*Gudalur Narayanasamy Balasubramaniam (G N B)
தோற்றம் 6-1-1910 மறைவு 1-5-1965
2 GNB அந்தகால B A (Hons) Eng Lit . படித்தவர் அவர் காலத்தில் அவர் அளவு படித்த Musician யாரும் இல்லை.
3 GNB கேள்வி ஞானத்தில் தான் முக்கால் வாசி தன இசைத் திறமையை வளர்த்துக்கொண்டார். அவருக்கு மானஸிக குரு அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் GNB இன தந்தைக்கு அவர் பாடகராக வருவது பிடிக்கவில்லை.
10 ஒரு சமயம் மைலாப்பூர் நடுத்தெருவில் ( Middle st ) ஜாகை இட்டிருந்த காஞ்சி மகாப்பெரியவாள் நான்கு வீடு தள்ளி இருந்த GNB வீட்டிற்கு, தானே 'மணி மணி' என்று அழைத்துக்கொண்டே சென்று ஆசி வழங்கினாராம்.
# சொன்னதைசெய்திட சாகசமா
*Gudalore - near Aduthurai, Mayiladuthurai.
தோற்றம் 6-1-1910 மறைவு 1-5-1965
GNB அவர்களுக்கு centenary வந்து விட்டது.
கிருஷ்ண கான சபையில் அவர் குறித்து கேள்விப்பட்ட சில சுவாரஸ்யமான தகவல்கள்:
1 அவர் தந்தை நாராயணசாமி ஐயர் திருவல்லிக்கேணியில் ஆசிரியராகவும் புகழ் பெற்ற பார்த்தசாரதி சபை செகரெட்டரி ஆகவும் மியூசிக் அகடமியில் expert committee மெம்பராகவும் இருந்தவர்.
1 அவர் தந்தை நாராயணசாமி ஐயர் திருவல்லிக்கேணியில் ஆசிரியராகவும் புகழ் பெற்ற பார்த்தசாரதி சபை செகரெட்டரி ஆகவும் மியூசிக் அகடமியில் expert committee மெம்பராகவும் இருந்தவர்.
2 GNB அந்தகால B A (Hons) Eng Lit . படித்தவர் அவர் காலத்தில் அவர் அளவு படித்த Musician யாரும் இல்லை.
3 GNB கேள்வி ஞானத்தில் தான் முக்கால் வாசி தன இசைத் திறமையை வளர்த்துக்கொண்டார். அவருக்கு மானஸிக குரு அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் GNB இன தந்தைக்கு அவர் பாடகராக வருவது பிடிக்கவில்லை.
4 GNB அவர்களின் முதல் கச்சேரி பதினெட்டாவது வயதில் எதிர்பாராத விதமாக நடந்தது. மயிலை கபாலி கோவிலுக்கு முசிறி சுப்ரமணிய அய்யர் கச்சேரி கேட்கச் சென்றபொழுது முசிறி அவர்கள் உடல் நிலை சரியில்லாததால் வரவில்லை கோவில் committee members மிகவும் வற்புறுத்தி GNB அவர்களை மேடை ஏற்றினார்கள். கச்சேரி மிகவும் பிரமாதமாக அமைந்தது. அதன் பிறகு "no looking back ". 1935 -to 1965 நிஜமாகவே கொடிகட்டிப் பறந்தார். அவர் காலத்திய செம்மங்குடி. அரியக்குடி. மகாராஜபுரம் எல்லோரையும் ஓரம் கட்டினார் என்றே சொல்லலாம்.
5 கர்நாடக சங்கீத கச்சேரிக்கு' Four figure salary " வாங்கிய முதல் வித்வான் GNB. அவர் 1000 ருபாய் வாங்கும் போது அரியக்குடி 200 ரூ செம்மங்குடி 150 ரூ வாங்கினார்கள்.
