் அராபியர்கள். அதுனால இந்திய உணவு வைக்கமாட்டோம். ஆனால் நாங்கள் சிலர் இந்திய உணவு எங்களுக்காக தினமும் செய்துகொள்வோம். அதைத் தரவா என்றார். மறுநாள் எனக்காக உப்புமா செய்துதந்தார். (நினைவுக்காக அவருடனும், அவர் செய்துதந்த உப்புமாவுடனும் போட்டோ எடுத்துக்கொண்டேன்....ஒருநாள் என் படத்தை மார்ஃப் பண்ணி அதனை வெளியிடறேன்). பொதுவா நாம மரியாதையாவும் அன்பாவும் பேசினா, நமக்கு அது பலமடங்கு அதிகமாக திரும்பக் கிடைக்கும்.

   நீக்கு
  2. காசிக்குப் போக முன் செல்பியை இங்கு போடவும் பிளீஸ்:)

   நீக்கு
  3. அதிரா - அன்னைக்கு ஸ்ரீராம் சொன்னார், எ.பி. தளம், 35 இன்ச் வெள்ளித்திரை மாதிரி. அதில் 70 எம்.எம். படம்லாம் போடமுடியாது..அதுனால உங்க (என்னிடம்) படத்தை பிரசுரிக்க முடியாமைக்கு வருந்துகிறேன் என்றார்.... அப்படீன்னா உங்க படத்தையாவது வெளியிட வேண்டியதுதானே என்று சொன்னேன்.... இப்படி எல்லாரும் 'என் படத்தை வெளியிடணும்'னு சொல்லிக்கிட்டே இருந்தீங்கன்னா, நானும் உங்களைப்போல் 70 எம் எம் ஆவதைத் தவிர வேறு வழியில்லைனு சொல்லிட்டார்.

   நீக்கு
 42. /எப்போ பசிக்கும், தண்ணி குடிக்கிறானா என்றெல்லாம் கவனிப்பா. ஆனால் எனக்கு அதெல்லாம் தோணவே தோணாது என்றேன். உண்மைதானே..//

  பரவாயில்லை ஐ லைக் யுவர் நேர்மை :) வெந்தயக்குழம்பு பருப்பு காம்போ !!! வித்யாசமா யிருக்கே :)
  நானா வெ .குழம்பை தோசை ப்ரெட் அதான் க்ளூட்டன் ப்ரீ ரொட்டி இதுக்கெல்லாம் சேர்ப்பேன் மோர் வெ .குழம்பும் செம டேஸ்டி .
  //செளசெள துவையல் கொஞ்சம் கரகரப்பா அரைப்பாளேன்னு சொன்னான். இதெல்லாம் எனக்கு ஞாபகத்தில் இல்லைடா என்றேன்.// மகன் நல்லா அம்மா சமையலை கவனிச்சிருக்கான் :)) என் பொண்ணு காபி டீ போட்டாலே யாரை போட்டதுன்னு கண்டுபிடிச்சிடுவா :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //ஐ லைக் யுவர் நேர்மை :// - பாருங்க..என்னோடது உண்மையான நேர்மை. சிலபேர் மாதிரி நேர்மை/எருமை, கடமை/மடமைன்னு சொல்வாங்களே அதுமாதிரி இல்லை.

   //என் பொண்ணு காபி டீ போட்டாலே // - என் பெண்ணும் சட் எனக் கண்டுபிடித்துவிடுவா..இது அம்மா செய்ததில்லை என்று. இட்லி மிளகாய்ப்பொடி, துவையல் இதெல்லாம் சட்னு சொல்லிடுவா (அதுமட்டுமல்ல..உங்களுக்கு ஏன் வேண்டாத வேலை...அம்மாதான் பண்ணுவா இல்ல..ன்னு சொல்லிடுவா..ஹா ஹா)

   நீக்கு
  2. ஆஆஆஆஆஆஆஆஆஆஆ விடுங்கோ என்னை விடுங்கோ மீ காசிக்கு போகப் பிளேனில கால் வைக்கிறேன்ன்ன்:)).. ஹையோ எழுத்தாலேயே நல்ல பெயர் எடுப்போரும் உண்டு:))...

