A L ராகவன் மறைந்த நேரம், ஏகாந்தன் ஸார் நேயர் விருப்பமாக ஏதாவது ஒரு ஏ எல் ராகவன் பாடல் கேட்டிருந்தார். 'பாப்பா பாப்பா கதை கேளு' முன்பே ஒரு முறை போட்டாச்சு. 'எங்கிருந்தாலும் வாழ்க' அனைவரும் கேட்டிருப்பார்கள். அதிகமாக கேட்காத பாடலாகவும், உற்சாகமாகவும் இருக்க வேண்டி 'சுமதி என் சுந்தரி' படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை அவரின் விருப்பமாக பகிர்கிறேன். பிடிக்கவில்லை என்றாலும் பொறுத்துக் கொள்ளுங்கள் ஏகாந்தன் ஸார்!
தனது ப்ராபல்யத்தால், இழந்த சுதந்தரத்தால், வாடும் நடிகை சுமதி இந்தப் பாடல் கேட்டுதான் (எங்கேயோ ஒரு பெட்டியில் பாடும் பாடல் இவர் இருக்கும் பெட்டியில் கேட்கிறதாம்) இறங்கி அந்தப் பெட்டிக்குச் செல்ல முயல, ரயில் கிளம்பி விட, அங்கு கதை தொடங்கும்! இனிய பாடல்கள் கொண்ட இந்தப் படத்தின் வேறு சில பாடல்களை பின்னொருமுறை பகிர்வேன்.
=================================================================================================
இப்போது என் விருப்பம்!
1983 இல் வெளிவந்த படம் ஆனந்தக்கும்மி. வைரமுத்துவின் கதை.
பாடல்களும் அவரே. இளையராஜா தன் மனைவி ஜீவா பெயரில் தயாரித்திருந்த படம். அப்போது வந்த அலைகள் ஓய்வதில்லை, இளஞ்சோடிகள், பன்னீர்புஷ்பங்கள் அலையில் இதுவும் ஜெயிக்கும் என்று நினைத்திருக்கலாம். பாவம்!
ஆனால் படம் ஓடவில்லை. இரண்டு புதுமுகங்கள் பாலச்சந்திரன், அஸ்வினி நடித்த திரைப்படத்தில் இரு பாடல்களைத் தவிர மற்ற பாடல்கள் அனைத்தும் தேன்.
ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது, திண்டாடுதே ரெண்டு கிளியே, ஓ வெண்ணிலாவே, மற்றும் இன்று பகிரப்போகும் தாமரைக்கொடி, ஊமை நெஞ்சின் ஓசைகள் பாடல்கள்.
மகனின் காதலை முறிக்க அந்தப் பெண்ணையே திருமணம் செய்யும் நாயகனின் அப்பா... இதுதான் படத்தின் ஒன்லைன்!
ஊமை நெஞ்சின் ஓசைகள் பாடல் எஸ் பி பி - ஜானகி அம்மா பாடியது.
வசீகரிக்கும் வரிகள் இரண்டு பாடல்களிலும்.
ஜானகி அம்மா ஆரம்பிக்க சரணத்தின் இரண்டாவது வரியில்தான் இணைவார் எஸ் பி பி.
ஊமை நெஞ்சின் ஓசைகள் காதில் கேளாதோ
மனம் தாங்குமோ இமை தூங்குமோ இந்த
ஊமை நெஞ்சின் ஓசைகள்
பிரிந்தாய் இன்பத்தேனே வெறுத்தேன் என்னை நானே
எனக்கும் அதுதானே கலக்கம் என்ன மானே
நீ இல்லாமல் நடந்து போக கால்கள் இல்லையே
கனவிலேனும் கடிதம் போடு காதல் முல்லையே
உனைக்காணும் அந்த நாள் வரை
உறங்காது இந்தத் தாமரை
உன்னை நினைத்தே(ன்) உயிரைச் சுமந்தேன்
தரையோ வெகுதூரம் அலையோ தடுமாறும்
விதியோ விளையாடும் கிளியோ கி(ள்)ளை தேடும்
மூடி வைத்த காதல் இன்று மோசம் போகுமோ
மூடி வைத்த தாழம்பூவில் வாசம் போகுமோ
மலராதோ எந்தன் பூவனம் பெண்மைதானே
அதன் காரணம்
கண்ணே உறங்கு கனவை வழங்கு
அடுத்த பாடல் எஸ் பி பி தனித்துப் பாடும் பாடல். காதலியைக் கவர காதலன் பாடும் பாடல். எஸ் பி பி கொஞ்சம் மேல் ஸ்தாயியில் ஆரம்பிக்கும் பாடல். பல்லவியே இந்த உயரத்தில் ஆரம்பித்தால் சரணங்கள்? அது இன்னும் கொஞ்சம் உசரத்தில்! இந்தப் படத்தின் பாடல்களின் நிறைய வரிகள் மனதில் அமர்ந்து அவ்வப்போது நினைவுக்கு வந்து ரசிக்க வைக்கும். உற்சாகமான பாடல்.
