5.7.14

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்தவாரம்.




1) சிவில் சர்வீஸ் தேர்வுக்கான, 90 சதவீத பாடங்கள் ஆங்கில மொழியில் தான் இருந்தன. ஆனாலும், தமிழ் மொழியின் மீதிருந்த ஆர்வத்தால், ஆங்கில பாடங்களை, நானே தமிழாக்கம் செய்து படித்தேன். எனவே, எண்ணிய இலக்கை அடையும் வரை, ஓயாமல் செயல்படுங்கள். ஐ.ஏ.எஸ்., தேர்வை தமிழில் எழுதி, தமிழக அளவில் முதலிடமும், இந்திய அளவில், 45வது இடமும் பெற்ற தேனியை சேர்ந்த, ஜெயசீலன் 
 
 
 
3) பாளைச் சிறையில் பசுமைப் புரட்சி.
 

 

5) கோவை கால் டாக்ஸி டிரைவர் முருகன் 
 
 
6) வாயில்லாஜீவன்களின்கருணை தாய், நோய்வாய்பட்ட மற்றும் இறைச்சிக்காக அழைத்து செல்லப்படும் அடிமாடுகளை வாங்கி, அவற்றுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து, பராமரிப்பதற்காக, திருமணமே செய்யாமல் வாழும், 67 வயது,சாதனா
 
 
 


9) 
“எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். என் கணவரின் சகோதரர் குடும்பத்தில் பிரச்சினையால் அவருடைய மூன்று பிள்ளைகளையும் நான்தான் பார்த்துக் கொள்கிறேன். கணவருடன் சேர்த்து இப்போ ஆறு பிள்ளைகளையும் இந்த தொழில்தான் காப்பாற்றுகிறது” என்கிறார். பிசிறில்லாமல் வெட்டுகிற கத்தரிக்கோலைப் போலவே தயக்கமின்றி உறுதியுடன் பேசுகிறார் பெட்ரீஷியா. அந்த உறுதி அவரை வெற்றியின் பாதையில் அழைத்துச் செல்கிறது.
 


10) ........ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி எம்.ஏ. படித்தார், முருகன் பி.பி.ஏ. படித்தார் என்றெல்லாம் சொல்ப வர்கள் அவர்கள் எப்படி படித்தார்கள் என்று கேட்பதில்லை. எங்களது பேராசிரியர்கள்தான் அவர்களை படிக்க வைத்திருக் கிறார்கள்....
 


சிறையில் எங்களால் பயிற்றுவிக்கப்பட்டவர்கள் இப்போது உயர் பதவிகளிலும் இருக்கிறார்கள். பாளை சிறையில் இருந்த ஆயுள் கைதி ஒருவர் சிறைக்குள் வந்து எம்.எஸ்சி. படித்தார். அவர் சட்டம் படிக்க வேண்டும் எனச் சொன்னதால் திருச்சி சிறைக்கு மாற்றிக் கொடுத்தோம். திருச்சி சட்டக் கல்லூரியில் ரெகுலர் படிப்பில் சட்டம் முடித்து மீண்டும் பாளை சிறைக்கு வந்து பிஹெச்.டி-யும் முடித்தார். இப்போது அவர் தமிழக பல்கலைக்கழகம் ஒன்றில் கணிதத் துறை தலைவராக இருக்கிறார்........
 
ஓய்வு பெற்ற பேராசிரியரின் ஒப்பற்ற சேவை.நோவா.
 
 
                                                           
 
11) ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தாலும், மன உறுதியுடன் போராடி, இன்று சென்னையின் அனுபவமிக்க சிறுதொழில் அதிபராக இருக்கும், ஜெயலட்சுமி
 


12)
தண்ணீர் தேடாத கிராமம்:  மழைநீரை சேமித்து சாதனை
 

13) வக்கீல் தொழிலுக்குப் படித்தும் பெரிய பிரயோஜனமில்லை. யு.பி யில் தன் இரு குழந்தைகளை படிக்க வைக்கும் வழக்கறிஞர் யோகிதா ரகுவன்ஷி எட்டு ஆண்டுகளாக செய்யும் வேலை என்ன தெரியுமா? டிரக் ஓட்டிதான்!
 
 

15) ராஜம்மாவும் பாலசுப்ரமணியமும் 



16) ஆதவ்.