   அல்லோ சாப்பாட்டில, ரீயில வித்தியாசம் கண்டு பிடிப்பதொன்றும் பெரிய விசயமில்லையாக்கும்:)).. மீ மூச்சுக் காத்து மூச்சு விடும் சவுண்டை வச்செல்லாம் கண்டு பிடிப்பேனாக்கும் ஹா ஹா ஹா... ஹையோ முடியல்ல முருகா:))

   நீக்கு
  3. கொஞ்சம் ரெண்டுமாசம் கழிச்சு நீங்க காசிக்குப் ப்ளேனில் புறப்பட்டால் என்னையும் சந்தித்துவிடலாம்.

   இன்னொன்று கவனிச்சினீங்களோ? சிலர் 'காசி யாத்திரை' போய்ட்டு வந்த பிறகு 'ஓரிரு வரிகளுக்கு மேல்' மறு மொழி எழுதுவதில்லை. முழுக்க முழுக்க தியானத்தில் இறங்கியிருப்பாரோன்னு தெரியலை....... அவரோட 'நியூமராலஜி எண்ணை' வைத்துக் கண்டுபிடிங்க.

   நீக்கு
  4. .க்றுந - க்ருசு .துயாடைகி டகூறுன்ஒ ளேகல்திப ​னமாளநீ .சிச்ழ்கநி தந்ருதிய்செ டுபாற்ஏ கில்க .ன்தேந்ருடிண்கொ க்துத்ர்பா சிச்ழ்கநி ல்திபவிள்கே ன்கமோ ஸிரேகி றுற்நே

   நீக்கு
  5. நறுக் சுருக் பதில்களே ஒன்று கூடக் கிடையாது! நீளமான நிகழ்ச்சி செய்தி ஏற்பாடு கல்கி பார்த்துக் கொண்டிருந்தேன் கேள்வி பதில் கிரேஸி மோகன் நேற்றே!

   ம்ம்ம்ம் இதை ஒழுங்கு செய்யணும். ஆனால் நேரமில்லை! காலம்பர போன மின்சாரம் இப்போத் தான் வந்தது. ஆகவே எல்லோரும் இதைச் சரியாக ஒழுங்கு செய்து படிச்சுக்குங்க! ஶ்ரீராம் கிரேஸி மோகன் மறைவால் ரொம்பப் பாதிக்கப்பட்டிருக்கிறார்! :(((((

   நீக்கு
  6. நேற்றே கிரேஸி மோகன் கேள்வி பதில் நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருந்தேன். கல்கி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி. நீளமான பதில்களே ஒன்று கூடக் கிடையாது! நறுக்! சுருக்!

   நீக்கு
  7. ஹா ஹா ஹா காசிக்குப் போனதிலிருந்து ஶ்ரீராம் குரான் போல எழுதத் தொடங்கிட்டார்ர் பின்னாலிருந்து ஹையோ ஆண்டவா அப்போ நெல்லைத்தமிழன் போய் வந்தால் அநேகமாக.... பரலோகத்தில் இருக்கின்ற பிதாவே... என ஆரம்பிக்கப்போறார்ர்ர்:) எங்களுக்கு இனி நல்ல முசுப்பாத்தியாத்தான் இருக்கப் போகுதூஊ ஹா ஹா ஹா:)..

   நீக்கு
  8. @ஸ்ரீராம் - //க்றுந - க்ருசு// - எனக்கு ஒரு திறமை உண்டு (இப்பவும் இருக்கான்னு செக் பண்ணலை). ஆங்கிலத்திலும், தமிழிலும் ரிவர்ஸில் (நீங்கள் எழுதியதுபோல) வேகமாக எழுதுவேன். திருமணம் நிச்சயம் ஆனபிறகு (நிச்சயதார்த்தத்துக்குப் பிறகு), திருமணத்துக்கு முன்பு, (என் மனைவியாக நிச்சயம் பண்ணப்பட்டவளுக்கு) 6-7 பக்கங்கள் இந்த மாதிரி ஒரு கடிதம் எழுதினேன். உங்கள் பின்னூட்டம் பார்த்ததும் அது நினைவுக்கு வந்துவிட்டது.