தாமரைக்கொடி தரையில் வந்ததெப்படி
மல்லிகைக்கொடி உந்தன் மனதிலென்னடி
உன்னை நாடி வாடினேன் சுவர் ஏறி ஓடினேன்
பலன் இல்லை என்பதால் இன்று பாதை மாறினேன்
காலைவேளை ஒரு கனவு வந்ததடி உருகினேன்
பாடநூலில் தினம் செல்வி துணையென்று எழுதினேன்
வீட்டுப்பூனை நான் வேங்கை போலவே மாறினேன்
நேரம் வந்ததடி நானும் எல்லைகளை மீறினேன்
வேலை செய்வதில் நான் காதல் மன்னனே
லீலை செய்வதில் நான் பாதி கண்ணனே
அல்லி ராணி அள்ள வா நீ அர்ச்சுனன் நானே
மூக்கின்மீது நிறம் மாறிப்போனதடி கோபமோ
என்னை மீறி ஒரு தந்தி வந்துவிடக் கூடுமோ
பந்தம் உள்ளதில் சொந்தம் கொள்வதில் பாவமோ
ஆசை கோபமாய் வேஷம் போடுது நியாயமோ
லோகம் எங்குமே பனிதூங்கும் புல்வெளி
பாடிவந்து நீ விளையாடு பைங்கிளி
ஊடல் கொள்ள நேரமில்லை வரம் கொடு தோழி
இனியகாலை வணக்கம் ஸ்ரீராம் மற்றும் எல்லோருக்கும்
பதிலளிநீக்குகாலை வேளை எந்தக் கனவும் எனக்கு வர மாட்டேங்குதே ஹா ஹா ஹா
கீதா
ஹை கீதா,
நீக்குகுட் மார்னிங்க்.
எனக்கு கனவுகள் நிச்சயம் வரும்.
மறந்துதான் போய்விடும்.:)
வாங்க கீதா... வணக்கம். காலையிலேயே கனவா என்கிறீர்களா?
நீக்குகனவு வரவேண்டுமே எனக் கனவு காண்பவர்களும் உண்டோ இப்பேருலகில் !
நீக்குஇல்லை ஏகாந்தன் சார்.
நீக்குகனவு வந்துவிடப் போகிறதே என்று பயந்த நாட்களும் உண்டு.
மனம் இரண்டு பக்கமும் சிந்திக்கிறதே.
கனவுகளும் இனிமை ,அல்லது கொடுமை வகைப்படும்.
எல்லோருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குஇசைக்கான நாள் வெள்ளி.
நல்ல பாடல்களோடு வந்திருக்கிறது.
இனிய காலை வணக்கம் வல்லிம்மா... வாங்க...
நீக்குஏகாந்தன் அவர்களின் விருப்பப் பாடல்
பதிலளிநீக்குநல்ல அப் பீட் இசை. ரயில் சத்தமும்
சேர்ந்து,
ராகவன் குரலின் உற்சாகத்தோடு வந்த
இனிய பாடல். படத்தின் முக்கியத் திருப்பத்துக்கு
இசைவாக அமைந்த கும்மாளப் பாடல். நன்றாக இருந்தது ஸ்ரீராம்.
நன்றி வல்லிம்மா.
நீக்குஆனந்தக் கும்மி படம் நினைவில் இல்லை.
பதிலளிநீக்குஆனால் SPB sir பாடல் இனிமையாக
இருந்தது.
அதுவும் துள்ளல் இசையோடு ரசிக்க முடிந்தது.
ஆமாம். உற்சாகப்பாடல். அறியாக்காதல் எப்பவும் உற்சாகம்தான்!
நீக்குஒளிக்காட்சி பார்க்காமல் இசைகேட்கலாம்.ஆமாம்
பதிலளிநீக்குபழைய படங்களின் சாயல் இருக்கிறது.
பெரும்பாலான நேரங்களில் அதுவே நிம்மதி!
நீக்குஅனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். ரஷ்யாவின் மருந்து உலகனைத்துக்கும் பயன்படப் பிரார்த்திப்போம். ஏறி ஏறி இறங்கும் கொரோனா தொற்று மேலும் பரவாமல் இருக்கவும் பிரார்த்திப்போம். நேற்று ஒரு செய்தியில் கொரோனா இல்லாதவர்களைக் கூடக் கணக்குக் காட்டி மத்திய அரசிடம் இருந்து உபரித்தொகை பெறப் பிடித்துப் போட்டுக் கணக்கை உயர்த்திக் காட்டுவதாக "சாவித்திரி கண்ணன்" என்னும் பத்திரிகையாளர் சொல்லி இருப்பதாக ஒரு செய்தி சுற்றுகிறது. அது உண்மையாக இல்லாமல் இருக்கவும், அனைவரும் கொரோனாவின் பிடியிலிருந்து தப்பிக்கவும் பிரார்த்தனைகள் செய்வோம்.
