வைரமுத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வைரமுத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

5.12.25

நதிகள் விரைந்தால் கடலும் வழிவிடும்...

 கொஞ்ச வாரங்களுக்கு முன் இளமைக்காலங்கள் படத்திலிருந்து இரண்டு பாடல்கள் பகிர்ந்து விட்டு, 'இன்னும் இரண்டு நல்ல பாடல்கள் இருக்கின்றன.. அதை அடுத்த வாரம் பகிர்கிறேன்' என்று சொல்லிவிட்டு,  அடுத்த வாரம் வேறெதையோ பகிர்ந்து விட்டேன்.  "அது என்ன ஆச்சு?"  "அது என்ன ஆச்சு?"  என்று ஆயிரக்கணக்கான வாசகர்கள் ஃபோன்பண்ணி கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள் -  ஹிஹிஹி... என் அக்காதான் கேட்டார்.

7.11.25

நெஞ்சுக்குள்ளே தீ இருந்தும் மேனியெங்கும் பூ வசந்தம் கன்னிக்கரும்பு உன்னை எண்ணி சாறாகும்

இளமைக்காலங்கள் 1983 ல் வெளியிடப்பட்ட படம்.,  மோகன் ஜனகராஜுடன் அறிமுகமாக சசிகலா, ரோஹிணி, பாலாஜி ஆகியோர் நடித்த படம்.  எழுதி இயக்கி இருந்தவர் மணிவண்ணன்.  இசை இளையராஜா.

12.1.24

வெள்ளி வீடியோ : வேப்பமர நிழலு விசிலடிக்கும் குயிலு மாட்டு மணி சத்தம் வயசான முத்தம்...

 இன்னும் இரண்டு மூன்று தினங்களில் மகரஜோதி தரிசனம்.  இன்றைய பாடல் ஐயப்பனின் பாடல், எல்லோராலும் விரும்பிக் கேட்கப்படுவது.  கே ஜே யேசுதாஸ் பாடிய 'ஹரிவராசனம்..'

15.7.22

வெள்ளி வீடியோ : பருவம் அடைந்த கனவு இவள் சலங்கை அணிந்த நிலவு...

 எஸ் பி பாலசுப்ரமணியம் பாடல்கள் பல அன்று ரேடியோவில் கேட்டுவிட்டு, அவற்றை மறுபடி இன்று கேட்க நினைத்து தேடும்போது கிடைக்காமல் போயிருக்கின்றன. நீண்ட நாட்கள் கழித்து கிடைத்தும் இருக்கின்றன.  நான் தேடியபோது அவற்றை யாரும் வலையேற்றிருக்கவில்லை. 

21.8.20

வெள்ளி வீடியோ : கடலுக்கு கூட ஈரமில்லையோ நியாயங்களை கேட்க யாருமில்லையோ

1982 இல் வெளியான பயணங்கள் முடிவதில்லை திரைப்படம் அதன் இயக்குனர் ஆர் சுந்தராஜனுக்கு மட்டும் முதல் படமல்ல, கோவைத்தம்பி - அதாவது மதர்லேண்ட் பிக்சர்ஸுக்கும் அதுவே முதல் படம்.  ஆனாலும் அப்போது அவர் அதை மதர்லேண்ட் பிக்சர்ஸ் என்று அறிவிக்காமல் தயாரிப்பாளர்களாய் மூன்று பெயர்கள் சொன்னார்.

14.8.20

வெள்ளி வீடியோ : காலைவேளை ஒரு கனவு வந்ததடி உருகினேன் பாடநூலில் தினம் செல்வி துணையென்று எழுதினேன்

A L ராகவன் மறைந்த நேரம், ஏகாந்தன் ஸார் நேயர் விருப்பமாக ஏதாவது ஒரு ஏ எல் ராகவன் பாடல் கேட்டிருந்தார்.  'பாப்பா பாப்பா கதை கேளு' முன்பே ஒரு முறை போட்டாச்சு.  'எங்கிருந்தாலும் வாழ்க' அனைவரும் கேட்டிருப்பார்கள்.  அதிகமாக கேட்காத பாடலாகவும், உற்சாகமாகவும் இருக்க வேண்டி 'சுமதி என் சுந்தரி' படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை அவரின் விருப்பமாக பகிர்கிறேன்.  பிடிக்கவில்லை என்றாலும் பொறுத்துக் கொள்ளுங்கள் ஏகாந்தன் ஸார்!