பார்த்தேன், சிரித்தேன்,
இதோ வருகிறது முழுப் பாடல்.
கேட்டு இரசியுங்கள்.
மேலும் ஒரு கேள்வி கேட்கிறோம்.
இது தேன், தேன் என்று வருகின்ற பாடல்.
டேன், டேன் என்று வருகின்ற பாடல் எது? கருத்துரையுங்கள்.
நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
16.12.10
15.12.10
பாட்டுப் புதிர்.
இந்த இசைத் துணுக்கைக் கேளுங்கள்.
கேள்விகள்:
1) பாடலின் ஆரம்ப வரி என்ன?
2) பாடலைப் பாடியவர்(கள்) யார்?
3) என்ன படம்?
4) யார் இசையமைப்பு?
5) யார் எழுதிய பாடல்?
ஒவ்வொரு பதிலுக்கும், பத்து மதிப்பெண்கள்.
பாடல் என்ன இராகம்?. இதை சரியாகச் சொல்பவர்களுக்கு ஐம்பது மதிப்பெண்கள்.
நூற்றுக்கு நூறு யார் வாங்கப் போகிறார்கள் பார்க்கலாம்!
கேள்விகள்:
1) பாடலின் ஆரம்ப வரி என்ன?
2) பாடலைப் பாடியவர்(கள்) யார்?
3) என்ன படம்?
4) யார் இசையமைப்பு?
5) யார் எழுதிய பாடல்?
ஒவ்வொரு பதிலுக்கும், பத்து மதிப்பெண்கள்.
பாடல் என்ன இராகம்?. இதை சரியாகச் சொல்பவர்களுக்கு ஐம்பது மதிப்பெண்கள்.
நூற்றுக்கு நூறு யார் வாங்கப் போகிறார்கள் பார்க்கலாம்!
14.12.10
அலமேலு
"என்னங்க...வேலைக்காரிக்கு யார் கிட்டயாவது சொன்னீங்களா?" கடைக்குக் கிளம்பிக் கொண்டிருந்த செல்வராசுவிடம் மனைவி கேட்டாள்.
"சொல்லியிருக்கேன் சுசி...எங்க...இதோ அதோங்கறாங்க..."
புது வீடு மாறி பதினைந்து நாளாகிறது. முன்பு இருந்த வீட்டில் வேலைக்காரி பிடித்ததே பெரிய கதை. வீடு மாற்றும் கவலையை விட அப்போதிலிருந்தே இதுதான் பெரிய கவலையாக இருந்தது.
"தொலைவுங்க...கூட அது நம்ம ஏரியா இல்லீங்க...அங்கத்தி ஆளுங்க கோச்சுக்கும்..."
அப்படியானால் ஆட்டோ ஸ்டேண்ட் போல நிறைய இருப்பார்கள் போல, உடனே கிடைத்து விடுவார்கள் என்று தேற்றிக் கொண்டார்கள். ம்..ஹூம்.
கடைத் தெருவில் பழைய வேலைக் காரியைப் பார்த்தார் செல்வராசு.
"நல்லாருக்கீங்களாய்யா .. அம்மா சொகமா? ஆளு கிடைச்சுதாங்கையா?"
"எங்கேம்மா...இன்னும் இல்லை ...தெரிஞ்சவங்க யாரும் இருந்தா சொல்லேன்...நீயே வரலாம். வர மாட்டேங்கறே ..."
"அடப் பாவமே...வினும்மா கூட ரொம்பக் க்கஷ்டப் படுமே...எந்தத் தெரு சொன்னீங்க"
வினும்மா என்று அவள் குறிப்பிட்டது இவர் மகள் விநோதினியை.
தெரு பெயர் சொன்னார்.
"அட..அங்கேயா...தெரு முனைல ஒரு குடிசை பார்த்திருக்கீங்களா.."
"ஆமாம் தெரியும் தெரியும்...அலமேலு அம்மாதானே..கேட்டேனே பார்க்கறேன்னாங்களே தவிர வரலை.."