பதிலளிநீக்குவாங்க கீதா அக்கா... வணக்கம். பிரார்த்தனைகளுக்கு நன்றி. ரஷ்யாவின் மருந்தைப் பற்றி மிகவும் சந்தேகமாகச் சொல்கிறார்கள் - இந்தியா உட்பட. பார்ப்போம். மனிதர்கள் மேலான மூன்றாம் கட்ட பரிசோதனை என்கிற பெயரில் சென்னை எஸ் ஆர் எம்மில் எல்லாம் ஏற்கெனவே தடுப்பூசி ஓடிக்கொண்டிருப்பதாகவும் ஒரு தகவல்.
நீக்குநேற்று ஒரு செய்தியில் கொரோனா இல்லாதவர்களைக் கூடக் கணக்குக் காட்டி மத்திய அரசிடம் இருந்து உபரித்தொகை பெறப் பிடித்துப் போட்டுக்//
நீக்குஇது தெரியவில்லை ஆனால் பலருக்கும் தொற்று முதலில் நெகட்டிவ்னு வந்து அப்புறம் பாசிட்டிவ்னும், சிலருக்கு பாசிட்டிவ் ஆனால் நெகட்டிவ் என்று சொல்வதாகவும் அறிகிறேன். அப்படித்தான் திருத்தணியில் ஒரு பையனுக்கு நெகட்டிவ் ரிசல்ட். ஆனால் மூன்று நாட்களுக்குப் பிறகு பையனுக்கு நேராக மூச்சுத் திணறலாம் ஸ்கேனில் தெரிந்ததாம் லங்க்ஸில் தொற்று இருப்பதாக. இப்ப ஐசியுவில். இச்செய்தி அப்படியே உண்மையா என்று தெரியவில்லை.
ஆனால் எனது உறவினருக்கு தொற்றே இல்லை. ஆனால் பாசிட்டிவ் என்று சொல்லிவிட்டு அப்புறம் இரு நாட்களில் மீண்டும் எடுக்கிறேன் என்று எடுத்து நெகட்டிவ் என்றிருக்கிறார்கள். என்னவோ போங்க. எங்கு தவறு நடக்கிறது என்று தெரியவில்லை
கீதா
திருச்சியில் உள்ள உறவினர் ஒருவருக்குத் தொற்று வந்து மருத்துவமனையில்தான் அட்மிட் ஆனார்கள் வீட்டில் க்வாரண்டைன் வேண்டாம் என்று ஏனென்றால் வயதானவர்கள் இருப்பதால்.
நீக்குஇப்போது குணமாகியிருக்கிறார்.
இங்கு பங்களூரில் மகனின் நண்பர் ஒருவர் குதிரை ஃபார்மில் பணி செய்பவருக்குத் தொற்று. அவர் பேசவே முடியாமல் திணறினார். இருமல் ரொம்ப அதிகமாகவும் இருமுவதற்கே கஷ்ட்ப்பட்டதாகவும், கொஞ்சம் மூச்சுத் திணறலும் இருந்ததாக மகனின் மற்றொரு நண்பர் சொன்னார்.
நான் அதனால் பேசவில்லை. வாட்சப்பினேன். லேட்டாகத்தான் பதில் வந்தது. கொஞ்சம் கஷ்ட்ப்படுவதாக. வீட்டில் மனைவிக்கும் குழந்தையும் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றியும் கேட்டிருக்கிறேன்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம். என்னவோ போங்க
கீதா
ரஷ்யாவின் மருந்தைப் பற்றி மிகவும் சந்தேகமாகச் சொல்கிறார்கள் - இந்தியா உட்பட. பார்ப்போம். மனிதர்கள் மேலான மூன்றாம் கட்ட பரிசோதனை என்கிற பெயரில் சென்னை எஸ் ஆர் எம்மில் எல்லாம் ஏற்கெனவே தடுப்பூசி ஓடிக்கொண்டிருப்பதாகவும் ஒரு தகவல்.//
நீக்குஓ ரஷ்யாவின் மருந்து சந்தேகத்திற்கிடமாகிவிட்டதா. ம்ம் என்னவோ எப்படியோ ஒரு நல்ல மருந்து வெற்றிகரமாக வந்துவிட்டால் போதும் என்று எல்லோருக்குமே தோன்றத்தான் செய்கிறது.