   கிரேசி மோகனுக்கு ஒரு சீனுக்கு வசனம் எழுதச் சொன்னால் பத்து பதினைந்து பக்கங்கள் கட கடவென எழுதிடுவாராம். அதில் கமல் ஒரு சில வாக்கியங்களை எடுத்துக்குவாராம். நான் பெரும்பாலும் கிரேசி, எஸ்.வி.சேகர் டிராமாக்களை மனசு சரியில்லாமல் தூக்கம் வரலைனா கேட்பேன். இல்லாட்டியும், அதைக் கேட்டுக்கொண்டு தூங்குவேன். அவர் ட்ரூப் சீனு மறைவே எனக்கு வருத்தமா இருந்தது. அதுக்குள்ள கிரேசியுமா?

   நீக்கு
  9. @அதிரா - //அப்போ நெல்லைத்தமிழன் போய் வந்தால்// - நீங்க வேற... நான் எப்படியும் அந்தப் பயணம் போகணும்னு நினைக்கிறேன். ஒவ்வொரு தடையா வந்துக்கிட்டிருக்கு (ஒரு ட்ரூப்காரரோட செப்டம்பர்ல பயணம்செய்யத் திட்டமிட்டேன். அவரும் சரி என்று சொல்லியிருந்தவர், கடைசி நேரத்தில்-அதாவது ஒரு வாரம் முன்பு-டிரெயின் டிக்கெட்டெல்லாம் முன்பதிவு செய்யும் முன்பு-தான் இனி டூரே போகப்போவதில்லை, நெஞ்சுவலி என்பதால் மருத்துவர் எங்கேயும் போகக்கூடாது என்று சொல்லிட்டார் என்றார். இன்னொருவர், 'தனியாவா? மனைவியோடு வருவதுதான் நல்லது' என்று சொல்கிறார்... அதனால் 'நடக்கும் என்பார் நடக்காது.... நடக்காதென்பார் நடந்துவிடும் கிடைக்கும் என்பார் கிடைக்காது...கிடைக்காதென்பார் கிடைத்துவிடும்' பாடல்தான்...

   கிரேசி மோகன் மறைவு ஸ்ரீராமை பாதித்ததைவிட, செவ்வாய் ஆட்டோ பயணம் இன்னும் அதிகமாகப் பாதித்திருக்கும் என்று நினைக்கிறேன்.

   நீக்கு
 43. இந்த சௌ சௌ இங்கே கிடைக்குது ஆனா மெக்சிகோலருந்து வர்ரதுதான் நம்ம ஊரில் கொஞ்சம் சின்ன சைஸ் சுரைக்காய் மாதிரி இருக்கும் .அம்மா சாம்பார் அப்புறம் கடலைப்பருப்பு தேங்காய் போட்டு /பருப்பிலாம /செய்வாங்க
  chayote இதில் ஸ்வீட்ஸ் செய்வாங்க மெக்சிகன் ப்ரெண்ட்ஸ் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதுல எப்படி ஸ்வீட்ஸ் பண்ணமுடியும்? தெரியலையே... நான் பெங்களூர் கத்தரி, நம்ம ஊருக்கானதுன்னு நினைத்தேன். அப்புறம்தான் பிலிப்பைன்ஸ்ல உபயோகப்படுத்தறாங்கன்னு தெரிஞ்சுக்கிட்டேன். மெக்சிகோவிலுமா?