2.7.14

அலேக் அனுபவங்கள் 140702:: பி டி சி டெப்போவில்

             
(குறிப்பு: இது ஒரு டெக்னிகல் பதிவு கிடையாது. சில விஷயங்கள் / சொற்கள் புரியவில்லை என்றால் அவற்றை பொருள் விளங்கா உருண்டையாக முழுங்கிவிட்டுப் படியுங்கள். நான் சொல்ல வருவது ஒரு நான் - டெக்னிகல் மேட்டர்தான்!) 
       
ஒரு பஸ் நூற்று எழுபத்தாறு இஞ்சு சக்கர அடிப்படை அளவு (அதாவது 176 inch wheelbase!!) கேரளா டிரான்ஸ்போர்ட் கேட்டிருந்தது என்று ஞாபகம். சாசிஸ் ஃபிரேம் டிரில்லிங் படம் வரைய நானும் என்னுடைய வரைஞர் (டிராப்ட்ஸ்மேன்) மிகவும் முனைந்து வேலை செய்யவேண்டி இருந்தது. 
           

சாசிஸ் பிரேமில் காற்றுத் தடைக்கான (ஏர் பிரேக் அமைப்புக்கு வேண்டிய சமாச்சாரம்) காற்று உருளைகள் எங்கே பொருத்துவது என்று ஒரு பிரச்னை வந்தது. 
               
பஸ்ஸில் பயணிகள் ஏற, இறங்க  இடது புறம் வழிகள் வேண்டும். அந்தப் பாதைகளுக்கு இடையே மூன்று காற்று உருளைகள் பொருத்தப்பட வேண்டும். வலது புறம் டீசல் டாங்கு. எவ்வளவு முட்டி மோதிப் பார்த்தாலும், மூன்று ஏர் சிலிண்டர்கள் (அதாங்க காற்று உருளைகள் - தமிழ் வாழ்க) அமைப்பது மிகவும் கடினமான விஷயமாகப் பட்டது. 
                 
அப்போ ஒரு சர்விஸ் இஞ்சினியர், (தமிழில் சேவைப் பொறியாளர்) பல்லவன் டிரான்ஸ்போர்ட் திருவொற்றியூர் டிப்போவில் ஒரு இருநூற்று மூன்று இன்ச் வீல் பேஸ் வண்டி - டியுவல் ப்ரேக் லைன் வண்டி இருக்கின்றது என்றும், அதில் காற்று உருளைகள் எங்கே அமைக்கப்பட்டிருக்கின்றது என்றும் பார்க்கலாம் என்று கூறினார். அதிலிருந்து இருபத்தேழு இஞ்சு கூட்டல் கழித்தல் விவகாரம் செய்துகொள்ளலாம் என்று எங்களுக்கு ஒரு ஐடியா வந்தது.
                
உடனே நானும் என் உதவியாளரும் ஒரு இன்ச் டேப் எடுத்துக் கொண்டு, திருவொற்றியூர் பல்லவன் டிப்போவிற்கு விரைந்தோம். அது ஒரு ஞாயிற்றுக் கிழமை. (எங்களுக்குத் திங்கக் கிழமைகள்தான்  வாராந்திர விடுமுறை) திருவொற்றியூர் பணிமனையில் அன்று அதிக ஆட்கள் இல்லை. ஒரு ஜூனியர் எஞ்சினியர் மட்டும் டிப்போ பணிகள் மேற்பார்வை பார்த்துக்கொண்டு இருந்தார். 
                  

அவரிடம் நாங்கள் வந்த விவரம் கூறியதும், ரொம்ப ரொம்ப ரொம்ப தயங்கினார். "சார் டிப்போ மேனேஜர்தான் வண்டிகளைப் பார்க்க அனுமதி வழங்கலாம். என் அளவில் நான் ஒன்றும் செய்யமுடியாது" என்றார். 
              
"நாங்க ஒன்றுமே செய்யமாட்டோம். சும்மா பார்த்து, சில அளவுகளை, நாங்கள் கொண்டுவந்திருக்கும் பேப்பரில் எழுதிக்கொண்டு செல்வோம். அவ்வளவுதான்" என்று அவரிடம் கூறினேன். 
               
"இல்லை சார். நாங்க வண்டியில் உங்களிடமிருந்து வாங்கிய பிறகு சில மாற்றங்கள் செய்திருப்போம். அவற்றை நீங்கள் பார்த்தால், வண்டியில் சர்விஸ் கிளைம் செய்வதில் பிரச்னைகள் தோன்றலாம். தயவுசெய்து என்னை வம்பில் மாட்டிவிடாதீர்கள்! இன்று போய்விட்டு, அப்புறம்  மேனேஜர் இருக்கும்பொழுது வாருங்கள்."
              