கீதா
சுமதி என் சுந்தரி படம் முழுக்கப் பார்த்திருக்கேன் தொலைக்காட்சி தயவில். ஆனால் ஏ.எல்.ராகவனின் இந்தப் பாட்டு நினைவில் வரவில்லை. அடுத்த படம் பெயரே புதுசு! இஃகி,இஃகி,இஃகி! பாட்டை மட்டும் எங்கே கேட்டிருக்கப் போகிறேன். எனக்கு வைரமுத்துவின் கவிதைகளே பிடிக்காது. அவரோட கதையில் வந்த படம் மட்டும் எங்கே பிடிக்கப் போகிறது? ஆனால் எஸ்பிபி தன் உற்சாகத்தைக் குறைக்காமல் நன்றாகப் பாடி உள்ளார்.
பதிலளிநீக்குவைரமுத்துவை பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் அவரது கவிதைகள் நிறைய எனக்குப் பிடிக்கும். இங்கு கவிதைகள் என்று நான் சொல்வது சினிமா பாடல்களை. ஒன்று தெரியுமோ? எஸ் பி பி முதன் முதலில் சிவாஜிக்கு பாடியது இந்தப் படத்தில்தான்.
நீக்குஒன்று தெரியுமோ? எஸ் பி பி முதன் முதலில் சிவாஜிக்கு பாடியது இந்தப் படத்தில்தான்.//
நீக்குகூகுள் செய்து பார்த்துவிட்டேனே. பொட்டு வைத்த முகமோ பாடல்தானே!! அருமையான பாடல். எனக்கு மிகவும் பிடிக்கும் இந்தப் பாடல். அது எஸ்பிபி கொஞ்சம் சிவாஜிக்காகப் பாடியிருப்பது போலத் தோன்றுகிறது. புன்னகை புரிந்தாள் என்று கொஞ்சம் அழுத்திப் பாடுகிறார்!!!! இன்னும் சில இடங்கள் அந்தி மஞ்சள் நிறமோ என்று சொல்லும் போது சிவாஜியின் உதடுகள் குவியும் போது கரெக்ட்டாக நிறமோ என்று சொல்லி நிறுத்துகிறார்.
சும்மா எஸ்பிபி வாய்ஸ் எப்படி சிவாஜிக்குப் பொருந்திப் போகிறது என்று பார்க்கத்தான் ஹா ஹா ஹா
கீதா
//அது எஸ்பிபி கொஞ்சம் சிவாஜிக்காகப் பாடியிருப்பது போலத் தோன்றுகிறது. //
நீக்குஇல்லை கீதா.. எஸ் பி பி பாடும்போது சிவாஜி நேரில் வந்து எஸ் பி பி அனுமதி பெற்று நேரில் அமர்ந்து அவர் பாடுவதை பார்த்துப் போனாராம். படம் வந்தததும் அந்தக் காட்சியை எஸ் பி பி யை பார்க்கச் சொன்னாராம். அவர் எப்படி சேஷ்டை செய்வாரோ அதேபோல சிவாஜி செய்திருந்தாராம். எஸ் பி பி சொல்லி இருக்கும் விவரம் இது.
ஏ.எல் ராகவன் பாடல்கள் சட்டென்று நினைவுக்கு வருவது ''எல்லாமே
பதிலளிநீக்குவயத்துக்கு தாண்டா'' பாடல்.
இன்னொன்று 'கால்கள் நின்றது நின்றதுதான்''
இரண்டு படங்களும் நினைவுக்கு வரவில்லை.
இரண்டுமே நல்ல பாடல்கள். முதல் பாடல் நவகிரகம். இரண்டாவது பாடல் பூஜைக்கு வந்த மலர்.
நீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குஎல்லாமே அருமையான பாடல்கள்தான்.
பதிலளிநீக்குஇளையராஜா மனைவியின் பெயர் ராசாத்தி இல்லையா ?
நீங்க சொல்றது இன்னொருவரோட மனைவி.
நீக்குஇளையராஜா தன் சகோதரி பெண் ஜீவாவை மணந்துகொண்டவர்.
வாங்க கில்லர் ஜி... நெல்லை சரியான பதிலைச் சொல்லி விட்டார்.
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம்.
பதிலளிநீக்குவணக்கம் பானு அக்கா... வாங்க...
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இனிய பிரார்த்தனைகளுக்கு நன்றி கமலா அக்கா... வாங்க... வணக்கம்.
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஆனந்தக்கும்மியில் பாடல்கள் வைரமுத்து. சரி.
நீக்குமுதல் பாடலை எழுதியது யாரெனச் சொல்லவில்லையே! அதைக் கவனிக்காமல், அதுவும் வைரமுத்துவின் வேலை என நினைத்து அவசரப் பின்னூட்டமிட்டு, எங்கோ மணியடிக்க, உடனே தூக்கவேண்டியதாயிற்று! வாலியோ, கண்ணதாசனோ வழிந்ததற்கு வைரமுத்துவைக் குறை சொன்னால் அந்த வைரவனுக்கே பொறுக்காதே. காலை நேரத்தில் கடவுள் குற்றம் தேவையா!