"பார்த்துட்டீங்களா...பரவாயில்லை சாமி...மறுபடி பார்த்து என் பேர் சொல்லுங்க...அவங்க எனக்கு மாமியார் முறைதான்..அவிங்க வர மாட்டாங்கையா...அவிங்களுக்குக் கீழே பதினைந்து பேர் இருக்காங்க..அவிங்கள்ள ஒருத்திய அனுப்புவாக..."
'இது வேறயா' என்று நினைத்தபடி "சரிம்மா" என்று வீடு திரும்பினார் செல்வராசு.
காய்கறியை சுசியிடம் கொடுத்து விட்டு அவளிடம் நடந்ததைச் சொல்லி, "நீ போய்க் குடிசைல சொல்லேன்" முன்னர் அலமேலுவைப் பார்த்த போதே ஏனோ ஒரு பயம்தான் ஏற்பட்டது இவருக்கு.
"நானா...அட..நீங்கதான முன்னமே பாத்துருக்கேன்னு சொன்னீங்க...நீங்களே மறுபடி போய்ப் பாருங்க"
போனார். தயக்கத்துடன் குடிசை முன்பு நின்று குரல் கொடுத்தார்.
அள்ளிச் செருகிய கொண்டையுடன் தோன்றினாள் அலமேலு. "இன்னா..?"
சிபாரிசைச் சொன்னார்.
"அது சொல்லிச்சா...நீ முன்னமே வந்திருக்கே இல்லே...சரி, சரி பார்க்கறேன்...வூட்டுலதான இருப்பீய...?"
"ஆமாம்மா... "
"சரி போ..பன்னண்டு மணிக்கு அப்பால சரோசா வரும். அனுப்பறேன்.."
சுசியிடம் நடந்ததைச் சொன்னார்.
காத்திருந்தார்கள்.
பனிரெண்டரை மணிக்கு மேல் ஒரு மாது உள்ளே நுழைந்தாள்.
"ஆரும்மா வூட்டுல.."
"யாரது"
"அலமேலும்மா அனுப்பிச்சுது...ஆளு வேணும்னு கேட்டீங்களாமே..."
"நீங்கதான்.... நீதான் சரோஜாவா?"
"அ ஆங்... ஆமாம் வூட்ல எத்தினி பேரு?"
"அஞ்சு பேரு... நானு, இவ என் மனைவி, என் பொண்ணு, மாப்பிள்ளை அவ பையன்....சின்னப் பையன்தான்..." கடைசி வரியை ஏன் சொன்னார் என்று செல்வராசுவுக்கே ஆச்சர்யமேற்பட்டது.
"டிவி இருக்கா.."
"அதை ஏன் கேக்கறே...அதான இதோ பார்த்துகிட்டு இருக்கோமே .. எவ்வளோ கேக்கறே சம்பளம்..அதை சொல்லு" சுசி கேட்டாள்.
கேள்வியை லட்சியம் செய்யவில்லை சரோஜா.
"காலைல என்ன டிஃபன் செய்வீங்க"
செல்வராசு சுசியைப் பார்த்தார். 'என்னது இது?'
சுசிக்கு வந்த ஆளை விட மனமில்லை போலும். ஏற்கெனவே வந்து வந்து வராமல் போன ஆட்களை நினைத்துக் கொண்டாள்.
"எப்பவுமே காலைல இட்லிதான்...எப்பவாவது பொங்கல்...அதுல பாத்திரம் ரொம்ப விழாதும்மா"
"தொட்டுக்க..?"
"சட்னி, மிளகாய்ப் பொடிதான்..." சுசியும் யோசிக்காமல் 'சட்'டென சொல்லி விட்டு "ஏன் கேக்கறே" என்றாள்.
"சாம்பார்லாம் செய்ய மாட்டீங்களா.." என்றவள் இப்போதுதான் முதல் அடி எடுத்து உள்ளே வைத்தாள்.
"ஏம்மா பாத்திரம் தேய்க்கதானே வந்துருக்கே..." சுசி பொறுக்க முடியாமல் கேட்டே விட்டாள்.
உள்ளே அளவெடுத்துக் கொண்டிருந்த சரோஜா கிச்சன் மற்றும் பாத்ரூம், பாத்திரம் தேய்க்குமிடம் என்று சூபர்வைஸ் செய்தாள்.