என்ன சொன்னாலும் மசியவில்லை அவர். திரும்பத் திரும்ப கீறல் விழுந்த ரெக்கார்ட் போல, அதே பல்லவி.
             
அது அலைபேசி, வலைபேசி என்ற சமாச்சாரங்கள் தோன்றியிராத காலம். திடீர் என்று ஒரு மின்னல் வெட்டு ஐடியா வந்தது. "சார் உங்க மேனேஜர் வீட்டுத் தொலைபேசி எண் கொடுங்கள். நான் அவரிடம் பேசி அனுமதி வாங்குகின்றேன்" என்றேன்.  
             
டிப்போ மேனேஜர் வீட்டு தொலைபேசி என்னை ஒரு தாளில் எழுதிக் கொடுத்தார். 
            
ஜே இ யின் மேஜையில் இருந்த தொலைபேசியை எடுத்து, அவர் கொடுத்த எண்ணைப் பார்த்தபடி, மிகவும் ஜாக்கிரதையாக ஓர் எண்ணை மட்டும் மாற்றி (அதாவது இரண்டு மூன்று என்று வந்த இடத்தில், மூன்று இரண்டு என்று மாற்றி) டயல் செய்தேன். 
             
மறுபக்கம் எடுத்தவர், நான் பேச ஆரம்பித்தவுடனேயே 'சாரி ராங் நம்பர்' என்று கூறி வைத்துவிட்டார். ஆனால் நான் அந்தப்பக்கம் டிப்போ மேனேஜரிடம் பேசுவது போல பொறுமையாக நான் யார், எங்கிருந்து வருகிறேன், வண்டியில் எந்த விஷயங்களை அளவு எடுத்துக் கொள்ளப்போகின்றேன் என்பதை விளக்கினேன். 
               
"ஆமாம் சார், ஆமாம் சார். அது மட்டும்தான்." 
         
"இல்லை சார் சேச்சே, அதேதான் உங்கள் ஜே இ யும் சொன்னார். அதுபற்றி எல்லாம் எனக்கு அக்கறை இல்லை. அப்படி ஏதேனும் மாற்றங்கள் என் கண்களில் பட்டால் நான் கண்களை மூடிக் கொள்கின்றேன். எனக்கு வேண்டியதெல்லாம் ஏர் சிலிண்டர் லொகேஷன். அவ்வளவுதான்." 
             
"இதோ இங்கேதான் இருக்கிறார் ஜே இ - பேசறீங்களா? - ஓ கே நானே சொல்லிடறேன் சார். தாங் யு." 
            
போனை வைத்துவிட்டேன். 
              
ஜே இ க்கு பரம சந்தோஷம். அவர் கிட்டே சொல்லிட்டீங்க இல்லே. அது போதும். இப்போ நீங்க அளவுகள் எடுத்துக்குங்க. வண்டியை பிட்டில் நிறுத்தச் சொல்கின்றேன்.
          
எங்களுக்கும் சந்தோஷம். அளவுகள் எல்லாம் எடுத்து, குறித்துக்கொண்டு கிளம்பினோம். 
   
அப்புறம் அந்த ஜே இ யும், டிப்போ மேனேஜரும் இந்த விவகாரம் குறித்து ஏதேனும் பேசியிருப்பார்களா என்ற சந்தேகம் எனக்கு இன்றும் இருக்கின்றது! 
                     

1.7.14

தாராசுரம்

        
(குறிப்பு : படங்களின் மீது க்ளிக் செய்தால் படங்களைப் பெரிதாகப் பார்க்கலாம்!)
                                                          

தஞ்சையிலிருந்து திருவிசை நல்லூர் சென்றுவிட்டு தாராசுரம் வந்தோம். தாராசுரம் பற்றிய சில குறிப்புகளை இங்கு பகிர்கிறேன். யாரும் அறியாத தகவல்கள் இல்லைதான்.



இரண்டாம் குலோத்துங்கனின் மகன் இரண்டாம் ராஜராஜ சோழனால் 12 ஆம் நூற்றாண்டில் கட்டப் பட்ட கோவில். சிற்பக்கலையின் உச்சம் என்று சொல்லலாம்.  இந்த மன்னன் காலத்தில் கப்பம் கட்ட மறுத்த சேர, பாண்டியர்களை இரண்டாம் ராஜராஜ சோழனின் தளபதி நம்பிசென்று அடக்கிய வரலாறைப் படிக்கும்போது இவர் பற்றி சாண்டில்யன் ஏதாவது நாவல் எழுதி இருப்பாரோ என்ற எண்ணம் ஏற்பட்டது!





