4.11.09

சென்ற நூற்றாண்டின் இசை மேதைகள் 01 GNB

*Gudalur  Narayanasamy Balasubramaniam (G N B)
தோற்றம் 6-1-1910   மறைவு 1-5-1965







GNB அவர்களுக்கு centenary வந்து விட்டது.





கிருஷ்ண கான சபையில் அவர் குறித்து கேள்விப்பட்ட சில சுவாரஸ்யமான தகவல்கள்:

1  அவர் தந்தை நாராயணசாமி ஐயர்   திருவல்லிக்கேணியில் ஆசிரியராகவும் புகழ் பெற்ற பார்த்தசாரதி சபை செகரெட்டரி ஆகவும் மியூசிக் அகடமியில் expert committee மெம்பராகவும் இருந்தவர்.

2   GNB அந்தகால B A (Hons) Eng  Lit . படித்தவர் அவர் காலத்தில் அவர் அளவு படித்த Musician யாரும் இல்லை.


GNB  கேள்வி ஞானத்தில் தான் முக்கால் வாசி தன இசைத்  திறமையை வளர்த்துக்கொண்டார். அவருக்கு மானஸிக குரு அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் GNB இன தந்தைக்கு அவர் பாடகராக வருவது பிடிக்கவில்லை.

4 GNB அவர்களின் முதல் கச்சேரி பதினெட்டாவது வயதில் எதிர்பாராத விதமாக நடந்தது. மயிலை கபாலி கோவிலுக்கு முசிறி சுப்ரமணிய அய்யர் கச்சேரி கேட்கச் சென்றபொழுது முசிறி அவர்கள் உடல் நிலை சரியில்லாததால் வரவில்லை கோவில் committee members மிகவும் வற்புறுத்தி GNB அவர்களை மேடை ஏற்றினார்கள். கச்சேரி மிகவும் பிரமாதமாக அமைந்தது. அதன் பிறகு "no  looking back ". 1935 -to  1965 நிஜமாகவே கொடிகட்டிப் பறந்தார்.  அவர் காலத்திய செம்மங்குடி. அரியக்குடி. மகாராஜபுரம் எல்லோரையும் ஓரம் கட்டினார் என்றே சொல்லலாம்.

5 கர்நாடக சங்கீத கச்சேரிக்கு' Four  figure salary " வாங்கிய முதல் வித்வான் GNB. அவர் 1000  ருபாய் வாங்கும் போது அரியக்குடி 200  ரூ செம்மங்குடி 150 ரூ வாங்கினார்கள்.

6  அவருக்கு அதிகபட்சமாக பக்க வாத்தியம் வாசித்தவர்கள் பாலக்காடு மணி அய்யரும், லால்குடி ஜெயராமனும்தான். மிருதங்கம் மணி அய்யருக்கு தனக்கு சமமாக GNB கொடுத்த salary  ஐ அவர் வாங்க மறுத்து 100 ரூ குறைவாக பெற்றுக்கொண்டாராம்.

7  தஞ்சை ஜில்லா வாத்திமார்களுக்கு GNB என்றால் craze .அவர்கள் வீட்டுக் கல்யாணங்களுக்கு GNB இன் date கிடைத்தவுடன் தான் தேதி நிச்சயம் செய்வார்களாம்.

8   ஒரு தடவை தஞ்சாவூரில் GNB கச்சேரி முடிய நேரமானதால், அவருக்காக சங்கீதப்  பிரியரான ரயில்வே Guard  15 நிமிடங்கள் Boat  MAIL ஐ நிறுத்தினாராம்.


9 ஒருசமயம் கச்சேரி செய்ய,  கோவையிலிருந்து சேலம் செல்லும் வழியில் வாடகை taxi அத்வானத்தில் பஞ்சராகி நின்று விட்டது. டிரைவரிடம் jack இல்லை GNB யும் நண்பர்களும் வண்டியிலிருந்து இறங்கி மர நிழலில் நின்று கொண்டிருந்தார்கள் தூரத்தில் ஆஜானுபாகுவான நான்குபேர் கையில் நீண்ட கழிகளுடன் வருவதை பார்த்த GNB வழிப்பறிக் கொள்ளையர்கள் என நினைத்து, தான் போட்டிருந்த வைரக் கடுக்கனை கழற்றி பத்திரப்படுத்தினார். பக்கத்தில் வந்த அந்த நால்வரில் ஒருவன் 'என்ன பஜனை கோஷ்டியா'என்று விசாரித்துவிட்டு நடந்ததை கேட்டான். ' பூ இவ்வளவு தானா 'என்று கூறிக்கொண்டே நால்வரும் வண்டியை தூக்கிப்பிடிக்க, டிரைவர் ஸ்டெப்னியை மாட்டினார். பணம் வாங்க மறுத்த  அந்த நால்வருக்கும் நன்றி கூறி விட்டு GNB பயணத்தைத் தொடர்ந்தார்.

