நண்பர் 'வளரும் கவிதைகள்' முத்துநிலவன் அவர் தளத்தில் வெளியிட்ட தேர்தல் பதிவு ஒன்றில் தொடர்பதிவாக பதிவிட எங்களையும் அழைத்திருந்தார். அவர் சொல்லிய தலைப்புகளில் நாங்கள் பதிவிடவில்லை என்றாலும், அரசியல் / தேர்தல் சம்பந்தப்பட்ட இந்தப் பதிவை அவர் வேண்டுகோளின்படி என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
ஆண்டாண்டு காலமாக வரும் வழக்கங்கள் மாற்றப்படவேண்டும். எங்களின் விருப்பமும், யோசனைகளும் கீழே...
இவை ஷியாம் சுந்தர் ரகுபதி, சுஜாதா சத்யநாராயணன், முனைவர் சபிதா ராமகிருஷ்ணன், மூத்த குடிமக்கள் ரகுபதி, யெக்னராமன், சுப்பிரமணியம், தொழிலதிபர் பானு முருகன் உள்ளிட்ட உறவுகளிடம் நட்புகளிடமும் கலந்துரையாடித் தயார் செய்யப் பட்டது.
இவை ஷியாம் சுந்தர் ரகுபதி, சுஜாதா சத்யநாராயணன், முனைவர் சபிதா ராமகிருஷ்ணன், மூத்த குடிமக்கள் ரகுபதி, யெக்னராமன், சுப்பிரமணியம், தொழிலதிபர் பானு முருகன் உள்ளிட்ட உறவுகளிடம் நட்புகளிடமும் கலந்துரையாடித் தயார் செய்யப் பட்டது.
இதைப்
படிக்கும் நண்பர்கள் தங்கள் யோசனைகளையும் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்.
சொன்னதையே திரும்பச் சொல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.
================================================================
*
நாட்டின் நிலத்தடி நீர்வளத்தைக் கெடுத்து, மற்ற பயிர்களையும் வளரவிடாமல்
செய்வதோடு, காற்றில் உள்ள ஈரப்பதத்தையும் உறிஞ்சிக் கொண்டு மனிதனுக்கு
மிகப் பெரிய கேடு விளைவிக்கும் வேலிகாத்தான் (சரிதானே கீதாக்கா?) மரங்களை
அதை முற்றிலும் ஒழிக்கும் விதமாக வேரோடு பிடுங்கி ஏறிய முதல் வேலையாக ஆவன
செய்வோம்.
* ஆறுகளின் மணல்களைத் திருடுவோருக்கு மரண தண்டனை. ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றுவோம். தூர் வாருதல் உள்ளிட்ட உழவாரப்பணிகள் வருடா வருடம் வெளிப்படையாக நடைபெறும். அனைவருக்கும் தேவையான அளவு தண்ணீர், குடிநீர் கிடைக்க உறுதி செய்யப்படும்.
*
மரம் வெட்டுபவர்கள் - யார் எங்கு வெட்டினாலும் - அனுமதி வாங்கியே
வெட்ட வேண்டும். தகுந்த காரணங்கள் இல்லாவிட்டால் அனுமதி மறுக்கப்படும்.
ஒரு மரம் வெட்டப் பட்டால் பதிலாக இரண்டு மரங்கள் நடப்பட்டிருக்க வேண்டும்.
* அரசு விளம்பரங்கள் அனைத்துப் பத்திரிகைகளுக்கும் ஒரே மாதிரி வழங்கப் படும். எங்கும், எதிலும் பாரபட்சம் காட்டப்படாது. அதிகம் காசு கொடுத்துப் பார்க்கப்படும் கேபிள் / டிஷ் டிவிக்களில் விளம்பரம் இல்லாமல் பார்த்துக் கொள்ளப்படும்!
* அனைத்து வகையிலும் இலவசங்கள் முற்றிலுமாக நிறுத்தப் படும்.
*
கல்விச் சாலைகளின் கட்டணக் கொள்ளை உடனடியாக நிறுத்தப்படும்.
பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் அரசுடைமை ஆக்கப்படும். அதன் பிறகு(ம்)
அதன் தரம் பாதுகாக்கப்படும். சரியான ஆசிரியர்கள், ஆய்வகங்கள், உபகரணங்கள்,
இடங்கள் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகள் இல்லாத பள்ளி, கல்லூரிகளின்
அனுமதி ரத்து செய்யப்படும். ஒருமுறை ரத்து செய்யப்பட்டால் மூன்று
வருடங்களுக்குப் பின்னரே அவர்கள் மறுபடி அனுமதி கோரி விண்ணப்பிக்க
முடியும். மூன்று வருடங்களுக்கு மேல் சரியான ரிசல்ட் தரமுடியாத கல்விச் சாலைகளின் அனுமதி பறிக்கப்படும்.
