அது ஆண்டு 1975. டிசம்பர் மாதம்.
சென்னையில், பிரிட்டிஷ் கவுன்சிலில் - நான் ஒரு பகுதி உறுப்பினன். பகுதி உறுப்பினன் என்றால் என்ன? சந்தா தொகை அந்தக் காலத்தில் என் பைக்கு அடங்காதது என்பதால் - நண்பர் பெரம்பூர் கிருஷ்ணமூர்த்தியுடன் கூட்டு சேர்ந்து - சந்தாவைப் பிரித்து, புத்தகங்களையும் பிரித்து எடுத்துப் படித்துவந்தோம்.
அந்த நாட்களில், எனக்கு பி ஜி வோட்ஹவுசை ( P G Wodehouse) புத்தகங்களில் அறிமுகம் செய்து வைத்தவர் - என் தம்பி தியாகுவின் தோழர் - வழக்கம் போல் பெயர் மறந்துவிட்டது - முகம் ஞாபகம் உள்ளது - ஒருவர்.
அப்போ நான் பிரிட்டிஷ் கவுன்சிலில் நிறைய விரும்பி எடுத்துப் படித்த புத்தகங்களில் - பி ஜி வோட்ஹவுஸ் புத்தகங்கள் நிறைய உண்டு. ஒரு புத்தகத்தில் (பி ஜி வோ - புத்தகம்தான்).
கடைசி பக்கத்தில் யாரோ ஒருவர் அழகான கையெழுத்தில் எழுதியிருந்தார்:
16.2.1975
"What a sad day for us, the Wodehousian lovers - even Pelham had to hand-in his dinner pail "
இந்த வரிகளுக்கு முகம் இல்லை - அதாவது யார் எழுதினார்கள் என்று தெரியாது. ஆனாலும், இதை என்னால் மறக்க முடியவில்லை.
இது போன்ற புத்தக வரிகள் ஆசிரியரால் எழுதப்படாது என்னினைவிலும் நிறைய
பதிலளிநீக்குபுலவன் புலிகேசி அவர்களே - நன்றி.
பதிலளிநீக்குநினைவில் உள்ளவைகளை 'எங்களு'டனும் பகிர்ந்துகொள்ளுங்கள். நாங்களும் சுவைத்து, மற்றவர்களுக்கும் - அளிக்கிறோம், உங்கள் பெயருடன்.
ஸ்ரீராம் அந்த ஆங்கில வரிகளைத் தமிழில் தந்தால் முழுமையாக ரசிக்க முடியும் எல்லோராலும்.
பதிலளிநீக்குhand in dinner pail என்றால் என்ன பொருளோ தெரியவில்லை. kicked his bucket மாதிரி இதுவும் ஒரு idiom போலும். அது இந்த idiot க்கு புரியவில்லை.
பதிலளிநீக்கு// 16.2.1975
பதிலளிநீக்கு"What a sad day for us, the Wodehousian lovers - even Pelham had to hand-in his dinner pail "//
" என்ன ஒரு வருத்தமான - நாள் - வோட் ஹவுசின் நேசர்களாகிய நமக்கு இன்று! பெல்ஹாமும் உயிரை விட்டுவிட வேண்டியதாகிவிட்டதே!"
சரியா ஸ்ரீராம்?
The touching word in the sentence is "even".