10 ஒரு சமயம் மைலாப்பூர் நடுத்தெருவில் ( Middle st ) ஜாகை இட்டிருந்த காஞ்சி மகாப்பெரியவாள் நான்கு வீடு தள்ளி இருந்த GNB வீட்டிற்கு, தானே 'மணி மணி' என்று அழைத்துக்கொண்டே சென்று ஆசி வழங்கினாராம்.

11 GNB சினிமாவிலும் கொடிகட்டிப் பறந்தார்  M S  சுப்பலக்ஷ்மியுடன் அவர் நடித்த 'சகுந்தலை' அந்த காலத்தில் 'சூப்பர் ஹிட்' படம் . நாதஸ்வர மேதை ராஜரத்தினம் பிள்ளை மற்றும் வடஇந்திய இசை மேதை படேகுலாம் அலிகான் இருவரும் GNB இன் ஆத்ம நண்பர்கள்.

12  GNB  President சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணனிடம் award வாங்கியவர் . 1963 இல் மியூசிக் அகாடமி GNB க்கு 'சங்கீத கலாநிதி வழங்கி கௌரவித்தது. GNB இன் பிரதான சிஷ்யர்கள் பத்ம பூஷன் டாக்டர் ML வசந்தகுமாரி, ராதா ஜெயலக்ஷ்மி, கல்யாணராமன், தற்பொழுது பாடி வரும் Trichur ராமசந்திரன்.

13 GNB யின் சில முத்தான பாடல்கள்.
# ஹிமகிரி தனையே
# களள நேர்தினா
# கண்ணனை காண்பதெப்போ
# சொன்னதைசெய்திட சாகசமா
# திக்கு தெரியாத காட்டில்
# எல்லாவற்றையும் விட நான் மெய் மறந்த பாடல் ' யமுனா கல்யாணி' ராகத்தில் அமைந்த " ராதா சமேதா கிருஷ்ணா"  அந்த பாடலில் வரும் வரிகள் போலவே, 'GNB ' கலைத்துறையில் 'சுந்தர மன்மத கோடிப்ரகாசர்'  pakka gentleman என்று இன்று வரை கூறப்படுகிறார்.
BIRTH  Centenary கொண்டாடப்படும் GNB கர்நாடக இசையில், தனக்கு என ஒரு பாணி அமைத்து வாழ்ந்த இசை மேதை. அவர் இசையில் மயங்காதவர் இல்லை. GNB இசைத துறையில் ஒரு சகாப்தம் என்றால் மிகையாகாது.
  ::  MALI                          

 *Gudalore - near Aduthurai, Mayiladuthurai.

3.11.09

வாழ்க்கையில் முன்னேற ...015

பாடம் பதினைந்து.
உங்க கை கடிகாரம் - டே அண்ட் டேட் (கிழமை, தேதி) இருக்கின்ற கடிகாரமா?
டே சரியாக இருக்கும் - (என்று நினைக்கிறேன்) --
ஆனால் - இன்றைய தேதியை அது சரியாகக் காட்டுகிறதா?
ஆமாம் என்றால் - வெரி குட்.
இல்லை என்றால் - நீங்க இன்னும் கொஞ்சம் அலர்ட் ஆக இருக்க உறுதி பூணுங்கள்.
உங்க கடிகாரம் - சரியான தேதியை ஏன் காட்டவில்லை / என்ன தேதி காட்டுகிறது  - என்று இதற்கு பின்னூட்டம் போடுங்கள்.


# இப்போ ஒரு கடிகாரப் புதிர்.
என் நண்பன், கடிகார விஷயத்தில் எப்பவுமே - கன கச்சிதமாக தன கடிகாரத்தில், தேதியை மெயின்டெயின் செய்பவன். 
இந்த இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டில் - ஒரு நாள் - தன கடிகாரத்தில் தேதியை சரி செய்துகொண்டே - சொன்னான், 
"அப்பாடி - எவ்வளவு நாள் ஆச்சு - இந்த கடிகாரத்துல தேதியை சரி செய்து? போன வருஷம் பண்ணினது - இப்போதான் சரி செய்யறேன்" என்றான்.
அன்றைக்கு என்ன தேதி?
அதற்கு அப்புறம் ஒரு நாள் கடிகாரத்தை சரி செய்துகொண்டே சொன்னான் " ச்சே என்னடா இது! இப்பத்தான் சரி செஞ்ச மாதிரி இருக்குது - அதுக்குள்ள திரும்பவும் தேதி சரி செய்யவேண்டி இருக்கிறதே?"
அன்றைக்கு என்ன தேதி?

