புதன், 3 மார்ச், 2010

நம்பிக்கையும் வாழ்க்கையும்


கிராமத்தில் அனைவரும் மழை வேண்டி பிரார்த்தனை செய்யத் தீர்மானித்தார்கள். நாளும் இடமும் குறித்தார்கள்.எல்லோரும் வந்தார்கள். ஒரே ஒரு பையன் மட்டும் கையில் குடையுடன் பிரார்த்தனைக்கு வந்தான்..."நம்பிக்கை". (FAITH).


* ஒருவயதுக் குழந்தையை மேலே தூக்கிப் போட்டுப் பாருங்கள்..குழந்தை பரவசமாய்ச் சிரிக்கும். அதற்குத் தெரியும் நீங்கள் பத்திரமாய் பிடித்து விடுவீர்கள் என்று. "நம்பிக்கை"(TRUST)

* இரவு படுக்கப் போகும்போது நாளை நாம் எழுவோமா, நமக்கு விடியுமா என்று யோசிக்காமல் மறுநாளுக்கான வேலைகளை திட்டமிடுகிறோம்...."நம்பிக்கை"(HOPE)

================================================================

* கண்தெரியாத அந்தப் பெண் உலகில் உள்ள அனைவரையும் வெறுத்தாள் தன் காதலனைத் தவிர...
அவனிடம், "எனக்கு மட்டும் கண் தெரிந்தால் உன்னைக் கல்யாணம் செய்திருப்பேன்" என்றாள்.
சில நாட்களுக்குப் பின் யாரோ தானம் செய்ததில் அவளுக்கு கண்கள் கிடைத்தன...
தன் காதலனைப் பார்த்த அவள் ஆச்சர்யப் பட்டுப் போனாள்.அவனுக்கும் கண் இல்லை.
அவளுக்கு அவன் மேல் வெறுப்பு வந்தது. அவன் கேட்டான்.
"உனக்கு கண் வந்து விட்டது..இப்போது என்னை கல்யாணம் செய்து கொள்வாயா?"
சிறிது நேர அமைதிக்குப் பின் அவள் சொன்னால்,"மாட்டேன்".
அமைதியாகத் திரும்பி நடக்கத் தொடங்கியவன் திரும்பி,"என் கண்களை பத்திரமாகப் பார்த்துக் கொள்" என்று விட்டு சென்று மறைந்தான்.

======================================================
காட்டில் திரிந்து கொண்டிருந்த இரு நண்பர்களுக்கெதிரே ஒரு பசித்த புலி....திகைத்து நின்ற இரு நண்பர்களில் ஒருவன் தன் ஷூவை இறுக்கிக் கொண்டான். இரண்டாமவன் ஆச்சர்யத்துடன் "புலியை விட வேகமாக ஓடி விட முடியும் என்று நம்புகிறாயா?" என்றான். முதல் நண்பன் சொன்னான்,"புலியை விட வேகமாக ஓட வேண்டிய அவசியமில்லை...நான் ஓட வேண்டியது உன்னை விட வேகமாகத்தான்..." கார்பொரேட் நட்பு..! எல்லாத் திருப்பத்திலும் ஒரு எதிர்பாராதது இருக்கும் என்று எதிர்பாருங்கள்...!!

==================================================

தன் புதிய காரைத் துடைத்துக் கொண்டிருந்த தந்தை, கல்லை எடுத்து காரில் கீறலிட்ட மகனின் கையைப் பிடித்து ஓங்கி அறைந்தார். மயங்கி விழுந்த மகனை மருத்துவமனையில் சேர்த்தபோது மகன் சோகமாகக் கேட்டான்.."நான் எப்போ சரி ஆவேன் அப்பா?" மனம் நொந்த அப்பா தன் காரின் பக்கம் வந்து நின்றபோது மகன் கல்லால் காரில் கிறுக்கியது கண்ணில் பட்டது..."I LOVE YOU DAD..!" கோபத்துக்கு அளவில்லை...அன்புக்கும்தான்...

========================================================

அம்மான்னா....... சும்மா இல்லை...!

மழையில் நனைந்து வீடு திரும்பிய போது,
அண்ணன் : "ஏண்டா நீ குடை கொண்டு போகல்ல?"
அக்கா : "மழை நிற்கின்ற வரை எங்காவது நின்று விட்டு வந்திருக்கலாம்.."
அப்பா :(கோபமாக)" சளி பிடிச்சு ஜுரம் வந்தால்தான் உனக்குத் தெரியும்..."
ஆனால் அம்மா துண்டுடன் ஓடி வந்து என் தலையை துவட்டி விட்டபடி சொன்னது.."இந்த மழைக்கு அறிவே இல்லை...என் பிள்ளை வீட்டுக்கு வந்த உடனே பெய்திருக்கலாம்..."

அம்மா.....

=========================================================
சுனாமியில் உறவினர்களை இழந்த சிறுவன் கடற்கரையில் நின்று கடலைப் பார்த்துச் சொன்னான்...
"இன்னும் பல்லாயிரம் முறை உன் அலைகள் என் காலில் வந்து விழுந்தாலும் உன்னை நான் மன்னிக்க மாட்டேன்..."

