Friday, April 5, 2013

வெள்ளிக்கிழமை வீடியோ


ஒரே கேள்வி. வீணை வாசித்தவர் யார்?          

23 comments:

அமைதிச்சாரல் said...

படத்துல ப்ரேம் நசீர் வாசிக்கறார். நிஜத்துல யாருன்னு தெரியலை.

வெங்கட் நாகராஜ் said...

தெரியலையே....

சங்கீத ஞானம் நமக்கு நிறையவே கம்மி! :(

Geetha Sambasivam said...

வீணை சிட்டிபாபு???? சின்னஞ்சிறு கிளியே வாசிச்சுக் கேட்கணும், கிளியே நேரில் வந்து கொஞ்சும். :)))))

ராமலக்ஷ்மி said...

அருமையான இசை. கீதா மேடம் விடையை சொல்லி விட்டார். நான் ரீடரிலிருந்து வெளியில் வரும்போது எதிரே வந்த கூகுளார் சொல்லிச் சென்றார்:). படத்தில் வாசிப்பது முத்துராமன் ஆயிற்றே, சாந்தி.

Geetha Sambasivam said...

அட?? ஆமாம் இல்ல ரா.ல. அது முத்துராமனே தான். நான் வீணை இசையில் லயித்திருந்ததில் யார்னு கவனிக்கலை. அதோட கூகிளாரைக் கேட்கலாம்னும் தோணலை. :)))) விடை சரி என்பது சந்தோஷமே.

ராமலக்ஷ்மி said...

@ கீதா மேடம், வெங்கட் சொல்லியிருப்பது போல சங்கீத ஞானமெல்லாம் கிடையாது எனக்கும்:). இசையை ரசிப்பதோடு சரி.

தெரியாதது எதுவானாலும் கூகுளை எட்டிப் பார்ப்பது இப்போ வழக்கமாகவே ஆகி விட்டது:)!

அப்பாதுரை said...

சே.. இருந்திருந்து நமக்கு ஒண்ணு தெரியும் சொல்லலாம்னா முந்திக்கிடறாங்கப்பா..

திண்டுக்கல் தனபாலன் said...

அப்பாதுரை சார்... நானும் அதே தான் சொல்றேன்... ஹிஹி..

Ranjani Narayanan said...

விடை தெரிந்தவர்கள் சொல்லக் கூடாதுன்னு கண்டிஷன் போடணும்.

எனக்கு இமெயில் மூலமா இந்த போஸ்ட் பற்றி வருவதற்குள் இங்கே விடையை சொல்லிட்டாங்களே!

வேர்ட்ப்ரஸ்-ல போஸ்ட் போட்டவுடனே இமெயில் வந்துடுமே! என்ன, உங்க ப்ளாக்ஸ்பாட் ஸ்லோவா?

கோமதி அரசு said...

படம் கலைக்கோவிலில் முத்துராமன் வாசித்த காட்சி. சினிமாவுக்கு வாசித்தவர் யார் என்று கீதா சொல்லி விட்டார்கள். முத்துராமன் என்று ராமலக்ஷ்மி சொல்லி விட்டார்கள். மின் வெட்டால் கேள்விக்கு பதில் உடன் அளிக்க முடியவில்லை.

வல்லிசிம்ஹன் said...

முத்துராமன் ,ராஜஸ்ஸ்ரீ,
வாசித்தவர் சிட்டிபாபு,
பாடலுக்கு முன்னால் வரும் வீணை
இசை பாட்டை நோக்கிச் செல்லும் அழகே தனி.

அமைதிச்சாரல் said...

அட.. ஆமாம். முத்துராமனேதான். முதல் ரெண்டு நிமிஷம் அந்த ஆங்கிளில் ப்ரேம் நசீர் மாதிரி தெரிஞ்சதால் அதுக்கு மேல் பார்க்காம முந்திரிக்கொட்டை மாதிரி பதில் சொல்ல முந்திட்டேன் :-))

மனோ சாமிநாதன் said...