* நாட்டின் வாகனப் போக்குவரத்து கட்டுக்குள் கொண்டுவரப்படும். மாதத்தில் 15 நாட்கள் அரசு போக்குவரத்தில்தான் பயணிக்க வேண்டும். ஒரு வீட்டுக்கு ஒரு காருக்கு மேல் அனுமதி இல்லை. அனைத்துக் கட்டிடங்களுக்கும், தெரு விளக்குகளுக்கும் கூட சூரிய ஒளி மின்சாரம் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படும். வீட்டுக்கு வீடு சூரிய தகடு மின்சாரம். கூரை மீது தகடில்லை என்றால் அரசு எடுத்துக் கொண்டு தகடு பொறுத்தும். கட்டணம் அவர்களிடமே வசூலிக்கப்படும். தேவைப்படும், சாத்தியப்படும் இடங்களில் காற்றாலை மின்சாரமும் தயாரிக்க ஆவன செய்யப்படும்.
* குப்பை மேலாண்மையில் தனிக் கவனம் செலுத்தப்படும். குறிப்பாக ஈ
வேஸ்ட் எனப்படும் மின்கழிவுப் பொருட்களின் மேல் அதிக அக்கறை காட்டப்படும். அவரவர்
குப்பையை அவரவர் வீட்டுக் காம்பவுண்டுக்குள் வைத்திருக்க வேண்டும். பசுமை
உரமாக உபயோகிக்கக் கூடியவை பிற என்று எடை போட்டு பசுமைக்கு விலை
பிறவற்றுக்கு சுமை கூலி. உபயோகித்த பால் கவர்
பிளாஸ்டிக் பைகளை தனியாக எடை போட்டு பிளாஸ்டிக் வரி கட்டும் கார்டில் பதிவு செய்து எடுத்துக் கொள்வோம்.
* ஆடம்பரமாகச் செய்யப்படும் திருமணங்களுக்கு மிகக் கடுமையான வரி விதிக்கப்படும்.
* மதுக்கடைகள் முற்றிலும் ஒழிக்கப்படும். அதனால் ஏற்படும் வருமான இழப்பை வருமான வரி உள்ளிட்ட வரிகளைக் கடுமையாக வசூலிப்பதன் மூலமும் சரி செய்யப்படும். (வருமானந்த்தைப் பெருக்க நேர்மையாக வேறு என்ன வழி இருக்கிறது என்று வாசகர்கள் சொல்லலாம்)
* எடுத்தவுடன் எம் எல் ஏ ஆவது, முதல்வர் ஆவது போன்ற நடைமுறைகள் நிறுத்தப்படும். உள்ளூர் அரசியல், பஞ்சாயத்து அரசியல் என்று படிப்படியாக முன்னேறி வரவேண்டும். வேட்பாளருக்கு நிச்சயம் ஒரு குறைந்தபட்சக் கல்வித் தகுதி அவசியம். படித்தவர்கள் ஊழல் செய்யமாட்டார்கள் என்பதல்ல... அதற்கும் கல்வித் தகுதி அவசியம் என்பதால். அரசுக்காக வேலை செய்பவர்கள் எல்லோருமே அரசு ஊழியர்களாக்குவது நிறுத்தப்படும். ஏற்கெனவே அரசு ஊழியர்களாக இருப்பவர்களுக்கு அவர்களின் சிறப்பான வேலைத்திறனுக்கு ஊக்க போனஸ் வழங்கப்படும். இதன் மூலம் லஞ்சம் தவிர்க்கப் படலாம். அதே சமயம் அடிப்படை வேலைகளைக் கூட முடிக்காமல் இருப்பவர்கள் வேலையிலிருந்து நீக்கப் படுவார்கள்.
* கிரிக்கெட் விளையாட்டுக்கான வருமானத்துக்கு கடும் வரி விதிக்கப்படும். வறட்சிக் காலங்களில் தண்ணீர் அதிக அளவு ஆடுகளங்களில் வீண் செய்யப்படும் என்பதால், அந்த நேரங்களில் அந்த விளையாட்டு தடை செய்யப்படும்.
* திரைப்படத் துறையில் எந்த விஷயத்துக்கும் வரிவிலக்கு கிடையாது. திரை அரங்குகளில் கட்டணம் வசூலிப்பது மிகக் கடுமையாகக் கண்காணிக்கப்படும். மீறும் அரங்குகளின் உரிமைகள் உடனடியாகப் பறிக்கப்படும்.
* கட்சிகளுக்கு பெரிய நிறுவனங்களால் வழங்கப்படும் நன்கொடை 1,000 ரூபாயைத் தாண்டினாலே காசோலையாகத்தான் வழங்கப்பட வேண்டும். தேர்தலில் டெபாசிட் இழப்பவர்கள் அடுத்த மூன்று முறைகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.
* எல்லாக் கட்சிகளும் நிறுவனங்கள் போலக் கருதப்பட்டு ROC யில் பதிவு செய்யப்பட வேண்டும். இதன் மூலம் அதன் வருமானங்கள் கணக்கில் கொண்டுவரப்படும். வேட்பாளர்களுக்கு தேர்தலில் போட்டியிட - பணியாற்ற குறைந்த பட்ச / அதிக பட்ச வயது வரம்பு கட்டாயம் நிர்ணயிக்கப்பட வேண்டும்.