//"சுழியிட்ட காவிரிக்குச் சோணாடு வாழ வழியிட்ட வாள் காண வாரீர்"//

காவிரிப் பிரச்சனை ஆரம்பமாகிய காலம் இவனது காலமாக தான் இருக்க வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள வரிகளின் மூலம் நாம் காவிரிப் பிரச்சனைப் பற்றித் தெளிவாக தெரிந்துக் கொள்ளலாம். மேற்கு மழைத் தொடரில் ஆரம்பிக்கும் காவிரி நதிதனை (அடிக் காவிரி) சோழ நாடு செழிக்க விடாமல் இருக்கும் பொருட்டு அடைத்து விடுகின்றனர். 




இதனை அடுத்து சோழன் படை எடுத்து சென்று பகைமை வென்று காவிரி தனை சோழ நாட்டின் கண் திருப்பியவன் என்று பாடப் படுகின்றான். ஆனால் இவன் எந்த மன்னன் மீது படை எடுத்து சென்றான் என்று குறிப்பிடப்பட வில்லை. 




முதலாம் குலோத்துங்கனின் ஆட்சியின் இறுதியிலிருந்து சோழப்பேரரசுக்கு தீமை நிறைந்த காலம் தொடர்ச்சியாக ஏற்பட்டது. ஹொய்சாளர், மேலைச் சாளுக்கியர் ஆகியோரின் வெற்றிகளால் அரசின் நிலப்பரப்பு மிகவும் குறுகியது. பேரரசுக்குள் ஏற்பட்ட மற்றொரு முக்கியமான மாறுதல், ஆங்காங்குள்ள குறுநில மன்னர்கள் அதிகாரத்திலும் செல்வாக்கிலும் விரிவடைந்து தலைதூக்கியது.




இதன் காரணங்களால், முதலாம் இராஜராஜனாலும் அவனுடைய பின்னோர்களாலும் பாடுபட்டு, திட்டமிட்டு, உறுதியுடன் அமைக்கப்பட்ட 'மைய அரசு' என்ற நிர்வாக கட்டுகோப்பு இருந்த இடம் தெரியாமல் சிதைந்துவிட்டது (விக்கியிலிருந்து அப்படியே)



இந்தக் காலகட்டத்தில்தான் இந்தக் கோவில் உட்பட்ட கலைச் செல்வங்களுக்கு அழிவு ஏற்பட்டிருக்க வேண்டும். இயற்கைப் பேரிடர்களாலும் இந்தக் கோவில்கள் பாதிக்கப் பட்டிருக்கலாம். 





தஞ்சைப் பெரிய கோவிலும், கங்கை கொண்ட சோழபுரம் கோவிலும் (10 ஆம் நூற்றாண்டு) இந்தக் கோவிலும் நிறைய ஒற்றுமைகளுடன் காணப்படுகின்றன.







1987 இல் தஞ்சைப் பெருவுடையார் கோவிலும், 2004 மற்ற இரு கோவில்களும் யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரியச் சின்னங்களாக அறிவிக்கப் பட்டுள்ளன.





சோழ மன்னர்களில் 2ம் ராஜராஜனால் கட்டப்பட்ட அழகிய கலைக்கூடம் இக்கோயில். இக்கோயிலைச் சுற்றிலும் ஏராளமான கல்வெட்டுக்கள் உள்ளன. தூண்களில் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்களும், சுவர்களில் அமைக்கப்பட்டுள்ள வடிவங்களும், நாட்டிய முத்திரைகளை காட்டி நிற்கும் சிற்பங்களும், தேர் போன்று வடிவிலமைந்த மண்டபமும் என பல அரிய சிற்பக் கலைப் படைப்புக்களை இக்கோயில் கொண்டுள்ளது.



வல்லுனர்களால், "சிற்பிகளின் கனவு" என்று கருதப்படும் இந்த தலம் முழுவதும் மிகவும் நுணுக்கமான சிறிய மற்றும் பெரிய சிற்பங்களால் நிறைந்துள்ளது. வழக்கமான சைவத்தலங்களின் அமைப்பிலிருந்து சற்றே வேறுபட்டுள்ளது. இறைவிக்கென்று தனியே ஒரு கோயில் வலதுபுறம் அமைந்துள்ளது. 





