நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
தாராசுரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தாராசுரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
20.4.25
13.4.25
6.4.25
30.3.25
23.3.25
16.3.25
9.3.25
2.3.25
23.2.25
16.2.25
21.6.18
அனுஷ்கா என்னைவிட அழகா என்ன?
என் பாஸ் தன் சித்தியுடன் பேசிக்கொண்டிருந்தபோது மகா துக்கத்துடன் ஒரு விஷயம் சொன்னார். அவர் குரலில் ஆற்றாமை வெள்ளமாய் வெளிப்பட்டது.
1.7.14
தாராசுரம்
(குறிப்பு : படங்களின் மீது க்ளிக் செய்தால் படங்களைப் பெரிதாகப் பார்க்கலாம்!)
தஞ்சையிலிருந்து திருவிசை நல்லூர் சென்றுவிட்டு தாராசுரம் வந்தோம். தாராசுரம் பற்றிய சில குறிப்புகளை இங்கு பகிர்கிறேன். யாரும் அறியாத தகவல்கள் இல்லைதான்.
இரண்டாம் குலோத்துங்கனின் மகன் இரண்டாம் ராஜராஜ சோழனால் 12 ஆம் நூற்றாண்டில் கட்டப் பட்ட கோவில். சிற்பக்கலையின் உச்சம் என்று சொல்லலாம். இந்த மன்னன் காலத்தில் கப்பம் கட்ட மறுத்த சேர, பாண்டியர்களை இரண்டாம் ராஜராஜ சோழனின் தளபதி நம்பிசென்று அடக்கிய வரலாறைப் படிக்கும்போது இவர் பற்றி சாண்டில்யன் ஏதாவது நாவல் எழுதி இருப்பாரோ என்ற எண்ணம் ஏற்பட்டது!
//"சுழியிட்ட காவிரிக்குச் சோணாடு வாழ வழியிட்ட வாள் காண வாரீர்"//
காவிரிப் பிரச்சனை ஆரம்பமாகிய காலம் இவனது காலமாக தான் இருக்க வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள வரிகளின் மூலம் நாம் காவிரிப் பிரச்சனைப் பற்றித் தெளிவாக தெரிந்துக் கொள்ளலாம். மேற்கு மழைத் தொடரில் ஆரம்பிக்கும் காவிரி நதிதனை (அடிக் காவிரி) சோழ நாடு செழிக்க விடாமல் இருக்கும் பொருட்டு அடைத்து விடுகின்றனர்.
இதனை அடுத்து சோழன் படை எடுத்து சென்று பகைமை வென்று காவிரி தனை சோழ நாட்டின் கண் திருப்பியவன் என்று பாடப் படுகின்றான். ஆனால் இவன் எந்த மன்னன் மீது படை எடுத்து சென்றான் என்று குறிப்பிடப்பட வில்லை.
முதலாம் குலோத்துங்கனின் ஆட்சியின் இறுதியிலிருந்து சோழப்பேரரசுக்கு தீமை நிறைந்த காலம் தொடர்ச்சியாக ஏற்பட்டது. ஹொய்சாளர், மேலைச் சாளுக்கியர் ஆகியோரின் வெற்றிகளால் அரசின் நிலப்பரப்பு மிகவும் குறுகியது. பேரரசுக்குள் ஏற்பட்ட மற்றொரு முக்கியமான மாறுதல், ஆங்காங்குள்ள குறுநில மன்னர்கள் அதிகாரத்திலும் செல்வாக்கிலும் விரிவடைந்து தலைதூக்கியது.
இதன் காரணங்களால், முதலாம் இராஜராஜனாலும் அவனுடைய பின்னோர்களாலும் பாடுபட்டு, திட்டமிட்டு, உறுதியுடன் அமைக்கப்பட்ட 'மைய அரசு' என்ற நிர்வாக கட்டுகோப்பு இருந்த இடம் தெரியாமல் சிதைந்துவிட்டது (விக்கியிலிருந்து அப்படியே)
இந்தக் காலகட்டத்தில்தான் இந்தக் கோவில் உட்பட்ட கலைச் செல்வங்களுக்கு அழிவு ஏற்பட்டிருக்க வேண்டும். இயற்கைப் பேரிடர்களாலும் இந்தக் கோவில்கள் பாதிக்கப் பட்டிருக்கலாம்.