*
தலைவர்களுக்கான பாதுகாப்புப் பிரச்னைகளுக்கு ஆகும் செலவு அவரவர்களின்
கணக்கிலேயே வசூலிக்கப்பட வேண்டும். எம் எல் ஏ, எம் பி போன்றவர்களுக்கு
வழங்கப்படும் இலவச எரிவாயு இணைப்புகள், தொலைபேசி அழைப்புகள், இலவசப் பயண
வசதிகள் போன்றவை முற்றிலும் நிறுத்தப்படவேண்டும். நாடாளுமண்ட, சட்ட மன்ற
உணவகங்களில் வழங்கப்படும் உணவுகள் பாமர மக்களுக்கு வழங்கப்படும் விலையிலேயே
வழங்கப்படவேண்டும்.
* ஒரு கட்சியிலிருந்து ஒரு
உறுப்பினர் விலக நேர்ந்தால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதோடு, அவரைத்
தேர்ந்தெடுத்தது முதல் ஆன செலவுகளை - சம்பளம் உட்பட - திருப்பிக் கட்ட
வேண்டும். அதன்பின் மூன்று வருடங்கள் அவர் அரசியலில் எதுவும் ஈடுபடாமல்
இருக்க வேண்டும். பின்னரே புதுக் கட்சி போன்றவற்றில் ஈடுபடவேண்டும்.
*
மதங்கள், சாதிகள் பெயரில் எந்த ஒரு கட்சிப் பெயரும் இருக்கக் கூடாது.
மாணவர்கள் கல்வி கற்கும் காலங்களில் கண்டிப்பாக அரசியல் விஷயங்களில்
தலையிடக் கூடாது. மாபெரும் பொதுக் கூட்டங்கள், ஊர்வலங்கள், பேரணிகள் முற்றிலும் நிறுத்தப்படும்.
* மதங்களின் பெயரால், சாதிகளின் பெயரால், மொழிகளின் பெயரால் உணர்ச்சி வசப்படும் வகையில் பேச மாட்டோம். மக்களைத் தூண்ட மாட்டோம்.
* சுஜாதா சத்யநாராயணன் சொல்கிறார், "சுருக்கமாக
சொன்னால் எங்களால் - மக்களால் - வாங்கக் கூடிய விஷயங்களான உணவு, உடைகள்,
அணிகலன்கள், மருத்துவப் பொருட்கள், தண்ணீர், உப்பு, சிமெண்ட், உள்ளிட்ட
அத்தியாவசியத் தேவைகள்,பற்றிய கவலைகளை நாங்கள் பட்டுக் கொள்கிறோம்.
ஒரு ஆட்சியாளராக, அரசியல்வாதியாக நீங்கள் செய்ய வேண்டியவை மக்களுக்குத் தேவையான கட்டுமான வசதி, மின் வசதி, தண்ணீர், மின்சாரம் உள்ளிட்ட விவசாயம் செய்வதற்கான வசதிகள், அடிப்படை மற்றும் அனைத்துக் கல்வி வசதிகள் சகாயக் கட்டணத்தில், சட்டம் ஒழுங்குக் கட்டுப்பாடு மிகத் தீவிரமாகக் கடைப்பிடிக்கப்படும் என்னும் உறுதி, மருத்துவ வசதிகள் சரியானபடி கிடைக்க, ஆக, இவை எல்லாவற்றுக்குமே எல்லாவற்றுக்குமே சரியான கட்டமைப்பை உருவாக்குவது உங்கள் கடமை.
ஒரு ஆட்சியாளராக, அரசியல்வாதியாக நீங்கள் செய்ய வேண்டியவை மக்களுக்குத் தேவையான கட்டுமான வசதி, மின் வசதி, தண்ணீர், மின்சாரம் உள்ளிட்ட விவசாயம் செய்வதற்கான வசதிகள், அடிப்படை மற்றும் அனைத்துக் கல்வி வசதிகள் சகாயக் கட்டணத்தில், சட்டம் ஒழுங்குக் கட்டுப்பாடு மிகத் தீவிரமாகக் கடைப்பிடிக்கப்படும் என்னும் உறுதி, மருத்துவ வசதிகள் சரியானபடி கிடைக்க, ஆக, இவை எல்லாவற்றுக்குமே எல்லாவற்றுக்குமே சரியான கட்டமைப்பை உருவாக்குவது உங்கள் கடமை.
அதாவது, நீங்கள் உங்கள் வேலையை (மட்டும்) பாருங்கள். நாங்கள் எங்கள் வேலையைப் பார்க்கிறோம்"
படங்கள் நன்றியுடன் இணையத்திலிருந்து....
படங்கள் நன்றியுடன் இணையத்திலிருந்து....