"இங்கதான் தேய்க்கணுமா"
"ஆமாம்"
திரும்பி பாத்ரூம், கிச்சன் என்று அளவெடுத்தாள்.
சுசியும் செல்வராசுவும் சஸ்பென்சாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
"சரி நாளைலேருந்து வர்றேன்...இப்போ ஏதாவது டிஃபன் இருக்கா"
"இல்லை"
இளக்காரமாகப் பார்த்து விட்டு வெளியேறினாள் சரோஜா.
ஏனோ இருவருக்குமே ஒரு பெருமூச்சு வந்தது. இனி தினமும் அந்தப் பெருமூச்சு எப்போ விடுவோமோ என்று கவலையும் வந்தது.
அடுத்த நாள் முதல் சரோஜா வேலைக்கு வரத் தொடங்கி விட்டாள். அதிரடிதான். போய் வேலை செய்யுமிடத்தில் உட்கார்ந்து விடுவாள். திரும்பிப் பார்ப்பாள். சுசி பாத்திரக் கூடையை எடுத்துக் கொண்டு போய் சரோஜா பக்கத்தில் வைப்பாள்.
அங்கிருந்தே டிவியை ஒரு கண்ணால் பார்த்த படியே வேலை தொடங்கும். வேலையைப் பார்த்த சுசி ஆடிப் போனாள். பாத்திரத்தை எடுக்க வேண்டியது..ஒரு திருப்பு திருப்ப வேண்டியது..குழாயில் காட்ட வேண்டியது....
செல்வராசுவை 'என்னங்க இது' என்ற பார்வை பார்த்தாள் சுசி.
மெல்ல மெல்ல தைரியமாக 'மிஞ்சியிருந்தால்தான் டிஃபனோ சாப்பாடோ கொடுப்போம்' என்றும் சொல்லி விட்டாள் சுசி.
வேலைக்கு ஆள் கிடைத்து விட்டது என்று நிம்மதியாக இருக்க முடியவில்லை. ஏதோ ஒரு சங்கடம். மகள் வினு ஆஃபீசிலிருந்து திரும்பி வேலைகளில் குறை காணத் தொடங்கினாள்.
இடையில் ஓரிரு நாள் கடைத் தெருவில் வெற்றிலையை அதக்கிய படி அலமேலும்மா "என்ன சரோசா வாராளா... ஆரு வூட்டுக்கும் வராது அது..நான் சொன்னதாலே உங்க வூட்டுக்கு வருது.." என்ற போது செல்வராசுவுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.
பாதி வேலைகளை சுசியே செய்ய வேண்டி வர, நொந்து போனாள் சுசி.
"ஏங்க நிறுத்திடலாமா...வேற ஆள் பார்க்கலாங்க..."
"ஐயோ நான் மாட்டேன்...இவளை விடு...அலமேலு என்ன சொல்வாளோ..அப்புறம் அடுத்த ஆள் வேற கிடைக்கறது கஷ்டம்...முன்னமே பட்டோம் இல்லை.."
"இப்ப மட்டும் என்ன வாழுதாம்" சுசி நொடித்துக் கொண்டு உள்ளே போனாள்.
இடையில் மேல் வீட்டுக்கு வந்து கொண்டிருந்த ராதையைக் கேட்டுப் பார்த்தாள். அவள் பதிலேதும் சொல்லாமல் தாண்டிச் சென்று கொண்டே இருந்தாள்.
ஒரு கட்டத்தில் இதற்கு மேல் பொறுக்க முடியாது என்பது போல சுசி, செல்வராசுவிடமிருந்து பணம் வங்கிக் கொண்டு சரோஜாவிடம் சென்றாள்.
"இந்தா..இது வரைப் பார்த்ததற்குக் காசு... நாளை முதல் நீ வர வேண்டாம்..."
தைரியமாகச் சொல்லி விட்டு வந்து விட்டாள். சரோஜா விரோதமாக செல்வராசுவை ஒரு பார்வை பார்த்தாள். பிறகு சென்று விட்டாள்.