பாடல்கள் வைரமுத்துதான் ஏகாந்தன் ஸார்.
நீக்குஅந்தப்பாட்டும் வைரமுத்துதானா! அப்படியென்றால், எடுத்துவிட்ட பின்னூட்டம் சரியாகத்தான் இருந்ததா?
நீக்குஆஹா...அருமையான பாடல்கள்...பகிர்ந்தமைக்கு வாழ்த்துகள்...
பதிலளிநீக்குநன்றி ரமணி ஸார்.
நீக்குமுதல் இரண்டு பாடல்களும் கேட்டிருக்கிறேன்.
பதிலளிநீக்குஎல்லோருக்கும் காலம் வரும் பாடல் உற்சாகத் துள்ளல்
ஊமை நெஞ்சின் - நல்ல மெலடி. ஆனால் இந்தப் பாடலை இன்று கேட்டபோது நான் ஏற்கனவே கேட்டிருக்கும் இரண்டு மூன்று பாடல்கள் இந்தப் பாட்டின் இசையில் ஒளிந்துகொண்டிருக்கிறார்ப்போல் ஒரு எண்ணம். கீதா ரங்கன் தெளிவுபடுத்துவாரா?
மூன்றாவது பாடலை இனித்தான் கேட்கணும்.
வாங்க நெல்லை... ஊமை நெஞ்சின் பாடல் சற்றே காதல் ஓவியம் பாடல் குயிலே குயிலே பாடலை நினைவுபடுத்தும். அதனால் இருக்கலாம்.
நீக்குஒன்று கவனித்தீர்களா?
பதிலளிநீக்குமுதல் பாடல் இரயில் பெட்டி போலவே இல்லாத செட். இரண்டாம் பாடல் நிஜ இரயில்.
காலம் மாறியிருக்கு.
ஆமாம். பார்த்தால் செட் என்று நன்றாய்த் தெரியும்!
நீக்குஇரண்டாம் படத்தின் கதை, வைரமுத்துவின் மன வக்கிரமே கதையாக மாறிவிட்டது போலும்.
பதிலளிநீக்குஎன்ன மாதிரிலாம் சிந்திக்கறாங்கப்பா
எதிர்பாராதது பி[பற்றி சொல்ல வந்தேன். ஆனால் ஜீவி ஸார் கீழே அதுபற்றிச் சொல்லி விட்டார்.
நீக்குமுதல் பாடல் குதூகலம் காட்டுவதால் செலக்ஷன் ஓ.கே.!
பதிலளிநீக்குநன்றி ஏகாந்தன் ஸார்.
நீக்குதாமரைக் கொடி பாடலையும் கேட்டிருக்கேன். அருமையான பாடல்.
பதிலளிநீக்குஆனால் எஸ்பிபி குரல் அந்தப் பையனுக்குப் பொருந்தலை. குருவி தலைல பனங்காயை வைத்ததுபோல
இன்று மூன்று பாடல்களுமே நல்ல மலரும் நினைவுகள்.
உண்மைதான். அந்தப் பையன் சைஸுக்கு பொருந்தாத குரல். இதே போல இன்னொரு படப்பாடலும் உண்டு. கொக்கரக்கோ படத்தில் கீதம் சங்கீதம்!
நீக்குஸ்ரீராம் தாமரைக் கொடி பாடல் வரிகள் பார்த்ததும் டக்கென்று நினைவுகக்கு வரவில்லை. அப்புறம் கேட்டதும் தான் இந்தப் பாட்டு எத்தனை முறை கேட்டிருக்கிறேன் என்று நினைவு வந்தது. படம் பற்றித் தெரியவில்லை இந்தப் படத்தின் பாடல்தான் என்பதும் அப்போது தெரியாது. இப்போதுதான் தெரிந்து கொண்டேன்.
பதிலளிநீக்குசூப்பர் பாட்டு
இந்தப் பாட்டைக் கேட்டதும் உங்களுக்கு வேறு பாடல் நினைவு வருகிறதா? அதுவும் மூன்றாவது வரி மேலே பாடி டக்கென்று கீழே பாடுவதைக் கேட்டதும்? க்ளூ கமல் படப் பாடல். ஏன் க்ளூ கொடுக்கிறேன் தெரியுமோ எனக்குப் பாடல் மெட்டுதான் நினைவிருக்கு வரிகள் டக்கென்று நினைவுக்கு வரலை படம் பெயரும் தெரியவில்லை வழக்கமான பதில் அதான் க்ளூ!! ஹிஹிஹிஹி
கீதா
கமல படம்தானோன்னும் இப்ப சந்தேகம் வந்திருச்சே...ஹா ஹா ஹா
நீக்குஆனால் இதே போல ஒரு பாடல் இருக்கு
கீதா
வாங்க கீதா... நீங்க சொல்லும் பாடல் எது என்று தெரியவில்லை. பாடல் கேட்டால் உச்சாகம் தொற்றிக்கொள்ளும்!