ரொம்ப நாட்களாக இந்த‌ பாடல் காட்சியைப்பார்க்க வேண்டுமென்று நினைத்திருந்தேன். படிக்கும் காலத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்க‌ளில் இதுவும் ஒன்று! பதிவு செய்திருப்பதற்கு இனிய நன்றி!!

வீணையிசைத்திருப்பது சிட்டிபாபு.

Madhavan Srinivasagopalan said...

//வீணை வாசித்தவர் யார்? //

I myself..
read(red - வாசித்த) the word 'வீணை'

sury Siva said...

sitti .. no
chithi...no

chitti
bapu..no
baabu yes.

chtti baabu.

subbu thatha.

Ranjani Narayanan said...

நான் இன்னும் இரண்டு கேள்விகள் கேட்கலாமா - இந்தப் பாட்டை பற்றித்தான்

என்ன ராகம் இது?
நாற்காலியில் உட்கார்ந்திருக்கும் - கொஞ்சம் நிறுத்துறீங்களா என்று கேட்கும் நடிகை யார்?

Geetha Sambasivam said...

விடை தெரிஞ்சவங்க சொல்லலாம் ரஞ்சனி. ஆனால் கமென்ட் மாடரேஷன் வைச்சு, அதில் விடையை நிறுத்தி வைக்கணும். இ.கொ. அப்படித்தான் செய்வார். பல புதிர்களிலும் அப்படித்தான் செய்யறாங்க இணையத்திலே. நானும் முட்டிண்டாச்சு எங்கள் ப்ளாக் ஆ"சிரி"யர்கள் கிட்டே! எங்கே என்னோட தலை நசுங்கினது தான் மிச்சம். :)))))))))))))

Geetha Sambasivam said...

இந்த வீடியோவை முழுசும் பார்த்துக் கேட்கலை. வீணை ஆரம்பிச்சதுமே சிட்டிபாபுனு தெரிஞ்சது. அணைச்சுட்டேன், பதில் எழுத. இது கலைக்கோயில் னு ஸ்ரீதர் படம். சந்திரகாந்தா முத்துராமன் மனைவியா வருவாங்க. ராஜஸ்ரீ இன்னொரு கதாநாயகி. அநேகமா நிறுத்தச் சொல்றது சந்திரகாந்தாவா இருக்கும். எதுக்கும் வீடியோவையும் பார்த்துடறேனே! :))))

Geetha Sambasivam said...

சந்திரகாந்தா தான் ரஞ்சனி. ஸ்ரீதர், முத்துராமன் காம்பினேஷன் படங்கள் வெற்றிப்படங்களாய் வந்து கொண்டிருந்த காலத்தில் வந்த படம். டி.கே.எஸ். சகோதரர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர் சந்திரகாந்தா. சிவகாமியின் சபதம் நாட்டிய நாடகத்தில் சிவகாமியாக நடித்து ஆடியவர். பரத நாட்டியக் கலைஞர்.

Geetha Sambasivam said...

முழுசும் இப்போத் தான் பார்த்தேன். காமிரா கோணங்கள் எல்லாம் நன்கு ரசித்தேன். ஸ்ரீதர் படம் என்றாலே காமிரா வின்சென்ட் தான். இதிலும் அவராய்த் தான் இருக்கும். :))))

Geetha Sambasivam said...

ராகம், ஷண்முகப்ரியா? ஹிஹிஹி, இது குருட்டாம்போக்கு! பாட்டு முருகன் மேல் அதனால் ராகமும் அப்படித்தான் இருக்கும்னு ஒரு யூகம். :))))

தப்பானா பொற்கிழியில் அரைக் காசைக் குறைச்சுக்கங்கப்பா.

kg gouthaman said...

இந்தப் பாடல், ஸ்ரீ ராகம்.

rajalakshmi paramasivam said...

வீணை யாரென்று தெரியவில்லை. ஆனால் உங்கள் பாசிட்டிவ் செய்திகள்
மகிழ்விக்கின்றன. எத்தனை செய்திகள்.
நம் நாட்டின் குறைகளை மட்டுமே பார்க்கும் சிலர் உங்கள் பாசிட்டிவ் செய்திகளை படித்தால் தேவலாம்.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!