இது வழக்கமான தலங்களைபோல முதலில் அமையப்பெற்று பின் கால மாற்றத்தில் சுற்றுச்சுவர் மறைந்து தனித்தனி சன்னதிகளாக அமையப்பெற்றிருக்கலாம் என்று ஒரு கூற்று இருந்தாலும், ஆயிரம் வருடங்களுக்கு முன்பே பெண் தெய்வத்துக்கும் சமமாய் ஒரு தனி கோயில் அமைத்திருப்பது இதன் சிறப்பாகும். கோபுரம் ஐந்து நிலை மாடங்களுடன் 85 அடி உயரம் உள்ளது.




கங்கை கொண்ட சோழபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த இரண்டாம் இராஜராஜன் அங்கிருந்து பெயர்ந்து தாராசுரத்திற்கு வந்து கட்டிய கோயிலே தாராசுரம் ஆகும். மூவருலாவில் சிறப்பிக்கப்படுகிறான். மூவருலா எனப்படுவது விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராஜராஜசோழன் ஆகிய மூவருடைய புகழைப் பாடுவதாக அமைந்த பாடல். இதனை எழுதியவர் ஒட்டக்கூத்தர். கட்டிடக் கலை, சிற்பக்கலை, கலை நுணுக்கம் ஆகிய அனைத்து சிறப்புக்களும் கொண்ட ஒரு கோயில் தாராசுரம். முதன் முதலில் இதன் இறைவனுக்கு ராஜராஜேஸ்வரமுடையார் என்ற பெயர் வழங்கப்பட்டது. பின்னர் ஐராவதேஸ்வரர் என பெயர் கொண்டது. தக்கயாகப்பரணி இந்தக் கோயிலின் மண்டபத்தில் தான் அரங்கேற்றம் கண்டது.63 நாயன்மார்களின் சிற்பங்களும் இந்தக் கோயிலில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கோயிலில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கல்வெட்டில் இராஜராஜசோழனுக்கும் அவரது 5 மனைவியருக்கும் பள்ளிப்படை அமையப்பெற்றது என்ற செய்தி முதன் முதலாக அறியப்பட்டது (விக்கி)








கோவில் தொல்லியல் துறையால் சிறப்பாக பராமரிக்கப் படுகிறது.
கிளம்ப மனமேயில்லாமல் அடுத்த இடம் நோக்கிப் புறப்பட்டோம்.

28.6.14

பாஸிட்டிவ் செய்திகள் கடந்த வாரம்




1) கழுத்துக்குக் கீழே செயல்பாடற்ற நிலையில் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே இவ்வளவையும் சாதித்திருக்கிறார் ராமகிருஷ்ணன்.
 
 
2) வி.கார்ட் ஸ்டெபிலைசர் என்றால், தெரியாதவர்கள் இருக்க முடியாது. இந்நிறுவனத் தலைவர் கொச்சவுசேப் சிற்றிலப்பள்ளி என்பவரின் மனைவி ஷீலா. இவர், 'வி-ஸ்டார்' என்ற பெயரில், ரெடிமேட் ஆடைகளை தயாரித்து, விற்பனை செய்து வருகிறார். 
கணவரை போலவே, தான் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பெரிய பங்கை, ஏழைகளுக்கும், நோயாளிகளுக்கும், செலவு செய்து வருகிறார். கேரளாவில், 'கிட்னி பவுண்டேஷன்' என்ற அமைப்பு, மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது சிறுநீரக கோளாறினால் அவதிப்படுவோருக்கு, இலவசமாக சிறுநீரகங்களை கொடுத்து, சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த அமைப்பின் தலைமை பொறுப்பில் இருக்கும் கொச்சவுசேப், தன்னுடைய கிட்னி ஒன்றை, ஏழை ஒருவருக்கு தானம் அளித்து இருக்கிறார்.


3) ஜெயக்குமார் ஜெயித்த கதை (நன்றி சதீஷ்குமார் பிரணதார்த்திஹரன்)




 

4) பணம், காசு என அலையும் இந்த காலத்திலும் பணத்தை ஒரு பொருட் டாகப் பார்க்காமல் கொடுத்ததைப் பெற்றுக்கொண்டு மனிதநேயத்துடன் மருத்துவம் பார்த்து வருகிறார் மயிலாடுதுறையைச் சேர்ந்த டாக்டர் வி. ராமமூர்த்தி. 



 

5) ‘‘ஓடிக்கொண்டே இருந்திருந்தால் என்னை மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்திருப்பேன்” என்கிறார் வெங்கடபூபதி.


(எங்கள் ப்ளாக் பிறந்து இன்றோடு ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன. எனவே ஐந்து பாசிடிவ் செய்திகளோடு நிறுத்திவிட்டோம்!)