மாலை வெளியே ஏதோ கூச்சல் கொஞ்ச நேரமாய்க் கேட்கிறதே என்று எழுந்து வெளியே வந்தார் செல்வராசு. எதிர் வீட்டுக் காரர்கள் பக்கத்து வீட்டுக் காரர்கள் இவர்கள் வீட்டையே பார்த்துக் கொண்டிருக்க, அலமேலு தெருவில் நின்று கோபமாகக் கத்திக் கொண்டிருந்தாள்...
"என் கிட்ட வந்து ஆள் வேணும்னு கேக்கத் தோணிச்சி இல்லே...நிறுத்தறேன்னு சுளுவா அவ கிட்ட சொல்லிட்டியே...என் கிட்ட சொல்ல வேணாம்...உன் வூட்டுக்கு அனுப்பினதுக்கு அடுத்த தெருல கேட்டாங்க அவுங்க வூட்டுக்காவது அனுப்பிருப்பேன்...மருமவ சொன்னாளேன்னு எல்ப் செஞ்சதுதான் ராங்காயிடிச்சி... இனி யார் வருவா உன் வூட்டுக்கு..நானும் பாக்கறேன்..."
என்னடா இது வம்பாப் போச்சு என்று நினைத்துக் கொண்டார் செல்வராசு. அவள் அகலும் வரைக் காத்திருந்து பின்னர் கடைத்தெருவுக்குக் கிளம்பினார்.
கடைத்தெருவில் பழைய வேலைக்காரி தென்படவே அவளிடம் சொன்னார். அவளும் கோபிப்பாளோ என்று நினைத்தபோது,
"அத்த விடு சாமி...வேற ஆள் வந்தா சொல்றேன்.." என்று சொல்லிப் போனது கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது.
அக்கம்பக்க ஆட்கள் அனுதாபமாய்ப் பார்க்கிறார்களா கேலியாய்ப் பார்க்கிறார்களா என்றே தெரியவில்லை! அவர்களுக்கும் இந்த அனுபவம் இல்லாமலா இருந்திருக்கும்? அலமேலுவைதான் தவிர்க்கவும் முடியவில்லை. சந்திக்கவும் முடியவில்லை. வேறு ஆட்களும் இன்னும் கிடைத்த பாடில்லை.
பத்து நாள் கழிந்திருக்கும். கடைத் தெருவில் நின்றுகொண்டிருந்த போது சுசி ஃபோன் செய்தாள்."சீக்கிரம் வாங்களேன்...அலமேலு வீட்டைத் தூக்கிட்டாங்க.."
அசுவாரஸ்யமாய் வீட்டை நெருங்கிய போது தெரு முனையில் பெரிய வண்டி தன் ராட்சதக் கைகளால் அலமேலு குடிசையைத் தூக்கி விட்டிருக்க, அலமேலு புலம்பிக் கொண்டிருந்தாள்.
ஒருபக்கம் 'அப்பாடா இனி இவள் தொல்லை தெருவில் நடக்கும்போதெல்லாம் இருக்காது' என்று கொஞ்சம் நிம்மதியாய் இருந்தபோதும் கொஞ்சம் பாவமாகவும் இருந்தது. 'எங்கே போவாள் இவள் இனி..?'
"அட விடுங்க சார்...வேற பொறம்போக்குல மறுபடி குடிசை போட்டுடுவாங்க இவங்க..." இவர் மனதைப் படித்தவர் போல பக்கத்து வீட்டுக்காரர் பைக்கை வெளியில் கொண்டு வந்து ஸ்டார்ட் செய்து ஏறிப் போனார்.
'உங்களுக்குத் தெரிஞ்சி யாராவது வீட்டு வேலை செய்ய ஆள் இருக்காங்களா...?'
(படங்கள் : கூகிளில் சுட்டவை. நன்றி கூகிளாண்டவர்)
(படங்கள் : கூகிளில் சுட்டவை. நன்றி கூகிளாண்டவர்)
12.12.10
11.12.10
பாட்டுக்கொரு புலவன்
டிசம்பர் 11. பாரதி பிறந்த நாள் (1882)
11-12-2010 இன்று சில பகிர்வுகள்.
11-12-2010 இன்று சில பகிர்வுகள்.
