கிராமத்தில் அனைவரும் மழை வேண்டி பிரார்த்தனை செய்யத் தீர்மானித்தார்கள். நாளும் இடமும் குறித்தார்கள்.எல்லோரும் வந்தார்கள். ஒரே ஒரு பையன் மட்டும் கையில் குடையுடன் பிரார்த்தனைக்கு வந்தான்..."நம்பிக்கை". (FAITH).

* ஒருவயதுக் குழந்தையை மேலே தூக்கிப் போட்டுப் பாருங்கள்..குழந்தை பரவசமாய்ச் சிரிக்கும். அதற்குத் தெரியும் நீங்கள் பத்திரமாய் பிடித்து விடுவீர்கள் என்று. "நம்பிக்கை"(TRUST)

* இரவு படுக்கப் போகும்போது நாளை நாம் எழுவோமா, நமக்கு விடியுமா என்று யோசிக்காமல் மறுநாளுக்கான வேலைகளை திட்டமிடுகிறோம்...."நம்பிக்கை" (HOPE)
============================== ============================== ====
* கண்தெரியாத அந்தப் பெண் உலகில் உள்ள அனைவரையும் வெறுத்தாள் தன் காதலனைத் தவிர...
அவனிடம், "எனக்கு மட்டும் கண் தெரிந்தால் உன்னைக் கல்யாணம் செய்திருப்பேன்" என்றாள்.
சில நாட்களுக்குப் பின் யாரோ தானம் செய்ததில் அவளுக்கு கண்கள் கிடைத்தன...
தன் காதலனைப் பார்த்த அவள் ஆச்சர்யப் பட்டுப் போனாள்.அவனுக்கும் கண் இல்லை.
அவளுக்கு அவன் மேல் வெறுப்பு வந்தது. அவன் கேட்டான்.
"உனக்கு கண் வந்து விட்டது..இப்போது என்னை கல்யாணம் செய்து கொள்வாயா?"
சிறிது நேர அமைதிக்குப் பின் அவள் சொன்னால்,"மாட்டேன்".
அமைதியாகத் திரும்பி நடக்கத் தொடங்கியவன் திரும்பி,"என் கண்களை பத்திரமாகப் பார்த்துக் கொள்" என்று விட்டு சென்று மறைந்தான்.
============================== ========================
காட்டில் திரிந்து கொண்டிருந்த இரு நண்பர்களுக்கெதிரே ஒரு பசித்த புலி....திகைத்து நின்ற இரு நண்பர்களில் ஒருவன் தன் ஷூவை இறுக்கிக் கொண்டான். இரண்டாமவன் ஆச்சர்யத்துடன் "புலியை விட வேகமாக ஓடி விட முடியும் என்று நம்புகிறாயா?" என்றான். முதல் நண்பன் சொன்னான்,"புலியை விட வேகமாக ஓட வேண்டிய அவசியமில்லை...நான் ஓட வேண்டியது உன்னை விட வேகமாகத்தான்..." கார்பொரேட் நட்பு..! எல்லாத் திருப்பத்திலும் ஒரு எதிர்பாராதது இருக்கும் என்று எதிர்பாருங்கள்...!!
============================== ====================

தன் புதிய காரைத் துடைத்துக் கொண்டிருந்த தந்தை, கல்லை எடுத்து காரில் கீறலிட்ட மகனின் கையைப் பிடித்து ஓங்கி அறைந்தார். மயங்கி விழுந்த மகனை மருத்துவமனையில் சேர்த்தபோது மகன் சோகமாகக் கேட்டான்.."நான் எப்போ சரி ஆவேன் அப்பா?" மனம் நொந்த அப்பா தன் காரின் பக்கம் வந்து நின்றபோது மகன் கல்லால் காரில் கிறுக்கியது கண்ணில் பட்டது..."I LOVE YOU DAD..!" கோபத்துக்கு அளவில்லை...அன்புக்கும்தான்...
============================== ==========================

அம்மான்னா....... சும்மா இல்லை...!
மழையில் நனைந்து வீடு திரும்பிய போது,
அண்ணன் : "ஏண்டா நீ குடை கொண்டு போகல்ல?"
அக்கா : "மழை நிற்கின்ற வரை எங்காவது நின்று விட்டு வந்திருக்கலாம்.."
அப்பா :(கோபமாக)" சளி பிடிச்சு ஜுரம் வந்தால்தான் உனக்குத் தெரியும்..."
ஆனால் அம்மா துண்டுடன் ஓடி வந்து என் தலையை துவட்டி விட்டபடி சொன்னது.."இந்த மழைக்கு அறிவே இல்லை...என் பிள்ளை வீட்டுக்கு வந்த உடனே பெய்திருக்கலாம்..."
அம்மா.....
============================== ===========================

சுனாமியில் உறவினர்களை இழந்த சிறுவன் கடற்கரையில் நின்று கடலைப் பார்த்துச் சொன்னான்...
"இன்னும் பல்லாயிரம் முறை உன் அலைகள் என் காலில் வந்து விழுந்தாலும் உன்னை நான் மன்னிக்க மாட்டேன்..."
========
சுனாமியைப் பார்க்காத ஒருவன் சொன்னது...
"கடல் அலைகள் தான் எனது வழிகாட்டி எழுந்து எழுந்து விழுவதால் அல்ல, ஒவ்வொரு முறை விழுந்ததும் உடனே மீண்டும் எழுவதால்..."
============================== ====================