   நான் பிலிப்பைன்ஸ் போயிருந்தபோது, அங்கு 'அரிசி ஆராய்ச்சிக் கழகத்தில்' வேலைபார்த்த ஒரு பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்தேன் (அவர் என்னுடன் கம்ப்யூட்டர் சம்பந்தமான கோர்ஸ் ஒரு வாரம் படித்தார்). அவர் சொன்னார், பிலிப்பைன்ஸில் அவங்க கார்ப்பொரேஷந்தான் ஐ.ஆர்.8 நெல் கண்டுபிடித்தது என்று. அது ஒரு காலத்தில் தமிழகத்தில் ரொம்பவும் உபயோகத்தில் இருந்தது.

   நீக்கு
  2. //ஐ.ஆர்.8/
   ஆஆஆஆ எட்டாம் நம்பர்:)) ஹா ஹா ஹா..

   8,17,26... இந்த இலக்கமோ பிறந்த திகதி எனக் கேட்டேன்ன் அதுதான் 8ம் நம்பராக இருப்பீங்களோ எனக் கேட்டது:))

   நீக்கு
  3. நான் 1ம் நம்பர். முழு வருடம், மாதம், பிறந்த தேதி இவைகளின் கூட்டுத்தொகை அடிப்படையில் 5. பிறந்த தேதியை மட்டும் வைத்துச் சொல்வார்களா இல்லை முழுவதுமாகவான்னு தெரியலை.

   பார்ப்போம் 'நாடி ஜோதிடர் அதிரா' என்ன சொல்லப்போகிறார் என்று.

   நீக்கு
  4. நான் பிறந்த தேதி மட்டும் வைத்துதான் சொல்கிறேன்.

   நீக்கு
  5. ஆஆஆ பொதுவா பிறந்த தேதியை வைத்தே பார்ப்பார்கள்... மொத்த எண்ணை கூட்டெண் என்பினம்...
   நெல்லைத் தமிழன் ஒன்றோ அவ்வ்வ்வ்வ் அதனாலதான் நம்மோடு கோபு அண்ணனோடெல்லாம் ஒட்டாக இருக்கிறார் ஏனெனில் கோபு அண்ணன்8. 4 ம் நம்பரும் 1ம் நம்பரும் காந்தமும் இரும்பும்போலே இருக்குமாம்.

   1ம் நம்பரில் பிறந்தோர் வாழ்க்கையில் முன்னேறிக்கொண்டே போவார்கள்... கடசிவரை நல்லாயிருப்பினம்...
   5ம் நம்பர்காரர் கொஞ்சம் சுழட்டல் பேர்வழி என்பினம் ஹா ஹா ஹா நேரம் போதவில்லை இப்போ..

   நீக்கு
  6. பிறந்த திகதி, பாதி வயது வரை நமக்கு செயல்படுமாம், அதன் பின்பு கூட்டெண்ணின் பவர்தான் நம்மில் அதிகமாக இருக்குமாம் அதாவது 40-50 வயதின் பின் கூட்டெண்ணின் பவர் நமக்கு அதிகமாகுமாம்

   நீக்கு
  7. அதிரா... எனக்கு Sun Shines, Moon Shines bookலாம் படித்து ராசியில்தான் ரொம்ப நம்பிக்கை. திருமணமாவதற்கு முன்பு அந்தப் புத்தகங்களைப் படித்து ரொம்பலாம் அதுபற்றி எண்ணுவேன். நம்பிக்கையும் இருந்தது. அப்புறம் இந்த ராசிக்கு (அதாவது ஸ்கார்ப்பியோ போன்று) இந்த இந்த ராசிக்குறியவர்களைத் திருமணம் செய்தால் நல்லது என்றெல்லாம் போட்டிருப்பதை ஆழ்ந்து படித்து (அப்புறம் அப்பா பார்த்துவைத்த பெண்ணுக்கு கழுத்தை நீட்டினேன்..ஹாஹா).

   நியூமராலஜியில் நீங்க ஒரு குண்டு போடறீங்க. 40-50 வயதுக்குப் பின் கூட்டெண், அதற்கு முன்னால் பிறந்த தேதியின் எண் என்று.... நான் கொஞ்சம் சந்தேகப் பேர்வழி, கொஞ்சம் ஜாக்கிரதையான ஆள். அதனால் என் வயது உங்களைவிடப் பெரியது, கீதா ரங்கனைவிட சிறியது என்று சொல்வதோடு நிறுத்திக்கறேன்.