வீட்டில் இருந்த கொஞ்ச அரிசியை பொறுக்கி சமையலுக்கு தயார் செய்து வைத்து விட்டு செல்லம்மாள் அந்தப் பக்கம் போனதும் அதை எடுத்து சிட்டுக் குருவிகளுக்கு போட்டு விட்டு சந்தோஷப் பட்டுக் கொண்டிருந்த பாரதியைப் பார்த்து கோபமும் வேதனையும் அடைந்த செல்லம்மாள் அந்தப் பக்கம் போனதும் சகுந்தலாவுக்குப் பாடிக் காட்டிப் பிறந்த பாடல் "விட்டு விடுதலையாகி நிற்பாய் அந்த சிட்டுக் குருவியைப் போலே..."
அவர் புதுவையில் இருந்தபோது சென்னையில் இருந்த ஒரு சங்கம் வைத்த கவிதைப் போட்டிக்கு எழுதி அனுப்பிமுதல் பரிசு கிடைக்கும் என்று எல்லோரும் எதிர்பார்த்திருக்க, என்ன காரணத்தினாலோ முதலிரண்டு பரிசுகள் வேறு இரண்டு சாதாரணப் பாடல்களுக்குக் கொடுக்கப் பட்டு விட, மூன்றாவது பரிசு பெற்ற பாடல் "செந்தமிழ் நாடென்னும் போதினிலே..." முதலிரண்டு பரிசுகள் பெற்ற பாடல்கள்? யாருக்குத் தெரியும்? மூன்றாம் பரிசு பெற்ற இந்தப் பாடல் எவ்வளவு பிரபலம் என்று தெரிகிறதுதானே...
அவர் நண்பர் மண்டையம் ஸ்ரீ ஸ்ரீ யின் இளைய புதல்வன் சிறிய வயதிலேயே நோயுற்று இறந்து விட, காரியங்கள் முடிந்து வீடு வந்து பாரதி வயிற்றில் தாங்க முடியாத உபாதையுடன் மனம் தாங்காமல் அவர் பாடிய பாடல் "நல்லதோர் வீணை செய்தே...அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ..."
புதுவையில் இருந்து அலுத்து விட்ட பாரதி மாறுவேடம் பூண்டு செல்லம்மாள் பதற, உறவினர்களும் நண்பர்களும்ஆறுதல் சொன்னாலும் பதற்றத்துடன் காத்திருக்க, வெளியூர்ப் பிரயாணம் சென்று வந்த பாரதி, பயணத்தின் போது ரெயிலில் ஒரு பிச்சைக் காரப் பெண் பாடிய பாடலில் கவரப் பட்டு அந்த மெட்டில் எழுதிய பாடல் "பாருக்குள்ளே நல்ல நாடு..." உணர்ச்சி வந்தால் சத்தமாக வாய் விட்டுப் பாடி விடும் பாரதி மாறு வேடத்தில் சுற்றி வந்த போது வாயை அடக்க ரொம்பக் கஷ்டப் பட்டாராம்.
1916 ஆம் வருடம் கார்த்திகை மாதம் அடித்த புயலில் மாட்டிய ஏழைகளுக்கு உதவப் போனார்கள் பாரதியாரும் நண்பர்களும். ஜப்பான் நாட்டினர் ஒரு சாதாரணக் குடும்பம் வாங்க எவ்வளவு நிலம் வேண்டும் என்று ஆராய்ந்தார்களாம். அப்போது பாரதியாருக்குத் தோன்றிய பாடல்தான் "காணி நிலம் வேண்டும்..."
"தூண்டிற் புழுவினைப் போல் - வெளியே
சுடர் விளக்கினைப் போல்
நீண்ட பொழுதாக - எனது
நெஞ்சம் துடிக்குதடி.."
கண்ணன் என் காதலன் என்ற தலைப்பில் வரும் காதல் பாடல்களில் முதலில் தோன்றிய வரிகள் இவைகள்தாம். ஒரு நாள் இரவு மனம் சரியில்லாமல் வெளியில் சென்ற பாரதி திரும்பி வந்து ஒரு காகிதத்தில் இந்த வரிகளை எழுதி விட்டு, பின்னர் மற்ற பாடல்கள் எழுதினாராம்.
