அந்தக் காலத்தில் அதிகாலையில் வானொலியில் பக்தி மாலை என்றால் சூலமங்கலம் சகோதரிகள் பாடல் இல்லாமல் இருக்காது. அவர் குரல் இடம்பெற்றால்தான் நிகழ்ச்சியே சிறக்கும். அதிராத, மென்மையான, இழையும் குரலில் சகோதரிகள் இருவரும் இசைக்கும் இன்னிசை பக்திமாலைப் பாடல்கள் காலத்தைக் கடந்து நிற்கும் புகழ்பெற்றவை.