முக(மில்லா) வரிகள்!

அது ஆண்டு 1975. டிசம்பர் மாதம்.
சென்னையில், பிரிட்டிஷ் கவுன்சிலில் - நான் ஒரு பகுதி உறுப்பினன். பகுதி உறுப்பினன் என்றால் என்ன? சந்தா தொகை அந்தக் காலத்தில் என் பைக்கு அடங்காதது என்பதால் - நண்பர் பெரம்பூர் கிருஷ்ணமூர்த்தியுடன் கூட்டு சேர்ந்து - சந்தாவைப்  பிரித்து, புத்தகங்களையும் பிரித்து எடுத்துப் படித்துவந்தோம். 
அந்த நாட்களில், எனக்கு பி ஜி வோட்ஹவுசை ( P G Wodehouse) புத்தகங்களில் அறிமுகம் செய்து வைத்தவர் - என் தம்பி தியாகுவின் தோழர் - வழக்கம் போல் பெயர் மறந்துவிட்டது - முகம் ஞாபகம் உள்ளது - ஒருவர்.
அப்போ நான் பிரிட்டிஷ் கவுன்சிலில் நிறைய விரும்பி எடுத்துப் படித்த புத்தகங்களில் - பி ஜி வோட்ஹவுஸ் புத்தகங்கள் நிறைய உண்டு. ஒரு புத்தகத்தில் (பி ஜி வோ - புத்தகம்தான்).
கடைசி பக்கத்தில் யாரோ ஒருவர் அழகான கையெழுத்தில் எழுதியிருந்தார்:
16.2.1975
"What a sad day for us, the Wodehousian lovers - even Pelham had to hand-in his dinner pail "
இந்த வரிகளுக்கு முகம் இல்லை - அதாவது யார் எழுதினார்கள் என்று தெரியாது. ஆனாலும், இதை என்னால் மறக்க முடியவில்லை. 

இலக்கிய ரசனை. 4

இரண்டு பாடல்களாக ரசிக்க வேண்டிய நேரத்தில் ஒரு பாடல் மறந்த நிலையில் இதை எழுதுகிறேன்.  ஆனால் சாராம்சம் நினைவில் இருக்கிறது.  கம்ப ராமாயணத்திலே இராமன் பட்டாபிஷேகம் என்று அறிவித்த நாளில் சூரியன் அஸ்தமனம் ஆவதை வருணிக்கும் கவி, சக்ரவர்த்தி தசரதன் இருக்க இவ்வுலகுக்கு அபாயம் ஏதும் இல்லை என்று நிம்மதியாக மறைந்தான் என்று குறிப்பிட்ட பின்  பலப்பல பாடல்களுக்குப் பிறகு தசரதன் இறந்த பின் அடுத்த நாள் உதயமாவதை வருணிக்கிறார்.

மீநீர் வேலை முரசியம்ப விண்ணோர் ஏத்த மண் இறைஞ்ச 
தூநீர் ஒளிவாள் புடை இலங்க சுடர்த்தேர் ஏறித் தோன்றினான்  
வானே புக்கான் அரும்புதல்வன் மக்கள் அகன்றார் வருமளவும்
நானே காப்பன் இவ்வுலகை என்பான் போல எரிகதிரோன்.

சூரியகுல அரசன் என்பதால் தசரதன் அரும்புதல்வன் என்று சொல்லப் படுவதும் இவ்வுலகுக்கு காப்பாக இருந்த தசரதன் இல்லை, அவன் மக்களும் கானகம் சென்றனர் என்பதால் நான்தான் காக்க வேண்டும் இவ்வுலகை என்று சூரியன் தோன்றினான் என்று குறிப்பதும் ரசிக்கத் தக்கது.  பல பாக்களுக்குப் பின் கனெக்ட் செய்யும் அழகு வியக்கத் தக்கது.

****
மீண்டும் ஒரு முறை பிறந்த நாள் வாழ்த்து அனுப்பத் தவறிவிட்டேன். இம்மாதிரி மோசமான மறதி அடிக்கடி வருகிறது. எந்த நாளை நம் வாழ்வின் மிகச் சிறந்த நாள் என்று சொல்லலாம்?  நாம் ஒவ்வொருவரும் எதைக் குறிப்பிடுவோம்?  சுவையான ஆராய்ச்சி.


பிறந்த நாள் உண்டு பின்னும் வாழ்த்து அனுப்ப
மறந்த நாள் உண்டு மேலும் சொன்னால் பாசத்தைக் 
கறந்த நாட்கள் பலப்பல காலத்தே காணப்படும் 
சிறந்த நாள் எதுவோ சற்றும் அறிகிலேனே.