புதுவையில் தங்குமிடம் கிடைக்காமல் கஷ்டப் பட்ட போது மனம் கலங்கி நின்ற பாரதியார் முன் திடீரென தோன்றிய குவளைக் கிருஷ்ணமாச்சார்யார் அவரை நல்லதொரு வீட்டுக்குக் குடிபுகச் செய்ய, அதைக் குறித்து தோன்றியதுதான் "எங்கிருந்தோ வந்தான்..." பாடல்.
பிரிட்டிஷ் அரசாங்கக் காவலர்கள் பாரதியாரை புதுவையிலிருந்து வெளியே இழுத்துக் கைது செய்ய பற்பல முயற்சி செய்தார்கள். அதில் ஒன்று அவர் நண்பரை விட்டே அவரை ஏதோ சொல்லி ஊர் எல்லைக்கு வெளியே அழைத்துவரச் செய்தது. கடைசி வினாடியில் அந்தச் சதியிலிருந்து அதிருஷ்டவசமாக மீண்டார் பாரதியார். நண்பனின் சதியும் புலனாயிற்று. அந்த நண்பர் மறுபடியும் பாரதியைப் பார்க்க வந்தபோது உறவினர்களும் நண்பர்களும் அவர்மீது கோபப் பட, அவர்களைச் சமாதானப் படுத்திய பாரதி அப்போது பாடிய பாடல்தான் "பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே..."
பஜனைக் காலங்களில் பாகவதர் தலைமையில் உஞ்சவிருத்தி செய்து கொண்டு வரும் கோஷ்டியினர் பாடும் பாடல்கள் ஒரு கட்டத்தில் சுரத்து குறைந்து கொண்டே போக, உடன் சென்ற பாரதியார் அப்போது மெட்டமைத்ததுதான் "பார்க்கும் மரங்களெல்லாம் - நின்றன் பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா..." பாடல். நாம் பிரபலமாக அறிந்த "காக்கைச் சிறகினிலே நந்தலாலா..." பாடல்.
இன்றைய சூழலில் பாரதி இருந்தால் என்ன பாடுவார்? மனம் நொந்து போவாரா அல்லது கவியரங்கங்களில் கலந்துகொண்டு 'முந்தைய தமிழே, மூத்த தமிழே' என்று அரசியல்வாதிகளை அவரும் புகழ்ந்து விடுவாரா?
10.12.10
ஒண்ணா ரெண்டா தொடு!
நாம பதிவு போடும்போது ரெண்டு பிரச்னை...
சரியா பிரசுரம் ஆச்சா இல்லையான்னு...
பிரசுரம் ஆகல்லேன்னா பிரச்னை இல்லை,
பிரசுரம் ஆகியிருந்தா ரெண்டு பிரச்னை.
யாராவது படிச்சாங்களா இல்லையான்னு...
படிக்கலைன்னா பி ரச்னை இல்லை,
படிக்கலைன்னா பி
படிச்சிருந்தா ரெண்டு பிரச்னை.
படிச்சது புரிஞ்சிருக்குமா இல்லையான்னு...
புரியலன்னா பிரச் னை இல்லை.
புரியலன்னா பிரச்
புரிஞ்சிருந்தா ரெண்டு பிரச்னை.
படிச்சதும் கமெண்ட் எழுதுவாங்களா மாட்டங்களான்னு..
எழுதலைன்னா பி ரச்னை இல்லை,
எழுதலைன்னா பி
எழுதிட்டாங்கன்னா ரெண்டு பிரச்னை.
திட்டி எழுதறாங்களா பாராட்டி எழுதறாங்களான்னு.
திட்டி எழுதினா பிரச்னை இல்லை.
திட்டி எழுதினா பிரச்னை இல்லை.
பாராட்டி எழுதினா ரெண்டு பிரச்னை.
இங்கேயே நன்றி சொல்றதா, அவங்க பிளாக்குக்கு போய கமெண்ட் போடறதான்னு...
இங்கேயே சொல்லிட்டா பிரச்னை இல்லை..
இங்கேயே சொல்லிட்டா பிரச்னை இல்லை..
