நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
12.4.15
11.4.15
பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.
4) நீதிபதியின் மனிதாபிமானம்.
5) ஒரு பள்ளியின் கதை.
6) கடனுக்குச் செய்யாமல் பணியில் செம்மை. தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம்.
7) "எல்லாம் சரி இருபது ரூபாய்க்கு எப்படி கட்டுப்படியாகிறது என்றால் கடை வாடகை
இல்லை சம்பள ஆள் இல்லை சமையல் கூலி இல்லை எல்லாம் நானும் என்
வீட்டாம்மாளும்தான் அதனால கட்டுப்படியாகிறது விற்றது தானம் செய்தது எல்லாம்
போக ஒரு நாளைக்கு ஐநுாறு ரூபாய் மிஞ்சும் இதுக்கு மேலே வயதான எனக்கும்,
என் சம்சாரத்திற்கும் என்ன வேணும்?" தஞ்சாவூர் கணேசன்.
8) திருமணம் எனது சேவைக்குத் தடையானால் திருமணமே வேண்டாம். பாராட்டப்பட வேண்டிய பெண்மணி.
9) 1மணிநேரத்தில் மின்சாரத்திலோ, சூரிய ஒளியிலோ சார்ஜ் செய்து கொண்டால் 400 கிலோமீட்டர் ஓட்டலாமாம். சபாஷ் மணிகண்டன்.
10.4.15
8.4.15
நாய்களின் துக்கம், மிரண்ட குழந்தை, டிமென்ஷியா - டிட் பிட்ஸ்.
1) மெக்ஸிகோவில் வசித்த மார்கரிடா சுவாரெஸ் நாய்கள், பூனைகள் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார். தினமும் அவரது வீட்டு வாசலில் தெரு நாய்களும் பூனைகளும் உணவுக்காகக் காத்துக்கொண்டிருந்தன. சமீப காலமாக உடல்நலமின்றி இருந்த மார்கரிடா இறந்து போனார். அவரது இறுதிச் சடங்கு வீட்டில் நடைபெற்றது. திடீரென்று மார்கரிடா உணவளித்த நாய்கள் எல்லாம் வரிசையாக வீட்டுக்குள் நுழைந்தன.
தெரு நாய்கள் உள்ளே நுழைவதை அதிர்ச்சியோடு அனைவரும் பார்த்துக்கொண்டிருந்தனர். மார்கரிடா வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டிக்கு அருகில் சில நிமிடங்கள் அமைதியாக நின்றன. பிறகு சோகமாகப் படுத்துவிட்டன. உடலை எடுத்துச் சென்றபோது, நாய்கள் குதித்து எட்டிப் பார்த்துவிட்டு, அங்கிருந்து அமைதியாகக் கிளம்பின. “நாய்கள் அஞ்சலி செலுத்துவதை இதுவரை பார்த்ததில்லை. மிகவும் அதிசயமான நிகழ்வாக இருக்கிறது’’ என்கிறார்கள் இறுதிச் சடங்கு நடத்தியவர்கள்.
நாய்களுக்கு நுண்ணறிவு உண்டுதான்… ஆனால் இதெல்லாம் அதிசயமாதான் இருக்கு!
யானைகள் செலுத்திய மரியாதை நினைவுக்கு வருகிறதா?
2) பிஞ்சு முகத்தில் பயம். அழுகை வெடிக்கும் நிலை. கைகளைத் தூக்கி என்னை ஒன்றும் செய்யாதே என்று கெஞ்சும் முகபாவனை.
இந்தக் காட்சியைப் படம் பிடித்த புகைப்படக் கலைஞர் நாடியா அபு ஷபான்.
சிரியாவில் எப்போதும் குண்டு சத்தத்தையே கேட்டு பழகிய இக்குழந்தை, படம் பிடிக்க கேமராவை சரி செய்தபோது, துப்பாக்கியால் சுடப் போகிறார் என்று மிரண்டு கைகளை உயர்த்தி நின்ற காட்சியை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இது இணையதளத்தில் பலரையும் பரிதாபப்பட வைத்துள்ளது.
3) டெமென்ஷியா
மனச்சிதைவு நோய் ஆராய்ச்சி மற்றும் மருத்துவத்தில் முத்திரை பதித்து வரும் ஸ்கார்ஃப் (scarf), முதியவர்களுக்கு ஏற்படும் டெமென்ஷியாவை (ஞாபக மறதி நோய்) கையாள, இன்ஃபோசிஸ் பவுண்டேஷன் நிதியுதவியுடன் புதிய மையத்தைச் சென்னையில் தொடங்கி இருக்கிறது. மனநல மருத்துவர் ஸ்ரீதர் வைத்தீஸ்வரன் இது தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ளார். அவரைச் சந்தித்தபோது...
அது என்ன டெமென்ஷியா?
எல்லோருக்கும் ஞாபக மறதி ஏற்படும். அது டெமென்ஷியா கிடையாது. ஆனால் வார்த்தைகளை மறந்து விடுவதும், பேச்சு சரியாக வராததும், மற்றவர்கள் பேசும்போது புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறுவதும், உறவினர்களை அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் போவதும், சமையலறைக்குள் நுழைவதாக நினைத்துக் கொண்டு பாத்ரூமுக்குள் நுழைவதும், பல வருடங்களாக ஒரே இடத்தில் வசித்தும் கூட வெளியில் சென்று வீடு திரும்பும்போது வழி தெரியாமல் தவிப்பதும், வயதானவர்களுக்கு ஏற்பட்டால் அது கவனிக்க வேண்டிய நிலையாகும். இது டெமென்ஷியவின் ஆரம்ப அறிகுறிகளாகக் கூட இருக்கலாம்.