தஞ்சைப் பெரிய கோவிலும், கங்கை கொண்ட சோழபுரம் கோவிலும் (10 ஆம் நூற்றாண்டு) இந்தக் கோவிலும் நிறைய ஒற்றுமைகளுடன் காணப்படுகின்றன.
1987 இல் தஞ்சைப் பெருவுடையார் கோவிலும், 2004 மற்ற இரு கோவில்களும் யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரியச் சின்னங்களாக அறிவிக்கப் பட்டுள்ளன.
சோழ மன்னர்களில் 2ம் ராஜராஜனால் கட்டப்பட்ட அழகிய கலைக்கூடம் இக்கோயில். இக்கோயிலைச் சுற்றிலும் ஏராளமான கல்வெட்டுக்கள் உள்ளன. தூண்களில் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்களும், சுவர்களில் அமைக்கப்பட்டுள்ள வடிவங்களும், நாட்டிய முத்திரைகளை காட்டி நிற்கும் சிற்பங்களும், தேர் போன்று வடிவிலமைந்த மண்டபமும் என பல அரிய சிற்பக் கலைப் படைப்புக்களை இக்கோயில் கொண்டுள்ளது.
வல்லுனர்களால், "சிற்பிகளின் கனவு" என்று கருதப்படும் இந்த தலம் முழுவதும் மிகவும் நுணுக்கமான சிறிய மற்றும் பெரிய சிற்பங்களால் நிறைந்துள்ளது. வழக்கமான சைவத்தலங்களின் அமைப்பிலிருந்து சற்றே வேறுபட்டுள்ளது. இறைவிக்கென்று தனியே ஒரு கோயில் வலதுபுறம் அமைந்துள்ளது.
இது வழக்கமான தலங்களைபோல முதலில் அமையப்பெற்று பின் கால மாற்றத்தில் சுற்றுச்சுவர் மறைந்து தனித்தனி சன்னதிகளாக அமையப்பெற்றிருக்கலாம் என்று ஒரு கூற்று இருந்தாலும், ஆயிரம் வருடங்களுக்கு முன்பே பெண் தெய்வத்துக்கும் சமமாய் ஒரு தனி கோயில் அமைத்திருப்பது இதன் சிறப்பாகும். கோபுரம் ஐந்து நிலை மாடங்களுடன் 85 அடி உயரம் உள்ளது.
கங்கை கொண்ட சோழபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த இரண்டாம் இராஜராஜன் அங்கிருந்து பெயர்ந்து தாராசுரத்திற்கு வந்து கட்டிய கோயிலே தாராசுரம் ஆகும். மூவருலாவில் சிறப்பிக்கப்படுகிறான். மூவருலா எனப்படுவது விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராஜராஜசோழன் ஆகிய மூவருடைய புகழைப் பாடுவதாக அமைந்த பாடல். இதனை எழுதியவர் ஒட்டக்கூத்தர். கட்டிடக் கலை, சிற்பக்கலை, கலை நுணுக்கம் ஆகிய அனைத்து சிறப்புக்களும் கொண்ட ஒரு கோயில் தாராசுரம். முதன் முதலில் இதன் இறைவனுக்கு ராஜராஜேஸ்வரமுடையார் என்ற பெயர் வழங்கப்பட்டது. பின்னர் ஐராவதேஸ்வரர் என பெயர் கொண்டது. தக்கயாகப்பரணி இந்தக் கோயிலின் மண்டபத்தில் தான் அரங்கேற்றம் கண்டது.63 நாயன்மார்களின் சிற்பங்களும் இந்தக் கோயிலில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கோயிலில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கல்வெட்டில் இராஜராஜசோழனுக்கும் அவரது 5 மனைவியருக்கும் பள்ளிப்படை அமையப்பெற்றது என்ற செய்தி முதன் முதலாக அறியப்பட்டது (விக்கி)
கோவில் தொல்லியல் துறையால் சிறப்பாக பராமரிக்கப் படுகிறது. கிளம்ப மனமேயில்லாமல் அடுத்த இடம் நோக்கிப் புறப்பட்டோம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)