அவங்க ப்ளாக் போனா ரெண்டு பிரச்னை.
பழைய பதிவுக்கு பின்னூட்டம் போடணுமா, புது பதிவு போட்டிருப்பாங்களான்னு .
பழைய பதிவுன்னா பிரச்னை இல்லை,
பழைய பதிவுன்னா பிரச்னை இல்லை,
புது பதிவுன்னா ரெண்டு பிரச்னை...
கமெண்ட் படிச்சுட்டு விட்டுடுவாங்களா, திரும்ப நம்ம பதிவுக்கு வருவாங்களான்னு...
விட்டுட்டா பிரச்னை இல்லை,
விட்டுட்டா பிரச்னை இல்லை,
திரும்ப நம்ம பதிவுக்கு வந்தா ரெண்டு பிரச்னை.
ரசிப்பாங்களா மாட்டாங்களான்னு ..
ரசிக்கலைன்னா பிரச்னை இல்லை.
ரசிப்பாங்களா மாட்டாங்களான்னு ..
ரசிக்கலைன்னா பிரச்னை இல்லை.
நாம பதிவு போடும்போது ரெண்டு பிரச்னை.......
மறுபடியும் ஆரம்பத்திலிருந்து படிக்கவும்....
மறுபடியும் ஆரம்பத்திலிருந்து படிக்கவும்....
7.12.10
* அ தீ ம க
அமுதசுரபி தீபாவளிமலர் எங்கள் டிசம்பர் ஒன்றாம் தேதி பதிவை மறந்திருக்கமாட்டீர்கள்.
அமுதசுரபி - தீபாவளி மலருக்கு அடுத்த இதழில், திரு அறந்தை மணியன் அவர்கள் எழுதியுள்ள ('ஆசிரியருக்குக் கடிதங்கள்' பகுதி) கடிதத்திலிருந்து ....
கே பி சுந்தராம்பாள் நடித்த 'பக்த நந்தனார்' படத்தின் பிரதிகளும், 'நெகட்டிவ்'வும் தீவிபத்தில் எரிந்து விட்டதாகவும், படம் வெளிவரவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். உண்மை என்னவெனில், "அசன்தாஸ் கிளாசிக்கல் டாக்கீஸ்" தயாரிக்க, கே பி எஸ் ஒரு லட்ச ரூபாய் வாங்கிக் கொண்டு நடித்த, அப்படம், 1935 ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றியும் பெற்றிருக்கிறது. பேராசிரியர் கல்கி, ஆனந்தவிகடனில் விமரிசனமும் எழுதியிருக்கிறார். "நந்தனார்" வேடத்தில் ஒரு பெண்மணி (கே பி எஸ்) நடித்ததை அப்போது ஏற்றுக்கொள்ளாத கல்கி, "நந்தனார் படத்தில் பனைமரம், எருமைக்கடா, வெள்ளாடு ஆகியவை சிறப்பாக நடித்திருக்கின்றன" என்று நக்கலாகக் குறிப்பிட்டிருக்கிறார். படம் எரிந்து போய் வெளிவராதிருந்தால், கல்கி எவ்வாறு விமரிசனம் எழுதியிருக்க முடியும்? உண்மையில், எரிந்து போனதால், வெளிவராமல் போன படம்: "இன்பசாகரன்"!
''ஜெமினியின் "நந்தனார்" படத்தில் தோன்றிய வி.கே.ராமசாமி...' என்று குறிப்பிட்டிருப்பது சரியல்ல. அப்படத்தில் வி.கே.ஆர் நடிக்கவில்லை. அவர் அறிமுகமானது ஏவி.எம். தயாரித்த 'நாம் இருவர்' படத்தில்தான்!
நம் பதிவைப் படிப்பவர்களுக்கு, தவறான தகவல்களை கொடுத்து விடக்கூடாதே என்ற (நல்ல?) எண்ணத்தில்தான் இந்தப் பதிவு.
(*அ தீ ம க = அமுதசுரபி தீபாவளி மலர் கரெக்சன்ஸ்)
அமுதசுரபிக்கும், திரு அறந்தை மணியன் அவர்களுக்கும் எங்கள் நன்றி.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)