========

சுனாமியைப் பார்க்காத ஒருவன் சொன்னது...
"கடல் அலைகள் தான் எனது வழிகாட்டி எழுந்து எழுந்து விழுவதால் அல்ல, ஒவ்வொரு முறை விழுந்ததும் உடனே மீண்டும் எழுவதால்..."
==================================================  

20 கருத்துகள்:

  1. நம்பிக்கைதான் வாழ்க்கையே!
    கண் தானம் செய்த அந்த காதலனின் அன்பையும், பெருந்தன்மையையும் நினைத்து மனம் ஒரு நிமிடம் உருகி விட்டது.
    அருமையான பதிவு!

    பதிலளிநீக்கு
  2. அம்மாடியோ!என்ன இன்னைக்கு இப்படி போட்டுத் தாக்கிட்டீங்க. ஒன்ன ஒன்னு மிஞ்சுது:)

    பதிலளிநீக்கு
  3. அப்பா! காதலிக்காக கண் தானம் பண்ணிய அவன் கதையில் தான்--
    தியாகம், எதிர்பார்ப்பு,திகைப்பு, ஏமாற்றம், தேற்றிக்கொள்ளல் என்று எத்தனை உணர்வுகள் மண்டிக் கிடக்கின்றன.. அவனை நினைத்துப் பெருமைப்படுவதா, இரக்கப்படுவதா, மனதைத் தேற்றிக்கொள்வதா என்று தெரியவில்லை..
    மொத்தத்தில் பாடம் போதிக்கும் கதை என்பது மட்டும் நிச்சயம்.

    பதிலளிநீக்கு
  4. அம்மா! ஓ, அம்மா!

    அம்மாவுக்கு என்னைக்கும் தன் பிள்ளை தங்கக்கட்டி தான்!..

    பதிலளிநீக்கு
  5. நம்பிக்கை நச் பதிவு...அதிலும் அந்த அம்மா பற்றியது அருமை...அப்புறம் புலி நண்பன் விவரமானவன்...

    பதிலளிநீக்கு
  6. கண் தானம் பற்றி ஒரு தவறான அபிப்ராயத்தை தோற்றுவிக்கிறீர்கள். உயிருடன் இருப்பவர் கண் தானம் செய்ய முடியாது. அப்படியே செய்தாலும் ஒரு கண் கொடுத்து இருவருமே பயன் பெறுவதை விட்டு .......

    பதிலளிநீக்கு
  7. சரியா சொல்லி இருக்கீங்க! அதான் புத்திசாலித்தனம்! அந்த காதலனும் குருடனாகாம இருந்திருக்கலாம். அந்த சுயநலக்கார காதலிய விட்டு பிரிந்தாலும், இந்த உலகத்துல சுயமா வாழ்ந்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  8. அவ்வ்வ்வ் இத்தனை தத்துவமா ?? தாங்காது சாமி.

    பதிலளிநீக்கு
  9. பதிவு போட்டும் எஸ் எம் எஸ் நிக்கலியா??..:))

    பதிலளிநீக்கு
  10. என் மனதை தொட்ட கவிதைகள்... என்னை படிக்க வைத்த உமக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  11. எல்லாமே அற்புதம். மொத்தமும் பாராட்டுக்களுக்குரியது. தனித்தனியாக பாராட்டினால் ஏதாவது ஒன்று விட்டு போகும்.

    பதிலளிநீக்கு
  12. முன்னரே வாசித்தவை என்றாலும், சுவராசியம்.

    பதிலளிநீக்கு
  13. அத்த்னையும் ஒயிரோட்டமாய் இருந்துதுங்க..... மிக ரசித்து படித்தேன். பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  14. //சைவகொத்துப்பரோட்டா said...

    முன்னரே வாசித்தவை என்றாலும், சுவராசியம் //

    Amen

    பதிலளிநீக்கு
  15. அனைத்துமே சுவாரசியமாக இருந்தன. இனி பீச் போகும்போதெல்லாம் சுனாமியால் பாதிக்கப்பட்ட சிறுவனின் நினைவு வரும். ---கீதா

    பதிலளிநீக்கு
  16. நன்றி......நன்றி......நன்றி.....

    meenakshi.

    வானம்பாடிகள்.

    ஜீவி.

    புலவன் புலிகேசி.

    அனானி.

    மீண்டும் meenakshi.

    ரோமியோ.

    ஷங்கர்.

    மணிகண்டன் கருணாநிதி.

    தமிழ் உதயம்.

    சைவகொத்துபரோட்டா.

    அரசு.

    சாய்ராம் கோபாலன்.

    கீதா சந்தானம்.

    நன்றி...

    பதிலளிநீக்கு
  17. காதலனின் தியாகத்தை பற்றிய அப்பதிவினை
    வாசித்த தருணம்
    இதயத்தில் இடி ஓசை
    விழிகளில் நீர்த் துழிகள்

    பதிலளிநீக்கு
  18. இவ்வளவு தத்துவங்கள் கதை. அம்மா, காதலன்,சுனாமி சிறுவன் நன்றி. எங்கள் ப்ளாக்.

    பதிலளிநீக்கு
  19. நன்றி வல்லிசிம்ஹன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!