   இது சம்பந்தமா ஒரு சம்பவம். ஒரு பத்திரிகையில் so & so நியூமராலஜியில் கில்லாடி அது இது என்று போட்டிருந்தது (கட்டுரை... விளம்பரம் அல்ல). அவரது காண்டாக்ட் எண்ணும் கொடுத்திருந்தார்கள். நான் வெளிநாட்டிலிருந்து அவருக்கு போன் போட்டு, நியூமராலஜிலாம் நம்பிக்கையானதா என்றெல்லாம் பேசினேன். அவர் என்னிடம் என் பிறந்த நாள் மட்டும் கேட்டார். உடனே, அதே பிறந்த நாளின் உங்களுக்கு ஒரு சகோதரன் இருக்கணும், உங்க குடும்பத்துல இத்தனை பேர் என்றெல்லாம் ஒரு சில தகவல்களைச் சொல்லி ஆச்சர்யத்தில் உறையவைத்துவிட்டார். அவர்ட்ட நான் சொன்னது, என் பிறந்த தேதி மட்டும்தான். அவருடைய நம்பரையும் தொலைத்துவிட்டேன், இன்னும் அவரிடம் ஏகப்பட்டது கேட்கணும்னு நினைத்தேன், அவர் பிறகு பார்க்கலாம்னுட்டார்.

   நீக்கு
  8. அது குட்டி குட்டி cubed chayote துண்டுகளை சுகர் சிறப்பில் ஊறவைத்த போலிருந்தது ..ஒவ்வொரு சதுரத்திலும் ஒரு டூத் பிக் குத்தி ஈஸியா எடுத்து சாப்பிட வைச்சாங்க .நெளிகையை இனிப்பில் செய்வோமே அது மாதிரி ,,நீங்க வேணும்னா முயலுங்க :)

   நீக்கு
  9. ஸ்ஸ்ஸ்ஸ் யப்பா ஸ்பெல்லிங் மிஸ்டேக்கு அது ///நெல்லிக்காயை //

   நீக்கு
 44. இன்னிக்கும் வேலை முடிஞ்சி வரும்போது பார்த்தேன் .இங்கே இதை பிளாஸ்டிக் கவரில் சீல் செய்றதால வாங்க யோசிப்பேன் புதுசா பழசான்னு :) சரி நாளைக்க வாங்கி செய்து பார்த்து சொல்றேன் .
  உங்கள் ரெசிபிக்களில் ஸ்வீட்ஸ் தவிர்த்து அப்புறம் மைதா கோதுமை கலப்பு தவிர்த்து மற்றவற்றை செய்தாச்சு :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஏஞ்சலின்...உங்க பாணில, கீழிருந்து மேல உங்க பின்னூட்டங்களைப் படிக்கறேன்.

   ஸ்வீட்ஸ் ஏன் தவிர்க்கணும்? இனிப்பு தோசையாவது பண்ணிப்பார்க்கலாம் இல்லையா?

   விரைவில் டேவடைக் கிச்சன் தூசு தட்டுங்க. கலாய்ச்சி ரொம்ப நாளாச்சு. (அவங்க கலாய்ச்சா நான் உங்களுக்கு சப்போர்ட் பண்ணுவேன். அவங்க பாராட்டினா, நான் கலாய்ப்பேன்)

   நீக்கு
  2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இது என்ன இது புயு தெக்கினிக்கு:))

   நீக்கு
 45. பதில்கள்
  1. இது யாரு அன்நோன்? பெயரோடு வந்தால் வரவேற்கலாமே....

   நீக்கு
  2. அது அந்தோன் ஆக இருக்குமோ?:)) பெயரே அப்பூடித்தான் ஹா ஹா ஹா..

   நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!