****

2.11.09

டும் டாம் - வாக்கெடுப்பு!

ரசிகர் பெருமக்களே!
உங்க நீடித்த ஆதரவுக்கு நன்றி.
இதை 'எங்கள்' ப்ளாக் என்று நாங்க சொல்லிகிட்டாலும், நீங்களும் அதையே சொல்லுவதால் - இது நம்ம ப்ளாக்.
முன்பு நான் வேலை பார்த்த தொழிற்சாலையில் - அடிக்கடி - சில பிரச்னைகளுக்கு - வேண்டும் / வேண்டாம் - வாக்கெடுப்பு நடைபெறும். அது, தொழிற்சங்கம் தொடர்ந்து எந்த திசையில் செல்வது என்ற முடிவிற்கு பேருதவியாக இருக்கும்.
அந்த வகையில், இங்கே நாங்க - ஒரு வாக்கெடுப்பு - இதோ இங்கே மேலே - இடப்பக்கம் பாருங்க -- ஆமாம் - அதுதான் - எங்கள் ப்ளாக்ல வார ராசி பலன் பகுதி வேண்டுமா? - அல்லது வேண்டாமா? என்ற கேள்விக்கு நீங்க ஏதாகிலும் ஒன்றுக்கு வோட்டுப் போடலாம். 
இது, எங்க பதிவு (வே)வலையை மேம்படுத்திக் கொள்வதற்காக.
 எங்கள் அளவுகோல்கள்:
ஒன்று : தமிழிஷ் வோட்டுகள்
இரண்டு : பின்னூட்டங்களில் வருகின்ற கருத்துக்கள்.
மூன்று: reactions box - markings - "Very Good / Good / No good" 
ஆகியவை.
வார ராசி பலன் பகுதிக்குத் தான் - இது வரையில் - இந்த மூன்று  அளவு கோல்களில், குறைந்த அளவு ரீடிங். எனவேதான் இந்த வாக்கெடுப்பு.
வோட்டுப் போடுபவர்கள் - தயங்காமல் - உங்கள் வோட்டைப் போடுங்கள். இது பற்றி உங்க கருத்து ஏதாவது இருந்தால் அதை இங்கே பின்னூட்டமாகப் பதியுங்கள். இயன்றவரை அனானி - முகமூடி வேண்டாமே - இங்கே மட்டும்.
வாக்கெடுப்பு நடந்து முடிந்த பின் - உங்கள் அனுமதியோடு - இதில் மேற்கொண்டு சில முடிவுகள் நாம் எடுப்போம்.
ஆசிரியர் குழு 

1.11.09

ஞாயிறு 16


இலக்கிய ரசனை 3

ஒரு பணக்காரர் அவருக்கு நண்பராக ஒரு புலவர். பணக்காரருக்கு ஒரு பெண் மேல் பிரியம் வந்தது.  ஆனால் அவள் அவரை கண்டுகொள்ள வில்லை. புலவரை தூது அனுப்புகிறார் ஹீரோ . 


புலவர் போய் பேசத் துவங்குகிறார்.


வெள்ளரிக்காயா, விரும்பும் அவரைக்காயா உள்ளமிளகாயா ஒரு பேச்சுரைக்காயா..


விளக்கம் தேவை இல்லை என்று நினைக்கிறேன். முழுப்பாட்டும் எனக்கு நினைவில்லை. தேடிக் கண்டு பிடிக்கவும் முடியவில்லை.
****
முழுப்பாட்டு நினைவில் இருக்கும் ஒரு தகவல் இதோ. 


வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன 
இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை -- மங்காத 
சீரகத்தைத் தந்தீரேல் வேண்டேன் பெருங்காயம் 
ஏரகத்துச் செட்டியாரே.   


திருவேரகம் என்ற தலத்தில் விளங்கும் இறைவனே , சூடு இருக்கும் வரை உயிர் வாழும் இந்த உடம்பு (வெம் காயம்) உலர்ந்து வற்றினால் (சுக்கு)  அயக்காந்த பஸ்பம் போன்ற (வெந்த அயம்) ஆவதுதான் என்ன ? அதன் பின் இந்த உடலை யார் தாங்குவார்கள்?  சிறப்பில் குறையாத சீர் மிகுந்த அகமாகிய கைலாயத்தைத் தருவீரேல் பெரும் காயம் (பரு உடல்) நான் ஒரு நாளும் வேண்டேன். 


பிரார்த்தனை எவ்வளவு சுவாரசியமாகச் செல்கிறது !!


***
இங்கிதமாய் இங்கனைவரும் வேண்டுவது யாதெனில் 
வெங்காயம் மணக்கின்ற சாம்பார் 


எனும் கிறளோடு முடித்துக் கொள்வோம்.