6 அவருக்கு அதிகபட்சமாக பக்க வாத்தியம் வாசித்தவர்கள் பாலக்காடு மணி அய்யரும், லால்குடி ஜெயராமனும்தான். மிருதங்கம் மணி அய்யருக்கு தனக்கு சமமாக GNB கொடுத்த salary ஐ அவர் வாங்க மறுத்து 100 ரூ குறைவாக பெற்றுக்கொண்டாராம்.
7 தஞ்சை ஜில்லா வாத்திமார்களுக்கு GNB என்றால் craze .அவர்கள் வீட்டுக் கல்யாணங்களுக்கு GNB இன் date கிடைத்தவுடன் தான் தேதி நிச்சயம் செய்வார்களாம்.
8 ஒரு தடவை தஞ்சாவூரில் GNB கச்சேரி முடிய நேரமானதால், அவருக்காக சங்கீதப் பிரியரான ரயில்வே Guard 15 நிமிடங்கள் Boat MAIL ஐ நிறுத்தினாராம்.
9 ஒருசமயம் கச்சேரி செய்ய, கோவையிலிருந்து சேலம் செல்லும் வழியில் வாடகை taxi அத்வானத்தில் பஞ்சராகி நின்று விட்டது. டிரைவரிடம் jack இல்லை GNB யும் நண்பர்களும் வண்டியிலிருந்து இறங்கி மர நிழலில் நின்று கொண்டிருந்தார்கள் தூரத்தில் ஆஜானுபாகுவான நான்குபேர் கையில் நீண்ட கழிகளுடன் வருவதை பார்த்த GNB வழிப்பறிக் கொள்ளையர்கள் என நினைத்து, தான் போட்டிருந்த வைரக் கடுக்கனை கழற்றி பத்திரப்படுத்தினார். பக்கத்தில் வந்த அந்த நால்வரில் ஒருவன் 'என்ன பஜனை கோஷ்டியா'என்று விசாரித்துவிட்டு நடந்ததை கேட்டான். ' பூ இவ்வளவு தானா 'என்று கூறிக்கொண்டே நால்வரும் வண்டியை தூக்கிப்பிடிக்க, டிரைவர் ஸ்டெப்னியை மாட்டினார். பணம் வாங்க மறுத்த அந்த நால்வருக்கும் நன்றி கூறி விட்டு GNB பயணத்தைத் தொடர்ந்தார்.
10 ஒரு சமயம் மைலாப்பூர் நடுத்தெருவில் ( Middle st ) ஜாகை இட்டிருந்த காஞ்சி மகாப்பெரியவாள் நான்கு வீடு தள்ளி இருந்த GNB வீட்டிற்கு, தானே 'மணி மணி' என்று அழைத்துக்கொண்டே சென்று ஆசி வழங்கினாராம்.
11 GNB சினிமாவிலும் கொடிகட்டிப் பறந்தார் M S சுப்பலக்ஷ்மியுடன் அவர் நடித்த 'சகுந்தலை' அந்த காலத்தில் 'சூப்பர் ஹிட்' படம் . நாதஸ்வர மேதை ராஜரத்தினம் பிள்ளை மற்றும் வடஇந்திய இசை மேதை படேகுலாம் அலிகான் இருவரும் GNB இன் ஆத்ம நண்பர்கள்.
12 GNB President சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணனிடம் award வாங்கியவர் . 1963 இல் மியூசிக் அகாடமி GNB க்கு 'சங்கீத கலாநிதி வழங்கி கௌரவித்தது. GNB இன் பிரதான சிஷ்யர்கள் பத்ம பூஷன் டாக்டர் ML வசந்தகுமாரி, ராதா ஜெயலக்ஷ்மி, கல்யாணராமன், தற்பொழுது பாடி வரும் Trichur ராமசந்திரன்.