நீக்குஎனக்கு எந்தபாடலும் நினைவுக்கு வரவில்லை
பதிலளிநீக்குபரவாயில்லை ஜி எம் பி ஸார்... இந்தப் பாடல்கள் கேட்டீர்களா?
நீக்குதனது ப்ராபல்யத்தால், இழந்த சுதந்தரத்தால், வாடும் நடிகை சுமதி//
பதிலளிநீக்குஜெஜெ க்குப் பொருந்திப் போகிறதோ!
அவர் முதலில் அப்படி ஃபீல் செய்ததாக எங்கோ படித்த நினைவு.
பாடல் இப்படிக் குழுவாகப் பாட உற்சாகமாகப் பாட நல்ல பாடல்.
இந்தப் பாடல் இப்போதுதான் கேட்கிறேன்
கீதா
படத்தில் இந்தக் காட்சியில் நடிகையாக நடிப்பதே அவர்தானே கீதா...
நீக்குஅதைப் பார்த்துதான் சொல்கிறேன் ஸ்ரீராம்
நீக்குகீதா
அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவணக்கம் கோமதி அக்கா... வாங்க....
நீக்குமுதல் பாடல் அடிக்கடி கேட்ட பாடல்.
பதிலளிநீக்குமற்ற பாடல்கள் கேட்டு வெகு காலம் ஆகி விட்டது.
மூன்று பாடல்களையும் கேட்டேன்.
நன்றி கோமதி அக்கா. முதல் பாடல் நிறைய பேர்கள் கேட்டிருக்க மாட்டார்கள் என்று நினைத்தேன்.
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கங்கள்!
பதிலளிநீக்கு' ஊமை நெஞ்சின்' பாட்டு இனிமையாக இருக்கிறது! எப்போதோ கேட்டது! மறுபடியும் இப்போது தான் கேட்கிறேன். அடுத்த பாட்டு ' சுமார் ரகம்' தான்!
வாங்க மனோ சாமிநாதன் மேடம்... என்ன ஒரு உற்சாகப் பாடலை சுமார் என்று சொல்லி விட்டீர்கள்! ஹா.. ஹா.. ஹா...
நீக்குஅனைவருக்கும் அன்பின் வணக்கம்...
பதிலளிநீக்குவணக்கம் துரை செல்வராஜூ ஸார்... வாங்க... என்ன தாமதம்? விடுமுறை தின ஓய்வா?
நீக்குஓய்வெல்லாம் இல்லை...
நீக்குசில நாட்களாக மன உளைச்சல்... இரவில் சரியாகத் தூக்கம் இல்லை..
விடியற்காலையில் கண் விழிப்பதில் தாமதம் ஆகி விட்டது...
கிட்டத்தட்ட அதே நிலை இங்கும்...
நீக்குஅருமையானப் பாடல்கள்
பதிலளிநீக்குநன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.
நீக்குபாடல்களைக் கேட்டுள்ளேன். படம் பார்த்ததில்லை.
பதிலளிநீக்குவாங்க முனைவர் ஐயா... நன்றி.
நீக்குதிரு A.L.ராகவன் அவர்கள் பாடிய பாடல்களுள் தனிப் பாடல்களைத் தவிர்த்து
பதிலளிநீக்குஅன்று ஊமைப் பெண்ணல்லோ..
கல்லூரி ராணிகாள் (பாக்கிய லக்ஷ்மி)..
காதல் யாத்திரைக்கு...
- என்ற பாடல்களும் குறிப்பிடத்தக்கவை
இன்னும் கூட நல்ல பாடல்கள் உண்டு துரை செல்வராஜூ ஸார்.
நீக்கு'வேளை வந்ததடி.. நானும் எல்லைகளை மீறினேன்'---
பதிலளிநீக்குஎன்ற பாடல் வரியை பதிவுக்கு தலைப்பாக்கியி ருக்கலாம்.
வேலி தாண்டிய வெள்ளாடு கதை தான்...
நீக்குதிரைப்படம் அல்ல..
வேலி வெள்ளாட்டிற்கு பாதுகாப்பு.. அதைத் தாண்டி ஓடினால் ?...
வெள்ளிக்கிழமையும் அதுவுமாக என்னத்தைச் சொல்வது!..
ஆக்கி இருக்கலாம். அந்தந்த பாடல்களை நினைக்கும்போது சட்டென மனதில் தோன்றும் அந்தப் பாடலின் வரியைதான் எப்பவுமே தலைப்பாக்குவேன்.
