புதன், 2 மே, 2012

கதைத் தலைப்புப் போட்டி - ஓர் அறிவிப்பு - பாஹே

                     
??? கதைத் தலைப்புப் போட்டி. (இது சுட்டி) <<
    
எட்டு  பேர் பங்கேற்று தம் தலைப்புகளை அனுப்பியிருந்தார்கள். அவை :
               
1) சாகாவரம் - ராமலக்ஷ்மி.
              
2) நமக்கென்றோர் உலகம் - அமைதிச்சாரல்

3) நல்லா வேணும் - ராஜராஜேஸ்வரி
                   
4)  செத்தோம் பிழைத்தோம் - மீனாக்ஷி
                     
5) கிரகப்ப்ரவேசம் - ஹுஸைனம்மா.
            
6) ஒன்று எங்கள் ஆவியே உண்டு எங்கள் ஜாதியே - குரோம்பேட்டை குறும்பன்.
            
7) இக்கரைக்கு அக்கரைப் பச்சை - middleclassmadhavi. 
                    
8) இது நம்ம ஏரியா, பூட்டில்லா உலகம் - ஹேமா.  
              
வரும் தலைப்புகளில் ஒன்றுக்குப் பரிசு தருவதாகத்தான் முதலில் எண்ணமிருந்தது. இப்போது, வந்துள்ள அனைத்துமே சிறப்பாக இருப்பதால், ஒவ்வொன்றும் பரிசுக்குரியதாகிறது.
             
பரிசுப் புத்தகங்களைக் குரியர் தபால் மூலம் அனுப்ப நினைத்தபோது எதிர்பாராத ஒரு சிக்கல். அஞ்சலக முகவரி வேண்டுமே.... இவர்களில் சிலர் வெளிநாடுகளில் இருப்பதாலும் என்ன செய்வது என்ற யோசனை எழுந்தது.
               
எனவே ஒரு வேண்டுகோள்.
               
தமிழ் மாநில எல்லைக்குள் தங்களுடைய உறவினர்கள், நண்பர்கள் முகவரிகளைத் தர முடிந்தால் அவர்களுக்கு நூல் பிரதிகளை அனுப்பி பங்கேற்றவர்களிடம் ஒப்படைத்துவிடக் கோரலாம் என்று யோசனை. 
                
பங்கு பெற்ற நண்பர்கள் அன்புகூர்ந்து அத்தகைய முகவரிகளை எங்கள் பிளாக் முகவரிக்கு (engalblog@gmail.com) அனுப்பி விட்டால் அவர்களிடமிருந்து அந்த முகவரிகளைப் பெற்று அந்தந்த முகவரிக்குப் புத்தகங்களை அனுப்பி விட முடியும் என்று நம்புகிறேன்.
            
பங்கேற்ற அன்பர்கள் அனைவருக்கும் என் பாராட்டும் மனம் நிறைந்த நன்றியும்.
                  
அன்புடன்,
பாஹே.
                     

29 கருத்துகள்:

  1. முதலில் தலைப்பு தந்தது போல முதலில் சொல்ல வந்த விட்டேன் “நன்றி”:)!

    மிக்க மகிழ்ச்சி. முகவரி அனுப்பி வைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. மீ த செகண்டு...

    பரிசுக்கு ரொம்ப நன்றியும் மகிழ்ச்சியும் :-))

    முகவரி அனுப்பி வைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. குரோம்பேட்டை குறும்பன்2 மே, 2012 அன்று 9:45 PM

    ஆஹா ஹா ஹா !! எல்லோரும் நல்லா பாத்துக்குங்க நானும் ரவுடிதான்!! எனக்கு 'தங்கத் தவளைப் பெண்ணே' கதைப் போட்டியில் வோட்டுப் போடாமல் டிப்பாசிட் இழக்க வைத்த நண்பர்களே - உங்களுக்குத்தான் சொல்லுகிறேன்.

    பதிலளிநீக்கு
  4. மிக்க நன்றி ..மகிழ்ச்சி.

    முகவரி அனுப்பி வைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. என்ன? எங்கே? எப்போ? ஆ.. மிஸ் பண்ணிட்னே?

    பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். (ஹ்ம்ம்)

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா3 மே, 2012 அன்று 12:04 AM

    ஆஹா! நான் எழுதிய தலைப்புக்கும் ஒரு பரிசா! ரொம்ப சந்தோஷமா இருக்கு. நன்றி! நன்றி!
    இந்த புத்தகத்தையும் தயவு பண்ணி நீங்க ஸ்ரீராம் கிட்டேயே குடுத்துடுங்க. நான் சென்னை வரும்போது அவர்கிட்டேந்து வாங்கிக்கறேன்.
    ஸ்ரீராமுக்கு இதுல ஆட்சேபணை எதுவும் இருக்காதுதானே! :))

    பதிலளிநீக்கு
  7. ஹய்யோ... இது எப்ப நடந்தது? நான் பாக்காமப் போயிட்டனே... சொக்கா... நல்ல வாய்‌ப்பு போயிடுச்சே...