13 GNB யின் சில முத்தான பாடல்கள்.
# ஹிமகிரி தனையே
# களள நேர்தினா
# கண்ணனை காண்பதெப்போ# களள நேர்தினா
# சொன்னதைசெய்திட சாகசமா
# திக்கு தெரியாத காட்டில்
# எல்லாவற்றையும் விட நான் மெய் மறந்த பாடல் ' யமுனா கல்யாணி' ராகத்தில் அமைந்த " ராதா சமேதா கிருஷ்ணா" அந்த பாடலில் வரும் வரிகள் போலவே, 'GNB ' கலைத்துறையில் 'சுந்தர மன்மத கோடிப்ரகாசர்' pakka gentleman என்று இன்று வரை கூறப்படுகிறார்.
BIRTH Centenary கொண்டாடப்படும் GNB கர்நாடக இசையில், தனக்கு என ஒரு பாணி அமைத்து வாழ்ந்த இசை மேதை. அவர் இசையில் மயங்காதவர் இல்லை. GNB இசைத துறையில் ஒரு சகாப்தம் என்றால் மிகையாகாது.
:: MALI
சங்கீதமான நினைவலைகளும் தகவல்களும்.நன்றி.
பதிலளிநீக்குGNB யின் மிகப் பெரிய பெருமைகளில் ஒன்று, அவர் காலத்தில் இரண்டு பாணி சங்கீதங்கள் மட்டுமே இருந்தன. ஒன்று GNB பாணி இன்னொன்று மகாராஜபுரம் பாணி.
பதிலளிநீக்குஅப்புறம் இன்னொன்னு அண்ணே, அவரும் MS ம் ரொம்ப குளோசாமே?
http://kgjawarlal.wordpress.com
அருமையான தகவல்களைக் கொண்ட அழகான பதிவு. மிக்க நன்றி.
பதிலளிநீக்குஇதை படிக்கும்போதே என் தந்தையின் ஞாபகத்தில் கண் கலங்கியது. அவருக்கு மதுரை மணி ஐயர், GNB. இந்த இருவர் பெயரையும் சொன்னாலே போதும், அப்படி ஒரு மகிழ்ச்சி அவர் முகத்தில் தெரியும். Boat Mail -ஐ அவருக்காக நிறுத்திய கதையை என் தந்தை பல முறை சொல்ல நான் கேட்டிடுக்கிறேன். ஒரு முறை மியுசிக் அகாடமியில், GNB., மணி ஐயர் பாடல்களை ஆடியோ காஸெட்டில் வெளியிட்டார்கள். அதை நான் என் தந்தைக்கு surprise -ஆக வாங்கி கொடுத்த பொழுது, அந்த சந்தோஷத்தில் அவர் கண் கலங்கி என்னை கட்டி அணைத்தது இன்று நினைவுக்கு வருகிறது. எங்கள் வீட்டில் என் அம்மா, பாட்டி, பெரியம்மா எல்லோருமே GNB -யின் விசிறிகள் தான்.
அருமையான தகவல்கள்
பதிலளிநீக்குஇவர் கச்சேரிகளை இசைத்தட்டிலேயே
கேட்டுள்ளேன். ஹிமகிரி தனையே
,ராமகதா எனக்கு மிகப்பிடிக்கும்.
யூரியூபில் சகுந்தலைப் பாடல்கள்
சில பார்த்தேன்.
//அப்புறம் இன்னொன்னு அண்ணே, அவரும் MS ம் ரொம்ப குளோசாமே//
ஆம் கேள்விப்பட்டுள்ளேன்.
மிகப் பொருத்தமானவர்கள்.
.
நல்ல தகவல்கள் நண்பரே...
பதிலளிநீக்குGNB யை நன்றாக அறிமுகப் படுத்தி உள்ளீர்கள்.அவரின் ‘ராதா ஸ்மேதா க்ருஷ்னா’ இதைப் படிக்கும்போது காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது!!
பதிலளிநீக்குஆம் ராமமூர்த்தி சார்!
பதிலளிநீக்குசுந்தர மன்மத கோடி பிரகாஷா என்கிற வரியும் கோடி சூர்யப் பிரகாசத்தை மனதில் ஏற்படுத்துகிறது!