நீக்குவாங்க ஜீவி ஸார்.
'லாம்' என்பது 30 நாட்களில் அதிகம் படித்தது பகுதிக்குப் போய்ருக்குமே என்பதற்காகத் தான். அதையும் மனசில் ஒரு மூலையில் போட்டு வைச்சிருக்கனும் இல்லையா?
நீக்குஹாஹாஹாஹா.
நெல்லை பாணி.. 😄
ஆம். அதுவும் சரிதான் ஜீவி ஸார்.
நீக்குஆனந்தக் கும்மி
பதிலளிநீக்குஅவலக் கும்மி ஆனதன் காரணம் என்னவோ?.
மகனின் காதலியை தகப்பனே மண முடித்த
வக்கிரம் தான் அல்லவோ!..
'எதிர்பாராதது' என்று ஒரு பழைய படம். வங்காளக் கதையின் தழுவல்.. இதே சப்ஜெக்ட்டை ஸ்ரீதர் பிரமாதமாக எடுத்திருப்பார். நாகையா தந்தை, சிவாஜி தனயன்.
நீக்கு'சிற்பி செதுக்காத பொற்சிலையே' பாடல் அந்தப் படத்தில் தான் அன்பு ஸ்ரீராம்! இந்தப் பாடல் என் நேயர் விருப்பம். முடிந்த பொழுது வீடியோ காட்சியோடு போடுங்கள். அந்நாளைய சிவாஜியை பார்க்க ஆவல்.
கதைகளைச் சொல்லும் விதத்தில் தான் எல்லாம் இருக்கிறது.
நீக்குதுரை செல்வராஜூ ஸார்... ஜீவி ஸார் சொல்வது போல எதுவும் சொல்லும் விதத்தில் இருக்கிறது. ப்ளஸ் நடிகர்களின் தேர்வு.
நீக்குஜீவி ஸார்... உங்கள் நேயர் விருப்பத்தை வரிசையில் சேர்த்து விடுகிறேன்.
ஸ்ரீதரின் கல்யாண பரிசு, மீண்ட சொர்க்கம், நெஞ்சில் ஒரு ஆலயம் எல்லாமே ஒரே தோசையை திருப்பித் திருப்பி போட்ட கதை தான். ஸ்ரீதர் என்ன நினைக்கிறாரோ அதை கண்ணதாசன் பாடல் வரிகளாக்குவார். வின்சன்டோ காமரா காட்சிகளாக்குவார். அந்நாட்களில் ஸ்ரீதர் என்றாலே எங்களுக்கு ஒரே கிரேஸ்! ஒரு படம் விட்டதில்லை...
நீக்குகாதல் அதன் வெற்றியில் இல்லை: தோல்வியில் தான் இருக்கிறது -- என்பது காதலித்தவர்களைப் பார்த்த என் அசைக்க முடியாத நம்பிக்கை..
நீக்குகாதல் வெற்றியிலும் இல்லை, தோல்வியிலும் இல்லை. அது இளமையில் இருக்கிறது. ஹார்மோனில் இருக்கிறது. மனதில் இருக்கிறது!
நீக்குஆனந்தக் கும்மி கும்மியது மாதிரி இன்னொரு கும்மியும் இருக்கிறதே சி(த)கரத்தின் கைவண்ணத்தில்!..
பதிலளிநீக்கு!?...
மூன்று முடிச்சு படத்தைச் சொல்கிறீர்களா... கமலின் காதலி ஸ்ரீதேவியை ரஜினியும் காதலிக்க, அதனால் நீரில் விழுந்த பிரசன்னாவை - கமலை - காப்பாற்றாமல் இருக்க, ரஜினியின் அப்பா ஸ்ரீதேவியை மணம் செய்திருப்பார்.
நீக்குமுதல் பாடலில் சில வரிகள் 'cut' செய்து வைத்துள்ளேன் - குறளுக்காக...!
பதிலளிநீக்குஆனந்தக்கும்மி கல்லூரியில் படிக்கும்போது பார்த்த படம்... பாடல்கள் இனியவை...!
வாங்க DD...
நீக்கு//பாடல்கள் இனியவை...!//
ஆம். பாடல்கள் மட்டும்!
ஊமை நெஞ்சின் ஓசைகள் பாடலும் கேட்டதும்தான் நினைவு வந்தது பல முறை கேட்ட பாடல்.
பதிலளிநீக்குசெம பாட்டு இது. இப்பவும் ரசித்தேன் இரு பாடல்களையும். எஸ்பிபி என்ன சொல்ல!! அசத்தியிருக்கிறார். மீண்டும் ரசித்தேன். நல்ல ராகத்தில் அமைந்த பாடல்.
ஒரு கிளி உருகுது அதுவும் இந்தப் படம் தானா! அப்பாடலும் அதிகம் கேட்டிருக்கிறேன். அப்போது இவை எல்லாம் எல்லா இடங்களிலும் ஒலிக்கும் இலங்கை வானொலி மூலம்.