டெமென்ஷியாவுக்கு முதுமைதான் காரணம். மறதிநோய் தொடர்பான ஒரு கணக்கெடுப்பின்படி 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 5 சதவிகித ரிஸ்க், 75 க்கு மேல் 10 சதவிகித ரிஸ்க், 85 வயதுக்கு மேல் 20% ரிஸ்க், 95 வயதுக்கு மேல் 40% ரிஸ்க் இருப்பதாகத் தெரிகிறது.
படங்கள் : இணையம்
7.4.15
போராட்டங்கள்
யவனராணியும்,
கடல்புறாவையும் எழுதிய சாண்டில்யனின் பன்முகத் திறமையைச் சொல்லும் நூல்.
அவரது போராட்டங்களை அவரே சொல்லியிருக்கிறார் - நகைச்சுவை மிளிர.
76
இல் குமுதத்தில் வந்த தொடர். அவ்வப்போது நிறைய எதிர்ப்புக் கடிதங்களும்
வந்திருக்கின்றன என்று தெரிகிறது. என் வீட்டில் பைண்டிங் கலெக்ஷனில்
முன்பே பார்த்த நினைவு. ஆயினும் இந்தப் பு.க.காயில் வாங்கி விட்டேன்!
1935 களில் ஆங்கிலப் பத்திரிக்கை நிருபர்களின் ஆரம்பச் சம்பளம் 250 ரூபாயாம். தமிழ்ப் பத்திரிக்கை என்றால் தினமணியில் 60 ரூபாயாம்.
மகாத்மா காந்தியுடன் ஒரு பத்திரிகையாளராக ஒரு வாரம் தங்கியிருந்திருக்கிறார்.
தீரர் சத்தியமூர்த்தி - ராஜாஜி பனிப்போர் பற்றி லேசாக சொல்லி இருக்கிறார். இதற்கும் மறுப்பு வந்து பதில் அளிப்பதில் சில பாராக்கள்! சத்தியமூர்த்தி இவர் எழுதிய முதல் அரசியல் நாவல் 'பலாத்காரம்' என்கிற புத்தகத்துக்கு முன்னுரை எழுதி இருக்கிறாராம். விற்பனை வரியை தமிழகத்தில், ஏன் இந்தியாவிலேயே முதன் முதலில் அறிமுகப்படுத்திய பெருமை ராஜாஜிக்குத்தானாம்!
'உதயபானு'வும்,
'இளையராணி'யும் அவர் எழுதிய முதல் சரித்திரக் கதைகள் என்று தெரிகிறது.
அவை சுதேசமித்திரன் ஞாயிறுமலரில் வெளியிட்டிருந்திருக்கிறார்! (அவர்தான்
அந்த இதழுக்குப் பொறுப்பு. வார அனுபந்தம் என்று இருந்த பெயரை ஞாயிறு மலர்
என்று மாற்றியதும் இவர்தானாம்)
இப்படிச்
சுவாரஸ்யங்கள் இருந்தாலும், அவர் எழுதிய புகழ் பெற்ற சரித்திர நாவல்களான
யவனராணி, கடல்புறா, ஜலதீபம் காலத்துக்கு எல்லாம் அவர் வருமுன்னரே
போராட்டங்களை முடித்து விடுகிறார்.
போராட்டங்கள்
வானதி பதிப்பகம்,6.4.15
'திங்க'க்கிழமை : எண்ணெய்ப் பழையது.
வெய்யில் காலம் வருகிறது. வருகிறது என்ன, வந்து விட்டது. வெய்யில் கொளுத்துகிறது, அனல் அடிக்கிறது. வேலூர், திருச்சி மாவட்டங்களில் அதற்குள் 107 டிகிரி பதிவாகத் தொடங்கி விட்டது. அக்னி நட்சத்திரம் எப்படி இருக்குமோ! தேவை ஒரு (கோடை) மழை!
இப்போது பதிவு வெய்யில் பற்றியல்ல என்பதால் விஷயத்துக்கு வருகிறேன். 'திங்கற' பதிவு ஆச்சே...
இது
நிறைய பேர் வீட்டில் செய்வதுதான். மறந்திருக்கலாம். நினைவு படுத்தலாம்
என்று இதைப் பதிவிடுகிறேன்! இந்தக் காலத்தில் யார் இதை எல்லாம்
செய்கிறார்கள்?! யாராவது ஒரு வாசகராவது இந்த எண்ணெய்ப் பழையது அல்லது ஓமப்
பழையது பற்றிக் கேள்விப் பட்டதில்லை என்று சொன்னால் அது இந்தப் பதிவின்
வெற்றி. (ஆமாம், பெரிய சமூகச் சீர்திருத்தப் பதிவு!!)
மறுபடியும் வெட்டிக் கதை நீளுகிறது. விஷயத்துக்கு வருகிறேன்.
சில சமயம் இதில் தயிரோ, மோரோ கூடச் சேர்த்துப் பிசையலாம்.
படங்கள் : இணையம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)