    பதிலளிநீக்கு
  8. அடடா ! நாமளும் ஒரு தலைப்பை சொல்லிட்டு போயிருக்கலாமே ! கிரேட் மிஸ் !

    புத்தகம் பெரும் அனைவருக்கும் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  9. இப்போ அதே பதிவுக்கு போய் ஒரு தலைப்பு சொன்னாலும் புக்கு கிடைக்குமா? :))

    பதிலளிநீக்கு
  10. அலோ எட்டு பேரில் ஏழு பேர் பெண்கள். அதனால் அப்பா துரை, கணேஷ் மற்றும் என்னை மாதிரி ஆட்களை இப்போ தலைப்பு சொல்ல சொல்லி எங்களுக்கும் பரிசு குடுக்கணும் ஆமா !! We want equal rights :))

    நிற்க. ராமலட்சுமி மேடத்துக்கு இந்த வாரம் ஒரே பாராட்டு + பரிசு மழையா இருக்கு

    எங்கள் ப்ளாகில் மட்டுமே பார்க்க கூடிய ஹேமா கூட பரிசு வாங்கிருக்காங்க . எப்பவும் பரிசு எனக்குதான் அப்படிம்பாங்க. இந்த தடவை நிஜமா வாங்கிட்டாங்க

    ஹுசைனம்மா, மாதவி, அமைதி சாரல் என அனைவருமே நமக்கு நண்பர்கள் தான். வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  11. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. புத்தகப்பரிசு பெறும் அனைவருக்கும் வாழ்த்துகள். பாராட்டுக்கள்.

    பரிசளிக்கும் தங்களின் செயலுக்கு மனமார்ந்த நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  13. ஆஹா, போகிற போக்கில் ச்ச்சும்மா சொல்லிட்டுப் போன ஒரு வார்த்தைக்குப் பரிசா? நெஜம்ம்ம்மாவா? நம்பவே முடியலை!! ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியாருக்கு. ரொம்ப ரொம்ப நன்றிங்க!!

    பதிலளிநீக்கு
  14. பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  15. அச்சோ...அச்சோ உண்மையாவோ சொல்றீங்கள்.நம்பவே முடியேல்ல.சந்தோஷமாயிருக்கு.நன்றி பாஹே & எங்கள் புளொக் !

    பதிலளிநீக்கு
  16. மோகன் குமார் said...

    இப்போ அதே பதிவுக்கு போய் ஒரு தலைப்பு சொன்னாலும் புக்கு கிடைக்குமா?

    ஆசையைப் பாருங்கோ....!

    //எங்கள் ப்ளாகில் மட்டுமே பார்க்க கூடிய ஹேமா கூட பரிசு வாங்கிருக்காங்க.எப்பவும் பரிசு எனக்குதான் அப்படிம்பாங்க.இந்த தடவை நிஜமா வாங்கிட்டாங்க //

    என்னை இங்க மட்டுமா கண்டீங்க.அப்போ இதுநாள்வரைக்கு என்னோட 2 வலைப்பக்கமும் வரலன்னு அர்த்தம்.நான் உங்க பக்கம் வந்து வாசிச்சிருக்கேன்.எனக்கு ஏத்தமாதிரிப் பதிவுகள் இல்ல.அதனால நோ கொமண்ட்ஸ் !

    என்னோட பரிசுக்கு என்னைவிட உங்களுக்குத்தான் சந்தோஷம்.இல்லாட்டிப் பொறாமையோ.நன்றி சந்தோஷப்பட்டதுக்கு !

    பதிலளிநீக்கு
  17. அப்போ வந்தப்போ நல்ல சான்‌ஸை மிஸ் பண்ணிட்டியேடான்னு என் தலையில குட்டிக்கிட்டு கோபமா திரும்பிப் போயிட்டேன். இப்ப சந்தோஷத்தோட பரிசு பெற்ற என் நண்பர்கள் அனைவருக்கும் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவிச்சுக்கறேன்!

    பதிலளிநீக்கு
  18. அலோ...வண்ண்ண்கம்...
    பேசாம .. எல்லரும் ஈ புக்..அதாங்க மின் நூல் அனுப்புங்களேன்...


    அப்படியே யோசனை சொன்னதற்கு எனக்கும் ஒன்னு..