கீதா
ஆனால் ஸ்ரீராம் காட்சியோடு பாடலைக் கேட்பதை விட பாடல் மட்டும் தனியாகக் கேட்டால்தான் நல்லது!!!
பதிலளிநீக்குகாட்சியில் எஸ்பிபி வாய்ஸ் மேச்சாகிப் போகலை. கதாநாயகிக்காவது ஓகே...
கீதா
கிளி உருகுதா? அப்படினா என்ன?
பதிலளிநீக்குவெண்ணையைத்தான் உருகுதும்பாங்க..
பதிலளிநீக்குஅதுவே ஓரு பெண்ணுக்கானால்?.
ஆனந்தக்கும்மி படம் பார்த்திருக்கிறேன். இதில் பாடல்கள் அருமையாக இருக்கும் இங்கு நீங்கள் பகிர்ந்திருக்கும் பாடல்கள் உட்பட. இனிமையான பாடல்கள். ரசித்தேன் ஸ்ரீராம்ஜி
பதிலளிநீக்குமுதல் பாடல் கேட்டதில்லை. இப்போதுதான் கேட்கிறேன்.
துளசிதரன்
இப்போத்தான் எஸ்பிபி கொரோனாவினால் மிகவும் மோசமான உடல்நிலையில் உயிருக்குப் போராடுவதாகச் செய்தி படித்தேன். உடனே ஸ்ரீராம் தான் நினைவில் வந்தார். எஸ்பிபியை ஆராதிக்கும் அவருக்கு இத்தகைய செய்தியைக் கேட்டு மனம் தாளாது. அனைவரின் சார்பாகவும் எஸ்பிபி உடல் நலம் பெறப் பிரார்த்திக்கிறேன். மிகவும் மோசமான வருஷமாக ஆகிவிட்டது 2020/ :(
பதிலளிநீக்குஇன்றைய பாடல்களைப்பற்றி கருத்துச் சொல்ல இப்போதுதான் வருகை தருகிறேன். உங்கள் கருத்தைப் படித்ததும் மிகவும் கலங்கி விட்டேன். உடனே வீட்டில் சொல்லி வருத்தப் பட்டவுடன், எஸ். பி. பியே கடந்த புதனன்று தான் நல்ம் பெற்று வருவதாக சொன்ன ஒரு செய்தியை என் மகன் போட்டு காண்பித்தார். மனதுக்கு நிறைவாக இருந்தது. அவர் பூரண நலம் பெற்று பழையபடி நல்ல பாடல்கள் பாடி நம்மை மகிழ்ச்சிப் பெற செய்ய இறைவனை மனமாற நானும் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நீக்குஎஸ் பி பி குணமடையட்டும்.
நீக்குநல்ல செய்தியே வரட்டும்.
மனம் மிகவும் சஞ்சலப்பட்டிருக்கிறது. விரைவில் அவர் குணமடைய வேண்டும். செய்திகளை பார்க்கும் துணிவு இல்லை.
நீக்குஇனிய பாடல்கள்.
பதிலளிநீக்குநன்றி மாதேவி.
நீக்குஎஸ் பி பி நலமடைய பிரார்த்திக்கிறேன்.
பதிலளிநீக்குபிரார்த்திப்போம் அனைவரும்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய பாடல்கள் மூன்றுமே அருமையாக உள்ளது. முதல் நேயர் விருப்பமாக வந்த பாடல் அடிக்கடி கேட்டுள்ளேன். ஆனந்த கும்மி படத்தில் முதல் பாடல் கேட்டதாக நினைவில் இல்லை. இரண்டாவது கேட்ட மாதிரி உள்ளது. இப்போது அனைத்தையுமே கேட்டு ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா.
நீக்குஆண்டவன் அருளால் எஸ்பிபி, பிரணாப் முகர்ஜி ஆகியோர் குணமடைந்து சீக்கிரம் வீடு திரும்பட்டும்.
பதிலளிநீக்குபிரார்த்திப்போம்.
நீக்குகாலையில் இருந்து மனம் சரியில்லை..
பதிலளிநீக்குதிரு.SPB அவர்கள் நலமுடன் மீண்டு வருவதற்கு வேண்டிக் கொள்வோம்...
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குமூன்று பாடல்களும் கேட்க நன்றாக இருந்தன . இரண்டாவதும் மூன்றாவதும் இப்போதுதான் கேட்கிறேன். முதல் பாடல் கேட்டிருக்கின்றேன். பகிர்வுக்கு நன்றிகள் திரு.ஸ்ரீராம். திரு எஸ் பி பி அவர்கள் உடல் நலம் பெற வேண்டுகிறேன்.
பதிலளிநீக்கு