காட்சி ஒன்று கானம் நான்கு! 'இவர்' சொல்லிக் கொடுப்பார். 'அவர்' கற்றுக் கொண்டு வேறு இடத்தில் பாடி பரிசு வாங்குவார்.
1) மிலன் திரைப் படத்தில் முகேஷ்-லதா மங்கேஷ்கர். 'சாவன் கா மஹீனா'
2) பிராப்தம் படத்தில் டி எம் எஸ்-சுசீலா. 'சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து...'
3) ஆனந்தராகம் படத்தில் கே ஜே யேசுதாஸ்-ஜானகி. 'மேகம் கறுக்குது.. மழைவரப் பார்க்குது....' ஒரே மாதிரிக் காட்சியமைப்பு!
4) ரிக்ஷா மாமா படத்தில் எஸ் பி பாலசுப்ரமணியம்-ஜானகி. 'வைகை நதியோரம்...'
5) காட்சி ஒன்று என்ற வரிக்கு இந்தப் பாட்டு ஒத்து வராது. அப்புறம் ஏன்
ஐந்தாவதாக இந்தப் பாட்டு? 60 களில் வந்த, ஒன்றாவதாகச் சொல்லப் பட்டிருக்கும் 'மிலன்' படப் பாடலான 'சாவன் கா மஹீனா...' வை வெகு திறமையாக தமிழில் காபி
அடித்த பாடல். யாரும் கவனிக்க மாட்டார்கள் என்று நினைத்திருப்பார் தேவா!!
குறிப்பாக சரணத்தைக் கேளுங்கள் (கேட்பீர்கள்தானே!) காபியை நன்றாகக்
கண்டுபிடிக்கலாம்! [ஜோதிகாவின் டான்ஸ் இதில் ஒரு சுவாரஸ்யம்]