    பதிலளிநீக்கு
  19. எங்கள் ப்ளாக்4 மே, 2012 அன்று 1:22 PM

    // மீனாக்ஷி said...
    ஆஹா! நான் எழுதிய தலைப்புக்கும் ஒரு பரிசா! ரொம்ப சந்தோஷமா இருக்கு. நன்றி! நன்றி!
    இந்த புத்தகத்தையும் தயவு பண்ணி நீங்க ஸ்ரீராம் கிட்டேயே குடுத்துடுங்க. நான் சென்னை வரும்போது அவர்கிட்டேந்து வாங்கிக்கறேன்.
    ஸ்ரீராமுக்கு இதுல ஆட்சேபணை எதுவும் இருக்காதுதானே! :))//

    அப்படியே ஆகட்டும். ஸ்ரீராம் உங்க விலாசம் எங்கள் ப்ளாக் மின்னஞ்சலுக்குத் தெரியப்படுத்துங்கள்.

    பதிலளிநீக்கு
  20. எங்கள் ப்ளாக்4 மே, 2012 அன்று 1:25 PM

    பரிசு பெற்றவர்களில் மூன்று பேர் மட்டும் இன்னும் விலாசம் / விவரம் அனுப்பவில்லை. பயப்படாமல் அனுப்புங்கள். ஆட்டோ அனுப்பமாட்டோம்; புத்தகம்தான் அனுப்புவோம். எங்களுக்கு அனுப்பப்படும் விலாசம் / விவரம் எதுவும் வெளியாட்கள் யாருடனும் பகிர்ந்துகொள்ளமாட்டோம்.

    பதிலளிநீக்கு
  21. குரோம்பேட்டை குறும்பன்4 மே, 2012 அன்று 1:33 PM

    அடேடே - என்னுடைய விலாசம் அனுப்ப மறந்து போய் விட்டேன். எழுதிக்குங்க:
    குரோம்பேட்டை குறும்பன்,
    c/o Platform,
    விவேகானந்தர் குறுக்குச் சந்து,
    விவேகானந்தர் மெயின் ரோடு,
    விவேகானந்தா வித்யாலயா அருகில்,
    குரோம்பேட்டை,
    சென்னை 600044.

    பதிலளிநீக்கு
  22. நானும் விலாசம் இன்னும் தரல.யாரும் இருக்கிறதா தெரில.விசாரிசிச்சு உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவேன் !

    பதிலளிநீக்கு
  23. அடட்டாஆஆஆஆஆ.எங்கள் ப்ளாக்ல என்னெல்லாம் நடக்கிறது. கொஞ்சம் மிஸ் பண்ணா இப்படி ஒரு புத்தகத்தையே மிஸ் பண்ணீட்டேனே.

    கீதாசாம்பசிவத்துக்கும் இன்னும் நெட் வரவில்லை. பாவம் அவங்களுக்கும் எழுத நிறைய விஷயம் சேர்ந்திருக்கும்.
    அருமையான கதை எழுதின பாஹேக்கு வாழ்த்துகள். புளியமரமும் குடித்தனக்காரர்களும்னு பெயர் வைத்திருக்கலாமோ.

    பதிலளிநீக்கு
  24. பெயரில்லா5 மே, 2012 அன்று 8:35 AM

    //அப்படியே ஆகட்டும். ஸ்ரீராம் உங்க விலாசம் எங்கள் ப்ளாக் மின்னஞ்சலுக்குத் தெரியப்படுத்துங்கள்.//
    என்னங்க இது! உங்க அட்ரஸ் உங்களுக்கே மறந்து போச்சா! அட கடவுளே! அப்போ நான் வந்து கேக்கும்போது எனக்கு புக் கிடைச்ச மாதிரிதான் போங்க! :)))

    பதிலளிநீக்கு
  25. மீனாக்ஷி.... கவலை வேண்டாம். உங்கள் புத்தகங்களைப் பத்திரமாக பாதுகாத்து வைத்திருப்பேன்!

    பதிலளிநீக்கு
  26. மிக்க நன்றி ..

    மிகப்பயனுள்ள புத்தகம் அனுப்பியதற்கு நிறைவான இனிய நன்றிகள் தெரிவித்துக்கொள்கிறேன்..

    பதிலளிநீக்கு
  27. எங்கள் ப்ளாக்10 மே, 2012 அன்று 1:45 PM

    இராஜராஜேஸ்வரி - அட அதற்குள் வந்து சேர்ந்து விட்டதா! தகவலுக்கு நன்றி. மற்றவர்களும், புத்தகம் கைக்கு வந்தவுடன், இந்தப் பதிவில் தகவல் பதியுங்கள். விலாசம் கொடுக்காத இருவர் உடனே விலாசம் அனுப்பவும்.

    பதிலளிநீக்கு
  28. எனக்கும் புத்தகம் 10-ம் தேதியே வந்துருச்சு,.. வெளியூர் போயிட்டதால் உங்களுக்கு உடனே தகவல் சொல்ல முடியலை,.. மிக்க நன்றிகள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!