Spirit World லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Spirit World லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

19.10.11

எட்டெட்டு ப 3 :: மாயாவின் கதை

கே வி தொடர்கிறார்: 

பாட்டுச் சத்தம் சட்டென்று நின்றவுடன், நான் முழுவதுமாக விழித்துக் கொண்டேன். அந்தப் பழைய மர மேசை மீது ஓர் உருவம் - அதுவும் பெண்ணுருவம் - ஒரு கண்ணாடி டம்ளரில் நீல நிற திரவம் ஊற்றப்படும் பொழுது எப்படி மெது மெதுவே அது டம்ளரின் வடிவத்தைப் பெறுமோ அதே வகையில் யாரோ நீர் வார்ப்பது போல - உருப் பெற்றது. என் கை டார்ச் விளக்கை எடுக்க விரைந்த போது, அந்த உருவம், "வேண்டாம் கே வி. விளக்கு - வெளிச்சம் எல்லாம் என்னைக் காணாமல் செய்துவிடும்." என்றது. 
  
எனக்கு ஆச்சரியமாக இருந்தது. 'என்னுடைய பெயர், இந்த ஆவி உருவில் இருக்கும் பெண்ணுக்கு எப்படித் தெரியும்?' என்று நினைத்துக் கொண்டேன்.  

"தெரியும். ஆவியுலகில் இந்த உலகில் உள்ள எல்லா பாசிடிவும் நெகடிவ்; இங்கு உள்ள எல்லா நெகடிவ்களும் ஆவியுலகில் பாசிடிவ்."
    
'அப்படி என்றால்?' என்று நினைத்துக் கொண்டேன். 
  
"அப்படி என்றால், இங்கே பகல் - அங்கே இரவு. இங்கே ஸ்தூல சரீரம்; அங்கே சூக்ஷ்ம சரீரம். இங்கே ஒலி; அங்கே எண்ண அலைகள். இங்கே மொழி - அங்கே மௌனம் - இப்படி எல்லாவற்றுக்குமே எதிர் மறை விஷயங்கள்."  

"அப்படியானால் ...." என்று பேச ஆரம்பித்த என்னைப் பார்த்துக் காதுகளைப் பொத்திக் கொண்டது அந்த உருவம். 
  
"தயவு செய்து எதுவும் பேச வேண்டாம். சிறிய ஒலி கூட எனக்கு பெரும் சத்தமாகக் கேட்கும். எனன கேட்க வேண்டும் என்றாலும், மனதினுள் நினைத்தால் போதும்; நான் பதில் சொல்வேன். நீங்க படுத்திருப்பது இரும்புக் கட்டில். அதனுடைய இயற்கையான அதிர்வு அலைகள், உங்கள் எண்ண அலைகளை எனக்குத் துல்லியமாக அறிவிக்கக் கூடியது. இவ்வளவு ஏன்? என் உருவத்தைப் பார்த்தவுடன் நீங்க மனதினுள் நினைத்தது 'இந்தப் பெண் பார்ப்பதற்கு, நான் ப்ளேனில் பயணம் செய்யும்பொழுது பார்த்த விக்ரமாற்குடு தெலுங்குப் படத்தின் கதாநாயகி போல இருக்கின்றாளே!' என்றுதானே?' 

'ஆமாம்' என்று நினைத்துக் கொண்டேன்.

"சரி. இனிமேல் நான் மட்டும்தான் பேசுவேன். நான் இன்னும் ஐம்பத்து மூன்று நிமிடங்கள்தான் இங்கு இருக்க அனுமதி இருக்கின்றது. சுப்ரீம் ஆவியிடம் அனுமதி பெற்று வந்துள்ளேன். சரியாக ஒரு மணி ஏழு நிமிடம் ஆகும் பொழுது மறைந்து போய்விடுவேன். எனக்கு ஓர் உதவி நீங்க செய்தே ஆகவேண்டும். அது எனன, ஏன் என்று சொல்லப் போகின்றேன். நான் பேசுவதைக் கேட்டால் போதும். நான் பேசிக் கொண்டிருக்கும் பொழுது - குறுக்கே எந்த எண்ணமும் வேண்டாம். ஏதேனும் சந்தேகம் வரும்பொழுது, வலது கால் விரல்களை அல்லது கைக் கட்டை விரலை அசைத்தால் போதும். புரிகிறதா?"
  
'புரிகிறது. ஆனால் நான் இங்கே வந்திருப்பது என் ஆபீஸ் பிரச்னையைத் தீர்க்க - அதை விட்டு, கண்ட கண்ட ஆவிகளிடம் கதை கேட்டுக் கொண்டிருந்தால் என் கதி என்னாவது?' என்று நினைத்துக் கொண்டேன். 

"உங்கள் பிரச்னையைத் தீர்க்க எனக்கு வழி தெரியும். கவலை வேண்டாம். உங்கள் பிரச்னையைத் தீர்க்க 'ராமாமிர்தம்' உங்களுக்கு உதவுவார். ராமாமிர்தம் என்ற பெயரை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அது போதும். நாளை உங்கள் அலுவலகத்தில் இந்தப் பெயர் உடைய நபர் பற்றி விசாரியுங்கள். மேற்கொண்டு இதில் எந்தத் தகவலும் கொடுக்க சுப்ரீம் ஆவி இப்பொழுது மானசீகமாகத் தொடர்பு கொண்டபோது, மறுத்துவிட்டது." 

'சரி' என்று நினைத்துக் கொண்டேன். 

ஆவி சொன்ன கதை: 

என் பெயர் மாயா. தந்தை பெயர் கோவிந்தராஜன். தாயார் நான் பிறந்தவுடனேயே புண்ணியலோகம் நோக்கிப் பயணம் செய்துவிட்டார்கள். ஊர் தஞ்சைக்கு அருகே வல்லம். பிறந்த தேதி 8 - 8- 1970 (சனிக்கிழமை) இரவு 8 மணிக்கு. இறந்தது 8 - 8 - 2006. காலை 8 மணி, எட்டு நிமிடம் ஆகும் பொழுது . .....

(தொடரும்)